Advertisement

கோதை…” இவ்வளவு தூரம் ஏங்க வச்சிட்டேனா நா இவளை”
வினய் ”துளசிக்காகவாவது முன்னாடியே வந்திருக்கனும். என்னோட சுயநலத்துக்காக அவள இங்க அனுப்புனது தப்பு.
ராஜேந்திரன்  அவள் அருகில் சென்றவர் அவள் கையை பிடித்தவர் “எங்கள மன்னிச்சுடுமா ” என்றவரை வேகமாக மறுத்து பேச வந்தவளை தடுத்தார்.
இல்லம்மா “யாரு தப்பு செஞ்சியிருந்தாலும் பெரியவனா நா வந்திருக்கனும் விட்டுட்டேன் இல்ல ” என்றவரை வேகமாக நிறுத்தியவள்
மாமா… விட்டுங்க இந்த பேச்சை எனக்காக பிளீஸ் .., 
விஸ்வநாதன் தான் இப்போது, “பேச… பேச… பேச்சுதான் வளரும் ராஜேந்திரா விடு” என்றவர்  சூழ்நிலையை மாற்ற மற்றவர்களை பார்த்து போங்க போயி குளிச்சிட்டு கிளம்புங்க கோயிலுக்கு போகனும் என்றவர்.,    
பார்வதி.. போ பசங்களுக்கு என்ன வேணும்ன்னு பாரு, போங்கம்மா அத்தை கூட போங்க என அனைவரையும் அந்த இடத்தினை விட்டு போகவைத்தார் விஸ்வநாதன். 
அவருக்கு தெரியும் “துளசியின் கோபம், ஏக்கம் நியாமானது,” துளசியை சமாதானம் செய்ய பேசும் வார்த்தைகள் நிச்சயம் சிவராமனுக்கு வலிக்க செய்யும் என்பதும். 
“நடந்து முடிந்த நிகழ்வை திரும்ப பேசுவதால் வருத்தம் மட்டுமே மிஞ்சும் தீர்வு கிடையாது என்று”
“அறையினுள்ளே துளசியை முறைத்தபடி உட்கார்ந்திருந்தார் கோதை” 
‘கைபுள்ள., இன்னிக்கி ஒனக்கு கட்டம் சரியில்ல பாத்து பேசு, பேச்சு பேச்சாதா இருக்கனும் இல்லையினா……ஆகுற சேதாரத்துக்கு நா பொறுப்பில்லை’ என மனதோடு பேச்சுவார்த்தை நடத்தினாள் துளசி
அண்ணி….. என அழைத்தவாரு குழலி உள்ளே வர,  துளசி ‘கைபுள்ள கிரேட் எஸ்கேப்பு இப்படியே தப்பிச்சி  ஓடிடு’  நினைத்தவள் அத்தை என்னத்தை இது?? என்றாள்.
இது… அண்ணிக்கு “புடவைம்மா” என கையில் இருந்ததை காட்டினார் குழலி.
அப்ப எனக்கு?? 
“நீ… புடவை கட்டுவியா?!”
“அத்தை….. காந்தி செத்துட்டாரா” ரியாக்ஸன் எதுக்கு.
“சேலைய குடுங்க அப்புறம் பாருங்க வாங்க.. வாங்க” என அவரை அழைத்துக்கெண்டு வெளியேற பார்க்க 
கோதை,  “அண்ணி முதல்ல அவள பாவாடை நாடவ ஒழுங்க கட்டசொல்லு” என்றிட
ஆண்டாளு…… உனக்கு என்ன டேமேஜ் பண்றதே வேலையா போச்சு, “சிவா பக்கத்துல இல்லைனு பேசுறியா  ஆண்டாளு நீ..” என பரிதாபமாக முகத்தை வைத்துகொண்டாள்
என்னடி… “எப்பாரு பேருவச்ச மாதிரி, சிவா.. சிவான்னு சொல்லிக்கிட்டே இருக்குற” என துளசியை அடிக்க போக குழலி கோதையை  தடுத்தவர், விடுங்க அண்ணி சின்ன புள்ளைய அடிச்சிகிட்டு என துளசியை காப்பாற்றினார்
அது  ஒன்னும் இல்ல அத்தை சிவான்னு அம்மாதான் கூப்புடுவாங்க, “நா…. கூப்புட்டா பொறாமை” அதுதான் என கண்களை சிமிட்டி காட்ட  கோதையின் முகம் சங்கட வெட்கம் கொண்டது.
“தேங்க்ஸ் அத்தை” கன்னத்தில் முத்தமிட்டவாரே வெளியே ஓடி போனால் துளசி.
அதிர்ச்சியில் குழலி.. “என்ன அண்ணி இது ?!”
உனக்கும் கொடுத்துட்டா என கோதை சிரிக்க குழலி வெக்கப்பட்டு சிரித்தார்., 
இப்படித்தான் அண்ணி ஏதவது தப்பு பண்ணிட்டு மாட்டிப்பா. கேள்வி கேட்டா.. இப்படி தான் முத்தம் கொடுத்துட்டு அசந்த நேரமா பாத்து ஓடிபோயிடுவா.., 
பாட்டி போதும்….  “நகை  கடை பொம்மை கூட கொஞ்சமாதான் நகை போடும்” வேண்டாம் பாட்டி என துளசியும்…… நல்லா இருக்குமா என பார்வதியும்…..  நகையை வைத்துக்கொண்டு  பேசியவர்களின் சத்தம் காதில் விழ., 
“என்ன பஞ்சாயத்து??” என உள்ளே நுழைந்தான் வினய்.
பார்வதி நகையை காட்டி, “பாருடா தம்பி இந்த நகை எவ்வளவு அழகா இருக்கு…. என அந்த கால நாகாபரணம் வகையை சேர்ந்த நகைகள் இருந்த பெட்டியை காட்டினார்,”
அதை பார்த்தும் சிரிக்க ஆரம்பித்தான் வினய்.., 
“ஏம்பா..!!” என பரிதாபமாக பார்த்தார் பார்வதி 
பாட்டி… “அவ வெறும் கயிற முடிச்சுபோட்டு கட்டி விட்டாலே  வெயிட்டா இருக்குன்னு கலட்டி வச்சுட்டு போயிடுவா, நீங்க இவ்வளவு பெரிய நகைய பெட்டியை குடுத்தா” என மீண்டும் சிரித்தான் 
“டேய் அண்ணா..” என்றவளை ஏம்மா அண்ணன்ன இப்படி மரியாதையில்லாம பேசலாமா?? என பார்வதி கேட்டார்
‘கைபுள்ளக்கி இன்னிக்கு கட்டம் சரியில்லனு தெரிஞ்சும், திரும்ப திரும்ப மாட்டிக்கிறயே கைபுள்ள’  என நினைத்தவள்., அசடு வழிய சாரி பாட்டி இனிமே கூப்புட மாட்டேன் என வினயை பார்தபடி உடனே சமாதானமாக போனாள்..  
வினய், துளசி பார்த்த பார்வையில் ஜெர்க்கானவன் “எலி பொறிக்குள்ள நானா சிக்கிட்டேனா என்ன??” என நினைத்தவன் அவசர வேண்டுதல் வைத்தான் “சனீஸ்வரனுக்கு இருபத்தியொரு எள் தீபம் ஏற்றுவதாக.’
அவன் இதுவரை துளசியால் பட்ட அவஸ்தைகளை தெரிந்த சனீஸ்வரனே, வினயை நினைத்து பாவப்பட்டாரோ என்னமோ உடனடியாக இரத்தினத்தின் வாயாக பேசினார்.
ம்மா…… “எவ்வளவு நேரம்??” சீக்கிரம்மா வாங்க
“வர்ரேண்டா,” இவ ஒருத்தன் அவசரத்துக்கு பொறந்தவன் என  பார்வதி பேசியபடியே துளசிக்கு அவர் தேர்தெடுத்த நகையையே போட்டுவிட்டு, அழைத்துவர அம்மன் சிலையென இருந்தவளை மங்கை திருஷ்டி எடுத்ததை இரு விழிகள் கள்ளத்தனமாக சிறையெடுத்தது.
“இன்றுடன் மூன்று நாட்கள் ஆகிவிட்டது கோதை தாய் வீடு வந்து” மூன்று நாட்கள் மூன்று நிமிடங்களாக கரைந்து போனது அத்தனையும் சந்தோச நிமிடங்கள்.
முதலில் பொறாமை கொண்ட இளமை பட்டாளம் முழுவதும் இப்போது துளசியின் வசம்.
அதிகம் பேசாதா ஸ்ரீயையே, பக்கத்து  தோப்பில்  திருட்டு மாங்காய் பறிக்க வைத்த பெருமைய இவளையே சேரும்
ஜெய்யோ.., துளசி தாசனாகவே மாறிவிட்டான்
“தோப்பில்….” கீழே அமர்ந்து ராதாவும் ஜெய்யும் அண்ணாந்து பார்த்தபடி இருந்தனர்
“ஏன்டா ஜெய் உனக்கு ஏதாவது புரியுதா??” ராதா
ஒன்னு புரியுது …. 
என்னடா???? 
இப்படியே பாத்துட்டு இருந்தா “எங்கழுத்து சுளுக்கிடும்ன்னு.” 
துளசி….. ஏன்டா ஜெய் “ஏதவது கிடைச்சதா??” 
“என்னன்னு சொல்லாம கிடைச்சதான்னா?”
“டேய் பக்கி… நாளைக்கு தாத்தா பாட்டி கல்யாண நாள்,  வித்யாசமா பண்ண ஜடியா வந்ததானு கேட்டா திரும்ப என்கிட்டயே கேக்குறியா??” என மரத்தின் மேலே இருந்து  தொப்பென குதித்தாள் துளசி.
ராதா… தாத்தா பாட்டி இது வரைக்கும் “கல்யாண நாள் செலிபிரேட் பண்ணது இல்ல” மிஞ்சி போனா அம்மா பாயாசம் பண்ணுவாங்க, பாட்டி கோவிலுக்கு போவாங்க அவ்வளவுதான். அதனால நாம சாதாரணமா பண்ணினாலும் அது கிராண்டாதான் இருக்கும்.
துளசி… அப்படிங்குற!!?
ராதா…. அப்படிதாங்குறேன்.  
“அண்ணி நேரமாச்சு போகலாம் இருட்டபோகுது பாருங்க…” ஜெய் கூற மூவரும் மெதுவாக வரப்பின் மீது நடக்க ஆரம்பித்தனர் 
ராதா.. நீ எதுக்கு வக்கீலுக்கு படிக்குற?? என பேச்சினை ஆரம்பித்தாள் துளசி. அவ்வளவு இன்ட்ரஸ்டா உனக்கு இல்ல வீட்டுல அண்ணா, அக்கான்னு படிச்சதாலா நீயும் படிக்குறயா? என கேட்டவளை பார்த்து சிரித்தனர் ராதாவும் ஜெய்யும். 
“எதுக்கு சிரிக்குறீங்க ரெண்டு பேரும்?”.  அண்ணா படிச்சது ஓகே, அக்கா லா படிக்க பாட்டி  ஒத்துக்கல.  அண்ணாதான் அவ படிச்சு கோர்டுக்கு போகமாட்டா,  நம்ம கம்பெனிக்கு மட்டும் தான் வருவா, அதுவும் ஸ்ரீ அண்ணாவுக்கு மட்டும் அசிஸ்டென்டானு பிராமிஸ் பண்ணதால தான் பாட்டி ஒத்துக்கிட்டாங்க. 
அப்ப நீ?? துளசி கேட்க “நா கிரிமினல் லாயர் ஆகி பொண்ணுங்களுக்கு எதிரான கேஸ்ஸா எடுத்து நடத்துவேன்” என பெருமையாக பேச,  அதுக்கு பாட்டி ஒத்துப்பாங்காலா?? துளசி கேட்டாள் 
அதுகுள்ள தான் “தந்தை கிழவி மண்டைய போட்டுமே”!!
அப்ப, “தாய் கிழவிய கொல்லுறதுன்னு முடிவு செய்துட்டியா??” 
“சில நல்லது நடக்க பலர் ரத்தம் சிந்திதான் ஆகனும்” என்றவள், எங்க ராஜா அண்ணா இருக்க எனக்கு என்ன பயம். பாட்டிய அண்ணா பாத்துபார்  என இல்லாத காலரை தூக்கி விட்டவள் அண்ணனின் பெருமையை பேச ஆரம்பிக்க, துளசி மனதினுள் கணக்கிட ஆரம்பித்தாள். “விஷ்வா மனது வைத்தால் வினயின் ஆசை நிறைவேறும்” என்று. 
சட்டென  “விஷ்வாவை அன்று ஹோட்டலில் பார்த்தது, கோவிலில் அவனை பார்த்து அவளை மற்றது நின்றது” என  அவனை நினைத்து நடக்க அந்த நினைவே ஏதோ சொர்கத்தில் இருப்பது போல் தோன்ற கால் தடுமாறியவள் சேற்றினுள் விழுந்தாள்.
அவள் விழுந்ததை பார்த்து இருவரும் சிரிக்க அவர்களையும் இழுத்து விட்டால் சேற்றில் துளசி    
வீடு வந்து சேர்ந்த மூன்று பேரின் கோலத்தை பார்த்தவர்கள்  அப்படியே நின்றனர்.!!
என்னடா ஜெய்… “நம்மள பாத்து அசந்து போயி நிக்குறாங்க நாம என்ன அம்புட்டு அழகாவ இருக்கோம்!?” துளசி  அவன் காதை கடிக்க
“அழகா?? இல்ல அண்ணி அசிங்கமா இருக்கோம்… இப்ப பேய் நம்மள பாத்தா நம்ம விட அது அழக இருக்குனு அதுவே  அதுக்கு சர்ட்டிபிகேட் கொடுத்துக்கும்!”
அவ்வளவு……. அசிங்கமாவா இருக்கோம் !!??
இல்ல கேவலமா இருக்கோம்!!!
“அப்படியே நில்லுங்க” மூன்னு பேரும் என்றபடி கோதை வர…
“ஆண்டாளு எப்ப வந்தது?”
அவங்க எப்ப வெளியே போனாங்க???? ராதா
அவங்க போனதால தான நாம போனோம்…. துளசி
ஏண்டி… “நீதான் வாலில்லாத குரங்குன்னா எதுக்கு அந்த குழந்தைகளையும் கெடுக்குற”
“யாரு??” இவங்க குழந்தைங்க!!! என முனங்கினாள் 
கோதை என்னடி?முனங்குற
என்னம்மா இது?? சிரித்தார் விஸ்வநாதன் …. 
பாருங்கப்பா….  “எப்படி போய் சேத்துல பிரண்டு வந்துருக்காங்க”. 
துளசி விஸ்வநாதனை பாவமாக பார்த்தாள்…. 
சரி விடும்மா, சின்ன பசங்கதான போங்க போய் குளிங்க, என கோதையிடம் இருந்து அவளை காப்பாற்றி அனுப்பினார் விஸ்வநாதன்…
“கோதையை விஸ்வநாதன் சமாளித்தை சந்தோசமாக ஏற்றவள்!! நாளை இதே விஸ்வநாதனால் தான் சூழ்நிலை கைதியாவதை சமாளிப்பாளா இல்லை ஏற்பாளா??”
  
                  விஷ்வ துளசி தெடர்வாள்………….

Advertisement