Advertisement

            ஓம் நமசிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 4
ஹாஸ்பிடல் ஐசியூவில் கோதையிருக்க.., டாக்டரை எதிர்பார்த்து வினையும் சிவராமனும் வெளியே இருந்த சேரில் அமர்ந்திருந்தனர்.., ஐசியூவிலிருந்து டாக்டர் வெளியே வந்தவரிடம் வேகமாகச் சென்றான் வினய் …, 
வினய்……., “அங்கிள் அம்மாக்கு என்னாச்சு..??”
“நத்திங்… பீபீ  ஜாஸ்தியாயிருக்கு.., உங்கப்பா கோதைய எதாவது சொன்னான??” என சிவராம்மை பார்க்க
“ஊஹூம்…, அம்மா நல்லாதான் இருந்தாங்க …, திடீர்னு அப்பா சத்தம் கேட்கவும் தான் போய் பாத்தேன் அம்மா மயக்கமாகியிருந்தாங்க.”
“அப்பாவுக்கும் எதுவும் தெரியலை.., அம்மா மயங்கவும் அவருக்கும் எதுவும் புரியலை”  என்றவன்.., “அம்மாவ பாக்கலாமா அங்கிள்??” என கேட்டான் வினய்
 
“டென் மினிட்ஸ் ரூம்புக்கு மாத்திடுவாங்க அப்பறம் பாரு..” என்றவர் சிவா வாடா காபி குடிச்சுட்டு வரலாம் என சிவராமனை அழைக்க.., எதுவும் சொல்லாமல் அவரின் பின் சென்றார் சிவராமன்…
“காபி எடுத்துக்க” என ஒரு கோப்பையை அவரிடம்  தள்ளிவைக்க.., சிவராமன்  அதை குடிக்காமல் கையில் வைத்து உருட்டிய படியே இருந்தார்.., 
“குடிடா.., இல்லனா இதுவும் ஆறிப்போயிடும்..” என நக்கல் கலந்து பேச
“வரதா…” என கண்கள் கலங்கிய சிவராமனை பார்க்க அவருக்கும் பாவமாகத்தான் இருந்தது.., 
சிவராமனை போலவே வரதன் என்ற வரதநாயகத்திற்கும்..,  மங்களுர் புதிய இடமே…
பாஷை தெரியா ஊரில் தமிழை கேட்டவுடன் மலர்ந்த நட்பு .., சிறிது நாளில் இரு குடும்பமும் ஒன்று என்று ஆனது.., இது வரை எதையும் மறைத்தது இல்லை வரதனிடம் சிவராமன்..,  ஊரில் நடந்ததை கூறி கோதையிடம் அதை  பற்றி கேட்க வேண்டாம்.., அதை பற்றியும் அவருக்கு  எதுவும் தெரியாது.., என்பதையும் அவரிடம் மறைக்காமல் தெரிவித்திருந்தார் சிவராமன்..,
“என்ன ஆச்சுடா சிவா.??”    
“பீபீ அப்நார்மலா இருக்கு.., ஏதாவது சண்டையா உங்களுக்குள்ள..??”
“என்னைக்கிடா அவ எங்கிட்டா சண்ட போட்டிருக்கா..,?? சண்ட போட்டிருந்தா கூட எனக்கு உறுத்தாம  இருந்திருக்கும்.. அவதான் வாய் விட்டு எங்கிட்ட எதுவும் கேட்டுக்க மாட்டேனுறாலே.., அதே என்ன கொஞ்ச கொஞ்சமா கொல்லுதுடா.”
வரதன்….  “சரி…. அவ கேக்கல நீ பேசலாம்ல?? என்றவரை பார்த்து பயமா இருக்குடா..” என சிவராமன்  சொல்ல
“பயமில்லடா..!! ஈகோ.., நா என்ன சொல்லுறது.., அவளுக்கு வேணுன்னா அவளே கேட்டுகிறட்டும்னு எண்ணம் உனக்கு..,”
டேய் வரதா.., “என்ன பத்தி தெரிஞ்சுமா இப்படி கேக்குற”..
“தெரிஞ்சதுனாலதான் கேக்குறேன் தப்பு செஞ்சது நீ.. அந்த பொண்ணு உங்கிட்ட எதுக்கு கேக்கனும்..?? நீ தான அந்த பொண்ணுகிட்டயும்., உன்னோட மாமனார் கிட்டயும்  மன்னிப்பு கேக்கனும்”.., என வரதன் கோபமாக பேச 
சிவராமன் வரதனையே பார்த்திருந்தார்
“இப்படியே  விடுறது கோதை உடம்புக்கு நல்லதில்லடா .. என்னடா இன்னுமா யோசிக்குற  ரெம்ப வருஷமா யோசிக்குறடா  சிவா சீக்கிரமா முடிவு பண்ணு.”
“நேத்து அவள அப்படி பயந்து  வெளிறிபோன முகத்தோட பாக்கும் போதோ முடிவு பண்ணிட்டேன் அவள அவங்க குடும்பத்தோட சோத்துடனும்னு”..,  
வரதன்… “அப்ப நீ ??”
“நானும்தான்டா… என்ன மட்டும் எதுக்கு பிரிக்குற??” என சிவராமன் கேட்க…, “அடப்பாவி அவ்வளவு நல்லவனா நீ..!!” என வரதன் சிரித்தார்
“இந்த கேள்விய கோதை சரியானதுக்கப்பறம் கேளு  இப்ப வா…” என்று முன்னே சிவராமன் நடக்க….., “எப்பிடியோ நல்லாயிருந்தா சரிதான்” என்றவாரே அவருடன் நடத்தார் வரதன்…
அறைக்கு மாற்ற பட்ட கோதை நல்ல உறக்கத்தில் இருக்க.., அவரின் கையை பிடித்தபடியே பக்கத்தில் இருந்த சேரில் அமர்ந்தவாரே தூங்கியிருந்தான் வினய்…,
வரதன், “இவன் இன்னும் இந்த பழக்கத்தை விடலையா”  என சிரிக்க.., “கோதை எழுந்து நடந்தாலும் இவன் எங்க விடப்போறான்  இன்னும் நாலு நாளைக்கு சுட கஞ்சி மட்டும்தான் எனக்கு” என்றார் சிவராமன்..
“ஏன்டா… அதுக்குள்ள புரேகிராம மாத்திட்ட .., நாளைக்கு இந்நேரம் மாமியார் வீட்டில விருந்து சாப்புட்டுட்டு செரிமானத்துக்கு மருந்து சொல்லுரான்னு போன் பண்ணுவன்னு நெனச்சேன் .., இப்படி  செல்லுற”
“நாளைக்கு போனாதான் தெரியும்.., எனக்கு  விருந்தா  இல்ல நானே விருந்தான்னு..,” 
“விருந்தோ.., வீங்குன பண்ணோ.., எதுவா இருந்தாலும் எனக்கு போன் பண்ணு நா  மருந்து தற்ரேன்” 
எதுக்கு “தொத்திகிட்டு இருக்குற உசுர மொத்தமா பைசல் பண்ணவா…,” நான் “என்னோட மச்சானுங்ககிட்ட சொல்லி நல்ல டாக்டரா பாத்து வைத்தியம் பண்ணிக்கிறேன்”
“எல்லாம் நேரம்டா…,  இதே, துளசியிருந்திருந்தா’ என்று ஆரம்பித்தவர் அப்போதுதன் கவனித்தவராக “துளசி எங்கடா சிவா??”
“அவ ஃபிரண்டோட கிராமத்துக்கு போயிருக்காடா .., திருவிழாவாம் வர நாலு நாளாகும்.”
“ஓஓஓ… அதனால தானா  இந்த ஹாஸ்பிடல் அமைதியாயிருக்கு…, இல்லனா கோதைக்கு டிரிப்ஸ் ஏத்துனதுக்கு இந்நேரம் நான்ல ஐசியூல இருந்திருக்கனும்” என கூறி சிரித்தார் வரதன்
‘சரி…….. நீயும் வா துங்குவோம்…, என வரதனை சிவராமன் அழைக்க இருவரும் பேசிக்கொண்டே தூங்க…” பொழுதும் விடிய ஆரம்பித்தது
கோதை, “கண் திறக்க கண்டது மகன் ஒரு புறம் கையை பித்தப்படி அமர்ந்தவாரு உறங்கி இருக்க.. அவருக்கு எதிர்புறம் சிவராமனும் வரதரும் பக்கத்திலிருந்த  பெரிய கட்டிலில் தலை மாற்றி வைத்து உறங்குவதைதான்.” 
“கண் திறந்தவருக்கு புரியவில்லை தான் ஏன் ஹாஸ்பிடலில் என்று, குழப்பத்துடன்,  இடது கையை தூக்க முயல அதில் சலைன் ஏற்றப்பட்டு இருந்தது…”
அதை விடுத்து, “வலது கையை வினய் கையிலிருந்து எடுக்க முயற்சிக்க அதில் தூக்கம் தெளிந்தான் வினய்..,”
“ம்மா……. எழுந்துட்டீங்களா..,” என்றபடி அவரை பின் சாய்ந்து அமர வைக்கத்தான் “என்னை எதுக்குடா ஹாஸ்பிடல்ல சேத்து இருக்குறீங்க??” என கேட்ட கோதையை முறைத்தவன் “அத நீங்க தான் செல்லனும் நேத்து நைட் அப்படி கத்திட்டு இப்ப எங்கள கேள்வி கேளுங்க” என்றதும்.. “கனவின் தாக்கம் அவரின் கண்களில் தெரிந்தது”
 இவர்களின் சத்தம் கேட்டு மற்ற இருவரும் எழுந்து அமர்ந்தனர்..,
வரதன்,  “இப்ப எப்படியிருக்கு கோதை??”
கோதை., “நீங்கயெல்லாம் இருக்கும்போது எனக்கெண்ணனா.??”  என்றவரின் குரலில் இருந்தது என்ன  என்பது  வினையை தவிர்த்து இருந்த இருவருக்கும்   புரிந்தது..,
ஃபிளாஸ்கில் இருந்த காப்பியை மூவருக்கும் வினைய் கொடுக்க..,
வினய், “நீ……. அம்மா கூட இரு, நா வீட்டுக்கு போயி வேண்டியத எடுத்துட்டு வர்றேன்..” என்றவாரே வரதனை பார்க்க.., அதன் அர்த்தம் புரிந்தவறாக “இருடா சிவா…… நானும் வர்றேன் என்ன விட்டுட்டு நீ போ…,” என்றவாறே இருவரும் வெளியே சென்றனர்
ஒரு மணி நேரத்தில் திரும்பிய சிவராமனின் கையில் இருந்த  லக்கேஜை பார்த்த கோதை “என்னங்க இது??” 
ம்……..“உன்ன நா…….., சரியா பாத்துகிறது இல்லையாம் ..” அதனால தான் பீபீ……. ஏறிடிச்சாம் உனக்கு சரியாகுற வரைக்கும் வெளிய எங்கயாவது…., ஹில் ஸ்டேஸன்  மாதிரியான இடத்துக்கு அழச்சிட்டு போன்னான் உங்க டாக்டர் அண்ணன்…., கூடவே இவனையும் கூட்டிட்டு போன்னான்…,
“அம்மாக்கு உடம்பு சரியில்ல.., ஹில் ஸ்டேஸன் கூட்டிட்டு போறது சரி…!!! நா எதுக்குப்பா?”
“உன்ன தனியாவிட்டுட்டு போனா.., அவ உன்ன நெனச்சே கவலைபட்டு பீபீ ஜாஸ்தி ஆகிடுமாம்.. அதனால உனையும் கூட கூட்டிட்டு போன்னுட்டான்..,””
கோதை….. “அப்ப துளசி??”
“துளசிய., விஷேசம் முடிஞ்சதும் நேரா அங்க வர சொல்லலாம்..??”   என அவர்கள் முகம் பார்த்து “ என்ன பாத்துட்டே இருக்கீங்க கிளம்புங்க..!! ஃப்ளைட்டுக்கு டைம் ஆச்சு, நா….. போய் வரதன பாத்துட்டு பணம் கட்டிட்டு வர்றேன்” என அவர்களை யேசிக்கவும் விடாமல் பேசவும் விடாமல் வெளியேறனார் சிவராமன், 
“என்னம்மா …!!! அப்பாவ இது..?? “சேந்தாப்புல நாலு மணி நேரம் வீட்டுல இருங்கப்பானா இருக்க மாட்டாரு.., அவரு மேல தான் ஆபீஸே இருக்குறமாதிரி பீல் பண்ற மனுசன் இன்னிக்கு ஊருக்கு போக கிளம்பி நிக்குறாரு..??”
“அவரு ஆபீஸ தாங்க தான் நீயிருக்கைலடா “ வினய்
“அது தாம்மா……… இன்னும்…….. ஆச்சரியம்!! நானும் தான உங்க கூட வர்றேன்..,”
“ஆமாடா..!! வினய்  நா…… கவனிக்கல பாரேன்.”
“எல்லாம்….. பொண்டாட்டீ…. மேல இருக்குற லவ்..,” என ராகம் இழுக்க..,” வாய் பேசுனது போதும் சீக்கிரம் குளிடா.., நா…  எடுத்துவைக்கிறேன்” என பெருட்களை கோதை எடுத்து வைக்க வினைய் குளிக்க சென்றான்..,        
மங்களூர் ஏர்பேர்ட்…. “அப்பா, அம்மாவ கூட்டிட்டு போங்க” நா… டிக்கெட்ஸ்ஸ வாங்கிட்டு வர்றேன்  என்றான் தன் ஃபோனை பார்த்தவாறே
“ஹலோ.., ரவி என்ட்ரன்ஸ்ல இருக்குறேன் சீக்கிரம் வா”
“ஹாய்ண்ணா..” என்றவன் வினையிடம் டிக்கெட்டை தந்தவன்..,”என்னண்ணா  திடீர்னு மதுரைக்கு??” 
“எப்பவும்.., ரெண்டு நாளைக்கு முன்னாடியே அப்பா சொல்லுவாரு.., இன்னிக்கு சடனா மூணு பேருக்கும் டிக்கட் போடுன்னதும் கெஞ்சம் லேட் ஆயிடுச்சுண்ணா “என்றவனை., 
‘என்ன மதுரைக்கா??’ என யோசனையுடன் பார்தவன்.., மூளையில் மின்னல் வெட்ட “ரவி., அப்படியே ஏர்போர்ட் இருந்து போறதுக்கு வண்டி ஏற்பாடு பண்ணிடு .., எங்கனு நா அப்புறம் சொல்றேன்… “
சிவராமன் முன் லக்கேட்ஜை வைத்தவன்.., “அம்மா  காபி வாங்கட்டுமா..??”என்றான் 
கோதை “உங்க அப்பாவுக்கும் சேத்து வாங்குட” என்றார்.., 
“ஹாய் வினய்ண்ணா..!!!” என்ற சத்தத்தில் திரும்பிய வினய் “ஹாய் திவ்யா” என்றவன் ‘ஐய்யோ….…!!’ என மானசீகமாக தலையில் அடித்தவன் கையில் இருந்த காபியை குப்பைதொட்டியில் போட.., 
“ஏண்ணா…,” என தன்னை குழப்பமாக பார்த்தவனை.., புரியாமல் பார்த்தா திவ்யா.., 
“அம்மா… உன்ன பாத்தாங்களா திவ்யா..??’ என மறைவான இடம் நோக்கி போக 
“அம்மா வந்திருக்காங்களா..?? எங்க..??” என ஆர்வமாக திரும்பி பார்க்க போக “கெட்டது போ” என்றவன் வேகமாக அவளை மறைத்து நிறுத்தினான்..,
“துளசி ஒன்னும் சொல்லலியா உங்கிட்ட..?”
“என்ன அண்ணா ஏதாவது பிரச்சனையா..??”
“அதெல்லாம் இல்ல.., துளசி உங்கூட கிராமத்துக்கு போறதா சொல்லி அவுட்டிங் போயிருக்கா., இப்ப அம்மா உன்ன பாத்தா துளசி மாட்டிப்ப இல்லையா..??” அதுதான்
அவன் சொன்னதை கேட்டு முதலில் திகைத்தவள் பிறகு புரிந்த்தும் சிரித்துவிட 

Advertisement