Advertisement

                        ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி  அத்தியாயம் 8
“விஷ்வா, அரவிந்தனை இழுத்து  கொண்டு ஓட,” அதற்குள் கோதை அங்கிருந்த ஆட்டேவில் ஏறி சென்று இருந்தார். இருவரும் அவர்களை பின் தொடர்ந்தார்கள்.
சிறிது  தூரத்தில் கோதை ஆட்டேவில்  இருந்து இறங்குவதை பார்த்தவர்கள் இறங்கி அவர்களிடம் போக, இவர்கள் பார்த்தது “கையில் ரத்தம் வர நின்ற கோதையை” தான்.
இன்னும் வேகமாக, விஷ்வாவும் அரவிந்தனும் அவர்கள் பக்கம் போக அவர்கள் கேட்டது “தாத்தா பாட்டி பத்தி பேசாதனு எத்தன தரம் சொன்னாலும் புரியாதா துளசி உனக்கு??” என வினய்  துளசியை திட்டுவதைதான். துளசி கோதையின் கையை வெறித்தபடி நின்றிருக்க “சாரி கேளு துளசி” என்றவனை பார்த்தவள் எதுவும் சொல்லாமல் ஆட்டேவில் அமர, வினய் தான் பாட்டிலில் இருந்த தண்ணீரை விட்டு காயத்தை கழுவி கர்சீப்பில் கட்டியவன் கோதையை பார்க்க இருவரும் ஆட்டோவில் ஏற அது புறப்பட்டது.
விஷ்வாவும், அரவிந்தும் ஒருவர் முகத்தை பார்க்க எதுவும் புரியவில்லை இருந்தலும் அவர்களை பின் தொடர்வது அவசியம் என்பதால் தாங்கள் வந்த வண்டியில் அவர்களை தொடர்ந்து சென்றனர்.
“அவர்களை  தொடர்ந்து சென்றாலும் அவர்களின் வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை.”  இருட்டியும்விட்டதால் தாங்கள் அறைக்கு திரும்பிவிட்டனர்.
“என்ன ராஜா இது இன்னுமா  கோபம இருக்காங்க??” எப்டிடா அதுவும் கோதைம்மா  என்னால நம்ப முடியல.
“அதுதான்  எனக்கும் புரியலை அர்வி?”.  எதுக்கும் நாளைக்கு போய் பாக்கலாம் என விஷ்வா சொல்ல அரவிந்த் சம்மதித்தான்.
மறுநாள் மீண்டும் அதே தெருவிற்கு போக அனைத்து வீடுகளும் ஓரே மாதிரி இருக்க, எந்த வீடு என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. திரும்பவும் அதே தெருவில் நடக்க ஆரம்பித்தனர். தெருவின் கடைசியில் இருந்த வீடு மட்டும் சற்று வித்யாசமாக  இருக்க வீட்டின் கேட்டை திறந்து உள்ளே சென்றனர்.
தோட்டத்தில், “வினய் மடியில் துளசி படுத்திருக்க, சொன்னா கேளு துளசி அண்ணா பெரியவனா ஆனதுக்கு அப்பறம் உன்ன தாத்தா பாட்டி கிட்ட கூட்டிட்டு போறேன்”, அது வரைக்கும் அவங்கள கேட்டு பிடிவாதம் பண்ண கூடாது.  பாத்தியில நேத்து அம்மா என்ன பண்ணுணாங்க, என்பதிலேயே  உறுதியாக தெரிந்து விட்டது கோதையிடம் துளசி இவர்களை கேட்டதால் தான் கையை காயப்படுத்திகொண்டார் என்று. 
“இப்போது தாங்கள் சென்று நின்றால் அவரின் நிலைமை என்ன??” என்று தெரியாதலால் வீட்டில்  கூறி அவர்களை வரவைக்கலாம் என  எண்ணி திரும்பி நடக்க ஆரம்பித்தனர். 
“ஏனோ விஷ்வாவிற்கு,  துளசியின் அந்த வருத்தமான முகத்தை அப்படியே விட்டு போக மனதில்லை, நேற்று அவள் சிரித்தபடி கை கொடுக்க வந்த நிமிடம் வந்து போக பின்னாடி வந்த சத்ததில் திரும்பி பார்த்தான். பக்கத்து வீட்டு சிறு பிள்ளைகள் வரவும்,  இவர்கள் பக்கத்தில் இருந்த பெரிய மரத்தின் பின் ஒளிந்து கொண்டனர்.”
“சிறிது நேரத்தில் குழந்தைகளுடன் குழந்தையாய் அவள் விளையாடி சிரிக்க இவன் மனம் இப்போது குழந்தையாய் மாறி அவளின்  காலை சுற்றியது.”
துளசியின் முகத்தில் இருந்து கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தவனை “எவ்வளவு நேரம் அந்த போட்டோவயே பாத்துட்டு இருப்ப ராஜா??”
ஒரு மந்தகாச புன்னகையுடன் “அவளோட இந்த சிரிப்பை நிரந்தமா அவளுக்கு கொடுக்குற வழி எனக்கு தெரியுற  வரைக்கும்”.
“என்னடா  சொல்லுற?” அரவிந்த்.
விஷ்வா, “பாரு உன் தங்கச்சிய இந்த போட்டோல எவ்வளவு அழகா சிரிக்குறா!! ஆனா இதுல பாரு முகம் எப்படி வாடி போயிருக்கு”?? என்றவன் முக பாவமும் அதை போலவே மாற்றம் கொள்ள, நேற்று மற்றும் இன்று எடுத்த போட்டோகளை வைத்து சொன்னவன், அர்வி எனக்கு தோள் பட்டைக்குக்கு வருவாளா, செதுக்கி வச்ச முகம், கோலி குண்டு கண்ணு, சின்ன மூக்கு, செப்பு உதடு  என அவளை வர்ணிக்க ஆரம்பித்தவனை, என்ன சொல்லி நிறுத்த?? என தெரியாமல் நின்றிருந்தான் அரவிந்த். 
பதில் எதுவும் வராமல் போகவே திரும்பியவன் அரவிந்தை கேள்வியாக பார்க்க,  “நீ…  பேசுறது உனக்கே புரியுதா ராஜா??” என்றவன், “துளசிக்கு ஒரு பதிநாலு வயசு இருக்குமா??” என நிறுத்தினான். 
“அரவிந்தனின் கேள்வியில், விஷ்வாவின்  பார்வை கோபப் பார்வையாக மாறியது.”
“விஷ்வாவின்  இந்த செய்கை பேச்சு அனைத்துமே புதிது அரவிந்தனுக்கு. விஷ்வா… வீட்டிலும் வெளியிலும் சகஜமாக இருப்பானே தவிர பெண்களை இப்படி ரசனையாக பார்த்தது இல்லை.”   
அரவிந்திற்கு, நன்கு தெரியும் விஷ்வா ஒன்றை நினைத்துவிட்டான் என்றால் அதை முடிக்காமல் விடமாட்டான் என்று. “அதற்கு சாட்சி அவர்களின் நிறுவனத்தை அவன் கொண்டு சென்றிருக்கும் உயரம். தாத்தாவின் பேச்சே அவனுக்கு வேதவாக்கு என்றாலும் சில நேரங்களில் அவரின் வார்த்தைகளும் அவனிடம் செல்லாது. அப்படி பட்ட அழுத்தகாரன் அது வார்தைகளிளோ முகத்திலோ காட்டுபவன்  இல்லை அவன் செய்கையில் தெரியும் இல்லையெனில் தெரியவைப்பான்.” 
துளசி விசயத்தில் அப்படி அவன் முடிவெடுத்தால் அதை மாற்ற முடியாது.. வீட்டில் இருப்பவர்களை சமாளிக்க முடியாது.. உறவுகளுக்குல் விரிசல் அதிகம் ஆகும், இல்லையேல் உறவே அற்று போனாலும் ஆச்சர்யம் இல்லை. அதை புரிய வைக்கவே அவனின் பேச்சை அரவிந்தன் நிறுத்தியது.
“ராஜா இப்ப எந்த முடிவும் வேண்டாம் நிதானமா யோசிக்கலாம்” என்றவன் அவன் பார்வை மாற்றத்தை பார்க்க, அது இப்போது சாதாரணமாக இருந்தது. அதுவே இப்போதைக்கு போதும் என்று நினைத்தவன் இதற்கு மேல் பேசுவது செயல்களை மாற்றும் என்பதால் பேச்சை நிறுத்தி இரவு உணவினை வாங்க சென்றான். 
ஆனால் அரவிந்தன் உணராத ஒரு விசயம் விஷ்வா.. “முடிவினை எடுத்த பின்பே அவனிடம் பேச்சை ஆரம்பித்து.” 
“நேற்று அவளை  பார்க்கும் போதும் சரி, இன்று அவளை பார்க்க போகும் போதும் சரி அவனுக்கு எந்த எண்ணமும் இல்லை. அவளின் சின்ன சோகமான முகம் அவனுள் ஏற்படுத்திய மாற்றம் அவனையும் தாண்டி அவனுள் அவளை தன்னுள் தன்னவளாக பதித்திருந்தது”. 
“அரவிந்த் பேசியதிற்கு விஷ்வா பதில் கூறாதது அவளின் வயதை அரவிந்தன் பேசியதாலே தான். விஷ்வாவும் அவளின் வயதை நினைத்தவன் இப்போதைக்கு தன் எண்ணங்களை செயல் முறை படுத்தமுடியாது என்பதால் எதையும் வெளிபடுத்தாமல் இருப்பதே நல்லது என நினைத்தான். அதன் பிறகு துளசியை பற்றிய பேச்சினை அரவிந்தனிடம் பேசவே இல்லை  விஷ்வா.”
ஆனால்.. “ஊர் திரும்பும் வரையிலும் தினமும் அவளை பார்ப்பதை மட்டும் நிறுத்தவில்லை விஷ்வா. அவளுக்கு தெரியமல் தெடர்வதும், வீடியோ எடுப்பது என அவளின் நிஜங்களை நினைவுகளாக சேகரிக்க தெடங்கினான்.” 
“ஊர் திரும்பி பிறகும் கோதையை பற்றிய விபரங்களை வீட்டில் யாருக்கும் தெரிவிக்க வில்லை இருவரும். அதற்கு காரணம் சிவராமனின் சித்தப்பா… அவரின் வருகையால் மீண்டும் வீட்டில் பிரச்சனை வர அதில் பார்வதியின் உடல்நிலை பாதித்தது”. 
“இந்த நிலையில் கோதையின் கோபம் தெரிந்தால் இன்னும் மனவருத்தம் அதிகமாகும், என்பதாலேயே  விஷ்வா கோதையை பார்த்ததை மறைத்துவிட்டான்.  அதன் பிறகும் தனக்கு நேரம் கிடைக்கும் போதொல்லாம் துளசியை சென்று பார்ப்பதை மட்டும் நிறுத்தவில்லை விஷ்வா.”
“கல்லூரியில் மாஸ்டர் டிகிரியும் முடித்ததும் கம்பெனி நிர்வாகத்தை எடு என்று ராஜேந்திரன் கூற,” இன்னும் இரண்டு வருடங்கள் வெளி நாட்டில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என விஷ்வா சொன்னவன் அரவிந்தையும் உடன் அழைத்து சென்றான்.
விஷ்வா… “சில மாதமாக  மங்களூர் செல்லாததும், வெளி நாடு செல்ல முடிவெடுக்கவும், துளசியை விட்டு விலகியதாக அரவிந்த் நினைக்க, அந்த பிரிவே அவனை இன்னும் துளசியை மனதளவில்  நெருங்க வைத்தது. இங்கு இருந்த பெழுதாவது அடிக்கடி சென்றுபார்த்து வந்தான். ஆனால் இப்பெழுது அது முடியாமல் போக  தவித்து தான் விட்டான் விஷ்வா. அந்த நொடியே முடிவு செய்தான் யாருக்காவும் துளசியை விட முடியாது என்று”. 
“இரண்டு வருடங்கள்” முடித்து வந்தவர்கள் நண்பனின் நிச்சயதார்த்த விழாவிற்காக மங்களூர் வந்திருந்தனர். 
 
“தி கேட் வே ஹோட்டல்” ஏய்… நில்லுடா! என்ற சத்தம் வந்த திசையை விஷ்வா  திரும்பி பார்க்க ஆனந்த அதிர்ச்சி அவனுக்கு.  அவனின் தேவதை துளசி எதிரில். இரண்டு வருடத்திற்கு பிறகு அவளை பார்க்கிறான். அவன் இங்கு துளசியை எதிர்பார்க்கவே இல்லை. விழா முடிந்து நாளை காலை அவளை பார்க்க நினைத்து இருந்தவனுக்கு, தலை வாழை விருந்தாய் அவள். சந்தோசத்தில்  கண்கள் மின்ன, இதயம் தாளம் இட அவளின் பக்கம் போக ஆரம்பித்தான் விஷ்வா.
ஹோட்டல் லானில்  துளசி ஒரு சிறு குழந்தையை துரத்த, அவளின் பின்னால் இன்னெரு பெண் நில்லு துளசி என்றபடி ஓடி வந்தால். 
“அவனின் தோள்வரை இருந்தவள், இப்பெழுது சற்று உயரமாக, பார்பவரை பெரு மூச்சுவிடும் அழகுடன், அவளின் நுனி மூக்கு மச்சம் வா என அழைக்க, அந்த நியான்  நிற ஒளியில்  பாட்டில் கிரீன் லாங் ஸ்கர்ட், மரூன் எம்பிராய்டரி டாப் உடை அவளின் நிறத்திற்கு அத்தனை அழகாக இருந்தது”. பென்சில் ஹீல் போட்டு அவள் ஓடியது தான் அவனுக்கு அத்தனை பயமாக இருந்தது, எங்கே விழுந்து விடுவாளோ என்று.  
“கற்றை முடி இடுப்பை தாண்டியது. லேயர் கட்டுடன் விரிந்திருந்த முடி அவள் போகும் திசை எல்லாம் அவளுக்கு முன் செல்ல அதை ஒரு கையால் காதிற்கு பின் சொருகிய படி அந்த சிறுவனை பிடிக்க ஓடியவள் கையில் பிடிபட்டான் சிறுவன்.”
“சிறுவனை பிடித்தவள், அருகில் இருந்த பெஞ்சில் அவனுடன் அமர்ந்தால் துளசி.”  குழந்தையின் கையில் இருந்த குல்பியை இவள் வாங்கி சாப்பிட, துளசி… “இஸ் நாட் ஃபேர் அது என்து குடு என்று கண்ணை கசக்கியது அந்த வாண்டு.” அவளின் பின்னால் வந்த பெண்ணும் இதுக்கு தான் இந்த ஓட்டமா என்ற படி துளசியுடன் அமர்ந்தாள் திவ்யா.
பையன், “துளசி என்து குடு என்று மீண்டும் அழ, இது என்னோட பிளேவர் உனக்கு தெரியும்ல? லாஸ்ட் டைம் உனக்கு தந்தேன்ல, அப்பவே என்ன சொன்னேன்? நெக்ஸ்ட் டைம் எனக்குதான்னு.  இப்ப நீ தான் நாட் ஃபேர்! என்றிட அவனின் முகம் சுருங்கி போனது. அதை பார்தவள் பையில் வைத்திருந்த மற்றென்றை அவனிடம் நீட்டினாள் துளசி.”
“தேங்க்ஸ், என  அவள் கழுத்தை கட்டிக்கொண்டவன் அவளின் கன்னத்தில் முத்தம் வைக்க,  குழந்தை என்பதையும் மறந்து அவனை கோபமாக பார்தவன் பார்வை , குல்பியை தின்றபின் வாயை துடைக்க லிப்ஸ்டிக் போன அவளின் உதடுகளில்  நிலை பெற்றது.”
காரணம், “லிப்ஸ்டிக் இல்லாமலே இவ லிப் பிங்கலர்லதான இருக்கு. பின்ன எதுக்கு இவ லிப்ஸ்டிக் போடுறா?” என்ற ஆராய்ச்சிகாக. இவன் அவளின் இதழில் நிற ஆராய்ச்சி நடத்த அதனை கலைக்கும் விதமாக அவனின் போன் அழைத்தது.
“அரவிந்த் தான் அழைத்தது. எங்கடா இருக்குற?” ஃபங்சன்னுக்கு டைம் ஆச்சு. 
ம்ம்… வந்துட்டேன் என்றவன் ‘பட்டு அத்தான் அப்பறமா வர்றேன்’.. என மனதேடு அவளை கொஞ்சிய படியே சென்றான்.
“அறையில் விஷ்வா, அரவிந்தனை தூக்கி சுற்ற, எதற்கு இந்த சந்தோசம்?” என புரியாமல் அரவிந்தன் முழித்தவன், விடுடா என்னைய கீழ போட்டு என்னோட எதிர்காலத்த இறந்த காலம் ஆக்கிடாதடா  என கத்த ஆரம்பிக்க,
“விஷ்வா.. அரவிந்த் கத்தியதை கேட்காமல் அவனை முத்தமிட, ச்சே என்னடா பண்ணுற?” என்று கன்னத்தை துடைத்தவன், விஷ்வாவின் அர்வி “துளசிய பார்த்தேன்டா!” என்ற வார்த்தையில்  அரவிந்தின் முகம் சுருங்கியது. என்னடா? எவ்வளவு சந்தோச விசயம் சொல்லுறேன் நீ.. அமைதியா இருக்குற. 
“என்ன சந்தோசம் இருந்தாலும், அதை முழுசா அனுபவிக்க நா சொன்ன காரணத்தில ஒன்னு இன்னும் அப்படியே இருக்கு கோதை அம்மாவோட கோபம் ராஜா, அதை உடைச்சா தான் மத்தது எல்லாம். என்றதும் அதுவரை ஆர்பரித்த விஷ்வாவின் மனது சட்டென அமைதியாகியது”. 
“அரவிந்தின் பேச்சு முடியும் முன்னமே கணக்கிட்டு விட்டான் தான் செய்ய வேண்டியதை. அதில் முதலில் முடிக்க வேண்டியது கயல் திருமணம். கயலின் திருமணம் முடியாமல், தன் கோதையை பற்றி இப்போது வீட்டில் சொல்ல முடியாது காரணம் வினய்.. வினயை பார்த்தால் பார்வதியின் எண்ணம் என்னவாகும் என்பது பற்றி விஷ்வாவிற்கு ஒரு யூகம் உண்டு.”
 
“பார்வதியின் பேச்சில் சில சமயம் அந்த ஏக்கம் வெளிபடும். கயலுக்கும், வினய்க்கும் மூன்று வயது வித்தியாசம். அரவிந்தனை..  கயலுக்கு திருமணம் செய்ய விஷ்வா நினைத்திருக்க, பாட்டியின் பிடிவாதம் சில சமயங்களில் அனைத்தையும் மாற்றிவிடும் என்பதால் இப்போது வினயை தவிர்ப்பது என முடிவு செய்தான் விஷ்வா.”  
“அடுத்து  கோதையின் இப்போதைய மனநிலை கணிக்க கோதையையும், சிவராமனையும் கண்காணிக்கும் ஏற்பாட்டினை செய்ய, அதில் கிடைத்து தான் சிவராமனிடம் சம்பந்தம் பேச வரும் யாருக்கும் அவர்கள் பதில் சொல்லுவது இல்லை என்பது.”  
“இதில் எதுவும் அரவிந்தனுக்கு தெரியவிட வில்லை விஷ்வா. அதை கொண்டே அரவிந்தன் விஷ்வா துளசியை மறந்து விட்டதாக நினைத்தது. இதில் விஷ்வா நினைக்காதது துளசியின் வருகை மட்டுமே.”
“துளசியை பாட்டியுடன் கோவிலில் பார்த்த பொழுது அவனால் நம்பமுடியவில்லை. அவள் தன்னை ஆவென்று பார்திருந்த சில நொடியில், மீண்டவன் அவள் சொன்னது பொய் எனத் தெரிந்தும், அவள் எதுவரை செல்கிறாள் என்பதற்காகவே அவன் எதுவும் அவளை சொல்லவில்லை. பாட்டியிடமும் தான் அவளின் தோழியின் குடும்பத்தை பற்றி விசாரித்து விட்டதாகவும், அவர்களால் கோவிலுக்கு வரமுடியாத நிலை அதனால் அவளை பத்திரமாக ஊருக்கு அனுப்பிவைக்க வேண்டியதாகவும் கூற பார்வதியும் அதன் பிறகு எந்த கேள்வியும் கேட்கவில்லை.”
“கோதையும், சிவராமனும் வராமல் இருந்திருந்தால் விஷ்வா, பார்வதி மற்றும் விஸ்வநாதனிடமும் கூறி இருப்பான் துளசி தான் அவர்களின் பேத்தி என்று.” அதற்கு முன்னமே அனைவரும் வர விஷ்வாவின் வேலை சுலபமானது. 
“இருவரும் அவரவர் எண்ணத்தில் இருக்க,  இவர்களின் எண்ணத்தின் நாயகியோ தன் அண்ணுக்கு சுபாவை ஜோடி சேர்க்கும் முயற்சியில் இருந்தாள்.”
அரவிந்த்… “என்ன பண்ணலாம் ராஜா? துளசி வந்தாச்சு. தப்பு செஞ்சவங்க திருந்தி மன்னிப்பும் கேட்டாச்சு! அடுத்து கல்யாணம் தான? தாத்தா பாட்டிகிட்ட பேச போறியா?” 
“விஷ்வாவிடம் இத்தனை நேரம் இருந்த இறுக்கம் தளர்ந்தது. உல்லாசமாக விசில் அடித்தவன் தாத்தா கிட்ட பேசி என்ன பண்ண?? ” என்றவனை அரவிந்தன் புரியாமல் பார்த்தான். 
“இத்தன நாள் உன் பேச்சை கேட்டு, அவ கிட்ட ஒரு வார்த்தை பேசல. இப்பவாது என்ன பேச விடுடா! நா அவ கூட பேசனும், பழகனும். அவள என்னைய லவ் பண்ண வைக்கனும் இன்னும் எவ்வளவு வேலை இருக்கு, அதுகுள்ள கல்யாணமா?” என்றவனை வேற்று கிரக வாசியாக பார்த்தான் அரவிந்தன்.
“என்னடா மச்சான்??” அப்படி பாக்குற!! புதுசா பாக்குற மாதிரி.
“நீ.. விருந்து சாப்பிட, என்னைய பிச்சை எடுன்னு சொல்லுற. அதுக்கு எதுக்கு இவ்வளவு பில்டப்பு. எதிர்லயே ஆட்டை வச்சுகிட்டு இவரு சுத்தி சுத்தி வருவாராம், அத நாங்க பாலே பண்ணனுமோ?? போடா டேய்..” 
“டேய்.. உன்னைய நம்பிதாண்டா நா இந்த வேலைல இறங்கி இருக்குறேன்!!” 
“நா.. சொன்னேனாடா?? என்னைய நம்ப சொல்லி. எனக்கு இதெல்லாம் வராதுன்னு தான நீ சொன்னதும் உன் தங்கச்சி கழுத்துல தாலி கட்டுனேன்.  உனக்கே இப்ப ஆறு அன்ட் ஆப் ஆஷ் வயசு ஆகுது. இப்ப இவரு அந்த பிள்ளை பின்னால காலேஜ் பையனா மாறி காதல் பயிரு வளர்க்க போறாரு, அதுக்கு நாங்க பின்னாடி போயி தண்ணி ஊத்தனும்மா??” ஏண்டா என்னைய பாத்தா உனக்கு மச்சான் மாதிரி தெரியுதா இல்ல… என்றவனை வாயை மூடினான் விஷ்வா. 
“இதெல்லாம்.. பிளான் பண்ணிதான மாப்பிள்ளை உனக்கு என் தங்கச்சிய கொடுத்ததே!! திடீர்னு நீ பேக் அடிச்சா?? நா இதுக்குன்னு புதுசா ஆளை தேட முடியாது.  ஆமா.. அது என்ன ஆறு அன்ட் ஆப்?? எப்பவுமே செவன் தானடா..” 
“நீ மட்டும்  ஒரு புளோல எட்டு வருசம் சொல்லலாம். அதே நான் சொன்ன உடனோயே விசாரணை கமிசன் வப்பையாடா??”  
“மச்சி.. இப்பவே உனக்கு வயசு இருபத்தி ஒன்பது ஆக போகுது, பெருசுங்க கிட்ட வேலைய விட்டுட்டு வேடிக்கை மட்டும் பாரு. அதவிட்டு களத்துல தான் இறங்குவேன்னு பிடிவாதம் பண்ணனுனா நடக்குற விளைவுகள் விபரீதமா இருக்கும்.” 
“அதுவும் இல்லாம லவ் பிரபோசலுக்கு எல்லாம் முகத்துல பால் வடியனும் தம்பி., உனக்கு இருக்குற திமிருக்கு அத தவிர மத்தது எல்லாம் வடியுது!! என்றவன் முதுகில் விஷ்வா குத்தியவன்.,
“அந்த பாலை நான் பாத்துகுறேன். இப்ப நீ வா ஃபங்சனுக்கு டைம் ஆச்சு என்றவர்கள் கிளம்பி இருந்தனர்.”
                          விஷ்வ துளசி தொடர்வாள்……………
 

Advertisement