Advertisement

                       ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 15
“பெட்டியா பாத்து வைப்பா… அந்த சாப்பாட்டு கூடையை முன்னாடி வச்சுடு” என்ற பார்வதியை அரவிந்தன் முறைத்து பார்த்தான். 
“ஏன் பாட்டி… இதுக்கு முன்னாடி கோதை அம்மா எங்கையும் போனது இல்லையா??” இங்கன இருக்குற மங்களூருக்கு இத்தனை பொட்டியா!! இது ஒரு நாள் சாப்பாடா, இல்லைனா வருசத்துக்கா?? என்றவன் முகவாயில் இடித்தார் பார்வதி.
“உனக்கு ஏன்டா??” நீயும் உன் பொண்டாடியும் ஊருக்கு போங்க, அப்பவும் நா இதே போல சாப்பாடு ஆக்கி தர்றேன். 
“பாட்டி… சும்மா பொய் சொல்லாதீங்க” 
“நா என்ன பொய் சொன்னேன்டா??” 
“சாப்பாடு தர்றேன்னு சொன்னது சரி. ஆனா… அதை நீங்க ஆக்குவேன்னு சொன்னது பொய். எனக்கு தெரிஞ்சு நீங்க சமையல் கட்டு பக்கம் போனதே இல்லை… உன் மாமியார் இருந்த வரைக்கும் அவங்க சமைச்சாங்க… அவங்க போனதுக்கு அப்பறம் மங்கை அத்தை தான் சமையல். இதுல நீங்க எங்க இருந்து வந்தீங்க பாட்டி??” என்றவனை அடிக்க குச்சியினை எடுத்தார் பார்வதி.
“போதும் ரெண்டு பேரும் சண்டை போட்டது. டேய்… வேலைய பாருன்னா, வெட்டியா பாட்டிகிட்ட வம்பிழுத்து கிட்டு நிக்கிறயா” என்ற விஷ்வாவை ஏண்டா  சொல்ல மாட்ட!! நீ… செய்ய வேண்டிய நான் பண்றேன்ல நீ… பேசுவ. 
“போய் நீயே அந்த மூட்டைய தூக்கு என்றவன், வாம்ம கயல்… நாம அப்பிடிக்கா உக்காரலாம்  என்ற அரவிந்தனை,  விஷ்வா பார்த்து சிரித்தவன்  நீ… கடலை போட!! இது சாக்காடா??”
“துளசி சொன்னா கேளும்மா, இந்த சீர் தட்டை அம்மா கிட்ட குடு” என மங்கை கெஞ்சி கொண்டு இருந்தார்.” அண்ணி.. இவகிட்ட இப்படி பேசுனா ஆகாது, நீங்க குடுங்க.. என கோதை கையை நீட்டினார்.
“அப்ப நா… சொல்லுறத கேக்க மாட்டீங்கதான” என்றவள்  அமர்ந்து கொண்டாள். சிவராமன் தான் சமாதானத்திற்கு வந்தார். துளசிம்மா… இன்னிக்கு போனா தான் உங்க பார்ட்டிக்கு எல்லாரையும் இன்வைட் பண்ண முடியும். அண்ணனும் எத்தனை நாளை இங்கையும் அங்கையும் அலைய முடியும் பாவம் தான 
“அப்ப அவனுக்கு கல்யாணம் பண்ணிட்டு நீங்க இங்கையே இருந்திடுங்க” என்றவளை பார்த்தவர், ஏம்மா?? பொண்ண என்ன கடையில செஞ்சா விக்குறாங்க!! போன உடனே வாங்கிட்டு வற்ரதுக்கு. அதுவும் இல்லாம மூனு நாள்ல  பாட்டிக்கும், கயலுக்கும் செக் அப் இருக்குல… அதைய முடிச்சுட்டு நீங்க அங்க வர போறீங்க, அதுக்கு எதுக்கு இவ்வளவு அடம்?? என்று அவளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
“கோதை இருவரையும் பார்த்தவர், உள்ளே இருந்து கயிறையும் புடவையையும் எடுத்து வந்தவர் சிவராமனிடம் தர, எதுக்குமா?? என அப்பாவியாக கேட்டார் சிவராமன்.
இதோ… இந்த கயிறு இருக்குல… இத அந்த உத்திரத்துல கட்டி கீழ இந்த புடவைய  சேத்து கட்டி… என்று கோதை கதை சொல்ல ஆரம்பித்தார். சிவராமன் அதை முழு கவனத்துடன் கேட்டிருந்தார். பக்கத்தில் நின்று இருந்த மற்றவர்களுக்கு தான் சிரிப்பினை அடக்க முடியவில்லை.
அனைவரும் சிரிப்பதை பார்த்தவர், எதுக்கு சிரிக்குறாங்க?? என புரியாமல் விழித்தார்.  மங்கை தான் “அண்ணா கோதை உங்கள தொட்டில் கட்டி துளசிய தூங்க வைக்க சொல்லுறா” அது புரியாம நீங்க… என சிரிக்க, அசடு வழிந்து நின்றார் சிவராமன்.
“விஷ்வா, துளசியின் கல்யாண விபரம் இன்னும் அவர்களின் தொழில் வட்டாரத்தில் சொல்ல பட வில்லை. அங்கு சொந்தங்கள் என எதுவும் இல்லாததால், வினய், சிவராமன் மற்றும் துளசியின் நண்பர்களுக்காக சின்னதாக   வெல்கம் பார்ட்டி மட்டும் ஏற்பாடு செய்து இருந்தார்கள் மங்களூரில்”
கோதையும் இங்கு வந்து இருபத்தைந்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் ஊருக்கு போக ஏற்பாடு செய்யவும் தான் இந்த பிடிவாதம் துளசியிடம்.
“சரி  நேரம் ஆச்சு கிளம்புங்க. ராகு காலம் ஆரம்பிக்க முன்ன போகனும் என பார்வதி கூறினார்” 
“வினய், பாட்டி ராகு காலம் தான் நம்ம கூடவே இருக்குதுல, அப்பறம் எப்படி அது ஆரம்பிக்க?? என்றவனை துளசி அடிக்க துரத்தியவள், யாரு ராகு காலம்?? இருடா… உனக்கு  தான் இப்ப எமகண்டம், என்றபடி  வினய்யை அடிக்க ஓடினாள். 
அவர்களை பார்த்து இருந்த சுபாவுக்கு தான் “ஏன் துளசி இப்படி அச்சாணியமா பேசுறா?” என்று வருத்தம் ஆனது.
“காலையில் இருந்து அவளும் வினய் ஏதாவது சொல்லுவான் என்று தான் அவன் முகத்தையே பார்கிறாள். ஆனால் அவன் இவள் பக்கம் கூட திரும்பவில்லை.” 
“இன்னும் வினய் விரும்புவதை சுபாவிடம் சொல்லவில்லை. துளசியின் திருமண கலாட்டாகளே இப்பொழுதுதான் முடிவுக்கு வந்த நிலையில், தானும் சுபாவை விரும்புவதாக சொன்னால் என்ன ஆகுமோ??” என்று நினைத்தவன் அவளை பார்வையால் மட்டும் தொடர செய்தான்.
“துளசி கேட்டதிற்கும் இப்போதைக்கு இந்த பேச்சு வேண்டாம் என்று விட்டான்.” தன்னை மீறி எந்த பேச்சும் பேச கூடாது என்று சொன்னதால் விஷ்வாவிடமும் சொல்ல முடியவில்லை அவளால்.
துளசியின் திருமணத்திற்க்கு முன் நன்றாக பேசியவன் இப்போது தன்னை திரும்பியும் பார்க்காதது அவளுக்கு வருத்தமாகதான் இருந்தது.  
வினய், துளசியை இரண்டு முறை சுற்றவிட்டவன் மூன்றாவது சுற்றில் பிடிபட்டான்.  “நா… உனக்கு ராகு காலாமா என்று அடிக்க ஆரம்பித்தவள் பேச்சு அழுகையாக மாறியது”
“ஐ மிஸ்யூண்ணா….” என அவனை கட்டிக் கொண்டு அழுதவளை என்ன சொல்லி சமாதானம் செய்ய. வினயின் கண்களிலும் கண்ணீர்… அனைவரும் அவர்களையே பார்த்து இருக்க, பிரிவின் வேதனை உணர்ந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்ய முயவில்லை.
வினயின் அணைப்பில்   இருந்தவளின் உச்சியில் முத்தம் வைத்தவன் “என் குட்டிமா ரொம்ப சமத்து… அண்ணா பக்கத்துல இல்லைனாலும் அவ எல்லாதையும் சமாளிப்பா. அப்படிதான” என அவளின் முகம் பார்க்க, அவன் தோளின் மீது முகம் பதித்திருந்தவள்   நிமிர்ந்து பார்கமலேயே ஆம்… என்பதாய் தலை அசைத்தாள்.
“நீ… இப்படி இருந்தா, அம்மா அப்பாவை யார் பாப்பாங்க??” என்ற கேள்வியில் சுதாரித்தவள் கண்ணீரை துடைத்து சிரிப்பை முகம் முழுதும் படர விட்டாள்.
இம்… “இப்ப தான் எங்க துளசி” என்றவனுக்கு பதிலாக, ம்ஹூகூம்… எங்க துளசி என்று பின்னால் இருந்த   சிறியவர்கள் அனைவரும் குரல் கொடுத்தனர்.
இடம் மீண்டும் கலகலப்பாக… கோதையும், சிவராமனும் பின்னால் அமர, அரவிந்தன் டிரைவர் சீட்டிலும் அவன் பக்கத்தில் வினயும் அமர்ந்தனர்.
அனைவரும்  கை அசைக்க “காரின் மிரர் வியூவில் தெரிந்த சுபாவின் பிம்பத்தை கண்களில் நிறுத்தினான் வினய்”
    
“தங்கச்சிய விட்டு போற வேதனைய விட, தங்கமானவள விட்டுபோற  வேதனைதான் அதிகம் போலவே… நான் வேணுன்னா வண்டி ரிப்பேருன்னு இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணவா” அரவிந்தன் என கேட்டதும் அதிர்ந்து போய் பார்த்தான் வினய்!!  
அண்ணா!! என்றவனுக்கு வார்த்தையே வரவில்லை. ஸ்ஸ்… பின்னாடி என அரவிந்தன் கோதையை கண் காட்ட முகத்தின் அதிர்ச்சியை நொடியில் மாற்றி கொண்டான் வினய்.
“அவ்வளவு அப்பட்டமாவா அவள பாத்தோம்??” என்ற கேள்வி கண்களில் இருக்க அரவிந்தனை பார்த்தான் வினய். அரவிந்தன் நான் இருக்கேன்டா என்றதும் என்ன அரவிந்த்?? என கேட்டார் கோதை. 
“அதும்மா ஏர்போர்ட்டுக்கு லேட் ஆகுமான்னு வினய் கேட்டான், அதுக்குதான் நான் இருக்கேன் கரெக்ட் டைம்க்கு போயிடலாம்னு” பதில் சொன்னேன் என்றவன் பெருமூச்சைவிட வாயிக்குள்ளேயே சிரித்தான் வினய்.  
“தி கேட் வே ஹோட்டல்”  லைட் ஆரஞ்ச வண்ணத்தில் நேவி புளூ கற்கள் பதித்த கட் வெர்க் டிசைனர் சேலையின் தலைப்பு காற்றில் படபடக்க, முடியை ஃபிரி ஹேர் ஆக விட்டு இருக்க, கழுத்தில் விஷ்வா அணிவித்த தாலி கொடி, காதில் நீளமான புளூ கலர் ரெயின் டிராப், கைகளில் அதே புளூ, ஆரஞ்ச் கலரில் முகப்பு வைத்த வளையல் மட்டும் போட்டு நின்றவள் பக்கத்தில், அதோ நேவி புளூ கோட் சூட்டுடன்   இவளுக்கு நான் மட்டுமே பொருத்தமானவன் என்று அனைவரும் சொல்லும் தோரணையுடன் நின்று இருந்தான் விஷ்வா.
இதமான மாலை வேளை காற்றில் சற்று குளுமை கூடுதலாகவே இருந்தது. இருவரின் மனதிலும் அதனைவிட கூடுதல் குளுமை. “முதன் முதலாக விஷ்வாவை பார்த்த நினைப்பில்  துளசியும், துளசியை பார்த்த பொழுதை விஷ்வாவும் நினைத்த படி இருக்க அந்த நினைவின் தாக்கம் முகத்திலும் பிரதிபலித்தது” 
“இன்று அவர்களுக்கான வெல்கம் பார்ட்டி” சிவராமன், வினயின் தொழில் முறை நண்பர்கள் உடன் துளசியின் கல்லூரி தோழர்கள் அனைவரும் இருக்க கலகலப்புக்கு பஞ்சம் இல்லாம் சென்றது அந்த மாலை பொழுது….
இன்னும்… “ஸ்ரீ அத்தான் வரலையா அத்தான்?? இப்பவே நேரம் ஆச்சு பாருங்க. இதுக்கு தான் சொன்னேன்… அவங்கள நம்ம கூட பிளைட்ல அழைச்சுகலாம்னு. நீங்க தான்.. வேணாம் பாட்டிக்கும்,  அண்ணிக்கும் ஆகாது டிரையின் வே வரட்டும்னு. இப்ப பாருங்க அண்ணி, தாத்தா, பாட்டிய யார்கிட்டையும் காட்ட முடியலை” என்று சொல்லும் போதே ஸ்ரீயின் அழைப்பு வந்தது .
விஷ்வா, அர்வி… என கூப்பிட்டு பாட்டி, தாத்தா என்றவன் அரவிந்தனை அவர்களை அழைத்துவர அனுப்பி வைத்தான். 
பார்ட்டி முடிந்து கூட்டம் கெஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. துளசி தோழிகள் நடுவில் இருக்க ஆரம்பித்து வைத்தாள் திவ்யா. “துளசி நாங்க இல்லாம கல்யாணம்  பண்ணிக்கிட்ட, சரி மன்னிப்போம்…. ஆனா??” என்றவளை  மற்றொருவள் வாயை மூட ம்..ம்..ம்.. என முனக ஆரம்பித்தாள் திவ்யா.
“ஏய்… விடுப்பா” காட்டுனாலும் பாக்க அவளுக்கு தைரியம் இல்லை!! என திவ்யா ஆரம்பித்ததை துளசி முடித்து வைத்தாள். ச்சீசீ…  வெக்கம் கெட்ட ஜென்மங்களா… அவங்க வீட்டு ஆளுங்க கேட்ட!!?? ஹூகூம் காட்ட மாட்டோம்… என இருவரும் ஒன்றாக குரல் கொடுத்து ஹைபை கொடுக்க, தோழிகள் இருவரையும் ஒருவழி ஆக்கி விட்டனர் மற்ற அனைவரும். 
“கயல், அசதியில் பக்கத்தில் இருந்த சேரில் அமர, துளசி தோழிகளிடம் இருந்தாலும் அவளின் கவனம் முழுவதும் கயல் இடம் இருந்தது. சட்டென.. எழுந்தவள் கயலிடம் வந்தாள். அண்ணி என்ன பண்ணுது?? குடிக்க ஏதாவது கொண்டு வரவா என்றவள்… சென்று எலுமிச்சை ஜூஸ் ஒன்றை எடுத்து வந்தவள் அவளின் அருகினில் அமர்ந்து கொடுத்தாள். ஐயோ…!! நீ… போ துளசி அங்க பாரு… பசங்க எல்லாம் தனியா இருக்காங்க…” கயல் கூறினாள். 
“துளசி அனைவரையும் கை தட்டி அழைத்தவள், கயலுக்கு அனைவரையும் அறிமுகம் செய்ய… சிறிது நேரத்தில் கயலை மட்டும் இல்லை சுபா, ராதா என அனைவரையும் சேர்த்து கொண்டு கூட்டமே கலகலத்தது.

Advertisement