Advertisement

                ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 9
“துளசி.. வினய்.. சுபா மூவரும் விஸ்வநாதன் பார்வதியின் திருமணநாள் கொண்டாட்டத்திற்காக பொருட்கள் வாங்கவே  பக்கத்து டவுனுக்கு சென்றது.”
தாத்தாவிற்கு பட்டு வேட்டி, பாட்டிக்கு காஞ்சிவரம் பட்டு  என முடிவெடுத்தவர்கள் சென்றது “சென்னியப்பா சில்க்” அந்த ஊரின் புகழ் வாய்ந்த கடை.
“வீட்டின் அலங்கார வேலைகளை கயல், ராதா உடன் சிவராமன் செய்ய, சமையல் அறையின் பொறுப்புகள் வழக்கம் போல் மகளீர் அணி ஏற்றது.”
“ஆண்கள்…  உறவினர்களை அழைக்கும் பொருப்பினை ஏற்க, மற்ற மூவருக்கும் எந்த வேலையும் இல்லாத்தால் வெளியில் சென்றுவிட்டனர்.” 
“டேய் அண்ணா… எவ்வளவு நேரமா பாக்குற?? வேகமா செலக்ட் பண்ணுடா. ஒரு சேலை!! அத எடுக்க இவ்வளவு நேரமா??  என்றவளை ஆச்சர்யமாக சுபா பார்க்க,  வக்கீலம்மா  என்ன?”  என்றால் துளசி.
சுபா.. எதுவும் பேசாமல் இருக்க “ஃபுளோல கெட்ட வார்த்தை எல்லாம் வரும் கண்டுக்க கூடாது, என சுபாவின் காதினில் துளசி செல்ல கேட்டவள் தான் சிரித்துவிட்டால்.”
சுபா சிரித்ததில் இருவரையும் பார்த்தவன் மறுபடியும் புடவை தேடலில் முனைப்பானான். வினயின் பார்வையில் சுபா தலை குனிந்து சிரிக்க துளசியோ “இவன பொண்ண கரெக்ட் பண்ண கூப்ட்டு வந்தா என்ன வேலை செய்றான் பாரு!! என மானசீகமாக தலையில் அடித்து கொண்டாள்”
அதற்கு எதிராக… “வினய் தன் தலையில் அடித்து கொண்டான் துளசியை நினைத்து, சுபாகிட்ட நான் பேசலான்னு நினைச்சா இந்த பக்கி கடலை போடுது! என நினைத்தவன் தங்கையின் சிரிப்பை பார்த்தும், விடுடா வினய் அவ சந்தோசம் தான் இப்ப முக்கியம் என நினைத்தவன் துளசிக்கும் சுபாவிற்கும் சேர்த்தே எடுத்தான்.”
சுபா.. “துளசி அத்தான இப்படி மரியாதை இல்லாம பேசுனா! அத்தை எதுவும் கேக்க மாட்டாங்களா??” 
யாரு ஆண்டாளா…..?? தெரிஞ்சது அவ்வளவுதான்!” ஒரே வெட்டு  துண்டு நாலு”. 
ஆனாலும்… “பயம் இல்லாம பேசுற நீ!?”
“அது.. அம்மா இல்லாத போது மட்டும். ரெம்ப மரியாதையா பேசுன அண்ணாவிட்டு தள்ளி போற மாதிரி தோனும் அதுதான். ஏன்.. நீங்க வீட்ல பேசமாட்டீங்களா?”
ஹூஹூம்… “மரியாதையாதான் பேசனும். வீட்டு மனுசங்கள வெளிய எங்கயாவது பார்த்த தலைய குனிஞ்சுக்கனும்,பேச கூடாது அப்படின்னு ரூல்ஸ் நிறைய உண்டு!!” 
அப்பறம்.. “எப்படி வக்கீலுக்கு படிச்ச!?”
“அண்ணா.. படிச்சதால ஒரு கிரேஸ். நானும் கருப்பு கோட்டு போட்டு  வாதாடலான்னு, ஆனா.. இங்க இவங்க பஞ்சாயத்தே பெரிசா இருக்கா, அது தான் கோர்ட்டுக்கு லீவு விட்டுடேன்!” “ராஜா அண்ணா தான் பாட்டி கிட்ட பேசி நான் கம்பெனிக்கு வர ஒத்துக்க வச்சாங்க”
 
விஷ்வாவை பற்றி சுபா கூறியதும், “துளசியின்  நினைவில்  ஹோட்டலில் விஷ்வாவை பார்த்ததே வந்தது.”
“விஷ்வாவின் நண்பனின் நிச்சயம் நடந்த அதே ஹோட்டலில் தான் வரதநாயகத்தின் மருத்துவ சேவைக்கான  பாராட்டு விழா நடந்த்து. அவளுக்கு அவர்களின் பேச்சு சலிப்பை தர சிறிது நடக்கலாம் என வெளியே வந்தவள்.. அங்கு அலங்கார வேலைகள் நடை பெற்றதால் பக்கத்தில் இருந்த மாற்று வழியில் சென்றாள். தோட்டத்தில் இருந்து உள்ளே நுழைவது போல் இருந்த அந்த வழியில் ஒரு சுற்றின் முடிவில் நின்று இருந்தான் விஷ்வா.”
“கைகளிள் சாவியினை சுழற்றியபடி, ஒரு காலின் மீது மறுகாலை வைத்து அருகில் இருந்த தூணில் சாய்ந்து அவளுக்கு முதுகாட்டி நின்று இருக்க, அவனின் உயரமும் அவன் நின்றிருந்த விதமும் அவனை கவனிக்க செய்ய, அவனை பார்த்த படியே உள்ளே நுழைந்தாள் துளசி.”
“அவள் நுழையும் வரை திரும்பாதவன் அவள் கண்ணாடி தடுப்பின் உள் நுழைந்ததும் திரும்ப கண்ணாடி இருந்ததால் வண்ணவிளக்குகளின் ஒளியில் இவள் முகம் இவனுக்கு தெரியவில்லை. ஆனால் உள்ளிருந்து பார்த்த அவளோ தன்னை மறந்து நின்றாள்!!” 
“ஃபோன் பேசிய படி திரும்பியவன் அழகில்!! திணறித்தான் போனால் துளசி.  ஆறடி உயரம்.. உயரத்திற்கு ஏற்ற உடல், கோதுமை நிறம், சீரான பல் வரிசை தெரிய அவன் சிரித்த சிரிப்பில் அவனின்  கண்களும் சேர்ந்து சிரிக்க மயங்கி நின்றாள் துளசி. தன்னை யாரோ பார்ப்பது போல் உணர்த்தவன் சுற்றி பார்க்க  அவன் தேடுதலில் சுயம் பெற்றவள் அந்த இடம் விட்டு நகர்ந்தாள்.”
 
“அவன் உள்ளே வருவது தெரிந்த்தும்.. அந்த இடம் விட்டு நகர்ந்தவள், அவனை மறந்தும் போனாள். ஆனால்!! அவனின் முகம் அப்படியே பதிந்து போனது மனதில். எங்காவது தூரத்தில் அவனின் உயரத்தில் யாரையேனும் பார்த்தாள் சில நிமிடம் நின்று கவனித்து தான் செல்வாள்!! துளசி.” 
அதன் பிறகு.. அவனை  கோவிலில் தான் அவனை பார்த்து. “வினய்காக தான் அவள் கிராமத்திற்கு வந்தது.” 
“வினய்… தான் சுபாவை விரும்புவதாக கூற, துளசிக்குதான் எதுவும் புரியவில்லை.”
“என்ன அண்ணா சொல்ற?” நிஜமாவே நீதான் லவ் பண்ணுறீயா. வினய்.. சிரித்தபடியே “அவ பேரு சுபா வக்கீல். என்றிட துளசி ஒரு முறை தன் கைகளை கிள்ளி பார்க்க.. இரு இன்னும் முடிக்கல என வினய் கூற, அவளுக்குள் அலாரம் அடித்தது அண்ணன் ஏதோ பெரியதாக சொல்ல போகிறான் என்று.”
அவளோட முழு பேரு “சுபா வாசன்  பூபதி”  என்றிட துளசிக்கு மயக்கமே வந்தது  விட்டது.
சில நிமிடங்களில் சுதாரித்தவள்.. “படபடவென வினயை அடிக்க”, ஏய்.. எதுக்கு அடிக்குற? என அவளின் கைகளை இருக்கி பிடித்தான் வினய்.  
“நீ… மட்டும் தாத்தா, பாட்டி, அத்தை, மாமா எல்லாரையும் பாத்துட்ட. என்ன கூட்டிட்டு போகனுன்னு தோணல இல்ல” என்றவளை பார்த்து பலமாக சிரிக்க.,
“என்னடா சிரிக்குற, நிறுத்த போறியா இல்லையா?” என இன்னும் அவனை அடிக்க, ஏய்.. நிறுத்து துளசி “என்ன அவ பார்த்ததே  இல்லை!” 
என்ன… என்ன.. என்னடா சொல்லுற? என தலையை பிடித்த படி அமர்ந்தாள். 
“அவள, நா.. பார்த்தது ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஒரு காலேஜ் கல்சுரல் புரேக்கராம்ல. பாத்ததும் புடிச்சி இருந்தது, கெஞ்ச நாள் பாலே பண்ணதுல அவ படிக்குறது லா காலேஞ் சென்னைனு தெரிஞ்சது. 
“சென்னைதான பாக்கலாம்ன்னு விட்டுட்டேன்.  அடிக்கடி போய் பாத்துட்டு வந்தேன். அது அவளுக்கு தெரியாது லாஸ்ட் மன்த் தான்  படிப்பு முடிஞ்சது சரி இனி போய் பேசலாம்ன்னு போனா அப்பதான் தெரிஞ்சது,”  சென்னை அவ சொந்த ஊர் இல்ல தென்புதூர் கிராமம், அவங்க தாத்தா விஸ்வநாதன், அப்பா வாசன்னு.” இப்ப என்ன பண்றதுன்னு தெரியலை?? 
“தெரியலன்னா.. தெரிய வைக்கனும்!!” 
“தெரிஞ்ச எல்லாருக்கும்  வருத்தமாகாதா?? அம்மா அப்பா என்ன நினப்பாங்க??” 
“இதே வேற பொண்ணுனா மட்டும்!! உன்ன தலையில தூக்கி வச்சு கொண்டாடுவாங்களா??  அப்பவும் இதே வருத்தம் இருக்கதான செய்யும்.” 
வினய் எதுவும் பேசாமல் அமர்திருக்க
“சொல்லுண்ணா, சுபாவ விட்டுட போறியா.. உன்னால முடியுமா?”   
“முகத்தை அழுத்தி துடைத்தவன், டிரை பண்ணா முடியாதது எதுவும் இல்ல?? ஆசைபட்டது எல்லாம் கிடைச்சுடுமா!! இல்ல தான.. அது மாதிரி தான் இதுவும்.”
“அப்ப சுபாவை விடபோறியா?” 
“ம்ஹூகும் குடும்பத்த விட முடியாதுன்னு சொல்றேன்”.
“அதை.. நீ வீட்டுல சொல்லி அவங்க அதை வேண்டான்னு சொன்ன,  அப்ப  சொல்லனும்?”  எதுவும் பண்ணாம விடுறேன்னு சொன்னா, “ஒன்னு நீ தைரியம் இல்லாதவனா இருக்கனும், இல்ல உன்னோட காதல் உண்மையா இருக்காது!!” என்றவளை வினய் கோபமாக பார்க்க.  
“என் மேல கோபபட்டு என்ன யூஸ்?”
“யார்கிட்ட சொல்லுறது?? அத அவங்க கேட்டா, நாம சொல்லுறதுல ஒரு அர்த்தம் இருக்கு. இங்க என்ன நடக்குதுன்னோ நமக்கு புரியலை. எல்லார் வீட்டுலயும் பிரச்சனைன்னா ஒரு ரெண்டு மூனு வருசம் பேசாம இருப்பாங்க.”
ஆனா.. “இங்க இருபத்தி நாலு வருசம், இதுல பாட்டி வீட்டுல எத்தனை விசேஷம் நடந்து இருக்கும். ஒன்னுக்கு கூடவா நம்ம நியாபகம் வரலை அவங்களுக்கு?” அப்ப விசயம் ரொம்ப பெரிசுன்னுதான அர்த்தம்.
“இந்த லட்சணத்துல நா… அந்த வீட்டு பொண்ணையே விரும்புறேன். இதை யார் கிட்ட சொல்லி, யார் சம்மதிச்சு? நா கல்யாணம் பண்ணுறது!!”
“அப்ப.. நா பிளான் பண்ணுனா!?”
விளையாடாத துளசி. “என்னோட  அண்ணன்  இது வரைக்கும் எதுக்கும் ஆசை பட்டது இல்ல. முதல் தடவ ஆசபட்டுட்டான். அத நிறைவேத்தலைன்னா, அப்பறம்  என்ன நா வினய்யோட தங்கச்சி ம்ம்ம்..??”  
அதனால நா “ஊருக்கு போறேன் தாத்தா, பாட்டிய பாக்குறேன் அண்ணிய தூக்குறேன் சரியா!? என பாலையா போல் தூக்கினேன் சுபாவை, சேர்த்தேன் வினயிடம்”  என்றவளுக்கு வினயின் பெரு மூச்சு மட்டுமே பதிலாய் வந்தது.
“வினயிடம் சொன்னது போல ஊருக்கு போக திட்டமிட்டவள், சமூக வலை தளத்தில் அவர்களை பற்றிய விபரங்களை தேட பலனோ பூஜியம். இங்கு இருந்து தேடுவதை விட ஊருக்கே சென்றுவிட முடிவு செய்தாள் துளசி.”
 
“கோதையிடம்.. திவ்யாவுடன் ஊருக்கு போவதாக சொல்லி கிராமத்திற்கு வர, அங்கு அவர்கள் கோவிலுக்கு சென்றதாக கூற, வழியில் சுபாவை பார்த்து தற்செயலே.”
அதுவும்.. “கோவிலில் விஷ்வாவை பார்த்ததும் அத்தனை மகிழ்ச்சி. அதிலும் அவன் தன் சொந்தம்  என்பதில்  வானத்திலேயே பறந்தாள் துளசி.” 
மற்றவர் முகத்தில் அவனை தேடியவளுக்கு இன்று அவன் பக்கத்திலே இருப்பது அப்படி ஒரு சந்தோசம் துளசிக்கு.
“தன்னை மறந்து தான் போனால் துளசி. ஏனோ அவனுடன் இருக்கும் அந்த சில நிமிடங்களை சேகரிக்க நினைத்தவளால், தன் மனதின் எண்ணத்தை அறியமுடியவில்லை!?”  
“சுபாவிடம் பேசுவதை தள்ளி போட்டவள், பாட்டி.. தாத்தா என அனைவருடனும் நேரம் செலவழிக்க, விஷ்வாவும் இவளுடன் நன்றாக பேச.. சுபா, வினயின் காதல் விபரத்தை  கோதையிடமும், தாத்தா, பாட்டியிடமும் பேசி முடிக்கலாம் என நினைத்தாள் துளசி.”
“துளசி ஊருக்கு போகும் முன்னமே கோதை இங்கு வர  இவளின் திட்டத்தில் ஒரு சிறிய இடைவேளை.”
“சுபாவுடன் பேசியவள்,  அமைதியாக யேசனையில் இருக்க, வினய்.. அவளை தட்டியவன், துளசி பாரு?
“இது ஓகேவா?? என எடுத்த சேலையை காட்ட, அது சிவப்பில் உடல் முழுதும் சிறு புட்டா, வைர ஊசி பாடர் வைத்த லைட் வெயிட் பட்டு புடவை.” பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்க அதனையே பேக் பண்ண சொல்லி பில் கட்டி வந்தனர்.
மணி இரண்டை நெருங்க, பக்கதில் இருந்த ஹோட்டலுக்கு சென்றனர். வினய், அவர்களுக்கு வேண்டியதை விரும்பியதை என பார்த்து கேட்டு செய்ய, அதை பார்த்து இருந்த சுபாவிற்கு தான் அவன் மீது இருந்த தன் கண்களை மாற்ற முடியவில்லை.
“அவளும்… வந்த நாளில் இருந்து வினயை கவனித்து கொண்டுதான் இருக்கிறாள். துளசியிடம் அவன் காட்டும் பாசத்தை. இவர்கள் வீட்டிலும் உண்டு. ஆனால் இது கட்டுபாடுகள் இல்லாத பாசம். கோபமோ, சந்தோசமோ துளசி எதையும் மறைப்பது இல்லை வினய்யிடம். இங்கும் பாசம் உண்டு அது ஒரு எல்லைக்கு உட்பட்டே இருக்கும்.”

Advertisement