Advertisement

அப்பவே… வந்துட்டேன். “நீயும் புரியாம பேசாத ஸ்ரீ” அங்க மாமா பசங்க மூனு பேர் இருக்காங்க… இப்ப நாம போய் வினய்க்கு கேட்டா அது எப்படி முடியும்?? சித்தி மனசுல வேற எண்ணம் இருந்தா திரும்ப வீட்டுல பிரச்சனை வரும்… 
“கயல் கல்யாணத்தப்பவும் அதே பசங்க இருந்தாங்க” அப்ப உங்களுக்கு தெரியாதா?? எவ்வளவு அழகா அத்தை வீட்டை உள்ள விடாம, இவரை மாப்பிள்ளை ஆக்குனீங்க??” என்றதும் இருவரும் அதிர்ந்து போய் பார்த்தனர் ஸ்ரீயை.
“உனக்கு எப்படிடா தெரியும்??” நா உன் தம்பி.. உனக்கு இருக்குற புத்திசாலி தனம் பத்து பர்சன்ட் இருக்காதா என்ன?? வினய பாத்தப்ப எதுவும் தோணல.. ஆனா நீங்க துளசியை கல்யாணம் பண்ணன சம்மதிச்சதுலயே  எனக்கு புரிஞ்சது…
அரவிந்தன், “டேய்.. மாப்பிள்ளை நீ வக்கீலு அப்படின்னு காட்டிட்டா” என்றவன் ம்ம.. இப்ப சொல்லு ராஜா?? நீ.. நினைச்ச ஒரு விசயம் இப்ப இல்லைனு ஆகிடுச்சு… இப்ப போய் பேசலாம் தான என்று அரவிந்த் விஷ்வாவை பார்த்தான்.
“விஷ்வா சம்மதமாக தலையை அசைக்க, இந்த குடும்பத்துல ஒருத்தன் கூட லவ்வ சொல்லி கல்யாணம் பண்ண மாட்டீங்களாட….!! அடுத்தவன் வந்து வம்படியா பண்ணனுனாதான் ஒத்துபீங்களா?? இதுல இப்ப என் தம்பியும் சேந்துட்டானே!! என்று வராத கண்ணீரை துடைத்தான்”
“ரொம்ப நாள் ஆச்சுங்க,  தேட்டத்துக்கு வந்து?? என்று கட்டிலில் அமர்ந்து காலை நீட்டினார் பார்வதி. சீவிய இள நீரை குடித்தவர் என்ன.. திடீர்னு தோப்புக்கு?? என்னும் போதே விஷ்வாவின் கார் வந்தது.
“விஸ்வநாதனை, பார்வதி பார்க்க… பாட்டி என்ற படி வந்தனர் விஷ்வா, ஸ்ரீ, அரவிந்த்”
“என்னடா பசங்களா?? இந்நேரம் இங்க” என்று விஸ்வநாதன் கேட்க, சின்ன வேலை ஒன்னு தாத்தா அது தான் வந்தோம் என்றவர்கள் முகத்தினை பெரியவர்கள் பார்த்து இருக்க… எப்படி ஆரம்பிக்க என்ற தடு மாற்றம் மற்றவர்களுக்கு.
“என்னடா பசங்களா என்ன விசயம்?? சொல்லுங்க…” என்று விஸ்வநாதன் ஆரம்பித்து கொடுக்க, அரவிந்தன் தான் கேட்டான் “என் தம்பி வினய்க்கு சுபாவ கேட்டு வந்து இருக்குறேன் தாத்தா”  
“பொண்ணு கேக்க வந்தவன் கூட பொண்ணு வீட்டுக்காரணையுமா கூட்டிட்டு வருவான்!!” என்றார் பார்வதி
“அவனுங்க தங்கச்சிக்கு மாப்பிள்ளை பாக்க வந்தாங்க… நானும் வண்டி சும்மாதான போகுது அதுல ஏறிக்கலாம்னு வந்தேன்… வேணுன்னா சொல்லுங்க இப்பவே கலட்டி விட்டுடுறேன்” என்றவனை இருவரும் மொத்த “டேய்… நா உங்க வீட்டு மாப்பிள்ளைடா.. கொஞ்சமாச்சும் மரியாதை குடுங்கடா” என்று கத்த ஆரம்பித்தான் அரவிந்த்.
விஷ்வநாதன் தான் இவர்களின் விளையாட்டை நிறுத்தினார், “ஏம்பா பேச வந்த விசயம் என்ன?? நீங்க என்ன பண்ணுறீங்க??” என்று
மூன்று பேரும் அமைதியாக “இது நான் முடிவு பண்ண வேண்டிய விசயம் இல்லை.. பொண்ணை பெத்தவங்க முடிவு பண்ணனும்… என்ன பார்வதி நான் சொல்லுறது சரி தான??” என்று அவர் முகம் பார்த்தார். அவரும் விஸ்வநாதன் சொன்னது சரி என ஆமோதித்தார்.
“என்ன தாத்தா??” என விஷ்வா ஆரம்பிக்க… இல்ல ராஜா… எல்லா நேரமும் முடிவுகளை நாமலே எடுக்க கூடாது. அது எப்பவும் நமக்கு சாதகமா இருக்காது அப்படின்றத நா புரிஞ்சிக்கிட்டேன். அதனால இதுல முடிவ நா சொல்ல முடியாது?! வேணுன்னா உங்க கூட நான் வர்றேன் என்றவர் பேச்சினை முடித்து விட்டார்.
“வீட்டின் ஹாலில் பெரியவர்கள் அமர்ந்து இருக்க… சிறியவர்கள் மேலே இருந்து நடப்பது என்ன?? என்று பார்த்து இருந்தனர். சுபாவை, வினய்க்கு கேட்டவிபரம் குழலியிடம் சொல்ல.. அவருக்கு என்ன சொல்ல என தெரியவில்லை??”
“இதில் துளசிக்கு, விஷ்வாவின் மீது கோபம். நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம அவரே பேசிட்டாரு.. ஏன்.. என்கிட்டா சொன்னா என்ன?? நா சொல்லி தான இவருக்கே தெரியும்??” என்று 
“விஷ்வா, அவளை பார்க்க பழிப்பு காட்டி முகத்தை திருப்பிக்கொண்டாள்.” அவளின் சிறுபிள்ளை தனத்தில் சிரித்தவன்… சித்தி சொல்லுங்க உங்களுக்கு விருப்பமா இதுல?? நீங்க முழுமனசா சம்மதம் சொன்னா தான், அத்தை வீடுல பேச முடியும்.. அதுவும் இல்லாமா இது முடிவு இல்லை.. ஒரு வேளை அத்தை இதுக்கு சம்மதம் இல்லைன்னு சொல்லிட்டா?? நாம ஒதுங்கிடனும்” என்று துளசியை பார்க்க.,
“அம்மா அப்படி எல்லாம் சொல்ல மாட்டாங்க??” என்று வேகமாக துளசி சொன்னாள். “எங்க அப்பன் குதிர்குள்ள இல்லைன்னு இவளே சொல்லிடுவா…” என்று பார்த்திருந்தான் விஷ்வா… துளசி அவனை பார்த்தவள் “உளரிட்டேனா வாய் அசைவில் கேட்க, அவன் பார்த்த பார்வையில் வாயை மூடிக்கொண்டாள்”
“குழலி அமைதியா இருந்தவர் “ஏன் மாமா ராஜா மட்டும் தான் உங்க பேரனா?” என்ற கேள்விக்கு… என்ன பதில் சொல்ல” என பார்த்து இருந்தார் விஸ்வநாதன்.
“அவனோட வாழ்கை மட்டும் இல்லை… இங்க இருக்குற மத்த பசங்க வாழ்க்கை பத்தின முடிவை எடுக்க உங்களுக்கு உரிமை இருக்கு” என்றவர் அதற்கு மேல் அங்கு நிற்காமல் சென்று விட்டார்.
“குழலி சொன்ன பதில் திருப்தியாக இருந்தாலும்., என்னமோ முடிவெடுக்க முடியவில்லை விஸ்வநாதனால்”
“வினய்யை பற்றி முழுமையாக தெரியாவிடிலும், அவன் இங்கு இருந்த நாட்களில் பழகியவிதத்தில் குறை ஒன்றும் இல்லை. விஷ்வாவை போலவே ஆளுமையான குணம் அது மட்டுமே நெருடியது” 
“அண்ணன், தங்கை  பெண் குடுத்து பெண் எடுத்தால்… ஒருவரின் வாழ்க்கை மற்றவரை பாதிக்க கூடாது என்பதால் யோசித்த படி இருந்தார் விஸ்வநாதன்”
“என்ன அப்பா இன்னும் யோசனையா??” என்ற படி வந்தார் வாசன். ம்ம்.. ஆமாம்பா என்றவர் அவரின் சந்தேகத்தை சொல்ல., 
“அப்பா.. அவங்க ஒன்னும் சின்ன பசங்க இல்லை… அடுத்தவங்க வாழ்க்கையில நுழையாம எப்படி போறதுன்னு அவங்களுக்கு தெரியும்!! நீங்க குழப்பிக்காதீங்க.. இதை எல்லாம் யோசிக்காமயா… கல்யாணத்தை பத்தி ராஜா பேசியிருப்பான்??” 
“அதுவும் இல்லாம பசங்க விருப்பமும் இருக்குன்னு தோனுதுப்பா எனக்கு…” என்றவரை விஸ்வநாதன் பார்க்க, இது சந்தேகம் தான்.. ஒரு வேளை ராஜாவுக்கு, சுபா அங்க இருந்தா நல்ல இருப்பான்னு தோனியிருக்கலாம்…!! அவன் முடிவு எப்பவும் தப்பாதுப்பா…” என்றவரை, பசங்களை நல்லா புரிஞ்சு வச்சியிருக்குற வாசா என்றார் விஸ்வநாதன். வாங்கப்பா… சாப்பிட நேரம் ஆச்சு.. என்று டைனிங் டேபிளுக்கு அழைத்து சென்றார் வாசன்
அனைவரும் விஷ்வநாதனை பார்த்து இருக்க… “அவர் முகத்தில் தெரிந்த சந்தோசமே சொல்லிவிட்டது கோதையுடன் சம்பந்தம் பேச தயார்” என்று அடுத்து என்ன?? என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் உடனடியாக கோதையிடம் விபரம் சொல்ல வினய்க்குதான் சந்தேசம் பிடிபடவில்லை.
துளசியை அழைத்தவன் “எப்படி துளசி??” என கேட்க அவள் நடந்ததை சொல்ல என அங்கு முழுவதும் சந்தோச பேச்சுக்கள் மட்டுமே.
“துளசி, சுபாவின் அறைக்கு போக.. அங்கு சுபா எதையே வெறித்து கொண்டு இருந்தாள்.  அண்ணி என்று துளசி சுபாவை கட்டி அணைக்க”  சுபாவிற்கு தான்., தான் அவளை தவறாக நினைத்தது பற்றி வெட்க்கமாக இருந்தது.”
“சுபா அவளிடம் மன்னிப்பை கேட்க… நீங்களும் அம்மா மாதிரி தான் அவங்க குணம்…  அதனால அதை அப்படியே விட்டுட்டு… நீங்க உங்க அண்ணனுக்கும்… நான் என் அண்ணனுக்கும் எப்படி செலவு வைக்கலாம்னு பட்டியல் போடாலம்?? வாங்க” என்று ஷாபிங் பட்ஜெட்டை ஆரம்பித்து வைத்தாள் துளசி.
“திருமணத்தை கயலின் டெலிவரிக்கு பிறகும்… இப்போது ஒப்பு தாம்பூழம் மட்டும் மாற்றி கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டு, இன்று அந்த நிகழ்வு தான் நடந்து கொண்டு இருந்தது.”
“பட்டு… பட்டு பேசுடி??” என்று அவள் பின்னால் அலைந்து கொண்டு இருந்தான் விஷ்வா. பிறகு, அவள் சொன்னதுக்கு அவளிடம் பதில் சொல்லாமல்… தாத்தாவிடம் பேசியதில் அத்தனை கோபம் அவளுக்கு”
“அன்றிலிருந்து, துளசி விஷ்வாவிடம் பேசவில்லை. இரண்டு நாட்கள்  அவளின் கோபம் தெரிந்து அமைதியாக இருந்தவன்… அதன் பிறகு முடியவில்லை.”
“இரண்டு நாட்கள் தங்களின் அறையில் இருந்தவள் மூன்றாம் நாள் கயலுக்கு வலி வரவும் இது தான் சாக்கு என்று அவளுடன் படுத்து கொண்டாள். அனைவரும் சூட்டு வலி என்று சொல்லியும் கேட்கவில்லை” 
“உடன் சுபா, ராதா என சேர்த்து கொள்ள, நான் அத்தை… நான் சித்தி என போட்டி வேறு அவர்களுக்குள். அனைவரும் இருக்க, அவளை மட்டும் தனியே அழைக்கவும் முடியவில்லை விஷ்வாவால்”
“இதோ இன்று மாட்டிக்கொண்டாள் அரவிந்தனால்.  டேய்… உன் பொண்டாட்டி கூட சண்டையின்னா.. நான் என்னடா செஞ்சேன்…. இப்படி உன் கூட படுக்க?? மரியாதையா துளசிய இங்க கூப்புடு இல்லை… என்றவனை, விஷ்வா… உனக்கு வேணுன்னா நீ அவளை இங்க அனுப்பு?? என்றவன் திரும்பி படுத்து கொண்டான்”
“எப்படியும் தான் அழைத்தால் அவள் வர மாட்டாள்” என்பதால் அரவிந்தனை போக சொன்னான் விஷ்வா. அரவிந்தன் “நீயெல்லாம் நல்லா வந்து நாசமா போ” என் சாபம் பலிக்கும் பாரு!! என்றவனிடம், விஷ்வா அது பலிக்குறது உன் கையில தான் இருக்கு. 
“நீ… எவ்வளவு வேகமா போறியே?? அவ்வளவு வேகமா பலிக்கும்… என்றவனை தலையணையால் அடித்தவன், இதோ… அவர்களின் வாசலில் வந்து நின்று கொண்டான்.”
“அரவிந்தன் நிற்பதை பார்த்தவள், தன்னையே திட்டிக்கொண்டாள். எதுவும் போசாமல் வெளியே துளசி போக “தோங்க்ஸ்ம்மா”” என்றான் அரவிந்த்.
துளசி “எதுக்குண்ணா??” 
“உன் புருசன் கிட்ட இருந்து என்னைய காப்பாத்துனதுக்கு” என்றவன் சிரித்த படி உள்ளே போக, குழம்பியவள் எங்கு போக?? என தெரியாமல் அவர்களின் அறைக்கே வந்தாள்”
“அறைக்கு வந்தவள் விஷ்வா இல்லாது போக.. அப்பா இல்லை” என கால் எடுத்து வைக்க அந்தரத்தில் மிதந்தாள். எத்தனை நாள்டி இங்க வர?? என்றவன் அவளை படுக்கையில் கிடத்த முகத்தை திருப்பிக்கொண்டாள்  துளசி. 
“என்னடி பட்டு??” உனக்காக தான பண்ணுனேன்… ஏன் பிடிக்கலையா?? என்றவன் அவளின் முகம் திருப்பியதில் அவளை விட்டு விலக, இது மட்டும் தான் பண்ணீங்களா?? என்று அவனை தன் மீது சாய்து கொண்டாள் துளசி.
“என்னடி சொல்லுற??” என்றவன் அவளையே பார்க்க, “சொல்லுங்க… இது மட்டும் தான் பண்ணீங்களா?? என்றவள் அவனை கூர்ந்த்து பார்க்க, நீ… சொல்லுறது எனக்கு புரியலை துளசி?? என்றவனை பிடித்து தள்ளியவள் ஏன்டா என்கிட்ட சொல்லல??”
“எத்தனை நாள் உனக்கு பிடிக்காத கல்யாணம் இதுன்னு நினைச்சி” போடா… என்றவள் அவனையே கட்டி பிடித்து அழ ஆரம்பித்தாள்.
“பட்டு.. இங்க பாரு என்றதும்.. இன்னும் அவனுள் புதைந்து கொண்டாள் துளசி. பட்டு… இங்க பாரு… அப்ப நீ ரொம்ப சின்ன பொண்ணு?? பாத்தவுடனே மனசுல ஒட்டிக்கிச்சு இந்த மச்சம்… என்றவனை  மீண்டும் அடித்தவள், ம்ம்… சொல்லுங்க என்று கதை கேட்க ஆரம்பித்தாள்.”
“மறு நாள் நீ… வினய்கிட்ட பேசுனப்பவே முடிவு பண்ணிட்டேன்… உன்னை எதுக்காகவும் வருத்தபட விடக்கூடதுன்னு… ஆனா முடியலை!! என்றவன் குரலே சொன்னது கல்யாணத்தின் போது அவனின் மனநிலையை. துளசி அவனைவிட்டு விலக அவளை இழுத்து தன் மீது சாய்த்து கொண்டான்” 
“அப்பறம் அன்னிக்கு ஹோட்டல்ல உன்னைய பாத்தேன்னா, அப்பவே தூக்கிட்டு போகலாமானு ஒரு நினைப்பு” 
துளசி “தூக்கி இருக்க வேண்டியது தான??”   
“அதுக்கு உங்க அண்ணன் விட்டாதான?? நந்தி மாதிரி நிக்குறான்.. அது தான் முதல்ல அவனை முடிச்சுட்டு உன்கிட்ட வரலான்னா.. நீயே வந்து நிக்குற!! அது தான் தாத்தா சொன்னதும் தாலி கட்டிட்டேன்.” 
“அது சரி உனக்கு எப்படி விசயம் தெரியும்? என்றவனை தள்ளிவிட்டவள் எழுந்து சென்று எடுத்து வந்தாள் அந்த சீடியை.” 
“இது எப்படி உன்கிட்ட??” 
“அன்னைக்கு கொஞ்சம் சீடி எடுத்துட்டு போனேன் தான…?? அதுல இருந்துச்சு” என்றவள் “அவனை கட்டிபிடித்து ஏன் அன்னிக்கு சொல்லல நீங்க??”
“வார்த்தையால சொன்னா தான் ஒத்துப்பைய்யா?? உன்ன பாத்த நாள்ல இருந்து உன்கூட மட்டும் தான் வாழ்ந்திட்டு இருக்குறேன்.. அதை  கண்டிப்பா மூனு வார்த்தைல என்னால சொல்ல முடியாது.. அது தான் வாழ்ந்து பாக்க முடிவு பண்ணுனேன்.”  
“என்ன வாழ்ந்து பாக்கலாமா??!!” என்றவன் ஆரம்பிக்க மீண்டும் தள்ளிவிட்டாள் அவனை.
“இப்ப….. என்னடி??”
ம்ம… “அப்பவே தெரியுமா அண்ணா லவ்வ பத்தி??” 
“இல்லை… அவன் லவ் பண்ணுறது தெரியும்… அது சுபான்னு தெரியாது?? நான் உனக்கு மட்டும் தான் ஸ்பை வச்சேன்… அவனுக்கு இல்லை… அதனால தான் தெரியலை??”
“இப்ப உன் என்குயரி முடிஞ்சுதா… இல்ல இன்னும் இருக்கா?? என்ற விஷ்வாவின் கேள்விக்கு துளசியின் சிரிப்பு  சம்மதம் தர இவர்களின் காதல் வாழ்கை பயணம்  இனிமையாக துவங்கியது”  
விஷ்வாவின் வாழ்வில் துளசியின் வாசம் என்றும் நிறைந்து இருக்கட்டும்    

Advertisement