Advertisement

                  ஓம் நம சிவாயா  
விஷ்வ துளசி 2
திவ்யாவை தன்னை மறந்து பார்த்தவனை!! சொடக்கிட்டு கலைத்தவள் போலாமா?? என்று  கேட்டாள்
திவ்யா அழைக்கவும் தெளிந்தவன்.. அவளை மீண்டும் பார்த்தவன், இந்த டிரச மாத்தமுடியுமா?? என்று கேட்டான் விஷ்வா
அவனை யேசனையாக பார்த்தவள்… ஏன் இந்த டிரஸ் நல்லா இல்லையா?? என கேட்க.., இல்ல.. ரொம்ப நல்லாஇருக்கு., “ஆனா இந்த இடத்துக்கு பொருத்தமா இல்ல” இங்க இருக்குறவங்க எல்லாம் புடவை சுடிதான் போட்டு இருக்காங்க… நீ இந்த  டிரசுல வந்தா ரொம்ப மார்டனா, தெரிவ எல்லாரும் உன்னையே பாப்பாங்க, உனக்கு அன்ஈசியா இருக்கும்.., அதனால இப்ப என் தங்கச்சிங்க போடுற மாதிரி கழுத்த மூடினாப்ல இருக்குற  டிரஸ்சா மாத்திட்டு வா”.., என அவளை உடைமாற்ற அனுப்பினான் விஷ்வா 
அவன் சொன்னது சரியாக பட உடை மாற்ற உள்ளே போக திரும்பியவள் கண்களில்.. “ராஜேந்திரன் மங்கை கயல்விழியுடன் விஷ்வா நிற்க…, அதன் பக்கத்தில் வாசன் குழலி ஸ்ரீராமையும் சுபாவை தூக்கி வைத்திருக்க…, அதற்கும் பக்கத்தில் இரத்தினம் மீனாள் ராதா மற்றும் ஜெயந்துடன் நின்றபடி இருந்த..,  புகை படங்கள் கண்ணில் பட அவர்களின் உருவ ஒற்றுமையை ஆச்சர்யமாக பார்த்தபடி உடை மாற்ற சென்றால் திவ்யா  
சிறிது நேரத்தில் கயலும் அரவிந்தனும் சிரித்தபடி வெளியே வந்தனர்…
“போலாமாடா??”.., என அரவிந்தன் விஷ்வாவை பார்க்க
விஷ்வா… அவர்களுக்கு தனிமை தர நினைத்தவன்
இல்லடா…… நீங்க… முன்னாடி போங்க நா திவ்யாவை கூட்டிக்கிட்டு வர்றேன்?? என்றவனை
அரவிந்தன் ஒரு மாதிரி பார்க்க!!.., “உன் கற்பனை குதிரையை ஓட விடாத மாப்பிள்ளை கால் ஒடிஞ்சிட போகுது”..,
அவனை பார்த்து கிண்டலாக சிரித்தவன்… வணக்கம் வைத்தபடியே வரட்டா…., என கயல் மீது கை போட்டபடி வெளியேறினான்…
“விஷ்வா ஒன்றும் பொண்களிடம் பேசாதவன் பழகாதவன் அல்ல”… அவர்களின் உறவின் முறையில்”அத்தை, மாமன் முறை பெண்கள் அதிகம் அதனால் சகஜபாவம் அதிகமே”…
“ஆனால் யார் என்றே தெரியாத திவ்யாவிடம் இவனின் பேச்சு அரவிந்தன் மட்டிலும் அதிகமே!!”..,
விஷ்வாவின்…. பாவனை அடுத்தவர் கண்களுக்கு  வித்தியாசமாக படாமல் போனாலும் பிறந்ததில் இருந்து அவனோடு வளர்ந்த அரவிந்தனுக்கு தெரிந்தது.., 
விஷ்வா…“எத்தனை இலகு சுபாவம் கொண்டவனோ அதை விட கடுமை கொண்டவன் பெண்களிடம்”..,
குடும்ப நபர்களை தவிர யாரும் அவனிடம் நெருங்க முடியாது..,
“”வி.பி குரூப் ஆஃப் கம்பனிஸ்…. விஸ்வநாதனின்…… கனவு அதை நினைவாக்கியது விஷ்வாவின்  பதிமூன்று வருட உழைப்பு…,   
விஸ்வநாதனுக்கு “முக்கிய தொழில் விவசாயம். விவசாய நிலங்கள் இருந்தலும் ஏற்றுமதி தொழிலின் மீது அபார பிடித்தம் அது இவரின் சிறுவயது கனவு”…
“உள்ளூர் சந்தை விற்பனைக்கு போக மீதம்  உள்ளவற்றை வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்த சிறிய அளவிலான நிறுவனம், “விஷ்வாவின் வசம் வந்த பின் உலகலாவிய சந்தையுடனா போட்டியிட ஆரம்பித்தது”..,  “இயற்கை முறை விவசாயத்தை பயன்படுத்தி தன் நிலத்தில் மட்டும் இல்லாது, சுற்றி இருக்கும் சிறு விவசாயிகளையும் சேர்த்து மிகப்பெரிய ஆர்கானிக் ஃபார்மை” உருவாக்கி வைத்திருந்தான்… “அதில் விளையும் சில குறிப்பிட்ட வகை தானியங்களுக்கு பேடன்ட் ரைட்ஸ்” வாங்குவதற்கான  வேலைகளும் நடைபெருகிறது அவனது நிறுவனத்தில்…  
சேது…., “இப்படியே அழுதுகிட்டு இருந்தா ஆச்சா.., இந்த பச்ச மண்ண யார் பாக்குறது..??
எந்திரியா.., “அவதான் உன்னையும்..,இவனையும் பத்தி யேசிக்காம போய் சேந்துட்டா.., நீயும்  யேசிக்காமா இருந்தா பையன்  கதி என்ன ஆகுறது ..,?? பார்வதி பேச பேச சேதுவின் கண்களின் கண்ணீர் அரவிந்தன் மீது பட்டுதெறித்தது..,
அரவிந்த்.., “சேது, லட்சுமியின் மகன் அரவிந்த் பிறந்தும் பிரசவத்தில் லட்சுமி இறந்துவிட…, குழந்தையை எப்படி வளர்க்க என்று தெரியாமல்  இருந்த சேதுவை மறுமணம் செய்ய உறவுகள் கட்டாயாப்படுத்தினர்..,”
“தன்னை கல்யாணம் செய்ய வற்புறுத்துவது தன் மகனுக்காக அல்ல.., பெரிய வீட்டின் கணக்கு பிள்ளையான தனக்கு தங்களின் மகளை கட்டி வைத்தால் சுகபோகவாழ்கை வாழலாம் என்ற சுயநலமே என்பதை தெரிந்தவர்..,
தனக்கு மறுமணம் வேண்டாம்…., என்ற முடிவினை விஸ்வநாதனிடம்.., கூறினார்
சேது ஐயா.. நா.. வரும் போது பையன கூட வச்சுக்க அனுமதிக்கனும்?? 
“முதுகில் பட்டென்ற அடி விழவும்??.., திரும்பியவர் பார்வதியின் கோபத்தில் பட்டெனஅவரின் காலில் விழுந்தார்..,
“அறிவுகெட்டவனே…, “உன்ன இங்க யாராவது வேத்து மனுசனா..?? பாத்து இருப்போமா இனிமேலுக்கு நீ.., என் பையன்னு இவன பாக்க.., இந்த பக்கம் வந்துடாத..,”  இனி.. “இவன் என் பேரன்”.., என்றிட அது முதலே அரவிந்தன் இங்குதான் வளர்ந்தான்..,
“அரவிந்தனுக்கும்., விஷ்வாவிற்கும்.., ஒரே வயது தான்., இருவரின் குணமும் ஒன்றே அதுவே இவர்களின் நட்பிற்கும் அடிப்படையாக அமைந்தது..,”
ஸ்ரீ.. இவர்களை விட நான்கு வயது சிறியவன் மிகவும் அமைதி விஷ்வாவிடம் கோபம் கொஞ்சம் அதிகம் அரவிந்தன் அதற்கு நேர் எதிர்..,    
விஷ்வாவின் கோபத்திற்கு பயந்தே ஸ்ரீ.. விஷ்வாவை விட அரவிந்தனையே அதிகம் நாடுவது….,
விளையாட்டில் இருந்து தான் என்ன படிப்பது என்பது வரை அரவிந்தன் முடிவே இறுதியானது..,
இந்த முடிவினை செயல் படுத்துவது மட்டுமே அரவிந்தன்.., செயல்பட வைப்பது விஷ்வா. 
அரவிந்தனை எவ்வளவு நன்றாக விஷ்வாவின் குடும்பம் பார்த்து கொண்டாலும் அவன் என்றும் தன் எல்லையை மீறியது இல்லை..,
பார்வதி…, எத்தனை முறை சொல்லியும் இரவில் வேலையை முடித்து வீடு சொல்பவன்.., காலையில் பார்வதி கண்விழிப்பது அவன் முகத்தில் தான்..,
“ஏன்டா இப்படி கஷ்டபடுற இரவைக்கு போயி காலையில வரனுமா அதுக்கு இங்கயே இருக்கலாம்..,” என பார்வதி கேட்டாலும்
பாட்டி.., நீயெல்லம் என்னத்த பெரிய….மனுசியோ தெரியல போ??..,
என்னடா…, சொன்ன ஏ பொண்டாடிய பாத்து??
அப்புறம்.., “என்ன தாத்தா வயசு புள்ளங்க இருக்குற வீட்டுல நா அப்படி இருக்கலாமா…??”
நாங்க.., உன்னையும்., உன் அப்பனையும் வேத்து மனுசனாவா பாக்குறேம்.. ஏபேரனா  பையனா தான பாக்குறோம்..
ஐ!! “அப்ப சொத்துல பங்கிருக்கா..??”
டேய்.. நா… என்ன சொல்றேன்?? நீ என்ன பேசுற..,
பேச்ச மாத்தாத.. ,என்று முகம் சுருக்க
சிரிப்பைவிட்டவன்.., “பாட்டி நீங்க என்ன சொன்னாலும் வயசு பொண்ணுங்க இருக்குற வீட்டுல நா இருக்குறது தப்பு பாட்டி..” 
நீங்களும்.., தாத்தாவும்.., இங்க இருக்குறவங்களும் என்ன உங்க பேரனா ஒத்துக்கலாம்??
புதுசா வர்றவங்க எப்படி எடுத்துப்பாங்க தெரியாது இல்லையா..??
“நாம சொல்றதை எல்லாம் அவங்க நம்பனும்னு அவசியமில்ல”..,  என்னால இந்த வீட்டுக்கு ஒரு கெட்ட பேர் வரகூடது.., அதுவும் இல்லாம.., அப்பா…. என்கிட்டகடைசியா கேட்டது.., இதுதான் பாட்டிஇப்ப சொல்லுங்க.., அப்பா ஆசையை நிறைவேத்தட்டா.., வோண்டாமா..,??
“அவன் தலை தடவி போ.., உன்னோட சோக்காலி எழுத்துட்டானு பாரு., எழுந்துட்டா சாப்ட கூட்டிட்டு வா என்று சமையல்கட்டில் நுழைந்து கொண்டார்…
அரவிந்தனிடம்… எப்படி கேட்டாலும் சொன்னாலும் அவன் இங்கு தங்க மட்டும் சம்மதிக்க மாட்டான்.., ஆனாலும் சில சமயங்களில் பார்வதியின் மனம் கேட்காமல் சொல்லும் போது எல்லாம் அப்பாவின் ஆசை என்பதை கூறியே பேச்சை முடித்து விடுவான் அரவிந்த்…
தாத்தா….. என்றவனை போடா.., பாட்டி சொன்னத செய்.. இல்லன.., உனக்கு ஜால்ரா தட்டுனதுக்கு எனக்கு சாப்பாடு கிடைக்காது..? 
ஏ.., தாத்தா…. இந்த வீட்ல பாட்டி மட்டும் தான் பொம்பளையா..? 
“சுற்றி பார்த்தவர்.., எனக்காவது இன்னிக்கு மட்டும் தான் உனக்கு.., என்றவர் பார்த்தது அவர் “முன் தட்டில் இட்லி, வடையுடன் பாட்டி ஊட்ட வாய் திறந்து நின்றிருந்த அரவிந்தனை தான்..,”
சேதுவின் மகனாக இருந்தலும அவனும் இவருக்கு பேரனே.. விஷ்வாவையும்.. அரவிந்தனையும் என்றும் பிரித்துபார்ததில்லை.., அதற்குரிய சந்தர்ப்பம் வர விஷ்வா அதை கெட்டியாக பிடித்துக்கொண்டவன்.., “அரவிந்தனை தோழன் என்ற நிலையிலிருந்து மாற்றி.., உறவினாக .., தங்கையின் கணவனாக செய்து அவனை தன் குடும்பத்தின் முக்கிய  நபராக மாற்றினான்..,”
பார்வதி…,  எல்லாரும் வந்தாச்சா..?
வாசன்.., என்னம்மா  எல்லாரையும் வரசொன்னீங்க..??
கயல்.. “ஜாதகத்த பாக்க ஜோசியர வர சொன்னேப்பா.. நீங்க எல்லாம் இருந்த பேச தோதுபடும் இல்லனா தனிதனியா பேசனும்.., 
ராஜேந்திரன்.. சின்ன பொண்ணுமா கொஞ்சம் நாள் போகட்டும்மா..
இல்லப்பா.., தரகர் ரெண்டு மூனு ஜாதகம் தந்து இருக்காரு.., உங்க அப்பாகிட்டையும் விசாரிச்சியிருக்காங்க அதுதான் குருபலன் இருந்தா பாக்கலாம்ல..??
மங்கை.., நீ என்ன சொல்ற..??  
பெரியவங்க நீங்க.., பாருங்க உங்களுக்கு தெரியாதா..,
அம்மா.., என்ன விஷ்வா..??
நம்ம அரவிந்தனை., கயலுக்கு பாக்கலாம்மா..,
என்ன..,!! என அனைவரும் ஒரே குரலில் கேட்க..,
எதுக்கு.., இவ்வளவு அதிர்ச்சி…!! “அவன விட நல்ல பையனா..,” உங்களுக்கு தெரிஞ்சியிருந்தா எனக்கு சொல்லுங்க.. எனறவன் பேச்சு முடிந்தது என்று உள்ளே விஷ்வா சென்று விட
மற்றவர்களுக்குதான் என்ன சொல்வது என்று தெரியவில்லை ..,
அரவிந்தை… மாப்பிள்ளை ஆக்குவதில் யாருக்கும் மறுப்பில்லை.. அவனை கல்யாணத்திற்கு “யார் சம்மதிக்க வைப்பதென்பதே..,” இவர்களின் கேள்வி
தாத்தா., பாட்டி தலைமைவகிக்க “ரத்தினமும் மீனாவும்.., அரவிந்தனிடம் பேச சென்றனர்
“ருத்திர தாண்டவம் ஆடிவிட்டான்” அரவிந்த்..,
காலையில் விஷ்வா புறப்படும் முன்னமே போன் வந்துவிட்டது அரவிந்த் அலுவலகம் வந்து விட்டான் என்று…. பெருமூச்சைவிட்டன் இன்னிக்கு என்ன பேசபோறானோ, எப்படியும் சமாளிக்கனும் என்று தனக்கு தானானே சொல்லிக்கொண்டான்

Advertisement