Advertisement

அத்தியாயம் 37

அன்றைய விடியலில் வெகு சீக்கிரமே மேல் எழுந்து விட்ட ஆதவன் என்றுமில்லா பிரகாஷத்தில் ஒளிர்ந்தான். வானிலையில் கூட அத்தனை மாற்றம் விடியலில் கூடல் மறந்து ஜோடி பறவைகள் கூட இரை தேடி பிரிந்தோடின!. விரைந்து வந்தது அந்த விடியல்.

பூங்கோதை சந்திரன்,  செல்வா ஸ்வேதா என அனைவரும் வெவ்வேறு எதிர்பார்ப்பின் எண்ணங்களோடு எழுந்தனர். ஆனால் அவர்கள் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை அவர்கள் எதிர்பார்ப்பெல்லாம் ஏமாற்றமாகுமென்று.

முத்துமாரியம்மன் கோயில் முழு அலங்காரத்தோடு முழு அழகில் மிளிர்ந்தது. பூங்களின் சுகந்த நறுமணமும் மங்கள இன்னிசை வாத்தியங்களும் அந்த இடத்தை சொர்கலோகமாய் மாற்றியிருந்தது.

சங்கரலிங்கம் விருந்து ஏற்பாட்டைக் கவனிக்க, விஜயராகவன் ஐயரிடம் பேசியவாறு திருமண ஏற்பாட்டைக் கவனித்துக்கொண்டிருக்கஇராஜமணிக்கம் கோவிலில் நுழைவு வாசலில் நின்று அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார்.

அத்தனை பூரிப்போடும் மகிழ்வோடும்வருகை தந்த அனைத்து உறவுகளிடமும் ஜெய்சந்திரன் தங்கள் வீட்டு மருமகன் எனப் பெருமை பொங்கக் கூறினார்.

தன் அன்பு மகளின் திருமணத்தை மனம் நிறையகண் குளிர காண வேண்டும் என்பது பூங்கோதை பிறந்து அவளை கைகளில் தூக்கிய நாளிலிருந்தே அவர் சேர்த்து வைத்திருந்த ஆசைகள்.

உறவுப் பெண்கள் சுற்றி நின்று பூங்கோதையை அலங்கரிக்கஅவள் தலையில் பூச்சூடி விட்ட ஜெயந்தி. பூங்கோதையின் கன்னம் கிள்ளி, “அடி கள்ளிநீயும் கயலும் என்னோட ரெண்டு அண்ணன்களையும் ஆளுக்கு ஒன்னா பிடிச்சிக்கிட்டீங்களே!. இருந்தாலும் உங்க ரெண்டு பேருக்கும் நான் ஒருத்தி தான் நாத்தனார் அத மனசுல வச்சி நடந்துக்கோங்க!” எனச் சிரிப்புடன் கூறினாள்.

பூங்கோதையோ கண்கலங்க, ” கயல் மட்டும் இங்க இல்லையேடி” என வேதனையுடன் கூறினாள்.

எங்க போய்ட போற நம்ம எதிர்வீட்டுல தானே இருப்பாகல்யாணம் முடிச்சு வாநாமா ரெண்டு பேரும் அவளை ஒருவழி பண்ணிடலாம்!” என்றாள் கிண்டலுடன். பூங்கோதை எந்த வித பதிலுமின்றி மௌனமாய் அமர்ந்திருந்தாள்.

அன்று பஞ்சாயத்தில் அன்பு கயலைக் கூட்டிச் செல்லும் போது தான் இறுதியாகக் கயலைப் பார்த்திருந்தாள் ஜெயந்தி. பூங்கோதை அதன் பின் சிலமுறை விஷேச வீடுகளில் கயலைப் பார்த்ததுண்டு ஆனால் ஜெயச்சந்திரனுடன் நிச்சியம் முடிந்துவிட்டதால் பெற்றோர்கள் கயலோடு பேசவிட்டதில்லை.

சிறுவயதிலிருந்தே ஒன்றாக விளையாடி ஒன்றாக வளர்ந்த தோழிகள். அதிலும் கல்லூரி நாட்களில் தங்களின் கல்யாண கனவுகள் பற்றியும் அதில் தோழிகளின் சேவைப் பற்றியும் இருவருமே பல கதைகள் பேசியதுண்டு. இன்று கயல் இல்லாது இருவருக்குமே வருத்தத்தைத் தந்தது.

அரக்கு பட்டில்வைர நகைகளின் ஜொலிஜொலிப்பில் அழகு போங்க மின்னிய பூங்கோதை உறவுகள் சூழ கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.

ஜெய்சந்திரன் அன்று செல்வாவை அடித்த போது திட்டியது தான் அதன் பின் ஒரு வார்த்தை கூட அவனிடம் பேசவில்லை. அதே போல் தன் கண்பார்வையிலிருந்து அவனை விலக விட்டதுமில்லை. இரண்டு நாட்களாக அவனை முறைத்தவாறு எங்கும் அசைய விடாது தன்னுடனே வைத்திருந்தான்.

செல்வாவிற்கு மனம் முழுவதும் பயமும் பதட்டமும் நிறைத்திருந்தது. சந்திரன் பேசாதது பெரும் வேதனையைக் கொடுத்துஅன்புவின் மிரட்டல் இன்னும் அவனை நடுக்க செய்தது. எங்கே போலீஸுடன் வந்து விடுவானோசந்திரனையும் குற்றவாளி என்பானோதிருமணத்தில் பிரச்சனை வந்துவிடுமோ என மனம் முழுவதும் பயம்தான்.

இங்கிருந்து சென்று விடலாம்அன்புவிடம் மன்னிப்பு வேண்டலாம் என்று நினைத்தாலும் சந்திரன் எங்கும் நகரவிடாது வைத்திருக்கிறானே என்ற எரிச்சல் வேறு புகைத்துக் கொண்டிருந்தது.

செல்வா அந்த மாலையை எடுங்க” என்ற விக்னேஷியின் அழைப்பில் கலைந்தவன் மாலையை எடுத்து விக்னேஷின் கையில் தந்தான்.

சந்திரன் கழுத்தில் மாலை அணிவித்து, “ஜெயந்தி ரெண்டு தடவை கால் பண்ணிட்டாமூணுவது கால் வரதுக்குள்ள நாமா கோவில்ல இருக்கணும்” என்ற விக்னேஷ் மற்ற இருவரையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்கு கிளம்பினான்.

முதல் நாள் இரவில் கண்ணீரோடு வந்த மகளை வீட்டிற்குள் அழைத்துக் கொண்ட கற்பகம் கேள்விகளாக அடுக்கினார். வேல்முருகன் தற்போது எதுவும் கேட்க வேண்டாமென்று கண்டிக்க உணவூட்டி படுக்க வைத்துக் கொண்டார்.

தங்கள் வீட்டில் மகளாக இருந்தவரை விடியலிலே எழுப்பி வேலை வாங்குவார் கற்பகம். அன்று கயலை எழுப்பவுமில்லை நண்பகல் நெருங்கும் நேரம் தான் எழுந்தாள்.

சரியான பசியை உணர்ந்தவளுக்கு அப்போது தான் தன் வயிற்றில் மற்றொரு உயிர் உள்ளது என்ற நினைப்பே வந்தது. அன்னை தந்த காலை உணவை அமைதியோடு உண்ணத் தொடங்கினாள். முதல் வாய் எடுத்து வைக்கும் போதே அன்பு உண்டானோ இல்லையா என அவன் நினைவு தான்.

உண்டு முடித்தவள் அன்னையிடம் தன் தாய்மையுற்றிருக்கும் செய்தியையும் பகிர்ந்தாள். கற்பகத்திற்கு பெரும் மகிழ்ச்சி கயலைக் கேள்வி கேட்பதையெல்லாம் விடுத்துக் கவனிக்கத் தொடங்கினார்.

விஷயம் அறிந்த வேல்முருகனுக்கும் அளவில்லா ஆனந்தம். மகளை ஒரு வேலையும் செய்யவிடக்கூடாது என மனைவிக்குக் கட்டளை இட்டிருந்தார். கற்பகம் கயலுக்குப் பிடித்ததை எல்லாம் சமைத்து வைக்கவேல்முருகன் கயலுக்கு பிடித்ததை எல்லாம் வாங்கி வந்தார்.

முதல் நாள் அன்னையோடு மருத்துவமனைக்குச் சென்று வந்தவள் அதன் பின் அறையிலிருந்து வெளிவரவேயில்லை. பொதுவாக இந்த நேரத்தில் இருக்கும் மகிழ்ச்சியும் பூரிப்பும் தொலைத்து வெறுமையாக வெறித்த பார்வையோடு அமர்ந்திருப்பது கற்பகத்திற்கு என்னவோ போல் இருந்தது. அவர் தான் கஷ்டப்பட்டு அவளுக்கு உணவூட்டினார்.

ஊரே ஊருக்குள் இருந்து கொண்டு முழுதாக ஒரு நாள் முடித்தும் சிவகாமியும் பார்க்க வரவில்லைஅன்புவும் பார்க்க வரவில்லை என்பது கற்பகத்திற்குச் சற்று உறுத்தலாக இருந்தது.

ஜெயச்சந்திரனுக்கு தாய்மாமன் என்பதால் பகை மறந்து திருமணத்திற்கு மரியாதையுடன் அழைத்திருந்தனர். அன்று பஞ்சாயத்தில் தங்கள் பெண்ணை குறைவாகப் பேசினார்களே என்ற கோபத்தில் கற்பகம் செல்ல மறுத்துகயலை கவனிக்க வேண்டியிருப்பதால் திருமணத்திற்கு வரவில்லை என்றார். வேல்முருகன் மட்டும் திருமணத்திற்குச் சென்றிருந்தார்.

மெல்ல காலை உணவை ஊட்டிவிட்டவாறே, “புருஷன் பொண்டாட்டின்னா ஆயிரம் பிரச்சனை இருக்கும். அதுக்கெல்லாமா கோபிச்சிக்கிட்டு வருவ?, எனக்கும் உங்க அப்பனுக்கும் வராத சண்டையா அதுக்கெல்லாம் புருஷனை விட்டு போக முடியுமா?” என அவராக மனதில் கணித்துக் கொண்டு அறிவுரை கூறினார்.

தான் வீட்டை விட்டுச் செல்கையில் அன்பு அழைக்கவில்லை எனில் அவனே அனுப்பி வைத்தான் என்றே அர்த்தம். அவன் அனுப்பினால் அதற்கு ஏதேனும் காரணம் இருக்கும் ஆகையால் அவன் வந்து அழைத்துச் செல்லும்வரை செல்வதில்லை என்ற முடிவிலிருந்தாள்.

அன்னையின் அர்த்தமில்லா அறிவுரைகள் எரிச்சலூட்ட, “அம்மா இப்படி எல்லாம் பேசாதீங்க” என்றாள் கடுகடுப்புடன்.

அடியே கிறுக்கிஎல்லாம் உன் நல்லதுக்குத் தான் சொல்லுறேன். உன் வீட்டுல வேற ஒரு பொண்ணு இருக்கும் போது நீ பாட்டுக்கு கோபிச்சிகிட்டு வந்து இங்க உக்காந்து இருக்கையேடி கழுத!அதுலையும் இந்த பேச்சி அந்த புள்ளைய பத்தி சொல்லுறதே எனக்குச் சரியப்படலை” என்று முடிப்பதற்குள், “அம்மாஆஆஆ…” என அறையே அதிரும் படி கத்தினாள் கயல்.

உங்களுக்கு என்ன தெரியும் அவர பத்திஸ்வேதாவும் அவரும் இப்போ தான் தனியா இருக்கங்களோ?. என் கழுத்துல தாலியை கட்டிட்டு ஏழு வருஷமா தனியா தானே இருந்தாருஅவரு நினைச்சியிருந்தா அப்பவே எந்த பொண்ண வேணாலும் கல்யாணம் பண்ணி இருக்கலாமே?.

இவ்வளவு ஏன் ஆச்சி கல்யாணம் பண்ணுன்னு கட்டாயப்படுத்தியும் கூட அவர் என்னையே நினைச்சிக்கிட்டு எனக்காக காத்துக்கிட்டு இருந்தவரும்மா! இனி என் புருஷனைப் பத்தி ஒருவார்த்தை தப்பா பேசுனீங்க உங்க உறவை முடிச்சிகிட்டு இந்த வீட்டை விட்டு போயிடுவேன்” என ஆத்திர மிகுதியில் கத்தினாள். 

அன்புவை பற்றிய தவறான எண்ணமோவெறுப்போ கயல் மனதில் இல்லை என்பதை அறிந்து கொண்ட கற்பகத்திற்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது. 

சந்திரன் எந்த வித உணர்வுமின்று அமைதியாக வர,செல்வா கோவிலுக்குள் நுழையும் போதே எந்த நேரம் அன்பு வருவானோ என்ன பிரச்சனை செய்வானோ என்ற பயத்திலேயே வந்தான். அவன் பயத்தைப் பொய்யாக்காமல் முதல் வரிசையில் முதல் ஆளாய் அமர்ந்திருந்தான் அன்பு.

யாரும் அழைக்கவில்லை தான் ஆனால் வந்தவனை யாரும் தடுக்கவில்லை. அவனை பார்த்ததுமே செல்வாவிற்கு உடல் மீண்டும் நடுக்க தொடங்கியது. இனி இந்த திருமணம் நடக்க வாய்ப்பில்லை என உறுதியாக எண்ணினான். அன்பு வந்துவிட்டான் இனி போலீஸ் எப்போது வருவார்களோ என்ற அடுத்த பயம் அவனை ஆட்கொண்டது.

சந்திரன் மனையில் அமர்ந்தும் செல்வாவை நகர விடாது தன் அருகிலே நிறுத்திக் கொண்டான். பூங்கோதையும் அழைத்து வந்து மனையில் அமர்ந்தப்பட்டாள். அனைவரின் பார்வையும் மணமக்களை நோக்கியிருக்கஅதிலும் இராஜமாணிக்கம் ஆசையோடு அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அன்புவின் பார்வை மட்டும் செல்வாய் குற்றம் சாட்டுவது போல் சுட்டது.

ஐயர் மாங்கல்யத்தைத் தரஜெயசந்திரன் வாங்குவதற்குள், “ஸ்டாப் இட்” என காணமான குரல் கேட்க அனைவரும் திரும்பினார். இரண்டு காவலர்கள் மற்றும் இரண்டு அரசாங்க அதிகாரிகளுடன் ஸ்வேதா வந்து நின்றாள்.

ஊரார் அனைவரும் சலசலப்புடன் பேசியவாறு பார்க்கசில பெரியவர்கள் என்ன என்று விசாரித்தவாறு முன் வந்தனர். இராஜாமணிகத்திடம் திரும்பிய அதிகாரிகள் அவரை கைது செய்ய வந்திருப்பதாகக் கூறினர். இதைச் சற்றும் எதிர்பாராத அவரின் பார்வை தானாக அன்புவின் புறம் திரும்பியது அவனோ தனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்பது போல் அசராது அமர்ந்திருந்தான். 

உறவுகள் அனைவரும் சூழ்ந்து கொள்ளசந்திரன் மேடையிலிருந்து இறங்கி வந்தான். அனைவரும் கரணம் கேட்கஸ்வேதா நடுவில் வந்து பேசத் தொடங்கினாள்.

இந்த ஊர் நிர்வாகத்தை பத்து வருடமா இவர் நல்ல கவனிக்கிறார்னு நீங்க நினைச்சிங்கனா அது உங்க முட்டாள்தனம். ரேஷன் பொருட்களைக் கொள்ளையடித்தது சீனிவாசனாகவே இருந்தாலும் ஊர் நிர்வாகிக்கு தெரியாம அவரால எப்படி இத்தனை வருஷமா கொள்ளையடிக்க முடியும்?. இப்போ விசாரணையில் ரேஷன் பொருட்களை அவங்க கொள்ளையடிச்சாலும் அதில் வரும் தொகையில் பாதியை நிர்வாகி இராஜமாணிக்கத்திடம் கொடுத்து இருப்பதா அவரும் உண்மையை சொல்லிட்டாரு.

கிராம நிர்வாகத்திற்கு அரசாங்கம் தர நிதியில பாதிக்கும் மேல இவரு தான் திருடியிருக்காரு!. இது எல்லாத்துக்கும் மேல ஊர் பொதுமக்கள் உங்களுக்கே தெரியாம அவர் பண்ண பெரிய திருட்டு பெரியாத்துல மணல் கொள்ளையடிச்சிருக்காரு. அதுவும் ஒருநாள் இரெண்டு நாள் இல்ல மூணு வருஷமா!

மணல் தானேனு நீங்க சாதாரணமா நினைக்கக் கூடாது. ஆற்றில் நீரோட்டத்தின் போது நீர் அடியிலும் கரையோரமாகவும் இருக்கும் மணல் ஒரு பஞ்சு நீரை உறிஞ்சி வைக்குற மாதிரி உறிஞ்சி வைச்சிக்கும் இதனால கோடை காலத்துல நீங்க லேசா ஊத்து தோண்டுனாலே உங்களுக்கு நீர் கிடைக்கும். நிலத்தடி நீர் மட்டமும் உயரும்அதனால கிணறுகளில் நீர் கோடையிலும் வற்றாத ஊற்றாக உறிக்கொண்டு இருக்கும். அதைத்தான் கோடை காலத்துல விவசாய தேவைக்கு பயன்படுத்துவாங்க. 

அதே போல் ஆற்று மணல் மற்றோரு இயற்கை பொக்கிஷம். ஆற்று மணல்ல பல தாதுப் பொருட்கள் கலந்து இருக்கும். தாதுப் பொருட்களும் பிரிந்த பின்னும் மணல் கட்டிடப் பயன்பாட்டிற்கு வைச்சிப்பாங்க. இன்னும் ஐந்துஆறு வருஷம் போனா இந்த ஊருல விவசாயத்துக்கு மட்டுமில்ல குடிக்கக் கூட தண்ணீருக்குப் பஞ்சம் தான்.

நாட்டுல தண்ணீர் பஞ்சக்குறது இயற்கையான தண்ணீர் பஞ்சமில்லை. செயற்கையா இவர்களே ஏற்படுத்துடுறது தான். போதுமான அளவு மழை பொலிவு இருந்தும் தண்ணீர் பஞ்சம் வருதுன்னா அதுக்குக் கரணம் இன்றைய வர்த்தக உலகில் தண்ணீரும் விற்பனை பொருளா மாறி இருக்குறது தான்.

மணல் ஏற்றுமதி பல கோடி லாபம் தரத் தொழில். தாமிழ்நாட்டில பல பெரிய ஆறுகளில் அரசாங்கமே மணல் குவாரி அமைச்சி மணலை திருடுறாங்கஅது மட்டுமில்லாது சிறுசிறு ஆறுகள்ல இவர மாதிரியான லோக்கல் அரசியல்வாதிங்க அவங்க இஷ்டத்துக்கு திருடிக்கிறாங்க. வடமாவட்டங்கள்ல நடக்குற திருட்டைக்கூட என்ன மாதிரி ஒரு சில பாத்திரைக்கையாளர்கள் பொதுமக்களுக்கு தெரியப்படுத்திருவாங்கஆனால் தென்மாவட்டங்கள்ல நடக்குற திருட்டு வெளிய தெரியுறாதே இல்லை.

அது மட்டுமில்லாம மணல் கொள்ளையைத் தடுக்க போனா தாசில்தார் இருந்தாலும் சரி,போலீஸ்சா இருந்தாலும் சரி அவங்க உயிருக்கு உத்தரவாதமில்லை. அப்படியே பிடிச்சாலும் கைகூலிங்க தான் மாட்டுவாங்க. இது மட்டுமில்ல இன்றைக்கு அதிக சாலை விபத்தும் இதால தான் நடக்குது.

ஆறும் ஆற்று மணலும் இவரு சொத்தா அதை விக்க?. ஊர் பொது சொத்துன்னா பொதுமக்கள் சொத்து நீங்க தான் இவரக் கேள்வி கேட்கணும்.

நீங்கக் கண்டுபிடிக்க கூடாதுன்னு தான் உங்களுக்கு புது ரோடு போட்டு கவர்ன்மென்ட் பாஸ் வசதியும் பண்ணிக் கொடுத்துருக்காரு. ஆனா இது தெரியாம நீங்க என்னவோ இவர் ஊருக்கு நல்லது பண்ணிட்டதா நினைக்குறீங்க!

நாளைடையில் பழைய சாலைகள் பயன்பாட்டிற்கு இல்லாமல் போய் விடபெரியாற்றின் பக்கம் யாருமே போறதில்ல. அது இவருக்கு ரொம்ப சாதகமாக போச்சி வாரத்துல நாலு நாள் இரத்திரி பெரியாத்துல இருந்து மணலை கொள்ளையடிச்சி இருக்காங்க” என ஸ்வேதா பேசி முடிக்கக் கேட்டிருந்த ஊரார் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் நின்றனர். இராஜமணிக்கமா இப்படி என தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

Advertisement