Advertisement

“நல்ல அண்ணா தங்கச்சி.., அவ ஊர்சுத்த எங்கிட்டயே சொல்லாம என்னோட பேர யூஸ் பண்ணுவாலாம்.., அத அண்ணா நீங்க வீட்டிக்கு தெரியாம பாத்துகுவீங்களாம்.., என்றவள் டிரான்ஸ்போர்ட் சார்ஜ் குடுங்க..??” என கேட்க
புரிந்தவன்.., “அதுக்கென்ன குடுத்துட்டா போச்சு” என அவள் தலையில் செல்லமாக கொட்ட… “அண்ணா…”  என சினுங்கினாள்
தலையை தடவியவாரே நின்றவளிடம்.., “நீ எங்க இங்க..??” என கேட்டான் வினய் 
“டெல்லி போறோம்”
“எதுக்கு..??”
“மாமா பொண்ணுக்கு கல்யாணம்.., மாப்பிள்ளை பையன் நா வந்தாதான் தாலி கட்டுவேன்னு பிடிவாதமா இருக்குறாராம்..,” அதுக்குதான் “டெல்லிக்கு போறோம்..,” என கையை பறவைபோல் விரித்து காட்ட வினய் புரியாமல்…, “அவர் எதுக்கு நீ வர பிடிவாதம் பிடிக்கனும்..?? பொண்ணு வந்தா பத்தாதாமா..??” எனக்கேட்டான்
“பொண்ணு போதும்தான் ஆனா பாருங்கண்ணா., நாத்தனார் முடிச்சு நான் தான போடனும்.,” என்றவளை 
வினய்.., “அறுந்த வாலு எப்படிதான் உங்க சீனியர் உங்கள வச்சு சமாளிக்குறாறோ..??”  என சிரிக்க
அப்போது டெல்லி விமானத்திற்கான அழைப்பு வர ..,” திவ்யா பாய்ண்ணா..,” என கிளம்ப
“திவ்யா…. உன்னோட டெல்லி அட்ரசை எனக்கு அனுப்புமா.” என்றவாரு அவளை அனுப்பி வைத்தான் வினய்
“காபி வாங்க இத்தன நேரமா..??” இந்த பையனுக்கு என கோதை அழுத்துக்கொள்ள 
ஆபீஸ்ல.. “யாருக்கும் சொல்லாம வந்துட்டான்னில்ல” அதுதான்  பேசிட்டுருப்பான் 
“அதுதான பாத்தேன்.., இன்னும் ஆபீஸ பத்தி பேசலனு” என கோபமாக பேசி திரும்பி அமர்ந்துகெண்டார் கோதை 
காப்பியுடன் வந்தவன்., “இந்தாங்கமா என காப்பியை நீட்ட..,” அதை எடுக்காமல் இருந்தவரை “எடுங்கம்மா” என கூறினான் வினய் 
“என்னப்பா கோவமா..??’ என வினய் சிவராமனை பார்க்க  “ஃபோன்” என சிவராமன் சைகை செய்தார்
அம்மா… “முக்கியமான கால்ஸ்மா அவாயிட்பண்ணமுடியாது, அப்புறம் எப்படிமா அமெரிக்கா, பாரிஸ்னு நா எங்க அம்மாவ கூப்புட்டுகிட்டு சுத்துறது..??”
“யாரு நீங்க..?? என்ன கூப்புட்டுகிட்டு சுத்துறது!!!” எனக்கு ஒருவயசுல இருந்தே பூவச்சுட்டாங்கடா.., நீ புதுசா தலைல பூ சுத்தாத., 
“அம்மா.., அது தலைல.., இல்ல காதுல..,”
அதுதான்…, “இத்தன வருசமா…. உங்க அப்பா சுத்தி முடிச்சுட்டாருல்ல.., உனக்கு இடம் இல்ல வினய்..!!” அதுக்கு தான இப்ப தலையில கை வக்குற..,
“எப்பபாரு ஆபீசூ மீட்டிங்குன்னு.., இப்பகூட இதே இந்த ஃபோனு” என அவர் சலிக்க 
வினய்….. சிவராமனை  “என்னப்பா இது அதிசயமா இருக்கு..??” என  அவர் காதினில் கேட்க 
“அதுதாம்பா எனக்கும் தெரியல., இன்னும் ஊருக்கே போகல  டிக்கட்தான் எடுத்திருக்கு., அதுக்குள்ள ஊர்  பக்கத்து காத்து அடிச்சிடுச்சா என்ன??” என பரிதாபாமக சொன்னார்  
அவரின் பேச்சினில் சிரிப்பு வர.., சிரித்தால் கோதையின் கோபம் அதிகமாகும் என்பதை அறிந்தவன் ..,
“ம்மா.., இப்பதான கம்பெனி நல்லா ரன்னாக ஆரம்பிச்சிருக்கு.., இப்ப நா இங்க இல்லனா ரெம்ப கஷ்டம்மா  புரியுதாம்மா..??” என்றவனை பார்த்தவர் கண்களில்  கோபம் குறைந்ததை பார்த்தவன்.., “ஃபோன்ல மட்டும் பேசிக்குறேனே” பிளீஸ் என அவரை கெஞ்ச ஆரம்பித்தான்
“அப்பாவும் பையனும் பரிதாபம்மா முகத்த வச்சே ஆள கவுத்துடுங்க” என சிரிக்க அதற்குள் அவனுக்கு அடுத்த அழைப்பு வர  சற்று தள்ளி நின்று பேச ஆரம்பித்தான் வினய்
வினய்… “வளர்ந்து வரும் இளம் தெழில் அதிபர்”
“சிவராமன்…. ஜிஎம் மாக இருந்த ஏற்றுமதி கம்பெனியின்” துணை நிறுவனத்தில்  நிறுவாகத்தின் குளறுபடி காரணமாக கம்பெனியை மூட முயற்சிக்க  
வினய்….. “அதை டேக் ஓவர் செய்தவன்.., தன் முயற்சியால் இன்று டி.கே எக்ஸ்போர்ட்ஸ் என மங்களூரின் முன்னனி நிறுவனம்மாக மாற்றி இருந்தான்..,” 
“கடல் சார்ந்த ஏற்றுமதி அவனது.., அதை தெட்டே.. துறைமுகத்தில் இருந்து ஸ்டாக் கிளியரன்ஸ்க அவன் அடிக்கடி பேசவேண்டியது அவசியம்மாக இருந்தது”.
அவன் இல்லாத நேரத்தில்.., “சிவராமனோ இல்லை துளசியோ இந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பார்கள்”  இன்று மூவரும் இல்லா நிலையில் வினய் போனிலேயே அனைத்தையும் முடிக்கவேண்டியது அவசியமானது.., 
‘வினய் பேசி முடிக்கவும்.., விமான அறிவிப்பு வர அப்போதுதான் துளசிக்கு தாங்கள் ஊருக்கு போவதை இன்னும் தெரிவிக்காதது நினைவிற்கு வர, மீண்டும் அவளுக்கு முயற்சிக்க ரிங்க் போய்கொண்டே இருந்தது..” 
“மீண்டும் மீண்டும் அழைப்புக்கள் தவற யோசனையுடன் நின்றான் வினய் “
“வினய் மூனாவது அனொவ்ன்ஸ்மென்ட் வந்துடுச்சு  வாப்பா போகலாம்..,” என சிவராமன் கூப்பிட லக்கேட்ஜ் டிராலியை தள்ளிக்கொண்டு அவர்கள் பின் சென்றான் வினய்.. 
“மதுரை விமானநிலையம்..,” 
“கோதைக்கு இதுவரை எங்கு செல்கிறோம்., என்பது தெரியாது வினைக்கும் அனுமானம்தான்” 
“தந்தையே அவனிடம் தெரியபடுத்தாத உறவு விரிசலை.., ஆம்… விரிசல்தான் பிளவு அல்ல அவரிடம் கேட்கவும் முடியவில்லை.., அன்னையும் தன்னிடம் எதுவும் தன் வீட்டு உறவுகளை பற்றி எதுவும் கூறியதில்லை”
ஒரு முறை பேச்சு சுவாரஸ்சியத்தில் “கோதை தன் ஊரை.., பற்றி பேச அன்று சிவராமன் சாப்பிடாமல் படுத்துவிடார்..” அன்று முதல் இன்று வரை கோதை தன் பிறந்த வீட்டினை பற்றி பேசியதில்லை 
“வினையும், துளசியும் எத்தனையோ முறை கோதையிடம் கேட்டும்..??” பலனில்லை பின்பு வரதனிடம் கேட்க அவர்களின் சண்டையை மட்டும் சொல்லாமல்.., அவர்களின் குடும்பத்தை பற்றி மட்டும் தனக்கு தெரிந்த விபரங்களை கூறியிருந்தார்..,
அதை கொண்டே மதுரை என்றதும் அவனுக்கு சந்தேகம்.., இதோ.., இப்போது மதுரைக்கும் வந்தாகிவிட்டது
இனி…, “எங்கு போவது..???” என்பதை சிவராமன் தான் சொல்ல வேண்டும்..,
மூன்று பேரும் ஏர்போர்ட்டினைவிட்டு வெளியே வர.., ரவி அனுப்பிய கார் டிரைவர் அவர்கள் முன் வந்தார்
கார் டிக்கியில் பொருள்களை வைக்க வினய் போக..,  டிரைவரிடம் தாங்கள் போகும் இடம் பற்றி கூறிக்கொண்டிருந்தார் சிவராமன்..,
டிரைவருடன் வினய் அமர.., கோதையும் சிவராமனும் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டனர்..,
“எங்கங்க போறோம்??” என கோதை கேட்க..,  என்ன பதில் செல்ல என தெரியாமல் சிவராமன் யோசிக்க , அதே அவருக்கு வேர்வையாக வழிய ஆரம்பித்தது நிலைமையை அனுமானித்த வினய்., “டிரைவர் சார் கொஞ்சம் ஏசிய ஜாஸ்தி பண்ணுங்க” ரெம்ப வேர்க்குது என பேச்சை மாற்றினான்.., 
சிவராமனும் ஆமாப்ப  “ரெம்ப வேர்க்குது..??” என்றவாரு கண்களை மூடிக்கொண்டு தூங்க முயல 
“அம்மா.., ப்பா கொஞ்சம் தூங்கட்டும்.., நைட் சரியா தூங்கல பாருங்க முகம் ஒரு மாதிரியிருக்கு, டிஸ்டர்ப் பண்ணாதீங்க நீங்களும் அப்படியே தூங்குங்க.” என பேச்சை மாற்றினான்
 
“சிவராமனின் வாடிய முகத்தை பார்த்தும் ., மற்றவை மறந்து போக.., உண்ட மருந்தின் உபயத்தால் கோதை உறங்க.., ஏசி காற்றின் உபயத்தால் சிவராமனும் உறங்கினார்”
வண்டி குலுங்கி நின்றதில் கண்விழித்த கோதை பார்த்தது… “தென்புதூர்” என்கின்ற முகப்பு ஊர் பெயர் பலகையைதான்..,
“தூக்கத்தில் கனவோ., என கண்ணை தேய்த்து பார்க்க  இல்லை நிஜம் என்றது., அவர் பிறந்து வளர்ந்து ஓடி திரிந்த  அந்த ஊரின் காற்று.”
காரினை விட்டு கோதை கீழே இறங்க.., “அவரை அறியாமலே கால்கள் நடுங்க காரின் கதவை பிடித்தபடி அவர் நிற்க முயற்சி செய்ய அது முடியாமல் அப்படியே அமர்ந்தார்..,”
“அவர்கள் காரினை நிறுத்தி இருந்தது மெயின் ரோட்டின் கிளைச்சாலை..,”   உள்ளே  ஆலமர நிழலில் வயதானவர்கள் அமர்ந்து உலக நடப்பினை அலசியபடி இருந்தனர்.., 
“இவர்கள் கார் உள்ளே வந்ததையும்.., அதில் இருந்த ஆண்கள் இறங்குவதையும்..,  சிறிது நேரத்தில் கீழே இறங்கிய கோதை  தடுமாறி அமர்வதையும் பார்க்க அவர்களால் நன்கு பார்க்க முடிந்தது..,” 
“ஐய்யோ.., அந்த அம்மா கீழே விழுகுது புடிங்க..??” என்று சத்தமிட்டபடியே அந்த வயதானவர்கள் இவர்களிடம் வர.., சத்தம் கேட்டு வினையும் சிவராமனும் கோதையிடம் சொல்ல.., என சிறிது  கலவரமாக இருந்தது
தம்பி.. “இந்தா இந்த தண்ணிய முகத்துல தெளிப்பா..,” என ஓருவர் வினையிடம் தண்ணீரை தந்தவர்..,  பக்கத்தில் இருந்த சிவராமனை உற்று கவனிக்க 
“ஏம்பா… நீ நம்ம விஸ்வநாதன் மருமகன் சிவராமன்தான..??” என்றவர் கோதையை பார்க்க 
“அதற்குள்.., அருகில் இருந்த அனைவருக்கும்  அவரை அடையாளம் தெரிய கோதையை கட்டிக்கொண்டு ஒப்பரி வைத்தனர்..,”
சிவராமனை கண்டுகொண்ட பெரியவர்.., “ஏய்…, எல்லாரும் சும்மா இருங்க.., இத்தன வருசஞ்சென்டு இப்பதா புள்ள ஊருக்கு வந்திருக்கு..,  ஒப்பாரி வக்கிறீக நிருத்துங்க” என சத்தமிட  அந்த இடம் அமைதியானது
“அவர்…… அனைவரையும் நலம் விசாரிக்க  .., கோதையும் சிவராமனும் அனைவரையும் விசாரிக்க.., இவர்களின் விசாரனையில் மிரண்டது வினய் தான்.., ஊருக்குள் சொந்தம் உள்ளது என்று மட்டுமே வரதன் கூறியிருந்தார் இப்படி ஊரே செந்தம் என்பது அவருக்கும் பாவம் தெரியாது.., தெரிந்திருந்தால் வினயிடம் சொல்லியிருந்திருப்பார்” 
அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்ப, அப்போது தான் சொன்னார் அந்த பெரியவர்.., “ஊரில் யாரும் இல்லை அனைவரும்  குலசாமி கோவிலுக்கு போயிருப்பதை”
காரில் கோதையும்.., சிவராமனும் ஏற கார் கோயில் நோக்கி  பயணப்பட்டது..,  
                   
                                                                                                        விஷ்வ துளசி தொடர்வாள்………………

Advertisement