Advertisement

“என்ன அர்வி.,??” அமைதியா  இருக்குற.., விஷ்வா
அரவிந்த்…, விஷ்வா “இது என்னோட ராஜினாமா கடிதம்..,”
எதுக்கு..??
வேலையவிட்டு போறதுக்கு..??
எதுக்கு..??
எதுக்குன்னா..!! 
விஷ்வா…, அரவிந்தை பார்க்க..,
என்ன பாக்குற..??
“விஷ்வா…, பார்வையை மாற்றாமல் அவனையே பார்த்திருக்க..,”
ஏன்டா உனக்கு தெரியாது.. “அது எப்படி உனக்கு தெரியாம எங்கிட்ட வந்து பேசுவாங்க.., அத நா… நம்பனுமா..??” என்று கிண்டலாக கேட்க
சரி.., எனக்கு தெரியும்…
நா… “சொல்லி தான் உன்கிட்ட பேச வந்தாங்க உனக்கு பிடிக்கலைனா விடு..,அதுக்கு எதுக்கு ரெசிகினேசன்..??
டேய்…, என்ன பேசுற…?? “இந்த விசயம் தெரிஞ்ச.., மத்தவங்க என்னை என்ன நினைப்பாங்க.., என்னால நிம்மதியா இங்க இருக்க முடியாது…,” விஷ்வா
அதனால…
ஊரவிட்டு போகலாம்னு…., என பேச்சை முடிக்கும் முன் 
அவன் முன் இருந்த கண்ணாடி டேபிள் படீர் என்ற சத்ததில் உடைந்திருந்தது
விஷ்வாவின் கோபம் தெரிந்துதான்.., இவ்வளவு கோபமாக அவனை பார்ப்பது இதுதான் முதல் முறை
“தாத்தா.. பாட்டி.. வீட்டு மனுசங்க.. நானெல்லாம் வோண்டாம்..??
ஆனா.., “உனக்கு மத்தவங்க முக்கியமா போயிட்டாங்க..,??”யார்டா பேசுவாங்க 
“உன்ன கல்யாணம் பண்ண சம்மதம் தான கேட்டோம்..,?”
ஏன்.., “கயல.., விட நல்ல பொண்ணா பாத்திருக்கியா..,??” என்றவனை பாவமாக அரவிந்தன் பார்க்க
அவன் பார்ததில் நிதானத்திற்கு வந்தவன்…, “உன்னவிட கயலுக்கு நல்ல மாப்பிள்ளை  கிடைக்காது மச்சான் ..,”என்றவனை  அரவிந்த் கட்டிபிடிக்க
என்கிட்ட வேண்டாம்டா.., கயல்கிட்ட கல்யாணத்துக்கு அப்புறம் காட்டு என சிரிக்க..,
நா.., கயல்விழிய அந்த மாதிரி பாத்தது இல்லடா..,
இனி பாரு மச்சி…!! “உனக்குதான் கயலுன்னு நான்….,” முடிவு செஞ்சு ரெம்பநாள் ஆச்சு அர்வி
அப்ப கயலுக்கு தெரியுமா..,?? என ஆர்வமாக கேட்க
இல்ல.., “உன்னோட சம்மதம் வாங்குனதுக்கப்புறமா அவகிட்ட பேசலாம்னு சொல்லல..,  
தேங்ஸ்டா விஷ்வா.,
எதுக்குடா..,,
“கயல எனக்கு கொடுக்குறதுக்கு.., “
உன்னவிட நல்ல பையனா இருந்தா கூட்டிட்டு வா .., அப்ப… இந்த தேங்ஸ வாங்கிறேன் என்றவாரே அரவிந்தை.. கட்டிக்கொண்டான் விஷ்வா..,
“அரவிந்தனின் குணத்திற்காகவே கயலைஅவனுக்கு திருமணம் செய்தான்” விஷ்வா.,
தாத்தா.., விஷ்வாவின் குரு.., என்றால் இந்த ராஜனின் மந்திரி அரவிந்தன்.., கூடவே இருப்பதால் தான் அவனின் சிறு அசைவும் இவனுக்கு அத்துபடியாகும்.., 
அதுவே  திவ்யாவிடம்.., விஷ்வாவின் பேச்சு அரவிந்தனை யோசிக்கவைத்தது..,  
“திவ்யா சுடிதாரை மாற்றி துப்பட்டாவை போட்டபடி வர அவளை பார்த்தவன் கண் திருப்தியாக.. போகலாம்??” என தலையசைக்க அவனை பின் தொடர்ந்தால் திவ்யா..,
“இது உங்க கோவிலா.,??” என்றவளை புரியாமல் விஷ்வா பார்க்க!!
இல்ல.., கோயிலுக்குள்ளயே வீடெல்லாம் கட்டி இருக்கீங்களே..,?? அதுதான் கேட்டேன் 
ஓ!! அதுவா.., இது எங்க குலதெய்வம் கோவில்.. கட்ட இடம் இல்லாம இருந்தப்ப எங்க தாத்தா தான் கோவில் கட்ட இடம் தந்தாங்க..,
சுமார்…. ஒரு ஏக்கர் இருக்கும்..,?? கோவில் இருக்குற இடம் மட்டும் தான் தானமா தந்தது..,
சுத்தி இருக்குறது எல்லாம் குடும்ப சொத்து!! “எங்களுக்கு அண்ணன் தம்பி பங்காளி உறவு முறை அதிகம்…, காது குத்து மொட்டை போடனு அடிக்கடி இங்க வரனும்..,“
வந்தா தங்க இடம் இல்லை..,!! கோவில் மட்டும் தான் இருக்கும்மாம்… பொம்பளைங்க வந்த தங்க முடியாது….
“அதுக்காகதான் தாத்தா இங்க வீடு கட்டுனாங்க..,”
“நீங்க வந்தா இருக்க வீடு..,!!” இது எதுக்கு..,?? என்று சுத்தி இருந்த நீள மண்டபம் போன்று இருந்த கட்டிடத்தை காட்டி திவ்யா கேட்க..,
இங்க வற்றவங்க தங்குறதுக்கு.., முதல்ல “தென்னை ஓலை கொட்டகை தான் போடுவாங்க  மழை வந்தா தங்க கஷ்டமா இருக்கும்..,”
அதனால.., இப்பதான் இந்த கட்டடம் கட்டுனோம்.., அது இப்ப சுத்தி இருக்குற கிராமத்து ஜனங்களுக்கு உபயோகப்படுது..,
அது எப்படி..,?? 
இங்க.., “சுத்து வட்டாரத்துல கல்யாணமண்டபம் மாதிரி எதுவும் இல்ல.., கல்யாணம் விஷேசம் எல்லாம் வீட்டு முன்னாடி பந்தல் போட்டு பண்ணுவாங்க…, சாப்பாடும் அங்கயேதான் அக்கம் பக்கம் கேட்டு பண்ணுவாங்க..,
தண்ணி கொண்டுவர.., ஆளுங்கள தங்கவைக்க எல்லாம் சிரம்மம்.., இப்போ.., “கோவில்லேயே எல்லாம் இருக்குறதால அவங்களுக்கு ஈசியா போச்சு.., இங்கயே தங்கி கல்யாணம் பண்ணி.., சாமி தரிசனம் பார்த்து.., சாப்பிட்டுன்னு எல்லாம் முடிச்சுட்டு கிளம்பலாம் இல்லையா..,??”
அப்ப எல்லாம் ஃபிரியா..,?? என அவள் ஆச்சர்யாமாக கேட்டாள்
ஃபிரியா கிடைச்சா அதுக்கு மதிப்பில்லைமா..,!! “திருப்பதி ஏழுமலையானை.., காசு கொடுத்து கியூல நின்னு ஒரு செகன்ட் பார்த்ததை.. பெருமையா சொல்ற நாம.., பக்கத்துல இருக்கிற ஃபிரி தரிசனம் கொடுக்குற பெருமாள் கோயிலுக்கு போனதை சொல்வோமா..,??” என்றவனை பார்த்து திவ்யா முறைக்க..,
 
“சின்ன தொகைய வாடகையா வாங்குவோம் அது கோவில் மெயிண்டன் பண்ண சம்பளம் கொடுக்க சரியா போகும்..”
சுத்தி இருக்குற இடத்தை என்ன பண்ணபோறீங்க ..??
“கொஞ்ச வருசம் குத்தகைக்கு விட்டுருந்தோம்..,  இப்ப  இயற்கை முறை விவசாயம் பண்ணி ஆர்கானிக் ஃபார்ம் ஹவுஸ் பண்ணனும் அதுக்காக குத்தகைய கேன்சல் பண்ணிட்டோம்..” 
“கேட்டவளுக்கு தெரியவில்லை ஏன் தான்  இவனிடம் இத்தனை விபரங்களை தெரிந்து கொள்கிறோம் என்று..,”
பேசிக்கொண்டே அவர்கள் வந்து சேர்ந்தது.., அந்த” கோவிலின் காவல் தெய்வமான கருப்பன் சன்னிதானத்திற்க்கு;
“ஆலமரம் குடை பிடிக்க நான் இருக்க உங்களுக்கு பயம் ஏதும்மில்லை என்று நின்றிருந்தார் கருப்பன்..”
மரத்தின் கீழே அனைவரும் இருக்க திவ்யா பெண்களுடன சென்று நின்று கொண்டால்…
விஷ்வா…. போன் சத்தம் கொடுக்க எடுத்தவன் ஹலோ ஸ்ரீ.., போன வேலை  முடிஞ்சிடுச்சா..,?? 
சரி வாங்க..,
அரவிந்த்.., என்னடா விசயம்..,??
ஸ்ரீய…, “இடம் கைமாத்துற விசயமா சுப்பையாவ பாத்துட்டு வர அனுப்புனேன்.., 
முடிஞ்சுதா..,??
ம்ம்ம்…
ராதா..,??
அவளும் தான்…,
அரவிந்த் ஒரு…, “வக்கீலயே சமாளிக்க முடியாது அதுல இந்த சில்வண்டெல்லாம் சேந்துச்சுனா..,”
ஐயா…, கருப்பா… உன் பக்கத்துல கொஞ்சமா எடம் கொடு இப்படியே உக்காந்துகுறேன்..,
“பேண்டு சட்டையோட இருந்த வேர்க்காது..,??”
“வேர்த்தா கலட்டிடுவேன் மச்சி..,”
“டேய்.., இது பொம்பளைங்க வந்து போற இடம்டா..,!!
ம்ம்.., “வேட்டி கட்டிப்பேன்னு சொன்னேன்  விட்ட.., ****க்கு சிஷ்யன் ஆக்கிடுவடா..,?? நீ…,
“இன்னுமா நீங்க பேசி முடிக்கல..,??” அப்படி என்னத்த தான் பேசுவீங்களோ..,?? வாங்க என்ற படி கயல்.. “விஷ்வாவின் கை பிடித்து இழுக்க.., எனக்கும் கை இருக்கு என அரவிந்த் கையை நீட்ட..,” 
‘இருக்கும்.., இருக்கும்.., ஏ… இருக்காது  வீட்டுக்கு வாங்க..,
“வந்தா ஜில்லு.., என விஷ்வாவின் முன்னே அரவிந்த் ஜொள்ளு விட.., டேய்… “நா…. அவ… அண்ணன்டா…,”  
“டேய்…, நா.. அவ அண்ணன்டா..,” டைட்டில் நல்லா இருக்கு.., மச்சி படம் எடுக்க போறியா..,??
“தெலுங்கு டப் படமா..,?? இல்ல தமிழ் படமா..,??
ரெண்டும் இல்ல.. உன்ன ஆக்க்ஷன்ல வெளுக்க போற மௌன படம்.., அத எல்லா நாட்டுலயும் ரிலீஸ் பண்ணலாம்..,” என்று விஷ்வா கூறினான் 
அதெல்லாம்…, “அரவிந்தன் காதில் விழுந்தால் தானே.., கயலுடன் டூயட் பாடுபவன் காதில் விஷ்வா அது சாமிடா…., இது கோயில்டா என்றவன்.., அரவிந்தன் “முதுகில்  கை வைத்து தள்ள.., கயல் கையை பிடித்து இழுத்தபடி சென்றாள்.., அரவிந்த் கயலின் கையை பிடிக்க போக.??
“கொன்னுடுவேன்!! என்று “கயல் சுட்டு விரல் காட்டி மிரட்ட..,  பாவமாய் முகத்தை வைத்து வாய் பொத்திய படி அவள் பின் சென்றான் அரவிந்த்..,
“ஏம்மா கயலு… மாப்புள்ளையை இப்படியா கூட்டிக்கிட்டு வருவ.,” என பக்கத்தில் இருந்த பெரியவர் கேட்டார்
அட., “போங்க பாட்டி.., உங்க பேரன் பண்ற வேலைக்கு மரத்துலதான் கட்டி வைக்கனும்..,” என கயல் பதில் கூற
ஆகாதுடியம்மா…, கட்னபுருசன கைய கட்டி இழுத்துட்டு வந்துட்டு.., என்ன பேச்சு பேசுற..,!! என்ற பிறகே அரவிந்தனை பார்க்க அவனின் பாவனையை பார்த்தவள் அழுது விட.., அரவிந்தனுக்குதான் கஷ்டமாகிவிட்டது
“சட்டென அவளின் பிடித்து இழுத்து  அனைத்தவன் ஏம்பொண்டாடி என்ன கட்றா.., கதறவக்கிறா.., அதுல உங்களுக்கு  என்ன..,??” என அந்த பாட்டியின் கன்னத்தை லேசாக இடித்தான்
அவன்…, அனைத்ததில் கூச்சபட்டாலும் பாட்டியை இடித்தது  சிரிப்பை  வரவழைக்க..,
“சிப்பு வந்தா சிரிச்சுடு ஜில்லு..,” என்பதை முன் பாதி சத்தமாகவும் பின்னதை அவள் காதில் மட்டும் கேட்குமாறு  அரவிந்தன் சொல்ல.., 
“இவனுக்கு வக்காலத்து வாங்கிய பாட்டி தான் தான் என்ன பேச என்று தெரியாமல் நின்றார்..,!!
“இவர்கள் பேசுவதையே  கண் இமைக்காமல்  பார்த்திருந்த திவ்யாவின் கண்களில் இருந்தது என்ன..???” 
                                                                                             விஷ்வ துளசி தொடர்வாள்………….

Advertisement