Advertisement

          ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி  அத்தியாயம் 3
பூஜை மணி சத்ததில் அனைவரும் சன்னிதி முன் சென்றனர்..,
பூசாரிக்கு, அருள் இறங்கியதிற்கு  அறிகுறியாக உடம்பு லேசாக ஆடியது.. அவரின் ஆட்டத்திற்கு ஏற்ப உடுக்கையின் சத்தம் கேட்டது.
சில வினாடிகளில் உடுக்கை சத்தம் நின்றது..
“விஸ்வநாதா….” என்ற பூசாரியின் குரலுக்கு தோள் துண்டினை இடுப்பில் கட்டி அவரின் முன் நின்றார் விஸ்வநாதன்., கையில் எடுத்த விபூதியை அவர் கையில் கொடுத்தவர்.., “நீ”. கேட்டத கெடுத்துட்டேன் போதுமா?? என்றவர் வாங்கிக்க என்று திருநீரை அவரின் நெற்றியில் பூச.., 
அதனை கேட்டவுடன் பூசாரியின் காலில் விழுந்தார் விஸ்வநாதன்.., “பூசாரி போ… போ… இனி உனக்கு நல்லகாலம் தான் என்று அருள் வழங்கினார்..”
**************************************************** 
விஸ்வநாதன் சேரில் அமர்ந்து இருக்க சுற்றி அனைவரும் நின்றிருந்தனர்..,
சிரியவர்கள் தவிர பெரியவர்கள் அனைவரின் முகத்திலும் ஏதோ புரிந்தும் புரியாத தோற்றம்..,
அரவிந்தன், “ஏன்…, ஜில்லு மறுபடியும் கிழக்கு சீமையிலே படம் ஓட்டுவாங்கலா என்ன??”
கயல்…., “ஆமா மாமா… அந்த படத்துல கூட நெப்போலியன விஜயகுமார் நல்லா அடி வெளுப்பார்ல.. அந்த சீன் எனக்கு ரொம்ப பிடிக்கும் தெரியுமா….”
“ஜில்லு…. உன் மாமன அப்படியெல்லாம்  நெப்போலியன் லெவலுக்கு கம்பேர் பண்ணகூடாது.., உங்க அண்ணன் செல்லமா தொட்டாலே நா ரெண்டு நாளைக்கு படுக்கைய விட்டு எந்திரிக்க மாட்டேன்..”என்றவன்
மேலும் ‘இப்ப  நான்…  கேட்டது தெரிஞ்சது..,”என்ன கீழ போட்டு ஊதம்பிய எம்மேல உருள வச்சிடுவாம்மா உன்னோட பாசமலர்..,” என்ன காப்பாத்து ஜில்லு என்று அவளை உரச
கயல்… “அவன் கையை நறுக்கென்று கிள்ளிவிட .., அதை எதிர்பார்க்காத அரவிந்தன் வலியில் “ஐயோ” என சத்தமிட
அனைவரும் அவர்களை திரும்பி பார்க்க, “மானத்த வாங்கிட்டா” என வாய்குள் முனகியபடி ஈ…ஈ…ஈ… என இளித்தான் அரவிந்த்
பார்வதி, “வாடா…… அங்க நின்னு என்ன பாக்குற இங்க வந்து உக்காரு..”என அழைக்க
ஆமா “இருபத்து நாலு வருசமா இவங்க படம் ஓட்றாங்க என்னமோ இன்னிக்குதான் புதுசா செல்ற மாதிரி பில்டப்பு..,”  
என்னடா அங்க பேச்சு..?
நானா.., இல்லையே.., பாட்டி நம்ம வீட்டு பெருமைய இந்த திவ்யா பொண்ணுக்கிட்ட சொல்லிடிருந்தேன்!!!
சட்டென கை காட்டியதால் திவ்யா பதில் தெரியாமல் முழிக்க.., 
அவளின் பாவனையில் அனைவருமே சிரித்துவிட அந்த இடத்தின் நிலை மாறியது..,  
மங்கை…“ராதா நேரமாச்சு… இன்னுமா ரெடியாகல…,?? ஆகிட்டோம்.., பெரியம்மா வாங்க போலாம் என செல்ல அனைவரும் பொங்கல் வைக்க கோவிலுக்கு சென்றனர்”
பாட்டி…, என்றபடி கோவில் வாசலில் அமர்த்திருத்த பார்வதியிடம் வந்து அமர்ந்தாள் திவ்யா…
“இந்த கோயில் ரெம்ப அழகாயிருக்கு பாட்டி!!!”
அவளை பார்த்து சிரித்தவர்.., “ஏம்மா இந்த மாதிரி கோயிலுக்கு போனதில்லையா??”
“ஊஹூகும் இல்ல பாட்டி இதுதான் முதல் முறை…” 
“சொந்தபந்தம்மெல்லாம் இல்லையாமா உனக்கு??”
“இருக்குறாங்க பாட்டி.., தாத்தா பாட்டி மாமா அத்தைன்னு… ஆனா பேசுறதில்ல?? என்றவளை பார்த்து பெருமூச்சுவிட்டார்.., பெரியவங்க செய்யுற தப்பு சின்ன பசங்க உங்கள தான் பாதிக்குது”
“பாட்டி…. நா ஒன்னு கேட்டா கோவிச்சுக்க மாட்டீங்கள்ள??”
பார்வதி அவளை பார்க்க …!
“நேத்து சாமி குறின்னு ஏதோ சொன்னாங்க எனக்கு புரியலை அது என்ன பாட்டி??”
“சாமிகிட்ட குறி கேக்குறது எல்லா கோவில்கலையும் நடக்குற விசயம்தான் … வெளி போக வீட்டு ஆளுங்க கிட்ட அனுமதி வாங்குவோம் இல்லையா., அது மாதிரிதான் இது சாமிகிட்ட உத்தரவு வாங்கிட்டு திருவிழா ஆரம்பிப்பாங்க.., அந்த சமயத்துல சாமியே வந்து பேசுறத நம்பிக்கை.., அப்ப அவங்க, அவங்க மனக்குறைய சாமிகிட்டசொன்ன சாமி அத தீர்த்து வைக்கும்னு ஒரு நம்பிக்கை”.. 
“நேத்து அந்த கருப்பு சாமி முன்னாடி  சாமி ஆடினார்ல.., அவர் தான் இந்த கோயிலோட பெரிய பூசாரி ரொம்ப வயசானவரு..”
“ம்ம் ..நம்ம… தாத்தாவ விடவா பாட்டி??”
“ஆமாம்..,  அவரவிட அஞ்சாறு வருசம் பெரியவரு…”
‘அவரு மேல கருப்பசாமி இரங்கி எல்லாருக்கும் நல்ல வாக்கு சொல்லும்..”
“அது தான் தாத்தாகிட்டயும் அப்படி சொன்னாறா!!!’
ஆமா.., ஆனா “இந்த ஒரு வார்த்தைக்காக நாங்க இருபத்திநாலு வருசம்மா காத்துகிட்டிருந்தேம்..” என பெரு மூச்சு விட
“ஏன் பாட்டி??” என்றால் திவ்யா
அவளை வருதத்துடன் பார்த்த பார்வதியை நோக்கி, ‘சொல்லவேண்டான்னா விட்டுருங்க பாட்டி” என்றாள் திவ்யா.
“எனக்கு மூனு பசங்க மட்டுமில்ல  ஒரு பொண்ணும் இருக்கா.., “பேரு கோதை… பேருக்கு தகுந்தபடி அப்படி ஒருஅழகு., அமைதி யாருகிட்டையும் சத்தமா கூட பேச மாட்டா.., “
மார்கழி மாசத்துல காலைல அவ பாடுற “திருப்பாவையும்.., நாச்சியார் திருமொழியும்” இப்பவும் இந்த காதுல கேட்டுக்கிட்டேயிருக்கு., 
திவ்யா….. “அவங்க இப்போ.. ??”என
அவசரமாக அவள் வாயை கையால் மூடி,”எதுவும் பேசாத” என்று தலையசைத்தவர்..,
“தீர்கசுமங்கலியா புருச, புள்ளங்களேட சந்தோசமா இருக்கா” என்றவரின் கண்ணில் இருந்து நீர் இறங்கியது 
“ராஜேந்திரனுக்கும், வாசனுக்கும் இளையவ.., இரத்தினத்துக்கு அக்கா…. மருமகன் பேரு சிவராமன்.., எங்க ஊருல இருக்கற  எல்லா வீட்டாளுங்களும் ஏதோ ஒரு வகையில சொந்தகாரவங்கதான்”
“மாப்பிள்ளையும் எங்க சொந்தம்தான் வசதி கம்மினாலும் நல்ல குணமானவரு..,” அவரோட குணத்துக்காகவே எங்க கோதைய அவருக்கு கொடுத்தோம்.., அவரும் அப்படிதான் பாத்துக்கிட்டாரு எம்பொண்ண.” 
“யாரு கண்ணு பட்டுச்சோ தெரியலை…. அப்ப இரத்தினத்துக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சோம்..,”
“இங்க திருவிழாவுக்கு வந்துட்டு போயி ஜாதகத்த பாக்கனுன்னு முடிவுபண்ணுணாங்க”
“திருவிழா முடிஞ்ச மறுநாள் எல்லாரும் கிளம்ப தயார இருந்தப்ப.., வெளிய கேட்ட சத்தத்துல நாங்க வெளிய போய் பாத்து மாப்பிள்ளை மாமனார் சண்டையதான்”
“தாத்தா சிவராம்மன அடிக்க கை ஓங்கியிருக்க.., அவர் இவரோட சட்டைய புடிச்சிருந்தாரு., என்னனு எங்களுக்கு எதுவும் புரியலை..,??  எல்லாரும் அவங்கள விளக்கி விட்டாங்க..,”
“மாப்புள்ளை கோதைய கூப்புட..,?”
“அவ, அவங்க அப்பாகிட்ட மன்னிப்பு கேட்டாதான் வருவேன்னு பிடிவாதமா நிக்குறா.. யாருக்கும் என்ன பேசுறதுன்னு புரியலை” 
“நீ…., இப்ப வரலையின்னா நம்ம உறவ முறிச்சிடுவேனு”..,?? சிவா சொல்ல அதுக்கும் கோதை சரின்னுடுச்சு..,
“அப்ப தான் மங்கை சட்டுன்னு பேசிட்டா..,”
என்னனு பாட்டி..?
“பொணமா வந்தாலும் உன் புருசங்கூடதான் வரனும்.., புருசன் இல்லாம வாரதா இருந்தா எப்பவும் எங்க வீட்டி படிய மிதிக்ககூடதுன்னுட்டா”
“அப்படியே திரும்பி பாக்காம.., மூனுவயசு பேரன் வினய்யோட போனவதான் இப்ப வரைக்கும் வரல”
 
“திரும்ப நீங்க போயி கூப்புடலையா பாட்டி..??”
என்ன பிரச்சனைன்னு எங்களுக்கு தெரியலை.., இவங்ககிட்ட கேட்டாலும் யாரும் பதில் சொல்ல மாட்டேன்றாங்க.., நா யாருக்குன்னு பேச 
சரி ஊருக்கு போயி சம்மாதானம் பண்ணலானு.., கோதை வீட்டுக்கு போனா மாப்பிள்ளை பொண்ணையும் பேரனையும் கூப்புட்டுக்கிட்டு ஊரவிட்டே போயிட்டாரு….
அவங்க.. எங்க போனாங்கனு தெரியாத பாட்டி..??
“மங்களூர்க்கு…,” ஏற்கனவே மாப்பிள்ளைக்கு அங்க இருக்குற கம்பெனியில வேலைக்கு மாறுதல்லாகி இருந்துச்சி…, கோதையையும், வினயனையும இங்க விட்டுட்டு அவரு மட்டும் அங்க போறதாதான் ஏற்பாடகி இருந்த்து”
இங்க.. நடந்த சண்டைல அவரு எல்லாரையும் கூட்டிட்டுபோயிட்டாரு.., அவ “போனதுக்கப்புறம்மாதான் தெரிஞ்சது அவ மாசமாயிருக்குறது”..,
“திரும்ப பாக்க போகலையா பாட்டி..? “
“புருசனா ..,புள்ளையானு வரும் போது புருசன் பக்க தட்டுதான ஒசந்து நிக்கும்..,  என்னதான் கோபம் இருந்தாலும் அவ மாசமா இருந்தப்பா அவள ஊரைவிட்டு கூட்டிட்டு போனது நடந்த பிரச்சனை எல்லாம சேந்து கோபத்த அதிகமாக்கிடுச்சு..,”
“இப்ப வரைக்கும் அது கொறஞ்சுதா, இல்லையா தெரியாது”.. என்றவரை புரியாமல் திவ்யா பார்க்க..,
“எம்பொண்ண பத்தின பேச்சு அன்னியோட நின்னுபோச்சு.., இன்னிக்கு வரைக்கும் யாரும் அவளைபத்தி பேசுனதில்லை..,”
“நா…. வோண்டிக்குறதெல்லாம் ஒன்னுதான்..,  இந்த சாமிகிட்ட நா சாகுறதுக்குள்ள எம்பொண்ண ஒரு தடவை கண்ணுல காட்டிடுன்னு என்று கண்ணீர் விட்டவர் கண்களை திவ்யா துடைத்தாள்..,
“கண்டிப்பா பாட்டி.., உங்க பொண்ணு உங்கள பாக்க வருவாங்க!!!” என்று திவ்யா ஆறுதலாக அவர் கையை பிடித்தாள்
“எம்பேத்திக்கும் கூட உன்னேட வயசு தான் இருக்கும்” என்றவாரே அவளின் தலையை தடவ..,” 
“அத்த பொங்கல் பொங்கிடிச்சு.,” என்று மங்கையின் குரல் கேட்டது.., “வாமா…… அங்க போவேம்…” என்று திவ்யாவின் கையை பிடித்த படி பொங்கல் வைக்கும் இடம் சென்றார் பார்வதி.
மங்களுர்.., அதிக மனித நடமாட்டம் உள்ள வீதி என்றாலும்.., அந்த வீடு வீதியின் முடிவில் இருந்ததால் சற்று  அமைதியாக இருந்தது..,
கேரளாவின் எல்லை பகுதி என்பதால் அனேக வீடுகள், கோவில்கள் அனைத்தும் கேரள பாணி கட்டிடக் கலையே..,  அதில் இந்த வீடு மட்டும் சற்றே மாறுபட்டு தமிழ் நாட்டு பாணி கட்டுமானத்தை கொண்டது..,’
நான்கடி காம்பவுண்ட் சுவரின் உள்ளே பெரிய தோட்டதுடன் கூடிய தொட்டி கட்டிய இரண்டடுக்கு வீடு..,
கீழே வாயிற் கதவை தாண்டியதும்…  தொட்டியுடன் கூடிய ஹால் அதை சுற்றி  தொட்டியை நோக்கியவாரு அமைந்த சமையல் அறை, டைனிங்க் ஹால், பூஜை அறை,  விருந்தினர் தங்கும் அறை, என்றிருக்க சமையல் அறையின் பக்கவாட்டிலிருந்து மாடிக்கு செல்ல படி அமைத்திருந்தது
மாடியில் மெத்தம் நான்கு அறைகள்.. அதில் இரண்டு அறைகளின் பால்கணிகள் கடல் நோக்கியிருக்க, மீதமிரண்டு அறைகளின் பால்கணி  அந்த வீட்டின் தோட்டத்தை பார்ப்பது போல் கட்டப்பட்டிருந்தது. 
இங்கு ஊரில்.. கிடைக்கும் அத்தனை விதமான பூக்களும் சில வகையான பல மரங்களும் அந்த தோட்டத்தில் உண்டு. பூந்தோட்டத்தின் நடுவில் வீடு அதை பராமரிப்பது அந்த வீட்டின் நாயகி கோதை.
“கோதை….,  ஒரு கப் டீ கொடும்மா..”, என்றபடி கிட்சனுள் நுழைந்தார் சிவராமன்..
அவரிடம் டீயை கொடுத்தவரோ.., “என்னங்க எங்க வினய்..??” என்று கேட்க 
“அவங்க ஆபீஸ்லிருந்து போன் வந்துச்சுமா அதுதான்  போயிருக்கான்’..,என்றவர்
“நீ….. ஏன் ஒரு மாதிரியிருக்க ..??” எனக் கேட்டார்
ஆமா…….. என்னைய கேளுங்க..,, இருக்குறது நாலு பேரு அதுல மூனுபேரும் ஆபீஸ் காலேஜ்னு போயிடுறீங்க., சனி ஞாயிறு தான் வீடுன்னு நினைச்சா இப்ப அதுவும் இல்ல…
சின்னவ பிரண்டு வீட்டு விஷேசம்ன்னு ஊருக்கு போயிட்டா…, இவனும் உங்கள மாதிரியே ஆபீஸ கட்டிக்கிட்டு  அழறான்.., நா ஒருத்தியா என்ன பண்றது..,
உங்களுக்கு தான் உங்க தோட்டம் இருக்குதுல அப்பறம் “நாங்க எதுக்கு”.., என்றபடி உள்ளே வந்த வினய், கையில் இருந்ததை கோதையிடம் கொடுத்தான்
“எங்கடா தம்பி கிடைச்சது..?? ரெம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன்!!!” என்றவரை பார்த்தவன்
ம்மா…. “இதெல்லாம் அநியாம்மா.., வெறும் முப்பது ரூபா செடிய ஐநூரு ரூபா கொடுத்து வாங்குனது நானாதான் இருப்பேன்” 
“கோதை…., என்னதூ..!!! ஐநூரு ரூபாயா..!!! அதிகம்டா வினயா..,”
“ம்…… இத இப்ப செல்லுங்க.., இந்த பூ செடி தான் வேணும்ன்னு அந்த நர்சரிகாரன்கிட்ட செல்லுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும்..,” 
“எதுக்குடா இவ்வளவுன்னு கேக்க வோண்டியது தான..??”
கேட்டா ……… “அண்ணா நீங்க மட்டும் தான் இந்த மாதிரி செடியெல்லாம் கேக்குறீங்க.., இங்க கிடைக்குறதில்ல ஊர் பக்கம் இருந்துதான் வரவைக்கனும்.., டிரான்ஸ்போர்ட் அது இதுன்னு சொல்லி ஐநூரூ ரூபாய வாங்கிட்டான்”   
“நீ…, அம்மாட்டா வாங்கிக்கனு சொல்ல வேண்டியது தானடா..??” 
“எங்கிட்டயாவது ஐநூரூ தான்.., உங்ககிட்டனா அவன்வீட்டு கதைய சொல்லி ஆயிரம் ரூபா வாங்கியிருப்பான் இல்லையாப்பா., “ என்று சிவராமனை துணைக்கழைக்க..
“டேய்……… இது உனக்கு உங்க அம்மாக்கு அந்த நர்சரிகாரணுக்கு இருக்குற பிரச்சனை., இதுல என்னைய  ஏண்டா இழுக்குற என்றவர்.., கோதை நைட்டுக்கு எனக்கு சப்பாத்தி குருமா பண்ணுமா போதும்…” என்றவரை   வினய் பார்க்க,
“எது எப்படி இருந்தாலும்.., சப்பாதியும் குருமாவும் முக்கியம்டா மகனே” என்ற படி தன் வழக்கமான நடைபயிற்சிக்கு சென்றார். 
வினய், வாங்கி வந்த அந்த ஜாதி மல்லி செடியை தோட்டத்தில் பதியம் செய்ய கோதை  நிலத்தில் குழி பறிக்க.,” குடும்மா நா செய்றேன்..,” என்றபடி குழி பறிக்கும் வேலையை அவன் ஆரம்பித்தான்
‘வினய்…. துளசி போன் பண்ணுணாலாப்பா ..??”
வினய் சிரித்தபடி……… ம்மா…….”காலைல  தான பேசுனீங்க., இப்ப மணி ஐஞ்சுதான் ஆகுது என்னமே மாசகணக்கானது போல பொலம்புறீங்க..,”
“நீ ஏன்டா பேசமாட்டா.., வயசு பொண்ண ஊருக்கு தனிய அனுப்பிவச்சிட்டு நா படுறது எனக்குதான் தெரியும்..,”
“அம்மா… அவ சின்ன பொண்ணு இல்ல.., இந்த ஊர்ல இருக்குற பாதி கம்பனிகளுக்கு இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸ் பண்ற அட்வைசர்., விட்டா இந்த ஊரையே வித்துட்டுவந்துடுவா .., அவள என்னமோ காக்க தூக்கிட்டு போயுடுறமாதிரி கவலைபடுறீங்க..” என பேசும் போதே
துளசி காலிங்…….. என்ற எழுத்துடன் மொபைல் ஒளிர  ‘வினய் துளசிடா!!!” என்றவர்
போனை ஆன் செய்து “துளசிமா நல்லாயிருக்கியாடா???” என கேட்டார்
“நல்லாயிருக்கேன்மா” 
“எப்படா வருவ..?? நாளைக்கு வந்துடுவியா..??”
“அம்மா….. நா வீட்டவிட்டு வந்து ரெண்டு நாள்தான ஆச்சு.., இன்னும் இங்க விஷேசம் முடியலை முடிஞ்சதும் வந்துடுவேன்..,” என்றவள் சிரிக்க என்னடி சிரிப்பு.., என்றவர் அவளுடன் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தர்
‘என்ன சிரிப்பு..??’ என்றபடி போனை கோதையிடம் இருந்து வினய் வாங்கினான்.., 
“அம்மா., டீ என்றவன்.. என்னனு சொன்னா நானும் சிரிப்பேன்..,” என தங்கையிடம் பேசியவாறே சற்று தள்ளி தோட்டத்தின் உள்ளே போக..,
வினய் கேட்ட டீயை எடுக்க கோதை வீட்டினுள் சென்றார்..,
துளசி.. “போன வேலை  ஓகேவா..??” 
“இன்னும் ஆரம்பிக்கவே இல்லண்ணா.., இப்பவே எப்படி சொல்றது..??” 
“கொஞ்சம் கஷ்டம்தான் பாக்கலாண்ணா.., முடிஞ்சவரைக்கும் சக்சஸ் பண்ண டிரைபண்றேன்”
“சரிடா பாரு… முடியலைன்னா வந்துடு வேற யோசிக்கலாம்.., நான் வேணும்னா வரட்டா”??
“அப்ப, அம்மாவ சமாளிக்கிறது யாரு…??” நீ இருக்குற தைரியத்துலதான.., நா  இங்க வந்தேன் நீயும் வந்துட்டா கோதை சாமிய கும்புடுறத விட்டுட்டு.., கோதை சாமியாரா மாறி  மடத்துகே போயிடுவாங்க…, அந்த ஊர்ல மடத்துக்கு வேற பஞ்சமில்லண்ணா  கூடவே சாப்பாட்டுக்கும் பஞ்சமில்ல பாத்துக்க.., ”   
“அதெல்லாம் நடக்காது துளசி.. நமக்கு காலைல இட்லியும் நைட்டுக்கு காஞ்சி போன சப்பாத்தியும்தான்..,”
“டேய்…, அண்ணா நா.., அம்மாக்காக கவலைபட்டா நீ சாப்பாட்டுக்கு கவலை படுற…” 
அவள் சொன்னதை கேட்டு சிரித்தவன் “நானும் அம்மாக்காதான் கவலைபட்டேன்..”
“அம்மா போனா அப்பாவும் பின்னாடியே போயிடுவார்.., அங்கயும் சப்பாத்தி குரும்மா கேப்பார்.., சாமியார் மடத்துல மாமியார் வீட்டு விருந்த எதிர்பார்த்தா கிடைக்குமா..” 
“திரும்பவும் யூ டேர்ன் போட்டு அம்மா வீட்டுக்கு வந்துடுவாங்க.., நமக்கு அதே இட்லியும் சப்பாத்தியும் தான் தலைவிதி..,”
“அதுக்குதான் யூஎஸ்லயோ இல்ல யூகேயிலயோ பொண்ண பாருன்னு சொன்னேன்.., நீ…. இந்த பட்டிகாட்டுல தான் கட்டுவேன்னு நிக்குற..” 
“இதாவுது வெந்ததை போடும்.., அது அரவேக்காடா போட்டுக் கொல்லும், அந்த கொடுமைக்கு என்னோட பட்டிக்காடு பெஸ்ட்..”
“எப்படியும் உன்னோட புகுந்த வீட்ட விட்டுகொடுக்க மாட்டயில்ல…,” 
சிரித்தவன்…….. கோதை வரும் சத்தம் கேட்க..,  
“அம்மா வர்றாங்க.., பத்திரம்”  எனச் சொல்லி போனை கட் செய்தான்.., 
“ஏண்டா…. போன வச்சுட்ட நா பேசலாம்னு வந்தேன்..,”
“அம்மா……… “அவ ஊர் சுத்த போயிருக்கா…, சும்மா பேசி பேசி அவள டிஸ்டர்ப் பண்ணாதீங்க…, நம்ம வீட்டுல இருக்குற வரைக்கும் தான் அவ சுதந்திரமா இருக்க முடியும் விடுமா” என்றவன்… 
இவ்வளவு பூச்செடி இருக்குல எதுக்கு இப்ப இந்த புது செடி..??வினய் கேட்க இது வெள்ள ஜாதிடா., இங்க இருக்குறது கலர் ஜாதிட., என விளக்கினார் கோதை. 
“பூவுலக்கூட என்ன ஜாதியோ என்னமோ” என்றவன் குளிக்க தன் அறைக்குள் சென்றான்
“ம்மா….. சப்பாத்தி ரெடியா..??”
“ரெடிடா.., இப்ப எதுக்குடா இவ்வளவு சத்தம்போடுற…???
“நீங்க தான” வீடு அமைதியா இருக்குதுனு அப்பாகிட்ட சொன்னீங்க.., அதுக்குதான் சத்தமா பேசினேன்..,
அரட்டை சாப்டு என்று சிவராமனுக்கும்.. வினைக்கும் தட்டில் சப்பாத்தியை வைக்க 
சிவராமன்….. டநீயும் வாம்மா சாப்பிடு வேலை முடிஞ்சுடும்…,ட என்றிட   
“இல்லங்க எனக்கு பசியில்ல..,”கோதை சொல்ல
“ஏன்.. உடம்புக்கு முடியலையா..?? வா கிளம்பு ஹாஸ்பிட்டல் போலாம்.., வினை வண்டிய எடுட” என்றவாரே எழும்பினார் சிவராமன்
“ஐயோ கடவுளே!, போதும் உங்க அலப்பறை டேய் …, நீ ஒக்காந்து சாப்புடு”வினயை அதட்டினார் கோதை
“பசியில்லன்னு சொல்ற முகம் வேற வாடிப்போயிருக்கு.., ஹாஸ்பிட்டல் போலான்னா வேணா சொல்ற என மூச்சு விடாமல் பேசியவர்…, முன் தண்ணீர் கிளாஸை நீட்டி குடிங்க முதல்ல..,” என்றார் கோதை
அவரை பார்த்து சிவராமன் முறைக்க.., “பக்கத்து வீட்டுல ஏதோ பூஜைன்னு அந்த பொண்ணு பிரசாதம் தந்துட்டு போச்சு அதுல எனக்கு பிடிச்ச கெழுகட்டை இருந்துச்சா அத ரெண்டு சாப்டேன்  அது ஒருமாதிரியிருக்கு அவ்வளவுதான்” 
சிவராமன்……… “அவ்வளவு தான..?”
“ஆமா….. அவ்வளவுதான்…,  சொல்லுறத முழுசா கேக்குறதில்ல” என்று முனகினார் கோதை.., 
“சரி..,இந்த பால குடிச்சிட்டு படுங்க என்று பால் கிளாஸை கோதையின் கைகளில் திணித்தான் வினய்..,
நல்ல உறக்கத்தில்  இருந்த சிவராமனின் கைகளில் ஏதோ ஒரு அழுத்தத்தை  உணர பட்டென கண் விழித்தார்..,
“பக்கத்தில் உறக்கத்தில் இருந்த கோதையிடம் இருந்து வித்யாசமான சத்தம் வர..”, அவரை எழுப்ப முயற்சித்தார் சிவராமன்
மீண்டும் கோதை முனங்க புரியாமல்  தண்ணீரை கோதையின் மீது தெளிக்க அவரை கண்திறந்து பார்த்தவர் அப்பா.. என்றபடி சிவராமன் மீது மயக்கம் ஆனார் கோதை……….
                      விஷ்வ துளசி தெடர்வாள்……………                                                 

Advertisement