Advertisement

 

அத்தியாயம் 11

இரவு தோப்பு வீட்டில் தனிமையில் உறக்கமின்றி உழன்று கொண்டிருந்தான் அன்பு. மழை நின்றிருக்கமெல்லிய சாரலாய் காற்றில் கலந்து தூவிக்கொண்டிருந்தது.

நடுக்கூடத்தில் தூணில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தவனுக்குள் ஆயிரம் சிந்தனையெல்லாம் இல்லை. கயலைப் பற்றிய ஒரு சிந்தனை தான்.

அவளை அணைத்தபோது பற்றிய தீ இன்னும் உள்ளே எரிவது போன்றிருந்தது. அவள் வாசம்அணைப்புமுத்தம்இன்னும் இன்னும் வேண்டுமென்று மனம் ஏங்கியது. ஆனால் அவளை உரிமையோடு நெருங்க இயலாத இயலாமையை எண்ணி நொந்து கொண்டிருந்தான்.

அவளும் அணைத்தாள் என்பதை மறந்து விட்டுநீ முத்தமிட்ட போது அழுதாளே.. அவ்வாறு எனில் அவளுக்கு உன்னைப் பிடிக்கவில்லை என்று தானே அர்த்தம்?’ இதை அவளே எத்தனையோ முறை கூறிய பின்னும் நெருங்கினால் உனக்குத் தன்மானமில்லை என்று தானே அர்த்தம்அவனுக்குள் ஒரு கேள்வி எழுந்தது.

‘நானும் தான் என்ன செய்வேன்? அவளைக் கண்டாலே தடுமாறித் தடம் புரளும் மனதைக் கட்டுப்படுத்தும் வலிமை என்னிடமில்லை. அதனாலே இத்தனை நாள்களாக அவளைப் பார்க்காமலிருந்தேன். இதுவரை எந்த பெண்ணையும் ரசிக்காத என் கண்கள், கயலிடம் கட்டுப்பாடு இழக்கிறதே.

இனி கவனமாக இருக்க வேண்டும். அவளை நெருங்கவே கூடாது என்றெண்ணினான்.

அதே நேரம் கயலும் சிந்தனையில் தான் இருந்தாள். ‘அவன் விலகிச் சென்ற போது வலித்ததுதான். ஆனால் அவனை விலக விட்டது என் தவறு தானே. அதனால் தானே இத்தனை கஷ்டமும்கண்ணீரும். 

எங்கே என்னை வெறுத்து மறந்திருப்பானோ என்றெண்ணியே இத்தனை நாட்களும் அவனை நெருங்காமல் பார்வையால் தொடர்ந்தேன். ஆனால் இன்று செல்லம்மா என்ற ஒற்றை வார்த்தையில் நான் இன்னும் மாறவில்லை என்று காட்டிவிட்டானே. என் வலிகண்டு அவன் துடித்த போதும்முத்தமிட்டு அணைத்த போதும் அவன் காதல் குறைவில்லை என்பதை உணர்த்தி விட்டான்.

போதும் இத்தனை வருடப் பிரிவும் வலியும்எனக்கு அவன் வேண்டுமென்பதை விட, அவனுக்கு நான் வேண்டும் என்பதற்காவே அவன் வெட்டி வீராப்புடன் போராட வேண்டும் என்றெண்ணினாள்.

‘அவன் பிடிவாதத்தைத் தகர்க்க, அவனை தடுமாறச் செய்யவேண்டும். அவனைத் தடுமாறச் செய்ய அவனை நெருங்க வேண்டும்’ என்றெண்ணினாள்.

அடியேதட்டுல கோலம் போட்டுக்கிட்டு என்னத்த கனவு காணுறமுதல்ல சாப்பாட்டை அள்ளிச் சாப்பிடு?” அன்னையின் அதட்டலில் கலைந்தவள், வேகவேகமாக முழுங்க. விக்கியது.

ஏன் புள்ளைய திட்டுறநீ சாப்புடு கண்ணு” என அன்னையைத் திட்டியவாறு தண்ணீர் புகட்டிய தந்தையை பார்த்தவள், அன்னையிடம் திரும்பி அழகு காட்டினாள்.

அடிக் கழுதை” என்றவாறு அன்னை கையோங்க வரஎழுந்து ஓடிவிட்டாள். 

என்னதான் ஒத்தப் புள்ளையா இருந்தாலும் பொம்பளைப் புள்ளைய எந்த நாளைக்கு வீட்டுலேயே வச்சிருக்க முடியும்அவளுக்கும் ஏழு கழுதை வயசாச்சி. முன்னாடியாவது பரவாயில்லை. இப்போ ஸ்கூலுக்கு வேலைக்குப் போக ஆரம்பிச்சத்துக்கு அப்பறம் இராப்பகலா சிறுசுகளோடவே சுத்திக்கிட்டு இருக்கா?” எனக் கற்பகம் முடிக்கும் முன்னே, “அடியே, இப்போ சுத்தி வளச்சி என்ன சொல்ல வர்றியாம்?” உச்ச குரலில் கேட்டார்.

ஏன், நான் சொல்ல வாரது உங்களுக்குப் புரியலையாஜெயந்தி வயசு தானே என் மகளுக்கும். அவளுக்குக் கல்யாணம் பண்ண வேண்டாமா?” பட்டெனக் கேட்டார்.

பண்ணலாம் பண்ணலாம்ஜெயந்திக்கு முதல்ல முடியட்டும். அப்புறம் பார்ப்போம்” என்க,

அவரின் மனமறிந்த மனையாள், “நீங்க நினைக்குற மாதிரில்லாம் நடக்கும்னு கனா காணாதீங்கதிருவிழா முடியவும் கயலுக்கு மாப்பிள்ளை பார்க்கணும் ” என்றார்.

பின்னாடி மாடு கத்துற மாதிரி இருக்கு.. என்னனு பாரு போ..போடி..” என்க, “ம்கும்ம்..” என்ற செறுமலோடு எழுந்து சென்றார் கற்பகம்.

மறுநாளிலிருந்து பள்ளியில் கயலின் செயல்பாடுகள் மாறியது. அவளிடம் புது உற்சாகம் குடிகொண்டது. அவள் மகிழ்ச்சி முகப்பொலிவைக் கூட்டியது. இதழ்களில் புதுப் புன்னகையுடன் வலம் வந்தாள்.

நாள் ஒன்றிற்கு ஐந்து முறையேனும் அன்புவின் அறைக்குச் சென்றுவிடுவாள். இந்த ஃபைலில் ஸைன் வேண்டும்ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகளில் அவன் ஆலோசனைமாணவர்களின் தேவைகள்நிர்வாகத்தின் குறைகள் என ஏதாவது காரணத்தை ஏற்படுத்திக் கொண்டு செல்ல, அன்புவாலும் தவிர்க்க முடிவில்லை.

உள்ளே வருபவள் வாய் மூடாது பட்டியல் வாசிக்கநான் என்னவென்று பார்க்கிறேன். நீங்கள் சென்று வாருங்கள்’ என்ற ஒரு வரி பதிலில் அனுப்பி வைத்துவிடுவான். 

இன்றும் ஒரு பிங்க் நிறச் சேலையில் கையில் ஒரு பாக்ஸோடு “மாமா..” என்று வந்தவள், அவன் அருகே நின்றாள். ஏதோ ஃபைலை பார்த்துக் கொண்டிருந்தவன் நிமிர்ந்தும் பாராமல் “என்ன?” என்று கேட்டான்.

நம்ம ஊரு லைப்ரரி கடந்த நாலு வருஷமா ஸ்டாஃப் இல்லாம மூடியே இருக்கு. அதை ஓபன் பண்ணா பசங்களுக்கு யூஸாகும் “

அன்புவிற்கு உணவு கொண்டு வந்த சரவணன், இவர்கள் பேசும் போதே அவன் கண்ணசைப்பில் உள்ளே வந்து டேபுளில் சாப்பாட்டுப் பையை வைத்தார்.

ஏன் ஸ்கூல் லைப்ரரி இருக்கே பசங்களுக்கு?” 

க்கும்எக்ஸாம் முடியவும் ஒரு மாசம் லீவு. புள்ளைக எல்லாம் விளையாடுறேனு ஆலமரத்தடியில வெயில்ல சுத்திக்கிட்டு இருக்கும்”

பொது லைப்ரரி ஓப்பன் பண்ணனும்னா மாணிக்கம் அங்கிள் கிட்டத் தான் சொல்லணும்..” என்றவன் ‘ஆலமரத்தடியில ஏதுடி வெயில்?’ என்று நினைத்தான்.

நீங்க ஒரு வார்த்தை சொல்ல வேண்டியது தானே?” 

‘மாணிக்கம் அங்கிள் கிட்ட என்னவிட இவதான் பூங்கோதை அப்பான்னு நல்ல பேசுவாளே?’ என்று நினைத்தவன் “சரி…” என்று ஒற்றைச் சொல் உதிர்த்தான்.

‘இந்த பொண்ணு என்னடா அம்புட்டுப் புள்ளைகளையும் தான் பெத்த புள்ள மாதிரியும் அதுகளுக்காக புருஷன்கிட்ட சிணுங்குற மாதிரியும் பேசிக்கிட்டு இருக்கு?’ நினைத்தவாறு சரவணன் வெளியே சென்றார்.

ம்ம்.. சரி.. இந்தாங்க..” என பாக்ஸ்யை நீட்டினாள்.

அப்போதுதான் நிமிர்ந்து பார்த்தவன் என்ன என்று வார்த்தையில் கேட்காது, லேசாக முறைத்தவாறு ஒற்றை புருவம் உயர்த்திக் கேட்டான்.

அதுவே அவனை ஒருவிதமாக அழகனாகக் காட்ட, அவனைப் பார்த்து ஒற்றைக் கண் சிமிட்டினாள். அவளின் பெரிய விழிகள் தன் கேள்விக்கு விரிந்து நொடியில் கண்சிமிட்டிய அழகில் ஒரு நொடிக்கும் குறைவாக மயங்கினான். சட்டென ஃபைலை பார்த்துக் குனிந்து கொண்டான். 

‘நீதான்டி செல்லம்மா அழகு’ நினைத்தவாறு, “என்னது இது?” என்றான்.

உங்களுக்குத் தான் சாப்பாடு, மீன் குழம்பு. நம்ம கம்மா மீனுதான் நானே சமைச்சேன்” எனக் கூறிய மறுநொடி நாற்காலியைத் தட்டிவிட்டு எழுந்தவன், வாசலை நோக்கி கை நீட்டியவாறு, “வெளியே போ..” உச்ச குரலில் கத்தினான்.

முகமோ கோபத்தில் கொதிக்ககண்கள் சிவந்து அவன் நின்ற தோற்றம் கண்டு பயந்தவள், கையிலிருந்த பாக்ஸை கீழே போட்டாள்.

அவன் புன்னகை முகம் மட்டுமே பார்த்துப் பழகியவளுக்கு கோப முகம் புதிது. அவன் விலகலைத் தாங்கியவளால் கோபத்தைத் தாங்க முடியாது விழியில் நீர் கோர்க்க, அறையிலிருந்து ஓடினாள்.

அங்கு சிதறிக் கிடந்த சாப்பாட்டைப் பார்த்தவனுக்கு மேலும் கோபம் அதிகரித்தது. அங்கு இருப்பதே மூச்சு முட்டுவதைப் போன்றிருக்க, வேகமாக வெளியே சென்றான்.

அவளைக் காயப்படுத்தித் தான் வலியை அனுபவிப்பதற்குப் பதில் அவளைக் காணாமல் விலகிச் செல்வதே மேல் என்று எண்ணியவன், அதன் பின் ஸ்கூலுக்கு வருவதையே தவிர்த்தான். வாரத்தில் ஒருமுறை வந்து செல்பவன், அப்போதும் கயலைப் பார்க்காமலே தவிர்த்தான்.  

நீ பார்க்காவிடினும் என் பார்வை உன்னைத் தொடரும் என்பது போல் கயலின் பார்வை அவனைத் தொடர்ந்து கொண்டிருந்தது.

வயலுக்கு வந்தவன், நடவு வேலைக்கு வேலையாட்கள் வராமல் இருக்கவே சரவணனிடம், “எதுக்கு அண்ணா ஆளுக வேலைக்கு வரலை? எதுவும் ஊருக்குள்ள விசேஷமா?” என்றான்.

அப்படிலாம் இல்ல தம்பிஎல்லாரும் ரேஷன் கடையில அரிசி,பருப்பு வாங்க வரிசையில நிப்பாங்க”

ஏன் இன்னைக்கே போகணுமா? மாசத்துல எப்ப வேணாலும் போய் வாங்கிக்கலாமேநடவு ஆரம்பிச்சா ரெண்டு நாளுல முடிக்கலாம்னு நினைச்சேன்?” 

அப்படிலாம் இல்ல தம்பி. மாசத்துக்கு ரெண்டு இல்ல மூணு நாள்தான் தருவாங்கஅதுவும் முன்ன போறவங்களுக்குத்தான் முன்னுரிமை. கடைசில போனா சரக்கு எல்லாம் இல்லனு சொல்லிடுவாங்க” 

‘ரெண்டு நாளுக்கு முன்னாடி டவுனுக்கு போயிட்டு வரும் போது ரேஷன் கடையில சரக்கு இறக்கிறதைப் பார்த்தேனேபொதுமக்கள் அனைவருக்கும் பொருட்களை விநியோகம் பண்ணுவதற்காகத்தானே ஊழியர்கள்? அப்படி இருக்கும்போது அதென்ன முன்னாடி வர்றவுங்களுக்கு மட்டும் முன்னுரிமை? இதுக்காக ஒரு நாள் தினக்கூலி வேலைக்குப் போறவன் வேலையை விட்டுப் போய் வரிசையில நிப்பானாஇதென்ன அநியாயம்?’ என்று சிந்தித்தவாறு நின்று கொண்டிருந்தான். 

நாளைக்கு நல்ல நாளு, அதனால நாளைக்கே நடவு வேலையைத் தொடங்கலாம்னு அம்மா சொன்னாங்களே தம்பி” என்று சரவணன் கூற, “சரி அண்ணா! ஆச்சி மனசுப்படியே செய்யட்டும், நான் டவுன் வரைக்கும் போட்டு வர்றேன்” என வண்டியை நோக்கிச் சென்றான்.

எதிரே ஒரு வயதான பாட்டி ரேஷன் பொருள்கள் கிடைக்கவில்லை என்று புலம்பியவாறு வரஎன்னவென்று நின்று விசாரித்தான்.

ஏதோ தவறு நடப்பதைப் போன்று தோன்ற பின் அவரிடமிருந்து ரேஷன் கார்டை வாங்கிக் கொண்டு கிளம்பினான்.

அன்று விடுமுறை நாள் என்பதால் மாலை எப்போதும் போல் ஜெயந்தி வீட்டிற்குச் சென்றாள் கயல். ஆனால் ஜெயந்தியும் பூங்கோதையும் கோவிலுக்குச் சென்றிருப்பதாக வசந்தி கூறினார். சமையலறைக்குள் சென்றவள், அவரோடு பேசியவாறு அவருக்கு உதவி செய்தாள். 

அன்னையைக் காண வந்த சந்திரன், அவர்களை பார்த்தவாறு வாசலிலே நின்றான். தாவணியைச் சொருகிக் கொண்டு அடுப்பில் சமைத்து கொண்டிருந்தவள், பழகிய அடுப்பறையாகையால் எந்த பாக்ஸில் எந்தப் பொருள் உள்ளது என்பதை சரியாக எடுத்துக் கொண்டாள்.

வசந்தி டீ போட வரவேஅவரிடமிருந்து பாத்திரத்தைப் பிடிக்கியவள், “நான் போடுறேன் அத்தே, நீங்க அப்படி உக்காருங்கஆமா, உங்க மாமியார் இல்லையா வீட்டுல?” எனக் கேட்டாள்.

அவளுக்குத் தன் வீட்டுச் சமையலறை எவ்வளவு பழக்கம் என்பதை இத்தனை நாட்களில் சந்திரன் கவனித்ததே இல்லை. அவள் வேலை பார்க்கும் அழகை ரசித்தவாறு நின்றான்.

என்னடி என் மாமியாரை இழுக்காம உன்னால இருக்க முடியாதாஅவங்களும் ஜெயந்தி கூட கோவிலுக்கு போயிருக்காங்க” என்றவாறு திரும்பிய வசந்தா மகனைப் பார்த்தார்.

அவன் பார்வை கயலின் மேல் உள்ளது என்பதையும் கவனித்தனர், “என்னடா சந்திரா?” எனக் கேட்டார்.

சட்டென்று அவர் புறம் திரும்பியவன், “பத்திரிகை வந்துருக்கும்மா, அதான் உங்ககிட்ட காட்ட வந்தேன்” என்க, ” என்ன பத்திரிக்கை வந்திரிச்சா? எங்க, காட்டு அண்ணா” என்ற குரலோடு ஜெயந்தி உள்ளே வந்தாள்.

அதே அளவு ஆர்வத்துடன் கயலும், “எங்க காட்டுங்க மாமா” என்றவாறு அவன் அருகில் வந்தாள். 

இருவரும் நான்தான் முதலில் பார்ப்பேன் என்று அவன் கைகளிலிருந்து பிடுங்க முயன்றனர். அவனும் ஓடியவாறு இருவருக்கும் விளையாட்டுக் காட்டினான். அவன் உயரத்திற்குசம உயரம் கொண்ட கயல், ஜெயந்தி இருவராலும் எக்கி பிடுங்க முடியவில்லை.

அதே நேரம் உள்ளே வந்த செல்வா, பின்புறம் இருந்து பிடுங்கி ஜெயந்தியின் கையில் கொடுத்தவாறு கயலைப் பார்க்க, அவனை முறைத்தவாறு அடுப்பறைக்குள் சென்றாள் கயல். 

ஜெயந்தியும் பூங்கோதையும் திருமண அழைப்பிதழைப் பார்த்துக் கொண்டிருக்கஅனைவருக்கும் டீ எடுத்து வந்து கொடுத்தாள் கயல். அவளின் கையை பிடித்து இழுத்து அருகில் அமர வைத்த ஜெயந்தி அவளுக்கும் காட்டினாள்.

பூவுஜெயந்தி முகத்தைப் பார்த்தியா? அப்படியே ஜொலிக்குறாளேகல்யாணக்களை வந்துருச்சுல்லடி!” எனக் கயல் கேட்க, “அது கல்யாணக் களை இல்ல கயலுமைதா மாவும், கடலை மாவும் தான் காரணம்” என்றாள்.

பூங்கோதையை முறைத்த ஜெயந்தி கயலிடம் திரும்பி, “டீச்சரம்மா மைதா மாவு இல்லாமலே ஜெலிக்குறாங்களே, என்ன ரகசியமாம்?”என்றாள். 

அதானே முகமே புதுசா தெரியுதேஎங்க கயலா இத?” என்று பூங்கோதையும் கேட்க, கயலின் கைகள் இருபுறமும் நீண்டது.

சந்திரனின் அருகில் அமர்ந்திருந்த செல்வா, “டேய் சந்திராதங்கராசு அண்ணே லோடுக்கு லாரி அனுப்பச் சொன்னாங்கடா அனுப்பட்டுமா?” என்றான்.

செல்வாவின் பார்வை டேபுளில் கிடந்த பேப்பரில் இருக்கசந்திரனின் பார்வை எதிர்புறம் அவர்களின் மேல் இருந்ததால், “சரிடா அனுப்பி வை” என்றான்.

வாடகையைப் பத்தி முதலே பேசணும்டா” என்க, “நம்ம தங்கராசு அண்ணாதானே அனுப்பி வை” என்றான்.

ருக்மணி உள்ளே வர இருவரும் எழுந்து சென்றனர்.

Advertisement