Advertisement

                 ஓம் நமசிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 11
“காரிடாரில் இருந்த நீள் வரிசை நாற்காலியின் ஒரு முனையில் துளசியும் அதன் எதிர்முனையில் விஷ்வாவும் அமர்ந்து இருக்க, நடுவில் அமர்ந்து 
இருந்தான் அரவிந்த்.”
“யாரிடமும் சம்மதம் கேட்க வில்லை, ஆனால் செயல்கள் முடிந்து விட்டது. இங்கு  நடந்த எதையும் நம்பமுடியாமல், டென்னிசில் இரு புறம் ஆடும் ஆட்டகார்களை பார்க்கும் நடுவர் போல துளசியையும்.. விஷ்வாவையும் பார்த்திருந்தான் அரவிந்தன்.”
“அரவிந்தன், விஷ்வாவின் அருகில் சென்றவன் அவனை பார்க்க அவனின் முகத்தில் இருந்து அவனின் மனநிலையை கணிக்க முடியவில்லை. காதல் திருமணம் ஆனால்… காதலிப்பவனுக்கு இதில் விருப்பம் இல்லை, காதலிக்க படுபவளுக்கோ இவனின் காதலே தெரியது.  என்ன காதலோ??” என்று நினைத்தான் அரவிந்தன்.
 
“ராஜா” என அரவிந்தன் கூப்பிட, என்னடா?? என்றவனை துளசியை காட்டி.. அப்ப இருந்து அப்படியே உட்காந்து இருக்கா போ.. போயி கூப்புடு. என்றவனை நீ என்ன லூசா?? என்பதை போல் பார்த்தான் விஷ்வா. 
“என்னடா சொல்லிட்டு இருக்கேன் உக்காந்து இருக்க. போடா.. போயி கூப்புடு. என்றவனிடம் “கூப்பிட்டு என்ன பண்ண??” என விஷ்வா கேட்டதில் கடுப்பானான் அரவிந்த். 
“ம்ம.. போயி டூயட் பாடுறா!!” சுச்சுவேசனுக்கு சிங் ஆகும் கேக்குறான் பாரு கேள்விய கூப்புடு என்ன பண்ணனு. 
விஷ்வா.. “டேய் அர்வி, இப்ப நான் போயி அவள கிட்ட பேசுனா என்ன பண்ணுவான்னு அவளுக்கே தெரியாது.. சொன்னாலும் புரிஞ்சுகிற நிலைமையில அவ இல்லடா..  என்ன சமாதானம் சென்னாலும்  அத ஒத்துக்கமாட்டா, அவ கோபம்தான் அதிகமாகும். இங்க நடந்ததை அவ முழுசா உணரவே அவளுக்கு ரெண்டு நாள் வேணும் சமாதானம் பண்ணனும்னு பேசிபேசியே அவள டென்சன் பண்ண வேணாம்.”
அரவிந்தன்.. “சரிடா பேசவேணாம்.. அந்தபுள்ள வந்ததுல இருந்து இன்னும் ஒரு வாய் தண்ணி கூட குடிக்கல,  இப்ப மணி எட்டு ஆச்சுடா. பாக்க பாவமா இருக்கு, ஆளுங்க வர ஆரம்பிச்சுட்டாங்க, எல்லாரும் அவளையே பாக்குறாங்க” என்றவன் பேசும் போதே மங்கை வந்தார். 
“ராஜா.. அரவிந்த்.. பாட்டிக்கு ஆப்ரேசன் முடிஞ்சிடுச்சி  நல்லா இருக்காங்களாம், என்றவர் துளசியை பார்க்க அவள் அமர்ந்து இருந்ததே சொன்னது அவளது நிலையை.” 
“துளசியால் நடந்த நிகழ்வில் இருந்து மீள முடிய வில்லை. இரவு கோதையிடம் இருந்து வந்த போனில் அவர் கூறியது துளசியை திருமணத்திற்கு தயார் செய்து அழைத்து வரவேண்டும் என்பதே”
கேட்ட குழலிக்கும், மீனாவுக்கும் தலை சுற்றிவிட்டது. “என்னக்கா இது!! திடீர்னு கல்யாணம் செய்ய என்ன அவசியம் வந்துச்சு?? மீனா.. குழலியை கேட்க, எனக்கு மட்டும் ஜோசியமா தெரியும்,  நானும் உன்னோட தான இருக்குறேன் என்று குழலி காயந்தவர், வா..” என அவரை அழைத்து கொண்டு துளசியின் அறைக்கு சென்றார்.
“அறையில் யாரும் தூங்க வில்லை. குழலியை பார்த்த கயலுக்கு ஏதோ சரியில்லை என பட, என்ன சித்தி??” என்றதில் அனைவரும் திரும்பி குழலியை பார்த்தனர். வந்தவர் அனைவரையும் குளித்து உடை மாற்ற சொல்ல எதுக்குமா இந்த நேரத்துல குளிக்க செல்லுறீங்க?? சுபா கேட்டால்.
“சொன்னத செய் சுபா”, சும்மா கேள்வி கேட்டு நிக்காத என்று சத்தமிடவும், வாயை மூடினால் சுபா.  கயல், இங்க வா.. என்றவர் கையில் இருந்த இரண்டு புடவைகளை தந்தார் குழலி. இது உனக்கு.. இது  துளசிக்கு வேகமா ரெடியாகுங்க என்றவர், மீனாவை இழுத்து கொண்டு வெளியேறினார்.
“என்ன ஏங்க்கா  இழுத்துட்டு வர்ற??” மீனா கேட்க, சரி வா.. நீ.. அங்க இருந்து அவங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு. என குழலி சொன்னதும்  “ஐய்யோ” என மீனா பதற.. புரியுதா அங்க போகுற வரைக்கும் சமாளிக்கனும்னா இப்படிதான் இருக்கனும், என முகத்தில் கோபம் இருப்பது போல் காட்டினார் குழலி.
துளசிகிட்ட விசயத்த அண்ணியே சொல்லட்டும்!! நாம பேசுனா அது சரி வராது. அவ கேக்குற எந்த கேள்விக்கும் நம்ம கிட்ட பதில் இல்ல, அதனால அங்க போகுற வரைக்கும் யாருக்கும் எதுவும் தெரிய வேணாம் சரியா??  போ.. நீயும் ரெடியாகு, என்று மீனாவை  அனுப்பியவர் ஸ்ரீயை எழுப்பி விட சென்றார்.
“ம்மா.. என்னமா இது?? இப்படி திடீர்னு கல்யாணம் பண்ண அவசியம் என்ன?? அண்ணா சம்திச்சாங்களா, துளசிக்கு தெரியுமா??” என குழலியை பேசவிடாமல் ஸ்ரீ பேச. டேய்.. இந்த குறுக்கு கேள்விய அங்க போய் கேளுடா? நானும் உன்ன மாதிரி தான்.  எனக்கும் எதுவும் தெரியாது, கேள்வி கேட்டு  உயிர வாங்காத, இப்பதான் இவ தங்கச்சி வாய மூடுனோன் இப்ப இவன் ஆரம்பிக்குறான், என்றவரை ஸ்ரீ முறைக்க போடா சீக்கிரமா கிளம்பு என சென்றுவிட்டார் குழலி .
குழலி சென்றதும் அரவிந்தனுக்கு அழைத்தான் ஸ்ரீ.. அரவிந்தன் அழைப்பை ஏற்க “மாமா.. என்ன மாமா இது??” என்றிட அங்கு நடந்ததை  கூறினான் அரவிந்த். “இந்த பாட்டிக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லையா??” என்று வாய் விட்டான் ஸ்ரீ.
“ஸ்ரீ.. என்ன  பேசுற நீ??” என அரவிந்தன் கோபமாக கேட்க, சாரி மாமா.. ஏதோ கோபத்துல சட்னு பேச்சிட்டேன். என மன்னிப்பு கேட்டவன், எதுக்கு மாமா இந்த திடீர் கல்யாணம், அண்ணா இதுக்கு ஒத்துகிட்டாங்காளா?? என இறங்கி பேய் பேச, எனக்கும் இப்ப விளக்கமா சொல்ல முடியாது ஸ்ரீ. நடக்குறது எல்லாம் நல்லதுக்கு தான், நீ.. எதுவும் மனச போட்டு குழப்பிக்காத. என்ன சரியா!! எல்லாரையும் பத்திரமா அழைச்சு கிட்டு சீக்கிரம் வா என்றவன் போனை வைத்துவிட்டான். 
போனை வைத்தவன் காதில், “ஸ்ரீ.. கேட்ட அண்ணா கல்யாணதுக்கு சம்மதம் சொன்னாங்களா” என்ற வார்த்தைகளே ஓடியது. விஸ்வநாதன் கோதையிடம் துளசியை கல்யாணத்திற்கு பெண் கேட்டதும்,  “அரவிந்தன் திரும்பி விஷ்வாவை பார்க்க அவன் முகத்தில் தெரிந்தது என்ன?? அதிர்ச்சியா.. ஆச்சர்யமா!!  என்றால், இது எதுவும் இல்லாத வெறுமையான முகம். 
“திரும்பியவன் கோதையின் பதிலை கேட்டவுடன் மீண்டும் விஷ்வாவின் முகம் பார்க்க, கொஞ்சமும் மாறாத அதே பாவனை. யாரும் அவனிடம் சம்மதம் கேட்கவில்லை மாறாக முடிவினை கூறி இருந்தனர்.” அரவிந்தனுக்கு தான் விஷ்வாவின் அமைதி பயத்தை கொடுத்து.
“கோதை, துளசியை திருமணத்திற்கு தயார் செய்ய குழலியிடம் சொன்னதும் நிம்மதி மூச்சு விட்ட விஸ்வநாதன் சேரில் அமர்ந்து கொண்டார். மற்றவர்கள் அந்த சில மணி நேரங்களில் என்ன செய்ய முடியுமோ அதை செய்ய சென்றனர். மங்கையும் கோதையும் பார்வதியிடம் விபரம் சொல்ல போக, இந்த நிகழ்வின் கதாநாயகனோ தனியே நின்றான்.”
அரவிந்தன்.. விஷ்வாவை அழைத்து கொண்டு வந்தவன் “என்ன ராஜா அமைதியா இருக்குற??” என கேட்க.,
“என்ன யார் கேட்டா?? என்னோட பதிலையோ இல்லை கருத்தையோ சொல்ல!! தாத்தா கேட்டாரு, அத்தையும், மாமாவும் சரி சொன்னாங்க,  மத்தவங்க இத ஒத்து கிட்டாங்க. இதுல நா சொல்ல என்னடா இருக்கு?? என அரவிந்தன் முகம் பார்த்தான் விஷ்வா.”
“அரவிந்தன், அப்ப உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா ராஜா?? துளசிக்காதான இத்தனை வருசம் காத்திருந்த,” இப்ப அது தானா நடக்குது, ஆனா நீ பேசுறதும்..  உன்னோட முகமும் அதுக்கு ஆப்போசிட்டா இருக்குடா??”
“நீ.. செல்லுறது உண்மை தான் அர்வி. இத்தன வருசம் நா அவளுக்காதான் காத்திருந்தேன், இப்பவும் காத்துகிட்டு இருக்குறேன்!!” அவள இங்க பாத்தப்ப எவ்வளவு சந்தோசமா இருந்தது தெரியுமா.   “அவகிட்ட என்னோட விருப்பத்த சொல்லி, அவளையும் என்ன விரும்ப வச்சி அவளோட முழு சம்மதத்தோட எங்க கல்யாணம் நடக்கனும்.  அதுதான்டா நா இத்தன வருசமா அவளை நினைச்சி வாழ்ந்ததுக்கு அர்த்தம்!”
“இப்படி பெரியவங்க ஆசைக்காக,  அவளோட விருப்பம் கூட கேக்காம  கல்யாணம் செய்து வாழ்ற வாழ்கைல என்ன இருக்கும்?? என் கூட அவ வாழ போறது இந்த சொந்தங்கள பிரியகூடாதுன்னு நினைக்குற   கடமையாதான் இருக்குமே தவிர காதல் இருக்காது.  அவளுக்கு இந்த கல்யாணம்  நான்  எல்லாம் சந்தோசம் கொடுக்குமா அர்வி??” என்றவன் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.  
“விஷ்வா.. வார்த்தைகளில், முகத்தில் காட்டாத வலி அவனின் குரல் காட்டி கொடுத்தது அரவிந்தனுக்கு. தனக்காக எத்தனையோ செய்தவன் வாழ்க்கையில் தனித்து நிற்கும் போது எதுவும் செய்ய முடியாத நிலை அரவிந்தனுக்கு. தன்நிலையை தானே வெறுத்தான் அரவிந்தன்.” 
“துளசியை மறந்து விடு.. என்று அரவிந்தன் சொன்னபோது கூட விஷ்வாவிடம் மாற்றமும் இல்லை. ஆனால் இன்று எல்லாம் தலைகீழ்.” 
“குளியல் அறைக்குள் புகுந்தவனுக்கு இப்போது தேவை தனிமை நண்பனே. ஆனாலும் சில எண்ணங்களை அவனிடமும் பகிர முடியாத நிலையில் இருந்தான் விஷ்வா. அதுவும் துளசியின் பற்றிய பேச்சினை முற்றிலும் தவிர்த்தவன் தலையை கையில் பிடித்த படி அமர்ந்து விட்டான் தொட்டியின் மீது. அவனின் காதல் அவன் கேட்காமலே அவன் கைகளில் அதனை ஏற்க முடியாமல் தவித்தவனால்  மனதோடு துளசிடம் மன்னிப்பை மட்டுமே கேட்க முடிந்தது.”
“எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறியவன் இவர்களின் வாழ்க்கை முடிவை துளசியிடம் விட்டு விட முடிவெடுத்தான்.”
“அந்த குடும்பதை உடைக்கும் எந்த முடிவையும் துளசி எடுக்க மாட்டாள் என்ற அதீத நம்பிக்கை!! விஷ்வாவிற்கு கதவு தட்டும் ஓசைகேட்க மூச்சை இழுத்து விட்டவன், வந்துட்டேன் அர்வி என்றவன் குளித்து வெளியில் வரும் போது தெளிவான முகத்துடன் வந்தான்.”  
 
“அரவிந்த் குளித்து வெளியே வந்த விஷ்வாவிடம், ஒரு கவரினை தர பிரித்து பார்தவன் அதில் பட்டு வேட்டி, சட்டை  இருக்க, என்னடா?? என் கல்யாணத்துக்கு தீயா வேல பாக்குற போல!! என அவனை வம்புக்கு இழுக்க, ஏன்டா?? நானே துளசி வந்தா என்ன ஆகுமோன்னு இருக்குறேன், அதைவிட வினய்க்கு தெரிஞ்ச இப்பவே பகீர்னு இருக்கு, என்றவனிடம் விடு மச்சி எத்தனையே பாத்துட்டோம், இத சமாளிக்க மாட்டோமா!! என விஷ்வா கூறினான்.  
‘சமாளிப்படா.. துளசி கழுத்துல தாலிய கட்டு அப்பறம் பாரு!!’ என மனதில் பேசியபடி விஷ்வாவை பார்த்தபடி அரவிந்தன் நிற்க, என்னட.. அங்க பேசி கிட்டு இருக்குற??  என அரவிந்தனை.. விஷ்வா கேட்க. “மனசுல தான பேசுனேன் அது இவனுக்கு கேட்குதா என்ன??” என விஷ்வாவிடமே கேட்க,  அப்ப நீ உண்மையாவே பேசுனையா!! என விஷ்வா அரவிந்தனை  கேட்க, நொந்து போனவன் டேய்.. இந்த ரணகளத்துலயும் உனக்கு குதுகளம் கேக்குதா, வா.. உன்னோட  ஆள் வந்திருப்பா, அங்க என்ன நடக்குதுன்னு பார்போம் என விஷ்வாவை அழைத்து சென்றான்.   

Advertisement