Advertisement

                   ஓம் நமசிவாயா 
விஷ்வ துளசி அத்தியாயம் 12
“திருமணம் முடிந்து ஆயிற்று ஒரு வாரம்”, இன்னும் துளசி இந்த திருமணத்தை மனதார ஏற்று கொண்டாளா?? என்றால் அது அவளுக்கு தொரியவில்லை!! ஆனால் அவளாள் அந்த திருமணம் நடந்த விதத்தை ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. இரண்டுநாட்கள் அதன் தாக்கத்தில் இருந்தவள் இப்போது தான் அடுத்து என்ன செய்வது?? என்று யோசிக்க ஆரம்பித்து இருந்தாள்.  
“கயலிடம் மட்டுமே துளசி பேசுவது” மங்கை வந்து சாப்பாடு கொடுத்தாள் உண்பவள் இன்னும் கோதையிடம் முகம் கொடுத்து பேசவில்லை. சிவராமனும், ராஜேந்திரனும் தான் தகைய சமாதானம் செய்வார்கள். 
பார்வதிக்கு விபரங்கள் சொல்லபட யாரிடம் கோப பட என புரியவில்லை.  தவறின் முதல் காரணம் அவர் அல்லவா!?” 
“விஷ்வா அன்று தோட்டத்து வீட்டிற்கு சென்றவன் தான் இரண்டு முறை வீட்டிற்கு வந்தும் துளசியாள் அதை உணர முடிய வில்லை.” அவள் தூக்கத்தில் இருக்கும் போது வருபவன் சிறிது நேரம் அவளின் அருகினில் அமர்ந்து இருப்பவன் அவள் விழிக்கும் நேரம் சென்று விடுவான். 
“இன்னும் வீட்டில் வந்து தங்க வில்லை. ஹாஸ்பிடல் வருபவன் பாட்டியுடன் இருப்பவன் தன் வேலைகள் முடிந்து மீண்டும் தோட்டத்திற்கே சென்று தங்கி கொள்ளவான்.” 
 
“விஸ்வாநாதன் கூறியும் இதற்கு மேல் யாரும் துளசியின் விசயத்தில் முடிவு எடுக்க கூடாது தான் பார்த்து கொள்ளவதாக கூறியவன், தான் துளசியின் மீது விருப்பட்டது எந்த காரணத்திற்காகவும் வெளியில் வர கூடாது, என தாத்தாவிடமும் அரவிந்தனிடமும் கண்டிப்பாக கூறியவன் சொல்லிய விதமே அரவிந்தனுக்கும், விஸ்வநாதனுக்கும் புரிந்து விட்டது இனி தாங்கள்
அவன் எடுக்கும் முடிவுகளில்  தலையிட கூடாது என்று.”
 
“மீனா ஆரத்தி கரைச்சு வச்சுட்டியா?? நேரம் ஆச்சு வந்துடுவாங்க” என மங்கை சொல்லி கொண்டே போக அவரின் எதிரில் கையை இடுப்பில் வைத்தபடி நின்றார் மீனா. 
மீனா அக்கா….. காலையில இருந்து இந்த டைலாக்க எத்தனை முறை சொல்லுவீங்க?? எல்லாம் எடுத்து வச்சாச்சு. நீங்க கொஞ்சம் பதட்ட படாம இருங்க. குழலி தண்ணீர் சொம்பை நீட்டி இத முதல்ல குடிங்க என தந்தவர் மங்கையின் கைகளை பிடித்து அமைதியா இருங்கக்கா என்றார். 
“மங்கை நீரை குடித்தவர் மேலே மாடியை பார்த்தார்” எங்க அமைதியா இருக்குறது குழலி. அத்தை வந்த என்ன நடக்கும்னு தெரியலை!? அதுவே எனக்கு கை கால் நடுங்குது. இதுல வினய் இன்னிக்குதான் வர்றான். “அவன் வந்தா??” நினைக்கும் போதே என்னோட இதயமே நிக்குற மாதிரி இருக்கு குழலி என்றவருக்கு வேர்த்து ஒழுகியது. 
“குழலிக்கும், மீனாவுக்கும் தான் இப்போது பாவமாக இருந்தது மங்கையை பார்க்க.  அக்கா கவலை படாதீங்க” என அவறை ஆறுதல் படுத்த, என் பையன் வாழ்க்கை சரியாகிடுமா குழலி?? என்றவர் கண்களில் இருந்து கண்ணீர் இப்போது அருவியாக வர அதை பார்த்த மற்றவர்கள் பதறித்தான் போனார்கள்.
“இதுவரை மங்கை அழுதோ, இல்லை வருத்தபட்டோ யாரும் பார்த்தது இல்லை. யார் என்ன சொன்னாலும் அவர் சிரித்த முகத்துடனே கடந்து செல்வார். இது பார்வதி அவருக்கு கற்று தந்தது. எந்த நிலையிலும் நம் உணர்வுகள் மற்றவர்களுக்கு தெரிய கூடாது. “சந்தேசமோ, துக்கமோ அது நம் பலகீனத்தை காட்டவல்லது அதை மறைக்க கற்று கொள்” என்று.
“அவரின் கண்ணீர், வருத்தம், சந்தோசம் என அனைத்து உணர்வுகளும் வெளிப்படும் இடம் ராஜேந்திரனின் தோள்கள் மட்டுமே” இன்று அவரையும் அறியாமல் கண்ணீர் வந்தது தன் மகனின் வாழ்கையை எண்ணி. கோதை சமையல்கட்டில் இருந்து வருவதை பார்த்தவர் சட்டென கண்களை துடைத்து கொண்டார். 
வெளியே காரின் ஹாரன் சத்தம் கேட்க.. அனைவரும் வேகமாக சென்றனர். பார்வதியின் கைகளை பிடித்து மெதுவாக அரவிந்தனும், ஸ்ரீயும் இறக்கிவிட, விடுங்கடா, நா.. என்ன நோயாளியா கைய புடிக்க.. என்றவர் அவர்களின் துணை இல்லாமல் கீழே இறங்கி நடந்து வாசல் வந்தவரை நிறுத்தி கோதையும், மங்கையும் ஆரத்தி சுற்ற அதிலேயே கண்டு கொண்டார் இன்னும் கோதை மங்கையிடம் பேசவில்லை என்று. 
“மகளை பார்த்து முறைத்தவர், ஆலம் சுற்றியதும் எதுவும் பேசாமல் உள்ளே சென்று தன் வழக்கமான இடத்தில் அமர போக, இருங்க பாட்டி என்று அவருக்கு என செய்யத புதிய சாய்வு நாற்காலியை விஷ்வா எடுத்துவந்தான். 
“எதுக்கு ராஜா?? இது எல்லாம் நா நல்லா இருக்குறேன்பா” என்றவரை அது இன்னும் ரெண்டு செக் அப் முடிஞ்சு பாக்கலாம் பாட்டி, இப்ப இதுல உக்காருங்க என்றவன் அவரை அதில் சரியாக உட்கார வைத்தான்.
“பார்வதி வீட்டினை ஒரு முறை நன்கு சுற்றி பார்த்தார். மீண்டும் வருவோமா?! என்று அவர் அன்று வேதனையுடன் பார்த்தது இன்று அவரை அறியாமல் முகத்தில் புன்னகை பூத்தது.  அரவிந்தன் தான் பாட்டி இருந்தது எல்லாம் அது அது இடத்துல சரியா இருக்கு என்றவன் அவரின் கையை பிடித்து ரொம்ப பயம் காட்டீங்க பாட்டி என்றான்..” 
“பார்வதி, அரவிந்தனின் தலையை தடவியவர் மங்கை தந்த ஜூஸ்சினை குடித்த படி பார்வையை சுழல விட அங்கு அனைவரும் இருந்தனர் துளசியை தவிர. மங்கை.. துளசி எங்க??” பார்வதி கேட்க, அத்தை என்று அவர் சொல்லுவதற்குள் அவரின் தொண்டை வரண்டு விட்டது. ஆபத்பாண்டவனாக வந்தனர் அவர்கள் தோட்டதில் வேலை செய்பவர்கள்.
“ஆத்தா எப்படி இருக்கீங்க??” என்று அனைவரும் நலம் விசாரிக்க, அனைவருக்கும் பதில் சொன்னாலும் அவரின் எண்ணம் எல்லாம் துளசியின் மீதே இருந்தது. வந்தவர்கள் கிளம்பி போக உள்ளே வந்தார் விஸ்வநாதன். பார்வதி.. இப்பதான வந்த. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா என்ன?? இப்படி உக்காந்து இருக்குற  என சத்தம் போட, என்ன?? அந்த டாக்டர் பய உங்க கிட்ட சொன்னான. என்னைய எப்பவும் படுத்தே இருக்க சொல்லி?! என கேட்டார் பார்வதி.
“பாட்டி.. டாக்டர இப்படி மரியாதை இல்லாம பேசக்கூடாது!! என ஜெய் சொல்ல, அட போடா…. அந்த பய உங்க பெரியப்பன் கூட  இங்குட்டு ஆடிக்கிட்டு இருந்த பயதான். அவனுக்கு டவுசரே ஒழுங்க போட வராது. என்னமோ..!! டாக்டர் ஆகிட்டானு அம்புட்டு சலம்புறான்” என்று அவர் சொன்ன தோரணையில் அனைவரும் சிரித்து விட்டனர்.  
“மீண்டும் துளசி எங்கே??” என  பார்வதி கேட்க, அத்தனை நேரம் இருந்த இதம் தொலைந்து போனது அங்கு. ஒருவர் மற்றவரின் முகத்தை பார்த்தனர். இப்போது கோதை அம்மா.. என்று கூப்பிட கையை நீட்டி அவரை தடுத்தவர், மங்கை.. உன்கிட்ட தான் கேட்டேன் துளசி எங்கே??”
மங்கை பேசாமல் தலை குனிந்து நிற்க, “விஸ்வநாதன் தான் பார்வதி.. கொஞ்சம் அமைதியா இரு,  யோசனை பண்ண நேரம் குடு” என்றவரை எதுக்கு நேரம் கொடுக்க?? என்று கேட்டார் பார்வதி 
“என்ன இன்னும் யோசிக்குறாளா?? ஒரு வாரம் முழுசா முடிஞ்சு போச்சு இன்னும் என்ன??” என தடாலடியாக பார்வதி ஆரம்பிக்க, அவர் எங்கு வந்து நிற்பார் என புரிந்து விட்டது மங்கைக்கு. 
“பார்வதி சுற்றி பார்த்தவர் நின்றது விஷ்வாவின் முகத்தில்” அவனின் இறுக்கமான முகமே சொன்னது அவரின் பேச்சில் விருப்பம் இல்லை என்று. மங்கை கெஞ்சுதலாக அவனை பார்க்க அவன் பார்வை இப்போது விஸ்வநாதனிடம். 
“விஸ்வநாதன், பார்வதி வந்ததும் இப்ப எதுக்கு இந்த பேச்சு??” என ஆரம்பிக்க பொங்கி விட்டார் பார்வதி, என்னது.. எதுக்கு இந்த பேச்சா?? கல்யாணம் ஆகி வாரம் ஒன்னு ஆகுது,  எனக்கு வாய்ச்சதுக்கு தான் எதுவும் விளங்கலைனா, நா பெத்தது  அதுக்கு மேல இருக்கு என மருமகள் மகள் என இருவரையும் சரிசம்மாக   திட்ட ஆரம்பித்தார்.” 
“நா… வந்து எவ்வளவு நேரம் ஆச்சி?? இன்னும் இவ கீழ இறங்கி வரல” என சொல்லும் போதே இறங்கி வந்தால் துளசி. 
“பாட்டி போதும் நிறுத்துங்க?! என விஷ்வா  சொல்வதும் பார்வதி வாடியம்மா..” என கூறுவதும் ஒன்றாக கேட்க வந்தவள் மங்கையிடம் சென்று நின்று கொண்டாள்.
“திருமணநாளுக்கு பிறகு இன்று தான் முழுதாக பார்க்கிறான் துளசியை விஷ்வா.” பிங்க் காட்டன் சுடிதார் அத்தனை பொருத்தம் அவளுக்கு. முன்பு இருந்ததிற்கு சற்றே மெலிந்து இருந்தாள்.  முடியை கேட்ச் கிளிப்பில் அடக்கி இருக்க அந்த இடை வெளியில் தெரிந்தது அவன் கட்டிய மஞ்சள் தாலி.  இப்பேதும் அவளின் நுனி மூக்கு மச்சம் அவனை வா.. என அழைப்பது போல் தோன்ற ஓரப்பார்வையில் பார்த்தபடி இருந்தான்.” 
“மங்கையிடம் அவள் நின்றதும் பார்வதி துளசியை மெச்சும் பார்வை பார்த்தவர், வாசனை ஜேசியரிடம் பேச ஃபோன் செய்ய கூறினார். வாசன் தயங்கி தன் அண்ணனை பார்க்க, தம்பி.. பாத்தது போதும் ஃபோன் செஞ்சு குடுய்யா என அவரை பார்காமல் பேசினார் பார்வதி.”
“ராதாவின் முகத்தில் அடக்க முடியாத சிரிப்பு” அதை கவனித்து விட்ட கயலும், சுபாவும் அவளை பக்கத்து அறைக்கு யாரும் அறியாமல் இழுத்து சென்றனர். கயல், என்னடி அப்படி ஒரு சிரிப்பு?? என கேட்க வயிற்றை பிடித்து கொண்டு ராதா சத்தம் வராமல் சிரித்தாள்.
பார்த்த இருவருக்கும் “இவ என்ன லூசா!!?” என தோன்றியது. சில நிமிடங்கள் விட்டே அவளின் சிரிப்பு நின்றது.
“கயல் அக்கா… அன்னிக்கு நாம வருத்த பட்டோம் இல்ல, பாட்டி அண்ணி கிட்ட மட்டும் பாசமா இருக்காங்கன்னு!!” 
“ஆமா அதுக்கும், இப்ப நீ சிரிச்சதுகும் என்ன சம்பந்தம்??” 
“ஆனா… இப்ப பாத்தீங்களா?? அவறை பொருத்தவரை அவங்க பேச்சை கேட்கலைனா எல்லாரும் ஒன்னுதான். நாம தான் தப்பா நினச்சு பாட்டிய கவுக்க  ஐடியா கேட்டுடோம்!! அத நினச்சேன் சிரிப்பு தானா வருது.. அதுலயும் சித்தப்பா முகத்துல வந்ததே ஒரு எக்ஸ்பிரசன்..!! செம போங்க.. என மீண்டும் சிரிக்க ஆரம்பித்தாள்
அதை கேட்டவர்கள் தான் அவளின் தலையில் குட்டி.. “பக்கி நாங்க இங்க என்ன ஆகபோகுதுன்னு?? பயந்து இருந்தா, நேரம் கெட்ட நேரத்துல  பேசுறத பாரு” என திட்டியவர்கள், வா வெளிய ஏதாவது சேட்ட பண்ணுன கொன்னுடுவேன்!! என அவளை மிரட்டி அழைத்து வந்தனர். 

Advertisement