Advertisement

“உன் வாழ்க்கையை நீ வாழப்பாரு. உன் மாமாகிட்ட நீ அவரோட தங்கையை நல்லா பார்த்துப்பேன்னு நான் சொல்லியிருக்கேன். அதை பொய்யாக்கிடாத அமுதா. பாட்டி பாவம் வயசானவங்க அவங்களை யோசி…”
“நீ யோசிச்சியா முதல்ல. இந்த விளையாட்டு வேணாம்ன்னு நான் அப்போவே சொன்னனே நீ கேட்டியா??” என்றான் அமுதன்.
“அமுதா ப்ளீஸ், நடந்து முடிஞ்சதை பேசாத. ஏற்கனவே நான் ரொம்ப ரணப்பட்டு போயிருக்கேன். இதுக்கு மேல தாங்காது…” என்றாள்.
இதோ அவள் புறப்படும் நாளும் வந்தது. அமுதன் அவளுக்கு விமானத்தில் பதிவு செய்திருந்தான். இன்னும் சில மணி நேரத்தில் அவள் மும்பையில் இருப்பாள்.
ஏனோ அவளின் மனம் படபடப்பாய் உணர்ந்தது. நெஞ்சை பிடித்துக் கொண்டாள். அவளருகே வந்த அமுதன் “என்னக்கா செய்யுது??”
“ஒண்ணுமில்லை அமுதா…”
“என்னன்னு சொல்லுக்கா…”
“ஒண்ணுமில்லைடா என்னமோ ஒரு மாதிரியா இருக்கு. என்னன்னு சொல்லத் தெரியலை…”
“நீ எங்கயும் போக வேண்டாம்க்கா… இந்த மாதிரி பிசினஸ் நமக்கு வேற கிடைக்காதா சொல்லு…”
“அமுதா பேசாம இரு, அனவுன்ஸ்மென்ட் வேற வந்திடுச்சு… இப்போ போய் என்ன உளறல் நான் கிளம்பறேன், நீ சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பு…” என்று சொன்ன காஞ்சனா அவனுக்கு கையாட்டி உள்ளே நுழைந்தாள்.
விமானத்தில் ஏறி அமர்ந்தவளுக்கு விஸ்வாவும் அவளும் திருமணம் முடித்து வந்த அந்த தினத்தை நினைவுப்படுத்தியது.
‘விஸ்வா எங்க இருங்கீங்க?? விஸ்வா ப்ளீஸ் வந்திடுங்களேன்…’
‘நீங்க என்கிட்ட ஒரு கேள்வி கேட்டீங்க அதுக்கு நான் தினமும் உங்ககிட்ட மனசார பதில் சொல்லிட்டு இருக்கேன் விஸ்வா. அது உங்களுக்கு கேட்கலையா…’
‘நான் நேர்ல சொன்னாத்தான் நம்புவீங்களா. ப்ளீஸ் என் கண்ணு முன்னால வாங்க விஸ்வா…’ என்று எப்போதும் போல் அப்போதும் அவனுடன் மனதார பேசிக் கொண்டிருந்தாள் அவள்.
“எஸ் ஐ லவ் திஸ் இடியட், ஐ லவ் திஸ் லவபிள் இடியட்” என்ற அந்த பாடல் இப்போதும் அவள் செவிகளை நிறைத்தது.
இந்த வார்த்தையை தான் அவள் விஸ்வாவிடம் சொல்ல ஆவலாகக் காத்திருக்கிறாள். ப்ளீஸ் பாஸ் யூவர் சீட் பெல்ட் என்று அனவுன்ஸ்மென்ட் வரவும் அவசரமாய் அதை மாட்டினாள்.
விமானம் மெதுவாய் தரையிறங்கியது. தன் பேக்கை எடுத்துக்கொண்டு சில நிமிடங்களில் வெளியில் வந்தவளுக்கு அந்த உலகம் புதிதாகவே தெரிந்தது.
இதுவரை சென்னை விமான நிலையத்தையும் திருவனந்தபுரம் விமான நிலையத்தையுமே பார்த்திருந்தவளுக்கு மும்பை விமான நிலையம் புதிதாகத் தானிருந்தது.
தமிழை அங்கு கேட்க முடியவில்லை. சலசலவென்ற ஹிந்தி மொழி தான் காதில் விழுந்து வைத்தது. ‘ஷப்பா இப்போவே கண்ணைக் கட்டுதே மொமென்ட் தான்’ அவளுக்கு.
வெளியில் வந்து கைபேசியை ஆன் செய்திருக்க அதற்குள் ஒரு அழைப்பு எடுத்து காதில் வைக்க “ஹலோ நான் தான் பேசறேன்ங்க…”
“சொல்லுங்க…”
“எங்க இருக்கீங்க வெளிய வந்தாச்சா??” என்றது எதிர்முனை.
“எஸ் வந்திட்டே இருக்கேன்…”

“வெளிய வந்து ரைட் சைடு நில்லுங்க இப்போ ஆள் வந்திடும்…” என்று சொல்லி போனை வைத்தது மறுமுனை.
“யார் வருவாங்கன்னு சொல்லாமலே வைச்சுட்டான்?? நாம போன் பண்ணுவோமா…” என்று அவள் தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்க “நீங்க யாருக்கும் போன் பண்ண வேண்டாம் நானே வந்திட்டேன்…” என்ற குரலில் தூக்கிவாரிப் போட திரும்பி அருகில் நின்றவனை பார்த்தாள் அவள்.
“நீங்களே வந்திட்டீங்களா உங்களை நான் எக்ஸ்பெக்ட் பண்ணலை, யாராச்சும் அனுப்புவீங்கன்னு நினைச்சேன்…” என்றாள்.
“நீங்க லேடி தனியா வர்றீங்க, யாரையோ அனுப்பி ரீசிவ் பண்ணா நல்லா இருக்காதுல அதான் நானே வந்தேன்… போகலாமா??”
“ஹ்ம்ம் போகலாம்…”
“என்னை நம்பி வருவீங்கல்ல??”
“ஷ்யூர் தெரியாத ஊருக்கு இவ்வளவு தூரம் வந்திட்டேன், இப்போ உங்களை நம்பி வரமாட்டேனா”
“தேங்க்ஸ்…” என்றவன் அவள் பேக்கை எடுத்துக்கொள்ள போக “ப்ளீஸ்…” என்றுவிட்டு அவளே எடுத்துக் கொண்டாள்.
அவனும் எதுவும் சொல்லவில்லை. அவன் முன்னே நடக்க இவள் பின்னே சென்றாள். காரை திறந்தவன் அவள் உடைமைகளை வைக்க உதவி செய்துவிட்டு அவளை அமரச்சொல்லி அவனும் ஏறி அமர்ந்தான்.
“விஜய்…” என்று அப்போது ஒரு பெண் குரல் கேட்க அவன் ஜன்னல் கதவை இறக்கி எட்டிப்பார்த்தான்.
“சங்கவி நீ இங்க என்ன பண்றே??”
“நான் கேட்க வந்த கேள்வியை நீ கேட்கறே??” என்றவள் அவனருகில் அமர்ந்திருந்தவளை ஏற இறங்கப் பார்த்தாள்.
அவளின் முகத்தில் தெரிந்த உணர்வு என்னதென்று வரையறுக்க இயலவில்லை. “நான் இவங்களை பிக்கப் பண்ண வந்தேன்…” என்றவன் “நீ எதுக்கு வந்தே??” என்று அவளைப் பார்த்து கேட்டான்.
“ஷாலினி டெல்லி போறா, அவளை டிராப் பண்ண வந்தேன்…”
“ஓகே யூ கேரி ஆன், ஐ ஹாவ் டு கோ… பை சங்கவி…” என்றவன் கடைசிவரை காஞ்சனாவிற்கு சங்கவியையோ, சங்கவிக்கு காஞ்சனாவையோ அறிமுகம் செய்து வைக்கவேயில்லை.
“இடியட்” என்று சத்தமாய் சொல்லி அங்கிருந்து சென்றாள் சங்கவி.
காஞ்சனாவும் அவனிடம் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. அது அவனின் பர்சனல் என்று அமைதியாக இருந்தாள்.
விஜய் சாதாரண பேச்சுக்களை அவளிடம் பேசிக் கொண்டே வந்தான். அவளும் அவனுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
“தென் யூவர் மிஸ்…”
“மிசஸ்… மிசஸ் காஞ்சனா விஸ்வகர்மா” என்றாள் அழுத்தமாய்.
“ஓ!! மிசஸ் காஞ்சனா, உங்க ஹஸ்பன்ட் என்ன பண்றார். ஐ மீன் என்ன வேலை பார்க்கறார், சும்மா பேசிட்டு இருக்கலாம்ன்னு தான் கேட்டேன். நாம போக வேண்டிய இடத்தை ரீச் பண்ண இன்னும் அரைமணி நேரத்துக்கு மேல ஆகும். பேசிட்டு வரலாமேன்னு தான் கேட்டேன்”
“ஹி இஸ் நாட் இன் இந்தியா, அவுட் ஆப் கண்ட்ரில இருக்கார்…” என்று தேவையில்லாத பேச்சை தவிர்பதற்காய் அவ்வாறு சொன்னாள்.
“நான் அவர் எங்க இருக்கார்ன்னு கேட்கவில்லையே மேடம். என்ன வேலைன்னு தானே கேட்டேன்…” என்றான் விஜய்.
“அவரும் டிசைனிங் தான் பண்ணுவாரு”
“ஓ!! வெரி நைஸ்!! அப்போ ரெண்டு பேரும் சேர்ந்தே வேலை பார்ப்பீங்கன்னு சொல்லுங்க…” என்றான் அவன் இயல்பாய்.
அவளுக்கு எப்போதடா அந்த இடம் வரும் என்றிருந்தது இப்போது. அவள் நினைத்து முடித்திருக்கவில்லை வண்டியை அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங்கில் நிறுத்தினான் அவன்.
“போகலாம் வாங்க மிசஸ் காஞ்சனா…” என்று அவன் முன்னே நடக்க அவன் பின்னே சென்றாள்.
லிப்ட்டில் நுழைந்து அவன் பதினைந்தாம் தள எண்ணை அழுத்த “பதினஞ்சாவது மாடியா” என்றாள் அவள்.
“ஏன் என்னாச்சு??”
“இல்லை அவ்வளோ உயரமா??” என்று கேட்டுவிட்டு அவள் கேட்டதே அபத்தம் என்றுணர்ந்து அமைதியாகிவிட்டாள்.
அந்த ஊரில் இதெல்லாம் சாதாரணம் தானே. சென்னையிலேயே இப்போதெல்லாம் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் உண்டு தானே.
அவள் அது போன்ற இடத்திற்கு சென்றதில்லை இதுவரை. இது தான் முதன் முறை அது போன்ற அடுக்குமாடி குடியிருப்பு வருவது. அங்கேயே தங்கப் போகிறோம் என்பது அதைவிட பெரிய விஷயமாக இருந்தது அவளுக்கு.
“உயரம்னா ரொம்ப பயமா உங்களுக்கு” என்று லேசாய் சிரித்தான்.
“அப்படியெல்லாம் இல்லை நான் இதுவரைக்கும் இவ்வளவு உயரமான பில்டிங் எல்லாம் போனதில்லை. இதான் பர்ஸ்ட் டைம்” என்றாள் மறையாமல்.
“இங்க இருபத்தியஞ்சு பிளோர் இருக்கு…” என்றான் தகவலாய்.
“வெளிய பார்க்கும் போதே நினைச்சேன், பெரிய பில்டிங்ன்னு ஆனா இருபத்தி அஞ்சு பிளோர்ன்னு நீங்க சொன்ன பிறகு தான் தெரியுது…” என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்க அவர்கள் இறங்க வேண்டிய தளம் வந்திருந்தது.
இருவரும் இறங்க அவன் ஒரு பிளாட்டின் கதவை திறந்தான். “இங்க தான் நீங்க ஸ்டே பண்ணப் போறீங்க. உள்ளே போய் பாருங்க” என்றான்.
“நீங்க… நீங்க வரலயா??”
“என்னோட பிளாட் எதிர்க்க தான் இருக்கு. என் பிரண்ட்கிட்ட சொல்லிட்டு வந்திடறேன்…” என்றுவிட்டு சாவியை அவளிடம் கொடுத்தான்.
“ஒரு பைவ் மினிட்ஸ்ல வந்திடறேன்…” என்றுவிட்டு சென்றுவிட்டான்.
அவள் உள்ளே சென்று பார்த்தாள். அது ஒற்றை படுக்கையறை, ஒரு ஹால், பின் கிட்சன் என்று சிம்பிளாக இருந்தது.
சர்வீஸ் அபார்ட்மெண்ட் போன்று இருந்தது. அங்கு அத்தனை வசதிகள் செய்யப்பட்டு புதிதாய் இருந்தது அது.
சற்று நேரத்தில் விஜய் வந்துவிட “என்ன மிசஸ் காஞ்சனா இடம் பிடிச்சிருக்கா??”
“எஸ் தேங்க்ஸ் விஜய்… இதுக்கு எவ்வளவு பே??”
“அதெல்லாம் எதுக்கு?? அது எங்களோட செலவு தான்…” என்றான்.
“நோ நோ அது தப்பு நீங்க எவ்வளவுன்னு சொல்லுங்க ஐ வில் பே…”
“ஓகே நாளைக்கு சொல்றேன்… இப்போ நீங்க ரெஸ்ட் எடுங்க, ஒரு எட்டு மணி போல டின்னர் கொண்டு வர்றேன். ஆமா நீங்க என்ன சாப்பிடுவீங்க??”
“எதுனாலும் ஓகே தான்…” என்றாள். அவன் சென்றுவிட்டான், எட்டு மணிக்கு சொன்னது போல அவளுக்கு டின்னரை கொண்டு வந்து கொடுத்தவன் “நாளைக்கு மார்னிங் பத்து மணிக்கு பார்க்கலாம். நானே உங்களை கூட்டிட்டு போறேன் ஆபீஸ்க்கு…”
“பிரேக்பாஸ்ட் உங்களுக்கு என்னோட சர்வன்ட் லேடி கொண்டு வந்து தருவாங்க… குட் நைட் மீட் யூ டுமாரோ” என்று புன்னகைத்து சென்றுவிட்டான் அவன்.

Advertisement