Advertisement

“இப்ப கயல் அக்கா அடுத்து நீங்க தான??” என துளசியை கேட்டனர் மற்றவர்கள். இல்லப்பா…!! முதல்ல கயல் அண்ணிக்கு டெலிவரி நல்லா ஆகனும். நா… தான் முதல் முதலா பேபீச கையில வாங்கனும். அப்பறம் தான் மத்தது… என்றிட “பேமிலி பிளானிங்க எப்படி போடுறா பாரு!!!” என்றதும் மீண்டும் ஒரு சிரிப்பலை அந்த கூட்டத்தில்.
“இரவின் தனிமை… தோட்டத்தில் இருந்து வந்த ஜாதி மல்லியின் வாசம்…. மடியில் துளசி” இதைவிட வேறு என்ன வேண்டும் விஷ்வாவிற்கு. “பட்டு சந்தோசமா இருக்கிறயா??” என்றவனுக்கு கேள்வியானா பார்வை ஒன்றை பதிலாக தந்தாள் துளசி. 
“இல்லை… பசங்க கூட பேசுனது காதுல விழுந்தது… அது தான்…” என்று பாதியில் நிறுத்தினான் விஷ்வா. 
அவன் நெஞ்சில் வாகாக சாய்ந்து கொண்டவள், அது வந்து…. என இழுக்க, “எதுவா இருந்தாலும் சொல்லுடா” நான் சரி பண்றேன்… என்ற தவிப்பானா கெஞ்சல் வார்த்தை விஷ்வாவின் வாயில் இருந்து வர, அவசரமாக அவன் வாயை மூடினாள் துளசி. 
“நா… இது வரைக்கும் பொறந்த குழந்தையை தூக்குனது இல்லை.” பாட்டி சொன்னாங்க… ஒரே வீட்டுல ரெண்டு பேர் மாசமா இருந்தா பாத்துக்க கூடாதுன்னு. “இப்ப நான் மாசமா இருந்த எப்படி பாப்பாவை பாக்குறது??” அது தான் அண்ணிக்கு குழந்தை வந்ததுக்கு அப்பறமா நம்ம பாப்பா வரட்டும்… என விஷ்வா முகம் பார்க்க, “அடப் பாவி” என்று பார்த்து இருந்தான்.
விஷ்வா….. என்று அவனை உழுக்கியவளை கீழே தள்ளியவன் “அடிப்பாவி இதுக்கு தான் இவ்வளவா… நா பயத்தே போயிட்டேன்…. கேட்டதுல இருந்து நான் நானாவே இல்ல…. உன்னைய இப்ப பாரு… என்றவன் அவனும் பார்க்க வில்லை அவளையும் பார்க்க விடவில்லை”
“கடற்கரையில் பெரியவர்கள் அமர்ந்து இருக்க… சிறியவர்கள் அனைவரும் கடல் நீரில் விளையாட… கயல் அவர்களை ஏக்கமாக பார்த்த படி இருந்தாள்.” பார்வதி அவளை  நீர் படாமல் இருக்க சொல்லி இருந்தார்.
“அரவிந்தன் தூரத்தில் இருந்தே கயலை பார்த்தவன், அவளின் அருகினில் வந்தான்.  என்ன ஜில்லு, என்ன ஆச்சுடா?? முகம் வாடி போயி இருக்கு?? ஏதாவது வேணுமா வாங்கிட்டு வரவா??” என்றதுக்கு எந்த பதிலும் இல்லை அவளிடம். 
“என்னடா?? என்று தோள் சாய்த்து கொண்டவனிடம்… கடலில் விளையாடும் ஆசையை சொல்ல, விளையாட வேண்டாம், போய் நின்னுட்டு வரலாம்!! என்று அரவிந்தன் அழைக்க, கயல் இல்ல வேணாம் பாட்டி திட்டு வாங்க… 
நீ வா… பாட்டி ஒன்னும் சொல்ல மாட்டாங்க என்றவன் அவளை அழைத்து சென்றான். “பார்வதி… இங்கிருந்தே சத்தமிட, விஷ்வா தான் பாட்டி விடுங்க, அவளை அர்வி தான் நிக்க வைக்கிறான்” என்றதும் அமைதியாகிவிட்டார். 
“கயல்  அதிக நேரம் நீரில் நிற்க கூடாது என்பதால் அனைவரும் கரைக்கு திரும்பினர். சுபாவிற்கு அதிலும் வருத்தமே, அவளுக்கு முடியலைன்னா?? அவ போக வேண்டியது தான எதுக்கு எங்களையும் விளையாட விடாம செய்யனும்” என்றவளை ஸ்ரீ.. முறைத்த முறைப்பில் அமைதியானால்.
துளசி “அத்தை…  கயல் அண்ணி மாசமா இருக்குற நேரத்தில உடுப்பி போனா நல்லதுன்னு நேத்து (ரமா ஆண்டி வரதன் மனைவி) சொன்னாங்க… போலாமா??” என்று கேட்க இப்பவே அலைச்சல் அதிகம் ஆகிடுச்சு இப்ப வேணாம்… இன்னொரு முறை போகலாம் என்று விஷ்வா முடிக்க, அவனை முறைத்தவளை, கொன்னுடுவேன் என்று பத்திரம் காட்டினான் விஷ்வா.
“விஷ்வா, துளசியின் வாழ்கை தெளிந்த நீரோடையாக சென்றது. அவள் கேட்கும் முன் அவளின் ஆசை நிறைவேற்றபட்டது விஷ்வாவால். துளசி வந்ததும் வாழ்கையின் வண்ணம் இன்னும் அதிகமானது போல் ஒரு தோற்றம் விஷ்வாவிற்கு” 
“இன்னும்… விஷ்வா தான் துளசியை காதலித்ததை பற்றி சொல்லவில்லை. துளசியிடம் சொன்னால் பிரச்சனை என்று எதுவும் இல்லை.. ஆனாலும் ஏனோ அவனுக்கு சொல்ல தோன்றவில்லை.. அவனின் காதலை ஒவ்வெரு செயலிலும்  உணர்த்தினான் துளசிக்கு.”
“காதலை வார்த்தையால் கோர்ப்பதை விட செயலால் காட்டலாம் என்று துளசி கோட்டையை கட்டிக்கொண்டு இருந்தான் விஷ்வா” (பயபுள்ள தாஜ் மஹாலுக்கு போட்டியா கட்டுமோ)
“துளசியும் அப்படியே… பிடிக்காத திருமணமாகுமோ என்று பயந்து இருந்த அனைவருக்கும் இவர்களின் அன்யோனியம் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.”
“மாதம் ஆனால் பார்வதி கலண்டரை பார்த்தாலும்.. துளசி அதை பற்றி எல்லாம் கவலை பட வில்லை. கயல் பிரசவம் முடிந்த பின் தான் தன்னுடையது என்பதில் முடிவாக இருந்தாள். விஷ்வாவும் அவளுக்கு எதிராக எதுவும்  பேச வில்லை.”
“வீட்டில் அனைவருக்கும் விபரம் தெரியும், இருந்தாலும் பார்வதியின் பேச்சுக்கு விஸ்வநாதனே பதில் தருவார். கல்யணத்தை போல இதுல நாம முடிவு பண்ண கூடாது பார்வதி… அவங்களுக்கு தெரியும் என்பார். பார்வதி அவரை முறைத்து பார்த்தாலும் அந்த பேச்சின் வீரியம் அடுத்த மாதம் வரும் வரையே”
“இதோ… இன்று கயலின் வளை காப்பு. இரட்டை பிள்ளைகள் என்பதால் நாளை தள்ளி போடாமல் ஏழாம் மாதமே வைத்து விடலாம் என்று முடிவு செய்து விட்டனர்” 
அதுவும்… “அரவிந்தன் வீட்டில் தான் வைக்க வேண்டும் என்று துளசி கூறியதால்”  அரவிந்தனின்.. ஆசையும் அதுதான். துளசி ஒரு நாள் அரவிந்தன் வீட்டினை பார்க்க போக அன்று அவன் சொன்னது. 
“சின்ன வீடாக  இருந்தாலும் அத்தனை அழகாக இருந்தது அந்த வீடு. பழைய காலத்து  தேக்கு மர வீடு… திண்ணை வைத்து சாரம் இறக்கி இருக்க… உள்ளே பெரிய முற்றம், அதனை சுற்றி நான்கு அறை, சமையல் கட்டு, பூஜை அறை, மேலே மொட்டை மாடி, பின்னால் சிறிய மாட்டு கொட்டகை, துளசி மாடம்” அவ்வளவே 
“அரவிந்தன் இருந்த வரை வீட்டை சுத்தமாக பராமரித்தவன்… விஷ்வாவின் வீடு சென்ற பிறகும் ஆள் வைத்து பார்த்து கொண்டான். தினமும் சுத்தம் செய்து விளக்கேற்ற ஆள்வைத்தவன் யாரையும் தங்க விடவில்லை”
“வீடு ரொம்ப அழகா இருக்குனா.. எதிரில் போட்டோவில் இருந்த லட்சுமியை பார்த்து பெரியம்மா ரொம்ப அழகுல!! என்றவளை வியப்பாக பார்த்தான் அரவிந்த். என்ன அண்ணா?? என்றவளை எதுவும் இல்லை.. என தலை அசைத்தவன் தாய் தந்தை படத்தின்  முன் அமர்ந்து கொண்டான். 
“இது வரைக்கும் இந்த வீட்டுல நல்ல காரியம் நடந்ததான்னு எனக்கு தெரியாது துளசி??” என்று சம்பந்தம் இல்லாமல் பேசியவனை, யோசனையாக பார்த்தாள் துளசி. 
“அவனின் அமைதி ஏதோ செய்ய… அன்றே விஷ்வாவிடம் பேசிவிட்டால் கயலின் வளைக்காப்பு அங்கேதான் நடத்த வேண்டும் என்று.  எதுக்கு பட்டு?? அங்க இங்கயே வச்சுக்கலாம் இல்லையா?? என்றவனை துளசி முறைத்து பார்த்தாள்.
“என்னடி ரொமான்டிக்க பாக்குற?? நா… உங்களை முறைக்குறது ரொமான்டிக்க இருக்கா. ம்..ம்..  அந்த பஞ்சாயத்தை அப்பறம் பாக்கலாம்!!” இப்ப நா கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க.
“சரிங்க… கேளுங்க??” என்று அவளை போல பாவனை செய்ய விஷ்வா… என்ற அவளின் குரலுக்கு  சரி சொல்லு என்றான்.
“நீங்க நிஜமாவே அரவிந்த் அண்ணா ஃபிரண்டா??” என்றவளை விஷ்வா பார்க்க… இல்லை உங்களுக்கு அண்ணாவை பத்தி நல்லா தெரிஞ்சு இருந்தா, இந்த கேள்விய நான் கேட்டு இருக்க மாட்டேன். நீங்களே அங்க தான் விசேசம் பண்ண சொல்லி இருப்பீங்க.. யோசிங்க.. என்று அவனுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டாள்.
அவள் சொன்னதன் அர்த்தம் பிறகே அவனுக்கு புரிய, “சாரிடா அர்வி கண்டிப்பா அத்தை, மாமா ஆசிர்வாதம் கண்டிப்பா கயலுக்கு கிடைக்கும்” என்றவன் துளசியை தழுவிக்க கொண்டான். பல்பு எரிஞ்சிடுச்சா என்றவளின் கேள்விக்கு விடையானான் விஷ்வா.
“பார்வதியிடம் சொல்ல அவரும் வேண்டாம் என்று கூற விஷ்வாதான்,  அதுதான் பாட்டி கயலோட உரிமை அதை நாம மறுக்க கூடாது இல்லையா?” என்றதும் பார்வதியும் ஒத்துக்கொண்டார். 
மங்கை, துளசியை பார்க்க புருவத்தை மேலே ஏற்றியவள் கண்ணடிக்க.. மங்கை அவளை கட்டிக்கொண்டார். நானும் இதை தான் நினைச்சேன் என்றவரை பார்த்து  “அம்மாவுக்கும்.. புள்ளைக்கும் பல்பு லேட்டா தான் எரியுமா??” என்றவளை அடிக்க போக இடத்தை விட்டு ஓடியே விட்டால் துளசி. 
“கால்ல சக்கரம் தான் போ… இந்த பொண்ணுக்கு!! கொஞ்ச நேரம் இல்லையினாலும் வீடே வெறிச்சு இருக்குது” என்றார் மங்கை. கோதை தான் நொடித்து கொண்டார்.. “நீங்க குடுக்குற இடம் தான் அவளை இந்த ஓட்டம் ஓட வைக்குது” என்று. 
“கேட்டு இருந்த சுபாவுக்கு தான் ஒரு மாதிரி இருந்தது. துளசியின் மீது வேண்டாத கோபத்தை வளர்த்து கொள்ள… அதே அவளின் மீது வினயின் கோபத்தை தூண்டி விட போது மானதாக இருக்கும் என்பதையும் மறந்து போனால்”
“அன்று வினயிடம், துளசியை பற்றி நல்ல விதமாக சொன்னதும் சுபாதான்… அதை மறந்து இன்று அவளின் மீது கோபத்தை வளர்த்து கொண்டதும் இவள் தான்.. இதனால் தான் இழக்க போவது தெரிந்தாள்… என்ன செய்வாளோ??” 
“இரட்டை பிள்ளை என்பதால் சற்றே வயிறு பெரியதாக இருந்தது கயலுக்கு. ராதாவை கிருஷ்ணன் ஆலிங்கணம் செய்யும் ஓவியம் புடவை முந்தியில் நெய்யப்பட்டு இருந்த பட்டு உடுத்தி, அதற்கு தோதான நகைகள் அவள் மேனி உறுத்தாமல் போட்டு இருக்க… சிறு தங்க தேர் அசைவதை போல் வந்தவளை இமைக்க மறந்து பார்த்து இருந்தான் அரவிந்த்” 
“என்ன அண்ணா… அண்ணி சூப்பரா??!! என்ற துளசியின் கேள்வியில் சித்தம் தெளிந்தவன், தேங்க்ஸ் துளசி என்றவனுக்கு பதில் எதுவும்  கூறாமல் துளசி சென்றது அரவிந்தனை ஏதோ செய்தது.
வினயிடம் சென்றவளை… வினய் ஏதோ செய்ய சொல்ல அதை செய்து முடித்தால் துளசி. வினய் வந்து பார்த்தவன் சென்றுவிட, அப்போது திரும்பி அரவிந்தனை பார்த்தாள் துளசி. “வினய் என் கூட பிறந்தவன் அதனால செஞ்சதுக்கு தேங்க்ஸ் சொல்லலை… என்றதும் தன் தவறு புரிய அவளிடம் மன்னிப்பை கேட்க போக.. வினய் சாரியும் கேட்க மாட்டான் என்றதும் வேறு வழியே தெரியாமல் அரவிந்தன் தோப்பு கரணம் போட ஆரம்பித்தான்”
“துளசி சிரித்த படி நிற்க… மற்றவர்கள் யாரும் எதுவும் சொல்லாமல் அவர்களையே வேடிக்கை பார்க்க… இதை பார்த்த சுபாவிற்கு தான் மனதில் துளசியின் மீது வன்மம் பெருக ஆரம்பித்தது….”
                               விஷ்வ துளசி தொடர்வாள்…………..
 

Advertisement