Advertisement

“ஏ….சொல்லனும்?? அவரு சரியாதான பேசுறாரு” நீங்க…. அப்படி நினைக்கலனா?? “இரத்தினத்துக்கு… என்னேட தங்கச்சிய கட்டிவையுங்கனு” நா…  சொல்ல யாருக்கும்  பதில் சொல்ல வாயே வரல்ல…
திரும்பவும் சித்தப்பா “நம்ம பொண்ண கட்டலனா அவங்க பொண்ணு எப்படிநம்ம வீட்டுல இருப்பானு??” பேச ஆரம்பிச்சிட்டாரு
இத கேட்டு உள்ள வந்த இரத்தினம் “சித்தப்பாவ அடிச்சிட்டான்” அத பாத்த நா… “ரத்தினத்த அடிக்க போக.., வாசன் என்ன தள்ளி நிறுத்த வந்தான் அதே நேரம் மாமாவும் பெரியவங்கள கை நீட்டுவயாடான்னு இரத்தினத்த அடிக்க கை ஓங்கினாங்க நா.., என்ன அடிக்க கை ஓங்குறாருன்னு தப்பா நினச்சி அவரு சட்டைய புடிச்சிட்டேன்”
அப்பதான் வீட்டு பொம்பளைங்க எல்லாம் வெளியே வந்தாங்க…,  “உங்க அம்மாவ எங்கூட வரசொன்னேன்??” 
அதுக்கு கோதை “உங்க தாத்தகிட்ட மன்னிப்பு கேட்டாதான்.,” வருவேன்னு சொல்லிட்டா
“அத்தனபேரு முன்ன நா…. மன்னிப்பு கேக்குறதா.., என்மேல என்னதப்பு நா ஆம்பளை அப்படிங்குற  ஈகோ” “இத்தன பேர் முன்னாடி என்ன அவ புருசன மதிக்கமாட்டாலாமா..,??” அப்படின்ற நினைப்பு வர 
“நா போறேன், நீ வந்த வா…?? இல்லைனா இங்கயே இருன்னேன்..??” அப்பவும் அவ பிடிவாதமா நின்னா.., உங்க பெரிய அத்தைதான் “புருசன் இல்லாம பிறந்தவீட்டு படிய மிதிக்க கூடாதுன்னு” சொல்ல உங்க அம்மா என்னேட வந்துட்டா.
நா…. ஏற்கனவே மங்களூருக்கு டிரான்ஸ்பர் ஆனதால அப்படியே உங்கள கூப்புட்டுகிட்டு ஊர விட்டே வந்துட்டேன்
“அங்க நடந்த பிரச்சனை ஊர விட்டு வந்தது, எல்லாம சேந்து கோதைக்கு அபார்சன்  ஆகிடுச்சு.”
நானும், உங்க அம்மா நா சொன்னத கேக்காம, அவங்க அண்ணி சொன்னத கேட்டுதான வந்தா அப்படின்ற கோபத்துல ஊரைவிட்டு வந்ததையே.., இவளுக்கு அபார்சன் ஆனதையோ உங்க பாட்டி வீட்டுல சொல்லாம விட்டுட்டேன்..,
“திரும்ப துளசி பொறந்ததுக்கும் கூட அவங்ககிட்ட சொல்லல..,” அப்பதான் சித்தப்பாவோட தங்கச்சி குழந்தைய பாக்க வந்தாங்க, அவங்க சொல்லிதான் தெரியும், அந்த பொண்ணு வேற ஜாதி பையன விரும்புனதாகவும், அதனால என்ன வச்சு ரத்தினத்துக்கு கல்யாணம் பண்ணிகொடுத்தா,  பின்னாடி பிரச்சனை வந்தாலும், கோதைய காட்டி வாழ வைக்கலாம், இல்லனா மிரட்டி சொத்துல ஒரு பங்கு  வாங்கலாம்ன்னு திட்டம் போட்டாங்கனு.
“இதகேட்டதும்  எனக்கு அவ்வளவு அசிங்கமா இருந்தது..”  என வினயை பார்த்தார் சிவராமன்
“பின்ன ஒரு தரம் கூட நீங்க அங்க போகன்னுன்னு நினைக்கலையா?? அம்மாகிட்ட செல்லனுன்னு தோணலையா??” கேட்டான் வினய் 
“எந்த முகத்த வச்சுகிட்டு அங்க போக?? நா பேசுனது, பண்ணுனத நினச்சு அவ்வளவு அசிங்கமா இருந்தது எனக்கு.., “எவ்வளவு பெரிய மனுசன் அவரு!!” “அத்தன பேர் முன்ன அவமானபடுத்திருக்கேன், அப்பவும் அந்த மனுசன் எங்கிட்ட மன்னிப்பு கேட்டாரு” அத மதிக்காமா, “யாரேட பேச்சயோ கேட்டு அவங்கள அசிங்க படுத்திட்டு, இப்ப.. என்ன அவங்க ஏமாத்திட்டாங்கனு தெரிஞ்சதும், நா…. ஏமாந்துட்டேன், என்ன மன்னிச்சுடுங்கனு.., எப்படி போயி நிக்க?? அப்படி போனா அந்த மனுசன நா படுத்துன அவமானம் இல்லையினு ஆகிடுமா??” 
இதையெல்லாம் விட “கோதைகிட்ட இத சொல்ல  பயம்.., எங்க என்னவிட்டு போயிடுவாளோன்னு??”
“உங்க அம்மா இல்லாத வாழ்கைய நினைச்சு பயம்..” அப்பவும் “தைரியம் பண்ணி அவ கிட்ட சொல்ல வரும் போது.., அவ முகத்த பாத்தாலே வந்த தைரியம் போயிடும்..”   என கோதையை பார்க்க  அவர் கையை கழுவி இருந்தார்..
வினய், சிவராமனின் கையை ஆறுதலாக பிடிக்க.., இதுக்குதாம்பா நா பயந்தது என்றவர் வினயை பார்க்க., அவரை காருக்கு அழைத்து  சென்றான் வினய்.
திவ்யா, நடுவில் அமர்ந்திருக்க கயல், சுபா, ராதா, ஜெய்,  என நால்வரும் அவளைசுற்றி அமர்ந்து அவளையே பார்த்திருந்தனர்.. 
திவ்யாவிற்கு தான் ஒரு மாதிரியாக இருந்தது “என்ன வேணும்?? பேசனுன்னு சொல்லிட்டு” இப்ப சுத்தி உக்காந்து என்னையே பாத்திட்டிருந்தா என்ன அர்த்தம்  ம்ம்ம்…??
திடீரென “ராதா, எழுந்து அவளை சுற்றி ஓடஆரம்பிக்க”
ஜெய், ஏய் ராதாக்கா… “உனக்கு நிஜமாவே பைத்தியம் புடிச்சிடுச்சா? நீ… வக்கீல் ஆகி?! கோர்ட்டுக்கு போயி ஜட்ஜ பைத்தியமா மாத்துவனு நினச்சா, இப்படி நீயே…. பைத்தியம் புடிச்சி வைத்தியம் பாக்க, பைத்தியகார ஆஸ்பத்திரி போவன்னு நினைக்கலயே.,  உனக்கு வைத்தியம் பாக்குற அந்த… பைத்தியகார டாக்டருக்கு பைத்தியம் புடிச்சா, எந்த பைத்தியகார ஆஸ்பத்திரியல வைத்தியம் பாக்க??” என அழுவதை போல கத்த ஆரம்பித்தான் ஜெய் 
சும்மா இருடா ஜெய், என கயல் அதட்ட.., இப்போது “திவ்யாவிற்க்குதான் பைத்தியம் பிடிக்கும் போல் இருந்தது.”
ஏய்ய்ய்ய்…… ஸ்டாப்……. இப்ப என்ன விசயம் சொல்றீங்களா இல்லையா?? என திவ்யா சத்தம் போட்டாள்
“அத நீங்க தான சொல்லனும்..!!!” என மூவரும் கோரஸக கேட்டனர்
என்ன சொல்லனும்?? என புரியாமல் கேட்டாள் திவ்யா
 
ஜெய்….. “பைத்தியகார ஆஸ்பத்திரிக்கு வழி??”
ராதா….. “வாய மூடுடா குண்டா”
“உன்னோட வாய மூடுனா வழிகிடைக்குமா???” ராதாக்கா
“மூடலனாலும் கிடைக்கும், ஆனா…. அங்க எலும்பு முறிஞ்சதுக்கு கட்டு போடுவாங்க.,  இப்ப….. ரெண்டு பேரும் வாய மூடலனா, ரெண்டு பேரையும் காஸ்மெடிக் சர்ஜன் கிட்ட அனுப்ப நா வழி தேடுவேன், இப்ப உங்களுக்கு சரியா??” என சுபா கேட்க.., 
ஜெய், ராதா., இப்போது வாயில் ஜிப் போடுவதை போல சைகை செய்தனர்
“கயல் ஆர்வமாக திவ்யாவை பார்க்க!!!” 
திவ்யா…….. எனக்கு சத்தியமா புரியலை…??? நீங்க என்ன கேக்கனும் கேளுங்க?? எனக்கு தெரிஞ்சத சொல்றேன்…!!!
கயல்….. “எங்க பாட்டியை எப்படி கவுத்த…???” அத மட்டும் சொல்லு போதும்…,
இப்பவும் அவர்களின் பேச்சு புரியாமல் திவ்யா விழிக்க…!!!!
ராதா, “எங்க பாட்டி ஒரு டெரர் ஆபீஸர், எங்க டாடீசே அவங்கள எதுத்து எதுவும் பேச மாட்டாங்க, அவங்களே அப்படினா மம்மீஸ் பத்தி பேச்சே இல்ல.., எப்பவோ ஒரு தரம்!!! எங்க பெரிய மம்மீ பேசிருக்காங்களாம்?? அதுவும் அவங்களுகே நியாபகம் இல்லையாம்”  
திவ்யா…… இத உங்களுக்கு யார் சொன்னது…?? உங்க பெரிய மம்மீயா..???
ராதா….. ஆமாம்….
ஜெய்…. இல்ல., இல்ல இது நாங்களே கண்டுபிடிச்சது..!
திவ்யா…., எத்தன வருச  கண்டுபிடிப்பு…
அது…… நா…. பொறக்க முன்ன  கயல் அக்கா  ஆரம்பிச்சு., இப்ப நா… முடிச்சிருக்கேன் என அவன் முடிக்க..,
திவ்யா….. சிரிக்க திவ்யாக்க பிளீஸ் பேச்ச மாத்தாதீங்க… சொல்லுங்க… எப்படி பாட்டி உங்ககிட்ட இவ்வளவு அட்சாச்சுடா  இருக்காங்க…?? சொல்லுங்க பிளீஸ்… என்று கெஞ்ச ஆரம்பித்தனர் நான்கு பேரும்
அப்படி எல்லாம் இல்ல…., உங்ககிட்ட எப்படி பிஹேவ் பண்றாங்களோ.., என்கிட்டயும் அப்படிதான் பண்றாங்க… 
நா…. தெரியாதபொண்ணுன்னு கூட கெஞ்சம் தன்மையா பேசிருக்கலாம்.??
ஊஹூம்….. “இல்ல கயலக்கா பிரண்ட் காலேஜ்கு போகலன்னு, நோட்ஸ் வாங்க வந்தாங்க, அன்னிக்கு பாட்டி  கேள்வி கேட்டு படுத்தின பாடுல  போனவங்கதான், அக்கா கல்யாணத்துக்குகூட வரலன்னா பாத்துக்குங்க!!! அதோட இல்லாம மத்த பிரண்ட்சையும் வரவிடல.”    
அப்படி பிரண்ட்., அதுவும் உள்ளூர் பொண்ணுங்களையே வீட்டுக்குள்ள விடாத பாட்டி..,
“உங்கள தங்க வச்சதும் இல்லாம.., எங்க அண்ணனையே!!  உங்கள மதுரை வரைக்கும் டிராப் பண்ண சொல்லிருக்காங்கனா எப்படி!??”
எப்படின்னா?? அத பாட்டிக்கிட்டதான் கேக்கனும்! என திவ்யா சொல்ல
உங்கள பாட்டிக்கு ஏற்கனவே தெரியுமா??
திவ்யா, “பாட்டியவா??” வர்ற வழியிலதான உங்களயே பாத்தேன்., அப்புறம் “எப்படி  பாட்டிய தெரியும்??”
கயல்…. அதுவும் கரெக்ட்டுதான் என சொல்ல!!!
பார்வதி, கயல்… “வீட்டு ஆளுங்க எல்லாம் சாப்பிட உக்காந்துட்டாங்க பாரு, அங்க என்ன அரட்ட.??” என  சத்தம் கொடுக்க பேச்சை நிறுத்தியவர்கள் வேகமாக அங்கே சென்றனர்..,
ராதா போகாமல் யோசனையாய் அமர்ந்திருக்க, ஜெய்… அவள் பக்கத்தில் வந்தவன் “ராதாக்கா என்ன யோசன..??”
இல்லடா ஜெய் “என்னேட வக்கீல் மூளை, என்ன சொல்லுதுன்னா…”
ஜெய், “இரு..இரு.. முதல்ல என்னேட சந்தேகத்த தீர்த்துவை.., அப்பறம் உன்னத யோசிக்கலாம்??”  என்றிட
“அக்கா… இருக்குறேன் சொல்லுடா  ஜெய்” 
ம்ம்…. “உனக்குமுதல்ல மூளை இருக்கா??” சொல்லு அப்பறமா “அது சாதா மூளையா…, இல்ல வக்கீல் மூளையானு.., நா முடிவு பண்றேன்..!!” என ஜெய் சொல்ல
“அடிங்க  எனக்கேவா,” என்றபடி அவனை துரத்தினாள் ராதா
ஜெய் ஓட., அவன் எதிரே வந்த அரவிந்தை பிடிக்க சொல்லி ராதா கத்தினாள்…, 
அரவிந்த், “எதுக்குமா..??” என்றபடி அவனை பிடித்தான் 
“அவன்……. எனக்கு மூளை இல்லனு சொல்றான் மாமா” என்றபடி அவனைஅடிக்க ஆரம்பித்தாள்
“உண்மைய தானமா சொன்னான் ஏ…  சின்ன மச்சான்…!!!” என்றிட இப்போது அரவிந்த் ஓட.., ராதா அவனை துரத்த ஆரம்பித்தால்..,
அனைவரும் சாப்பிட்டு முடிக்க.. திவ்யா…,  அனைவரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள்
  
பார்வதி…, “ராஜா பாத்துப்பா பத்திரமா வண்டிஏத்திவிடு..” 
“அம்மாடி….. போனதும் போன் பண்ணுமா.., எனஅவளை திருஷ்டிகழித்து நெட்டி முறிக்க” திவ்யா கண்கள் கலங்க நின்றிருந்தால்..
ஏனோ, “பார்வதிக்கு அவளை பிரிய மனமே இல்லை அவருக்கு என்று இல்லை வீட்டில் இருந்த அனைவருக்கும் அப்படிதான்” இருந்தது “பெண்கள் அனைவரும் அவளை முத்தமிட்டு அனுப்ப, ஆண்களுக்கு தான் அந்த உணர்வை எப்படி சொல்லவது என்று புரியவில்லை” அனைவரிடமும் காலில் விழுந்து ஆசிர்வதம் வாங்க அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் கண்கள் கலங்க ஆரம்பித்து. 
“வா…. என அவளுடன் பேசியபடி அனைவரும் வெளியே வர…, அவர்கள் முன் வந்து நின்ற வண்டியில் இருந்து இறங்கியவரை கண்ட பார்வதியின் கண்கள் நிறைத்து மயங்கியது என்றால், திவ்யாவின் கண்கள் தெரித்து வெளியே வந்தது !!!”
மற்றவர்கள் வாயில் இருந்து வந்தது, “அம்மாடி.., கோதை.., அக்கா.., அண்ணி..,  கோதைம்மா..,”  என்பது
விஷ்வாவின் வாயிலிருந்து வந்தது……. 
                   விஷ்வ துளசி தெடர்வாள்……….
 

Advertisement