Advertisement

விந்தையடி நீ எனக்கு…2
தான் நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்ற யோசனையில் இருந்த மஞ்சரி கவிதாவின் அலறல் சத்தில் நிகழ்வுக்கு வர
“என்னடி ஏன் காத்தின…”என்று கேட்கும் நேரம் அவள் மயங்கி விழ அவளை தோள்களில் தாங்கியவள் அப்போது தான் வெளியில் ஓடி வந்த நண்டு வைக் கண்டாள்.அவனது கன்னத்தில் கை தடம் பதிருந்தது.அவனிடம் என்ன நடந்தது என்று கேட்டுகும் முன் அவள் காலடியில் ஏதோ பொருள் வந்து விழவும் பயந்து பின் நகர அப்போது,
“எவன்டா அவன் என்ன எழுப்புனது….எவ்வளவு தைரியம்…”என்ற கத்திய படி வெளியில் வந்தான் அவன்.
ஆறடி உயரமும்,முறுக்கேறிய புஜங்களும் கருமை நிறமும் அவன் நின்ற தோரணையே ஐயனார் போல இருக்க,அவனைக் கண்டு சற்று பயந்து தான் போனாள் மஞ்சரி.வெளியில் வந்தவன் கைலியை மடித்து விட்டு,
“எவன் கேக்குறேன்ல…வெளி வாடா…”என்று சில கெட்ட வார்த்தைகளால் வசைப்பாட கேட்டுக்கொண்டிருந்த மஞ்சரிக்கு மனதில் கிலிப்பிடித்தது.முதல் முறையாக தான் இங்கு வந்தது தவறோ என்று தோன்றியது.தங்களை கூட்டி வந்தவனைத் தேட அவனோ அங்கு இருக்கும் புதரில் மறைந்து கொண்டு தன் காதுகளை பொத்திக் கொண்டு அமர்ந்திருக்க மஞ்சரிக்கு மேலும் கோபம் தலைக்கேறியது.ஆனால் இப்போது ஒன்றும் செய்ய முடியாதே என்று நினைத்தவள் பல்லைக்கடித்து தன்னை நிலைப்படுத்தினாள்.
சிறிது நேரம் கண்டபடி கத்தியவன் சற்று நிதானித்து காண அங்கே இரு பெண்களை காணவும் புருவம் சுருக்கி,
“ஏய் யாருடி நீங்க….என்னத்துக்கு வந்தீங்க…”என்று கேட்டபடி நெங்கி வர மஞ்சரிக்கே அவனது தோற்றமும் அவன் கேட்ட விதமும் பயத்தை தர அதற்குள் அவன் அவர்களை நெருங்கியிருந்தான்.
“ஏய் கேட்குறேன்ல்ல…சொல்லுடி…”என்று கை ஓங்க அதற்குள்,
“அடிச்சிடாத ண்ணே…”என்ற படி அவர்களின் குறுக்கே வந்தான் நண்டு.
“அண்ணே நீ ரொம்ப சூடா இருக்க இங்க வா…”என்று அழைத்து சென்று வீட்டு வாசலில் அமர வைத்து அவனுக்கு ஒரு குவளையில் தண்ணீரைக் கொடுத்தவன் அவனது தோள்களை பிடித்தபடியே,
“என்ன அண்ணே நேத்து நான் உன்கிட்ட சொல்லிருந்தேன்ல என்னோட தோஸ்த் நவீன் அவனோட அக்கா தான் இவங்க…மறந்துட்டியா…”என்றவன் கண்களால் மஞ்சரியை அழைக்க அவளோ நடுங்கியபடி அங்கேயே நிற்க,
“ம்ம் நியாபகம் இருக்கு…என்ன பிரச்சணை…காசு உள்ள பார்டி தான…”என்று பணத்தில் குறியாக இருக்க அவனது எண்ணம் அறிந்த நண்டுவோ,
“எல்லாம் நிறைய கொடுப்பாங்க…பெரிய பணக்காரங்க…”என்றவன் மஞ்சரியிடம்,
“யக்கா…என்ன பயந்துட்டியா…வா வந்து இப்படி உக்காரு…எவ்வளவு நேரம் உன் தோஸ்த பிடிச்சுக்கிட்டு நிப்ப வா…”என்று அவர்களை அழைத்தவன் எதுவுமே நடவாதது போல மஞ்சரியின் கையில் ஒரு குவளை தண்ணீரைக் கொடுத்து,
“என் மூஞ்சியே ஏன் க்கா பாக்குற…இந்தா இந்த தண்ணியை உன் தோஸ்த் மூஞ்சில தெளிச்சு எழுப்பு….”என்றபடி திணித்தான்.அவன் கூறியபடி செய்தவள் கவிதாவின் கன்னங்களை தட்டி எழுப்ப அவளோ தங்கள் எதிரில் ஐய்யனாரைப் போல் அமர்ந்திருந்தவனைக் கண்டு மேலும் அலற துவங்க,
“ஏய் என்னாங்கடி…”என்ற படி அந்த ஐய்யனார் பாய வர அவனது தோற்றத்தைக் கண்ட கவிதா மேலும் கத்த அவளது வாயை மூடிய மஞ்சரி,
“ஏய் மனுஷன் தான்டி கத்தாத…வாய மூடு..”என்று அடிக் குரலில் சீற கவிதா தன் போல் கைகளால் அவளது வாயை மூடினாள்.
அதற்குள் அடிக்க வந்தவனை நண்டு,
“ண்ணே அது ஏதோ தெரியாம கத்திடுச்சு…நீ கோபப்படாத உக்காரு…”என்று அமைதி படுத்த,
“ஏன்டா காலங்காத்தால ரோதனையெல்லாம் இழுத்துட்டு வர…இப்ப இவள்களுக்கு என்ன பிரிச்சனை…எவனாவது வால்லாட்டுறானா…அவன் கை,கால உடைக்கனுமா…என்னனு இன்னும் பத்து நிமிஷத்துல இவளுக சொல்ல மோவனே நீ காலி…”என்றபடி எச்சரிகை செய்ய நண்டு மஞ்சரியிடம்,
“யக்கா…என்ன பார்த்துக்கிட்டே இருக்க…நீ தான அண்ணன பார்க்கனும்னு சொன்ன…உன்னால என் உடம்பு புண்ணாகிடும் போல…சீக்கிரம் சொல்லு என்ன மேட்டருனு…இல்ல அண்ணனே என்னோட சேர்த்து  உங்களையும் மொத்திப்புடும்…”என்று சொல்லிக் கொண்டிருக்க அதற்குள்,
“ஏய் என்னாடா பாடம் நடத்துற உன்ன…”என்று எகிறியவன் மஞ்சரியிடம் திரும்பி,
“இந்தா இப்ப சொல்லரீயா இல்லயா…”என்றான்.அவனைக் கண்டு நடுங்கியவாறே மஞ்சரி,
“கல்யாணம் நிறுத்தனும்…”என்று திக்கி திணறி கூற,
“என்னது கல்யாணத்தை நிறுத்தனுமா???இது நமக்கு வேலைக்கு ஆகாது நீ கிளம்பு…”என்றபடி அவன் நகர நண்டுவோ,
“அட இரு ண்ணே அக்காவ முழுசா சொல்லவிடு…”என்றவன் மஞ்சரியிடம் கூறுமாறு செய்கை செய்ய,
“நீங்க ஒரு கல்யாணத்தை நிறுத்தனும்…”என்று கூறுகயில் இடைபுகுந்த நண்டு,
“மாப்பிள்ளைய அடிச்சு தூக்கனுமா…”என்று ஆர்வமாக கேட்க மஞ்சரி,
“இல்லை அவர் மேல உங்க கைக்கூட படக்கூடாது…”என்று எச்சரிக்கும் விதமாக கூற ஐய்யனாரோ,
“தோபாருடா நம்மளையே மிரட்டது…”என்று நக்கலாக கூற மஞ்சரி இதுவரை இருந்த நிதானம் போய் சினம் தலைக்கேற,
“இதோ பாருங்க பணம் எவ்வளவு வேணா கேளுங்க தரேன்…நீங்க நான் சொல்லர மாதிரி பண்ணனும்…”என்றுவிட்டு செய்ய வேண்டியதைக் கூற கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு கோபம் தலைக்கேற,
“ஏய்…என்னை என்ன பொம்பள பொறுக்கினு நினைச்சியா…அடிச்சனா மூஞ்சு முகற எல்லாம் பேந்துடும்…”என்று மஞ்சரியிடம் எச்சரித்தவன் நண்டுவிடம் திரும்பி,
“டேய் இதுதான் நீ சொன்ன பெரிய வேலையா…”என்று கேட்டு நாலு மொத்த அவனோ,
“அய்யோ அண்ணனே எனக்கு ஒண்ணும் தெரியாதுண்ண விடு…”என்றபடி கெஞ்சினான்.
“மிஸ்டர்.தமிழ்செல்வன்…”என்று மஞ்சரி அவனது பெயரை அழுத்தமாக கூற,
“அடிங்க என் பேரை சொல்ர கொன்னுடுவேன் பார்த்துக்க…”என்று எகிறிக்கொண்டு வர,
“அட என்ன சார் கோபப்படுரீங்க உங்க பேரு அதுதான…உங்களுக்கு ஒரு அண்ணன் இருக்காரு இல்ல…அவர் பேரு என்ன ரமணன் ரைட்….அவருக்கு ஒரு விபத்துல கால் அடிப்பட்டு இப்ப நடக்க…”என்று அவளை மேலும் கூறவிடாது தடுத்தவன்,
“ஏய் தேவையில்லாத பேச்செல்லாம் உனக்கு எதுக்கு போடி வெளில…என் கையால அற வாங்கமா போயிடு…”என்று எச்சரிக்கை செய்ய மஞ்சரி அவனைக் கண்டு எள்ளல் பார்வை பார்த்தவள் தன் கைபையை திறந்து ஒரு ஐம்பதாயிரம் நோட்டுக் கட்டை அவன் முன் வைத்தவள் அதன் மேல் ஒரு விசிட்டிங் கார்ட் மற்றும் ஒரு கல்யாண பத்திரிக்கையை வைத்துவிட்டு,
“உங்கள பத்தி முழு விபரம் தெரிஞ்சிக்கிட்டு தான் வந்துருக்கேன்….இது முன்பணம் தான்…மீதி நீ உன் வேலையை முடிச்சவுடனே கிடைக்கும்…உன் அண்ணனுக்கு கால் குணமாக அப்ரேஷனுக்கு உனக்கு பணம் வேணும் இல்ல…”என்றவள் மேலும்,
“நல்ல யோசனை செஞ்சி முடிவு எடு…இந்த கார்டுல என் நம்பர் இருக்கு நைட் வரைக்கும் உனக்கு டையம் பணம் வேணும்னா போன் போடு நான் பிளான் என்னு சொல்றேன்…”என்றுவிட்டு அதுவரை இங்கு நடப்பதை பார்த்து உறைந்த நிலையில் இருந்த கவிதாவை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.

Advertisement