Advertisement

மருத்துவர்களும் கார்த்திகேயேனை பரிசோதித்து தேவையான டெஸ்ட்களை எடுத்து அவருக்கான சிகிச்சையை தொடங்கினர்.
தந்தையின் நிலையை எண்ணி நிலைகுலைந்து போனான் மைந்தன். அவனால் தந்தையை இப்படி ஒரு நிலையில் காண முடியவில்லை.
விடிந்ததும் எழுந்த சகுந்தலா , தன்னை சுத்தப் படுத்தி கொண்டு வெளியே வந்தார்.
அவருக்காகவே காத்திருந்த அந்த வீட்டு வேலைக்காரி சாந்தி , அவர் வந்ததும் க்ரீன் டீ எடுத்துக் போய் கொடுத்தார்.
அதை வாங்கிய‌ சகுந்தலா ,” ஏவியும் அவரும் எங்கே.? இன்னேரம் ஜாகிங் முடிச்சு வந்துருப்பாங்களே ” என வேலைக்காரியிடம் கேட்க 
” எனக்கு தெரியல மா.. நான் வரும்போது வீடு திறந்து தான் இருந்துச்சி ” என்றவள் கொஞ்சம் தயங்கி ” கீழ கண்ணாடி க்ளாஸ் வேற உடைஞ்சி இருந்துச்சி மா ” என்றார்.
நெற்றி சுருங்கி கேட்டவர் ,உடனே கணவனுக்கு அழைப்பு விடுக்க ,அதுவோ உள்ளே இருந்து கத்தியது.
உடனே ஏவிக்கு கால் செய்ய , அவனோ அதை கட் செய்து விட்டான்.
உடனே தமையனுக்கு அழைத்த சகுந்தலா, அவர் எடுத்ததும் ” ன்னா , இங்க ரெண்டு பேரும் எனக்கு தெரியாம ஏதோ திருட்டு வேலை செய்ய பாக்குறாங்க. நான் ஃபோன் பண்ணா ஏவி அட்டன் பண்ண மாட்டேங்கிறான் னா. நீங்க கொஞ்சம் என்னென்னு பாருங்க ” என்று சொல்ல 
” சரி மா , நான் பாக்குறேன் ” என்று அழைப்பை துண்டித்தவர் ஏவிக்கு அழைத்தார்.
அவன் ஏற்கவும் ,” எங்க இருக்கிற ஏவி நீ..??” என்க 
“மாமா…” என்ற குரலில் கவலை தெரிய 
” என்ன ஆச்சி..? ஏன் உன்னோட குரல் கொஞ்சம் டல்லா தெரியுது. எனித்திங் ப்ராப்ளம்..??” என்று அவனை அறிந்து கொண்டவராய் கேட்க 
” மாமா.. மாமா.. அப்பாக்கு… ” என சொல்ல முடியாமல் திணற
” மாப்பிள்ளைக்கு என்னாச்சி ஏவி..??” 
” தெரியல மாமா , விடிய காலையில அப்பா மயங்கி விழுந்துட்டார். நான் தான் நம்ம ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்துருக்கேன் . ட்ரீட்மெண்ட் பொய்ட்டு இருக்கு ” என கவலை நிறைந்த குரலில் சொன்னான்.
” சரி ,இரு நான் ஒரு பத்து நிமிஷத்துலையே அங்க வரேன் ” என்றவர் சொன்னது போலவே பத்து நிமிடத்தில் வந்து சேர்ந்தார்.
வந்ததும் தங்கைக்கு அழைத்து விடயத்தை சொல்லிவிட , சகுந்தலாவும் பதறி போய் மருத்துவமனைக்கு வந்தார்.
” அப்பாக்கு என்னாச்சி ஏவி.? ” என்க 
“………”
“சொல்லு டா .ஏன் இப்படி அமைதியா நிக்கிற “
“…….”
” ஒழுங்கு மரியாதையா சொல்லு ஏவி.? அப்பாக்கு என்ன ஆச்சி..?” என கணவனின் நிலை அறிய மகனிடம் மன்றாடினார்.
” அவரோட கொள்கைகளை கொன்று , அவரை கொல்ல பாத்துட்டு என்கிட்ட கேட்டா‌ எப்படி சொல்லுங்க ” என காட்டமாய் கூற  
“புல்ஷீட்..” என்றவர் அமைதியாக சென்று ஒரு இருக்கையில் அமர்ந்து விட்டார்.
சிறிது நேரத்திலே மருத்துவர்கள் வெளி வந்து விட ,” சார் இஸ் ஃபைன் நவ் .இனி அவரை கொஞ்சம் நல்லா பாத்துக்கோங்க . ஏவி கம் டூ மை ரூம் ” என்று விட்டு நகர பார்க்க 
“எக்ஸ் க்யூஸ் மீ டாக்டர் , அவருக்கு என்னாச்சின்னு இங்கேயே சொல்ல முடியுமா ” என்க 
அந்த மருத்துவருக்கு தர்மன சங்கடமாக போனது.
அதை உணர்ந்தவன் ,” பரவால சார் இங்கேயே சொல்லுங்க..” என்றிட
” சாருக்கு மைல்ட் அட்டாக் ஏவி ” என்றார்.
ஆதித்யா அனுமாதித்தது தான் . டாக்டர் சொல்லவும் நேராக தன் அன்னையை தான் பார்த்தான்.
கணவனை எண்ணி கவலை கொண்டாலும் ,இதுக்கு நான் காரணம் கிடையாது என்பது போல் பதில் பார்வை பார்த்தார் சகுந்தலா.
அடுத்து வந்த நான்கு நாட்களுக்கு ஆதி மருத்துவமனையில் தன் நேரத்தை தந்தையோடு கழித்திட , அவனை எதிர்ப்பார்த்து எதிர்ப்பார்த்து ஏமாந்து போனது என்னவோ வாசவி தான்..
அவன் வரவில்லை என்றதும் , அவனுக்கு ஏதாவது பிரச்சனையா இருக்குமோ என மனம் பதறியது. அதனை எண்ணி எண்ணியே படிப்பினை கோட்டை விட ,இதோ அதோ என்று வார இறுதியில் வந்து நின்றது..
 “மோனி , நீ எல்லாத்தையும் படிச்சிட்டியா..?” என அவளை சுரண்ட
“படிச்சிட்டேன் ,அதுக்கு இப்போ என்ன..??” என்று தன் வேலையை செய்ய 
” நான் இன்னும் ஒன்னு கூட படிக்க ஆரம்பிக்கலை டி ” என சோகமே உருவமாய் சொன்னாள்.
“அன்னைக்கு நான் கேக்கும் போது ,மேடம் ஏதோ அந்த ஆண்டவன் பாத்துக்குவான்னு சொன்னீங்க . இப்போ எங்க போனாரு அந்த ஆண்டவன் ” என அவளை பார்த்து கடிக்க
” மோனி ” 
” ஓடிடு ஒழுங்கா‌. நான் படிக்கனும் ” 
” மோனி ” 
” படிக்கனும் டி ” 
” மோனிஈஈஈஈஈ….” 
” என்ன டி..???”
” அது அந்த ஆண்டவன் என்னைய கை விட்டுட்டான் டி ” என பாவமாக சிறுபிள்ளை போல் சொல்ல , மோனிக்கு சிரிப்பாக வந்தது.
” சரி ஒன்னும் பிரச்சனை இல்ல. நாளைக்கு மதியம் தான் எக்ஸாம். இப்போ கொஞ்சமாது படிச்சு வை ” என அவளது நோட்ஸை கொடுத்தாள்.
அதனை வைத்து புரிந்தும் புரியாமலும் கொஞ்சமாக படித்தவள் , மனதில் ஆதியை திட்டாமல் விட வில்லை.
அடுத்த நாள் அழகாய் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக பிறந்தது.
காலையிலே சீக்கிரமாக கிளம்பி வெளி வந்தவள் , கல்லூரி கேட்டின் பக்கவாட்டில் அமைந்திருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்றாள்.
“பிள்ளையாரப்பா ,பிள்ளையாரப்பா , நான் பேசுறது உங்களுக்கு கேக்குது தானே..”
“இன்னைக்கு எனக்கு எக்ஸாம் இருக்கு பிள்ளையாரப்பா. எனக்கு சொல்லி தரேன்னு சொல்லிட்டு போனவரு ,இப்போ வரைக்கும் என்னைய வந்து பாக்கல ” என சோகமாய் சொல்ல
” அச்சோ பாவம்…” என்பது போல் பார்த்தார் அவளின் பிள்ளையாரப்பா.
” நான் அவன் கூட பேசப் போறது இல்ல. எனக்கு சொல்லி தரேன்னு சொல்லி வராம பொய்ட்டாரு. அவரை நம்பி நான் படிக்காம விட்டுட்டேன் தெரியுமா ,ஏதோ மோனி இருந்ததால பரவால்ல ” என சோகமான முகத்தை கொண்டு கூறினாள்.
” எப்படியாவது , பரிட்சைல எனக்கு தெரிஞ்ச நாலு கொஸ்டின் மட்டுமே கேட்கணும் பிள்ளையாரப்பா ” என்று வேண்டுதல் வைத்து மூன்று முறை தோப்புக்கரணம் போட்டு விட்டு திரும்ப ,அவளையே பார்த்தப் படி நின்றிருந்தான் ஆதித்ய வரதன்.
அவனை பார்த்ததும் ஒரு நொடி முகம் பிராகசிக்க ,அடுத்த நொடியே முகத்தை திருப்பிக் கொண்டாள் வாசவி.
அவளின் ஒரு நொடி முக பிரகாசமே , அவனின் கவலையை எல்லாம் சிறிது மட்டுபடுத்தியது.
அவனை கண்டுக்கொள்ளாது வாசவி கடந்து செல்ல , அவளை பார்த்து புன்னகை புரிந்தவன் அவள் பின்னே சென்றான்.
அவனின் பின்பு சுற்ற ஆயிரம் பேர் இருந்தாலும் , அவன் சுற்றுவது என்னவோ வாசவி பின்பு தான்..
” வாசவி ,ஒரு நிமிஷம் நில்லேன் ” என்க 
“நான் உங்க மேல கோபமா இருக்கேன். சோ நான் பேச மாட்டேன் போங்க ” என்றபடியே வேக நடையிட்டாள்.
” நான் செஞ்சது தப்பு தான்.. நான் என்ன சொல்ல வரேன்னு கேளு ” என்க
“நான் கேக்கவே மாட்டேன் . அப்பவே , என் புத்தி சொல்லுச்சி வருண் தான் உனக்கு க்ளோஸ் பிரென்டா இருக்க முடியும், இவனால இருக்க முடியாதுன்னு . நான் கேட்டேன்னா “என்று தனக்கு தானே தலையில் அடித்துக் கொண்டாள்.
‘வருண்’ என்ற பெயரை கேட்டதுமே ஆதியின் காதினில் இருந்து வயிற்றெச்சலின் பொருட்டாக புகை வந்தது.
அவள் முன் வந்து நின்றவன் ,கோபமாய் ” வருண் யாரு..?? ” என பல்லை கடித்து படி கேட்க 
” அதுவா……” என்று சொல்ல வந்தவள் , தான் கோபமாக இருப்பது தெரிந்து முகத்தை சுளித்தாள்.
” சவி ,வருண் யாரு..??” என அதிரடியாய் அவள் வலக்கரத்தை பிடித்து கேட்க 
” நான் கோபமா இருக்கேன் , அதுனால என்கிட்ட ஆயிரவாட்டி மன்னிப்பு கேளுங்க. அப்போ தான் சொல்லுவேன் ” என்றது அந்த ‌இளஞ்சிட்டு..
“சரி , டௌசண்ட் டைம் சாரி போதுமா ” என மென்னகை புரிய 
” உங்க சாரி அக்சப்டட் ஆதித்யன் ” என்றவள் அவனை கடந்து சென்றாள்.
“சவி.. சவி.. நித்து பேபி….” என்று அவள் பின்னாடியே சென்றான்.
இதையெல்லாம் அவனின் உற்ற நண்பனான ராம் பார்த்து விட்டு அவனது வகுப்பிற்கு சென்றான்.
” ஆதி , நீங்க சொல்லி தரேன்னு சொன்னதில நான் படிக்கவே இல்ல ” என சோகமே திருவுருவமாய் மரத்தடியில் அமர்ந்து சொல்ல 
‘அச்சோ, இதை எப்படி மறந்தோம் ‘ என்றென்னி தலையில் அடித்துக் கொண்டவன் ,
“சரி வா , உனக்கு நான் இப்போ சொல்லித்தரேன் ” என்று அவளை லைப்ரரி அழைத்துச் சென்றான்.
அதன்பின் , அவளுக்கு புரியுமாறு சுலபமாக விளக்கி ,அவள் கேட்கும் சந்தேகங்களையும் புரியும் படி விளக்கமளித்தான்.
“தேங்க் யூ ஆதி , நான் பயந்துட்டே இருந்தேன் எப்படி எக்ஸாம் பண்ண போறேன்னு .இப்போ தான் நிம்மதியா இருக்கு ” என்றவள் வகுப்புக்கு செல்ல தயாராகி எழுந்தவள் பட்டென்ன அவன் நெற்றியில் பட்டும் படாமலும் இதழ் பதித்தாள்.
” ஹே , அது என்ன அன்னைக்கும் கிஸ் பண்ண , இப்பவும் பண்ற..??” என்று புருவம் உயர்த்த
” அதுவா , எப்போதும் வருண் எனக்காக எதாவது செய்வான். சோ அதுனால இப்படி அவனுக்கு முத்தம் கொடுப்பேன் . அதேமாதிரி நீங்களும் எனக்காக ஹெல்ப் பண்ணீங்களா அதான் இந்த கிஸ் ” என்று சொல்ல
” ஆமா நீ வருண் யாருன்னு சொல்லவே இல்லையே “
 “தினேஷ் சொந்தம் ” என்று கூறி சிட்டாக பறந்தாள் வாசவி.
ஆதிக்கு ஆத்திரமாக வந்தது . முதலில் ‘ வருண்’ இப்போது ‘ தினேஷ் ‘. இவரையும் யாரென்று தெரியவில்லை என்றாலும் நினைக்க நினைக்க காதினில் மட்டுமல்ல கண்களில் இருந்தும் புகை வந்தது.
அந்த ஒருவாரம் எப்படி சென்றதுன்னே தெரியாமல் அவளுக்கு சொல்லி கொடுப்பதுமாய் ,தந்தையை கவனிப்பதுமாயே கழிந்தது.
அதன் பின் இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறி இருந்தனர். இதற்கிடையில் ஏவியை அவள் திட்டவும் மறக்கவில்லை.
நாட்கள் அதன் போக்கில் சென்று ஒருவருடத்தை கடந்திருந்தது. இப்போது ஆதியின் நண்பர்களிடம் கூட சிறிது சிறிதாக ‘ அண்ணா ‘ என்ற அழைப்போடு பேசி கர்ணனின் மனதை தான் உடைத்தாள்.
ஆதித்யா தான் ஏவி என்று அறியும் நாளும் வந்து விட , அவளின் கோபக் கனலை தாங்க முடியாமல் தலை கவிழ்ந்தான் ஏவி என்கிற ஆதித்ய வரதன்.
காதலில் காதலனுக்கு
பொறாமை ஏற்பட ,
அதில் அவன்
வயிற்றிலிருந்து புகை
வருகை தந்தது……
காதலியோ
இது எதுவும் அறியாமல்
சிறுப்பிள்ளை போல்
அவனுடன் விளையாடி
பார்க்கிறாள் நண்பியாக.
அவன் காதல் மனதின்
வலிமையை அறியும்
நாளும் பிறந்து அவனை
சோதனைக்குள்ளானது…!?

Advertisement