Advertisement

வரமென வந்தவளே…
அத்தியாயம் 07
கோபமே… கோபமாய்…
அவனுள் கொழுந்துவிட்டு எறிய
அதனை அடக்க வழி அறியாமல்
நிலவினை வெறித்து நோக்கினான்…!
தனது அறையின் பால்கனியில் இருந்து ,அந்த மதியையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்ய வரதன்.
அவனால் அவனுடைய அம்மா பேசியதை ஏற்றுக்கொள்ள முடியவேயில்லை. தனது அன்னையிடமிருந்து இப்படி ஒரு பதில் வரும் என்று அவன் சிறிதும் நினைக்கவில்லை.
படிக்கிறது தன்னை மேம்படுத்திக் கொள்ளவே தவிர ,அடுத்தவரை மட்டம் தட்டி  பேசுவதற்கோ , பணம் சம்பாதிக்கிறதற்காகவோ மட்டுமோ அல்ல..
படிப்பு என்பது தன்னை தானே தகுதி படுத்திக் கொள்ளவும் ,தனது வாழ்வை தானே சிறக்க வைத்து ,கற்ற அறிவை பிறருக்கு பகிர்வதிலும் தான் உள்ளது.
ஆனால் இப்போதைய உலகத்திற்கு , எதிலும் பணம் இருக்க வேண்டும்.. அறிவை வளர்க்க மட்டுமே படிப்பு இருக்கவேண்டுமே தவிர்த்து , பணத்தை கொண்டே படிப்பை அமைத்து வைக்க கூடாது என்பது ஆதியின் கருத்து.
ஆனால் இதற்கு மாறாக தான் , அவன் அன்னையின் எண்ணவோட்டங்கள் அமைந்திருந்தது.
அவன் அன்னையிடம் அவன் பாசத்தை எதிர்பார்க்கவில்லை ,அது கிடைக்காது என்று நன்றாக தெரியும். ஆனால் கரிசனம் கூட என்றும் கிடைக்காது என்று இன்றைய பொழுதில் தான் அவன் புரிந்து கொண்டான்.
அன்னை தன்னை ஒரு ஜீவனா மதிக்கிறாரா என்ற சந்தேகம் கூட அவனுள் எழுந்தது.
சிறிது நேரம் முன்பு , கோபத்துடன் வீட்டிற்கு வந்த ஆதியை அங்கு கண்டுக்கொள்ள யாருமில்லை.
தந்தை வரும்வரை காத்திருந்தவன் , அவர் வந்ததும் ” டாடி , நான் உங்க கூட கொஞ்சம் பேசணும் ” என்க
” சரி வெயிட் பண்ணு ஆதி , நான் குளிச்சிட்டு வந்தறேன் ” என்று அவரது அறைக்கு சென்று விட்டார் கார்த்திகேயன்.
அவர் வரும் வரைக்கும் ஹாலிலே அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான்.
தந்தை வெளி வந்ததை பார்த்தவன் ,” இப்போ பேசலாமா டாடி ” என்க
“ஆதி , ஆல்ரெடி டைம் ஆச்சி .வா சாப்பிட்டுட்டே பேசலாம் ” என்று மகனோடும் மனைவியோடும் அமர்ந்து உணவு உண்ண ஆரம்பித்தார்.
சகுந்தலாவோ தந்தைக்கும் மகனுக்கும் நடுவில் வர விரும்பாமல் அமைதியாக மொபைலை பார்த்த படி உண்டார்.
“சொல்லு ஆதி ..?? ஏதோ பேசணும்னு சொன்ன ” என்று பேச்சை தொடங்க
” ஆமா பா “
” நம்ம காலேஜ்ல ,மெரிட்ல படிக்கிறவுங்களுக்கு ஹாஸ்டல் ஃபீஸ் ஏதும் இருக்கா ப்பா ” என்க
” அந்த மாதிரி எதுவும் இல்லையே ஆதி. ஏன் கேக்குற..??”
” அப்போ , ஹாஸ்டல் ஜாயின் பண்ணா ,ஃபை இயர்ஸ் கம்ப்ளீட் பண்ற வரைக்கும் ஹாஸ்டல்ல தான் கம்பல்சரி இருக்கனுமா ” என்க
” அந்த மாதிரி எந்த ரூலும் இல்ல ஆதி. நீ ஏன் இப்படி எல்லாம் கேட்டுட்டு இருக்க “
” இருங்க பா , நம்ம காலேஜ்ல ஃப்ரீ சிட்ல படிக்கிறவுங்களுக்கு பொதுவா எந்த பீஸூம் கிடையாது தானே “
” நீ கேட்ட மூனு கேள்விக்கும் ஒரே பதில் தான் . அது இல்லை தான் ஆதி . இப்பவாவது சொல்லு ஆதி எதுக்கு கேட்டனு “
” நீங்க இல்லன்னு சொல்ற விசியம் ,நம்ம காலேஜ்ல இருக்கே டாட் ” என்று அவருக்கு ஷாக் கொடுத்திட , ஆதியையே முறைத்து பார்க்கலானார் சகுந்தலா.
” நீ என்ன சொல்ற ஆதி , இதெல்லாம் நம்ம காலேஜ்ல இல்லவே இல்லை ” என்று கார்த்திகேயன் அடித்து சொல்ல
” ஒரு நிமிஷம் பா.. ” என்றவன் அவனது அறைக்கு சென்று சில பல காகிதங்களை எடுத்து வந்து காட்டினான்.
” இது நம்ம காலேஜ் ப்ரௌச்சர் .இதுல நான் சொன்னது எல்லாம் போட்டிருக்கு பாருங்க ” என்று அதை தந்தையிடம் கொடுத்தான்.
அதை பார்த்தவருக்கு அதிர்ச்சியாகிட , உடனே தனது மனைவியின் அண்ணனுக்கு அழைப்பு விடுத்தார்.
அந்த புறம் அழைப்பை எடுத்த பார்த்திபன் ,” சொல்லுங்க மாப்பிள்ளை. எதாவது இம்பார்ண்டன்டா..??” என்க
” ஆமா மச்சான்.‌ யா இட்ஸ் வெரி இம்பார்டண்ட் “என்று கடினத்துடன் சொல்ல
” ம்ம் , சொல்லுங்க மாப்பிள்ளை “
” நம்ம காலேஜ்ல ப்ரௌச்சர் யாரு இந்த டைம் ரெடி பண்ணது..??”
” எல்லாம் சகு தான் மாப்பிள்ளை. ஏன் கேக்குறீங்க ” என்று புரியாமல் கேட்க
தந்தையும் மைந்தனும் ஒரே நேரத்தில் சகுந்தலாவை முறைக்க , அவரோ பத்து நாள் கழித்து உணவு உண்ணுவது போல் , அதிலே கவனத்தை வைத்திருந்தார்.
” நீங்க தானே ,இந்த ஒர்க் எல்லாம் பாக்கணும் . அப்புறம் ஏன் உங்க தங்கச்சி கிட்ட கொடுத்தீங்க “என்க
” அண்ணா நீ வை மொபைலை வை .நான் அவருக்கு பதில் சொல்லிக்கிறேன் ” என்று கணவனிடமிருந்து மொபைலை பிடுங்கி அதை அணைத்தார்.
” இப்போ உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனையோ ,அதை என்கிட்டயே கேளுங்க ” என சாவகாசமாக சோஃபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள்.
” இப்போ உனக்கு என்ன பிரச்சினை ஏவி..??” என கோபமாய் கேட்க
” ம்மா , நீங்க தான் இதை எல்லாம் பண்ணீங்களா..?” என்க
” ஆமா , நான் தான் பண்ணேன் . அதுக்கு இப்போ என்ன ஏவி . நான் ஒன்னும் தவறா எதுவும் செய்திடலையே ” என புருவம் உயர்த்திட
” இது எப்படி நல்லதுல வரும்.. ” என அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்க
” இங்க பாரு ஏவி , இது நல்லதோ கெட்டதோ ஐ டோண்ட் கேர். சும்மா படிக்க வைக்க இது சமுதாய கூடம் இல்லை ,யார் வேன்னா வரலாம் போலாம்னு சொல்றதுக்கு. இது ஒரு ப்ரைவேட் மெடிக்கல் காலேஜ் , அப்போ அதுக்கு தகுந்த பீஸ் வாங்கனும்ல ” என்றிட
” நீ என்ன பேசுற சகு , இது எங்க அப்பா கட்டி, அவரோட நிம்மதிக்காக தான் ட்ரஸ்ட் ஆரம்பிச்சி ஃப்ரீ சீட் கொடுக்க ஆரம்பிச்சாரு.‌ அவுங்க கிட்ட போய் காசு வாங்கி இருக்கிற ” என மனைவியை பார்த்து எழுந்த கோபத்தை கட்டுப்படுத்திய படி கேட்டார்.
” அதான் ,உங்க அப்பா செத்து பொய்ட்டாரே அப்புறம் என்ன , அவரோட சேர்ந்து அவரது கொள்கைகளும் தான் செத்து போச்சி “
” எல்லா காலேஜ்லையும் கோடி கோடியா சம்பாதிக்கிறாங்க. ஆனா உங்களோட பிச்சைக்கார கொள்கைக்கு லச்சத்துல தான் நாம இன்னும் சம்பாதிக்கிறோம்‌” என எகத்தாளமாக சொல்லிட
” ம்மா , நீங்க என்ன பேசுறீங்க.? இது என்னோட தாத்தா , பாட்டியோட ஆசைக்காக கட்டிய காலேஜ் , வியாபாரத்துக்காக இல்லை ” என அழுத்தமாக சொல்ல
“லுக் ஏவி , நீ சொல்ற தாத்தாவும் இல்ல அவுங்க ஆசை பொண்டாட்டியும் இப்போ உயிரோட இல்லை. இனி இந்த மாதிரி புல்ஷீட்டா பேசிட்டு இருக்காத ” என்று எச்சரித்தார்.
மனைவி பேசியதை கேட்ட கார்த்திகேயனுக்கு லைட்டாக நெஞ்சு வலிப்பது போல் இருந்தது.
” நீ பேசுறது , ரொம்பவே தப்பு சகு . எங்க அப்பா உயிரோட இல்லைன்னாலும் அவர் என்னோட எண்ணத்துல இன்னும் வாழ்ந்துட்டு தான் இருக்காரு “என்றிட
” அதுனால பணம் வரப்போகுதாங்க , இல்லையே அப்புறம் எதுக்கு இந்த நான்சன்ஸ் டாக் எல்லாம் ” என்றவர் பேச்சு முடிந்தது போல் எழுந்து நின்று இருவரையும் பார்த்து ,
” இதோ இந்த பேச்சுக்கு ஃபுல் ஸாட்ப் வச்சிடுங்க. அதுக்கும் மேல இதுல பேச ஒன்னுமே இல்லை. எனக்கு நாளைக்கு கிளப்புக்கு போற வேலை இருக்கு , நான் போய் தூங்குறேன் ” என்று தூங்க சென்றுவிட்டார் சகுந்தலா.
சகுந்தலாவின் பேச்சில் தந்தையும் மகனும் அதிர்ந்து போய் நிற்க ,மேலும் கார்த்திகேயனுக்கு வலி எடுக்க ” நான் போய் தூங்குறேன் ஆதி ” என்ற தந்தையின் முகத்தை பார்த்த மைந்தனுக்கு தந்தையின் கவலை அப்பட்டமாக தெரிந்தது.
அறைக்குள் வந்தவனுக்கு ,எப்படி இந்த பிரச்சனையை தீர்ப்பது என்று புரியாமல் போக அமைதியாக நிலவினை வெறித்து பார்த்தான் ஆதித்ய வரதன்.
விடியலை நோக்கி பூமி சுழல , ஒரு பொட்டு கூட தூங்காமல் இருந்த ஆதிக்கு ஹாலில் ஏதோ சத்தம் வருவதாக தோன்ற ,உடனே வெளியே வந்து பார்த்தவன் அதிர்ச்சியுற்றான்.
“அப்பா…!” என்ற‌ அலறலுடன் அவரை நோக்கி ஓடினான்.
அங்கே அவன் தந்தை கார்த்திகேயனோ நெஞ்சில் கை வைத்தப் படி சரிந்து விழுந்திருந்தார்.
நெஞ்சு வலிப்பது போல் இருக்கவே தண்ணீர் குடிக்க வந்தவர் , வலி தாங்காமல் மயங்கி சரிந்தார்.
“ப்பா ப்பா… ” என தந்தையை மடி தாங்கியவன் அவரை எழுப்ப முயன்றான்.
மருத்துவ படிப்பு படிப்பதால் ,உடனே மணிக்கட்டில் கை வைத்து பார்த்தவன் ,மூடியிருந்த விழிகளை திறந்து பார்த்தான்.
கண்கள் மேலே சொருவியதை கண்டவன் ,வேகமாக கார் கீயை எடுத்து கொண்டு வெளியேறியவன் ,சிறிது நேரத்திலே தந்தையை தூக்கி காரில் ஏற்றி மருத்துவமனை நோக்கி சென்றான்.
அவனின் ‌வேகம் ஆக்ஸிலேடரில் காட்ட , அரைமணி நேரம் கழித்தே சேர வேண்டிய மருத்துவமனைக்கு பத்தே நிமிடத்தில் வந்தவன் மருத்துவமனையில் சேர்த்தான்.

Advertisement