Advertisement

                  ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 6
“கோதையை” பார்த்த அதிர்ச்சியில் பார்வதி மயங்க பின்னால் வந்தவர்கள் தாங்கி பிடித்தனர்.
கோதை,  “அம்மா என ஓடி வந்தவர் பார்வதியை பிடித்த படி மடங்கி அமர்ந்து” அழ சுற்றி இருந்தவர்கள் அவர்களை சமாதானம்படுத்த, என ஒரு பாச போராட்டம் நடைபெற்றது அங்கே.
தனக்கும், அந்த இடத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என  ஓரத்தில் தனித்து நின்ற திவ்யாவை “ஒரு கையை பிடித்து இழுத்தது”
பயந்து கத்த போனவள்,  இழுத்தது வினய் என்பது தெரிய, பெரு மூச்சு விட்டவள்,  அவனை முறைக்க உள்ள வா, என பக்கத்தில் இருந்த  அறைக்குள் அவளை நகர்த்தி சென்றான் வினய்.
“டேய்……. அண்ணாஆஆஆஆஆ…!!”
என்னடா நடக்குது இங்க??  ஏன்டா நீங்க வர போறத ஏங்கிட்ட சொல்லனும்ற அறிவு இல்லையாடா உனக்கு??  இப்ப என்னடா செல்லி தப்பிக்க?? 
இந்த ஆண்டாளு, சும்மாவே என்ன வச்சு செய்யும். இப்ப நா இங்க இருக்குறது தெரிஞ்சா அவ்வளவு தான்!! என் கதை முடிஞ்சது.  நா என்ன பண்ண… ஏது பண்ண “நாராயணா”  இப்படி புலம்ப விட்டுட்டயே என்னைய.
டேய் அண்ணா ”உன்னேட  லவ்வுக்கு ஹெல்ப் பண்ண வந்து, இப்ப நா… காதல், கல்யாணம் இல்ல.. இல்ல ஒரு சைட்டு கூட  இல்லாம நா போகபோறேனே.  
இந்த சிவா.. கூட ஊருக்கு போறேன்னு சொன்னாறே தவிர இந்த ஊருக்குதான் வர்றோம்னு சொல்லலையே என புலம்ப ஆரம்பித்தவளை,
“பட்டென…. அவள் பின்னந்தலையில்” தட்டினான் வினய். 
“ஏன்டா அடிச்ச??” லூசு வினய் என அவனை முறைத்தபடி தலையை தேய்த்தாள் துளசி. 
“யாரு… நா.. லூசு நீ அறிவாளியா??” எங்க உன்னோட போன்?? எத்தன தடவ டிரை பண்றது எடுக்கலைன்னு மெசேஜ் பண்ணா அதையும் நீ பாக்கலை.  நீ… என்ன லூசு சொல்றியா ?? இப்ப…. என்ன பண்றது ?? என  கேட்டான் வினய்.
நா.. ஏன் பண்ணனும்??  உனக்காதான  வந்தேன், நீயே பண்ணு என சிலிர்த்துகொண்டாள் துளசி.
ம்ம்….வினய் ரெண்டு பேரும் தான் என முறைத்தான் வினய்.
கோதையை பார்த்த மகிழ்ச்சியில் “சிவராமன்”  வெளியே நின்றதை யாரும் கவனிக்கவில்லை.
அப்பா.. அவரு.. என கோதை சொன்ன பின்பே “சிவராமனை கவனித்த விஸ்வநாதன் வேகமாக வெளியே செல்ல” அவரின் பின்னே அனைவரும் சென்றனர்.  
விஸ்வநாதன், “உள்ள வாப்பா ராமா” என கையை பிடித்து அழைக்க ராஜேந்திரனும் வாசனும், சிவா, அத்தான் என கட்டி பிடித்தனர்.  சட்டென “விஸ்வநாதனின் காலில் நெடுஞ்சாண் கிடையாக சிவராமன் விழுந்தார்.” இதை எதிர்பார்க்காத அனைவரும் பதறிதான் போனார்கள்
சிவராமனை, அரவிந்தன் தான் சட்டென உடனேயே தூக்கி நிற்க வைக்க தான்.
விஸ்வநாதனை  பார்த்து “சிவராமன் கைகூப்பி மன்னிப்பு கேட்க”  அவரின் கைகளை கீழே இறக்கியவர் வேண்டாம்பா, நடந்ததை எல்லாம் மறந்துடுங்க உள்ள வாங்க. பார்வதி.. பாரு தம்பிய உள்ள கூப்புடாம என்ன பண்ற நீ. என சத்தமிட்டவருக்கு ”நிஜத்தில் எதுவும் புரியவில்லை. தன் மகள் வந்தது, மருமகன் மன்னிப்பு கேட்டது”  என எதையும் நம்பமுடியவில்லை
உடல் நடுங்க “சிவனின் சந்நிதியை” பார்த்து கையெடுத்து கும்பிட்டவர், சிறிது நேரம் தன்னை ஆசுவாசம் படுத்திக்கொண்டு உள்ளே சென்றதும் பார்த்தது இரத்தினம்….சிவராமனிடம் மன்னிப்பை கேட்பதைத்தான்.
“என்ன மன்னிசுடுங்கத்தான்??” இல்ல இரத்தினம் நீங்க தான் என்னைய மன்னிக்கனும், யாரே பேச்ச கேட்டு புத்தியில்லாம குடும்பத்த பிரிச்சி, எல்லாரையும் கஷ்டபடுத்தி, என்ன ஏதுன்னு தெரியாம உன் வாழ்கையையும் பாழாக்க பாத்தேன். “என்னை நீதான் மன்னிக்கனும்” என்றவரை இரத்தினம் கட்டிபிடித்தார்.   
விஸ்வநாதன், ம்க்ஹூம்… என செருமியபடி உள்ளே வந்தவர் “இந்த பேச்ச இதோட விட்டுடனும் இனி பேசகூடது” என கட்டளையாக பேச அனைவரும் அதற்கு தலையை மட்டும் அசைத்தனர்.., 
விஸ்வநாதன், “கோதை பேர பசங்க எங்கம்மா ??”
கோதை, இங்கதான இருந்தான் என்றவர் “வினய்” என கூப்பிட உள்ளிருந்து வெளியே வந்தவனுடன் வந்தவளை கண்ட கோதை, “நீ..!!எப்படி இங்க??” 
பார்வதி.., “இந்த பொண்ண தெரியுமா கோதை?!! 
“அம்மா…. இவதாம்மா உம்பேத்தி துளசி.” 
அனைவரிடமிருந்து வந்ததும் ஒரே வார்த்தை “என்னது துளசியா??!!”
ஊசி விழுந்தாலும் கேட்கும் அளவு அமைதி
“நீ.. எப்படி துளசி இங்க??” என கேட்டார் கோதை 
பார்வதி.. “திவ்யா ரெண்டு நாளா” இங்கதான் இருக்குறா கோதை.,
அம்மா.. திவ்யா இல்ல “துளசி” அவ பேரு.
“எங்களுக்கு திவ்யாவாக தான் தெரியும்!!” என துளசியை ஒரு பார்வை  பார்வதி பார்க்க.,
அந்த பார்வையில் தலை குனிந்து நின்றவளை கோதை “இங்க பாரு துளசி.. திவ்யா கூட ஊருக்கு போறேன்னு  பொய் சொல்லிட்டு இங்க வந்தியா??”
“சரி…. வந்துட்ட இல்ல யாருகிட்டையும் எதுவும் சொல்லாம எதுக்குடி  பொய் சொன்ன??” பதில் பேசுடி என கோபமாக கையை ஓங்கியபடி அவளிடம் போக 
தாத்தா பாட்டி, என துளசி அவர்களிடம் ஓட கோதை.. பாப்பா மேல கை வைக்காத என மாமன்கள் மூவரும் குரல் கொடுத்து அவளை தாங்கி பிடித்தனர். அதை பார்த்த அத்தைமார்  ஆனந்தமாக சிரித்தனர் என்றால் ஐந்துபேரின் வயிரு  எரிந்தது.,  
அதில் இரண்டு பேரின் வாய் மட்டும் கவுத்துட்டா என முனங்கியது. அதில் ஒருவன் வினய் என்றால் மற்றவன் விஷ்வா
“சொல்லுடி… அந்த வாய் பேசுவ இப்ப சொல்லு??” என கோதை கத்தினார் 
“அவர் இவ்வளவு சத்தமாக பேசுவதை” இன்றுதான் அனைவரும் கேட்கின்றனர்.
“கோதை அப்படி ஒரு அமைதி” அன்று அவ்வளவு பிரச்சனையான போதும் அமைதியாக தான் இருந்தார். ஆனால் இன்று அப்படி ஒரு கோபம் மகள் பொய் சொல்லி வந்தது.
குழலியும்.. மீனாவும் இப்போது கோதையை தாங்கி பிடித்தனர் குழலி  “ஏண்ணி இவ்வளவு கோபமா பேசுறீங்க..??” பாப்பா  நம்ம வீட்டுக்குதான வந்திருக்கு  
அதனாலதான் கோபம் அண்ணி என இன்னும் கோதை சீறி பேசினார். 
பார்வதி தான் “கோதை என்ன பேசுற..?? நம்ம வீட்டுக்கு வந்ததுக்கு எதுக்கு கோபம் அவளோட சொந்தங்கள தேடிதான வந்து இருக்கா. 
“இங்க” வந்ததால சரியா போச்சு இதுவே வேற எங்கயும் போயிருந்தா?? தெரியாத இடத்துல மாட்டியிருந்தா?? எங்கிட்ட பிரண்ட் வீட்டு திருவிழாக்கு போறேன்னு சொல்லிட்டு வந்தா. இவளுக்கு ஏதவது ஒன்னுன்னா??  என்னம்மா பண்றது நான்? இது வரை நீங்க இல்லாம இருந்தேன் இப்ப இவ இல்லாம இருக்கவா??  என கோதை அழ ஆரம்பித்தார் 
“இத்தனை நாள் பாரம் அவரின் மனதை விட்டு நீங்கட்டும்” என அனைவரும் அமைதியாக இருந்தனர்.
விஸ்வநாதன், “துளசியின் தலையை வருடியபடியே, சொல்லுடா தங்கம் அம்மாட்ட பொய் சொல்லிட்டு வந்தது தப்புதானடா??” 
“என்ன தப்பு?? இல்ல என்ன தப்புன்றேன்??” என்றாள் துளசி அவ்வளவு கோபமாக
“எத்தன நாள் கேட்டு இருப்போம்??” நானும் அண்ணாவும் 
அண்ணணாவது  உங்க கூட கொஞ்ச நாள் இருந்திருக்கான். ஆனா “நா இருக்குறதாவது தெரியுமா உங்களுக்கு??” 
துளசி இதை கேட்டதும், அனைவரின் முகத்தில் சொல்ல முடியாதவருத்தம். 
ஒரு நாள் ஸ்கூல்ல, அவங்க அவங்க ஊர பத்தி சொந்தத்தை பத்தி எழுதுங்கன்னு சொன்னாங்க, எனக்கு தான் தெரியாதே அதனால எழுதல. 
மிஸ் கேட்டாங்க உனக்கு சொந்தகாரங்க யாரும் இல்லையான்னு?? நா தெரியாதுன்னு சொன்னதும் கிளாஸ்ல எல்லாம் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க,  எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல, கோபமா கிளாஸ விட்டு வெளியே வந்துட்டேன். அண்ணாதான் சமாதானம் பண்ணுனாங்க. அப்பதான் நமக்கு தாத்தா பாட்டி, அத்தை மாமா, எல்லாம் இருக்குறதா அண்ணா  சொன்னாங்க.
“உங்கள பாக்க போலாமான்னு கேட்டேன்??” அதுக்கே, இப்ப வரைக்கும் பதில் சொல்லல இவங்க, என கோதை மற்றும் சிவராமனை பார்த்து கை நீட்டி அன்று நடந்தற்க்கு இன்று முகத்தை சிறு பிள்ளையாக காட்டினால்.
பசங்கல்லாம் நாங்க ஊருக்கு போனோம்,  எங்க வீட்டுக்கு சொந்தகாரங்க வந்தாங்கனு சொல்லும் போது, எப்படி இருக்கும் தொரியுமா?? கத்தி போங்கடா எனக்கும் உங்கள விட அதிக சொந்தம் இருக்குன்னு சொல்ல தோணும்
“வரதன்” அங்கிள் கிட்ட  கேட்டதுக்கு அப்பறம் தான் தெரியும் உங்கள பத்தி. 
“எத்தன நாள் நானும் அண்ணாவும் இங்க வர யோசிச்சி இருப்போம்??” 
ஆனா என்ன பிரச்சனை தெரியாது?? யார் மேல தப்புன்னும் தெரியாது?? எல்லாத்துக்கும் மேல “நாங்க என்ன தப்பு செஞ்சோம் யாரும் இல்லாத அனாதைங்க மாதிரி இருக்க”
அம்மா.. எத்தன நாள் நாங்க யாரும் இல்லாதப்ப அழுது இருக்காங்க   தெரியுமா..??
அதுதான்….. இவங்ககிட்ட கேட்டா கூட்டிட்டு வருவாங்களானு?? யோசன பண்ணேன்  நிச்சம் வரமாட்டாங்க அதுதான் நானே வந்துட்டேன்..,
ராஜேந்திரன் “சரி  வந்த உடனே நீ சொல்லிருக்லாம்லடா தங்கம்?”
“என்னன்னு மாமா.. உங்க தங்கை பொண்ணுனா??”
“வெளிய போன்னு சொல்லிட்டா” நா என்ன பண்ண?? 
“அவ்வளவு மோசமான ஆளுங்களா நாங்க??” என வாசன் கோபமாக கேட்க அந்த கோபம் “தன் தங்கை தங்களை பற்றி எதுவும் சொல்லவில்லை என்பதால் வந்தது.”
வெளியே போக முயன்றவரை துளசி இழுத்து வந்து உக்காருங்க மாமா.. என அமரவைத்தவள் அவரின் பக்கத்தில் அமர்ந்து தோள் மீது சாய்ந்துகொண்டால்.
என்னடாம்மா?? என வாசன் கேட்க
எனக்கு தெரியாதே மாமா.. நாங்க வருவேம்ன்னு தவம் இருக்குற தாத்தா பாட்டி, மாமா, அத்தைங்க,  அவங்க பசங்கனு தெரிஞ்சிருந்தா வந்ததும் சொல்லிருப்பேன்.
இங்க வந்ததுக்கு அப்பறமா தான் தெரிஞ்சது, நீங்க எல்லாரும் அம்மாவ “எவ்வளவ்வு தூரம் மிஸ்பண்றீங்கனு..!”
“அம்மா, மேல நீங்க கோபமா இருந்த” நா.. யாருன்னு சொல்லாம உங்க கூட ரெண்டு நாள் தங்கிட்டு போயிடலாம்ன்னு தான் நினைச்சேன் ஆனா பாத்துட்டு அப்படியே போக முடியல மாமா..
உங்ககிட்ட உண்மைய சொல்லாம்னா, அம்மா அப்பா முடிவு என்னனு தொரியல?? உண்மைய சொல்லி அவங்க வரல்லனா?? அது தான் “அங்க போயி பேசி அவங்கல இங்க கூட்டிட்டு வரான்னு பிளான் பண்னேன் !” அது கடைசி நிமிசத்துல உங்க தங்கச்சியால சொதப்பிடுச்சு!! என்று   வேகமாக பேசியவள் கடைசி வார்த்தைகளை மட்டும் கோதையை பார்த்து கண்ணடித்து கூறினாள்
இத்தனை நேரம் துளசியை பார்த்திருந்த அத்தனை பேர் பார்வையும் மாறிபோயிருந்து.
சிவராமன்…..”தப்பு பண்ணது நான் ஆனா தண்டனை இவங்களுக்கு கொடுத்துட்டேன்” 

Advertisement