Advertisement

அத்தியாயம் 22:

ரிஷியின் வீட்டிலும்யாரும் நிம்மதியாக இருக்கவில்லை.ரிஷி சொன்னது போலவேஅன்று காலையிலேயே கிளம்ப வேண்டும் என்று அடம் பிடித்தார் சித்ரா.

ஆனால் சுரேஷ் தான் மறுத்து விட்டார்.அவன் கண்டிப்பாக இந்த கேஸில் குற்றவாளியை கண்டுபிடிப்பான்அவனுடைய இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வெளியே வருவான் என்று நம்பிக்கையாக சொன்னார்.

அவரின் நம்பிக்கையின் படியேஅன்றைய நிகழ்வுகள் இருக்கஅதை தொலைக்காட்சியில் பார்த்த பெற்றவர்களின் மனம் விம்மித் தணிந்தது.

பார்த்தியா சித்ராஎன் மகன் யாருன்னு காட்டினான்! யாரு பையன்என் பையன்…?” என்று அவர் மீசையை முறுக்கிக் கொள்ள..

அப்பா என்பதையும் தாண்டிஅதே துறையில் பணியாற்றியவர் என்பதால்பெருமிதம் கொண்டார் சுரேஷ்.

டேய் வருண்..பரவாயில்லடா உங்க அண்ணன்….உன்னை அளவுக்கு தத்தி இல்லை….கொஞ்சம் புத்திசாலி தான்…” என்று வம்பிழுத்துக் கொண்டிருக்க

அங்கு அபியோதன் கணவனின் வருகையை எண்ணி அமர்ந்திருந்தாள்.

நேற்று அவனுடைய கேள்விக்கான அர்த்தம் இன்று விளங்கியது அவளுக்கு.

நான் அவரை நேசித்ததுஅவருக்கு தெரிந்திருக்கு என்று எண்ணியவளால் நிம்மதியாக மூச்சு கூட விட முடியவில்லை.ஏற்கனவே கோபத்தில் கத்துபவன்….இன்று வந்து என செய்யப் போகிறானோ…? என்ற பயம் மனதின் ஓரத்தில் இருந்தாலும்….

அவை அனைத்தையும் மீறி..காதல் கொண்ட அவள் மனம் கணவனின் வருகைக்காய் தவம் கொண்டது.ஜானிடம் இருந்து..எப்பேர்பட்ட ஆபத்தில் இருந்து தப்பியிருக்கிறோம்..என்று எண்ணியவளால்….தன்னையும் மீறி கண்ணீர் விட்டாள்.

சுரேஷ் சொன்ன வார்த்தைகள் நியாபகத்திற்கு வர….தன் கண்களை அழுந்த துடைத்துக் கொண்டாள்.

உன் காதலை சொல்லாமல் மூடி வைத்து என்ன பயன் அபி.உன்னை தவிர..மற்ற எல்லார் மூலமும் அவனுக்கு தெரிந்து விட்டது உன் காதல்..இதற்கு மேலும் சொல்லாமல் இருந்தால்நீ அவனைக் காதலிப்பதில் அர்த்தமே இல்லை.. என்று அவளின் மனசாட்சி எடுத்து சொல்ல….

தன் மடத்தனத்தை எண்ணி தானே கடிந்து கொண்டாள்.ஏற்கனவே சுரேஷின் வார்த்தைகளில் கொஞ்சம் தெளிந்திருந்தவள் இப்போது முற்றிலும் தெளிந்தாள்.

அதற்கு ரிஷியின் பேச்சும் ஒரு முக்கிய காரணம் எனலாம்.ஏனோ அவனின் பேச்சைக் கேட்ட பிறகு தன்னை அதட்டியே வளர்த்த பாட்டியின் மேல் இருந்த கோபம் கூட இருந்த இடம் தெரியாமல் போனது.எல்லாம் என் நல்லதுக்காக சொன்னவை தானே என்று தன் மனதை தேற்றிக் கொண்டாள்.

வீட்டிற்கு வெளியே ஜீப் சத்தம் கேட்க….எழுந்து செல்.. என்று மனது சொன்னாலும்கால்கள் ஏனோ..நகர மறுத்தது.

இவ்வளவு நேரம் இருந்த தைரியம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போவதைப் போல் உணர்ந்தாள்.பற்றிக் கொள்ள….ஏதாவது ஒன்று தேவை என்ற நிலையில் அவள் இருக்க

ரிஷி தனது ஷூவை..வெளியே கழற்றிக் கொண்டிருந்தான்.தட்டுத் தடுமாறி எழுந்தவள்திரும்பி வாயிலைப் பார்க்கஅப்பொழுது தான் உள்ளே நுழைந்த ரிஷியின் பார்வையும் அவள் கண்களை சந்தித்தது.

நலுங்கிய சேலையும்,கலைந்த கூந்தலுமாய் இருந்தவளைப் பார்த்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

இப்ப எதுக்கு இப்படி இருக்கா..?” என்று யோசித்த படி ஒரு எட்டு உள்ளே வைக்க

அதற்கு மேல் தாங்க மாட்டாதவளாய்…”ரிஷிஷிஷி….” என்ற கூவலுடன் ஓடி சென்று அவனை அணைத்துக் கொண்டாள்.

அவளின் இந்த திடீர் அணைப்பை அவன் எதிர்பார்க்கவில்லை.

என்னாச்சு அபி….?” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்க

விடுவேனா என்பதைப் போல் அவனை இறுக அணைத்திருந்தவள்

அவனின் இதயத்திற்கு நேராய் நுழைந்து விடுபவளைப் போல….அவன் நெஞ்சினுள் புதைந்தாள்.

என்னாச்சு அபிஇப்ப எதுக்கு இப்படி அழற…” என்று ரிஷி கேட்க..

சாரிரிஷி..லவ் யுரிஷி…” என்று மாற்றி மாற்றி அவள் அதையே சொல்ல….அந்த வார்த்தைகளைக் கேட்ட ரிஷிக்குஏதோ வானில் மிதப்பதைப் போன்று இருந்தது.

உதட்டில் குறும்பு புன்னகைப் பூக்க….”சரிவிடுநான் யூனிபார்ம்ல இருக்கேன்..சட்டையைக் கசக்காத….” என்றான் சிரிக்காமல்.

நான் உருகி உருகி ..லவ்..யு சொல்லிட்டு இருக்கேன்இவனுக்கு சட்டை கசங்க கூடாதா என்று நினைத்தவள்மேலும் நன்றாக ஒட்டிக் கொண்டு நகர மறுத்தாள்.

அவளின் செயலைக் கண்டு சிரிப்பை அடக்க முடியாமல் ரிஷி தவிக்க…”ஆமா எங்கசேலத்து பாச குயில்கள் யாரையும் காணோம்இந்த நேரத்துக்கு வந்திருக்கணுமே..!” என்றான்.

யாரும் வரலை..!” என்றாள் முனுமுனுப்பாய்.

அதை விலகி நின்னு சொல்லு…” என்றான் கொஞ்சம் முறைப்பாய்.

என்ன மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறுதா என்று எண்ணியவள் விலகி அவன் முகம் பார்க்க வெட்கப்பட்டவளாய் தரையைப் பார்த்துக் கொண்டிருக்க

போபோய்படிக்கிற வேலையைப் பாரு….”என்று அதட்ட….

சாமியார்..சாமியார்…” என்று அபி முணுமுணுத்துக் கொண்டே செல்ல..

என்ன சொன்ன…?” என்றான் தன் சிரிப்பை மறைத்தபடி.

படிக்கிறேன்னு சொன்னேன்ஹி..ஹி..” என்றவள்..உள்ளே செல்ல

நான் சாமியாராஅடிப்பாவி…” என்று எண்ணி சிரித்துக் கொண்டே சென்றவன்பிரஷாகி விட்டு வந்தான்.

வந்தவன் தன் அப்பாவிற்கு அழைக்க….ஒரே ரிங்கில் எடுத்தார் சுரேஷ்.

சொல்லுப்பா…” என்றார்.

என்னப்பா நீங்க யாரும் வரலை…” என்றான் குறையாய்.

அவருக்குத் தெரியும் ரிஷி அழைப்பான் என்று.தனக்குள் சிரித்துக் கொண்டவர்…”நீதானே கோபமாய் போன ரிஷிநீதான் வரணும்இங்க உங்கம்மா ஒரே புலம்பல்உன்னை பார்க்கணும் என்று….அபிக்கும் அடுத்து இரண்டு நாள் லாவ் தானே ரிஷிஅவளையும் கூட்டிட்டு வர வேண்டியது தானே..” என்றார்.

இல்லப்பா இன்னும் கொஞ்சம் பார்மாலிட்டிஸ் எல்லாம் இருக்குஅதையெல்லாம் முடிக்கணும்பார்க்குறேன்…” என்றான் அறை மனதாய்.

எங்க மேல இருந்த கோபம் போய்விட்டதா ரிஷி..!” என்றார்.

நீங்க முன்னாடியே சொல்லியிருந்தாசில பிரச்சனைகளை தவிர்த்திருக்கலாமே என்று தான் என் கோபம் டாடி…” என்றான் சற்று குறையாய்.

முன்னாடியே சொல்லியிருந்தா அபியையும் தானே தவிர்த்திருப்ப…? என்று சுரேஷ் கேட்க..

அது உண்மைதான்ப்பா…” என்று ஒப்புக் கொண்டான் ரிஷி.

சரிப்பாநீங்க சீக்கிரம் வந்தாவருணுக்கும்,தைலாவுக்கும் பேசி முடிச்சுடலாம்…”என்றார்.

கண்டிப்பாப்பாஇன்னும் ஒரு வாரம் தானே…! அபிக்கு எல்லா எக்ஸாமும் முடிச்சுடும்.அப்பறம் வரேன்ப்பா..” என்றான்.

அவன் பேச்சில் இருந்தே அவன் அபியை ஒதுக்கவில்லை என்று புரிந்து கொண்ட சுரேஷுக்குஅபியைப் பற்றி மனதில் இருந்த கவலை நீங்கியது.

சரி ரிஷி…”என்றபடி அவர் போனை வைக்க….ரிஷியும் மன நிறைவுடன் போனை வைத்தான்.

அது எதனால வந்த நிறைவு என்று அவனால் வரையறுக்க முடியவில்லை.”அவரைத்தான் காதலிக்கிறேன்..அவரைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன்…” என்று ஜானிடம் அபி சொன்ன வார்த்தைகள் மட்டும் அவன் மனதை விட்டு நீங்கவில்லை.ஒரு வேலை அந்த வார்த்தைகள் கொடுத்த நிறைவாய் இருக்குமோ என்னவோ..?

உள்ளே அறையில் அபியோ….”படிக்கணுமாம்படிக்க மாட்டாமகக்கி சட்டை..காக்கி சட்டை…” என்று புலம்பியவள்…”சட்டை கசங்கிடும்..” என்று அவனைப் போலவே சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்கஅவளின் முன்னால் வந்து நின்றான் ரிஷி.

என்ன..?” என்று புருவத்தை உயர்த்த

ம்கூம்…” என்று அவள் தலையை ஆட்டினாள்.

நான் சாமியாரா..?” என்றவன்….அவளைத் தன்னருகில் இழுக்க

ஐயோ அதையும் கேட்டுட்டானா…? என்று அவள் மனதினுள் நினைக்க

இப்பவெல்லாம் சாமியாருங்க தான் ரொம்ப மோசம் செல்லம்…” என்று அவள் கண்களைப் பார்த்து சொல்ல

இல்ல..அது..வந்து.. தெரியாம..” என்று அவள் இழுக்க

இல்லைதெரிஞ்சுதான் சொல்லியிருக்க…” என்று அவள் காதுமடலில் ரகசியம் பேச

இதென்ன அபி..உனக்கு வந்த சத்திய சோதனை…. என்று எண்ணியவள்..அவனிடம் இருந்து விலக முற்பட

விடுவேனா என்று பிடித்திருந்தவன்…”நான் உள்ள வந்தப்ப என்னமோ சொன்னியே..அதை சொல்லு..” என்றான்.

நான் என்ன சொன்னேன்…” என்றாள் திக்கித் திணறி.

நீ என்ன சொன்னேன்னு உனக்கு தெரியாது..” என்று அவன் கள்ளப் பார்க்க….அதில் சொக்கியவளாய்கொஞ்சம் தைரியம் வரப் பெற்றவளாய்..

ம்ம்ம்..ரிஷி லவ் யு ன்னு சொன்னேன்..!” என்றாள்.

அவளை விலகிஅமர்ந்தவன்…”எங்க திரும்ப சொல்லு..!” என்றான்.

லவ் யு ன்னு சொன்னேன்..” என்றாள்.

திரும்ப..”

..லவ்..யு.. ..லவ்..யு.. ..லவ்..யு.. ..லவ்..யு..”போதுமாஎன்று அவள் மூச்சு வாங்க

போதாது…”என்றவன் அவளை இழுத்து தன் மேல் சாய்த்து கொண்டான்.

மேடம்க்கு என்ன அப்படி ஒரு லவ் என்மேல.. என்றான்.

தெரியலை..” என்றாள் பேச்சற்றவளாய்.

அதெப்படி தெரியாம போகும்….அந்த ஜான் கிட்ட பேசும் போதும் தெரியாம தான் பேசுனியா…?” என்றான்.

எப்படின்னு தெரியலைஆனா நீங்க முதன் முதல்ல காலேஜ்க்குள்ள வரும் போதுஉங்களைப் பார்த்து அப்ப பிளாட் ஆனவதான்…” என்றாள்வெட்கப் பட்டுக் கொண்டே.

அப்போவேவா…?” என்றான் ஆச்சர்யமாய்.

ம்ம்ம்ம்…”

ம்ம் அப்பறம் சொல்லு…”என்றான்.

அப்பறம் எல்லாம் ஒண்ணுமில்லைமறுபடியும்நீங்க வறிங்க என்பதற்காகபாட்டிகிட்ட கஷ்ட்டப்பட்டு அனுமதி வாங்கிஎன்எஸ்எஸ் முகாமிற்கு வந்தேன்…” என்றாள்.

அங்கயுமா…? நான் உன்னைப் பார்க்கவேயில்லையே..?” என்றான்.

ம்ம்நீங்க எப்படி என்னைப் பார்ப்பிங்க..? அன்னைக்கு தான எங்க அக்கா கூட நிச்சயம் முடிச்சு வந்திங்க..” என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்க

அன்றைய நாளின் நினைவில் அவன் முகமும் இறுகியது.அவனின் இறுகிய முகத்தைப் பார்த்தவள்…”சாரி..” என்றாள்.

நான் தான் சாரி சொல்லணும் அபி.ஒருத்தி என்னை உருகி உருகி லவ் பண்றது தெரியாம..அவ வீட்டுக்கே போய்..அவ அக்காவையே நிச்சம் செய்திருக்கேன்..” என்றவன்..

ஏன் என்னை உனக்கு முன்னாடியே தெரியலையா..?” என்றான்.

இல்லை என்று தலையாட்டியவள்வருணை மாப்பிள்ளையாக நினைத்தது முதற் கொண்டுரிஷி தான் மாப்பிள்ளை என்று…. பிறகு தான் அறிந்து கொண்டது வரை சொல்ல

அந்த நேரத்தில் அவள் எப்படிப்பட்ட ஒரு உணர்வில் இருந்திருப்பாள் என்று எண்ணியவனால்அதைத் தாங்க முடியவில்லை.

அவளை இறுக்கி அனைத்துக் கொண்டவன்…”சாரி அபி…” என்றான்.

பராவாயில்லை விடுங்கநான் உங்களை லவ் பண்றேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்…?” என்று சமாதானம் சொன்னாள்.

நீ என்னை சமாதானம் பண்ண சொன்னாலும்தேவையில்லாம உன்னைப் பேசிஊட்டியில் பார்த்தப்ப கூடஅதட்டி.உருட்டிவெளிய போக சொல்லிசாரி அபி..எல்லாத்துக்கும் சாரி.

ஐயோ நீங்க என்ன சாரி சொல்லிட்டே இருக்கீங்கநான் அதையெல்லாம் மனசில் வச்சுக்கவே இல்லை…” என்றாள்.

அப்பறம் ஏன் அபி அன்னைக்கு தண்ணில குதிச்ச…?” என்றான் ஆதங்கமாய்.

அது..என்று திணறியவள்…”அந்த காட்டுல உங்களைப் பார்த்த உடனேஎன்னால் நம்பவே முடியலை..கல்யாண மாப்பிள்ளையா அங்க இருக்க வேண்டியவர்..இங்க எப்படின்னு யோசிச்சேன்..எனக்கு எதுவும் புரியலை.எது எப்படி இருந்தாலும்..அப்போதைக்கு நீங்க என் பக்கத்தில் இருக்கிங்கன்ற நிம்மதி மட்டும் தான் எனக்கு இருந்தது.

நீங்க கெஸ்ட் ஹவுஸ் அழைச்சுட்டு போன உடனேஅங்க தைலாக்கா இருக்கவும் குழப்பா இருந்தது.அப்பறம் தான் கல்யாணம் நடக்கலையோன்ற சந்தேகம் வந்தது.நடந்திருந்தா நீங்க அக்காவோட தானே வந்திருப்பிங்கன்னு நினைச்சேன்.அன்னைக்கு அந்த ராக்கேஷ் பேசினதை..வருண் சொல்லி..கல்யாணத்தை நிருத்தியிருப்பரோன்னு நினைச்சேன்..!

நான் யார்ன்னு சொன்னா..உடனே என்னை அனுப்பி வச்சுடுவிங்கன்னு தெரியும்...அதான் சொல்லலை.இருக்கிற வரை உங்க பக்கத்துலையே இருக்கணும் என்று நினைத்தேன்.

அன்னைக்கு நீங்க அப்படிப் பேசவும்என்னால் தாங்க முடியலை.நான் எல்லாருக்கும் பாராமா இருக்கேன்னு நினைச்சு தான்அங்க இருந்து போனேன்.போகும் போது தான் தோணியதுநீங்களும் இல்லாமவீட்டுக்கும் போக முடியாமஎல்லாமே வெறுத்த மாதிரி ஒரு உணர்வு

இப்படி இருக்கிறதுக்கு சாவதே மேல் என்று தான்அன்னைக்கு தண்ணில..தண்ணில…” என்று அவள் கண் கலங்க

அதற்கு மேல்அவனுடைய மூச்சு முட்டும் அனைப்பிற்குள் இருந்தாள்.

..லவ்..யு.. அபி ..லவ்..யு.... என்றான்.

அவளுக்கு ஆனத அதிர்ச்சியாக இருந்தது.”ரிஷி..” என்று ஆச்சர்யம் தாங்க முடியாமல் அழைக்க..

ஆமாஅன்னைக்கு தான் உன்னைப் பார்த்து முதன் முதலில் மனதிற்குள் சிறு சலனம்என் மனதை மறைக்க தான் உன்னை அப்படி கடிந்து பேசினேன்..ஆனா நீ தண்ணிக்குள்ள விழவும்என் உயிரே என்கிட்டே இல்ல அபி…” என்றவன்..அவள் முகம் எங்கும் முத்த மழை பொழிய

தான் ஏற்கனவே அவனுள் தாக்கத்தை எற்படுத்திருக்கிறோம்என்று எண்ணியவளுக்குஅதற்கு மேல் வேறொன்றும் பெரிதாய் தோன்றவில்லை.

அவனுடைய இந்த வார்த்தைகளே வாழ்நாள் முழுமைக்கும் போதுமானதாய் இருந்தது அவளுக்கு. தானும் காதலிக்கப் பட்டிருக்கிறோம் என்று எண்ணியவளுக்குநெஞ்சம் நிறையஅவனுள் புதைந்து கொண்டாள்.

அவளை அப்படி அருகில் வைத்துக் கொண்டுஅவனால் தன்னையே கட்டுப் படுத்த முடியவில்லை.முயன்று கட்டுப் படுத்தியவன்

முதல்ல உனக்கு எக்ஸாம் முடியட்டும்எனக்கு இப்ப பசிக்குதுசாப்பாடு போடுற எண்ணம் இருக்கா இல்லையா…?” என்றான் சிரித்துக் கொண்டே.

அச்சோமறந்தே போயிட்டேன்வாங்க ..சாப்பாடு ரெடியா தான் இருக்கு…” என்று அக்கறையாய் அவனை அழைத்து சென்று பரிமாறமனதும் வயிறும் நிரம்பியதைப் போல் உணர்ந்தான் ரிஷி.

இன்னைக்கு நீங்க டிவில பேசினது செம்மையா இருந்தது என்றாள்சாப்பாடு போட்டுக் கொண்டே.

ம்ம்.. என்று தலையை மட்டும் ஆட்டியவன்அவன் போக்கில் சாப்பிட

அப்ப தான் எனக்கு ஒன்று புரிந்தது.. என்றாள்.

என்ன புரிந்தது..

என் பாட்டியும் என்னை திட்டி..திட்டி வளர்த்ததில் தப்பில்லை என்று.நான் அன்னைக்கு அவங்களை ரொம்ப கோபமா திட்டிட்டேன்.. என்று அவள் கவலைப் பட

அதற்கு ஒன்றும் சொல்லாதவனாய்அமைதியாய் சாப்பிட்டான்.

தான் அவர்களைப் பற்றி பேசியது அவனுக்கு பிடிக்கவில்லையோ  என்று எண்ணியவள் அமைதி காக்க

அம்மாஅபி என்ற பாட்டியின் குரலில் திரும்பினாள்.ரிஷியும் சட்டென்று அந்த குரலில் நிமிர

வாங்க பாட்டி என்று சொல்ல வாயெடுக்க போனவள்சட்டென்று திரும்பி ரிஷியைப் பார்க்க

அவளின் பார்வையில்கர்வம் கொண்டான் ரிஷி.என் மனைவி எனக்கு பிடிக்காத எதையும் செய்ய மாட்டாள்என்று எண்ணியவனுக்குஇதை விட ஒரு கணவனுக்கு என்ன வேண்டும் என்று நினைத்தான்.

உள்ள வாங்க.. என்றான்.

அவனின் அழைப்பில் மகிழ்ந்து போனாள் அபி.

வாங்க பாட்டி..! வாங்க தாத்தா..! என்றபடி..பின்னால் பார்க்கஅங்கு கணபதி நிற்பது தெரிய

வாங்க..! என்று மட்டும் சொன்னாள்.

அவள் அப்பா என்று அழைக்கவில்லை என்பதை ரிஷி குறித்துக் கொண்டான்.

இந்த பாட்டியை மன்னிச்சுடு அபிஎன்று அவளின் கைகளைப் பிடிக்க

என்ன பாட்டிநீங்க போய் என்கிட்டே மன்னிப்பு கேட்டுகிட்டுநான் தான் அன்னைக்கு ரொம்ப பேசிட்டேன் பாட்டிநீங்க தான் என்னை மன்னிக்கணும்.. என்றாள் மனதில் இருந்து.

பார்..இவளையா ஒதுக்கி வைத்தாய்..! என்ற ரீதியில் கோவிந்தன் தன் மகனையும்,மனைவியையும் பார்க்க

தங்கள் தவறு புரிந்தவர்களாய் தலை குனிந்தனர்.

மாப்பிள்ளை எங்களை மன்னிச்சுடுங்க மாப்பிள்ளை..! நாங்க வரம்பு மீறி பேசிட்டோம்வயசுக்கு மீறி பேசிட்டோம்தயவுசெஞ்சு எங்களை மன்னிச்சுடுங்க.. என்று அமிர்தவள்ளிஅவனை கையெடுத்து கும்பிட

ஐயோ பாட்டி…! அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.நீங்க பெரியவங்க..என்கிட்டே போய் என்றவன்..

உட்காருங்க.. என்றான்.

அபி..அவங்களுக்கு சாப்பாடு எடுத்து வை..! என்றான்.

நடப்பதை கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்தவள்இதோ.. என்றபடி சென்றாள்.

மனதும்..வயிறும் நிறைந்திருந்தாலும்ரிஷி சொன்னான் என்பதற்காகஅவர்கள் சாப்பிட்டனர்.

அபி..நம்ம வீட்டுக்கு எப்பம்மா வர..? என்று கோவிந்தன் கேட்க..

மன்னிக்கணும் தாத்தாஇவ அக்கா அங்கே இருக்கும் வரைநான் என் மனைவியை அங்கே அனுப்ப முடியாது..உங்களுக்கு எப்ப பார்க்கணும் என்றாலும்..நீங்க இங்க தாராளமா வரலாம்.. என்றான் ரிஷி.

மாப்பிள்ளை..அவளையும் மன்னிக்க கூடாதா..? என்றார் வள்ளி.

மன்னிக்கும் படியான தப்பை அவங்க பண்ணலை.இப்பன்னு இல்லை.இனி எப்பவுமே நான் அவங்க முகத்தில் விழிப்பதை விரும்பவில்லை.. என்றவன்..

ஒரு நிமிஷம்.. என்றபடி உள்ளே சென்றான்.

வரும் போது அவன் கைகளில் ஒரு கவர் இருந்தது.

இதில் அவங்க காதலித்த பையனோட போட்டோஅவங்க சேர்ந்து எடுத்துகிட்ட போட்டோஅந்த பையன் ஜாதகம்..அட்ரஸ்எல்லாமே இருக்குஇந்த பையனையே அவங்களுக்கு கல்யாணம் செய்து வைத்தாலும் சரிஇல்லை..வேற பையனைப் பார்த்தாலும் சரி….நான் சொல்றது ஒன்னு தான்இனி அவங்களுக்கு தங்கைன்னு ஒருத்தி கிடையவே கிடையாது.

அவங்க கல்யாணத்துக்கும் கண்டிப்பா நாங்க வர மாட்டோம்அவங்க திருமணம் முடிஞ்சு ..புருஷன் வீட்டுக்கு போன உடனே..கண்டிப்பா நானே அபியை அழைச்சுட்டு வரேன்..என்றான்.

ஏனோ பெரியவர்களை மன்னிக்க முடிந்த அவனால்….நடந்த தப்புக்களுக்கு காரணமாய் இருந்த சரண்யாவை மன்னிக்க முடியாமலே போனது.

அபியின் முகத்தைப் பார்க்கஅவள் முகமோ எதையும் பிரதிபலிக்கவில்லை.

ரிஷி கொடுத்த கவரில் இருந்த போட்டோக்களைப் பார்த்த வள்ளிக்குஇதயம் வெடிக்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம்

நம்பிக்கை வைத்த பேத்தி பொய்த்துப் போனாள்.நம்பிக்கையில்லாமல் அதட்டி ஒடுக்கிய பேத்தி,தான் இன்னாரின் வளர்ப்பு என்பதை நிருபித்து விட்டாள்.

சரண்யாவை நினைத்து அசிங்கப்பட்ட மனம்அபியை நினைத்து பெருமைப்பட்டது.

நீங்க இந்த அளவுக்கு இறங்கி வந்ததே பெரிய விஷயம் தம்பிஅப்ப நாங்க கிளம்புறோம்.. என்றபடி அவர்கள் கிளம்ப..

நான் பேசியதில்..உனக்கு வருத்தம் ஒன்னும் இல்லையே…? என்று அபியைப் பார்த்து கேட்க

இல்லை.. என்பதைப் போல்தலையை ஆட்டியவள்….அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். 

ரோஜாப்பு வேகத்தில் தாழம்பு
வாசங்கள் நான் இங்கு கண்டேனடி
செவ்வாயின் ஓரத்தில் சூடான
தேனுக்கு நான் ஏங்கி நின்றேனடி

தொட்டாலும் தாளாமல் 
விட்டாலும் போகாமல்
தள்ளாடும் நெஞ்சம் இனி
முத்தங்கள் எல்லாமும்
முத்துக்கள் ன்றாக

நான் கோர்த்தேன் முத்துமணி

Advertisement