Advertisement

கீழே வந்தவன் கயலிடம் துளசியை ரெடியாக சொல்ல “கயல், அத்தான் இப்ப எதுக்கு கோவிலுக்கு??” கேட்க, கயல்.. உங்க அண்ணா வீம்பு உனக்கு தெரியும். அவன் கிட்ட சொன்னா நிச்சயம் கேட்க மாட்டான். அதுக்கு தான் கோயிலுக்கு அனுப்புறேன். அவன் திரும்ப வர்றதுகுள்ள நாம எல்லாம் தயார் பண்ணிடலாம்  என்றவன் அவளை துளசியின் அறைக்கு அனுப்பி வைத்தான்.
கோவிலுக்கு போனவர்கள் திரும்ப இரவாகி விட்டது. வந்தவன் நேராக அறைக்குபோக  அதன் அலங்காரமே சொன்னது அதன் முக்கியத்தை. இதழ் பிரியாமல் சிரிக்க உள்ளே சென்றவன் குளித்து முடித்து தன் இரவு உடையை அணிந்து கொண்டு பால்கணியின் கதவினை திறந்து அமர்ந்து கொண்டான்.
துளசியின் அறையில் குளித்து அவளை வேறு புடவை கட்ட கயல் சொல்ல,  அண்ணி இது எதுக்கு அண்ணி?? எனக்கு தூக்கம் வருது. இப்ப போயி குளிக்க சொல்லுறீங்க??  என்றவளை  என்ன சொல்ல?? என யோசித்தாள். 
“இன்னிக்கு ஒரு பூஜை இருக்காம். போ, வேகமா ரெடியாகு இல்லனா பாட்டி வருவாங்க என பார்வதியை அழைக்க போக கயல் சொன்னதை கேள்வி கேட்காமல் செய்தாள் துளசி.” 
 
துளசியை தயார் செய்து கயல் வெளியே போக, அப்போதுதான் உறைத்தது துளசிக்கு “எதற்கு இந்த அலங்காரம்” என்று சில நிமிடங்கள் தன்னையே கண்ணாடியில் பார்த்தவள் உடல் சற்று வேர்க்க என்ன சொல்லி தப்பிக்க??! என யோசித்தாள்.
“அவள் சிந்தனையை தடை செய்தது”  வெளியில் கேட்ட குரல்கள். பார்வதி, மங்கை, கோதை என வீட்டு பெண்கள் அனைவரும் வர, மங்கை, துளசியை அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்க சொன்னவர், துளசியை, கயலுடன் அனுப்பி வைத்தார்.
“சத்தம் வராமல் கதவினை திறந்து தலையை மட்டும் உள்ளே விட்டு பார்க்க, அங்கு விஷ்வா இருப்பதற்கான எந்த தடமும் இல்லை. ‘அப்பா… அத்தான் இல்ல’ என நன்றாக கதவினை திறந்து உள்ளே வந்தவள் முதலில் செய்தது தாழ்பாளை போட்டு அது நன்றாக லாக் ஆகி இருக்கிறதா என்பதை தான். திரும்பியவள்  அதிர்ந்து தான் போனால்.” 
“பின்னால் விஷ்வா நிற்க, அப்பா.. என நெஞ்சில் கை வைத்தவள்,  பயந்துட்டேன். நீங்க இங்கயா இருந்தீங்க?!  ஆனா.. நா பாக்கும் போது இல்லையே?? என தலையை ஆட்டி கையை விரித்து சொல்ல அவள் சொன்ன அழகிலேயே மயங்கியவன் கையை பால்கணியை   பார்த்து காட்டினான். ஓஓஓ அங்க இருந்தீங்களா நா பார்க்கலை சாரி” என்றவள் கட்டிலில் ஏறி வாகாக அமர்ந்து கொண்டாள்.
“அவளின் கொலுசின் சத்தமே அவள் வருவதை சொல்லி விட்டது அவனிடம். வெண்பட்டில் தலையில் வைத்த மல்லிகை சரம் தோளில் வழிய, கயலின் கைகரியத்தால் மேக்அப் சற்று தூக்கலாக இருக்க அவள் போட்டு இருந்த லிப் கிளாஸ் அவனை வா என அழைத்து.”
“சில வினாடிகள் அவளை முழுதாக பார்திருந்தவனை” வாங்க அத்தான் என்ற அவள் வார்த்தை கலைத்தது.
“வாங்க அத்தான் இப்படி உக்காருங்க”  என்றவளை,  நா.. சொல்ல வேண்டியத எல்லாம் இந்த சில் வண்டு சொல்லுது. நா நினைத்து என்ன?? ‘வெட்கபட்டு வருவா, தயங்கி நிப்பா, சங்கட படுவா, அவனது மனமோ அப்படியே ஒரு பெரிய கல்லை தூக்கி உன் தலைல போடுவா.’ 
‘ஏம்பா நீயென்ன நயன்டீன் கிட் மாதிரி கேக்குற?? அது ஆப்பிள் புரே நியூ மாடல் யூஸ் பண்ணுற பொண்ணுடா! என அவன் தலையில் தட்ட, நீ.. மூடு நானும் அதே மாடல் தான் யுஸ் பண்ணறேன். பாத்தா அப்படி தெரியலையே?! நீ இன்னும் லேன்ட் லைன் யூஸ் பண்ணற மாதிரியில பேசுற. லேன்ட் லைன் சுகம் உனக்கு தெரியுமா? யாரும் பாத்துடுவாங்களான்னு அக்கம்.. பக்கம் பாத்து பேசுற சுகமே தனி தான் உனக்கு எங்க தெரிய போகுது’  என மனதிடம் சண்டை போட்ட படி அவளை பார்த்து  நின்று இருக்க. வாங்க அத்தான் என துளசி மீண்டும் அழைக்க தெளிந்தவன் கட்டிலில் அமர்ந்தான்.
“சாரி அத்தான்” உங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டேன். நீங்க தூங்குங்க, நா.. இங்க தூங்குறேன். என்னால உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது, என்றவள் கட்டிலின் மறு முனையில் படுத்துக்கொண்டாள் அவனுக்கு முதுகு காட்டி.
“நிஜமாகவே இப்பேது விஷ்வாவிற்கு தலை சுற்றிதான் போனது” வந்தா, பேசுனா, படுத்துட்டா. இப்ப நா… என்ன பண்ண?? என நினைத்தவன், அவனின் வழக்கமான ரவி சங்கரின் இசையை ஓட விட்டவன் கட்டிலின் மறு பக்கம் சென்றவன் அமைதியாக இருந்த துளசியின் முகத்தை பார்த்த படி இருந்தான்.” 
“அவள் இன்னும் தூங்க வில்லை என்பதை அவளின் கண்மணி அசைவில் உணர்ந்தவன் அவளை சங்கடம் கொள்ள வைக்காமல் பால்கணியில் சென்று அமர்ந்து கொண்டான்.” கோவிலுக்கு என்றதும் அவனும், அவளும் என்று நினைத்து இருந்தவன் அவளிடம் பேச எண்ணி இருந்தான். ஆனால் அவர்கள் உடன் ராதா, ஸ்ரீ, மீனா, ரத்தினம், ஜெய் என அனைவரும் வர பேச வாய்ப்பு இல்லாமல் போனது.
இப்போது பேசலாம் என இவன் வர, துளசியே அதற்கு வாய்ப்பே தரவில்லை. துளசியின் விருப்பதுடன் மட்டுமே தங்களின் வாழ்கையை துவங்க நினைத்தவன்  அவளைவிட்டு தள்ளி நின்றான்.
 
“கண்மூடி இருந்தவள் விஷ்வாவிடம் தைரியம் போல் காட்டிக்கொண்டாளும், உண்மையில் பயந்து போய்தான் இருந்தாள். அவனின் விருப்பம் இல்லா  திருமணம் என்பதும், திருமணத்திற்கு பின் அவன் தோப்பு வீட்டில் இருந்ததும் அவளின் மனதில் வேறு விதமானா உணர்வினை  ஏற்படுத்தி இருந்தது.”
“அவன் தனக்காக மட்டுமே இருக்க வேண்டும். அவனின் மனம் மாறிய பின் தங்கள் வாழ்கை துவங்கட்டும் என நினைத்தவள்,  அவனிடம் பேசாமல் படுத்துக்கொண்டாள் இருவரின் எண்ணமும் ஒன்றே அதை மற்றவரிடம் சொல்லி இருந்தாள் நன்றாக இருந்து இருக்குமோ!?”
“விஷ்வாவை பற்றியே நினைத்து கொண்டு இருந்தவள் அப்படியே தூங்கி போனால், பின் நடக்க போவதை அறியாமல். விஷ்வா சிறிது நேரம் அமர்ந்து இருந்தவன் துளசி உறங்கியதை கண்டதும் கட்டிலுக்கு வர அவனின் சோதனை காலம் ஆரம்பித்தது.
“துளசிக்கு சிறு வயதில் சிவராமன் அல்லது கோதையின் மீது உறங்கியே பழக்கம்.  அவளை தனியே அறையில் உறங்க வைத்தாலும், நடு இரவில் எழுந்து வந்து யார் மீதாவது படுத்துக்கொள்வாள். இதனால் கோதை அவளை அறையில் வைத்து வெளியில்  தாள் போட்டு விடுவார். துளசி பழக்கத்தை மறந்து இருப்பாள் என கோதை நினைத்து இருக்க அது தொட்டில் பழக்கம் என்பதை இன்று காட்டி விட்டாள்.” 
“துளசி  இரவு  உடை அணிந்து தூங்கிதான் பழக்கம். இன்று கட்டிய புடவையுடன் தூங்க, அது அவளை விட்டு கட்டிலை கட்டிக்கொண்டது.”
“விஷ்வா எழுந்து வந்தவன் துளசியின் கோலம் கண்டு கிறங்கித்தான் போனான். கைகள் தன்னால் அவளிடம் நீள, அவனின் மனம் தான் அவனை குட்டியது ‘டேய்.. பஸ்ட் நைட்டுல என்னடா கண்ணியமா இருக்குறது?? கனவுல மட்டும் இருந்தது இப்ப நேர்ல பாக்கும் போது என மனதை கேட்டவன்’.
“உனக்கு வேற வழி இல்ல பாஸ். இது நீயா தேடிகிட்டது, அவ வந்த உடனே பேசாம விட்டுட்டு இப்ப.. அவ தூங்குனதுக்கு அப்பறம் என்ன சேட்டை வேண்டி இருக்கு?? போ… போய் தூங்கு” என அவனை அடக்க பெரு மூச்சினை விட்டவன், அவளுக்கு போர்வையை நன்கு போர்த்தினான். விஷ்வா அவளின் முகம் பார்த்த படி இருந்தவன், அவளின் நுனி மூக்கு மச்சம் அவனை அழைப்பது போல் தோன்ற மனம் அவனின் கட்டுபாட்டை இழக்க ஆரம்பித்தது.” 
சட்டென  எழுந்து  அமர்ந்தான். குளியல் அறைக்கு சென்றவன், முகத்தில் தண்ணீரை வாரி இரைத்தான். சற்று மனம் தெளிய வெளியே வந்தவன், மீண்டும் தூங்க ஆரம்பிக்க “அவன் மீது பூச்சென்டென விழுந்தாள் துளசி.”  
“துளசி மேலே விழுந்ததும் அதிர்ந்து போனவன் கண் திறந்து பார்க்க, குட்டி குரங்கு விழும் பயத்தில் தாயை கட்டி பிடித்து இருக்குமே அந்த கோலத்தில் அவன் மீது இருந்தாள் துளசி”  
“அவளின் கீழே இருந்தவனுக்கு தான் இப்போது வேறு அவஸ்தையின் உச்ச கட்டம்.  மேலே இருந்தவளை அள்ளி கொள்ளவும் முடியாமல், கீழே விடவும் முடியாமல் திரிசங்கு சொர்க்க நிலை”
“பட்டு.. பட்டு.. ம்ம், எழுந்து கீழே படுமா. ஊஹூம் போக மாட்டேன். தூக்கத்தில் அவனின் கேள்விக்கு துளசி பதில் சொல்ல, பிளீஸ் பட்டு என விஷ்வா கெஞ்ச ஆரம்பிக்க, அவள் செய்த வேலையில் அவள் அப்படியே இருந்து இருந்தாள் கூட சமாளித்து இருக்கலாமோ என தோன்றியது விஷ்வாவிற்க்கு.”
“துளசி, விஷ்வாவின்  கழுத்தின் அடியில் முகம் புதைத்து இருக்க மெதுவாக அவளை இறக்கியவன் திரும்பி படுக்க போக, அவனை விடாது அணைத்தவளை திரும்பி அணைத்தவன் கால்கள் அவளின் கொலுசில் தாளமிட ஆரம்பித்து.  காலில் ஏதோ நெருட கண் விழித்தவள் பார்த்தது, தன்னையே கண் இமைக்காமல் பார்த்து இருக்கும் விஷ்வாவை தான்.”
 
“என்ன அத்தான்??” என்றவள் பேச்சு பாதியில் இருக்க, அவனுக்கு பிடித்த சித்தார் இசை, அவளின் மல்லிகையின் மணம், கொலுசின் ஒலி அனைத்தும் அவனை வேறு உலகத்திற்கு அழைத்து செல்ல உடன் துளசியையும் அழைத்து சென்றான் விஷ்வா.”  
“தன் காதலை உணர்த்திய பின் தான் அவளுடனான வாழ்க்கை என்று நினைத்தவன், இப்போது வாழ்கைக்கு பிறகு தன் காதலை தொடர ஆரம்பித்தான்.” 
“மயங்கி மடியின் மேல்  இருந்தவளை துளசி என அழைக்க, என்ன விஷ்வா!! என்ற அழைப்பு மீண்டும் தேடலை துவக்க சொல்ல முடிவில்லா தேடல் முடியும் முன் விடியல் துவங்கியது.”
                                   விஷ்வ துளசி தொடர்வாள்………………….  
   
 
 

Advertisement