Advertisement

“அத்தை என்ன சமையல்??” என கேட்ட படியே சமையல் அறைக்குள்  புகுந்தாள் துளசி. அண்ணி.. இப்பதான காலை சாப்பாடு ஆச்சு என வெளியில் டைனிங் டேபிளில் இருந்து ராதா கேட்க, துளசி அது இப்ப இல்ல, காலைல  பத்து மணிக்கு இப்ப பதினொன்னு என்று ராகமாக இழுத்தாள் துளசி.  
நீங்க சொல்லுங்க, அவளுக்கு பொறாமை என கழுத்தை வெட்டினாள் துளசி.  ஆமா.. உங்க அத்தைங்க சமைக்குறதுக்கு நா பொறாமை பட்டுட்டாலும் ஊர்ந்து போற ஆமை கூட திரும்பி வேகமா வந்து என்னைய அடிச்சிட்டு போகும்.
ஒருத்தருக்காவது வெரைட்டியா பண்ண தெரியுதா?? எப்ப பாரு இட்லி, சட்னி, சாம்பார். சாதம்னு. ஒரு பீட்சா, பர்கர், பட்டர் கிரேவி அப்படின்னு பண்ணுனா எவ்வளவு நல்லா இருக்கும்!! என கனவில் மிதந்தாள் ராதா. கயல், சுபா அவளின் வாயையே பார்த்து இருக்க, இதை எல்லாம் நீ செய்வியா!!? மீனா  ஆச்சர்யமாக கேட்க, ஓ.. செய்வேனே சாப்பிட குடுத்தா டேஸ்ட் செய்வேன்.
“மீனா அவளின் தலையில் குட்டியவர், ஒரு வேலை செய்யறது இல்லை. ஆனா இந்த பேச்சுக்கு மட்டும் குறைச்சல் இல்ல, பேச்ச குறை பாட்டி வந்தா என்னைய தான் திட்டு வாங்க.     
போங்க நாளைக்கு விசேசத்துக்கு என்ன வேணும்னு பாத்து எடுத்து வையுங்க, அப்பறம் அது இல்ல இது இல்லன்னு என்னைய கேட்க கூடாது. 
இந்தா கயல் இந்த ஜுஸ குடிச்சிட்டு போயி ரெஸ்ட் எடு. வயித்து புள்ளகாரி கொஞ்சமாவது பெறுப்பு இருக்கா  என அனைவரையும் இடத்தை விட்டு போக வைத்தவர் மங்கைக்கும், துளசிக்கும் தனிமையை தந்தார். 
என்ன மீனா?? சத்தம் பலமா இருக்கு என குழலி கேட்க, அது ஒன்னும் இல்ல அக்கா வழக்கம் போல தான் அண்ணி, அக்காகிட்ட பேசல. துளசி சமாதானம் பண்ண வந்தா, நம்ம சின்னது  பேச விடாம பேசிச்சா, அது தான் தொறத்தி விட்டேன் என்றவர் குழலியுடன் காய் நறுக்கும் சாக்கில் வெளியேயே அமர்ந்து கொண்டார் மீனா.
“அத்தை என மங்கையின் பின்னிருந்து கட்டிக்கொண்டவளுக்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை மங்கை. அவரின் கட்டுபாட்டையும் தாண்டி கண்களில் இருந்து நீர் வர” துளசிக்கு தான் என்ன செய்ய என தெரியவில்லை??
“அத்தை என்ன இது??” என்றவள் தண்ணீரை மங்கைக்கு தர,  அதை குடித்த பின்தான் சிறிது சமன் பட்டது அவரின் மனம்.  தன்னையே நினைத்து தலையில் தட்டிக்கொண்டவரை, என்ன அத்தை சின்ன குழந்தை மாதிரி என கேட்டவளை பார்த்து மங்கை சிரித்தார்.
“நா இல்ல.. உங்க அம்மாதான் இன்னும் குழந்தையாவே இருக்கா. நா கல்யாணம் முடிஞ்சி இந்த வீட்டுக்கு வரும் போது கோதைக்கு ஒரு பதினாரு வயசு இருக்கும். ஆனா பாத்தா அப்படி தெரியாது பூஞ்சை உடம்பு அமைதியா என பின்னாடியே சுத்திகிட்டு  நா என்ன சொன்னாலும் அண்ணி சொன்ன சரி அப்படின்ற பேச்சுக்கு மறு பேச்சு இருக்காது அவ கிட்ட”
“அவ கல்யாணத்து மாப்பிள்ளை பாத்தப்ப கூட எனக்கு இப்படி வேணும் அப்படின்னு அவ எதையும் சொல்லல எங்க விருப்பத்துக்கே விட்டுடா. அப்படிதான் இருந்தாரு உங்க அப்பாவும் அந்த பிரச்சனை நடக்குற வரைக்கும்.” 
                                                                                                                                                                                                                                            
எனக்கு, சிவராமன் அண்ணாவுக்கு கோபம் வரும் அப்படின்றதே அப்பதான் தெரியும். கோவம்ன்னா என்னன்னு தெரியாத மனுசன் கோவபட்டு நிக்குறாரு. அந்த நேரம்  இவமன்னிப்ப கேளுங்கன்னு பிடிவாதமா இருக்குறா. எனக்கு அப்ப தெரிஞ்சது எல்லாம் ஒன்னுதான் கோதை இங்க இருந்தா இந்த பிரிவு நிரந்தரம் ஆகிடும் இல்லைனா ஆக்கிடுவாங்க. 
“இதுல பாதிப்பு கோதைக்கும், அண்ணாவுக்கு தான்னாலும் அதிகம் பதிக்க பட போறது என்னமோ உருவமே இல்லாத அவ வயித்துல இருக்குற குழந்தை தான். நா பட்ட வேதனை அந்த பிஞ்சுக்கு வேண்டாம் அப்படின்னு நினைச்சு தான் அவளை அண்ணாகூட போக வச்சேன்.”
“ஏதோ, கொஞ்ச நாள் கோபம் இருக்கும்.  அப்பறம் நாம போய் சமாதானம் பண்ணிடலாம் அப்படின்னு நான் நினைச்சது இத்தனை வருசம் தொடரும் அப்படின்னு எதிர் பாக்கலை.” 
“அதுலையும் ஒரு நல்லது அந்த குழந்தை இல்லாம போனது தான்” இருந்து இருந்தா கோதை எங்கள விட்டு போனதுக்கு காரணமும் அது தரிச்ச நேரம் அப்படின்னு சொல்லி அதோட வாழ்கை முழுசும் நரகம் ஆக்கி இருப்பாங்க. 
“இப்ப என்ன அவ என்கிட்ட பேசல அவ்வளவு தான” அவ பேசலைன்னா என நா பேசுறேன். அவ தான் இந்த வீட்டு நிம்மதி.  ஒரு வேளை அண்ணா அவளை நல்லா பாத்துக்காமா போயிருந்த அடுத்த நிமிசம் அவளை நாங்க இங்க அழைச்சுகிட்டு வந்து இருப்போம்., 
ஆனா.. அதுக்கு வேலையே இல்லாமா பண்ணிட்டார் உங்க அப்பா. எங்கள பத்தின நினைவே அவளுக்கு வரலையே இதுவே எனக்கு போதும் துளசி.  அவ நிம்மதி தான் எனக்கு முக்கியம் என்றவர் வேகமாக அறையை விட்டு வெளியேறினார். அவர் போகும் போது கவனிக்காமல் விட்டது திருப்பத்தில் நின்று இருந்த கோதையை.
“மங்கை பேச ஆரம்பிக்கும் போதே வந்துவிட்டார் கோதை. பார்வதிக்கு பழசாரு எடுக்க வந்தவர் மங்கையின் பேச்சில் அப்படியே நின்று விட்டார். மங்கை போனதும் உள்ளே வந்தவரை துளசி கேள்வியாக பார்க்க அவளை தவிர்த்தவர் பார்வதிக்கு வேண்டியதை எடுத்து கொண்டு போய்விட்டார்.”
காலை நேர பரபரப்பில் அனைவரும் இருக்க வாசலில் கோலம் போடுவதில் சுபா முனைப்பாக இருந்தாள். எதிரில் தன் மேல் ஒருவன் வைத்த கண்ணை திருப்பி எடுக்க தோன்றாமல் இருப்பதை பார்க்க வில்லை.
காலையில் கோலம் போட ஆரம்பிக்கும் போதே வந்து விட்டான் வினய். கையில் காப்பியுடன்  அவளையே தன்னை மறந்து பார்த்து கொண்டு இருந்தவன் கவனத்தை கலைத்தான் அரவிந்த். 
“என்னடா தம்பி??” பார்வை எல்லாம் பலமா இருக்கு. விழுங்கிய எச்சில் புரையேற அவனை பார்த்தான் வினய். பாக்குறதுதான் பாக்குற இப்பிடி வைக்கபோர மாடு பாக்குற மாதிரியாடா பாப்ப. கொஞ்சம் இதமா பாத்தா தான பொண்ணும் உன்னைய பாக்கும். நீ பாக்குறத பாத்தா நானே தலை தெரிக்க ஓடிடுவேன். பாவம் அது சின்ன பொண்ணுடா!! என்றவனை பார்தவனுக்கு புரியவில்லை அவன் தனக்கு சாதகமாக பேசுகிறானா இல்லை திட்டுகிறானா என்று.
 
அரவிந்தன், இவங்க  வீட்டு ஆளுங்களுக்கு சைட் அடிக்கவோ இல்லைனா லவ் புரபோஸ் பண்ணவே தெரியதுடா. நாம தெரிய வக்கிறதுகுள்ள நம்ம புள்ளை நம்மல அப்பா.. அப்பான்னு கூப்பிட்டு வந்துரும் என்றவன் தலையில் நச் சென்ற குட்டு விழுந்தது.
“யாருடா அது என் பொண்டாட்டிய விட உரிமையா குட்டுறது?” என திரும்பி பார்க்க நின்றிருந்தது விஷ்வா. அவனை பார்த்தும் முறைத்தவன் நீயாடா?? என்ற பார்வை பார்க்கவும் தவறவில்லை. டேய் அங்க கயல் கூப்பிட்டு இருக்கா இங்க என்ன கதை?? விஷ்வா கேட்க.,  
“அரவிந்த், வினயிடம் கை காட்டி  உனக்கு இந்த புளிப்பு முட்டாய் தான் வேணுமா?? கேட்டவன், சரி எனக்கும் துணைக்கு ஆள் வேணும் தானா என்று வினயின் முதுகில் பட்டென வைத்தவன் வினயின் அண்ணா என்ற சத்ததில் ஓடியே விட்டான் அரவிந்த்.”
“வினயின் சத்ததில் தான் அப்படி ஒருவன் இருப்பதையே பார்த்தாள் சுபா” வினய்க்கு இருந்த வலியில் இவளை பாக்க வைக்க நான் இன்னும் எத்தனை தடவ அடி வாங்கனும் என கணக்கிட்ட படியே உள்ளே போனான் வினய்.
 
“பச்சை பட்டு உடுத்தி மரகதமும், வைரமும் இணைந்த ஆரம் அவளின் சந்தன நிறத்துடன் போட்டி போட தலையில் சூடிய ஜாதி மல்லி தோளில் வழிந்து  விஷ்வாவின் பார்வையை தடை செய்ய  துளசியின் அழகில் சொக்கி நின்றான் விஷ்வா”
“துளசியின் பச்சை பட்டுக்கு இணையாக பச்சை கரை வைத்த பட்டு வேட்டி சட்டை அலங்கரிக்க கையில் வைர காப்பு மின்ன நின்று இருந்தவனை பார்த்தவள் ஐயோ அத்தான்!! சேம் பின்ச்  ஸ்வீட் குடுங்க என்றவள், இதழில் இனிப்பினை விஷ்வா தர இது இல்லை வெட்கம் போட்டி போட தலை குனிந்து நின்றவளை பார்வையாலே தின்று கொண்டு இருந்தான் விஷ்வா 
“துளசி வாம்மா” என்ற மங்கையின் குரலுக்கு கீழே வந்தவள், அவரின் அறைக்கு போக கையில் இருந்த வளையலை துளசிக்கு தந்தார் மங்கை. அத்தை இங்க பாருங்க இத்தனை இருக்கு போட இடம் இல்லை என கையை காட்ட, கோதை வந்தவர் துளசியின் கைகளில் இருந்த இரண்டு செட் வளையலை கலட்டி விட்டு மங்கையின் கைகளில் இருந்த வளையலை வாங்கி போட்டு விட நடப்பது கனவா என்ற நின்று  இருந்தனர் இருவரும்.  
கோதை வெளியே போகவும் தான் உணர்வு வந்தது இருவருக்கும். ஒருவரை மற்றவர் பார்க்க துளசி தான் உதடு பிதுக்கி தோள் குலுக்கினாள்.
“மனையில் துளசி அமர்ந்து இருக்க அருகினில் விஷ்வா. பதினொரு பவுன்தாலி சரடில் அவர்களின் குடும்ப தாலி கோர்த்து இருக்க மங்கை அதை கைகளில் எடுத்தவர் அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்க சென்றார். யாரும் இல்லாமல் திருமணம் முடிந்ததால் இன்று இந்த விழவை கல்யாணம் போலவே செய்தனர். மறு தாலி கட்டும் பழக்கம் இருந்ததால் திருமணத்திற்கு உண்டான சம்பிரதாயங்கள் செய்யபட்டது அங்கு” 
மங்கை அட்சதை தட்டை கொண்டு வந்தவர் “எப்படி தாலி எடுத்து கொடுக்க கோதையிடம் சொல்லுவது” என தயங்கி நின்றார். கோதை, மங்கையின் அருகினில் வந்தவர் “அண்ணி தாலி எடுத்துகொடுங்க நல்ல நேரம் போகுது” என்றிட அனைவருக்குமே அதிர்ச்சி தான். அனைவரும் கோதை மற்றும் மங்கையை பார்த்து இருக்க, கோதை தான் அட்சதையின் மேல் இருந்த தாலியை எடுத்து மங்கையின் கைகளில் தந்தார்.
“மங்கை சந்தோசம் பொங்க பார்வதி மற்றும் ராஜேந்திரனை பார்க்க அவர்கள் சம்மதமாக தலை அசைத்தனர். மங்கை தாலியை விஷ்வாவின் கைகளில் தர அன்று பார்த்ததை போலவே இன்றும் அவளின் சம்மத்துக்காக அவளின் முகம் பார்த்து நின்றான் விஷ்வா.”
“அன்றை போலவே இன்றும் அதிர்ச்சியே துளசிக்கு இது ஆனந்த அதிர்ச்சி. விஷ்வா பார்ப்பதை உணர்ந்தவள், இப்போது விஷ்வா முகம் பார்த்து சிரிக்க தாலியை முழு மனதுடன் அவளுக்கு அணிவித்தான் விஷ்வா.”
                                      விஷ்வ துளசி தொடர்வாள்……………..

Advertisement