Advertisement

“வாசன் இன்னும் முழித்த படி ஃபோனை கையில் வைத்து நோண்டியவாரு இருந்தார். என்னப்பா இன்னுமா எடுக்கல??” என  பார்வதி கேட்க, வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டது. 
“வந்தது வினய் தான். வினய்.. மங்களூர் சென்ற உடனேயே மலேசியவிற்கு அனுப்பிய சரக்கில் சில குளறுபடிகள் நடந்து இருக்க, அவன் உடனேயே மலேசியா செல்ல வேண்டி இருந்தது. அதனால்.. அவனிடம் துளசியின் திருமண விபரம் இரண்டு நாட்களுக்கு பிறகே தெரிவிக்க பட்டது.”
ஆனாலும், அவனால் உடனடியாக இங்கு வர முடியவில்லை. துளசியிடம் பேசவும் முடியவில்லை “போனை எடுத்தாலே அழுக ஆரம்பிப்பவளை என்ன சொல்லி தேற்ற என புரியவில்லை?!”
 
“தன்னால் முடிந்தவரை வேகமாக வேலைகளை முடித்தவன், இன்று வந்துவிட்டான். பார்வதியை கட்டிக்கொண்டவன் முகத்தில் இறுக்கம் இருந்தாலும்,  பார்வதியிடம் பேசினான் “சாரி பாட்டி” உங்களுக்கு இப்ப எப்படி இருக்கு?? எனக் கேட்டான். 
“பார்வதி.. நல்லா இருக்குப்பா. நீ.. எப்படி இருக்குற??” என்ற கேள்விக்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை. “பாட்டி நான் துளசிகிட்ட பேசனும்.” 
பார்வதி அவனையே பார்க்க.. அதை கண்டு கொள்ளாதவன் “துளசி வா” என்று முன்னால் போக பின்னால் சென்றால் துளசி. படியேற கால் வைத்தவனை சிவராமனின் “வினய்” என்ற குரல் தடுத்து.
“அப்பா இதுக்கு மேல எதுவும் பேசாதீங்க?? போதும்.. இதுல துளசியேட முடிவு தான் எனக்கு முக்கியம். எதுவா இருந்தாலும் ஏத்துக்க முயற்சி பண்ணுங்க” என்று விஷ்வாவை பார்த்தவன், துளசியை அழைத்து கொண்டு சென்றுவிட்டான்.
“துளசி அமைதியாக இருக்க வினய்கே தெரிந்த்து அவளின் மாற்றம். அவளின் அமைதி என்னமோ செய்ய “துளசி”” என்று அழைத்தான். வினய்யை பார்த்தவள் மீண்டும் திரும்பி கொண்டாள்.
“உனக்கு இந்த கல்யணத்துல சம்மதமா துளசி?”  தெரியலைண்ணா?? என்றவளை,   வினய்.. இது பாட்டிக்காக  நடந்த  கல்யாணம் துளசி. இத நீ.. ஏத்துக்க ரெடியா??”
“வினயின் தோள் சாய்ந்தவள்,  எனக்குன்னு எந்த எதிர்பார்பும் இல்லைண்ணா. நீங்களே விஷ்வாவ பாத்து புடிச்சு எனக்கு நிச்சயம் பண்ணி இருந்த ஒத்து கிட்டு இருந்து இருப்பேன் இல்லையா?! இப்ப அந்த மாதிரி தான் நா.. யோசிக்குறேன். 
“முதல்ல அழுகையதான் வந்தது, ஒரு வேளை நான் அந்த இடத்துல இருந்து இருந்தாலும் தாத்தா கேட்ட உடனே சம்மதம் சொல்லி இருப்பேன் தான!! விஷ்வாவும் நல்லவருதான் அண்ணா” என்றவளை பார்தவனுக்கு புரிந்தது.  
அவளின் கையை தட்டிக்கொடுத்தவன், “எப்பவும் நா உனக்கு இருப்பேன் துளசி” என்றவன் எழுந்து விட்டான். விஷ்வாவை தங்கை ஏற்று கொண்டு விட்டாள் என்று இதற்கு மேல் பேச என்ன இருக்கு…..!?
“அண்ணா..” என துளசி அழைக்க, எனக்கும் இதை ஏத்துக்க கொஞ்சம் டைம் வேணும் துளசி என்றவன் வெளியேறி விட்டான். 
“வினய்.. துளசியை மேலே அழைத்து சென்றதும், தன் நிலையை எண்ணி கோபம் அதிகமாக தலையை கோதியவன் வேகமாக  தன் அறைக்கு சென்று விட்டான். துளசியின் கண்ணீர் முகம் அவனை ஏதோ செய்த்தது. வினய் வரும் வரை அமைதியாக இருந்தவள், அவன் வந்ததும் அழ ஆரம்பித்து இருந்தாள்.” 
“அறைக்கு சென்றவன் எதிரில் இருந்த சுவரில் கையை ஒங்கி குத்தினான். அவளை கொஞ்சம் தனியா என்கிட்ட விடுங்களேன்… எதுக்காக அவளை திரும்பதிரும்ப அழ விடுறீங்க??” என என்னமோ அவனின் எதிரில் அனைவரும் இருப்பதை போல் கத்த,  அது சற்று பெரிய அறை என்பதாலும் கீழே அனைவரும் துளசியை கவனிப்பதிலேயே இருந்ததால் இவனின் சத்தம்  அவர்களின் காதினில் விழவில்லை.
வினயின் அறை கதவு திறக்கும் சத்தம் கேட்டது. விஸ்வாவும் வெளியில் வர, வினயின் அறையில் இருந்து வந்தது வினய் மட்டுமே. அனைவரும் அவன் முகம் பார்த்து இருக்க விடு விடுவென வெளியே சென்று விட்டான்.
“துளசியின் விசும்பல் சத்தம் மட்டும் கேட்க… மங்கை, கோதை, குழலி அனைவரும் அவளை சமாதானம் செய்ய போக, வெளியே சென்றவன் பின்னால் ஸ்ரீயும், அரவிந்தனும் சென்றனர். 
“அரவிந்தன், விஷ்வாவை பார்தவன் பார்வை சொன்னது… இப்போதாவது துளசியை பார்” என்று பிறகு அவனும் தான் அன்றில் இருந்து இவனுடன் போராடுகிறான்  துளசியிடம் சென்று பேசு என விஷ்வா கேட்டால் தானோ.
“விஷ்வா தோட்டத்து வீட்டிற்கு போனது பிடிக்கவே இல்லை அரவிந்தனுக்கு.”  
“இப்ப எதுக்குடா இங்க வந்து இருக்குற??  அங்க  துளசி தனியா இருக்கு” 
“அவ தனியா இருந்து யோசிக்கட்டும் அர்வி. அவளை யாரும் தொந்தரவு பண்ணாதீங்க. அதனால தான் நா அவளை விட்டு விலகி இருக்குறேன், நா… இருந்தா அவ மைண்ட் இன்னும் டிஸ்டர்ப் ஆகும். அவ இந்த கல்யாணத்த புரிஞ்சி தெளிஞ்சு வரட்டும். அதுவும் இல்லாம எனக்கும் யோசிக்க டைம் வேணும் அதுக்கு எனக்கும் இந்த பிரிவு  தேவை”  
“அப்படி என்னத்தை தான்டா யோசிப்ப!!??” முதல்ல அவ வயச யோசிச்ச அது சரி. அதுக்கு பிறகு காரணமே சொல்லாமா ரெண்டு வருசம் இழுத்த, கேட்டா அவ மனச தெரிஞ்சுக்கனும் அப்படின்னு ஒரு மொக்க காரணம் சொன்ன.”
“விஷ்வா அவனை முறைக்க டேய்.. புடிச்ச பொண்ண கட்டம் கட்டி தூக்க தெரியல?? இவரு என்ன முறைக்காரு. சரி.. அதுவும் விடு இப்ப அந்த புள்ள ஊருக்கு வந்துச்சே அப்பையாவது பேசுனயானா!! அதுவும் இல்ல.. இப்ப தாலியும் கட்டிட, இன்னும் என்னடா உனக்கு யோசனை??” என அர்வி சலித்து போய் பேச…, 
“விஷ்வா அதெல்லாம் லவ் மச்சான்” உனக்கு புரியாது. அந்த காணா… மூணா… எனக்கு புரியவும் வேணாம், தெரியவும் வேணாம்.. இப்ப என் கூட வந்தா போதும், என்று அர்வி பிடிவாதம் செய்ய விஷ்வா வழக்கமான தன் கோபம் என்னும் ஆயுதம் எடுக்க, இப்போது அரவிந்தன் தான் இவனின் பேச்சுக்கு கட்டுபட வேண்டியதாகியது. விஷ்வா உடனான பேச்சினை நினைத்தபடி வந்தவன் கண்ணில் பட்டனர் ஸ்ரீயும், வினயும். 
“வினய்” என அரவிந்த் அழைக்க அவனை பார்க்காமல் வெட்ட வெளியை வெறிக்க பார்தவனை, அரவிந்தன் இழுக்க விடுங்க அண்ணா  என்றான்.  ஏதுக்கு அண்ணா இப்படி ஒரு அவசர கல்யாணம்?? என கேட்க கோபத்தில் கண்கள் கலங்க வார்த்தைகள் வராமல் திக்கி திக்கி பேசிய வினயை பார்க்கவே பரிதாபமாக இருந்தது அரவிந்தனுக்கு.
  
“வினயை ஆதரவாக அணைத்தவன், வா.. இங்க நின்னு பேசினா  யாரவது பாத்த சங்கடம் என்றவனை வினய் பார்க்க, இது நடு ரோடுடா  வீட்டு விசயம்  இங்க நின்னா பேசுறது என்றவன் அங்கு இருந்த மாந்தோப்பிற்கு அழைத்து சென்றான்.” 
“தோப்பு வீட்டில் அமர்தவர்களுக்கு வேலை ஆள் மோர் வந்து குடிக்க தர வேண்டாம் என்றவனை, பசி இருந்தா சொல்லுறது புரியாது வாங்கி குடி வினய். முதலில் அவனை மோரினை குடிக்க வைத்தவன் அன்று பாட்டியின் பிடிவாத்தை சொல்ல, அதுக்குன்னு இப்படி அர்த்த ராத்தியில கல்யாணம் பண்ணனுமா??” என்ன என கேட்டவனை..,  
“டேய்.. பேசுனதையே மாத்தி பேசுனா என்னடா அர்த்தம். உனக்கு நீ இல்லாம, உன்னோட சம்மதம் இல்லாம கல்யாணம் நடந்த கோபம்???” ஆனா அங்க மாப்பிள்ளை பொண்ணுக்கே கல்யாணம்னு தெரியாம சம்மதம் கேட்காம நடந்தது. இத சொன்னா நீ இப்ப என்ன பண்ணுவா?? என்று வினயை, அரவிந்தன் பார்த்தான். 
வினய் அதிர்ச்சியாக!! “அண்ணா என்ன சொல்லுறீங்க?” ஒருத்தருக்கு கூடவா அவங்க கிட்ட சம்மதம் கேக்க தோணல?? 
“அப்ப பாட்டி இருந்த நிலை அப்படி வினய்” யாராவது ஒருத்தர் வேண்டான்னு சொல்லி இருந்தாலும் இப்ப பாட்டி உயிரோட இருபாங்களான்னா அது கேள்விதான், என்றவனின் வெகு நேர சமாதான பேச்சில் சற்று தெளிந்தான் வினய்.
“வினய்யை அழைத்து கொண்டு அரவிந்தன் வர அண்ணனை பார்தவள் ஓடிச்சென்று கட்டிக் கொண்டாவள், எதுக்குடா அண்ணா போன?” என அவனை அடிக்க  அது தான் வந்துட்டேன்ல என அவளிடம் பேசினான். 
“துளசியுடன், வினய்  வர”  இப்போது தான்  அனைவருக்கும் நிம்மதியாக மூச்சு வந்தது. வினய் வந்தால் என்ன நடக்கும்? என பயந்து இருந்தவர்களுக்கு வினய் இந்த திருமணத்தை ஏற்று கொண்டது அப்படி ஒரு சந்தோசம்.
“மாடியில் இருந்து இதை பார்த்த விஷ்வாவிற்கு தான் கோபத்தை அடக்க முடியவில்லை.  தான் இருக்க வேண்டிய இடத்தில் வினய் இருக்க அப்படி ஒரு கோபம் அவனுக்கு.” 
“பார்வதி ஜோசியரிடம் பேசியவர், முகூர்த்ததிற்கு நேரம் குறிக்க அடுத்த கலவரத்திற்கு ஆரம்பம் ஆனது வீடு.”
                                 விஷ்வ  துளசி தொடர்வாள்…………..

Advertisement