Advertisement

அத்தியாயம் 14

விடுமுறை நாள் என்பதால் மாலை பக்கத்து வீட்டுச் சிறுவன் குமாருடன் தங்கள் தோப்பிற்குச் சென்ற கயல், சிறிது நேரம் சுற்றி விட்டு பின் வீட்டிற்குக் கிளம்பினர்.

நெடும் உயரமாக, நெருக்கமாக வளர்ந்திருந்த மாமரத்தின் அருகே வர, “ஏய் கயலக்கா நில்லு, மாங்கா பறிச்சுட்டுப் போவும்என்றான் குமார்.

வேண்டாலே. இருட்டிருச்சு, வீட்டுக்குப் போவோம். நேரம்மாச்சுனா எங்க அப்பா திட்டுவாரு

லேட்டா வீட்டுக்குப் போனா பெரியப்பா திட்டமாட்டாரு, அன்பு சாருக்கு நீ லவ் லெட்டர் கொடுத்தது தெரிச்சாத்தான் திட்டுவாரு

இப்போ என்னடா சொல்லுற?”

ம்ம், அன்னைக்கு அன்பு சாருக்கு நீ லவ் லெட்டர் கொடுத்ததை உங்க அப்பா கிட்டச் சொல்லட்டுமா?”

நான் எப்படா கொடுத்தேன்? நீ எப்படா பார்த்தா?”

அன்னைக்கு எங்கிட்ட தானே கொடுத்து அன்பு சார்கிட்ட கொடுக்கச் சொன்ன?”

டேய் அது லவ் லெட்டர் இல்ல.. வேற பேப்பர்ஸ்

ஆஹா! மாட்டிக்கிடுவோமோன்னு பொய் சொல்றே. அன்னைக்கு நீதானே லவ் லெட்டர்னு சொன்ன? அன்பு சாரும் அப்படித்தான் சொன்னாரு. இப்போ நீ பொய் சொல்லுற, நான் நம்ப மாட்டேன்!”

ஏலே, இப்போ உனக்கு என்னடா வேணும்?”

ஒரு மாங்கா தானே கேட்டேன், என்னவோ உன் தோப்பையே கேட்ட மாதிரி லேட்டாச்சு, வீட்டுக்குப் போவோம்னு சொல்லுற?

ஒரு மாங்கா என்ன, தோப்புல இருக்குற மொத்த மாங்காயும் பறிச்சிக்கோடா, சீக்கிரம் வா”

அவன் பறிக்கச் செல்ல, அப்பப்பா இவன மட்டும் சமாளிக்க முடியலை, இப்போவே கணக்கட்டுதே’ என்றெண்ணினாள்.

சிறு வெளிச்சமும் சிறுக, சிறுகக் குறைந்து கொண்டே வரத் தொடங்கிய நேரம். அவன் மரத்தில் ஏற முயற்சி செய்வதைப் பார்த்தவள், “குமாரு மரத்துல ஏற வேண்டாம், இங்க வாடா” என்றவாறு குனிந்து இரண்டு மூன்று கற்களை எடுத்தாள்.

அவனும் அருகே வர, அவன் கையில் கற்களைக் கொடுத்தவள், “கல்லைன் விட்டு அடிடா, இரண்டு மாங்கா கெடச்சாலும் போதும் சீக்கிரம் வீட்டுக்குப் போவோம்” என்றாள்.

உச்சிக் கிளையில் தொங்கும் மாங்காவை குறி வைத்துக் கல்லை எறிந்தான். இரு மரங்களின் கிளைகளும் நெருங்கி அடர்த்தியுடன் அமைந்திருக்க, கீழ் கிளையின் உள் புறமாக இருந்த தேன் கூட்டின் மேல் கல் விழுந்தது.

அடுத்த நொடி தன் மொத்தப் படைகளோடும் தேனீக்கள் இருவரையும் நோக்கிப் படையெடுத்து வந்தது. அதை இருவருமே எதிர்பாராமல் இருக்க அப்படியே நின்றனர்.

தேனீக்கள் கூட்டமாகப் பெரும் இரைச்சலுடன் அவர்களை நெருங்கி வந்து கொண்டிருக்க, “குமாரு, இந்த தேனீ கொட்டுனா பத்து நாளுக்கு உடமெல்லாம் புண்ணாகிடும், ஒருவேளை விஷத் தேனீயா இருந்தா ரொம்பவே ஆபத்துடா, ஓடுலே வேகமா ஓடு” என்று அவள் முடிப்பதற்குள் ஓடிவிட்டான்.

சற்றுப் பயத்திலிருந்தவனுக்குக் கயலின் வார்த்தைகள் மேலும் பயத்தைத் தர, பதறி ஓடியவன் அருகே இருந்த மோட்டார் அறைக்குள் சென்று உட்புறமாக தாளிட்டுக் கொண்டான்.

அவன் பின்னே பயத்துடன் ஓடிவந்தவள் அவன் கதவை மூடி விட, என்ன செய்வது என இருபுறமும் கண்களைச் சுற்ற, அன்புவின் வருகையைப் பார்த்தாள்.

சென்ற முறை டவுனுக்குச் செல்லும் போது, சில பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கி வரச் சொல்லியிருந்தார் வேல்முருகன். வாங்கி வந்தவன், அவர் தோப்பில் இருப்பார் என்றெண்ணிக் கொடுக்க வந்தான்.

மூளை மொத்தமும் செயலிழந்திருக்க, தன்னை காப்பது எப்படி என்று அறியாதிருந்தவள், அன்புவின் வருகையை பாரர்த்ததும் அவனைக் காப்பது தான் பெரிதாகத் தெரிந்தது.  

நொடியும் தாமதிக்காது, தாவணியை அவிழ்ந்தவாறு அவனை நெருங்கியவள், அவனைத் தன்னோடு அணைத்து இருவருக்கும் அரணாகத் தாவணியைச் சுற்றித் தரையில் அமர்ந்தாள், அவனையும் அணைத்தவாறு.

எதற்கு அவள் இவ்வாறு தன்னை நோக்கி ஓடிவருகிறாள், ஏன் தன்னை அணைக்கிறாள் என்பது புரியாமல், என்ன செய்வது என்றும் தெரியாமல் நின்றவன், அவள் நெஞ்சில் தன் முகத்தைப் பதித்து இறுகி அணைத்த நொடி தன்னிலை மறந்தான்.

ஓடியதிலும், பதட்டத்திலும் அவள் உடல் முழுக்க வியர்க்க, வேகவேகமாக மூச்சு வாங்கினாள். முகம், கழுத்து என முழுவதும் வியர்த்திருக்க, வியர்வைத் துளிகள் துளித்துளியாய் வழிந்தோடியது. 

அவனைக் காப்பதிலே அவள் சிந்தனை இருக்க, மேலும் அவனை நெஞ்சோடு அணைத்தவளின் பார்வை, மெல்லிய தாவணியின் வழியாக வெளிப்புறத்தை ஆராய்ந்து கொண்டிருந்தது.

மலர் மெத்தையைப் போன்ற அவள் மென்மையில் முகம் பதிய, மலரைவிடச் சுகந்தமான அவள் வாசம் நாசியில் உணர்ந்தான். இதழ்கள் அழுத்தமாய் அவள் மேல் பதிந்திருக்க, அவள் மேனியின் வியர்வை முத்துகளின் ஈரம் அவன் நெற்றி, கன்னத்தில் படர்ந்தது. அந்த நொடி அவளின் வாசமே அவனின் சுவாசமாக மாறியிருந்தது.

தன்னிலை மறந்திருந்தவனை அந்த வாசம் மயக்க, கைகள் அவள் வெற்று இடையில் தழுவி தன்னோடு அணைத்தது. அவளின் வேகமூச்சிக்களில் தன் மீது பதிந்து மீண்ட அழுத்தத்தை விழி மூடி ரசித்தான்.

வெளிப்புறத்திலிருந்து பார்வையை உட்புறம் மாற்றியவள், தன்னவனை அருகே கண்ட இன்பத்தில் அவள் சிகைக்குள் கரம் கோர்த்து மென்மையாக, இதமாக வருடினாள்.

அந்தச் சுகத்தை ரசித்தவன் மேலும் அவள் மேல் அழுத்தமாகச் சாய, அவன் கணம் தாங்காமல் அவள் பின்புறம் சரிந்தாள். அவளோடு சரிந்திருந்தவன் மெல்ல விழி திறந்தான்.

தங்களை மூடியிருந்த தாவணியை ஒரு கைப் பற்றிருக்க, மறுகை அவன் முதுகை வளைத்திருந்தது. அதுவரை தன்னிலையிலிருந்தவள், தன்னவன் தான் என்ற உரிமையில் தடுக்க நினைக்கவில்லை.

வியர்வை பூத்த நெற்றி, கூர் நாசி, சிவந்த உதடு, ஈர கழுத்து… என அவன் கைகள் பயணித்தது. அவன் வருடலில் தன்னிலை மறந்தவள் தேகம் சிலிர்க்க, உதடு துடிக்க, உடல் நடுக்க தொடங்கியது.

அவள் நெற்றியில் இதழ் பதித்து, மூக்கு, கன்னம், கழுத்து என முக முழுவதும் சுவைத்தவனை நடுக்கும் இதழ் இழுத்தது. அவழிதலோடு இதழ் பதித்தவன் அழுத்தமுடன் முத்தமிட்டான். முதல் முறையாக அவன் குண்டூசி மீசையுடன் அவள் ரோஜா இதழ் போரிட்டுச் சிவந்தது.

அவள் தந்த சுகத்தில், பல வருடங்கால அவள் நினைவால் நிம்மதியின்றித் தவித்த அவன் மனதிற்கு, இந்தச் சில நிமிடங்கள் சொர்க்கத்தில் மிதந்ததைப் போன்றிருந்தது.

அவளின் அமைதியான அனுமதியும், அந்தச் சுகமும் அவன் வேகத்தைக் கூட்டியது. “செல்லம்மா.. செல்லம்மா..” எனப் புலம்பிய உதடுகள் மேலும் முத்தமிட்டது. தன்னிலையில் இல்லாதவன் மேலும் வேகமுடன் முன்னேறத் துவங்கிய நொடிகளில் தோப்பிற்கு வெளியே சாலையில் கேட்ட வாகனத்தின் சத்தத்தில் தன்னிலை பெற்று, வேகமுடன் அவளை உதறி எழுத்தான்.

திரும்பி நின்றவன் ஒருகையால் முகம், தலையை அழுத்திக் கோதியும், மூச்சிழுத்தும் தன்னைச் சமன்படுத்திக் கொண்டான். அதேநேரம் அவளும் எழுந்து தன்னை சரிபடுத்திக் கொண்டு அவன் அருகே வந்தாள்.

மாமா..” என்றவாறு அவன் தோளில் கை வைக்க முயல, அவள் கையை தட்டிவிட்டுத் திரும்பியவன் அவள் கன்னத்தில் அறைந்தான்.

அவன் முத்தமிட்ட போதும் தடுக்காதவள், அறைந்த போதும் தடுக்கவில்லை. உதட்டோர உதிரத் துளியோடு, இரு விழிகளிலும் நீர் நிறைந்திருக்க நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

என்னடி நடிக்கிறையா? உன் மாமா சந்திரன் சொல்லிக்கொடுத்தானா?” உச்சக் கோபத்தில் கத்தினான்.

இதுவரை அனுபவித்த சுகம் மேலும் வேண்டுமென்று அவன் ஒவ்வொரு அணுவும் துடித்துக் கொண்டிருக்க,மேலும் அவளை உரிமையோடு நெருங்க இயலாத தன் இயலாமை. இத்தனை வருடங்களாக மனதில் பூட்டி வைத்திருந்த கோபம், சந்திரனின் மேலிருந்த வெறுப்பு, தன்னை காக்கத்தான் அவள் அணைத்தாள் என்ற அறியாமை எல்லாம் சேர்ந்து அவனைக் கோபத்தின் உச்சியில் நிற்க வைத்தது.

உள்ளமே உலைக் கலனாய் கொதிக்க, அடக்க முடியாது வார்த்தைகளை வீசினான். அவன் வீசிய வார்த்தைகளின் தாக்கம் அவள்புறம் எவ்வாறு இருக்குமென்பதை அவன் உணரவில்லை.

அவன் வார்த்தையின் வீச்சு, வாளாய் மாறி அவள் இதயத்தையே கீறியிருந்தது.  

‘சிறுவயதில் அறியாமல் செய்த தவறுக்குத்தான் இவ்வளவு வெறுப்பா? ஆனால் நானோ இத்தனை வருடமாக அவனை மனத்தில் சுமந்து வருகைக்காகக் காத்திருந்தேனே? என் காதலை நடிப்பு என்று எவ்வளவு எளிதாகக் கூறிவிட்டான்? அதுவும் சந்திரன் சொல்லி நான் நடிக்கிறேனாநானா அணைத்தேன்? நானா முத்தமிட்டேன்? நானா நடித்தேன்? என் இத்தனை வருடக் காத்திருப்பு இதற்குத்தானா? நினைக்கும் போது இதயமே வலிக்க, நெஞ்சை அழுத்திப் பிடித்தவள், அனைத்து கேள்விகளையும் வார்த்தையில்லாது விழிகளில் தாங்கி அவனைப் பார்த்தாள்.

உள்ளுக்குள் அவள் மேலிருந்த காதலில், அவள் பார்வையிலும் ஒரு நிமிடம் தடுமாறினான். தன் தடுமாற்றத்தைத் தானே வெறுத்தவன், மேலும் கோபமுடன், “சொல்லுடி ஏன் இப்படி அமைதியா நிக்குற? எல்லாம் அவன் திட்டம் தானே? இப்படியெல்லாம் அவன்தானே நடிக்க சொன்னா? எதுக்கு ஊர் முன்னாடி என்ன அவமானப்படுத்தவா? சிவசுப்பிரமணியன் மகனா இப்படின்னு ஊருக்குள்ள என் அப்பா பேரையும் கேவலப்படுத்த பிளான் பண்ணிருக்கீங்களா? இல்ல, என்னைக் கொல்லுறதுக்கு ஏதும் சதித்திட்டமா? வாயைத் திறந்து சொல்லுடி?” மனதிற்குள் இருந்த ஆதங்கத்தைக் கோபத்தோடு கொட்டினான். 

கயலுக்கு வார்த்தைகள் வரவேயில்லை. தன் காதலை நடிப்பு என்று சொல்லும்போது கூட இதயம் வலிக்க தாங்கிக் கொண்டவளால், அவன் பழிச்சொல்லைத் தாங்க முடியவில்லை. இதைக் கேட்கத்தான் நான் காத்திருந்தேனா? இதைக் கேட்டும் நான் உயிரோடு இருக்க வேண்டுமா? நினைத்தவாறு இரண்டடி பின் எடுத்து வைத்தவள், சற்று தொலைவிலிருந்த கிணற்றை நோக்கி ஓடினாள். 

கிணற்றின் அருகே சென்றவள் குதிக்க முயல, அன்புவின் வலியக் கரங்கள் அவளின் இடை தாங்கித் தன்னோடு இழுத்தணைத்தது. அவனிடமிருந்து முறுக்கிக் கொண்டு விலக, மேலும் கோபமுடன் அவளின் இரு கன்னத்திலும் மாறி மாறி அறைந்தான். 

சாகப் போறீயா? வா, ரெண்டு பேரும் சேர்த்து சாகலாம், வாடி!” பலமுடன் அவள் கையை பிடித்திழுத்தான். 

‘அவனும் சாவதா? 

பிடிவாதமுடன் கைகளை இழுத்தவள் அவனைப் பார்த்து முறைத்தவாறு நின்றாள். உள்ளுக்குள் இதையும் நடிப்பென்று சொல்லி விடுவானோ என்ற தவிப்பிலிருந்தாள். 

ஏன் கயல் என் உயிரோடையும், உணர்வோடும் விளையாடுறே? இப்படி நெருங்கி வந்து என்ன உயிரோட கொல்லாதே” என்றவன் திரும்பிப் பாராமல் சென்றான்.

நேராகத் தன் தோப்பு வீட்டிற்கு வந்தான் அன்பு. காயப்பட்டவளை விடக் காயப்படுத்திய அவனுக்குத்தான் அதிகமாக வலித்தது. கத்தி அழ வேண்டும் போலிருந்தது.  

‘அவளை ஏன் விட்டுவிட்டு வந்தோம் தன்னுடனே அழைத்து வந்திருக்கலாமோ? ஊர் எதிர்த்தால் என்ன? சந்திரன் எதிர்த்தால் என்ன? கயலுக்கு விருப்பமில்லை என்றாலும் அவள் தனக்கு வேண்டுமென்று ஏங்கினான். 

மனம் ஒருபுறம் தவிக்க, உடலும் ஒருபுறம் கயல் வேண்டுமென்று தவித்தது. தன்னைத் தாங்கும் சக்தியே அவள்தான், தன் உயிர் சுவாசமாகித் தான் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத தேவையாக மாறி நிற்கிறாள் என்பதை இன்று முழுதாக உணர்ந்தான்.

இருப்பினும் தன் தேடல் அவளிடம் நிறைவடையாமல் இருப்பது அவனை விலகி வரச் செய்தது. 

நிம்மதியின்றி தவித்த மனம், இன்று அவளிடம் கண்ட புதுமையை எண்ணியவாறு விழி மூடினான். 

அவன் கொண்ட காதலும் குறையவில்லை, காயமும் குறைவில்லை என்பதை உணர்ந்து கொண்டாள். தன் செயல் அவனுக்குக் காயத்தைத் தான் தருகிறது அதுவும் என்னை உயிரோடு கொல்லாதே என அவன் கூறிச்சென்ற பின் அவனை நெருங்க முயலவில்லை.

அதன்பின் இருநாட்கள் காய்ச்சலில் கிடந்தவள், மெல்லத் தேறி எழுந்தாள். ஜெயந்தியின் திருமண நாள் வந்தது. மறுநாள் திருமணம் என்றிருக்க, முதல் நாளிலிருந்தே பூங்கோதையும், கயல்விழியும் அவளோடு தான் இருந்தனர். 

தன் கவலைகளைத் தன்னோடு மறைத்துக் கொண்டவள் தோழிகளோடு சிரித்துக் கொண்டிருந்தாள். அடுத்த நாள் தனக்கு வரும் அடுத்த சோதனையை அறியாமல். 

Advertisement