Advertisement

“வினயின் பக்கத்தில் தன்னை இணைத்து கொள்ள மனம் சொன்னதை கேட்டு ஆடித்தான் போனால் சுபா.” என்ன இது?? தன் எண்ணம் போகும் திசை அவளுக்கே புரியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் பார்த்தவன் கூட்டுக்குள் நானா!!. நினைத்தாலும் அவன் மீது இருந்த பார்வை மட்டும் மாறவில்லை.
“துளசி… அண்ணா  பான் வித் ஐஸ் கிரீம் என்றவள், வேண்டாம் நானே போறேன், நீ சப்பிடு!! என்றவள் சுபா உனக்கு என்றிட, பலூடா வித் புளூ பெர்ரி என சொல்ல, உனக்குண்ணா.. என்றவளிடம் அதே என்ற வினயை பார்த்தவள், அவன் பார்வை சுபாவின் மேல் இருக்க!!” நடத்து என விசில் அடிக்க, இந்த பழக்கதை விட மாட்டியா என சிரித்தான் வினய்.
“சுபா இருவரையும் பார்க்க.. துளசி நல்ல விசிலர். நல்லா விசில் பண்ணுவா, நிறைய காம்படீசன்ல கலந்துட்டு இருக்கா.  இது அம்மாவுக்கு பிடிக்காது,  அதனால விட்டுட்டா.  நல்லா பாடுவா பிளே பேக் பண்ண நிறைய ஆபர்ஸ் வருது. இவ தான் எதையும் ஒத்துக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்குறா.” 
“ஆனா.. நாங்க மட்டும் தனியா இருக்குறப்ப இப்படிதான்!! அவளுக்கு தேணுனா பாடுவா, விசில் பண்ணுவா என தங்கையின் பெருமைகளை சொன்னவனை பார்த்தவள், விஷ்வாவும் இப்படி தான் தங்களிடம் இருக்கும் நல்லதை மட்டும் பாட்டியிடம் சொல்லி தங்களுக்கு வேண்டியதை செய்வது நினைவில் வந்தது.” 
“ஏன் சுபா?? லா படிச்ச நல்லா பேசுவாங்கன்னு சொல்லுவாங்க!! ஆனா… நீயும், ஸ்ரீயும் வாய திறக்கவே பீஸ் வாங்குவீங்க போல,”  என்றவனை முறைத்தவளை.,
“இந்த ஊர் பொண்ணுங்க எல்லாம்!! முறை பொண்ணுங்குறத முறைச்சு தான் நிருபிப்பீங்களா??” நானும் எவ்வளவு தான் பேசுறது. பாக்குறவங்க என்னைய தப்பா நினைக்க மாட்டாங்க?? 
“என்னன்னு நினைப்பாங்க??”  
“அப்பா..!! இந்த ரெண்டு வார்த்தை வர நான் ரெண்டு பக்க வசனம் பேசனுமா??”
“அப்பறமா… வசனம் பேசலாம்!! இப்ப சொல்லுங்க, என்ன நினைப்பாங்க??” இத்தனை நாள் தயக்கம் விட்டு வினய்யிடம் பேச ஆரம்பித்தாள் சுபா. 
“துளசி சிறிது நேரம் விட்டு வந்தவள், இந்தா சுபா.. என அவளுக்கு வாங்கியதை நீட்ட, நீ.. வந்ததுக்கு அப்பறம் வீடே மாறிடிச்சு துளசி, அது ஏன்னு இப்ப புரியுது எனக்கு!! என்ற சுபாவை துளசி கேள்வியாக பார்த்தாள்??” 
“உனக்கு வேண்டியதையும் வாங்கிற!! அதே சமயம் மத்தவங்களுக்கு பிடிக்கலைனா, அதை அவங்களுக்கு திணிக்காம உன் அளவில் சந்தோசமா இருக்குற!! இது தான் நீ எப்பவும் சந்தோசமா இருக்க காரணம். என்ன கரெக்டா??” என்றவளை துளசி மெச்சும் பார்வை பார்த்தவள், வினையை பார்த்து கண்ணடித்தாள்.
“வீட்டில் இரவு விருந்திற்கு ஏற்பாடுகள் வேகமாக நடக்க.. கோதை, மங்கை  சமையல் அறையில் இருந்தனர்.  மங்கை, குழலி தான் பக்கத்தில் இருப்பதாக நினைத்து தண்ணீர் கேட்க, பதில் இல்லாமல் போகவே மீண்டும் கேட்டார் மங்கை. எண்ணெய் சட்டியில் பெரித்த படி இருக்க அவரால் திரும்ப முடிய வில்லை மங்கை  யோசித்தவர் சட்டென திரும்ப கையில் தண்ணீர் உடன் கோதை நின்றிருந்தார்”  
“அவருக்கு என்ன பேசுவது!! என புரியவில்லை. கையில் இருந்ததை கோதை நீட்ட, அதை மங்கை வாங்கியதும்  எதுவும் பேசாமல் சென்றார் கோதை.”
“கண்கள் கலங்க நின்றிருந்தவரை பார்த்த பார்வதிக்குதான், எப்படி சமாதனம் சொல்ல என தெரியவில்லை. கோதை வந்து இத்தனை நாட்கள் ஆகியும் மங்கையே பேசினாலும், கோதை அவரை கண்டு கொள்ளாதது என அவருக்கு யார் பக்கம் நின்று பேச என தெரியவில்லை. பார்வதி.. மங்கையை  பார்கவும் எதுவும் நடக்காததை போல திரும்பிக்க கொண்டார்  மங்கை”
“சிறிது நேரத்தில் ராஜேந்திரன் குரல் கேட்க, தங்களின் அறைக்கு சென்றார் மங்கை. அவருக்கு தெரியும் பார்வதி தான் ராஜேந்திரனிடம் இங்கு நடந்ததை கூறியிருப்பார் என்று.”
“ராஜேந்திரனை பார்த்தும்.. இத்தனை நேரம் அணைகட்டிய கண்ணீர் வெளிவர, வேகமாக சென்று அவரின் மடி மீது தலை வைத்து படுத்தக் கொண்டார்.” 
“எதுவும் பேசாமல் மெதுவாக ராஜேந்திரன் மங்கையின் தலையை நீவி விட, மங்கை “எதுவும் கேக்கமாட்டீங்களா?”
“எதுக்கு கேக்கனும்? நீ.. தப்பு பண்ணி இருந்தா கேள்வி கேக்கலாம்?” 
“அப்ப… நா கோதைய புருசன் இல்லாம வீட்டுக்கு வர கூடதுன்னு சென்னது சரிதான?” 
ஆமா.. ரெம்ப சரிதான். “கல்யாணம் ஆன பொண்ணு அவ வீட்டுல இருந்து தான் புருசன கேள்வி கேக்கனும். பொறந்த வீட்டுல இருந்து பேசுறது தப்பு. அது அவளுக்கும் மரியாதை இல்ல, நமக்கும் நல்லது இல்ல.”
“இதை ஏங்க கோதை புரிஞ்சுக்காம இருக்கா?? இத்தனை வருசம் ஆச்சு!! இன்னும் என்னங்க என் மேல கோபம் அவளுக்கு?” எத்தனையோ முறை அவகிட்ட  நானா.. போயி பேசுனா கூட முகத்தை திருப்பிக்குறா. காலைல கோயில்ல பிரசாதம் கொடுத்தப்பவும் அப்டித்தான் பண்ணுனா. இப்ப தண்ணி தான கேட்டேன் இந்த இருக்கு அண்ணினு செல்லாம, அப்படியே நிக்குறா.”
“நா.. என்ன பண்ணுனா அவ கோபம் போகும்ன்னு தெரியலைங்க?”
“நீ.. எதுவும் பண்ண வேண்டாம். அவளே வந்து பேசுவா, போ.. நீ போயி.. ரெடியாகு எல்லாரும் வந்துடுவாங்க. அவங்க முன்ன இப்படியா போயி நிக்க போற?? என அவரை சமாதனம் செய்தவர், கோதையிடம் இதை  பற்றி பேச வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டார்.”
“இதுவும் காதலின் ஒருவகைதான். ஆசையான பேச்சுகள் இல்லை, அரவணைப்பு உண்டு. தேவையான நேரத்தில் தோள் சாயும் போது ஒன்றே இரண்டே ஆறுதல் வார்தைகள் உண்டு.  அதிக படியான எதிர்பார்புகள் இதில் இல்லை. தன் துணை மீது அதிகப்படியான நம்பிக்கை உண்டு, இளமையின் கடைசி சில மையில்கள்.”  
“ரத்தினம்.. மீனா இருவரும் வாசலில் நின்று அனைவரையும் வரவேற்க, திடீர் என்று பெரிய வீட்டில் விஷேசம் அதுவும் வீட்டு மனிதர்களே வந்து அழைத்திருந்தனர் என்பதால் இவர்கள் அழைத்திருந்த அனைவரும் வந்திருந்தனர்.”  
சிறு அளவில், வீட்டினர் மட்டும் கலந்து கெள்ளும் விருந்து என நினைக்க இத்தனை பேரை அழைத்தது பார்வதிக்கு சற்று சங்கடமாவே இருந்தது. 
“இது என்னங்கடா, காலம் போன கடைசில ஊரையே கூட்டி வச்சு இருக்கீங்க?? என சத்தம் போட., 
“அம்மா.. இது உங்களுக்கு மட்டும் இல்ல, கோதையும் மாப்பிள்ளையும் வந்து இருக்காங்கல அதுக்கும் சேத்துதான், என்று வாசன் கூறிய பின்புதான் சிறிது சமாதானம் ஆனார். இருந்தாலும் மனதில் ஏதோ ஒரு கலக்கம் இருந்து கொண்டே இருந்தது. பூஜை அறைக்கு போனவர் யாருக்கும் எந்த சங்கடம் வர கூடாது என வேண்டிக் கொண்டார்.”
வந்தவர்களில் சற்றே வயதில் பெரியவர்.. என்ன விஸ்வா? திடீர்னு   வீட்டுல விஷேசம், என கேட்க.. அது பெரியப்பா, நம்ம கோதையும் மாப்பிளையும் வந்துருக்கங்க. இது நம்ம கோதையோட பெரிய பையன் வினய்.” 
“வினயை அனைவருக்கும் விஸ்வநாதன் அறிமுகபடுத்த, அவர்களின் உறவின் முறையை ஒன்றென்றாக சொல்லி வந்தார் ராஜேந்திரன்.” அப்பெழுதுதான் விஷ்வாவும்.. அரவிந்தும் வெளியிலிருந்து உள்ளே வர, என்னப்பா ராஜா லேட்டு?? என ராஜேந்திரன் கேட்டார்.
“இன்னிக்கு ஒரு முக்கியமான டெண்டர்ப்பா அதுதான் லேட்” என்றவனை சீக்கிரம் ரெடியாக செல்லி அனுப்பி வைத்தார் ராஜேந்திரன்.
நேராக கிட்சன் சென்றவன்.. அங்கிருந்த மங்கையிடம் டீ கேட்க “ரூம்புக்கு போய்யா கொண்டு வர்றேன், என்றவர் அவனுக்கு டீ போட ம்மா.. தலை வலிக்குது இஞ்சி போட்டு குடுங்க என்றவாறே மேலே சென்றான்”.
“சிறிது நேரத்தில் அறையின் கதவு தட்டபட அம்மா.. கதவு தொறந்து தான் இருக்கு உள்ள வாங்க.  என சத்தம் கொடுத்த படிமியூசிக் சிஸ்டமில் ரவி சங்கரின் சித்தார் இசையை ஓட விட்டவன்  திரும்பியதும் பார்த்து தயக்கத்துடன்  நின்ற துளசியை தான்.”
“தன் அறையில் தன்னவள்!! நம்பமுடியவில்லை அவனால்” சித்தார் இசையுடன் உடன் அவள் புதிதாக அணிந்திருந்த கொலுசின் சத்தமும் சந்தம் எழுப்ப அவள் வருவதை இமைக்காமல் பார்த்திருந்தான் விஷ்வா.”
“அத்தான் டீ… என கப்பை அவனிடம் கொடுக்க, அதை வாங்கியவன் இந்த டெகரேசன் எல்லாம் நீ பண்ணுனதா துளசி??” என கேட்க.,
“முகம் புன்னகையில் மலர, ஆமா அத்தான்.. நல்லா இருக்கா!!” என சிறு பிள்ளையை போல் தலையை ஆட்டி கேட்டாள் துளசி.
“ம்ம்… நல்லா இருக்கு. என்றவன் டீயை குடிக்க அதன் சுவை வித்தியாசமாக இருக்க, இது அம்மா போட்ட டீ மாதிரி இல்லையே யாரு அத்தை போட்டாங்களா?? என கேட்கவும் துளசிக்கு சட்டென கோபம் வந்து விட்டது. ஏ.. உங்க அத்த  மட்டும் தான் டீ போடுவாங்களா, நாங்க எல்லாம் போட மாட்டோமா?? என  முகத்தை தூக்கியவள் அவனின் கட்டிலில் சட்டமாய் அமர்ந்து கொண்டாள்.”
“அவள் போட்டது என்பதிலேயே நின்றவன், அதனை முழுதாக அவளை பார்த்து கொண்டே குடித்து முடித்து, அவளிடம் கப்பை நீட்டி, உன்ன மாதிரியே டீயும் சூப்பர்!!! என்பதில் முன்னது அவனுக்கும், பின்னதை அவளுக்கும் கூறினான்.”
கப்பை  வெடுக்கென வாங்கியவள், “தேங்க்ஸ் எல்லாம் சொல்ல மாட்டேன் என்றவள் இருந்தாலும் தேங்க்ஸ், டெக்கரேசன் நல்லா இருக்குனு சொன்னதுக்கு. என்றவள் அவனின் அறையை ஆர்வமாய் பார்க்க அவ்வளவு நேர்த்தியாய் இருந்தது அவன் அறை.” 
  
“புடிச்சி இருக்கா” என அவனின் குரல் காதினில் ஒலிக்க, ம்ம்ம்.. என்றால் அவனை பார்க்கமலே.  எனக்கு பிடிச்ச மாதிரி இருக்கு உங்க ரூம் என்றவள், வலது கார்னரில் இருந்த கப்போர்ட் பக்கம் சென்றாள்.  அதில் இருந்த கிருஷ்ணர் வெண்ணை தாழி போன்று இருந்த குடுவையை எடுக்க போக அது வேண்டாம் துளசி. என பதட்டமாக அவளின் அருகே வந்தான் விஷ்வா.”
அவனை வித்தியாசமாக பார்த்தவள்!? “இல்ல அத்தான் இந்த மாதிரி பாட் ரொம்ப நாள தேடிகிட்டு இருந்தேன், ரெண்டு வருசம் முன்ன பார்த்தேன். நா.. வாங்குறதுகுள்ள வேற யாரே வாங்கிட்டு போயிட்டாங்க. இது ரொம்ப யுனிக் கலெக்சன் வெள்ளி கூட காப்பர்  என்றவள்… அதை எனக்கு தாங்க?? என கேட்க, அவன் தான் அந்த வெண்ணை போல் உருகி போனான்.”  
“தர்றேன். ஆனா… இப்ப இல்ல!! நீ.. ஊருக்கு போகும் போது அது டஸ்டா இருக்கு பாரு?? என அவள் அதை தொட விடாமல் செய்தான். அவனை திரும்பி நின்று பார்த்தவள், இப்படி சொல்லி இந்த சின்ன புள்ளைய ஏமாத்த பாத்தீங்க?? என்றவள் கவனம் அருகில் இருந்த பிளேயரில்  போக, விஷ்வாவின் கவனமோ அவளின் சின்ன பிள்ளை என்றதில் இருந்த்து.” 
“நீ.. சின்ன பிள்ளையா!! அத நா சொல்லனும் பேபி?? நினைத்தவன் கண்கள்.. அவள் சொன்னதை ஆராயச் செல்ல அவளின்.. ஐயோ என்ற சத்தம் அந்தரத்தில் நிருத்தியது அவனை”
                  
                                     விஷ்வ துளசி தொடர்வாள்…………….   
                

Advertisement