Advertisement

                  ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 14
“விடியல் புது சுகத்தை தர விஷ்வா கண் விழித்தவன் பார்த்து குளித்து தயாராகி இருந்த துளசியை தான். என்ன அதுகுள்ள குளியல்?? என்றவன் கண்களில் அத்தனை விசமம்.”
அதை கவனிக்காதவள் “இன்னிக்கு நான் தான் விளக்கு ஏத்தனுமா” இப்ப தான் அண்ணி சொன்னாங்க, நீங்க வேகமா குளிச்சுட்டு வாங்க என்றவள் போக முற்பட அவளாள் நினைக்க மட்டுமே முடிந்தது. 
“எந்த நொடி அவனின் கைக்குள் வந்தாள்” என்று தெரியவில்லை. இப்போது அவனின் அணைப்பினில் இருந்தாள் துளசி. என்ன விஷ்வா இது??  நேரம் ஆச்சு, கீழ எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க விடுங்க! என்றவளின் பேச்சுக்கும் செயலுக்கும் சம்பத்தமே இல்லை. 
“நா எங்கடி உன்ன பிடிச்சு இருக்கேன்!!” என்றவன் வார்த்தையில் துளசி விஷ்வாவை பார்க்க, அவளின் அணைப்பில் தான் இவன் இருந்தான் இப்போது. யூ பிராடு என்று துளசி அடிக்க ஆரம்பித்தாள். “அவளை இறுக பற்றியவன் முகத்தை கைகளில் ஏந்தி அவளின் கண்களையே பார்த்து நின்றான் எதையோ யாசிப்பவன் போல.”
“என்ன அத்தான்??” என்றவளை உனக்கு பிடிச்சுதா துளசி என்றவனை அவள் ஆச்சர்யமாக பார்க்க. சொல்லுடி பிடிச்சதா உன் சம்மதம் இல்லாம என்றவன் பேச்சை பாதியில் நிறுத்தி இருந்தாள் துளசி.
“அவனின் அணைப்பு இறுக ஆரம்பிக்க, இப்ப சொல்லுங்க எனக்கு பிடிக்கலையா??” என்றவளின் நெற்றியில் மென்மையாக முத்தம் இட்டவன் போ.. நா குளிச்சுட்டு வர்றேன் என்றவன் அவளை விட்டு விலக “யோவ்.. என்ன சும்மா இருந்தவள உசிப்பேத்திட்டு  போன்னா??” என்றவளை என்னது யோவ்வா!! என வாய் திறந்து பார்த்திருந்தான் விஷ்வா.
“என்ன மாமா மார்னிங்க் ஷோ வேண்டாமா??” என்று கண்ணடித்தவளை வேணாண்டி, ரொம்ப நேரமா பொருமையா இருக்கேன் சும்மா தூண்டி விடாத உனக்கு தான் நல்லது இல்லை.. என்றவனை பார்த்தவறே இரண்டடி பின்னால் சென்றவள் ஆமா பாத்தேனே உங்க எருமையை, நேத்து தெடவே ரெண்டு மணி நேரம் யேசிச்சவரு தானே நீங்க!! என்றவள் பழிப்பு காட்ட, என்னடி சொன்ன?? என்றவன் அருகில் வரும் முன் கீழே சென்று விட்டால் துளசி
மேல வந்து தான ஆகனும்!! வா.. என்றவன் குரல் அவனுக்கே எதிர் ஒலிக்க சிரித்தவாரே குளிக்க சென்றான் விஷ்வா.
வேகமாக கீழே வர,  அவளின் வரவுக்காக அனைவரும் பூஜை அறையில் நின்று இருந்தனர். மங்கை,  துளசியை விளக்கினை ஏற்ற சொன்னவர், பிறகு அனைவருக்கும் ஏதாவது இனிப்பினை செய்ய சொல்ல, “என்ன அத்தை இன்னிக்கும் ஏதாவது விசேசமா??” என கேட்டாள் துளசி. 
இல்லம்மா இது உங்களுக்கு கல்யாணம் முடிஞ்ச மறு நாளே செய்ய வேண்டியது. அது தான் இன்னிக்கு நல்ல நாள் இல்லையா, பால் காய்ச்சி ஏதாவது ஸ்வீட் பண்ணு என்றார். 
துளசி பாலை காய்ச்சவும், இந்தா.. இதை சாமிக்கு வச்சிடு என்று ஒரு வெள்ளி சொம்பினை தந்தவர்,  துளசி அதை சாமியின் முன் வைத்து வர இது மாமா, அத்தைக்கு. இது கொண்டு போய் விஷ்வாக்கு கொடு.  டிரேயை வாங்கியவள் நேராக தாத்தா, பாட்டியின் அறைக்கு சென்று பாலை கொடுத்தவள் மாடிக்கு போக படியேறினாள். அதற்கு முன்னமே கீழே வந்து இருந்தான் விஷ்வா. 
அரவிந்தனும், விஷ்வாவும் ஏதோ பேசி கொண்டு இருக்க துளசி பாலினை கொடுக்க, அவளை பார்க்காமலேயே அதை எடுத்து கொண்டான். பார்த்த இவளுக்கு தான் எதோ மாதிரி ஆனது. சிறிது நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக வர வீட்டின் வழக்கமான பேச்சுகள்  ஆரம்பம் ஆனது. 
“துளசியின் முதல் சமையல்” என்பதால் அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து இருக்க அனைவருக்கும் துளசி பரிமாற ஆரம்பித்தாள். முதல் வாய் சாப்பிட்டதும் அனைவரும் நல்லா இருக்குமா என்று கைகளிள் இருந்த பணத்தினை தர வித்தியாசமாக பார்த்தாள் துளசி. 
“என்ன தாத்தா இது?? என விஸ்வநாதனிடம் கேட்க, முதல் முறையா சமைச்சி இருக்குற. இனி நீயும் இந்த வீட்டோட அன்ன பூரணி எப்பவும் உன் கைல லட்சுமி கடாக்ஷ்ம் இருக்கனும்” அதுக்கு தான் இது. பணம்மா பாத்தா இது வெறும் பணம் பாசமா பாத்தா இதுக்கு மதிப்பில்லை எனவும் அனைவரிடம் இருந்தும் பெற்றுக்கொண்டாள். 
விஷ்வா,  பார்வதி மட்டும் எதும் தரவில்லை.  பாட்டி என அவரிடம் கைகளை நீட்ட, போடி.. இத்துணூன்டு கேசரி தந்துட்டு வேணுமா இவளுக்கு என்று நொடித்து கொண்டார். அவர் கோபம் அவருக்கு. 
“நேற்றுதான் ஹாஸ்பிடலில் இருந்து வந்தார். அவருக்கு பத்திய சாப்பாடு தான். பார்வதி சொன்னதும்  துளசி முகத்தை வெடுக்கென  திருப்பியவள், நானாவது பாவம் பார்த்து கொஞ்சமா தந்தேன்,  மத்தவங்க அதை கூட உங்க கண்ணுல காட்டல பாத்துகுங்க. இதுல இருந்து என்ன தெரியுது உங்களுக்கு?? நான் தான் உங்கள கடைசிவர பாத்துகனும் என்று பத்திரம் காட்டி சிறு வெடியை கொளுத்தியவள் பேசிய படியே மாடி ஏறிவிட்டாள்.” 
“மங்கை, குழலி, மீனா மூவரும் திரு திரு வென முழிக்க, என்ன அக்கா தங்கச்சிங்க அப்படி பாக்குறீங்க??” போங்க போய் வேலைய பாருங்க. வீட்டு ஆளுங்க வேலைக்கு போகையில அதைய பாப்பாளுங்கள, அதைய விட்டுட்டு நேத்து வந்தவளுக்கு பயந்து என்னைய பாக்குறாளூங்க என ஆரம்பிக்க, விட்டால் போதும் என கிளம்பிவிட்டனர் சமையல் அறைக்கு. 
அறைக்கு வந்தவள்  தலை சீவிய படி இருந்தவனை முறைத்து பார்க்க, “என்ன பட்டு??” என கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தை பார்த்து கேட்க, பதில் பேசாமல் அவனையே முறைத்த படி துளசி இருக்க, அவளின் அருகினில் விஷ்வா வர இத்தனை நேரம் அவனின் பார்வையை எதிர் கொண்டவளாள் இப்போது பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்து நின்றாள்.  
“என்ன கிஃப்ட் வேணாமா??” என்றவனை மேல் பார்வை பார்க்க, என்னைய பாத்தே கெல்லாதடி என வார்த்தை வராமல் கண்கள் கதை  பேச,  கண்கள் பேசும் கதைக்கு இதழ்கள் வார்த்தைகளை எழுதியது. கொடுத்த பரிசு போதாமல் சண்டை வளர்க்க,  இவர்களின் மௌன பாஷையை கலைத்து விஷ்வாவின் ஃபோன்.
ஃபோனில் விஷ்வா பேச, அவனால் ஏற்பட்ட வெட்க சிவப்பை போக்க குளியல் அறைக்குள் சென்றாள் துளசி. கண்ணாடியில் முகம் பார்த்தவளுக்கு நம்பவே முடியவில்லை. இது தான்.. தான் என்று. “இரண்டு நாட்களுக்கு முன் வரை அவனை ஏற்பதில் இருந்த தயக்கம் என்ன?? இப்போது அவனுடன் கலந்த மாயம் என்ன??” 
“தாலி கட்டிய விதத்தை ஏற்க முடியாமல் தவித்தவள், அவனை ஏற்பதில் தயக்கம் இல்லையே. தன் மனம் அவளுக்கே புரிய ஆரம்பிக்க வாழ்ந்து பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் தான்   இரவு அறைக்குள் நுழைந்தாள். அங்கு விஷ்வா இல்லாத்து ஏமாற்றமாக இருந்தாலும், அவன் முன் நின்றதும் அவனின் வாசம் தன்னுள் இறங்குவதை உணர்ந்ததால் துளசி.”  
அதனால் ஏற்பட்ட படபடப்பை அடக்கவே அவனிடம் சகஜமாக பேசுவது போல் சென்று கட்டிலில் அமர்ந்தது. இல்லை என்றால் அவளின் கை கால் நடுக்கம் அவனுக்கு தெரிந்து விடும் அல்லவா. நேற்றைய சிந்தனையில் இருந்தவளை சுபாவின் குரல் கலைத்தது.
“அண்ணி பாட்டி கூப்பிட்டாங்க” என்றவளின் குரலுக்கு  “இதோ வந்துட்டேன் சுபா” என்றவள் அவளுடன் பேசிய படி பார்வதியின் அறைக்குள் நுழைந்தாள்.
பார்வதியின் அறையில் பெண்கள் அனைவரும் இருக்க, சில நகை பெட்டிகள் கட்டின் மேல் பரப்பட்டு இருந்தது. பாட்டி என அழைத்த படி வந்தவள் முன் நின்று இருந்த மீனாவின் மேல் சாய்ந்து கொண்டாள்.
 
“உனக்கு இடுப்பே இல்லையா?? எப்பபாரு பக்கத்துல யார் இருந்தாலும் அவங்க மேல சாஞ்சு நிக்க வேண்டியது!! என கடிந்த கோதையிடம் “என் அத்தை நான் சாயுறேன், என்னமோ!! உங்க மருமகன் மேல சாஞ்ச மாதிரி என்ன கோபம் வருது” என்றவளை வாயிலே இரண்டு போட கை பரபரத்தாலும் இருக்கும் இடம் கொண்டு அவளை முறைக்க மட்டுமே செய்ய முடிந்தது கோதையால். அவளின் பேச்சின் அர்த்தம் புரியாமல் பேச கேட்ட அனைவருக்கும் சிரிப்பு தான் வந்தது. 
விடு கோதை, அவளை எதுவும் சொல்லாத. என்ற மங்கையின் குரலுக்கு கோதை அமைதியை பதிலாக தர அதை மனதில் குறித்து கொண்டாள் துளசி. அனைவரின் சந்தோசத்தையும் ஒற்றை வார்த்தையில் கலைக்க விரும்பாமல், என்ன பாட்டி இது?? 
அண்ணிக்கும், சுபாவுக்கும் நகை எடுத்தீங்கலா? என அவர்களை பேச விடாமல் இருந்த நகைகளை எடுத்து கயலுக்கும், சுபாவுக்கும் வைத்து அழகு பார்க்க பார்த்த அனைவரின் கண்களிலும்  பெருமை வழிந்தது. 
ஏன் பாட்டி, எல்லாம் இவ்வளவு பெரிசா இருக்கு நம்ம ராதா எப்படி போடுவா?? அவளுக்கு லைட் வெயிட் தான பிடிக்கும், என்றவள் அவளையும் உட்கார வைத்து கையிள் இருந்ததை போட்டு பார்த்தாள். பார்வதி  இது எல்லாம் உனக்குதான் என்றதும் ஐயோ!! என்றாள் துளசி. 
“இந்த விளையாட்டுக்கு எல்லாம் நான் வரலை ஆளை விடுங்க. எத்தனை பெரிய நகை!! என கண்களை விரித்து மயக்கம் வருவது போல் கட்டிலில் அமர்ந்தாள்  துளசி. கட்டிலில் காலை ஆட்டிய படி இருந்தவளின் தலையை பார்வதி தடவியவர், இது எல்லாம் என் மாமியார் எனக்கு தந்தது. அத நா.. உனக்கு இப்போ தர்றேன். இது  தான் உனக்கு நான் தர்ற பரிசு என அவளின் கைகளில் வைக்க அதையே பார்த்து இருந்தவள்..
“அப்ப இதை நீங்க அத்தைகளுங்கு தான குடுக்கனும்!!” என பார்வதி முகம் பார்த்தாள். அவங்களுக்கு எடுத்து போக, இன்னும் வர போற மருமகளுகளுக்கும் எடுத்தது போக, இது உனக்கானது என்றவறிடம் எதுவும் பேசாமல் வாங்கியவள் திரும்பி அதை அப்படியே மங்கையின் கைகளிள் தந்தாள்.
மங்கை.. பதறியவர் “இது உன்னதுடா!! இதை நீ தான் வச்சுகனும்” என்று அவளிடமே தர., 
துளசி.. “அத்தை உங்களுக்கு கொடுத்த நகை எங்க??” 
மங்கை.. “அது அத்தைகிட்ட கொடுத்துட்டேனே”
 
“நீங்க மட்டும்  கஷ்டபடகூடாதுன்னு  உங்க அத்தை கிட்ட கொடுப்பீங்க, நா மட்டும் இதை வச்சி பாதுகாக்கனுமா” இப்ப இருந்து இது உங்க பொறுப்பு. ஒரு சின்ன பிள்ளை கிட்ட இவ்வளவு பெரிய வேலை கொடுத்தா அது செய்யுமான்னு தெரிய வேண்டாம்!! 
“என்ன தான் நீங்க எனக்கு மாமியாரோ?? எப்படி தான் உங்களுக்கு நா நல்லது கெட்டது செல்ல போறேனேனே தெரியலையே!!  என நெடித்தவளை பார்வதி கண்களில் நீர் வழிய நெட்டி முறித்தார்”
 
“பார்வதியின் கண்களை துடைத்தவள் பாட்டி என அவரை கட்டி கொண்டாள். பாட்டி, பேத்தி இருவரின் பார்வையும் இப்போது கோதையை குற்றம் சாட்டியது” பாரு உன் பொண்ணை இவளை பார்த்து கற்று கொள். மங்கைக்கு தற வேண்டிய மரியாதை என்ன என்று?? பார்வதி பார்வையும், நீங்க கண்டிப்பா அத்தை கிட்ட பேச வேண்டும் என்று துளசியின் பார்வையும்.
“அமைதியாக கோதை நின்று இருக்க, மங்கை தான் தன் கைகளில் இருந்த நகைகளை பார்வதியிடம் கொடுத்து அந்த இடம் விட்டு சென்றார்”

Advertisement