Advertisement

               ஓம் நம சிவாயா 
விஷ்வ துளசி  அத்தியாயம் 7
“குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி 
கண்ணா., 
குறை ஒன்றும் இல்லை கண்ணா., 
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா.,”
என்ற தேன் குரல் வீடு முழுதும் எதிரொலிக்க கேட்டவர்கள் அனைவரும் மயங்கி நின்றனர்.
அந்த குரலில் கண்ணனை நேரில் கண்ட பாவம் இருக்க, பாடல்  தொடர ஹாலுக்கு வந்தனர் அனைவரும். அவர்கள் பார்த்தது கண்ணில் நீர் வழிய நின்றிருந்த கோதையை தான்.., 
பாடியது கோதை என நினைக்க பாடல் வந்தது பூஜை அறையில் இருந்து. எட்டி பார்க்க உள்ளே “கண்களை மூடியபடி கண்ணனே சரணம்” என அனைத்தையும் அவனிடம் ஒப்புவித்த மனநிலையுடன் அவனை கண்ட பரவசத்துடன் பாடும் துளசியையும், அவள் பாடுவதை கண்ணெடுக்காமல் பார்த்துகெண்டிருக்கும் மங்கையையும் தான்.
துளசி  பாடி முடித்ததும் திரும்பியவள், தன்னை மெய் மறந்து பார்த்துக்கெண்டிருக்கும் மங்கையை  கட்டி அணைத்தாள். மங்கை துளசியை அனைத்தவர் “எவ்வளவு நல்லா பாடுறடா நீ”  என அவளை திருஷ்டி எடுக்க, என் செல்ல அத்தை என மங்கையை கொஞ்சிய படி வெளியே வந்தாள் துளசி.
தாத்தாவும் பாட்டியும்… நிற்பதை கண்டவள் வேகமாக வந்து இருவரின் கையை பிடித்து “இனிய திருமண நாள் வாழ்த்துகள்” கூற பார்வதி வெட்கபட்டு நெளிய, மீசையை முறுக்கிய படி நின்றார் விஸ்வநாதன்.
அவளை தொடர்ந்து அனைவரும் “தம்பதிகளிடம் வாழ்த்துகள் கூறி ஆசிர்வாதம் வாங்க,  பார்வதிக்கு சற்று கூச்சமாக இருந்தது”. இதுவரை,  இது மாதிரியான கொண்டாடங்களை அவர்கள் செய்ததில்லை, கோவிலுக்கு சென்று அர்சனைசெய்வார் அவ்வளவே.
“இன்று அனைவரும் காலில் விழவும் அப்படி ஒரு பூரிப்பு அவருக்கு”…     
“அம்மாடி  மீனா….. எல்லாரும் டிப்பன்னுக்கு வந்துட்டாங்களானு பாரு??” என கேட்டபடி பார்வதி அறையில் இருந்து வெளியே வந்தார். 
ம்ம்….  வந்துட்டாங்க நீங்களும் வாங்க. 
இல்ல… “கோயிலுக்கு போயிட்டு வந்து சாப்டுறேன்” அந்த அர்ச்சன தட்ட குடும்மா.
பாட்டி…. “நாங்களும் வர்றோம்” வாங்க,  சாப்டுட்டு  சேர்ந்து போகலாம் வாங்க என அரவிந்தன் பார்வதியை அழைத்தான். 
“ஏண்டா மடையா” யாரவது சாப்டுட்டு கோயிலுக்கு  போவாங்கலா?? 
“நீங்க சாப்டுங்க பத்து நிமிசத்துல வந்துடுறேன்” என்றவரை சிறியவர்கள் அனைவரும் அழைக்க “பார்வதி…. பசங்க ஆசைபடுறாங்கள சாப்புடு சேர்ந்து போகலாம்” என விஸ்வநாதன் கூற சரி என்றார் பார்வதி.
“பாருடா..!!! நாங்க சொன்னா மடையன்னு சொல்லுவாங்கலாம், அதே தாத்தா சொன்னா சரின்னுசொல்லுவாங்கலாம் என அரவிந்தன் பேச அந்த வயதுமுதிர்ந்த பெண்மணியின் வெட்கம் அத்தனை இளமை”
விஸ்வநாதன் என் பொண்டாட்டிடா,  உனக்கு ஏன்டா நோகுது “பார்வதி இந்தா பொங்கல், மருமக இன்னிக்கு இன்னும் டேஸ்டா செஞ்சிருக்கா  கொஞ்சம் போட்டுக்க” என சொல்ல,  பார்வதி தான் பாவம் எதிரில் மருமகன் அமர்ந்திருக்க, பையன்கள் மருமகள்கள், பேரன் பேத்திகள், என அனைவரும் சுற்றியிருக்க என்ன செய்து வெட்கத்தை மறைக்க என தெரியாமல் தலையை இன்னும் கீழே தாழ்த்திக்கொண்டார்.
“அந்த அழகான சூழ்நிலையை துளசி தன் செல்போனில் பதிவு செய்ய, அவளை  அவளுக்கே தெரியாமல் தன் செல்போனில் பதிவு செய்தான் மற்றொருவன்”. 
“வாங்கோ… வாங்கோ… என்னதிது அதிசயமா இருக்கு குடும்ப சகிதமா எல்லாரும் வந்திருக்கேள் என்னண்ணா விஷேசம், சொல்லிருந்தா சுவாமிக்கு விஷேச அலங்காரம் பண்ணிருப்பேனோ இல்லியோ” அர்ச்சகர் மூச்சு விடாமல் பேச, 
விஸ்வநாதன், “சும்மாதான் சாமி பசங்க எல்லாம் ஒன்னா இருக்காங்க அதுதான் சாமிகும்பிட்டு போலான்னு வந்தோம் என்றவர் அவரின் வீட்டு விபரங்ளை கேட்டவர், சுவாமி பெயருக்கு அர்சனையை செய்ய சொல்ல, தீபாரதனை முடிந்து அனைவரும் சந்நிதியின் முன் படியில் அமர்ந்தனர்”
தட்டில் இருந்த பிரசாத்தை அனைவருக்கும் தரச்சொல்லி பார்வதி,  மங்கையிடம் சொல்ல “பிரசாதத்தை வாங்கி அனைவருக்கும் தந்தவர், கோதையிடம் வரும்போது சற்று தயங்கி அதை நீட்ட கோதை  அதை பார்கதவர் போல திரும்பிகொண்டார். சட்டென கண்கள் கலங்கி விட்டது மங்கைக்கு. கலங்கிய கண்களை மறைத்தவர் கோதை என அழைக்க அப்போது தான் பார்த்தை  போல நீட்டிய பிரசாத்தை வங்கிக்கொண்டார்”
அத்தை…… நா…. போயி பிரகாரத்த சுத்திட்டுவர்றேன் என மங்கை கிளம்ப அத்தை, “நானும்.. நானும்..” என அவளின் பின்னே துளசியும் கிளம்பினால். 
“அத்தை… அம்மா பண்ணத நினைச்சி வருத்த படுறீங்களா” என்றவளை அதிர்ச்சியாக!! மங்கை பார்க்க, நா.. நீங்க கண்கலங்குனத பார்த்தேன்”
 “ம்ம்… அ…அது… கண்ணுல தூசி விழுந்திடுச்சி”
“ஆமாம்… அதுவும் ஆண்டாளு கரெக்டா திரும்பும்போது விழுந்ததுல அத்தை??” 
“ஏய்…. என்ன நீ!! எப்பவும் அவள நீ ஆண்டாளு சொல்ற?? கேக்க ஆளுயில்லனு  பேசுறியா??” என பேச்சை மாற்றினார் மங்கை
“சாரி….” அத்தை அம்மா பண்ணதுக்கு!!!!!
கயல் எப்படியோ, அப்படித்தான் கோதை எனக்கு “அவ பேசி எனக்கு வலிக்குமா என்ன?”
“அவங்க  பேசாதது   தான்   வலிக்குதா அத்தை??”
சிரித்தவர்… விடு துளசி  அவளுக்கு எப்ப தோனுதோ அப்ப பேசட்டும் என்று விட அவரை துளசி பார்க்க ஆமா “நீ எப்ப பெரிய பொண்ணான”???
அது.. “நா நையன்த் படிக்கும் போதுத்தை”. 
“அவளை  மங்கை முறைக்க !!”
“ஓ…. நம்பலையா?? அப்படினா உங்க பையன எனக்கு கட்டிக்குடுங்க அப்ப உண்மை தெரியும்!” 
மங்கை புரியாமல் முழித்தவர்… அர்த்தம் புரிய அவளை துரத்த ஆரம்பித்தார்…,
“நீங்க துரத்தி என்ன பயன்? உங்க பையன் துரத்தினாலாச்சும் உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கு” என்றவாறே ஓட, ஏதிரே வந்தவன் மீது மோதிக்கொண்டால் துளசி.
மங்கை… “ஸ்ரீ புடி அவள என்ன பேச்சு பேசுறா!” 
“யாரு… இந்த புள்ள பூச்சி என்ன பிடிக்குமா?  என்ற கேள்வியே சொன்னது என்ன புடிச்சிட்டு இந்த இடத்தவிட்டு போயிடுவ நீ?” என
மீண்டும் மங்கை புடிடா என  சத்தம் கொடுக்க..,
“அவளை இடையேடு சேர்த்து ஒரு கை தூக்கியது!!”
“விஷ்வா” அவளை தூக்கியபடியே நிற்க துளசிக்குதான் எதுவும் புரியவில்லை.?? 
இவர்கள் இருவருக்கும் எதிர் நின்று துளசி பேசியதால்…. அவளின் பின்னால் வந்த விஷ்வாவை அவள் கவனிக்கவில்லை. 
“யார் தூக்கியது??” எனபார்க்க அவள் திரும்ப “விஷ்வாவின் இமைகள் இவள் இமைகளை தழுவிக்கொண்டது” மின்னல் தாக்கிய அதிர்ச்சியாக சட்டென துளசி துள்ளி இறங்கினால்அவனிடம் இருந்து.
மங்கையும் துளசியும், போய் நேரமானதால் பார்த்துவர ஸ்ரீ போக அதே நேரத்தில்  ஃபோனில் சிக்னல் கிடைக்காமல் சிறிது தள்ளி போய் பேச போனான் விஷ்வா. 
பேசிக்கொண்டே மங்கையும் துளசியும் பேசிகொண்டிருந்த இடம் பக்கமாக வர அவன் பார்த்து, “மங்கையிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்த துளசியைதான்” அவர்கள் பேசுவது கேட்கவில்லை என்றாலும் மங்கை வருத்தமாக இருப்பதையும், துளசி சமாதானம்படுத்துவதையும் தான் சிறிது நேரத்தில் துளசி ஓட ஆரம்பிக்க, அப்பேதுதான் அவர்களின் பக்கத்தில் வந்தவன் காதினில் விழுந்தது “உங்க பையன கட்டிகொடுங்க உண்மை புரியும்” என்ற கடைசி வாக்கியம் மட்டுமே.   
அவனின் “எட்டு வருட காத்திருப்பு” இன்று அவளின் வாய் வார்த்தையாக கேட்டவன்  சிறகில்லாமல் வானத்தில் பறந்து சென்றவன் துளசியை பின்னிருந்து தூக்கிகொண்டான்…
இறங்கியவளை போகவிடாமல்  விஷ்வா பிடித்துக்கொள்ள.., 
“விடுங்க” நா போகனும்!! துளசி சொல்ல
‘விடுறதுக்கா உன்ன புடிச்சேன்’ என மனதோடு  பேசியவாறே அவளை பார்த்து சிரிக்க
துளசி “அவனை முறைத்து பார்க்க”.
என்ன…. “பார்வையெல்லாம் பலமா இருக்கு”? விஷ்வா 
துளசி பதில்செல்லும் முன் அனைவரும் அருகினில் வர  “துளசியின் கையை பிடித்து சிரித்த படி நின்றிருந்த விஷ்வாவை பார்த்த அரவிந்தனுக்குதான் மூச்சுமுட்டிமயக்கம் வரும் போலானது.
அதில் அருகில் இருந்த கயலை கிள்ளிவிட அவள் கத்தியல், “இது கனவில்லை நிஜம்தான்” என்றான்.
கயல் அவனை பார்த்த பார்வையில்,அரவிந்தன் “இல்ல ஜில்லு எறும்பு ஊறுச்சா,” அதுதான் கயல் நீங்க கிள்ளுனதுக்கு அந்த எறும்பே கடிச்சி இருக்கலாம்.  
“ஏன்  ஜில்லு அந்த எறும்ப விட இந்த மாமா மோசமாவ நடந்துகுறேன்??” வா…… வந்து பனிஷ் பண்ணு வா என இழுத்தான். இவனின் தண்டனை விபரம் முழுதாக  அறிந்தவள்!! யாரும் கேட்டார்களா… என சுற்றி பார்க்க… 
“அவங்க எங்க நம்மல கவனிக்க…. இப்ப அவங்களுக்கு புது ஜோடி கிடைச்சாச்சு, இனி நம்மல நாமே பாத்துக்கனும்” நீ வா ஜில்லு என்றவன் தோள் சேர்த்து அனைத்து இழுத்தான்!!
“அத்தான் என்ன பண்றீங்க? இது கோயில் விடுங்க” என திமிறினாள் கயல்
ஏண்டி “கோயில ஒருத்தன் வயசு பொண்ணு கைய புடிச்சி இழுப்பானாம்மா, அத இந்த குடும்பம் கை தட்டி ரசிக்குமாம் விளையாட்டும்பாங்களாம்” நா… என்னோட பொண்டாட்டி தோள் மேல கை போட்டா சாமி குத்தம்மா நல்ல நியாம்டி உங்களுது?
“இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம்  ஜில்லு??  என்ன அத்தான்??”
“வா, அத அப்பறமா சொல்றேன் என்றவனை கயல் முறைக்க,” அதனை உணர்ந்தவன் எனக்கு முதல்ல கண்ஃபாம் ஆகட்டும்  அப்பறமா உனக்கு சொல்றேன்.
துளசி, “நெஞ்சுகுள்ள குடியிருக்கும் நம்மசனம் வெறி தனம்” பாட்டை விசில் அடித்தப்படி, சிறு நடன அசைவுடன் படி ஏறினாள். விஷ்வா அவனின் அறை வாசலில் நிற்பதை பார்தவள், அவளை மறந்து தான் போனாள் காலையில் வேட்டி சட்டையில் இருந்தபோதும் இப்போது  ஃபார்மல் டிரஸில் இருக்கும் போதும் அவன் கம்பீரமான அழகில் எந்த மாறுபாடும் இல்லை.    
விசில் சத்தில் சோபாவில் இருந்து ஜெய் எட்டி பார்க்க, அவன் அருகில் போனவள் அவன் காதினில் “எப்பிடிடா  எம் எம் உங்க அண்ணன் மட்டும் எந்த டிரஸ் போட்டாலும் அழகா இருக்காங்க?”
ஜெய், “என்ன சைட்டா?”  
துளசி.. “ஜெய் உங்க  அண்ணா புறம்போக்குதான?” 
ஜெய்.. “அதிர்ச்சியாக,  என்ன சொன்னீங்க திரும்ப சொல்லுங்க??”
  
“டேய் லூசு”, உங்க அண்ணா இன்னும் யாரும் பட்டா போடதா நிலம் தான??  அப்ப, அத யார் வேணுனாலும் சொந்தம் கொண்டாடலாம். அதுவும் நா புல் ரைட்ஸ் இருக்குற அத்தை பொண்ணனு அப்ப சைட் அடிச்ச என்ன தப்பு??
“தப்பே இல்லமா. “நீங்க சைட் அடிங்க இல்ல அவரையே தூக்கி போட்டு கூட மிதிங்க. உங்களுக்கு இல்லாத உரிமையா என்ன??”
“என்னடா பொசுக்குக்குன்னு கட்சி மாறிட்ட.”
“மெஜாரிட்டி யாரோ அவங்க பக்கம் தான் நான். இப்பஇந்த வீடே உங்க பக்கம் அதனால நா உங்க பக்கம்”. 

Advertisement