Advertisement

                       ஓம் நம சிவாயா 
விஷ்வ துளசி அத்தியாயம் 16
“சப்பென்ற என்ற அறையில்” கன்னத்தில் கை வைத்து அதிர்ந்து போய் நின்று இருந்தாள் சுபா. 
எதிரில்… “ஸ்ரீ.. ருத்திர கோலத்தில் நின்று இருந்தான்.”  அரவிந்தன் தான் அவனை பிடித்து இழுத்து இருந்தான். டேய்… என்னடா இது?? பொம்பள புள்ளைய இப்படிதான் கை நீட்டி அடிக்குறதா?? என்றான் கோபமாக. 
“விடுங்க அத்தான்… இவளை இப்படியே கொன்னுடுறேன்… இவ பேசுன பேச்சை வேற யாராவது கேட்டு இருந்தா என்ன ஆகுறது??” 
“திமிரு, அமைதியா இருக்கான்னு சொல்லி சொல்லி அண்ணா இவளுக்கு வேண்டியதை பண்ணுனார்ல… அவருக்கு வேணும். அருமை தங்கச்சி பேசுற பேச்சை வந்து கேட்க சொல்லுங்க!!”  என்றவன் கோபமாக வெளியேறினான்.
வளைகாப்பு முடிந்ததும் அனைவரும் கோவிலுக்கு கிளம்ப, “ஜெயந்த் கையில் இருந்த பால் தவறி துளசியின் புடவையில் சிந்தி விட்டது”  வீடிற்க்கு போய் மாற்றிவர நேரம் இல்லை அதே புடவையுடன் வரவும் முடியாது. 
“சுபா, மாற்றுவதற்க்காக கொண்டு வந்து இருந்த சுடிதாரை மீனா அவளுக்கு கொடுக்க, வேண்டாம் அத்தை… இது சுபா ஆசைப்பட்டு எடுத்தா, நா… போயி வேற புடவை மாத்திட்டு வர்றேன்” 
“அது எனக்கு தொரியாதா?? நேரம் கம்மியா இருக்கு. நீ வர்றதுகுள்ள நல்ல நேரம் போயிடும். போ டிரஸை மாத்திக்கிட்டு வா” 
“சுபா கிட்ட கேளுங்க அத்தை. அவ என்ன சொல்ல போறா?? நீ போ… நா அவ கிட்ட சொல்லிக்கிறேன்” என்றவர் அவளை உடை மாற்ற அனுப்பி வைத்தார். 
“அந்த உடை முதன் முதலாக வினய் சுபாவிற்க்கு எடுத்து தந்தது.” அதற்காக தான் துளசி அதை வேண்டாம் என்றாள். இப்போது வேறு வழி இல்லாமல் அதை போட போக அவளிடம் பேசவும் ஃபோன் துளசியுடம் இல்லை. 
சுபா, விஷ்வாவுடன் வெளியே சென்று இருந்தாள். விஷ்வாவிடம் தான் இவளின் ஃபோன் இருந்தது…  வினயின் ஃபோனில் இருந்து அழைத்தால் சுபா எடுக்கவில்லை. மீனா அவசரப்படுத்த வேறு வழி இல்லாமல் அதையே அணிந்து வந்தாள் துளசி. 
துளசி வந்ததும் அனைவரும் கோவிலுக்கு போக, சிறிது நேரத்திலேயே சுபாவும் விஷ்வாவும் வந்தனர். புடவை மாற்ற உள்ளே போனவள் மாற்று துணியை தேட அது இல்லை அங்கு.
“ஃபோனில் மீனாவிடம், இங்க இருந்த என்னோட சுடி எங்க சித்தி?? அது துளசி போட்டுக்கிட்டா… நீ வீட்டுக்கு போயி வேற மாத்திட்டு  வா…” என்றவர் ஃபோனை கட் செய்து விட்டார்.
“சுபாவிற்கு கோபம் என்றாள் அப்படி ஒரு கோபம். இப்போது துளசி மட்டும் எதிரில் இருந்து இருந்தாள் அவளை ஒரு வழி செய்து இருப்பாள்.” 
“கடையில் பார்த்ததும் துளசி அந்த சுடியை கேட்டு இருக்க, வினய் தான் அது சுபாவிற்கு  எடுத்தது என்றதும் அப்படியே கொடுத்து விட்டாள் . இது சுபாவிற்கு தெரியாது… துளசி வினயிடம் கேட்டது மட்டும் தான் தெரியும்.” 
“ஏற்கனவே வீட்டில் இருப்பவர்கள் அவள் சொல்லுவதற்கு எல்லாம் சரி என்கிறார்கள் என்று அவள் மீது கோபமாக இருப்பவள்… இன்று தனக்கு எடுத்ததை, அதுவும் வினய் தனக்கு எடுத்து கொடுத்ததை அவள் தன்னிடம் கேட்காமல் அணிந்து கொண்டது அப்படி ஒரு கோபம்” 
 
“கோவிலில் இருந்து ஸ்ரீயும், அரவிந்தும் முதலில் வீட்டிற்க்கு வர… எங்க அவ?? என்ற சுபாவின் கேள்விதான் அவர்கள் முன் நின்றது.
அரவிந்தன்.. யாரை கேக்குற ராதாவையா?? அவங்க வர நேரம் ஆகும். எதுக்கு இப்ப அவ?? என்று அவளின் முகத்தில் இருந்த கோபத்தை பார்த்து கேட்க., 
“நா அவளை கேக்கலை அத்தான். வந்த நாள் இருந்து இங்க இருக்குறவங்க எல்லாறையும் அவ இஷ்டத்துக்கு ஆட்டி வைக்குறாள்ள… அவளை கேட்டேன்??”
அரவிந்த்… என்ன சுபா?? பேச்சு எல்லாம் வித்தியாசமா இருக்கு!! என்ன ஆச்சு… இப்ப நீ யாரை கேக்குற?? சரியா பேசு…
“நா… சரியாதான் பேசுறேன் அத்தான்!!! நீங்க எல்லாம் தான் ஏதோ புதுசா பண்ணுறீங்க… நாங்க சொன்னா, நீ பொண்ணா இரு… எதுத்து பேசாதா சொல்லுவீங்க… அதோ அவ சொன்னா எல்லாம் சரி??”
“இப்பவும் நீ… சொல்லுறது எனக்கு புரியலை?? யாரு சொல்லுறத… இங்க யார் கேக்கலை??”
ஸ்ரீ, “அத்தான் அவ சொல்லுறது துளசிய பத்தி” என்று சொன்னதும் தான் அரவிந்தன் சுபாவை கேள்வியாக பார்த்தான். அவளின் பதில் சொல்லாத நிலையே, அது உண்ணமை என்பதை கூற, என்ன சுபா எதுக்கு இப்படி பேசுற?? அவ உங்க அண்ணி உனக்கு புரியலையா??!!
“எனக்கு புரியுது… உங்களுக்கு தான் புரியலை” யாருமே சொந்தம் விட்டு இருந்தது இல்லையா??!! இவங்க மட்டும் தான் அதிசயமா!! நானும் வந்த நாள் இருந்து பாக்குறேன்… அவ எது சொன்னாலும் சரி… இப்ப அவ சொன்னான்னு தான இங்க வீட்டுல இந்த விசேசத்தை ஏற்பாடு செஞ்சீங்க?? இப்ப என்னேட டிரஸையும் அவ இஷ்டத்துக்கு எடுத்து போட்டு கிட்டா… இதே நான் செஞ்சு இருந்தா சும்மா இருப்பாளா??” என்றதும் தான் ஸ்ரீ… அவளை அடித்தது 
“என்ன பேச்சு பேசுற??” துளசி உன்ன விட சின்ன பொண்ண இருந்தாலும், இப்ப அவங்க நமக்கு அண்ணி. அந்த மரியாதை எப்பவும் இருக்கனும். இன்னெரு தடவை மரியாதை இல்லாம பேசினா கொன்னுடுவேன் என்றதும் தான், தான்… கோபத்தில் துளசியை மரியாதை இல்லாமல் பேசியதே புரிந்தது அவளுக்கு.
“அரவிந்த் தலையில் கை வைத்தவன்… இந்த விசேசம் எனக்கான துளசி பண்ணுனது சுபா!!” என்றான் வருத்தமாக 
சுபா, அரவிந்தனை பார்க்க… “அதுவும் நா… சொல்லாம, என்னைய புரிஞ்சு பண்ணுனது…. நீ சொல்லுறது சரி தான். அவ வந்ததுல இருந்து அவளேட இஷ்டத்துக்கு தான் எல்லாம் நடக்குது. ஆனா…. அது எதுவும் அவ இஷ்டபட்டது இல்லை??!! விஷ்வா உட்பட….” என்றதும் தான் சுபாவிற்கு புரிய ஆரம்பித்தது
“துளசியை… குழந்தைக்கு சாக்லேட்ட காட்டி ஏமாத்துற மாதிரி…. சொந்தங்களை காட்டி அவளை ஏமாத்தி வச்சு இருக்கிறோம். நீ… அங்க போய் வாழ போற பொண்ணு இதை புரிஞ்சி நடந்துக்க” 
“வினய், பாக்க தான் அமைதியான ஆளு, ஆனா… துளசினு வந்துட்டா மத்தவங்க எல்லாம் அவனுக்கு தேவையே இல்லை…. அது நீயா இருந்தாலும்??!! அர்த்தம் புரிந்தவள் தலை குனிந்து நின்றாள்”
“உனக்கு எதுக்கு துளசி மேல கோபம்னு எனக்கு தெரியல?? ஆனா… அது நிச்சயமா துளசியால இருக்காது. நீயா… எதையே தப்பா நினச்சு இருக்குற. அது மட்டும் புரியுது” 
“வினய் மட்டும் அவளோட அண்ணன் இல்லை… நானும் தான். இனிமே இப்படி ஒரு பேச்சு வந்தது” என்று அரவிந்த் முடித்தவன் வெளியே சென்று விட்டான்.
“இது நாள் வரை தங்களை திட்டாதவன்…  அரவிந்தனின் சிரித்த முகத்தை தவிர வேறு முகத்தை பார்க்காதவர்கள்… இன்று பேசவும் அதிர்ச்சி என்பது ஒரு புறம் இருந்தாலும்…. அவன் தான் அங்கு சென்று வாழ போகும் பெண் என்றது இன்னும் அவளை மௌனமாக்கியது. தங்களின் விபரம் அவனுக்கு எப்படி தெரியும் என்று??”
‘சுபாவிற்கு தான் தன்னையே புரிந்து கொள்ள முடியாத நிலை?? எதுக்கு துளசி மேல கோபப்பட்டேம்?? அவ இது வரைக்கும் என்கிட்ட எதுவும்  தப்பா கூட பேசுனது இல்லை… என்ன ஆச்சு எனக்கு??’ சிந்தனையில் இருந்தவள், என்ன சுபா  வீட்டுக்கு போகலையா?? என்ற மீனாவின் குரலில் கலைந்தாள்.
ம்ம்ம்…. இல்லை சித்தி… நீங்க இங்க தான வருவீங்க… அது தான் இங்கயே இருந்துட்டேன்… அதுவும் நல்லதா போச்சு… என்றவளை, எது நல்லதா போச்சு?? என்றார் மீனா.
ஆங்… ஒரு விசயம் உனக்கு சொல்ல மறந்துட்டேன். “இந்த ஜெயந்த், துளசி மேல பாலை கொட்டிட்டான்… மாத்த வேற டிரஸ் இல்லைன்னு, நீ எடுத்துட்டு வந்தத குடுத்தா… இந்த துளசி வாங்க அத்தனை அடம் பண்ணுறா. நீயே… அவ கிட்ட சொல்லிடு.. உன்ன கேட்டுதான் நா அதை குடுத்தேன்னு…” என்றவர் உள்ளே சென்று விட்டார்.
‘சுபாவிற்கு யாரே தன்னை அடித்தது போல் இருந்தது. ச்சே.. அவ வேணும்னு பண்ணல நான் தான் தப்பா நினைச்சு பேசிட்டேன்’ என தலையில் அடித்து கொண்டவள், துளசி கிட்ட சாரி சொல்லனும் என்றும் நினைத்து கொண்டாள்.
“விஷ்வா, பட்டு  டிரஸ்ஸ கையில வச்சுகிட்டு என்ன யோசனை??” அவளை பின்னிருந்து அணைத்தவன்… காது மடலில் இதழ் பதிய பேச, அதன் கூச்சத்தில் இது… இது… துளசியின் வார்த்தை தந்தி அடித்தது.
“இது தான்” அது தான நானும் கேக்குறேன்?? என்ன யோசனை?? என்றவன் அவன் முகம் பார்த்து திருப்பினான். இது… சுபா டிரஸ். அத்தை அவள கேக்காம, என்கிட்ட போட குடுத்துட்டாங்க. அது தான் சுபா ஏதாவது நினைச்சுட்டா?? என்று விஷ்வாவை பார்த்தாள்.
“அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டா… நாம அவளுக்கு இதே போல வேற வாங்கி கொடுத்துடலாம் என்ன சரியா??”
“லூசு விஷ்வா” யாராவது முக்கியமானவங்க வாங்கி கொடுத்து இருந்தா?? நான் போட்டது தப்பாகிடும் இல்ல!!
“அப்படி யாருமா எனக்கு தெரியாத முக்கியமான ஆளு??” என விஷ்வா கேட்க, பிடிபட்ட திருடன் போல் முழித்தாள் துளசி.
‘ஐயோ… நானே வாய கொடுத்து மாட்டிக்கிட்டேனா?? இப்ப என்ன பண்ண… எதை சொன்னாலும் அதுக்கு ஒரு கேள்வி கேப்பாறே இவரு.. என்ன பண்ண’
“ஓய்… என்ன… நா கேட்டுக்கிட்டே இருக்குறேன், நீ… பதில் சொல்லாம இருக்குற… யாரு அந்த முக்கியமான ஆளு??”
“அவங்க பிரண்ட்ஸ் யாராவது??” என்று துளசி நிறுத்தி விஷ்வாவை பார்க்க., உனக்கு பொய் செல்ல வராது துளசி உண்மைய சொல்லு என்றான் விஷ்வா.
இதுவரை விஷ்வா, துளசியிடம் கோப்பட்டது இல்லை. இன்று சற்று குரல் உயர்த்தி பேசவும் பயந்து தான் விட்டால் துளசி.
“அத்தான் பிளீஸ்.. கோப்படாதீங்க” 
“அது, நீ… சொல்லுறத பொருத்து முதல்ல விசயத்தை சொல்லு.. என்று அமர்ந்து கொண்டான்.
“எங்கு இருந்து ஆரம்பிப்பது… என்பது தான் இப்போதைய குழப்பம் துளசிக்கு. எப்படி இருந்தாலும் கேட்டு தான் ஆகனும்.. அதனால இப்பவே பேசிடலாம் முடிவினை எடுத்தவள் வினய், சுபாவை விரும்புவதை சொல்லி விட்டாள்”
“சுபாவுக்கு தெரியுமா?? என்ற விஷ்வாவின் கேள்விக்கு, இல்லை என துளசி தலையை ஆட்ட.. ‘இப்படி தலையை ஆட்டியே என்னைய கவுத்துடுவா.. மனதில் கொஞ்சினாலும்’ வெளியில் முகத்தில் எந்த பாவனையும் இல்லை.”
“என்ன அத்தான் பேசாமா இருக்கீங்க?? அண்ணா நல்லவன் தான்.. நீங்க அவனுக்கு சுபாவை கட்டி கொடுங்க.. நல்லா பாத்துப்பான்… ரொம்ப லவ் பண்றான்… இப்ப என்னால தான்.. என ஆரம்பித்தவள் பேச்சை நிறுத்தி அத்தான்.. இது வரை அவன் எதுக்கும் ஆசை பட்டது இல்லை.. என வினய்க்கு சாதகமாக பேச ஆரம்பித்தவள், விஷ்வாவிடம் பதில் இல்லாமல் போக கெஞ்ச ஆரம்பித்தாள்”
“விஷ்வாவிடம் எந்த மாற்றமும் இல்லாமல் போக… அத்தான் பிளீஸ்!! என்றதும் கையை நீட்டி பேச்சினை நிறுத்தியவன்… எனக்கு தலை வலிக்குது சூடா டீ எடுத்துட்டுவா…” என்றவனை பார்த்தவள் பார்வை ‘உன்னை கொன்னா என்னா?’ என்று இருந்தது.
“முகத்தை தூக்கி வைத்தவள், தரை அதிர கால்களை உதைத்து கொண்டு வெளியே போக, ஏதோ என்னாலனு ஆரம்பிச்சா அப்படியே நிறுத்திட்டா” என்ற யோசனையுடன் சென்றவளை பார்த்து இருந்தான் விஷ்வா. 
“துளசி டீயை எடுத்து கொண்டு மேலே வர… அங்கு விஷ்வா இல்லை. எங்க போனாரு?? இவரை என்ன பண்ணலாம்?? ஒரு விசயம் சொன்ன பதில் சொல்லனும்.. அதை விட்டு நம்மல சுத்தல்ல விடுறது..” இருக்கட்டும் ‘எனக்கும் சான்ஸ் கிடைக்காமையா போயிடும்?? அப்ப பாத்துக்குறேன்!!’ நினைத்தவள் கீழே சென்று விட்டாள்.
“சுபா வினயின் விபரம் சொல்லி நான்கு நாட்கள் ஆன பிறகும் விஷ்வாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை… தினமும் அவன் முகம் பார்த்தாள் துளசி. ஏதாவது சொல்வானா.. என்று அவனிடம் எந்த பதிலும் இல்லை”
“அறைக்கு வந்தாலே வாயை அடைபவனிடம்.. என்ன கேட்க?? காலையில் அவள் எழும் முன் சென்றுவிடுவான் விஷ்வா.  மங்கை தான் கேட்டார்.. என்ன .துளசி முகம் வாடி இருக்கு?? இல்லையே அத்தை நல்லா தான் இருக்குறேன்.. என்றவள் அறைக்குள் வந்து தலையில் குட்டிக்கொண்டாள் எல்லாருக்கும் தெரியுர மாதிரியா நடந்துப்ப??” என்று
“இன்னிக்கு வரட்டும் வைச்சுக்குறேன்… கேட்டா பதில் சொல்லாம டென்சன ஏத்திகிட்டு… சரமாரியாக விஷ்வாவிற்க்கு திட்டுக்கள் விழ அவனுக்கு தான் அங்கு புரையேறியது”
“விஷ்வா… அர்வி உன்கிட்ட ஒன்னு கேக்கனும்… என்று ஆரம்பித்தவனை தலை நிமிர்ந்து பார்த்தவன் மீண்டும் பைலில் தலையை நுழைத்து கொண்டான்”
“டேய்… நான் பேசனும் சொன்னா… நீ பதில் சொல்லாமா இருக்குற??” 
“நீ… முடிவு பண்ணிட்டுத்தான, என்கிட்ட பேச்ச ஆரம்பிப்ப… இப்ப என்ன புதுசா?? உன் முடிவ சொல்லு” என்றவனை விஷ்வா பார்த்தவன், டேய்… என்ன கோபம் என்மேல?? 
“அடடா தெரிஞ்சுடுச்ச!!! நா… உன்மேல கோபமா இருக்குறது??  அவன் நினைக்குறதுல என்ன தப்பு இருக்கு?? பொண்ணு குடுத்து பொண்ணு எடுத்தா அதுல பல சிக்கல் இருக்குதான… அத அவன் நினைச்சு வேணாம்னு முடிவு பண்ணி இருக்கலாம்… நா உன் கிட்ட சொல்லி நாளு நாள் ஆகுது இன்னும் அதுக்கு பதில் சொல்லல.. இப்ப மட்டும்  நீ கேட்டா நான் சொல்லனுமா??”
“சுபா சம்பந்தபட்ட விசயம்டா… நான் எப்படி முடிவ எடுக்க முடியும்?? அப்ப கயல் முடிவ மட்டும் எப்படி எடுத்தீங்க அண்ணா??” என்று வந்து நின்றான் ஸ்ரீ… 
“டேய்… நீ எப்ப வந்த??” விஷ்வா

Advertisement