Advertisement

                      ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 13
“பார்வதி ஜேசியரிடம் பேசியவர் பதிமூன்றாம் நாள் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியும், அன்றே விஷ்வா துளசியின் திருமண விருந்து வைக்கவும் ஏற்பாடு செய்ய சொன்னவர் மங்கை, கோதையை தனியே அழைத்தார்.” 
“முதலில் கோதையை வரச்சொன்னவர் கோதை உள்ளே வந்ததும் கோபமாக பார்த்தார். இத்தன நாள் நீ இந்த வீட்டு பொண்ணு, இப்ப நீ… இந்த வீட்டுக்கு பொண்ண குடுத்து சம்பந்தி ஆகிட்ட அதுக்கு தகுந்த படி நடக்க பாரு கோதை என்றவரை கோதை பார்த்தார். என்ன புரியலையா?? உங்க அண்ணிக்கு கொடுக்க வேண்டிய மரியாதைய குடுன்னு சொன்னோன்” என்றதும் தலை குனிந்து நின்றார் கோதை.
மங்கை வந்ததும், அவரையும் விடவில்லை “ஒரு மாமியார் எப்படி இருக்கனுமோ அப்படி இருக்க பாரு!! இன்னும் இடுப்புல தூக்கி வச்சு அலையாத” என அவருக்கு தான் மாமியார் என்பதை  நியாபகப்படுத்தினார்.
“பார்வதி, இன்னிக்கு சாங்கியத்துக்கு வேண்டியத ஏற்பாடு செய்ங்க.”  சொன்னவரை தயக்கத்துடன் மங்கை பார்த்தார். பார்வதியோ “என்ன மங்கை??”  எனக்கேட்டார்.
“இல்லை அத்தை ராஜா என மங்கை நிறுத்தினார்” பார்வதி.. அவனுக்கு என்ன?? சும்மா ஏதாவது காரணம் சொல்லாத, போயி ஆகவேண்டியத பாருங்க என இருவரையும் அனுப்பினார்.  
“ரெண்டுக்கும் வயசு தான் ஆகுதே தவிர புத்தியே இல்ல” எப்படி தான் இவங்க கூட மிச்ச காலத்தை ஓட்ட போறேன்னு தெரியலையே!? என தன் பாட்டுக்கு புலம்பியவரை,  என்ன பார்வதி நீயா பேசிகிட்டு இருக்குற?? என்ற விஸ்வநாதனின் குரல் கலைத்தது. 
“என்னது…. நானா பேசுறேனா?? ஏஞ்சொல்ல மாட்டீங்க. கல்யாணம் பண்ணி வச்சோமே அதுபிறகு நடக்குறதை பாக்காமா, என்னமே கதை சொல்லுறா உங்க மருமக, அதுக்கு உங்க மக ஒத்து.  தனிதனியா இருந்தா எப்படிங்க ஒண்ணாகும்?? அடிக்குறதோ… புடிக்குறதோ அவங்கிட்டன்னு விட்டாதான சரியாகும். இது புரியாமா என்ன குடும்பம் பண்ணறாங்களோ” என்றவர் எனக்கு என்னமோ மாதிரி இருக்கு. நா.. படுக்குறேன் என்றவர் தூங்கிவிட்டார்.      
“மழை அடித்து ஓய்ந்தது போல் இருந்தது விஸ்வநாதனுக்கு. ‘இவளுக்காக தான இந்த கல்யாணம். என்னவே இதுக்கும் இவளுக்கும் சம்பந்தம் இல்லாத்த போல பேசுறா, இதுல பாவம் அந்த புள்ளங்கள  வேற திட்டுறா. என்றவர் ஆனாலும் இவ இப்படி இருக்குறதால தான் என்னோட குடும்பம் இப்பவும் நல்லா இருக்கு’ என நினைத்தவர் போர்வையை நன்றாக போர்த்தி சென்றார்.”
“விஷ்வாவும், வினய்யும் எதிர் எதிராக அமர்ந்து இருக்க, முதலில் பேச்சை யார் ஆரம்பிப்பது?? என்ற தயக்கம் இருந்தது இருவருக்கும்” வினய்க்கு..  விஷ்வாவின் மீது கோபமே. 
“தன் தந்தை செய்ததிற்கு பழி வாங்க துளசியை பகடையாக உருடினார்களோ என்று”. அரவிந்தன், “விஷ்வாவின் சம்மதமும் இல்லை என்று சொன்ன பின்பு தான் தான் நினைத்து தவறு என்று” புரிந்தது அதனாலேயே இந்த அமைதி. 
“சாரி அத்தான்” என வினயே ஆரம்பிக்க, விஷ்வா எதுக்கு சாரி??  இல்ல அத்தான், நா… உங்களை தப்பா.. எங்க அப்பாவுக்காக துளசிய என தப்பா யோசிச்சு என வார்த்தை இல்லாமல் தடுமாற., 
 
“விஷ்வாவிற்கு நன்கு தெரியும் துளசியின் மீதான வினயின் பாசம்.  அதனால் அவனின் சந்தேகம் விஷ்வாவை பெரிதாக பாதிக்க வில்லை.” 
வினய்யை தோளோடு அனைத்தவன் “எனக்கு புரியுது வினய், துளசி இப்ப என்னோட மனைவி.. அவ சந்தோசத்துக்கு எந்த குறையும் இல்லாமா நா.. பாத்துப்பேன்” என்றவன் முகத்தில் இருந்த புன்னகையே வினய்க்கு சொல்லியது விஷ்வாவிற்கு துளசியின் மீது உள்ள விருப்பத்தை.   
வினய் ஏதோ கேட்க வர, என்ன மாமனும் மச்சானும் ஒன்னா ஆகிட்டீங்களா என வந்தான் அரவிந்த் உடன் ஸ்ரீயும்.
விஷ்வா… “என்னடா உள்ள பத்தி எறியுது போல, இந்தா தண்ணி ஊத்தி அணைச்சுக்க” என்று தண்ணீர் பாட்டிலை தூக்கி அரவிந்தன் மீது எரிந்தான் விஷ்வா.
அரவிந்தன், தன் மீது அதை படாமல் பிடித்தவன், “எனக்கு எதுக்குடா எரியனும். ஏற்கனவே இங்க பத்திக்கிட்டு எரிஞ்சதே இப்பதான் அணைஞ்சு இருக்கு!!” 
“கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலன்னு செல்லுற நீ!! சொன்னா ஒத்துக்க வேண்டியது தான்.” 
“நீ.. சொல்லுறது சரிதான் மாப்பு. ஆனா.. சண்டைன்னு வந்தா என்ன கோத்து விட்டுட்டு, நீங்க எல்லாம் தனிதனியா நிக்குறீங்க.  எத்தன சட்டையடா மாத்துறது” என்றவன் பேசும் போதே அத்தான்.. என கயலின் குரல் வந்தது. 
“டேய் ஸ்ரீ.. போடா புது சட்டைய எடுத்துட்டுவா!” என்றவன் படி இறங்க போக அதற்குள் கயல் மேலே வந்து இருந்தாள். 
“சிறிதாக மேடிட்ட வயிற்றில் கையை வைத்து  மேல்மூச்சு வாங்க நின்றிருந்தவளை பார்த்தவன், உன்கிட்ட எத்தன முறை  சொன்னாலும் கேக்க மாட்டியா கயல்.  இப்ப எதுக்கு மேல வந்த??” என்றவன் பின்னால் கயல் எட்டி பார்த்தாள். 
இப்போது அவளுக்கு நான்காம் மாதம் ஆரம்பம்,  அதிலும் இரட்டை பிள்ளைகள் அதிக கவனம் வேண்டும் என்பதால் அவளை படியேற கூடாது என்று இருந்தான் அரவிந்த்.
கயல் கேட்காமல் படியேறி வரவும் இந்த கோபம் அரவிந்தனுக்கு. விஷ்வா வந்தவன் “என்ன வேணும் கயல்??”  நாங்க தான் கீழ வர்றோம் இல்ல, அதுகுள்ள மேல வரனுமா என கடிந்தவன், பக்கத்தில் இருந்த சேரை இழுத்து போட்டு அவளை அமர சொன்னான்.  
“வேணாண்ணா” என்றவள் அத்தான் வாங்க.. உங்க கிட்ட ஒரு விசயம் கேக்கனும், என்று  பக்கத்தில் இருந்த அறைக்கு சென்றாள். 
அவள் அறையினுள் நுழைந்ததும் கோபம் மறந்தவன், “அடியே ஜில்லு.. இத முன்னாடியே மாமன் கிட்ட சொன்னா என்ன?? என கட்டிபிடிக்க ஐயோ… விடுங்க அத்தான். நா வந்ததே வேற விசயமா” என்றவளை பேசவிடாமல் முதல்ல இத முடிப்போம் அப்பறமா நீ… வந்த விசயத்த சொல்லு என்றவன் அவளைசிறை பிடிக்க,  அவனின் தீண்டலில் நிலை மறந்தவள் அவனிடம் இளகி நிற்க,  அவளின் இணக்கம் இவனுக்கு சாதகம் ஆனது.
“வெளியில் கேட்ட சத்ததில் தன் நிலை பெற்றவள் அரவிந்தனை தள்ளினாள். ஜில்லு… என அரவிந்தன் சிணுங்க, இதெல்லாம் அப்பறமா வச்சுக்கலாம். இப்ப அண்ணனுக்கும்.. துளசிக்கும் இன்னிக்கு விசேசத்துக்கு  ஏற்பாடு செய்யனும் அத செல்ல வந்தா, நீங்க… இங்க என்றவளை மீண்டும் பிடித்தவன், முதல்ல நா.. கொண்டாடுறேன்டி அப்பறமா உங்க அண்ணனுக்கு பண்ணலாம்” என்றவனை வேகமாக பிடித்து தள்ளினாள். 
“அவனுக்கு வச்சாலும் இன்னும்  அவன் கொண்டாட ஒரு வருசமாவது ஆகும் ஜில்லு” என்றவனை இன்னும் முறைத்து பார்க்க, இப்பதாண்டி உங்க அண்ணன்கிட்ட சென்னோன் புது சட்டைக்கு!! அது உனக்கு பொருக்கலையா?? அவள் பாவனையை மாற்றாமல் இருக்க நீ.. முறைச்சான் தான் அழகு ஜில்லு என கொஞ்சினான்.” 
இப்ப “நீங்க அண்ணாகிட்ட போசலன்னா இன்னும் ஒரு வாரம் இல்ல மாசம் ஆனாலும் எதுவும் கிடையாது செல்லிட்டேன்” என்றவள் வெளியே போக கட்டிலில் தெப்பென விழுந்தான். ‘ஏற்கனவே மாச கணக்கு தான் அதையும் கெடுத்துக்காதடா அரவிந்தா. சட்டைய மாத்தி மாத்தி போட்டாலும் பரவயில்லை’ என்றவன் தன் நிலையை நினைத்து உச்சு கொட்டிய படி வெளியே வந்தான். 
“கயல் கோபமாக போவதையும், அரவிந்தன் உச்சு கொட்டிய படி வருவதையும் ஸ்ரீ.. பார்த்தவன் என்ன அத்தான் அடி பலமா??” என கேட்க. ஆமாண்டா வேண்ணுன்னா நீயும் டிரை பண்ணனேன்.  எதுக்கு?? சிங்கம் மாதிரி இருக்குற நான் அசிங்கமா ஆகவா!! என்றவனை அசிங்கமா இருந்தாலும் சிங்கம்தான்டா” எங்கடா உங்க பாசமலர்?? கேட்டான் அரவிந்த்.
“ஃபோன் என்றவன் பால்கணியை காட்ட, விஷ்வாவிடம் சென்றான் அரவிந்த்.  பேசுபவனை பார்த்த படி கயல் கூறியதை எப்படி இவனிடம் ஆரம்பிக்க??” என  சிந்தனையில் இருந்தவனை., 
விஷ்வா, “ஏதாதவது பிரச்சனையா அர்வி?” கயல் கோபமா போறா. 
இல்ல ராஜா.. இன்னிக்கு நீயும்,   துளசியும் கோயிலுக்கு போக ஏற்பாடு பண்ண சொல்லிட்டு போறா, கூடவே அவளும்  வர்றாளாம், நா வேண்ணா சொன்னனேன், அதுக்கு கோபமா போறா. விஷ்வா, விசயம்  தெரிந்தால் ஒத்து கொள்ள மாட்டான் என்று தான் கோவிலுக்கு அனுப்பி வைத்தான். சரி நீ.. ரெடியாகு நான் போயி  கயலை பாத்துட்டு வர்றேன் என்றவன் கீழே சென்று விட்டான். 

Advertisement