Advertisement

“அப்ப நான் ஊருக்கு போயிட்டா?” 
“தாய் கழக்கத்துக்கே போயிட வேண்டியதுதான்”
“மேசமான… அரசியல்வாதிடா நீ!!”
“அரசியல்னாலே மோசம் தான் இதுல நானவது? நீங்களாவது? என்றவனை வாய் மேல் கைவைத்து ஆகட்டும் குருவே” என்றவள் காலையில் விஷ்வா தூக்கியது நினைவில் வர அந்த நிமிட பரவசம் இப்போதும் வந்தது அவள் முகத்தில். அவன் கை பட்ட இடத்தில் இப்போதும் குறு குறுப்பு தோன்ற தேய்தபடி, “உங்க அண்ணாகிட்ட ஒரு கணக்கு பாக்கி இருக்குடா எம் எம்??”
  
“என்ன கணக்கு அண்ணி??” ஜெய் ஆவலாக கேட்க
ம்ம்…. அத வந்து சொல்லுறேன் என்றபடியே வினய் இருக்கும் அறைக்கு சென்றாள்.
“விஷ்வாவின் அறைக்கு எதிரில் அருந்த அறையில்  தான் இருந்தான் வினய்.  அவள் வரும் போதே கவனித்து விட்டான் விஷ்வா. அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்தவன் அவளை திரும்பி பார்க்க வில்லை. ஃபோனில் கவனம் இருப்பதை போல் இருந்தவன், அவள்  சென்றதும் இதழ் விரிந்த புன்னகையுடன் திரும்பி சென்றான்”. 
“அண்ணா…. டேய் அண்ணா….  உடனே ஊருக்கு போகனுமா??”
என்னாச்சு!!
இல்ல…”நீ ரெம்ப நாளா கேட்டையே அத ரெடி பண்ணிருக்கேன்” 
“என்னது நா கேட்டத??” என்றவன் ஏஏஏஏஏய்ய்ய் நிஜமாவா…!!!
“ஆமாம்”  உன்னோட தேவதை கூட ரெண்டு மணி நேரம் எப்படி வசதி இப்ப சொல்லு  இன்னிக்கா, நாளைக்கா??
ம்ம்… “நாளைக்கு இல்ல இன்னிக்கு நைட் ஓகேவா.” 
பரவாயில்ல, ஆனா.. “எனக்கு என் பிரண்ட் பண்ற பப்பட் ஷோல நா  வாய்ஸ் கொடுக்க பர்மிசன்  வாங்கி தரனும், என்ன டீலா??”
“நேரம் பாத்து அடிக்கிறயா நீ??” 
அதே…. அதே….
வினய், “இந்த டீல் ரெம்ப அதிகம் துளசி” 
“ஊஆளு பண்ணற அலப்பறைக்கு இது கொஞ்சம்தான். என்னமோ நா அவள கடத்திட்டு போற மாதிரி அத்தனை கேள்வி கேக்குறா வக்கீலாமா!!  கோர்ட்டுக்கு போகாமயே  இப்படி, இன்னும் கோர்டுக்கு போயிட்டா??”
“நீ… லவ்வ சொல்லி அவ அத ஒத்துக்கிட்டு, கஸ்டம் தான் பேசாம அம்மா பாக்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்க. இல்லனா உனக்கு நேரடியா அடுத்த ஜென்மத்துல தான் கல்யாணம் நடக்கும்.”
“என்னாச்சு?!!” என்று வினய்  ஆர்வமாக கேட்க,
“அண்ணன்னு கூட பாக்கமாட்டேன் அடிப்பேன்டா போயிடு.” வினய் சிரித்தவாரே இருக்க
“டேய்…. உனக்கு வெக்கமா இல்ல?? என்றவள் மணியாச்சு வா போகலாம், இல்லனா அதுக்கும் விசாரணை நடக்கும். பாவம்டாண்ணா நீ…  உனக்கும் நேரத்துக்கும் ஒத்தேவராது, போசாம ஒரு விசாரணை கூண்டு வாங்கி வச்சுடு அப்பதான் நீ வந்ததும் விசாரணை நடத்த சரியா இருக்கும். 
வினய், அதவிட பெஸ்ட் ஐடியா “நா கொஞ்ச நாள் இங்க இருந்து இவங்க எப்படி அவள சமாளிக்குறாங்கனு பிராக்டிஸ் பண்ணவா”.
“வீட்டோட  மாப்பிள்ளையா போறத எவ்வளவு அழகா சொல்றடா”… என்றவள் அவனை துப்புவதை போல் வாயை அசைக்க…
கல்யாணம் பண்ண முதல் தகுதியே, “யார் என்ன சொன்னாலும் கண்டுக்க கூடாது தெரியுமா, அதுவும் காரிதுப்புனா சுத்தமா கண்டுக்க கூடாது.” என்றவனை விசித்திரமாக பார்க்க  அவன் பார்வை துளசியிடம் இல்லை. 
வினயின் பார்வை வாசலில் கார் பக்கத்தில் நின்றிருந்த “ஜெய்யை பார்த்து முழிக்க”, 
செக்கியூரிட்டியாமா, ஆனாலும் “இவளுக்கு வாய் மட்டும் இல்ல திமிரும் ஜாஸ்திதான்” யாருக்கு யார் செக்கியூரிட்டி? என பேசிய படி காருக்கு சென்றனர் இருவரும்.
துளசி, “என்ன சுபா போலாம்மா??”
“ம்ம்… என்றவள் பின்னாடி போக ,இல்ல நா.. பின்னாடி போறேன் தூக்கம் வற்ற மாதிரி இருக்கு,  நீ.. முன்னாடி போ என  துளசி சுபாவை உள்ளே போக சொல்ல சுபா அவளை ஒரு மாதிரியாக பார்த்து கொண்டே காரினுள் அமர்ந்தாள்.” 
விஷ்வா, “அரவிந்த் எங்க இருக்குற??” 
“கம்பெனியில, நீ எங்கட??” என்றவன் போனை பார்க்க அழைப்பு கட்டாகி இருந்தது. அது தான  இவன் ரெண்டு வார்த்தை பேசிட்டாலும்,  இவனோட கிரீடம் கீழ விழுந்துடாது!!
“என்னடா?? நீயா பேசிக்கிட்டு இருக்குற”. 
“ஏன்டா இப்பதான ஃபோன்ல பேசின” அதுகுள்ள இங்க வந்துட்ட. நா.. இங்க தான் கீழ இருந்தேன் நீ வந்தது தெரியலை அது தான். 
அரவிந்த் அவனையே பார்க்க “என்னடா? என புருவம் உயர்த்தினான் விஷ்வா”. 
“நா வந்தது கூட தெரியாம என்ன யோசனை??”
அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல “எம் எல் பி டெண்டர் பத்தி யோசனை அவ்வளவு தான்”அவனை நம்பாமல் பார்த்தவாறே  அரவிந்தன் இருக்க 
“ம்ப்ச்… என்னடா அப்படி  பாக்குற??” விஷ்வா கேட்டான் அரவிந்தனை.  
“ராஜா” எனக்கு சில விசயங்களுக்கு பதிலும் விளக்கமும்  வேணும். “என்னடா புதுசா  பர்மிசன் கேக்குற, என்ன கேக்கனும் கேளு??”
“துளசிய  பாக்குறதுக்கு முன்ன இருந்த ராஜாவா இருந்தா கேக்கலாம்??” இப்ப இருக்குறது  சரி விடு. துளசி பத்தி உன்னோட அபிப்ராயம்??  துளசி வந்ததுல இருந்து நீ சரியில்ல ராஜா நீ.  கோயில்ல துளசிய பாத்ததும் எனக்கு ஒன்னும் புரியல அதுவும் அவள நீ திவ்யான்னு சொன்னதும் எனக்கு இன்னும் குழப்பம்தான்  அதிகம் ஆச்சு.
“எல்லார் கிட்டயும் அவ திவ்யான்னு சொல்லி இருந்தாலும்,  நீ… அவள பாக்குறத வச்சு அது துளசிதான்னு முடிவு பண்ணேன். சிவாப்பாவும், கோதையம்மாவும் வந்தது நம்ம குடும்பம் ஒன்னானது எல்லாம் சந்தேசம்தான். 
ஆனா “இப்பவும் யார் மனசுல என்ன இருக்குன்னு தெரியாது??. நம்ம வீட்ல எல்லாரும் சம்மதிச்சாலும், அம்மா அப்பா சம்மதிக்கல, அவங்க மனசுல இந்த எண்ணம் இல்லனா திரும்பவும் குடும்பம் ஒடஞ்சி போயிடும் ராஜா”. 
“ஏற்கனவே அவங்க பட்ட வேதனை போதாதா, இப்ப திரும்பவும் ஏன்டா?? நீ காலைல அவளுக்கு தெரியாம ரெக்கார்ட் பண்ணது, கோயில்ல  தூக்குனதுன்னு  எதுவும் சரின்னு படல, என்று அவனை பார்க்க., 
விஷ்வாவின் முகத்தில் இருந்து அவனால் எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. “வேண்டாம்னு  விட்டுட்ட விஷ்வா முடிஞ்சத திரும்பவும் ஆரம்பிக்கனுமா.”
“விஷ்வா சேரில் இருந்து எழுந்த வேகத்தில் சுவரில் முட்டி கீழே விழுந்தது அந்த  சேர்.”
“என்னடா முடிஞ்சது??” நா.. சொன்னோனா முடிஞ்சதுன்னு.  எட்டு வருசம் அவ கூட வாழ்ந்துட்டு இருக்குறேன். இப்ப அவ இல்ல மறந்துடுனா அவளுக்காகன்னு இல்ல யாருக்காகவும் என்னோட குடும்பத்த விட  மாட்டேன். அதே போல அவளையும் யாருக்கும் விட்டுகொடுக்கவும் மாட்டேன்.” அத எப்படி செய்றதுன்னு எனக்கு தெரியும் என்றவனை ஆயாசமாக  பார்த்தன் அரவிந்த்.
“என்னடா அப்படி பாக்குற?? பிரச்சனை என்ன, தப்பு யார் கிட்டன்னு தெரியாம இருந்தப்ப எப்படி பேசுறதுன்னு தயக்கம் இருந்தது. இப்ப அவங்களே வந்துட்டாங்க. இப்பவே தாத்தா கிட்ட பேசினா என் கல்யாணம் நடக்கும்.”
இதுல.. யார் மனசும் வருத்தபடாது. “நிச்சயம் அத்தை  வேண்டாம் சொல்ல மாட்டாங்க. அம்மாக்கு சொல்லவே வேணாம் அத்தை வந்த்துல இருந்து பாத்து கிட்டு தான் இருக்குறேன், நிச்சயம் கோதை அத்தைய திரும்பி போக விட மாட்டாங்க.”  
“இதெல்லாம் விட இப்ப எனக்கு வேண்டியது துளசியோட சம்மதம் மட்டும் தான். பெரியவங்க சொன்னாங்கன்னு அவ சம்மதம் சொல்ல கூடாது. எனக்காக என்ன விரும்பி சம்மதம் சொல்லனும் அது மட்டும் தான்” என்றதும்.
“அரவிந்தின் மனம் விஷ்வா முதன் முதலில் துளசியை கண்ட நாட்களுக்கு சென்றது”.
“அப்போது… இருவரும் பெறியியல் படிப்பின் இறுதி ஆண்டில் இருந்தனர். கடைசி வருடத்தில் ஒரு புராஜெக்டிற்காக மும்பை செல்ல வேண்டி இருந்தது,  கடைசி நேரத்தில் அவர்களுக்கான அனுமதி மறுக்கப்படதால், அவர்களின் கல்லூரி முதலில் கூறியிருந்த மங்களூர் கல்லூரிக்கே சென்றனர்.” 
கல்லூரி நேரம் முடிந்து, ஊர்சுற்ற கிளம்பியவர்கள் சென்றது பீச்சிற்கு கடலில் கால் நனைத்துதிரும்பி கரையில் அமர்ந்து வேடிக்கை பார்க்க அரவிந்தன் மீது ஏதோ பட்டது. 
“என்ன அது?? என பார்க்க திரும்பியவன் கண்களில் பட்டது ஒரு பந்து. சுற்றி பார்க்க எதிரில் ஒரு சின்ன பெண் ஓடி வர அதை தன் கேமிராவில் பதிந்திருந்தான் விஷ்வா.”
“துருதுரு கோலி குண்டு கண்கள்,  தோள் வரை சீராக வெட்ட பட்ட முடி, சந்தனத்தில் சிறு துளி மஞ்சள் கலந்த  நிறம், வெள்ளை நிறத்தில் ஊதா நிறப்பூக்கள் தூவிய ஃபிராக்கிள் வந்து  நின்றவள்  “அங்கிள் பால் பிளீஸ்” என்று கேட்டாள் அந்த பெண். 
“யாரு அங்கிள்??” என்ன பாத்தா!!  உனக்கு அங்கிள் மாதிரி தெரியுதா?? என அரவிந்தன் கத்த, முதலில் பாஷை புரியமல் விழித்தவள், அவன் தமிழ் பேசுவது புரிந்தவுடன் “முகம் சந்தோசத்தில் சிரிக்க சார் நீங்க தமிழா??” என கேட்க, அவள் ஏற்கனவே அங்கிள் என்றதில் கடுப்பானவன், “ஏம்மா நா பேசுறது உனக்கு தெலுங்கு மாதிரி இருக்கா??”  என கேட்டான்.
“அரவிந்தன் கத்துவதை கண்டுகொள்ளாமல், என்னோட பேர் துளசி.. என தன்னை அறிமுகம் செய்தவள், பின்னால் இருந்து துளசி வா டைம் ஆச்சு என சத்தம் வர பாய்  சொல்லி ஓடிவிட்டாள் துளசி.”
அவள் போன திசையை பார்த்தவாறே விஷ்வா பார்த்திருக்க, அவனிடம் அனுமதி பெறாமலே அவனின் இதயத்தில் நுழைந்து அவனின் இடத்தில் தன் பெயரை எழுதினாள் “விஷ்வாவின் துளசி”.  என்னைய அங்கிள் சொல்லிட்டாலே!! என புலம்பிய அரவிந்தை,  அர்வி என விஷ்வா உலுக்க., 
“என்னடா??” அரவிந்தன் எரிச்சலாக கேட்க “அத்தைடா” என்றவனை பார்த்து முழித்தான் அரவிந்த்.
“கோதை அத்தைடா. அதோ.. துளசி கூட போறாங்க பாரு வாடா என அவனை இழுத்து கொண்டு ஓடினான் விஷ்வா”.
              
                          விஷ்வ துளசி தெடர்வாள்………………

Advertisement