Advertisement

அத்தியாயம் 1:

 

குளிர்ந்த காற்று தேகங்களிடையே சிலிர்ப்பை ஏற்படுத்த…..கண் பார்வை படும் இடமெல்லாம் பசுமையும் குளுமையுமாய் நிறைந்து காணப்பட…அடர்ந்த மரங்களும்,காடுகளுமாய் ….தேயிலை மரங்கள் வானுயர்ந்து நிற்க….மொத்த அழகையும் தன்னுள் அடக்கிக் கொண்டு சில்லென்று காணப்பட்டது நீலகிரி மாவட்டம்.

 

கொண்டை ஊசி வளைவுகள்  அதிகம் காணப்படும்… உதக மண்டலம் என்று அழைக்கப்படும் ஊட்டி மலை ரோட்டில்  அமைதியுடன் வளைந்து சென்று கொண்டிருந்தது அந்த கார்.

 

ஆனால்.., அங்குள்ள அமைதிக்கு நேர்மறையாய் காரை ஓட்டிக்  கொண்டிருந்தவனின்    மனம் முழுதும் கோபக் கனல் தீயாய் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

 

“வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு வெறுப்பும், எரிச்சலும் மனதில் மண்டிக் கிடந்தது.வாழ்க்கையில் முதன் முதலாய் ஏற்பட்ட அவமானம்…தன்மானத்தை தட்டி எழுப்பிய வார்த்தைகள்.…கோபம் கொள்ளாதவரையும் கோபம் கொள்ள வைக்கும் உணர்வுகள் இப்படி எல்லாமுமாய் சேர்ந்து அவனை அலைகழித்துக் கொண்டிருந்தது”.

 

அவன்தான் ரிஷி என்று அழைக்கப் படும் ரிஷி வர்மா.அவனின்

கோபத்தை குறைக்கும் வழி தெரியாமல் விழிபிதுங்கி…என்ன செய்வது என்ற யோசனையுடன் அமர்ந்திருந்தாள் தைலா என்று அழைக்கப் படும் தையல் நாயகி.

 

இருவரின் பயணமும் அமைதியில் கழிய ….,அந்த அமைதியை விரும்பாத தைலா…”ரிஷி...” என்று அமைதியை கலைக்க  எடுத்த முயற்சியும், அவனின் ஒரு முறைப்பில் அடங்கிப் போனது.

 

கார்  ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியைத் தாண்டி அவிலாஞ்சி செல்லும் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது. அவிலாஞ்சி டேம்  அருகில்.…அந்த கிராமத்தை விட்டு கொஞ்சம் தள்ளி அமைந்திருந்தது அவர்களின்  கெஸ்ட் ஹவுஸ்.   

 

வீட்டின் முன்னால் காரை நிறுத்தியவன் தைலாவைப் பார்த்து தலையை அசைத்தவாறு….கீழே மரங்கள் அடர்ந்து காணப்பட்ட பகுதியை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

 

ஊட்டி வந்தால்  அவன் அவ்வாறு செல்வது வழக்கம் என்பதால் அவளும் கண்டுகொள்ளவில்லை. 

 

“ரிஷி வர்மன்” -நடுத்தர வர்க்கத்திற்கும் மேலான குடும்பத்தில் பிறந்தவன்.ஒரு ஆணிற்கு தேவைப்படும் அழகைக் காட்டிலும்…. மனிதனுக்கு தேவையான நற்பண்புகள் நிறையப் பெற்றவன்.  

 

அவன் முகத்தைப் பார்ப்பவர்கள் சற்று  ஒதுங்கியே நிற்பர்….அந்த அளவுக்கு ஒரு கடினமும் இறுக்கமும் முகத்தில் குடி கொண்டிருக்கும்.

 

அவனின் ஒரே கனவான..”இந்திய குடிமை ஆட்சிப்  பணியில் வெற்றி பெற்று….தனது ஐபிஎஸ் கனவை நனவாக்கிக் கொண்டவன்”.

 

“வேகம் இருக்கும்… அதே சமயத்தில் விவேகம் அதிகம் கொண்டவன்.பொய் என்ற வார்த்தைக்கு அவனது வாழ்க்கை அகராதியில் இடம் அளிக்காதவன்”.

 

“தனது ஐபிஎஸ் பயிற்சியை முடித்து விட்டு….முதலில் கர்நாடக மாநிலத்தில் வேலை செய்தவன் இப்பொழுது தமிழ்நாட்டிற்கு ….குறிப்பாக கோயம்புத்தூருக்கு மாற்றலாகி வந்திருக்கிறான்”.

 

“கோயம்பத்தூர்   வந்தவன் சந்தித்த அவமானங்களும், வேதனைகளும் அவனை ஒரு மிருகமாய் மாற்றி இருந்தது”.

ஒரு மாத விடுப்பில் இப்பொழுது ஊட்டி வந்திருக்கிறான்.  

 

அடர்ந்த மரங்களும்.…பறவைகளின் இன்னிசையும் நிறைந்த அந்த காட்டில் தன் போக்கில் நடை போட்டுக் கொண்டிருந்தான் ரிஷி.

 

“எதற்காக இப்படி நடந்தது.இதில் எந்த இடத்தில் என்னுடைய தப்பு.. நடந்தது ?ஒருவேளை இன்னமும் கொஞ்சம் நிதானமாக யோசித்திருக்கலாமோ?யோசிக்காமல் எடுத்த முடிவுதான் இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமா?” என்று மனதிற்குள் யோசித்தவாறு நடந்து கொண்டிருந்தான்.

 

“ரிஷியின் மனம் கனமாகவும்,கஷ்ட்டமாகவும் இருக்கும்  போது தனிமையை நாடி வந்து விடுவான்.

 

தனிமை அவனுடைய மனம் பாரத்தை குறைக்கும் என்றால்….இன்று ஏனோ யோசிக்க யோசிக்க ,அவனின் மன பாரம் கூடிக் கொண்டே போனது”.

 

“தன் சிகைக்குள் கைகளை விட்டு அளைந்தவாறு….யோசனையுடன் நடந்து கொண்டிருந்தவனின் செவிகளில் விழுந்தது ஒரு பெண்ணின் குரல்”.

 

“காட்டில் உள்ள அனைத்து சத்தங்களையும் மீறி அவனை நிறுத்தியது அந்த குரல்.

 

ரிஷி சுற்றும் முற்றும் பார்க்க.……குரல்தான் வந்ததே தவிர குரலுக்கான பெண்ணைக் காணவில்லை”.     

 

“யாராய் இருக்கும்..?” என்று மனதில் நினைத்தபடி குரல் வந்த திசை நோக்கி வேகமாய் நடக்கத் தொடங்கினான்.அவனது நடையும்.,

வேகமும் அவன் ஒரு போலீஸ்காரன் என்பதை சொல்லாமல் சொல்லியது.

நேரமும் மாலை வேளையை நெருங்கிக் கொண்டிருக்க.….நன்றாக குளிர தொடங்கியது.குளிர்.., நாடி நரம்புகளில் பரவி தந்தி அடிக்க.….”இந்த குளிர் எல்லாம் என்னை ஒன்றும் செய்யாது” என்பதைப் போல் விரைந்து சென்றான் ரிஷி.

 

சிறிது நேரத்தில் அந்த பெண்ணின் சத்தம் இல்லாமல் போக.…. குழம்பிப் போனான் ரிஷி.

 

“இல்லையே ஒரு பெண்ணின் குரல் கேட்டதே...?” என்று தனக்குத் தானே பேசிக்கொண்டவன்...தன்னையே ஒரு முறை சுற்றிக் கொண்டு மீண்டும் பார்த்தான்.

 

தூரத்தில் ஒரு சிறு ஒடையைப் போல் நீர் கொட்டிக் கொண்டிருக்க.…. அதன் அருகில் ஒரு பெண்ணின் உருவம் தெரிவதைப் போல் இருந்தது.

 

“டேய் ரிஷி.…இது ஒரு வேளை உன் எதிரிகளோட சதியா இருக்குமோ..?” என்று அவன் நினைக்க.…”மண்ணாங்கட்டி..! பில்டப்பை குறைடா.…” என்று அவனின் மனசாட்சி இடித்துரைத்தது.

 

ஒரு வழியாக அந்த தண்ணீர் சொட்டும் ஓடையின் அருகில் சென்றவன்.…”யார் அங்க.? ” என்று இடுங்கிய கண்களுடன் கேட்க.…அமைதியே நிலவியது.

 

“யார்ன்னு கேக்குறேன்ல...?” என்றவன் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவனாய்……அந்த செடியின் மறைவில் இருந்த உருவத்தை பிடித்து இழுத்தான்.

 

ஸ்ஆஆஆஆ….” என்ற வலி முனங்களுடன் வெளிப்பட்டாள் அந்த பெண். அவனை நிமிர்ந்தும் பாராது…கிழிந்திருந்த உடையில் இருந்து வெளிப்பட்ட தன் அழகை அவன் காணாது மறைக்க வெகு பிரயத்தனப்பட்டாள்.

 

“பார்ப்பதற்கு ஏதோ கிராமத்தில் இருந்து வந்த பெண் போல் இருந்தாள்.ஆனால் கிழிந்திருந்த அவள் உடை…..அவள் பெரிய வீட்டுப் பெண் என்பதை எடுத்து சொல்லியது.

 

கடல் நீல வண்ணத்தில் பட்டுப் பாவாடையும்.….அதற்கு பொருத்தமான மேல் சட்டையும் அணிந்திருந்தாள்.அவள் அணிந்திருந்த வெள்ளை நிற தாவணி….ஆங்காங்கே கிழிந்தும்.….அழுக்குமாய் காணப்பட்டது”.

 

காதுகளில் தொங்கிய குடை ஜிமிக்கி.…..அழகாய் நர்த்தனம் ஆட.…அந்த மாலை நேரம் தெரிந்த இளம் சூரிய கதிர்களின் மினுமினுப்பில் அவளின் முகம் ஜொலித்துக் கொண்டிருந்தது.

 

ஆனால் அதற்கு எல்லாம் நேர் மறையாக அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

 

“கருங்கூந்தல் இடை வரை நீண்டு இருக்க.…ஏதோ... வன தேவதை நேரில் காட்சி அளித்ததைப் போல் தலை குனிந்து நின்றிருந்தாள்”.

 

இத்துனை நேரம் அவளையே இமைக்காமல்….அவளைப் பற்றிய ஆராய்ச்சியில் இருந்தவன்.…திடுக்கிட்டு ,தன் பார்வையை விலக்கினான். 

 

யார் நீ...?” இங்க என்ன பண்ணிட்டு இருக்க.? இந்த நேரத்துல இங்க எல்லாம் தனியா வரக் கூடாதுன்னு உனக்கு தெரியாது...? என்று பொரிந்து தள்ள ஆரம்பித்தான் ரிஷி.

 

ஆனால் அவள் வாயிலிருந்து வார்த்தை வராமல் கண்களில் இருந்து கண்ணீர் வலிந்து கொண்டிருந்தது.

 

“இப்ப நான் என்ன கேட்டேன்னு இப்படி கண்ணீர் வடிக்கிற.? ஆமா அது ஏன் அந்த பக்கமாவே திரும்பி நிற்குற….? என்று கடுப்புடன் கேட்டான் அவன்.அவள் முகத்தை முழுமையாய் பார்க்க வேண்டும் என்ற ஒரு உந்து சக்தியில் அவ்வாறு கேட்டு விட்டான் ரிஷி.

 

ஆனால்.., பிறகுதான் கவனித்தான் அவளின் ஆடை கிழிந்திருப்பதை மறைக்க அவ்வாறு நின்றிருக்கிறாள் என்று.

 

வேகமாய் தனது ஜெர்கினை கழட்டி அவளிடம் கொடுக்க.…அவளோ சிறிய யோசனைக்குப் பிறகு...தயக்கமாய்...,கைகளில் சிறு நடுக்கத்துடன் அதை வாங்கிப் போட்டுக் கொண்டாள்.

 

பின் மெதுவாக அவன் புறம் திரும்ப.…ரிஷியோ தனது வருத்தங்களை மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். தயக்கமாய் மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தால் அவள்.

 

படிய மறுத்த தலை முடிகள் காற்றில் பறக்க.….கொஞ்சம் அலுப்பும் களைப்பும் காணப்பட்டாலும்.….ஆறடி உயரத்தில் நெடுமரமாய்.. ஆண்மகனாய்  தன் முன்னால் இருந்தவனைப் பார்த்து விழி விரித்தாள். 

 

“என்ன பார்வைடா சாமி இது.….? இது கண்ணா…?இல்லை கடலா.?பார்வைலயே ஆளை முழுங்கிடுவா போல.?” என்று மனதிற்குள் பேசிக் கொண்டவன்...

 

“சொல்லு நீ யாரு.? இங்க என்ன பண்ற.?” என்று ரிஷி விடாமல் கேட்கவும்.….விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தவளின் விழிகளில் மீண்டும் கண்ணீர் நிறைய ஆரம்பித்தது.

 

 

இதோ பார்...! இப்ப எதுக்கு பொசுக்கு பொசுக்குன்னு அழற…? எனக்கு பெண்கள் அழுவதே பிடிக்காது.…!முதலில் இந்த கண்ணீரை நிறுத்துமா தாயே...!”என்றான் எரிச்சலாய்.

 

“உன் பேர் என்ன.?” என்றான்.

 

“அபிராமி .…” என்றாள் மெதுவாய்.

 

“அபிராமி.…” என்று ஒரு முறை மனதிற்குள் சொல்லிப் பார்த்தவன். பேரைப் பாரு அபிராமி,சிவகாமின்னு.….இந்த காலத்துலயும்.…. என்று அவள் காத்து பட சொன்னவன்...

 

“சரி வா.….இருட்டிட்டா இங்க இருந்து போறது கஷ்ட்டம்...முதல்ல இந்த காட்டை விட்டு வெளியேறனும்..அப்பறம் உனக்கு எங்க போகணுமோ அங்க போ.…” என்று பேசி முடித்தான் ரிஷி.

 

ஆனால், அபிராமி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.அவன் ஏதோ சொல்கிறான் என்று மட்டும் புரிந்தது.

 

அவன் முன்னே செல்ல.…அவனைத் தொடர்ந்து சென்றவளின் பார்வை….அனைத்து திசைகளிலும் பரவ.….கண்களில் பயம் அப்பட்டமாய் தெரிந்தது.

 

“ஹேய்..! என்ன வேடிக்கை சீக்கிரம் வா.….” என்று கோபத்துடன் சொல்லி விட்டு அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு நடக்க துவங்கினான்.

 

அவனின் கை பட்டவுடன் அவள் உடலில் ஒரு சிலிர்ப்பு தோன்றி மறைந்ததை அவளால் நன்கு உணர முடிந்தது.

 

 

நேரம் ஆக..ஆக..அவனின் கைப் பிடித்து நடந்தவள்.….அவன் தோளோடு ஒன்றி நடக்க ஆரம்பித்தாள்.ரிஷியும் முதலில் இதை பெரிதாய் எடுத்துக் கொள்ள வில்லை.ஆனால் அவளின் அருகாமை அவனுக்கும் ஒரு வித சிலிர்ப்பை உண்டு பண்ண.….சட்டென்று அவளை விளக்கினான் ரிஷி.

 

இதோ பார்.….இப்ப எதுக்கு உரசிகிட்டு வர.…கொஞ்சம் தள்ளி வா.…!” என்று எரிச்சலாய் சொன்னவன் வேகமாய் நடக்க அவனின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் நடந்தால் அபி.

 

ஆனால் சிறிது நேரத்தில் பயத்தில் மீண்டும் அவன் கைகளைப் பிடிக்க.சட்டென்று அவளின் கைகளைத் தட்டி விட்டவன்.…அவள் புறம் திரும்பி கோபமாய் பார்க்க.….எங்கோ கேட்ட அந்த காட்டு யானையின் பிளிறலில்….”ஆஆ…” என்று கத்தியவாறு அவனை அணைத்துக் கொண்டாள்  அபி.

 

திடிரென்ற அவளின் அந்த அணைப்பில் திடுக்கிட்டு சிலையாய் நின்றான் ரிஷி…! மனதில் ஏதோ நெருடல் தோன்ற..,அதையும் மீறி அவளைப் பாதுகாப்பாய்  அணைத்தன அவனின் கைகள்.

 

ரிஷியின் இதயத் துடிப்பு  தெளிவாய்க் கேட்க.….அவனின் நெஞ்சில் தஞ்சம் அடைந்திருந்தால் அபி என்ற அபிராமி.  

 

Advertisement