Advertisement

அத்தியாயம் 41

தோப்பு வீட்டிலிருந்து தன் வீட்டிற்கு வந்த சந்திரன் வாசலில் பைக்கை நிறுத்திவிட்டு இறங்கினான். எதிர்வீட்டில் வெளிப்புற இரும்பு கதவு திறந்து இருக்க,வாசலில் சிவகாமியும் ஸ்வேதாவும் நின்றிருந்தனர்.  

ஸ்வேதா கையில் லக்கேஜோடு நிற்பதைப் பார்த்தான்.

அம்மாடி என் தங்கம் எம்புட்டு தைரியமா எவ்வளவு பெரிய வேலையெல்லாம் செஞ்சி இருக்க” எனச் சிவகாமி பாராட்ட மென் புன்னகையோடு நின்றாள் ஸ்வேதா.

இன்னும் கொஞ்ச நாளைக்கு இங்க இறேன் ராசாத்தி” என ஆசையுடன் கேட்க, “இல்ல ஆச்சி, நான் வந்த வேல முடிச்சிருச்சி அண்ட் எனக்கு அங்க கொஞ்சம் அர்ஜண்ட் ஒர்க் இருக்கு, இந்த கேஸ் விஷியமாவும் லயர பார்க்கணும்” என்றாள்.

அவள் முன்பு வந்து வண்டியை நிறுத்திய அன்பு, “அந்த வேலையெல்லாம் இங்க இருந்தே பாத்துகலாமே ஸ்வேதா?”என்க, “இல்ல அன்பு டாட் வேற கூப்பிட்டாரு, இட்ஸ் இம்பார்டன்ட்” என்றாள்.

சரி நீ முடிவு எடுத்துட்ட, இனி யாரால மாத்த முடியும்? வா டைமாச்சி” என்றழைத்த அன்பு முன்புறம் ஏறி காரை ஸ்டார்ட் பண்ணினான்.

லக்கேஜை வைத்துவிட்டு கார் கதவைத் திறந்த ஸ்வேதா நேர் எதிராய் நின்றிருந்த சந்திரனை ஒருபார்வை பார்த்தாள். மறுநொடி காரில் ஏறிக் கொண்டவள் கலங்கிய கண்ணை அன்பு அறியாது துடைத்துக் கொண்டாள். 

அவள் பார்வையின் அர்த்தம் புரியவில்லை எனினும் அந்த பார்வை சந்திரனை என்னவோ செய்ய கார் கண் மறையும் வரை அந்த பாதையை வெறித்தவன் பின் தன் வீட்டிற்குள் சென்றான். 

ஸ்வேதாவை வழியனுப்ப அவளோடு டௌனுக்கு வந்திருந்தான் அன்பு. “சரியான நேரத்துக்கு நீ பண்ண உதவி தான் எங்க ஊர ஆபத்துல இருந்து காப்பாத்தி இருக்கு. ரொம்ப நன்றி ஸ்வேதா” என்றான்.

என்ன அன்பு யாரோ மாதிரி நன்றி எல்லாம் சொல்லிக்கிட்டு விடு. நான் என் வேலைய பண்ணேன் அண்ட் நான் மட்டுமா பண்ணேன் நீயும் இதுல எவ்வளவு ஹெல்ப் பண்ணி இருக்க. சரி அதை விடு, இந்த கிப்ட்ட கயல் கிட்ட கொடுத்துட்டு என்னோட வாழ்த்தையும் சொல்லிடு” என ஒரு கிப்ட் பார்சலை நீட்டினாள். 

புன்னகையோடு வாங்கிக் கொண்டவன் சரியென்று தலையாட்டினான். சென்னை பேருந்தில் ஏற்றி விட்டு வழியனுப்பி வைத்தான். மனம் முழுவதும் கணக்க, சந்திரனின் நினைவுகளை சுமத்தவாறு சென்றாள் ஸ்வேதா. 

இனி எப்போது இருவரும் சந்தித்துக் கொள்வார்கள் என அவர்களே அறியவில்லை எனினும் அவர்களுக்குள் என்றும் மாற நட்பு நிலைத்து நிற்கும்.

மனம் முழுவதும் கயல் நினைவுகள் நிறைந்திருக்க இப்போதே அவளை காண வேண்டும் போல் இருந்தது அன்புவிற்கு. அருகே கடையில், பூ, பழம்,ஸ்வீட் வாங்கிக் கொண்டு கயல் வீட்டிற்குக் கிளம்பினான்.

அன்பு வாசலில் காரை நிறுத்தும் ஓசை கேட்டு உள்ளிருந்து வெளியே வந்தார் கற்பகம். அன்புவை பார்த்ததும் முகம் மலர வரவேற்றார்.

உள்ளே வந்தவன் வாங்கி வந்ததை அவரிடம் கொடுத்து விட்டு அமர்ந்தான். அதற்குள் அடுப்பறைக்கு சென்று காபி எடுத்து வந்தவர் அவனிடன் கொடுக்க, அவன் கண்களோ வீடு முழுவதும் தன்னவளின் கால்தடம் தேடிச் சுழன்றது. 

காபியை வாங்கிக் கொள்ள, “முந்தா நாள் ஹாஸ்பிடலுக்கு கூட்டு போனேன், சந்தோஷமான செய்தி தான் உறுதியா சொல்லிட்டாங்க மாப்பிள்ளை” எனக் கற்பகம் மகிழ்வுடன் கூறினார். 

அவன் சுழன்ற கண்கள் மேலும் ஆவலோடு அவளைத் தேட,”மாமா எங்க அத்தை? ஆள காணும்?” என்றான். 

தோப்புல இருந்து மாட அவுத்துட்டு ஒத்தையில வருவாரு, நான் போய் புல்லுக்கட்ட தூக்கிட்டு வரேன். நீங்க இருங்க” என்றவர் கிளம்பினார்.

உள்ளறைக்குள் சென்றவன் பார்வையால் எங்கும் தேட அவளைக் காணவில்லை. நல்லா கண்ணாமூச்சி ஆடுறாளே என நினைத்து மூச்சு விட்டான். 

கட்டிலில் ஒரு புகைப்படம் கிடைக்க, நெருங்கி சென்று எடுத்தான். பாரதியின் புகைப்படம் சற்றே உற்று நோக்கினான். ஒட்டாத மீசையை ஓட்டிக் கொண்டு சிறு வயதில் அவன் அணிந்திருந்த மாறுவேட புகைப்படம் தான். இதழோரம் இளநகை பூக்க, திருடி திருந்த மாட்டாளே என எண்ணினான். 

மாலை மறைந்திருக்க, இருள் பூசி இருந்த நேரம். இருளுக்குள் பூரண வெள்ளொளியைக் கலந்தவாறு சந்திரன் மெல்ல மெலேழுந்து உதயமாகிக் கொண்டிருக்க, அதன் குழுமைக்கு மேலும் குளுமை சேர்க்க, இளம்காற்று வீசியது. 

உலகை தழுவிய இருள் போல் அவளை தழுவி அணைக்க வேண்டும். மெல்ல மெல்ல மேலெழும் சந்திரன் போல் அவளை மெல்ல மெல்ல முத்தமிட்டு முன்னேற வேண்டும். இருளில் கலக்கும் வெள்ளொளி போல் அவளோடு கலந்து இன்பமுற வேண்டும். இரண்டு நாள் மதி முகம் காணாத பிரிவின் ஏக்கம் அவனுள் தாபமாய் பரவிப் படர்ந்திருந்தது.

ஜன்னலோரம் பார்க்க, பின்கட்டு திண்ணையில் அமர்ந்திருந்தாள் கயல்.

உதயச்சந்திரனைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தவள் உதட்டசைக்காது அதனோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தாள் போலும். முகத்தில் மட்டும் கோபம், வெறுப்பு, தவிப்பு,ஏக்கம் என பல பாவனைகள் மின்னி மறைந்து கொண்டிருந்தது. மனதோடு நிலவோடு பேசி சண்டையிட்டுக் கொண்டிருந்தாள் போலும். அவள் செயல் கண்டு சிரித்துக் கொண்டவன், அறையிலிருந்து வெளியேறி அவளருகே சென்றான்.

அவளருகே அமர்ந்தவன் தோளைச் சுற்றி கை போட்டு அணைத்தான். நெருங்கி அவன் மார்பிற்குள் முகம் புதைத்துக் கொண்டு அணைத்துக் கொண்டாள். காதோரம் “செல்லம்மா…”என அமிழ்த குரலில் அழைக்க, கன்னத்தை மேலும் அவன் மார்பில் அழுத்தி புதைத்தாள்.

செல்லம்மா…” என மீண்டும் அழைக்க, அணைப்பை விலகிக் கொண்டு முகத்தைத் திருப்பினாள். அவள் செயலில் சிரித்துக் கொண்டவன், “வாராயோ வெனிலாவே கேளாயோ எங்கள் கதையே!” என நிலவைப் பார்த்துப் பாடினான். 

கயல் திரும்பி முறைக்க, பாட்டையும் சிரிப்பையும் நிறுத்திக் கொண்டு அவளை மீண்டும் இழுத்து அணைத்து, “அடியே பேசுடி” மென் குரலில் கொஞ்சினான்.

பேசமாட்டேன்” என்க, அவள் முகம் நிமிர்ந்து விழி பார்க்க, விழிகளோ பேசுவேன் என்றது. “எதுக்கு பேச மாட்டியாம்?” என்க, “கோபமா இருக்கேன்” என்றாள். ஆனால் அவள் விழிகளோ கோபமில்லை என்றது.

பேசமாட்டேன் என்று கூறிவிட்டு அடுத்த வார்த்தை பேசும் தன் மனைவிக்குப் பொய்யாய் கூட கோபம் கொள்ளாத் தெரியவில்லையே என எண்ணிச் சிரித்தான்.

அவளை இழுத்து முகம் திருப்பிக் கொண்டு, அவள் இதழோடு இதழ் பதித்து அழுத்தி முத்தமிட்டான் அவனின் தாபத்தையும் ஏக்கத்தையும் வெளிப்படுத்திவிடுவது போன்று வேகத்தைக் கூட்டினான். தனது தவிப்பையும் வெளிப்படுத்தி விடுவது போல் அவன் செயலை தனதாக்கிக் கொண்டு அவள் தொடர, அவள் முடிக்கும் நேரம் அவன் தொடர முடிவில்லா முத்தமொன்றைப் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

அவனிதழ் தீண்டலில் போலி கோபமும் உடைய, பனிச்சிற்பமாய் உருகியவளை அது தான் சமயமென கைகளில் தூக்கிக்கொண்டு அறைக்குள் சென்றான்.

கட்டிலிலிட்டவனை முறைத்துப் பார்க்க, சிரித்த அன்பு, “உனக்குத் தான் பொய்யாக கூட கோபப் படத் தெரியலையே, நடிக்காதடி!” என்றணைத்தான்.

அதான் எனக்கும் சேர்த்து நீக்க கோபப் படுறீங்களே, அப்பறம் என்ன” என்றவாறு அவன் கன்னம் வருடி, மீசையை திருகினாள். 

நான் எப்போ கோபப்பட்டேன்?, அதுவும் என் செல்ல செல்லாம்மா கிட்ட எப்படி கோபப்படுவேணாம்?” எனக் கன்னங்களில் முத்தமிட்டான்.

ஏன் இப்போ நீங்கக் கோபப்படப் போய் தானே நான் இங்க வந்து இருக்கேன். இதை கூட விடுங்க, நாமா சேரதுக்க முன்னாடி, ஸ்கூல்ல, தோப்புல என்கிட்ட எவ்வளவு கோபமா நடந்துகிட்டிங்க!. என்மேல கோபம் இருக்க போய் தானே ஏழு வருஷம் பிரிஞ்சி இருந்திங்க?” தன் கழுத்து வளைவில் முகம் புதைத்து முத்தமிட்டிக் கொண்டிருந்தவனின் உச்சி முடி பிடித்து முகம் நிமிர்ந்திக் கேட்டாள்.

லேசாகப் புருவம் உயரப் பார்த்தவன், அவள் வல கன்னத்தில் லேசாகக் கடித்தவாறு, “தப்பா தான் புரிஞ்சிக்கிட்டு இருக்க. என்னைக்கும் போல சந்திரன் தான் எனக்கு மாமானு சொல்லி இருந்தாலும் பெருசா நினைக்காம விட்டு இருப்பேன். நீ என்னடான்னா சந்திரனைத் தான் கட்டிப்பேன், காதலிக்குறதா சொன்னதெல்லாம் போய்ன்னு சொன்னா எங்க உன்ன இழந்துடுவேன்னொன்னு பயம்,தவிப்பு, உன்ன என் வாழ்க்கை குள்ள இணைச்சிக்கணும்னு ஒரு வேகத்துல தாலி கட்டிட்டேன். கோபத்துல கட்டல்ல” என்றான். 

அதிசயித்துப் பார்த்தவள் அவன் முதுகை வருடி தன்னோடு அணைத்தவாறு, “உங்களுக்கு என்ன தெரியும் வசந்தா அத்தைக்கு நான்னா உசுரு. எங்க அப்பா, அம்மா விடியில்லையே வயலுக்கு போயிடுவாங்க, நயிட் தான் வருவாங்க. அத்தை தான் எனக்குச் சாப்பாடு ஊட்டி, தல பின்னி, அவங்க பிள்ளைக கூடவே ஸ்கூலுக்கும் அனுப்பி வைப்பாங்க. சாயங்காலமும் அவங்க வீட்டுல விளையாட்டு அங்க தான் இருப்பேன். நயிட் தான் வீட்டுக்கே வருவேன். 

என்ன வளத்ததே அத்தை தான். அவங்க புள்ளைகளுக்கு மேல என்ன பாத்துகிட்டாங்க. நானும் ஸ்கூல்ல பாஸ் ஆகிட்டா கூட அவங்க கிட்ட தான் முதல்ல ஓடி போய் சொல்லுவேன், பெத்தவுங்க எல்லாம் அப்பறம் தான். எனக்கு என்ன தேவைன்னு கூட அவங்க கிட்ட தான் சொல்லுவேன். 

அந்த வீட்டுல எல்லாருமே என் மேல எவ்வளவு பிரியமா இருப்பாங்க தெரியுமா?. எனக்கும் வசந்தா அத்தைன்னா ரொம்ப பிரியம் மாமா. நீங்க மட்டும் ஜெயந்திக்கிட்ட பேசலாம். நான் மட்டும் அவங்க குடும்பத்துல யார் கிட்டையும் பேச கூடாதுன்னு சொன்னா எனக்குக் கோபம் வராதா?. அதான் சந்திரமாமாவ தான் கட்டிப்பேன்னு சொன்னேன்” என்றாள் சிணுங்களுடன்.

ம்ம், ஏழு வருஷமாவும் உன் மேல கோபமாயில்லடி. எனக்குத் தெரியும் அன்னைக்கு நான் பண்ணது தப்பு தான். ஒரு சின்ன பொண்ணு கழுத்துல தாலியும் கட்டிட்டு அப்படி நடந்திருக்கவும் கூடாது. ரொம்ப பெரிய தப்பு தான். 

என் மனசுல அந்த குற்றவுணர்வு அழுதிக்கிட்டே இருந்துச்சி. அதோட எப்படி நான் உன் முகத்துல முழிக்க முடியும். அது மட்டுமில்ல நீ சொன்ன மாதிரி சந்திரனைக் கல்யாணம் பண்ணி எதிர்வீட்டுல இருப்பையோன்னு பயம். அப்படி மட்டும் இருந்த நான் உன்ன பார்க்குற நொடி எனக்கு மரணமே வந்து இருக்கும்.

உன்ன வேறொருவன் மனைவியா பார்க்குற அளவுக்கு நான் பலசாலி இல்லை. என்னோட மிகப்பெரிய பலகீனம் நீ தான் செல்லம்மா. அதுக்கு பயத்துகிட்டு தான் ஏழு வருஷமா என் சொந்த ஊருக்கே வராம ஒதுங்கி இருந்தேன்.

ஆனா ஏழு வருஷத்துல சத்தியமா சொல்லுறேன் ஒருநாள் கூட நிம்மதியா தூங்குனதேயில்ல. ஒவ்வொரு இரவும் குற்றவுணர்வும், உன் நியாபகமும் என்ன கொள்ளும். என் செல்லம்மா வேணும்ன்னு மனசு, உடம்பு ஏங்கித் தவிக்கும். உன் மடியில படுத்து உன்ன அணைச்சிக்கணும் தோணும். கண்ணை மூடுனா உன் முகம் தான் வரும். 

கனவுல உன்ன தீண்டவும் முடியாம, நினைவுல உன்னக்காக ஏங்கிக் கிட்டு, ஊருக்கும் வர முடியாம அந்த ஏழு வருஷ தவிப்ப என்னால வார்த்தையில சொல்லமுடியலடி. அந்த ஏழுவருஷம் என் வாழ்க்கையில்லையே கொடுமையான நாட்கள்” எனக் கூறிக் கொண்டிருந்தவன் அந்த நாட்களின் தவிப்பை இந்த நொடி அடக்கி விடுவது போல் அவள் நெஞ்சுக்குள் புதைத்து இருந்தான்.

விழி கலங்க, அவளும் அவன் உச்ச தலை முடிக்குள் கரம் கோர்த்து நெஞ்சோடு இறுக்கி அணைத்தாள். அவன் காதலாழம் கண்டு பிரம்பித்தாள்.

முதல் நாள் அத்தையோட நம்ம வீட்டுக்கு வந்து இருந்தியே அன்னைக்கே மேல மாடிபடியில நின்னே உன்ன பார்த்தேன். அதுவும் என் செல்லம்மா எவ்வளவு அழகான்னு ரசிச்சி பார்த்தேன் ஆனா உன் கழுத்துல தாலி இல்லாததை பார்த்ததும் என்னால தாங்கவே முடியல்ல. அதுவும் நான் உயிரோட இருக்கும் போதே உன் கழுத்துல தாலி இல்லன்னு எனக்கு கோபம் தான் ஆனா அந்த கோபத்தை உன்கிட்ட காட்டி உன்ன காயப்படுத்திட கூடாதுன்னு தான் விலகிப் போனேன்.

ஸ்கூல்ல நீ ஒரு நாள் டான்ஸ் பண்ணையே அன்னைக்கு உன்கிட்ட ஒருவித தவிப்பு தெரிச்சது. அந்த தவிப்பு எனக்காகன்னு நினைச்சி சந்தோஷ பட்டேன் ஒரு நொடி, ஆனா அடுத்த நிமிஷம் அதெல்லாம் அழகான நடிப்புன்னு அந்த புள்ளைக சொல்லவும் நொறுங்கிட்டேன். ஒரு நொடி சந்தோஷம் கூட எனக்கு கிடைக்காதான்னு நினைச்சேன்.

தோப்புல ஒருநாள் உன்ன நெருங்கி இருந்தேன்னே அன்னைக்கு உன்கிட்ட மயங்கிய என்னால என் உணர்வுகளை கட்டுப்படுத்தி மீளவே முடியல்ல, எனக்கு அப்போவே நீ வேணும்னு தோணுச்சி. நான் கட்டுன தாலி உங்கிட்ட இல்லன்னா உன் மனசுலையே நான் இல்லன்னு தானே அர்த்தம், அப்பறம் எந்த உரிமையில நெருங்கன்னு விலகிட்டேன்” என்றான். 

அன்பு வலிக்கிறது என்று கதறும் அளவிற்குக் கன்னத்தில் கடித்தவள், “அட லூசு மாமா, தாலி என்ன ஐடி கார்ட்டா நான் வெளிய போட்டுக்கிட்டு சுத்த. கட்டுன நீங்க இருந்தாலும் இவர் தான் கட்டுனவர்னு சொல்லிக்கிட்டு தைரியமா வெளிய தெரியுற மாதிரி போட்டு சுத்தலாம்” என்றாள். 

அவள் கழுத்து வளைவில் முகம் பதித்து, வெட்டுத்தலும்பில் இதழ் பதித்தவன், “உனக்கு நிச்சியம் நடந்தது தெரித்தும் ஊருக்கு போனேன். ஸ்வேதாவுக்கு ஆக்சிடன்ட் அதுக்கு தான் அவளைப் பாக்க போனேன். நம்ம ஊருளையும் ஏதோ தப்பு நடக்குற மாதிரி தெரிச்சது, ஸ்வேதாவும் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கணும் வெளியூர் போறேன்னு சொன்னா. நான் தான் நம்ம வீடுக்கு வர சொல்லி அழைச்சேன். அவ ஹாஸ்பிடல இருந்தா, என்னால வெயிட் பண்ண முடியாது கயலுக்கு கல்யாணம் பண்ண பாக்குறாங்க நான் போனும்னு சொல்லிட்டு முன்னாடியே வந்துட்டேன். வந்ததும் ஆச்சியோட சண்ட தான். 

அன்னைக்கு உனக்கு வெட்டடி விழுந்த போது ரொம்பவே பயந்துட்டேன். அன்னைக்கு உன் தாவணியைக் கழட்டிக் கட்டுப் போடும்போது தான் உங்கழுத்துல தாலி இருக்குறதே பார்த்தேன். இதுக்கும் மேல என்னால உன்ன பிரிச்சியிருக்க முடியாதுன்னு தான் பஞ்சாயத்துல உண்மையா சொல்லிடேன்” என்றான் மென் குரலில். 

அவனுடல் அழுத்த, அவன் கைகள் எங்கெங்கோ தீண்டக் கூச்சத்தில் நெளிந்தவள் அவனை விலக்க முயன்றாள். இன்னும் அவள் பொய்க்கோபத்தை விடவில்லை என்பதை உணர்ந்தவன் எழுந்த அமர்ந்தான். 

அவள் மதி முகத்தை கைகளில் தாங்கி தன் முகம் காணச் செய்தவன், “என் கண்ண பாரு செல்லம்மா” எனக் கிசுகிசுத்தான். அன்பின் விழியில் கயல் விழியின் பிம்பம் பதிந்திருந்தது. 

இந்த மாதிரி உன்ன என் கண்ணுக்குள்ளையே வச்சி பாத்துக்கணும் கண்ணம்மா”என நேசம் வலிய அவன் கூற, கயல் அணைத்திருந்தாள்.

அன்னைக்கு எனக்கு ரொம்பவே வேலை இருந்துச்சி. அந்த விபத்துக்கு அப்பறம் இந்தமாதிரி நிலையில உன்ன தனியா நம்ம வீட்டு வேலையாட்களை நம்பிக்கூட விட்டுப் போக மனசில்ல. நானே உன்ன இங்க வந்து வீட்டு போகலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள நீயே கொஞ்சிக்கிட்டு போன, சரி போட்டும்னு விட்டுட்டேன். இந்த ரெண்டு நாளா என்ன தான் வேல இருந்தாலும் உன்ன தான் நினைச்சிக்கிட்டு இருந்தேன்” என்க, கயல் அவன் முகம் நிமிர்ந்து முத்தமிடத் தொடங்கி இருந்தாள். 

அப்பறம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன் உன் சந்திரன் மாமா என்கிட்ட பேசுனான்” என புன்னையோடு கூறினான். 

அவன் வார்த்தைகளை நம்பாது அவள் முறைக்க, “சரி சரி, நான் தான் பேச வச்சேன். கொஞ்சமே கொஞ்சம் மிரட்டுனேன்” என உண்மையைக் கூறினான். 

அவளும் சிரித்தவாறு அவன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டாள். அவள் நெற்றியில் முத்தமிட, கைகள் அவளிடையை அணைத்துக் கொண்டது.

என்றுமில்லாது அன்று அவன் தீண்டலில் புதுவித மென்மை கலந்திருந்தது. அணைப்பில் அழுத்தம் குறைத்திருந்தது. அவன் குழந்தை மீது கொண்ட அக்கறை மேலும் அவன் மேல் காதலைக் கூட்டியது.

மறுநாள் காலை உணவையும் முடித்துக் கொண்டே தங்கள் வீட்டிற்குக் கிளம்பினர். மகளின் மலர்ந்த முகம் கண்டு மனநிறைவுடன் அனுப்பி வைத்தனர் பெற்றவர்கள்.

Advertisement