Advertisement

31
“விஜய் இன்னைக்கு காஜல் வர்றேன்னு சொல்லியிருக்கா ஆபீஸ்க்கு. என்னோட டிரெஸ்ஸிங் நல்லா இருக்கா” என்று தன் நண்பனை பார்த்துக் கேட்க காஞ்சனாவின் முகம் மொத்தமாய் வாடியது.
விஜய் தான் பல்லைக் கடித்தான் விஸ்வாவை பார்த்து. ‘இப்போ இது தேவையா என்பது போல்’ அவனோ இவனை பார்த்து கண்ணடித்து வைக்க தலையில் அடித்துக் கொண்டான்.
விஸ்வா அவனை நெருங்கி வந்து “மச்சான் என்ன செய்வியோ ஏதோ செய்வியோ தெரியாது. இன்னைக்கு அவ நம்ம ஆபீஸ்க்கு வரணும்” என்று காதை கடித்தான் அவன்.
“டேய் நீ தானேடா பேசி பேசி வரவிடாம பண்ணுறே??”
“எனக்கு அதெல்லாம் தெரியாது, அவ வரணும்” என்று சொல்ல விஜய் அவனை முறைத்தான். விஜய் காஞ்சனாவை சமாதானப்படுத்தி அலுவலகம் அழைத்துச் செல்ல முயற்சி செய்தான்.
“மிசஸ் காஞ்சனா நீங்க இன்னைக்கு முழு நாளும் அங்க இருக்க தேவையில்லை. கொஞ்ச நேரம் சும்மா வந்து அப்படியே இருக்கலாமே”
“சங்கவியும் அங்க தான் இருக்கா, உங்களுக்கும் அவளோட பொழுது போகும் கொஞ்சம். உங்க வேலையை நீங்க அங்க இருந்து கூட செய்யலாம், உங்களுக்கு எந்த தொல்லையும் வராம நான் பார்த்துக்கறேன்” என்று தன் நண்பனை ஓரக்கண்ணில் பார்த்தவாறே சொன்னான் அவன்.
“ஓகே நான் எங்க வேணாலும் வர்றேன் ஆனா ஒரு சின்ன ரெக்வஸ்ட்??” என்றாள் விஜயை பார்த்து.
“சொல்லுங்க”
“தயவு செஞ்சு என் பேரை நீட்டி முழக்கி மிசஸ் காஞ்சனான்னு நீங்க கூப்பிடாம இருந்தா போதும்” என்று சொல்ல விஸ்வா சிரிப்பை மென்றுக் கொண்டே நகர்ந்தான் அங்கிருந்து.
“ஹா சரி இனிமே அப்படிக் கூப்பிடலை போதுமா. அப்போ நாம கிளம்பலாமா காஞ்சனா” என்றான் அவளைப் பார்த்து.
“ஹ்ம்ம் போகலாம்”
“தேங்க்ஸ்”
“அது எதுக்கு வேஸ்ட் பண்றீங்க??”
“எதை??”
“தேங்க்ஸ் சொல்லி”
‘ஷப்பா புருஷனும் பொண்டாட்டியும் என்னை கொல்றாங்களே, ஓ! காட்! இதுக்கு இல்லையா ஒரு எண்டு, ப்ளீஸ் சேவ் மீ… நான் பாவம்’ என்று மனதுக்குள் புலம்பத்தான் முடிந்தது அவனால்.
இவர்கள் வருவதற்குள் விஸ்வா காரை எடுத்து வந்து வெளியில் நின்றிருந்தான். சில முன்னேற்பாடுகள் வேறு அவன் செய்ய வேண்டியிருக்கவே அவர்களை விட்டு வந்திருந்தான்.
அன்று விஸ்வாவும் அவர்களுடனே வந்தான் அலுவலகத்திற்கு. அவர்கள் இருவரும் முன்னால் அமர்ந்திருக்க இவள் பின்னால் ஏறி இருந்தாள்.
விஸ்வாவை அவள் நிமிர்ந்தும் பார்க்கவில்லை. ஆனால் அவனுக்கு பிடித்த நிறமென்று அவன் முன்பொருமுறை சொல்லியிருந்த ஆகாய நீலத்தில் காட்டன் புடவையொன்றை உடுத்தியிருந்தாள்.
அவன் பார்க்கவென்றே அலங்கரித்து தான் வந்திருந்தாள். முதல் நாள் சங்கவி வகிட்டில் வைத்த குங்குமத்தை பற்றி சொன்ன போது அவனின் பார்வை தன் மீது இருந்ததை பார்க்காமலே அவளால் உணர முடிந்திருந்தது.
இன்றும் அதே போல் தான் வைத்திருந்தாள். அவன் தான் இன்னமும் அவளை பார்க்கவில்லையே என்ற கவலையுடன் முன்னே பார்ப்பதும் பின் வெளியே பார்ப்பதும் என்று தவித்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கெங்கே தெரியப் போகிறது வண்டி ஓட்டுகிறேன் என்று அவன் மிரர் வழியாய் அவளை பார்த்து வருவது. அதெல்லாம் அவள் கவனிக்கவில்லை அவன் தன்னை பார்க்க வேண்டும் என்றே மனதினில் உருப்போட்டுக் கொண்டு வந்தாள்.
விஸ்வாவின் பாடோ திண்டாட்டமாய் இருந்தது. ஏனோ இன்று அவளை பார்த்ததில் இருந்து இம்சை செய்துக் கொண்டிருக்கிறாள் அவள். 
தனக்கு பிடித்த நிறம் என்று ஒரு காலத்தில் தான் சொல்லியிருந்ததை நினைவு வைத்திருந்து இன்று அந்த நிறத்தில் சேலை உடுத்தியிருக்கிறாள்.
பார்க்கவே அப்படியிருந்தாள், ஆண்டவன் நிஜமாகவே இவளுக்கு திருஷ்டியாய் தான் இப்படி ஒரு குறையை கொடுத்துவிட்டான் என்றே தோன்றியது அவனுக்கு.
நெற்றி நிறைய குங்குமம் அம்சமாய் தன்னருகில் இருக்கிறாள் என்று அவளை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான். மனம் அவள் அருகாமையை இன்னும் அதிகமாய் வேண்டியது.
அலுவலகம் வந்துவிட “டேய் சாவியை கொடு நான் பார்க் பண்ணிட்டு வர்றேன். நீ இங்கவே இறங்கிக்கோ, நான் டிக்கில இருக்க என்னோட திங்க்ஸ் எல்லாம் எடுத்திட்டு வரணும்” என்று அவர்களுக்கு தனிமை கொடுத்து விலகினான் விஜய்.
“என்னோட வருவீங்களா?? இல்லை அவன் வர்ற வரைக்கு காத்திட்டு இருக்க போறீங்களா??” என்றான் இவளைப் பார்த்து.
“வர்றேன்” என்று வாய் வழியாய் சொன்னவள் மனதினுள் ‘நீங்க கூப்பிட தான் விஷ்வா காத்திட்டு இருக்கேன்…’ என்று சொல்லிக் கொண்டாள்.
லிப்ட்டில் பயணிக்கும் போது அவன் அவளின் புறம் திரும்பாமல் வேடிக்கை பார்ப்பது போல செய்தாலும் பக்கவாட்டில் இருந்த கண்ணாடியின் வழியே தன் முதுகுக்கு பின்னிருந்தவள் தன்னையே பார்ப்பதை இவனும் கவனித்துக் கொண்டுதானிருந்தான்.
அவளை அழைத்துச் சென்று விஜயின் அலுவலகத்தில் விட்டுவிட்டு அவன் தன் அலுவலகத்திற்கு சென்றுவிட்டான்.
பத்து நிமிடங்களுக்கு பின் விஜய் அங்கு வந்து சேர்ந்தான். “சாரி கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. எங்கே அவன் உங்களை இங்க விட்டுட்டு போய்ட்டானா??”
“ஹ்ம்ம் என்னை விட்டுட்டு அவர் மட்டும் தனியா போயிட்டாரு…” என்றாள் இரு வேறு பொருளில்.
‘அம்மாடியோவ் இவங்க டபுள் மீனிங்ல பேசுறாங்க டோய்!! அடேய் விஸ்வா!! ஏன்டா என்னை தனியா சிக்க வைச்சுட்டு போறே’ என்று விஜய் புலம்பிக் கொண்டிருந்த வேளையில் அவன் கைபேசி ஒலியெழுப்பியது.
எடுத்துப்பார்க்க அவனை சிக்கலில் சிக்க வைத்தவன் தான் அழைத்திருந்தது. போனை எடுத்து “ஹ்ம்ம் சொல்லு” என்று பேசிக்கொண்டே அறையை விட்டு வெளியில் வந்தவன் “இப்போ எதுக்குடா கூப்பிட்டே??”
“காஞ்ச்சுவை மேல கூட்டிட்டு வாயேன்”
“ஏன் நீயே கூட்டிட்டு போயிருக்க வேண்டியது தானே??”
“அது அவ்வளவு சிறப்பா இருக்காதுடா மச்சான். அப்புறம் அவ ஈஸியா கண்டுப்பிடிச்சிடுவா”
“உன் அறிவுல தீயை வைக்க, இப்போ மட்டும் அவ நம்பிட்ட மாதிரி. உங்களை இங்க தனியா விட்டுட்டு கிளம்பிட்டானான்னு தான் கேட்டேன். அதுக்கு நீ தனியா விட்டுட்டு போயிட்டன்னு டபுள் மீனிங்ல சொல்றாங்க”
“போதும்டா இந்த ஹைடு அன் சீக் விளையாட்டு”
“இங்க ஒண்ணும் விளையாட்டு நடக்கலைடா. என்னோட வாழ்க்கை அதுல நான் விளையாட மாட்டேன்” என்றவனின் குரல் வெகு சீரியசாக இருந்தது.
“சரி நான் ஒரு ஒன் ஹவர்ல கூட்டிட்டு வர்றேன்…”
“இப்போவே வந்தா என்னவாம்”
“சங்கவி இன்னும் ஆபீஸ்க்கு வரலைடா. அவ சைட்டுக்கு போயிருக்கா தானே. அவ வரவும் வர்றேன். அங்கவே இன்னைக்கு பூரா இருக்க மாதிரி செய்யறேன் போதுமா”
“செம ஐடியாடா ஆனா இன்னைக்கு எனக்கு வெளிய போற வேலை கொஞ்சமிருக்கே”
“ஷப்பா சாவடிக்கறீங்கடா என்னை. ஆபீஸ்ன்னா வேலை இருக்கத்தான் செய்யும். வெளிய போயிட்டு வந்து பார்த்துக்கோ. இப்போ போனை வை, எனக்கு இன்னைக்கு நெறைய வேலை இருக்கு” என்றுவிட்டு விஜய் போனை வைத்துவிட்டான்.
மீண்டும் அந்த அறைக்குள் வந்தவன் “நெட் பாஸ்வோர்ட் போட்டுக் கொடுக்கறேன், நீங்க வொர்க் பண்ணிக்கோங்க…” என்றான்.
“அப்புறம் இன்னொன்னு சொல்லணும்ன்னு நினைச்சேன்”
“சொல்லுங்க விஜய்”
“இங்க என்னோட பிரண்ட்ஸ் கொஞ்ச பேரு இருக்காங்க. அவங்களுக்கு நான் உங்களை ரெபர் பண்ணலாமா. ரெண்டு பேரு வெட்டிங்க்கு தயாராகிட்டு இருக்காங்க. அவங்களுக்கு நீங்க புதுசா எதுவும் டிசைன்ஸ் செஞ்சு தர முடியுமா??”
“டிசைன்ஸ் தானே கண்டிப்பா செஞ்சு தர்றேன். என்னைவிட சிறப்பா செய்ய நிறைய பேரு இருக்காங்க, உங்களுக்கு அவங்கள்ள யாரையும் தெரியாதா” என்றாள் முதலில் போல் இரு அர்த்தத்தில்.
‘டேய் விஜய் உனக்கு வாய் கொஞ்சம் ஓவர்டா. உன் வாயை வைச்சுட்டு பேசாம இருக்காம எதாச்சும் கேட்டு அப்பப்போ பல்ப் வாங்குறதே உனக்கு வேலையா போச்சு’ என்று தன்னையே நொந்துக் கொண்டான் விஜய்.
“அப்படி யாரையும் தெரிஞ்சிருந்தா நான் ஏன் உங்களை இங்க வரவைக்க போறேன்”
“என்னை வரவைக்கச் சொல்லி உங்களுக்கு யாராச்சும் சொல்லியிருக்கலாம்” என்றுவிட்டு அவனையே கூர்ந்து பார்த்தாள்.
விஜய் தன் முகத்தை இயல்பாய் வைக்க படாதபாடு படவேண்டி இருந்தது. ‘டேய் எனக்கு பிரஷர் வந்திரும் போலடா இவங்களுக்கு பதில் சொல்லி, அடேய் நண்பா, உன்னை கொல்வேன்’ என்று ரஜினி பாட்டை தனக்கு தோதாய் மனதிற்குள் பாடி விஸ்வாவை திட்டிக் கொண்டிருந்தான்.
‘இவ்வளவு நேரம் நீங்க என்னை ஓட்டுனீங்கல்ல, இது என் டர்ன் நான் எப்படி ஓட்டுறேன்னு பாருங்க’ என்று மனதிற்குள் கருவியவன் “எஸ் சொன்னாங்க”
அவளுக்குள் பரபரப்பு உற்பத்தி ஆனது. அது யாரென்று விஜய் சொல்வான் என்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனோ அவள் லேப்டாப்பில் பாஸ்வோர்ட் போட்டுவிட்டு “சரிங்க காஞ்சனா நான் கிளம்பறேன்” என்றான்.
“ஒரு நிமிஷம்”
“சொல்லுங்க காஞ்சனா”
“இல்லை வந்து என்னை உங்களுக்கு யார் ரெபர் பண்ணாங்கன்னு தெரிஞ்சுக்கலாமா??”
“ஓ எஸ் தெரிஞ்சுக்கலாமே… உங்க டிசைன்ஸ் எல்லாம் நெட்ல பார்த்திட்டு சொன்னதே எங்கப்பா தான். இந்த சைட் பாரு நல்லா இருக்கு, என்ன ஏதுன்னு விசாரிச்சு வைன்னு என்கிட்ட சொன்னதே அவர் தான்” என்றுவிட்டு இதழோரம் சிரிப்பு தோன்ற அதை மறைத்துக்கொண்டே அவளை பார்த்தான்.
முகம் வாடிப் போனது அவளுக்கு. “ஓ!! அப்படியா!!” என்று தானிருந்தது அவள் பதில்.
“நேத்தே கேட்கணும்ன்னு நினைச்சேன். உங்களுக்கு தெரிஞ்ச டிசைன் செய்யற ஆளுங்களை எங்களுக்கு ரெபர் பண்ண முடியுமா??” என்றான் விஜய்.
“ஏன் உங்களுக்கு யாரையும் தெரியாதா??” என்றாள் மீண்டும் இருபொருளில்.
‘யாத்தே!! இவங்க விஸ்வா சொல்லியிருப்பான்னு நினைச்சு கேட்கறாங்க… இதுக்கெல்லாம் நீ சிக்கக் கூடாதுடா விஜய்’ என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு “உங்க வேலையில அதுவும் அடக்கம் ஆகும் தானே” என்று இவன் கிடுக்குப்பிடி போட்டான்.
“அதெப்படி அடக்கம் ஆகும், நான் டிசைன் மட்டும் தானே செஞ்சு தர்றேன்னு சொன்னேன்”
“இருந்தாலும் நீங்க அதை யாரு சிறப்பா பண்ணுவாங்கன்னு எங்களுக்கு ஒரு ரெபர் பண்ணலாமே அதுல எந்த தப்பும் இல்லையே”
“தப்பில்லையே” என்றவள் அவனிடம் மேலும் வம்பு வளர்க்க பிரியப்படவில்லை. எய்தவன் இருக்க அம்பை நோவானேன் என்று அமைதியானாள்.
“சரி நான் அவங்ககிட்ட பேசிட்டு சொல்றேன், நீங்க செலக்ட் பண்ண டிசைன்ஸ்ல சிலது எல்லாம் பாம்பே கட்டிங்க்ஸ் தான் தெரியும்ல. அதெல்லாம் இங்க இருக்க ஆளுங்களை வைச்சே நீங்க செய்யலாம்…”
“என்ன இருந்தாலும் மெஷின்ஸ் விட ஆளுங்க பார்த்து பார்த்து செய்யறதே ஒரு தனி அழகு தான்” என்று சேர்த்து சொன்னாள்.
“ஓகே தேங்க்ஸ்” என்றவன் அவன் கேபினை நோக்கிச் சென்றான். அவன் சென்றதும் அவள் தனித்துவிடப்பட்டாள் அந்த அறையில். சில நொடிகள் ஒரு மாதிரி வெறுப்பாயும் வெறுமையாயும் போவது போல் தோன்றினாலும் மடிக்கணினியை இயக்கி தன் வேலையில் முழ்கிய பின்னே நேரம் போவதை அவள் கவனித்திருக்கவில்லை.
ட்ராவல்ஸ்க்கு அழைத்து அவளின் பயணத்தை வேறு நாளைக்கு மாற்றச்சொல்லி சொன்னாள். அமுதனுக்கும் அழைத்து விபரம் உரைத்துவிட்டு சீட்டின் பின்னே சாய்ந்து சற்று கண்ணை மூடினாள்.
சில நொடி கழித்து சாய்ந்த வாக்கிலேயே இவள் கண்ணை திறக்க அறை வாயிலில் விஸ்வா இவளை பார்த்தவாறே நின்றிருந்தான்.
கண்ணை கசக்கி இவள் மீண்டும் பார்க்க அப்போதும் அவன் அங்கு தான் நின்றிருந்தான். “விஷ்வா எனக்கு தெரியும் நீங்க வந்திடுவீங்கன்னு என்னை தவிக்க விடுறது உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு தெரியும்” என்று வாய்விட்டு சொல்லிக் கொண்டே அவள் இருக்கையை விட்டு எழ “ஹலோ மேடம் ஆரம்பிச்சாச்சா மறுபடியும்”
“நான் உங்களை கூப்பிட வந்தேன், நீங்க தூங்கிட்டு இருந்தீங்க. எப்படி எழுப்பலாம்ன்னு நின்னு யோசிச்சுட்டு இருந்தேன், நீங்க பாட்டுக்கு கண்டதும் பேசிட்டு இருக்கீங்க” என்றான் அவன்.
“எதுக்கு நீங்க என்னை கூப்பிடணும்??”
“கூப்பிட வந்தது நானில்லை அந்த கடன்காரன் விஜய் தான். போன் வந்துச்சுன்னு நகர்ந்தான் நான் தனியா உங்ககிட்ட மாட்டிக்கிட்டேன்” என்றான் அலுத்துக் கொள்ளும் குரலில்.
அப்போது அறைக்குள் நுழைந்தான் விஜய். “காஞ்சனா கிளம்பலாமா??” என்றான் அவன் மொட்டையாய்.
“எங்கே??”

Advertisement