Advertisement

அரவிந்தும்..  விஷ்வாவும் வெளியே வர, “சிவப்பு நிற பட்டில் தேவதை என வந்து நின்றால் துளசி”. அமைதியாக நின்று இருந்தவளை பார்க்க.. பார்க்க அள்ளிகெள்ளும் ஆசை வந்தாலும், அவளுக்கு விபரம் தெரிய வந்தால்?? அதன் பிறகு நடப்பதை நினைத்தவனுக்கு பயமும் வந்தது.”   
“இங்கே… அறையில் கயலும் துளசியும் கையில் புடவையை வைத்து கொண்டு, என்ன அண்ணி இது?? வந்தாங்க.. கொடுத்தாங்க.. ரெடியாகுனாங்க.. போயிட்டாங்க. என்ன, ஏதுன்னு எந்த விபரமும் சொல்லல?? என துளசி, கயலை கேட்டாள்.”
“கயல் யோசித்தவள், பாட்டிக்கு உடம்பு சரியாகனுன்னு வேண்டிக்க கோவிலுக்கு போவாங்கன்னு நினைக்குறேன்.  அதனால தான் குளிச்சு கிளம்ப செல்லுறாங்க, என அவளுக்கு தெரிந்த காரணத்தை சொல்ல அனைவரும் தயாராகினார்கள்.”
துளசி… “அதுக்கு நாங்க மட்டும் போனா பத்தாத?? நீங்க இப்படி இருக்குறப்போ அடிக்கடி டிராவல் பண்ண கூடாது இல்லையா??”வருத்தமாக கேட்டவளை, கயல் பார்த்தவள் பரவாயில்லை விடு எனக்கு ஒன்னும் ஆகாது.கயலின் முன் மண்டியிட்டு துளசி அமர்ந்தவள், “குட்டீஸ் பாட்டிக்காக பொருத்துக்குங்க, நாம மெதுவா போயிட்டு பாட்டிக்காக சாமி கூம்பிட்டு வரலாம். என குழலியின் வயிற்றில் இருந்த குழந்தைகளிடம் பேச, போ.. துளசி ரெடியாகு என்றாலும் கயலின் சிந்தனை எல்லாம் குழலியின் குழப்பமான முகத்தையே சுற்றி வந்தது.”
குழலி, பூஜை அறையில் விளக்கினை ஏற்றி காணிக்கை முடிந்தவர் கடவுளை வணங்கி நிற்க மீனா  வந்தார்.
“அக்கா” இதை எல்லாம் சரிபாருங்க என அட்சதை, பூ உள்ள தட்டினை மீனா காட்ட, குழலி அதை சரி பார்த்தவர் போ.. அவங்க வர்றதுக்குள்ள  கார்ல பின்னாடி வை, இல்லையினா கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது, என அவரை அனுப்பி வைத்தார்.       
அனைவரும் தயாராகி வர ஸ்ரீ காரை எடுத்தான். அவன் மனதின் கோபம் அவன் காரை ஓட்டுவதில்  தெரிய ஸ்ரீ அண்ணா.. எதுக்கு இவ்வளவு வேகமா போறீங்க மெதுவா போங்க, முகூர்த்தமா முடிய போகுது என ராதா கேட்க திரும்பி அவளை முறைத்தான் ஸ்ரீ .
ஸ்ரீ.. பார்த்த பார்வையில்  ராதா அமைதியாக  ‘வீட்டுல அம்புட்டு ஆளூங்களும் முறைச்சே வாய  மூடவச்சுடுவாங்க அந்த கண்ணுல என்னதான் இருக்கோ’ என்றவள் மனதிலேயே அவனுக்கு அர்ச்சனை செய்தாள்.
கண்ணாடி வழியாக தெரிந்த “துளசியின் முகத்தை பாரத்தவன்,” அதில் இருந்த அமைதி இன்னும் சிறிது நேரத்தில் தெலைய போவதை நினைத்தவன் பாவமாக அவளை பார்த்தான். மனதில் மீண்டும் கோபம் அதிகமாக காரின் வேகத்தை கூட்டினான். 
அடுத்த இருபது நிமிடங்களில் மருத்துவமனையில் கார் நின்றது.  அனைவரும் இறங்கி முன்னே நடக்க ஸ்ரீ.. குழலியை நிறுத்தினான். “ம்மா.. என்றவனை ஸ்ரீ எதுவும் பேசாதா. இப்ப உனக்கு விளக்கம் சொல்ல நேரம் இல்ல, சென்னாலும் புரிஞ்சுகுற நிலையில நீங்க எல்லாம் இல்லை. வாக்கு வாதம் பண்ணாம உள்ள வா” என்றவர் தட்டினை எடுத்து கொண்டு சென்றுவிட்டார்.
“துளசி உள்ளே செல்ல எதிரில் வந்தான் விஷ்வா.” அன்று ஹோட்டலில் அவனை ரசித்து போலவே இன்றும் அவனை ரசித்தபடி நடந்து வந்தவள் கண்களில் இப்போது தான் அவனின் உடை கண்ணில் பட்டது.  மற்றவர்கள்
சாதாரணமாக இருக்க தானும் அவனும் மட்டும் சற்றே வித்தியசாமாக உடை உடுத்தி இருந்தது அவளை உறுத்த, அனைவரையும் சுற்றி பார்த்தவள் பார்வை தயங்கியபடி தன்னை பார்க்கும்  கோதை சிவராமனிடம் நின்றது.
“துளசியின் அருகினில் சிவராமன் வந்தவர் அவளின் கைகளை பிடித்தார். துளசிம்மா.. என்றவர் தயங்கி அவளின் முகம் பார்க்க, எதையும் பட்டென கூறுபவர் இன்று தயங்குவது, மற்றவர்களின் தன் மீதான பார்வை,  விஷ்வாவின் உடை என அனைத்தும் வித்தியாசமாக தோன்றியது. துளசி என்னப்பா என்ன ஆச்சு?? கோயிலுக்கு போலாம்னு அண்ணி சொன்னாங்க.  இங்க வந்தா யாரும் கிளம்பாம இருக்கீங்க??” என நிறுத்தி அனைவரையும் பார்த்தவள், “என்னப்பா??” என்ற அவளின் குரலில் சிவராமன் சட்டென அவளின் முகம் பார்த்தார்.
“துளசியின் பார்வை அவரை ஏதோ செய்ய, கோதையை பார்த்த பார்வையோ கெஞ்சியது, நீயே சொல்?” என. கோதை  கண்களை மூடி திறந்தவர் “துளசி பாட்டி, ராஜா கல்யாணத்தை பார்த்தா தான் ஆப்ரேசனுக்கு சம்மதிப்பேன்னு சொல்லிட்டாங்க. நாங்க என்ன சொல்லியும் அவங்க முடிவ மாத்திக்கல.   அதனால உனக்கும் ராஜாவுக்கும் இப்ப கல்யாணம் அதுக்கு தான் இந்த ஏற்பாடு” என ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்.
“கோதை சொன்னதில் துளசிக்கு எதுவும் புரியவில்லை. அவரின் வார்த்தை புரிய சில நொடிகள் அவளுக்கு தேவைபட்டது, அதன் அர்த்தம் புரிந்ததும் அதிர்ந்து போய்  அவள் பார்த்தது விஷ்வாவை தான். அவனின் முகத்தில் எந்த உணர்வும் இல்லை, அதிலேயே அவளுக்குபுரிந்து போனது அவனிடமும் சம்மதம் கேட்க வில்லை என்று. ஆனால் அவனுக்கோ அவள் தன் முகம் பார்த்ததே பேதுமானதாக இருந்தது.”   
“அவளின் அமைதியை சம்மதம் என்று நினைத்து விஷ்வாவை அழைத்து அவளின் அருகினில் நிறுத்தி மாலையை அவனின் கையில் கொடுத்து அவளுக்கு போட சொல்ல, அவன் மாலையை போட்ட பிறகு தான் அவளுக்கு  உணர்வே வந்தது.” 
“துளசியின் கையை பிடித்து கயல் தான் விஷ்வாவிற்கு மாலையை போட வைத்தாள். துளசி தலை குனிந்து நிற்க மாங்கல்யத்தை அவளின் கழுத்தில் கட்டினான் விஷ்வா.” 
“திருமணம் முடிந்து அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கும் போதும் துளசியிடம் எந்த மாறுபாடும் இல்லை. அமைதியாக இருந்தவளை சேரில் அமரவைக்க அப்படியே அமர்த்தவள் தான் யாரிடமும் எதுவும் பேசவில்லை. அவளை பார்கவே பரிதாபமாக இருக்க அவளிடம் போக பயந்து அவளை சுற்றி தள்ளி அமர்ந்து கொண்டார்கள்.”
“பார்வதியை அழைத்து சென்றது, ஆப்ரேசன் முடிந்தது அனைவரும் வந்தது, என எதுவும் தெரியவில்லை அவளுக்கு. மங்கை  அவளின் தோள்களின் மீது கைவைத்து அவளை திருப்ப மங்கையை பார்த்தவள் கண்கள் அப்பொழுதான் உடைய ஆரம்பித்தது.” 
“துளசி வாயை திறந்தாலும் சத்தம் வரவில்லை. அழுகை மட்டுமே வர, அதுவும் சிறிது நேரத்தில் அதிகம் ஆக ஆரம்பித்தது. சத்தம் கேட்டு கோதை வந்தவர் அவளின் கைகளை பிடிக்க அதை ஆங்காரமாய் தட்டி விட்டவள், அவங்கள போக சொல்லுங்க என கத்த ஆரம்பித்தாள்.”
அவளின் சத்ததில் அதிர்ந்து போனவர் துளசிம்மா.. என அழைக்க, பேசத பேசதாம்மா போ.. போ இங்க இருந்து என மீண்டும் கத்த, கோதையின் கண்ணில் இருந்து நீர் மலமலவென இறங்க ஆரம்பித்து. இப்போது சுற்றி இருந்தவர்கள் தான் என்ன செய்ய என தெரியாமல் நின்று இருந்தனர்.” 
“சுயநினைவு இல்லாம் இருக்கும் துளசியை பார்ப்பதா இல்லை மகளின் சத்ததில் பயந்து போய் அழுகும் கோதையை பார்ப்பதா” என. 
“கோபத்தில்  அழுத்தம் அதிகமாக அப்படியே மயங்கினாள் துளசி.” மங்கையின் கையில் இருந்து துளசி சரியவும், ராஜா.. என அழைக்க அவள் சரியும் போதே பார்தவன் சட்டென அவளை கைகளிள் தாங்கினான்.
“அவளை  அறையில் இருந்த கட்டிலில் கிடத்தியவன், எதையும் யோசிக்காத துளசி நான் இருக்கேன் வேகமா கண் முழிச்சுக்கோடி” என்றவன் அவளின் நெற்றியில் மென்மையாக இதழ் பதித்தான். அதற்குள் மற்றவர்கள் பின்னால் வந்து விட அவளை விட்டு விலகி நின்றான் விஷ்வா.
 
அடுத்து அவளுக்கான மருத்துவ சிகிச்சைகள் நடக்க, அவளிடம் யாரும் இதை பற்றி பேசவேண்டாம் அவளுக்கு அமைதியான மன நிலை இப்போது அவசியம் என்று டாக்டர் சொல்லிவிட, விஷ்வாவும் அதையே தன் பார்வையால் உணர்த்தினான். 
“நேற்றில் இருந்து யாரையும் பார்க்காத விஸ்வநாதன் அப்போதுதான் விஷ்வை பார்க்க அவனும் அவரைதான் பார்த்து கொண்டு இருந்தான்.” 
அப்போது தான் அவருக்கு தோன்றியது.. “ இது வரை தான் அவனிடமும் துளசியிடமும் திருமணத்திற்கு சம்மதம் கேட்கவே இல்லை என்பதும், தன் சுய நலத்திற்காக பேரன் பேத்தியின் வாழ்கையை பணயம் வைத்ததும்.” 
விஷ்வாவை நிமிர்ந்து பார்க்க திறன் இல்லாமல் “தலை குனிந்து நின்றார்” விஸ்வநாதன். 
  
“அவரின் மன ஓட்டத்தை கண்ணால் படித்தவன்,  யாருக்கும் சந்தோகம் வராமல் அவரை வெளியே அழைத்து சென்றான். தாத்தா என்னைய பாருங்க?? என விஷ்வா அவரின் தலையை நிமிர்த்த, அவனின் கைகளை பிடித்தவர் என்னைய மன்னிசுடுய்யா!! என அழ கேட்டவிஷ்வா தான் அதிர்ந்து போனான்..”
“தாத்தா என்ன பேச்சு இது?? தாத்தா.. என்கிட்டபோய் நா.. உங்க பேரன். என் வாழ்கைய பத்தி முடிவு எடுக்க உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. இதுக்காக நீங்க இப்படி பேசகூடது!? என அவரின் கண்களை துடைத்தான். இல்லப்பா பார்வதிய மட்டும் நினச்சேனே தவிர அப்ப இந்த புத்தியில உனக்கு இது புடிச்சி இருக்கா இல்லையானு கேக்க தோணல. என்றவர் மீண்டும் மீண்டும் அவனிடம் மன்னிப்பை கேட்க, தாத்தா.. என அடிக் குரலில் சீறியவன் நீங்க இத யோசிக்கலைனாளும், நா உங்கள யோசிக்க வச்சி இருப்பேன்!! என்றவனை அதிர்ந்து பார்ப்பது இப்போது விஸ்வநாதன் முறையானது.. 
“என்னப்பா சொல்லுற?? என விஸ்வநாதன் கேட்க,  அவரிடம் உண்மையை மறைத்தால் அது  இன்னும் அவருக்கு மன வருத்ததை தரும் என்பதை உணர்ந்தவன், தான் துளசியை கண்டது, கோதையின் கோபம், துளசியின் வருத்தம் அதை பாட்டிக்காக மறைத்து என கூறி முடித்தவன், அவளை விரும்புவதையும் இன்று அவரிடம் சொல்லி கோதை சிவராமனிடம் பேசவைக்க தான் நினைத்ததையும்  கூறி முடித்தவன்”  அவரின் முகம் பார்த்தான். 
“தான் வளர்தவனின் விருப்பம் என்ன என்பதை தெரியமல் இருந்ததை நினைத்து அழுவதா! இல்லை அவனின் விருப்பம் தனக்கே தெரியாமல் தன்மூலமாகவே நிறைவேறியதை நினைத்து சிரிப்பதா என புரியாமல்…!!” விஷ்வநாதன் நின்று இருந்தார்.
தாத்தா… என அவரை கலைத்தவன் “இப்பவும் உங்ககிட்ட சொல்லி இருக்க மாட்டேன், நீங்க வருத்தபடுறது தாங்கமா தான் சொல்லிட்டேன். அதனால நீங்க தப்பு பண்ணிட்டேனு மனச போட்டு வேதனை படுத்திக்காதீங்க. இப்ப உள்ள வாங்க நீங்க பேசுனாதான் அத்தை சரியாவாங்க” என அவரை உள்ளே அழைத்து சென்றான். 
“ஒரு வாரம்… ஒரு நிமிடம்…. போல் ஓடி போனது இதோ இன்று பார்வதி மருத்துவரிடம் சண்டையிட்டு தான் வீடு போக அனுமதி வாங்கியவர் புறப்பட்டும் விட்டார்…”   
                                     விஷ்வ துளசி தொடர்வாள்…………..

Advertisement