Advertisement

            ஓம் நமசிவாயா
விஷ்வ துளசி  அத்தியாயம் 5
“நா  கிளம்புறேன் தாத்தா பாட்டி என கையில் பையுடன் வந்தவளை.,” பார்த்த பார்வதி
 
“என்னம்மா அதுகுள்ள கிளம்பிட்ட??” ரெண்டு நாள் இங்க இருந்துட்டு போகலாம்ல.., என பார்வதி கூற அவரை அந்த குடும்பமே ஆச்சர்யமாக பார்த்தது
“வீட்டு ஆண்களே….. இரவு வியாபர விவகாரமாகவோ அல்லது உறவினர்கள் விஷேசம் போன்ற காரியங்கள் தவிர வேறு விசயமாக வெளியே தங்க அனுமதியில்லை” என்னும் போது
அதுவும் பெண்பிள்ளைகள்  என்றால், “விளக்குவைக்கும் முன் கண்டிப்பாக வீட்டில் இருக்க வேண்டும்.., ”
கயலை, “உள்ளூரில் உள்ள கல்லுரியில் படிக்க அனுமதித்தவர்.., வெளியூர் சென்று சுபா, சட்ட கல்லுரியில் படிக்க” ஒத்துக்கொள்ளவில்லை 
“விஷ்வா, அவளுக்கென்று  தனிவீடு., வேலைஆட்கள்., வீட்டில் இருப்பதை போன்றே அங்கும் இருப்பாள்.,” என அவருக்கு சொன்ன பிறகே…, அவன் மீது நம்பிக்கை வைத்தே அவளை சென்னைக்கு  படிக்க அனுப்பினார் பார்வதி…
சுபா, “பாட்டி ஊருக்கு போனதுக்கு அப்பறமா  நா…. வெளியே போனா என்ன பண்ணுவீங்க?? என்மேல நம்பிக்கையில்லாம., அண்ணா சொன்னாங்கனு தான என்ன படிக்க அனுப்புறீங்க..,??” என கேட்க
“உங்க அண்ணன் மேல இருக்குற நம்பிக்கைல தான் அனுப்புறேன், அதுக்காக உன்மேல நம்பிக்கையில்லனு அர்த்தம் இல்ல….”
“நல்லது எது, கெட்டது எதுன்னு, யோசிக்காம எல்லாம் நல்லதுன்னு?? நம்புற உங்க நம்பிக்கை மேல நம்பிக்கையில்லாம” தான் அனுப்ப யோசிக்குறேன்…
புரியலை பாட்டி…?? 
பார்வதி, “வெளி உலகத்துக்கு போனா தன்னால நீ சொன்னது அவங்களுக்கு புரியும்., இப்ப அவள விடு” என விஸ்வநாதன்  பார்வதியை சமாதானம் படுத்திய பிறகே., அவர் அதுவும் அறை மனதுடன்  சம்மதித்தார் பார்வதி.
அப்படி பட்டவர் முதலில் பிள்ளைகள் “திவ்யாவை அழைத்துவந்ததை ஒத்துக்கொண்டதே அதிர்ச்சி !!” என்றால் 
அவர் “அவளை இங்கு தங்க அனுமதித்தது அடுத்த அதிர்ச்சி!!! அவள் வந்ததில் இருந்து அவளை தன்னுடனே வைத்து கொண்டது, பேசி சிரிப்பது, அவள் சொல்வதற்க்கு எல்லாம் தலையாட்டுவது,” என அவரை அதிசய பிறவியாகவே பார்த்து நின்றனர்!!!!! 
இதோ இப்போது அவர் சொன்ன “தங்கிட்டு போ” என்றது அதன்  உச்சம்.
இவர்களையே அனைவரும் பார்க்க…!! 
பார்வதி, என்ன சொன்னது கேக்கலையா?? இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போகலாம் நா பேசுறேன்…, உங்க அப்பா, அம்மாகிட்ட என்றவர்…, அந்த போன குடு பேசலாம், என ஃபோனை வாங்க முயன்றார் பார்வதி
அதே நேரம் சரியாக “திவ்யாவின் ஃபோன் அப்பா காலிங்….,” என அழைத்தது
 
திவ்யா, ஃபோனை எடுத்தவள் சற்று தள்ளி நின்று.., அப்பா எப்பிடியிருக்கீங்க..??
“நல்லாயிருக்கோம்டாம்மா. நீ எப்படி இருக்குறம்மா??” 
முக்கியமான விசயமாதான் கூப்புட்டேன்.., “நாங்க  ஊருக்கு  போறேம் பிளைட் ஏறிட்டோம் அங்க போனதும் நா உனக்கு சொல்றேன் நீ… திருவிழா முடிஞ்சதும் எங்க கூட வந்துடு..” என பேசி முடிக்க  
சரிப்பா எந்த ஊர்ப்பா என்றவள் பேச ஆரம்பிக்க, எதிர் முனையில்  பதில் இல்லாமல் போனது போனை எடுத்து பார்க்க அது  சார்ஜ் இல்லாமல் போயிருந்தது… அச்சச்சோ…., என தலையில் தட்டிய படி திரும்பியவளை 
பார்வதி ஆவளாக திவ்யாவை பார்க்க!!! திவ்யா, “அப்பா ஊருக்குபோறாங்களாம்.. விசயத்தை சொல்லி பர்மிசன் வாங்குறதுகுள்ள போன் கட்டாயிடுச்சி சாரி” என்றவள் கிளம்ப
“முகம் வாடிய பார்வதி, சரி போ… மத்தியம் சாப்புட்டு கிளம்பு…, ராஜன உன்ன மதுரைல விடச் சொல்றேன்” என்றவரை வீடே ஆஆஆஆ….!!!! வென்று வாயை பிளந்து பார்த்தது
பின்னே.., “வீட்டில் அனைவரிடமும் வேலை சொல்பவர்.., விஷ்வாவிடம் மட்டும் சொல்ல மாட்டார் அவரின் செல்ல பேரன் அவன்,   யார் அவனிடம் வேலை சொன்னாலும் அவர்களுக்கு அன்று படி பூஜை தான்..,” அப்படி பட்டவர் இன்று செய்வது பேசுவது அனைத்தும் அதிசயமான அதிசயம்..,
“தென்புதூர் கிராமத்தை விட்டு கார் கிளம்பியதில் இருந்து யாரும் பேசவில்லை.”
வினய்க்கு, “தாத்தா, பாட்டி, அத்தை மாமா உறவுகள் சிறு நியாபகம் மட்டுமே  ஊரைவிட்டு வரும் போது அவனுக்கு  மூன்று வயது தான்” மற்றது வரதன்  சொன்னவை.., 
கோதைக்கு, “நடப்பது கனவா, நனவா??” என்பதிலேயே  குழப்பம் தீரவில்லை..,
சிவராமனுக்கு, ‘கோதைக்கு விசயம் தெரிந்த பின், கோதையின் மனதில் தன்னை பற்றிய எண்ணம் என்ன???’ என்பது
“எத்தனை பெரிய தவறாக இருந்தாலும் கோதை,  சுலபமாக அதை மன்னித்து விடுவார் அதுவும் சிவராமன்  என்றால் அதை சரி செய்ய முயன்று இருப்பாரே தவிர அவரை பிரிந்து செல்ல நினைக்கமாட்டார்” என்பதை அவர் அறியவில்லை.., கோதையை அவர் அன்றே புரிந்து கொண்டிருந்தால்…, இவ்வளவு நீண்ட பிரிவு நடந்திருக்காது
வினய்.., டிரைவர் அண்ணா வண்டிய நல்ல ஹோட்டலா பாத்து நிறுத்துங்க சாப்பாட முடிச்சுட்டு போலாம்..,?? என்றதில் நினைவுக்கு வந்தார் சிவராமன்..,
 வினய், ஹோட்டலில் டிரைவரை சாப்பிட சொன்னவன்..,
சற்று தள்ளி இருந்த டேபிளில்  சென்று அமர்ந்தான்
அப்பா… உங்களுக்கு சாப்பாடு??
அம்மா… உங்களுக்கு என்ன  சாதம்மா.., இல்ல வேற ஏதும்மா??  தயிர் சாதம் போதும் வினய்…
சர்வரிடம், வேண்டியதை ஆடர் செய்தவன் அவர் சென்றதும்..,
“என்னதாம்ப்பா நடந்தது?? அம்மாட்ட கேட்டாலும் பதிலில்ல., நீங்களும் அமைதியா இருந்தா என்னனு நினைக்க நாங்க??” என படபடவென பேசினான் வினய்
அமைதியாக இருந்தார் சிவராமன்
“அப்பா…”.என வினய் அழைத்ததிலேயே அவன் கோபத்தின் அளவு புரிய.., எப்படி ஆரம்பிக்க.., என்ற யேசனையுடன் வினயை பார்த்தவர்
கோதை பார்த்து, “என்ன மன்னிப்பாயா??” என்றவரை பார்த்த கோதையின் முகத்தில் தெரிந்தது.., “இதை கேட்க இத்தன நாளா?? இல்லை மன்னிக்க நான் யார்??” என்பதா என்பதை சிவராமனால் அனுமானிக்க முடியவில்லை
“திருவிழாக்கு மறுநாள்….   விருந்துக்கு தயார் பண்ணிட்டு இருந்தோம்.”
 
எனக்கு.., “தூரத்து சொந்தம் சித்தப்பா முறை., எங்க அப்பா வழியில இருந்த ஒரே சொந்தமும் கூட அடிக்கடி வரப்போக இருந்ததால நம்ம வீட்டு விசேசத்துல  எல்லாம் கலந்துப்பாரு..” 
“அவருக்கு ஒரு பொண்ணு…” அந்த பொண்ண “உங்க சின்ன மாமா இரத்தினத்துக்கு  பேச சொல்லிருந்தாரு” நானும் மாமாகிட்ட பேசிருந்தேன்..,
“மாமாவும்.. அது சரிபட்டு வராது, இதோட இந்த பேச்சு வார்த்தைய முடிச்சுக்கலாம்னு சொல்லிட்டாரு..,” நானும் அத விட்டுட்டேன் 
“எல்லா வருசமும் கூப்புடுறத போல அந்த வருச சாமிகும்பிடுக்கு நாங்க கூப்பிடவும் அவங்களும் வந்தாங்க..,”
திருவிழா முடிஞ்சி கிளம்புர நேரத்துல, “மாமாவுக்கு தெரிஞ்சவரு வந்து இரத்தினத்த,  பக்கத்து ஊர் மிராசுதார் பொண்ணுக்கு கேட்டதா சொன்னாரு..,” 
உடனே என்னோட சித்தப்பா,  “வசதியான எடத்துல பொண்ணு எடுக்கதான்.., “எங்க வீட்டு சம்பந்தம் வேண்டாணு சொன்னீங்களானு??”  மாமாவ கேட்டாரு 
மாமா, அதுக்கு இல்லன்னு சொல்ல.., அப்ப “எங்க வீட்டு பொண்ண கட்டுங்கன்னு..” பிடிவாதமா பேசினார் என்னோட சித்தப்பா
ஒரு நேரத்துல வாய் பேச்சு முத்தி போச்சு, “அப்ப மாமா உங்க பொண்ண கட்டமுடியாது, என்னடா பண்ணுவன்னு சொல்லிட்டாரு??” 
அதுக்கு சித்தப்பா என்ன பாத்து “நீ… இந்த வீட்டு மருமகன், உன்னோட பேச்சுக்கு இங்க மரியாதயில்ல, நம்ம… பொண்ண கட்டமாட்டேனுட்டு, அந்த பணக்கார மிராசு வீட்டு பொண்ண கட்டப்போறாங்க, அப்ப உனக்கு என்ன மரியாதையின்னு??” கேட்டாரு  
எனக்கு என்ன சொல்லனு தெரியாம நின்னேன்…!!
“கேவலம் நீ சொன்ன பொண்ண கூட கட்ட மாட்டேன்னு செல்லுறவங்க, அவங்க வேலைய மட்டும், அதுவும் வெளிய நாயா அழையுற வேலைய மட்டும் உன்ன பாக்க வக்கிறவங்க, ஏன்டா உன்ன அவங்க ஆபீஸ்சுல உக்கார வைக்கல?? நம்ம மாதிரி இருக்குறவங்களுக்கு  இவங்க பொண்ணு கொடுக்குறதே,  இப்படி… இவங்களுக்கு வேலைக்காரனா, இவங்க சொன்ன பேச்ச கேக்கதான்.”
இது புரியாம நீ தான் “பெரிய வீட்டு மருமகன்னு சொல்லிக்கற, ஆனா.. அவங்க உன்ன வேலைக்காரனாதான நடத்துறாங்க!!” இப்பவாவது உனக்கு புரியுதானு கேட்டாரு.., 
“எனக்கும் அப்ப அப்படியானு தோனிச்சு??” என நிறுத்தி  கோதையின் முகம்  பார்க்க…,
அவரிடம்.., “எங்க வீட்டு ஆளூங்க அப்படியா நடத்துனாங்க உங்களை??”    என்ற கேள்வியிருந்தது
தலையை குனிந்தவருக்கு தெரியும் தானே “தான் அந்த வீட்டின் மருமகன் அல்ல  மகனாக பார்க்கபட்டவர் என்று”
“ராஜேந்திரனுக்கு என்ன உரிமையோ, அதே உரிமை தனக்கும் உண்டு, தனக்கு கோதையை கொடுத்ததே தன்னுடைய குணத்திற்காக” இல்லை என்றால் “அவர்களின் வசதிக்கும், அவர்களின் குடும்ப பெருமைக்கும், அதுவும் கோதையின்  அமைதிக்கும், அவளுக்கு  எத்தனை பெரிய இடத்தில் சம்பந்தம் செய்திருப்பார்கள், எனக்கு தரவேண்டிய அவசியம் என்ன??”  
வினய், “என்னப்பா.., அமைதியா இருக்கீங்க??” மிச்சத்த சொல்லுங்க   
அது… அப்ப… கொஞ்சம் என தயங்கியவர்.., மீண்டும் கோதை முகம் பார்க்க அவர் இவரை பார்க்கவே இல்லை..,
“குடிச்சுருந்தேன்” அது வினய்க்கும் அதிர்ச்சியே “ஏ…..அப்பாவா இது?!” என அவன் பார்க்க, “அதுதான் முதல் தடவை” அதுவும் சித்தப்பா கம்பெல் பண்ணதால குடிச்சேன் அதுல  “எனக்கு தெரியாம ஏதோ கலந்து இருக்காரு  அது தெரியாம நா அத குடிச்சி இருக்குறேன்”
ம்ம்…, சரி சொல்லுங்க 
அவர் அப்படி சொல்லவும், “மாமா, தம்பி.. நீங்க சொல்லுங்க உங்க சித்தப்பா,  அவர பேசவேணாம்னு” என்ன கேட்டுக்கிட்டாரு  

Advertisement