Advertisement

அத்தியாயம் 9:

அபி வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட ரிஷிக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.கைகள் லாவகமாய் காரை செலுத்த….அபியின் ஓரப் பார்வை ரிஷியின் மீது இருந்தது.

வெளிர் நீல நிற ஜீன்சும்….ரெட் கலர் டீசர்ட்டும் அவனுக்கு பாந்தமாய் பொருந்தியிருக்க….எப்பொழுதும் இறுக்கம் குடி கொண்டிருக்கும் முகம் சற்று தளர்ந்திருக்க….அவனைப் பார்க்க பார்க்கத் தெவிட்டவில்லை அவளுக்கு.

இப்ப எதுக்கு வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு வரா…? என்று யோசித்தவன்….

உன்னோட சொந்த ஊர் எது…? என்றான் எடுத்த எடுப்பில்.

திடீரென்ற அவன் கேள்வியில் விக்கித்து திரும்பினாள் அபி.அவள் முகம் கலவரத்தைக் காட்ட….

இதோ பார் அபிஇதுக்கு முன்னால் எப்படியோ….ஆனால் இப்போ நீ என் மனைவி.உன்னைப் பற்றி எதுவும் தெரியாமல் மண்டை காயுது.உன்னைப் பற்றி விசாரிக்க ஒரு நிமிடம் போதும் எனக்கு.ஆனா எதுவா இருந்தாலும் நீயே சொல்வாய் என்ற நம்பிக்கையில் அமைதியா இருக்கேன் என்றான் நிதானமாய்.

இதை தாலி கட்டுவதற்கு முன்னாடி இல்லை கேட்டிருக்கணும்…? என்றாள்.

இப்பவும் சொல்றேன் அபி….உன்னை யாரும் கட்டாயப் படுத்தவில்லை. அது மட்டுமில்லாம….உன்னை நானும் தைலாவும் வித விதமா கேட்டோமே…! ஆனா நீ தான் வாயையே திறக்கலைஇப்ப என்னை குற்றம் சொன்னால் நான் என்ன செய்வது…? என்று அசால்ட்டாய் தோளைக் குலுக்கினான்.

அது வந்து…. என்று அவள் கண்கள் கலங்க….அவளின் முகத்தைப் பார்த்தவன்

இதோ பார் அபி…! நீ ஏன் உன்னைப் பற்றி சொல்ல மாட்டேங்கிறன்னு எனக்கு தெரியலை.அதை சொல்வதில் உனக்கு ஏதோ தயக்கம்ஏன் ஏதாவது பிரச்சனையா கூட இருக்கலாம்இதுக்கு முன்னாடி நீ தனி ஆள்இப்போ நான் இருக்கேனேஎன்னை நம்பி சொல்ல மாட்டியா…? என்றான்.

காலையில் இருந்து முரட்டுத் தனமாய் முறுக்கிக் கொண்டு திரிந்தவன்திடிரென்று இப்படி அன்பாக,அனுசரணையாக பேசவும் கலங்கித் தான் போனாள் அபி.

அவனின் முரட்டுத் தனத்தை எளிதில் எதிர் கொண்டவளால்அவனின் அன்பை அவ்வளவு எளிதில் புறக்கணிக்க முடியவில்லை.

பொபொபொள்ளாச்சி என்றாள் அமைதியாக.

பொள்ளாச்சி….என்ற ஊரின் பெயரைக் கேட்டவுடன் சடன் பிரேக் போட்டான் ரிஷி.

பொள்ளாச்சியா…? என்றான் ஆச்சர்யம் தாங்கமால்.

ஆமாம் என்பதைப் போல் அவள் தலை ஆடியது.

பொள்ளாச்சி என்றவுடன் அவன் முகம் யோசனைக்கு செல்ல….இருபத்து ஐந்து கிலோ மீட்டர் கடந்துஊட்டியின் மெயின் பஜாருக்கு வந்திருந்தனர்.

இறங்கு…! என்றான்.கார் ஒரு பொட்டிக் முன்பு நின்றிருந்தது.

இங்க எதுக்கு..? என்று அவள் கேள்வியாக நோக்க

வந்ததில் இருந்து தைலா டிரசையே போட்டுட்டு இருக்க….இப்போ அவளும் ஊருக்கு போயிட்டா….இந்த சேலையையும் மாத்தாமையே இருக்க….அதான் என்றான் பதிலாய்.

அவள் கண்கள் ஆச்சர்யமாய் மின்ன

இங்க பெரிய கடையெல்லாம் கிடையாது….அதுக்கு கோயம்பத்தூர் தான் போகணும்சோ இப்போதைக்கு என்ன தேவையோ….கொஞ்சம் அர்ஜஸ் பண்ணி வாங்கிக்கோ…! என்றான்.

வா போகலாம்…! என்று அவளை தோளோடு சேர்த்து அணைத்து செல்லஅவளுக்கு தான் அவஸ்தையாக இருந்தது.

அவனுடைய செய்கைகள் அனைத்தும் வித்யாசமாய் இருக்க….திடீரென்ற அவனின் மாற்றத்தைக் கண்டு திகைத்தாள்.

கடைக்குள் அழைத்து சென்றவன்….அவளைக் கேட்காமல் அவளுக்கு தேவையான அனைத்தையும் வாங்கிக்  குவிக்க

போதும்இதுக்கு மேல வேண்டாம்..! என்று தடுத்துப் பார்த்தாள்.

ஆனால் அவன் கேட்டானில்லை.உள்ளாடைகளை மட்டும் அவள் தேர்ந்தெடுக்க….மற்ற அனைத்தும் அவனின் தேர்வாக மட்டுமே இருந்தது.

உனக்கு தேவையானதை வாங்கிக்கன்னு சொல்லிட்டு….இவன் தான் வாங்கிகிட்டு இருக்கான்..! என்று மனதிற்குள் நக்கல் அடித்தவள்அவன் செயல்களில் மனம் குளிர்ந்து தான் போனாள்.

என்னதான் அவன் வெளி வேலையாக செய்து கொண்டிருந்தாலும்…. பொள்ளாச்சியிலிருந்து ஊட்டிக்கு எப்படி வந்தா..? என்ற கேள்வி அவன் மூளையைக் குடைந்து கொண்டிருந்தது.

கொஞ்சம் கொஞ்சமா பேசித்தான் அவகிட்ட விஷயத்தை கறக்கணும் ரிஷி…! என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன்நேரம் இரவை நெருங்க

கிளம்பலாமா அபி..! என்றான்.

அவள் தலையை சம்மதமாய் தலையை ஆட்ட….வாங்கிய பொருட்களை காரில் வைத்து விட்டு திரும்பியவன்….கடைக்கு சற்று தூரம் தள்ளிதங்களையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தவனைப் பார்த்து புருவம் சுளித்தான்.

யார் இவன்…? இங்க வந்ததில் இருந்து இதே இடத்தில் இருக்கான்அதுவும் காரைப் பார்த்துக் கொண்டே….! இவனை எங்கையோ பார்த்திருக்கோமே..! என்று யோசிக்க

ரிஷி தன்னை கண்டுகொண்டான் என்பதை அறிந்த அவன்அந்த இடத்தை காலி செய்திருந்தான்.

யோசனையுடன் நிமிர்ந்த ரிஷிஅங்கு அவன் இல்லாததைக் கண்டு தனக்குள் எச்சரிக்கை மணியை எழுப்பிக் கொண்டான்.

இப்படியாக ரிஷி அவன் சிந்தனையிலும்அபி அவள் சிந்தனையிலும் இருக்கஇருவரும் பேசிக் கொள்ளவில்லை.

ஊட்டி என்பதை மறந்து ஸ்வெட்டர் எதுவும் போடாமல் அபி புடவையுடன் இருக்கரிஷியும் ஸ்வெட்டர் எதுவும் போடவில்லை.

இருந்தாலும் இந்த குளிர் எல்லாம் என்னை ஒன்றும் செய்யாது…! என்பதைப் போல் ரிஷி அமர்ந்திருக்கஇரவு நேரம் நெருங்க நெருங்கஅபியால் குளிரைத் தாங்க முடியவில்லை.

என்னதான் காருக்குள் இருந்தாலும் அதையும் மீறி குளிர் எடுக்க…..தன்னை மறந்தவளாய் ரிஷியை நெருங்கி அமர்ந்து கொண்டாள்.

திடீரென்ற அவளின் அருகாமையில் நடப்பிற்கு வந்தவன்….என்னாச்சு அபி…? என்றான்.

கு..குகுளிர் எடுக்குது என்றாள்.

அப்பொழுது தான் அவனுக்கு நியாபகம் வந்தது ஸ்வெட்டர் போடாமல் அவளை அழைத்து வந்தது. தனது மடத்தனத்தை தானே நொந்து கொண்டவன்

இன்னும் டென் மினிட்ஸ்ல போயிடலாம்..! என்றவன்….காரை வேகமாய் செலுத்த…..ஊசி வளைவுகளில் அவன் மீது சரிந்தவள்….அவனை விடாமல் கட்டிக் கொண்டே அமர்ந்து கொண்டாள்.

வளைவுகளில் காரை செலுத்திக் கொண்டிருந்ததால் அவனால் அவளை அணைத்துக் கொள்ள முடியவில்லை.இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் திருப்தியாய் உணர்ந்தான்.அந்த உணர்விற்கு பெயர் என்னவென்று அவனுக்குத் தெரியவில்லை.

வீட்டின் முன் காரை நிறுத்தியவன் அபியைப் பார்க்க….இவ்வளவு நேரம் அவனை அணைத்துக் கொண்டு வந்தவள்சட்டென்று கைகளை விலக்கினாள்.

அவனின் முகம் பார்க்க முடியாமல் தவித்தவள்….குனிந்த தலை நிமிராமல் உள்ளே சென்றாள்.

மனதிற்கு சிரித்துக் கொண்ட ரிஷிவாங்கிய பொருட்களை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

என்னாச்சு அபி..ஏன் இங்கயே நிற்கிறஇதை வாங்கலாமில்லையா…? என்றான்.

வேகமாய் அவன் கைகளில் இருந்த பைகளை வாங்கி அங்கிருந்த சோபாவில் வைத்தவள்….எனக்கு தூக்கம் வருது…! என்றாள்.

தூக்கம் வந்தா தூங்கு….அதுக்கு ஏன் என்கிட்டே கேட்கிற…? என்று பேசிக் கொண்டே சென்றவன்….மூளையில் மின்னல் வெட்ட பேச்சை அப்படியே நிறுத்தினான்.

இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட் இல்ல…? என்றான் மந்தகாசமாய்.

முகம் வெளிறியவலாய்….அபி அவனைப் பார்க்க….அந்தப் பார்வையில் தன்னைத் தொலைத்தான் ரிஷி.

என்ன பார்வைடா சாமி இது….? பார்த்து பார்த்தே ஆளை மயக்குறாரிஷி இவகிட்ட கொஞ்சம் உஷாரா தான் இருக்கணும்…! என்று சொல்லிக் கொண்டவன்

சரி..சரிபாலைக் காய்ச்சி எடுத்துட்டு மேலே வா…! என்று சொல்லி அவள் முகம் பார்க்க….

இல்லைநான் கீழஇந்த ரூம்லையே என்று அவள் சொல்ல வந்ததை முடிக்காமல் நிறுத்த

உனக்கு எதையுமே முழுசா சொல்லும் பழக்கமே இல்லையா..? இல்லை திக்கு வாயா…? இந்த இழு இழுக்குற என்றான் கிண்டலாய்.

அவனின் பேச்சிலும், முகம் காட்டும் பாவனைகளிலும் இருந்து அபியால் எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை.எனக்கு தூக்கம் வருது…! என்றாள் மீண்டும் அதே பல்லவியை.

சரி போய் தூங்கு..! என்றான்.

ஆச்சர்யத்தில் நம்ப முடியாமல் அவன் முகம் பார்க்க….

இப்ப எதுக்கு இப்படி ஒரு பார்வைபோய் தூங்குன்னு சொன்னேன்..! என்றான் ஆராய்ச்சியுடன்.

ஒருவேளை கோபமாக சொல்கிறானோஎன்று நினைத்தவள் அவனைப் பார்க்கஅவன் முகம் எதையும் காட்டவில்லை.

அவன் முகத்தைப் படிக்க நினைத்து தோற்றவள்தனது அறையை நோக்கி சென்றாள்.

இவளைப் புரிந்து கொள்ளவே முடியவில்லையேசில சமயம் அவளா நெருங்கி வராசில சமயம் அவளா விலகிப் போறா…? இவளுக்கு என்ன தான் பிரச்சனை இவளுக்கு கல்யாணம் ஆனதை இவங்க வீட்டில் எப்படி எடுத்துப்பாங்க…! என்று யோசித்துக் கொண்டிருந்தவன்தனது செல்போனின் ஓசையில் கவனம் திரும்பினான்.

ஹலோ…! சொல்லுங்கம்மா…! என்றான்.

ரிஷி சாப்பிட்டிங்களா…! என்றார் சித்ரா.

சாப்பிட்டோம்மா..

அபி என்ன பண்றா…?

அவ தூக்கம் வருதுன்னு தூங்க போறேன்னு சொன்னாம்மா..

ரிஷி…. என்று அவர் இழுக்க

இப்போதைக்கு எதுவும் வேண்டாம்மாஅவளோட குடும்பம் எங்க இருக்கு….என்ன பிரச்சனையில் இங்க வந்தா…? இப்படி எதுவும் தெரியாம வாழ்க்கையைத் தொடங்குவதில் அர்த்தம் இல்லம்மாஇவளின் கல்யாணத்தைப் பற்றி அவங்க வீட்டிலும் கனவுகள் இருக்குமில்லையா..? என்றான்.

ரிஷியின் வார்த்தைகளைக் கேட்ட சித்ராவிற்கு பெருமையாக இருந்தது. இதை விட ஒரு தாய்க்கு என்ன வேண்டும்.

ரிஷிஉன்னோட முரட்டுத் தனத்தை அவகிட்ட காட்டிடாதப்பா….எதுவா இருந்தாலும் நிதானமா கேளு….இல்லன்னா வேண்டாம்…இனி அவளைப் பற்றி தெரிந்தால் என்ன..?தெரியாவிட்டால் என்ன..? என்றார்.

அம்மா…! ஊருக்கு நான் முரடனா இருந்தாலும் அவளுக்கு நான் புருஷன் தானே..! சோ..கவலையே படாதிங்கஉங்க மருமகளை நான் ஒன்னும் பண்ண மாட்டேன்….பிராமிஸ்..! என்றான்.

அதைத்தான் நானும் சொல்றேன் ரிஷி என்று சுரேஷின் குரல் கேட்க

இவர் எப்ப போனை வாங்கினார்..? என்று அவன் யோசிக்க

நாளைக்கு எல்லா பேப்பர்லயும் உங்க கல்யாண போட்டோ வந்திடும்…! அதுக்கான எல்லா ஏற்பாடுகளையும் நான் பண்ணிட்டேன்.எப்படியும் அபி வீட்டை சேர்ந்தவங்க அதைப் பார்த்தா உன்னை கண்டிப்பா தொடர்பு கொள்ளுவாங்க..! என்று சுரேஷ்  யோசனையுடன் சொல்ல

ஓகேப்பா….நான் பார்த்துக்கிறேன்…! என்றான்.

ம்ம்ம்….இன்னைக்கு வந்த போட்டோவைப் பார்த்தே யாரும் கூப்பிடலைநாளைக்கு எப்படி தொடர்பு கொள்ளுவாங்க…! என்று நினைத்தவன்…. அபியின் அறையைப் பார்க்க அங்கு விளக்கு அணைக்கப் பட்டிருந்தது.

பெருமூச்சு ஒன்றை விட்டவன்தனது அறைக்கு செல்ல முற்படஏதோ ஒன்று அவனைத் தடுத்தது.கடை வீதியில் பார்த்தவனின் முகம் கண் முன் வர

ஏனோ அபியை கீழ் அறையில் விட்டு விட்டு மேலே தனது அறைக்கு சென்று தூங்க அவனுக்கு விருப்பமில்லை.

ஹாலில் அமர்ந்து டிவியை உயிர்பித்தவன்டிஸ்கவரி சேனலில் ஆழ்ந்து போகசற்று நேரத்தில் அசதியில் தன்னை மறந்து சோபாவிலே உறங்கத் துவங்கினான்.

நேரம் நள்ளிரவை நெருங்க….

அப்ப்ப்பாஆஆஆ…. என்ற அபியின் குரல் காது ஜவ்வைக் கிழிக்க…. என்னவோ ஏதோவென்று எழுந்தான் ரிஷி.

அப்பொழுதுதான்தான் சோபாவிலே உறங்கிவிட்டது தெரியவர….புயலென அபியின் அறைக்குள் நுழைந்தான் ரிஷி.

என்னாச்சு அபி….? என்ற பதட்டத்துடன் உள்ளே செல்ல

அங்கிருந்த குளிரையும் மீறிஅவள் உடல் வியர்வையில் குளித்திருந்தது.

அவளின் முகத்தில் பூத்திருந்த வியர்வைத் துளிகளை வேகமாய்த் துடைத்தவன்….என்னாச்சு அபி…? கனவு ஏதும் கண்டியா…? என்று அவன் கேட்டுக் கொண்டிருக்க

கனவு என்றவுடன் அபியின் முகம் வெளிறியது.அப்படி ஒரு கொடூர கனவு தனக்கு ஏன் வந்தது  என்று யோசித்தவளுக்கு கண்ணீர் அருவியாய் வழிய

அபிஎன்னம்மா ஆச்சு…? என்றான் பரிவுடன்.

அப்பாஅப்பாதூக்குல..தூக்குலசெத்து…. என்று உளற

என்ன அப்பா…?என்ன தூக்கு…? எனக்கு ஒன்னும் புரியலை என்றான் ரிஷி.

அவள் மிரண்டு தன்னைப் பார்த்து விளிப்பதைக் கண்டவனுக்குஎன்ன தோன்றியதோ….சட்டென்று அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

அந்த நேரத்தில் அவனின் அணைப்பு அவளுக்குத் தேவையாயிருந்தது.

அவனின் சட்டையை இறுகப் பிடித்தவள்அப்படியே அவனின் நெஞ்சில் அடைக்கலம் தேடினாள்.

ஒண்ணுமில்லை அபி….தூங்கு…! என்று அவன் பரிவாய் அவள் தலையை தடவினாலும்அவள் கனவில் கண்ட காட்சி அவள் கண்ணை விட்டு அகலவில்லை.

அவளின் அமைதியைப் பார்த்து….அவள் உறங்கிவிட்டாள் என நினைத்தவன்….அவளை படுக்கையில் உறங்க வைக்க தலையைத் தூக்க….அவளோவிடுவேனா என்று அவனை மேலும் இறுக்கிக் கொள்ள….

ரிஷிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.அவளின் முகத்தைப் பார்க்கும் போதுஏதோ அவள் கெட்ட கனவு கண்டிருக்கிறாள் என்று மட்டும் தெரிந்தது.

அவளை ஆதரவாக அணைத்தவன்விடியும் வரை கண்களை மூடவேயில்லை.அந்த இரவு அவனுக்கு உறக்கமில்லா இரவாகவே அமைந்தது.

பொழுது விடிந்து அறைக்குள் வெளிச்சம் பரவ…..மெல்ல கொட்டாவியை விட்டபடி….அபியைப் பார்த்தான்.

அவளோ பஞ்சு மெத்தையில் உறக்கம் கொள்வது போல்அவன் நெஞ்சணையில் துயில் கொண்டிருந்தாள்.

கலைந்த தலைமுடியும்,கண்ணீர் வலிந்த தடமும்….சோர்வாய் காணப்பட்ட அவள் முகமும்….அவன் கண்ணில் பட….அந்த நிலையிலும் அவள் முகத்தில் தெரிந்த குழந்தைத் தனத்தை ரசிக்கவே செய்தான் ரிஷி.

அவளின் இடுப்பு சேலை விலகியிருக்கஅதில் தெரிந்த அவளின் வெற்றிடை அவன் கண்களுக்கு காட்சியாய் அமைந்தது.

வெகு நேரமாய் காலை நீட்டி அமர்ந்திருந்ததால்….கால்கள் இரண்டும் மரத்துப் போயிருக்க….எங்கே எழுந்தால் அவளின் தூக்கம் கலைந்து விடுமோ என்று அப்படியே அமர்ந்திருந்தான்.

ஆனால் அவனை சோதிக்கவென்றேஅவள் சேலை அங்கங்கே விலகியிருக்க….

டேய் ரிஷி….உனக்கு வந்த சத்ய சோதனையாடா இது….? உன்னை ஒரு வழியாக்காம இவ  விட மாட்டா போல இருக்கே..! என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டிருக்க….

ஏதோ ஒரு உந்துதலில் கண்ணை விழித்தாள் அபி.அவளின் முகத்துக்கு அருகில் ரிஷியின் முகத்தைக் கண்டவள்ஒரு நிமிடம் ரசித்தவள்…. ஆஆஆஆ.. என்றபடி துள்ளி எழுந்தாள்.

இப்ப எதுக்கு பேயைக் கண்ட மாதிரி அலற…? என்றான்.

நீங்க எப்பஇங்கரூமுக்கு வந்திங்க…? என்று கேட்க..

ஏன் கேட்க மாட்ட….இது எனக்கு தேவைதான்….கண்ணெல்லாம் எரியுது….கொஞ்ச நேரம் நான் தூங்கனும் என்றபடி வெளியில் சென்று விட்டான்.

அப்பொழுது தான் அவளுக்கு நடு இரவில் நடந்தது நியாபகம் வரஅப்படியே சிலையென நின்றுவிட்டாள்.

இரவில் தான் கண்ட கனவும்….ரிஷி வந்ததும்தான் அவனை அணைத்ததும்…. ஒவ்வொன்றாய் நியாபகத்திற்கு வர….தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.

ஏற்கனவே அவன் உன்னை நக்கலாய்ப் பார்ப்பான்….மறுபடியும் மறுபடியும் அவன்கிட்ட பல்பு வாங்குவதே உனக்கு வேலையாக போய்விட்டது அபி என்று கண்ணாடியில் தன்னைப் பார்த்து தானே சொல்லிக் கொண்டவள்திரும்ப எத்தனிக்க

அங்கே கதவோரத்தில்….முகத்தில் குறுஞ்சிரிப்புடன் நின்றிருந்தான் ரிஷி.

செல்போனை எடுக்க வந்தேன்…! என்று தனது செல்ல எடுத்தவன்அவளை மார்க்கமாய்ப் பார்த்துக் கொண்டே செல்ல

அபி என்று தனக்குத் தானே நொந்து கொண்டாள்.

 

கோடிக் குயில் கூவி….எந்தன் நெஞ்சில் கூடி

மௌனம் ஏனோ என்று கேட்குதே…!

ராகம் தொடும் நேரம்வானம் தொடும் மேகம்

என்னில் எந்தன் எண்ணம் மீட்டுதே..!

Advertisement