Advertisement

அவனுக்கு தெரியாதா இவளுக்கு டிவி பார்ப்பதென்பதே பிடிக்காது. நெட்டை கூட தேவையில்லாமல் உபயோகம் செய்ய மாட்டாள். ஆனாலும் இவன் அவளை நீ கண்டதும் பார்த்து கெட்டு போய்ட்ட என்று சொல்லித்தான் வம்பிழுப்பான்.
இவன் அவளைப்பற்றி எண்ணிக் கொண்டிருக்க அவன் கைபேசி ஒலியெழுப்பியது. அந்த எண்ணை பார்த்ததும் எடுத்தவன் “சொல்லுடா விஸ்வா” என்றான்.
“நீ இங்க எப்போ வர்றே??”
“எங்க மேரேஜ் முடியவும் அவளையும் கூட்டிட்டு வர்றேனே…”
“ஏன் மேரேஜ் முன்னாடி சேர்ந்து வரக்கூடாதா??”
“வரலாம் தான் லவ் சொல்றதுக்கு முன்னாடின்னா வந்திருப்பேன். இப்போ வீட்டுக்கு வேற விஷயம் தெரிஞ்சு போச்சா, கல்யாணம் முடிச்சுட்டு எங்க வேணா போன்னு இன்னும் பழைய காலம் மாதிரி பேசிட்டு இருக்காங்க…”
“எங்க கிழவி வேற ஆபீஸ்க்கு ஒண்ணா போறதுக்கே புலம்புதுன்னா பார்த்துக்கோ…” என்றான் விஜய்.
“சரி சரி எப்போ கல்யாணம்ன்னு சொல்லு…”
“இன்னும் ஒரு மாசம் இருக்கு… கல்யாணம் திருப்பதியில தான். அம்மாவுக்கு வேண்டுதல் அதான் அங்க மேரேஜ் இங்க ரிஷப்ஷன்”
“நீ கண்டிப்பா ரெண்டுத்துக்குமே வரணும் உன் வைப்போட”
“நிச்சயம் வந்திடுவோம்டா. பட் எனக்கு நீ இன்னும் வந்து வீட்டை பார்க்கலைன்னு இருக்கு. இங்க எல்லாரும் வந்தாங்க, நீ வந்திருக்கணும்” என்றான் விஸ்வா.
“ப்ளீஸ் எனக்காக வாயேன் ஒன் டைம்”
“சரி வர்றேன்… ஆமா நீ காஞ்சனாகிட்ட எல்லாம் பேசிட்டியா??”
“ஹ்ம்ம் பேசிட்டேன்டா…”
“எப்போடா இதை சொல்லவே இல்லை நீ என்கிட்ட”
“அது எங்க பர்ஸ்ட் நைட் முடிஞ்ச அன்னைக்கே பேசிட்டேன்”
“என்னது பர்ஸ்ட் நைட் முடிஞ்சிருச்சா?? என்னடா ஷாக் மேல ஷாக் கொடுக்கறே எனக்கு”
“நீ ஷாக்கை குறை முதல்ல…”
“சரி சரி என்ன நடந்துச்சுன்னு சொல்லு” என்று விஜய் கதை கேட்க தயாரானான்.
“டேய் அதெல்லாமா சொல்லுவாங்க…”
“அடேய் நண்பா நான் என்ன கேட்டேன், நீ எதை புரிஞ்சுக்கற. நண்பனா வாச்சதும் சரியில்லை, லவ் பண்ணதும் சரியில்லை” என்று புலம்பினான் அவன்.
“டேய் சங்கவியை ஏன்டா அப்படி சொல்றே?? ரொம்ப நல்ல பொண்ணுடா அவ…”
“யாரு இல்லைன்னு சொன்னா, ஆனா அவகிட்ட மாட்டிக்கிட்டு நான் படுறபாடு அதெல்லாம் வெளிய சொல்ல முடியாது”
“எங்க கதையை விடு இப்போ உன் கதையை நீ சொல்லு…”
——————–
“காஞ்ச்சு…”
“ஹ்ம்ம்”
“தூக்கம் வருதா??”
“இல்லை…”
“அப்போ மறுபடியும் பாட்டை போடவா”
“ஹான் ஆளை விடுங்க” என்றாள் இவள்.
“உன்னை விட மாட்டேன் காஞ்ச்சு எப்பவும்”
“எனக்கு உன்கிட்ட பேசணும்”
“இப்போ நான் பிசி கேட்கற மூட்ல இல்லை…”
“திரும்பவும் ஒரு நாள் நீயா வந்து கேட்பே அப்போ நான் இதே சொல்லுவேன் பரவாயில்லையா உனக்கு” என்றான் அவன்.
“வேணாம் வேணாம் பேசலாம்” என்றவள் இப்போது சீரியஸ் மோடுக்கு சென்றாள்.
“சரி எழுந்திரு” என்று அவளை எழுப்பினான்.
“எங்கே??”
“டேரஸ்க்கு”
“இப்போவா??”
“ஆமா…”
“மணி என்ன இருக்கும்??”
“நாம ஏழு மணிக்கெல்லாம் படுக்க வந்தாச்சு. இப்போ ஒரு பன்னிரண்டு பன்னிரண்டரை மணி இருக்கலாம்” என்று தோராயமாய் அவன் சொல்ல இவள் மொபைலை எடுத்து பார்க்க அவன் சொன்ன நேரம் தான் ஆனது.
அவன் கைக்கொடுக்க இவளும் கரம் கொடுத்தாள். மொட்டை மாடியின் கதவை திறக்க உஸ்சென்ற சத்தம் காதில் கேட்டது.
இன்னும் இரண்டொரு நாளில் முழு நிலவு நாள் என்பதால் முழுமையடையாத அந்நிலவு அங்கு தான் பவனி வந்தது.
கடலலையை வெள்ளியாய் உருக்கி வார்த்தது போல பளபளக்கச் செய்து கொண்டிருந்தது. இருவரும் மொட்டை மாடி சுவற்றில் சாய்ந்து நின்று அதை தான் பார்த்துக் கொண்டிருந்தனர் எந்த பேச்சுமில்லை.
“பேசணும்ன்னு சொன்னீங்க??”
“நீ கூட தானே சொன்னே??”
“உங்களுக்கு என் மேல கோவமில்லையா??”
“அன்னைக்கே சொன்னேன்ல எனக்கு கோவமில்லை வருத்தம் தான்னு… கஷ்டமா இருந்துச்சு, ஒரே நாள்ல அத்தனையும் என்னால பேஸ் பண்ண முடியலை, ஐ பீல் சோ ஹார்ட்”
“என்னோட அன்னைக்கு மனநிலை அது. எல்லாரும் என்கிட்ட நடிச்சிருக்காங்கன்னு நினைக்க நினைக்க எனக்குள்ள ஆற்றாமை தான் அதிகமாச்சு”
“என் மேலே உயிரா இருக்க அம்மா, நான் உயிரை வைச்சிருந்த நீ, பாசம் வைச்ச என்னோட சொந்தங்கள் எல்லாரும் ஏதோவொரு விதத்துல என்கிட்ட நடிச்சாங்கன்னு கேள்விப்பட்டப்போ எனக்கு எப்படி இருந்திருக்கும் சொல்லு…”
“உங்கப்பாவை எல்லாரும் ஏமாத்திட்டாங்க அப்படின்னு உனக்கு இருந்த மனநிலை தானே எனக்கும் இருந்திருக்கும். இங்க பாதிப்பட்டதே நான்னும் போது என்னோட நிலைமை உனக்கு புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்”
“இல்லை நான் உங்களை கஷ்டப்படுத்தணும்ன்னு சொல்லலை விஷ்வா. உண்மை வெளிய வரணும்ன்னு தான் நினைச்சேன்”
“அதுக்காக நீயும் நடிக்க தானே செஞ்சே, நீ சொல்லியிருக்கலாம்ல என்கிட்ட” என்று அவன் சொன்ன போது அவளுக்கு வலித்தது.
“காதல்ன்னு சொல்லி நடிச்சிருக்க வேணாம்” என்று அவன் எங்கோ பார்த்து சொன்ன போது இமையோரம் நனைந்து கண்ணீர் பெருகியது.
“உன்னை ஹர்ட் பண்ண சொல்லலை. பட் அது உண்மை தானே” என்றான் இப்போது அவளை பார்த்து.
“யார் சொன்னா உங்களுக்கு?? நான் உங்களை லவ் பண்ணலைன்னு” என்றாள் அழுகையோடு.
“அப்போ நீ நடிக்கலைன்னு சொல்றியா?? நான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன்னு சொல்றியா??”
“நான் நடிச்சது உண்மை தான். நீங்க தப்பா புரிஞ்சுகிட்டதும் உண்மை தான். எனக்கு உங்களை என்னோட சின்ன வயசுல இருந்தே பிடிக்கும், தெரியுமா உங்களுக்கு”
அவளின் பேச்சில் கண்களை கூர்மையாக்கி அவள் விழிகளோடு கலந்தான் அவன்.
அவளும் அவன் விழியை நேருக்கு நேராய் நோக்கித் தான் சொன்னாள் “உங்களை நான் பார்த்ததேயில்லை. ஆனா உங்க பேரை கேட்டிருக்கேன், பாட்டியோட வாய்ல இருந்து உங்க பேரு அடிக்கடி வந்திட்டே இருக்கும்”
“உங்க பேரு வித்தியாசமா இருந்ததால என் மனசுல பதிஞ்சு போச்சு அந்த வயசுலேயே. அப்புறம் வளர வளர நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன்”
“அப்பா சாகும் போது என்கிட்ட கேட்டது உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு… அப்போவே முடிவு பண்ணிட்டேன், நீங்க தான் எனக்குன்னு”
“அதுவரைக்கும் மனசுக்குள்ள எங்கயோ ஒரு மூலையில இருந்த உங்க பேரை தினம் தினம் வாய்விட்டு சொன்னேன்”
“நம்ம குடும்பத்துல நடந்த இழப்பை என்னால தாங்க முடியலை. அப்பா இருந்திருந்தா நான் இப்படியெல்லாம் பண்ணதை அவங்க விரும்பியிருக்க மாட்டாங்க…”
“ஆனா எனக்கு இதுக்கெல்லாம் ஒரு வழி செய்யணும்ன்னு தோணிச்சு. உங்களை வைச்சே காய் நகர்த்தணும்ன்னு நினைச்சேன், அப்படி தான் உங்களை தேடி வந்தேன்…”
“அப்பவும் கூட ஏதாவதொரு வழியில தான் பிரச்சனையை ஆரம்பிக்கணும்ன்னு இருந்தேன். உங்க அண்ணன் பண்ண வேலையால நான் அந்த கடையில இருந்து வெளியேற வேண்டிய சூழல் அப்போ…”
“என்ன பண்ணான் அவன்??”
“அதெல்லாம் இப்போ பேசவேண்டியதில்லை”
“என்னன்னு சொல்லப் போறியா இல்லையா??” என்று அவன் கேட்க இவள் கார்த்திக் தன்னிடம் நடந்த கொண்ட முறையை சொல்ல இவன் கண்கள் சிவந்தது கோபத்தில்.
“ப்ளீஸ் விஷ்வா நான் அதுக்கெல்லாம் சேர்த்து அவங்களுக்கு என்ன கொடுக்கணுமோ கொடுத்திட்டேன் அப்போவே” என்றவள் தொடர்ந்தாள்.
“அப்புறம் தான் உங்க பெரியப்பாகிட்ட பேசி வேற கடைக்கு என்னை மாத்தச் சொன்னேன். அப்படித்தான் நீங்க இருந்த இடத்துக்கு நான் வந்தது”
“அதுக்கு அப்புறம் தான் உங்களை வைச்சே நான் பிரச்சனை செய்ய ஆரம்பிச்சேன்… முதல்ல கடைக்குள்ள நுழையறது தான் என்னோட பிளான். மத்ததெல்லாம் அந்த நேரத்துல என்ன தோணுச்சோ அதைத்தான் செஞ்சேன்…”
“உங்களோட டிசைன்ஸ் பத்தி முதல்லையே கேள்வி பட்டிருந்தேன். அதை வைச்சே ஆரம்பிக்கலாம்ன்னு அப்புறம் தான் ஐடியா வந்துச்சு”
“நம்ம கல்யாணம் நடக்குதோ இல்லையோ சில விஷயங்களை உங்களுக்கு அதுக்கு முன்னாடியே தெளிவுப்படுத்தணும்ன்னு நினைச்சேன்…”
“ஆனா நீங்க என்னை விரும்புவீங்கன்னு நினைச்சே பார்க்கலை நானு. அன்னைக்கு நீங்க லவ் சொன்னப்போ வீட்டுக்கு போய் அவ்வளவு சந்தோசப்பட்டேன்…”
“ஆனாலும் நான் நினைச்சதை முடிக்கணும்ன்னு மனசுக்குள்ள ஒரு எண்ணம். உங்களை விரும்பற மாதிரி நடிக்க வேண்டிய சூழல் அப்போ”
“அப்புறம் நடந்ததெல்லாம் தான் உங்களுக்கே தெரியுமே. ஆனா நம்ம கல்யாணம் நான் எதிர்பார்க்கலை, இந்த லூசு அமுதன் அத்தை பேச்சை கேட்டுட்டு என்னென்னவோ பண்ணி நம்ம கல்யாணத்தை நடத்திட்டான்…”
“அதனால எனக்கும் அவனுக்கும் வீட்டில அவ்வளவு பெரிய சண்டை. பாட்டி சொல்லவும் தான் நான் கல்யாணத்துக்கே சம்மதிச்சேன்…”
விஸ்வா அவள் சொல்வதை பொறுமையாய் கேட்டுக் கொண்டிருந்தான். “ஆனா காஞ்சனா இதை உனக்கு என்கிட்ட முன்னாடியே சொல்லணும்ன்னு எங்கயும் தோணவேயில்லையா…” என்றான் வருத்தமாய்.
“அப்போ உங்களுக்கு என்னை பத்தி தெரியுமா சொல்லுங்க”
“தெரியாது…”
“அப்புறம் நான் வந்து சொன்னா நீங்க நம்பியிருப்பீங்களா. நிச்சயம் நம்பிருக்க மாட்டீங்க, நம்மை சுத்தி உள்ளவங்க தான் நல்லவங்கன்னு நீங்க இருந்த காலம் அது…”
“என்னை ஏமாளின்னு சொல்றியா??”
“இல்லை ஏமாற்றப்பட்டீங்கன்னு சொல்ல வந்தேன்”
சில நொடிகள் அங்கு அமைதி நிலவியது. கடலலையின் ஓசை மட்டுமே செவிகளை நிறைத்தது.
“விஷ்வா” என்று அலைகடலை வெறித்திருந்தவனை தன் புறம் திருப்பினாள். அவன் கண்களோடு கலந்தவள் “நான் உங்களை மட்டும் தான் விஸ்வா விரும்பறேன், இது பொய்யில்லை… இந்த இயற்கைக்கு முன்னாடி நிஜம் சொல்றேன் என்னை நம்புங்க விஷ்வா” என்றவள் அவன் அதரத்தில் தன் அதரத்தை பொருத்தினாள்.

Advertisement