Advertisement

“சமையல் அறையில் நீரை குழலி காய்ச்ச, கோதை பார்த்தவர், எதுக்கு தண்ணி அண்ணி??  அது அத்தை கேட்டாங்க அண்ணி, என்றவர் வேலைகளை முடித்து வெளியே போக அதற்குள் பார்வதி தூங்கி இருந்தார்.”
“என்ன அதுகுள்ள தூங்கிட்டாங்க?? மீனா கேட்க, காலைல இருந்து வேலை அதிகம் இல்லையா, அது தான் அலுப்புல தூங்கி இருப்பாங்க.  வாங்க வெளிய காத்து நல்லா வீசுது கொஞ்ச நேரம் உட்காரலாம் என பெண்களை அழைத்து கொண்டு மங்கை வெளியே சென்றார்.”
“நால்வரும் வெளித்திண்ணையில் அமர்ந்து பழைய கதைகளை பேசி சிரிக்க மழை வரும் போல இருந்தது. அனைவரும் உள்ளே சென்றனர். மங்கை நடை சாற்றி  உள்ளே வந்தார்.” 
“வந்தவர் பார்வதி உறங்குவதை பார்த்தபடி நின்றார். என்ன மங்கை எங்க அம்மாவ அப்படி பாக்குற??” என வந்தார் ராஜேந்திரன். 
“மங்கை தூங்கலய நீங்க??”  உங்க சிரிப்பு சத்தம் உள்ள வரை கேட்டது சரி நாமளும் கலந்துகலாம்னு வந்த நீங்க இங்க வந்துடீங்க, என்றவர் மீண்டும் எங்க அம்மாவ எதுக்கு பாத்த?? என கேட்டார். 
அதுவா.. “அத்த அந்த சேலைல எவ்வளவு அழகா இருந்தாங்க தெரியுமா!! சுத்தி போடனுன்னு  நினைச்சேன், ப்ச்.. அதுகுள்ள தூங்கிட்டாங்க, என்றவர் சிறு குழந்தைகளை தூங்கும் போது பார்த்தால் நெற்றி வழிப்பது போல் செய்து திருஷ்டி எடுத்தார்”.
“கணவன் மனைவி இருவரும் பேசியபடி அறைக்குள் போக படி ஏற, ராஜா என மெல்லிய முனகல் சத்தம் கேட்டு பார்வதியிடம் வந்தனர். அங்கு பார்வதியோ முகம் எல்லாம் வேர்த்து ஒரு கை நெஞ்சை தடவ, மற்றது  பிடிமானத்திற்காக எதையே தேடியது”.
“பார்வதியை அப்படி பார்த்தும் பயந்து போய் மங்கை சத்தம் போட,  ராஜேந்திரன்  பார்வதியை தூக்கி மடியில் வைத்து வேர்வையை துடைத்தது விட்டார்.”  
“மங்கையின் சத்தில் வீடே முழித்துவிட்டது. முதலில் வந்த விஷ்வா பார்வதியை அப்படியே தூக்கியவன் அர்வி வண்டிய எடு என்றவன் காருக்கு போக அதற்கு முன்பே அரவிந்தன் அதை எடுத்தவன் பார்வதியை ஏற்றியதும் மருத்துவமனை நோக்கி பறந்தது கார்.”
   
“ஐ.சி.யூ.. வில் பார்வதி இருக்க, டாக்டரை எதிர்பார்த்து அனைவரும் வெளியே இருந்த அந்த சில நிமிடங்களில் மனைவியாய், தோழியாய், அன்னையாய், ஆசானான் சிறந்த நிர்வாகியாய் என பார்வதி காட்டிய வர்ணஜாலம் அனைவரின் மனதில் படமாய் ஓடி வாயை மௌனம் ஆக்கியது.”
“ஐ.சி.யூ.. வில் இருந்து டாக்டர் வெளியே வர, தெய்வத்தை பார்க்கும் பாவனையில் இருந்தார் விஸ்வநாதன்.  ஆம்.. இப்போது பார்வதியை பற்றி நல்ல செய்தி கூறும் அனைவரும் இந்த மனிதருக்கு தெய்வங்களே. ஒரு மனிதன் அரைமணி நேரத்தில் முதுமையின் உச்சத்தை அடைய முடியுமா என்றால் முடியும் என்பார்கள் விஸ்வநாதனை பார்தவர்கள் அப்படி ஒரு கம்பீரமும், மிடுக்கும் இருக்கும் அவரிடம்.”
“டாக்டர் வந்தவர் அவரின் கைகளை பிடித்து, ஐயா அம்மாக்கு எதுவும் இல்ல பிபி அப்நார்மல் அவ்வளவு தான், இப்ப சரி ஆகிடுச்சு அரைமணி நேரத்துல்ல ரூம்புக்கு மாத்திடுவாங்க பாக்கலாம். என  அவருக்கு தைரியம் சொல்ல, பாவம் விஸ்வநாதனுக்கு எதுவும் செல்ல தோணவில்லை மட்டும்தலையை மட்டும் சரி என அசைத்து அமைதியாக அமர்ந்து கொண்டார்.”
“விஷ்வாவை தன்னை வந்து பார்க்க சொல்லி டாக்டர் சென்றுவிட,
விஷ்வா உடன் ராஜேந்திரனும், அரவிந்தனும் சென்றனர் டாக்டரை பார்க்க”.
“விஷ்வா.. பாட்டி ஹார்ட்ல ரெண்டு பிளாக்ஸ் இருக்கு. உடனடியா ஆப்ரேசன் பண்ணனும், இல்லனா கொஞ்சம் கஷ்டம் தான் என்றிட, ராஜேந்திரன் தான் அப்பாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு ஏற்பாடு பண்ணலாம் என்றார். டாக்டர்  பார்த்தவர்  ஹூஹூம் உடனே பண்ணனும் இன்னும் லேட் பண்றது நல்லதில்லை. நா ஆப்ரேசனுக்கு ரெடி பண்றேன் என்றவரிடம், சம்மதம் சொன்னவர்கள்  டாக்டரின் அறையை விட்டு வெளியே வந்தனர்.”
“காரிடாரில் மூன்று பேரும் அமர்ந்து இருக்க, இவர்களிடம் வந்தனர் வாசனும், ரத்தினமும்.”
 
ராஜேந்திரன்.. வாசனை பார்த்தவர் “என்னப்பா அம்மாவ ரூம்புக்கு மாத்திட்டாங்களா??” ம்ம்.. மாத்திட்டாங்கண்ணா பாத்து பேசிட்டுதான் வர்றோம். டாக்டர் என்ன சொன்னங்கண்ணா??டாக்டர் சொன்னதை அரவிந்த் கூற “எப்படி இத அப்பாகிட்ட சொல்லுறது?” என ரத்தினம் கேட்க, சொன்னாதான் அம்மாவ சமாளிக்க முடியும். அப்பா சொன்னா மட்டும் தான் அம்மா ஆப்ரேசனுக்கு சம்மதிப்பாங்க.. வாசன் கூற, வீட்டு பெண்கள் ஒவ்வெருவறாக அவர்களின் பின்னால் வந்தனர்.
 
அனைவருக்கும் விபரங்கள் சொல்லபட, மீனா தான் “இப்ப யாரு மாமாகிட்ட இப்படின்னு சொல்லுறது??” என கேட்டார். இப்படியே அங்கு வாதங்கள் ஓட மீண்டும் யார்?? விஸ்வநாதனிடம் விபரத்தை சொல்லுவது என்பதிலேயே வந்து நின்றது பேச்சு.
“ராஜேந்திரன் மெதுவாக எழுந்து  பார்வதியின் அறைக்கு போக, அங்கே சிவராமன்.. விஸ்வநாதன் கைகளை பிடித்து ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்.” ராஜேந்திரனை பார்த்ததும், “என்ன ராஜேந்திரா, டாக்டர் என்ன சொன்னாங்க??”
“விஸ்வநாதனும்.. ராஜேந்திரன் முகம் பார்க்க, டாக்டர் சொன்னதை இவர்களிடம் அவரே சொல்லிவிட்டார். விஸ்வநாதன் அமைதியாக இருக்க, என்னப்பா அமைதியா இருக்கீங்க?? நீங்க சொன்னாதான் அம்மா ஒத்துப்பாங்க. என்ற ராஜேந்திரனிடம் ஒன்னும் பிரச்சனை இல்லைதான, ஆப்ரேசன் பண்ணுனா அம்மா சரியாகிடுவாள?” என விஸ்வநாதன்  கேட்டார். 
“சிவராமன் தான் மாமா.. ஒன்னும் பிரச்சனை இல்லை, இப்ப இதெல்லாம் சாதாரணமா நடக்குறதுதான். அத்தையவிட வயசானவங்க எல்லாம் ஆப்ரேசன் பண்ணி நல்லா இருக்காங்க” என அவரை சமாதானம் செய்தார்.
வாசன்.. ஸ்ரீயை அழைத்தவர் “அம்மா, அத்தை, பசங்கள அழைச்சுகிட்டு வீட்டுக்கு போ.  ஆஸ்பத்திரியில இருக்க வேணாம். நாளைக்கு போன் செய்றேன் அப்ப வா” என அனைவரையும் அனுப்ப செய்தார்.
“மங்கையும், கோதையும் இங்கேயே இருப்பதாக சொல்ல, பெண்கள் துணைக்கு வேண்டும் என்பதால் அவர்களை விட்டு விட்டு மற்றவர்கள் சென்றனர்.”
“விஷ்வாவும், அரவிந்தனும் உள்ளேவர பார்வதி அப்போது தான் மயக்கம் தெளிந்து அமர்திருந்தார் பார்வதி.” பாட்டி என இருவரும் பார்வதியின் இருபுறமும் அமர,  இப்ப எப்படி இருக்கு பாட்டி?? என அரவிந்தன் கேட்க, நீங்க  எல்லாம் சுத்தி இருக்கும் போது எனக்கு என்ன கவலை என சிரித்தார் பார்வதி. 
“விஸ்வநாதன், பார்வதியின் பக்கத்தில் அமர்ந்தவர் டாக்டர் சொன்னதை அவரிடம் கூற, பார்வதியிடம் எந்த பதிலும் இல்லை. என்ன பார்வதி, அமைதியா இருக்குற?” என்றவரை பார்தவர் கண்களில் என்ன கண்டாரோ விஸ்வநாதன் அமைதியானார்.
இப்போது, சிவராமன்.. பார்வதியிடம் பேச அவருக்கும் அமைதியே பதிலாக வந்தது. ராஜேந்திரன், கோதை, மங்கை வாசன் என யார் பேசியும் பதில் இல்லாமல் போக, இப்போது அரவிந்தான்  தான் பார்வதியிடம் கேட்டான். 
“என்ன பாட்டி.. இந்தன பேர் கேட்டும் பதில் செல்லாம இருந்த எப்படி பாட்டி?” என்றவனை பார்த்தவர் பார்வை விஷ்வாவிடம் நின்றது. 
இப்போது.. அனைவரின் பார்வையும் விஷ்வாவின் மீது படிய “விஷ்வாவின் நெற்றி சுருங்கியது.”
“என்ன பாட்டி?” என பார்வதியின் அருகினில் வர அவன் கையை பிடித்தவர், “உன்னைய மாலையும் கழுத்துமா பாத்துட்டா நா போனாலும் நிம்மதியா போயிடுவேன், இல்லனா நா செத்தாலும் எனக்கு சாந்தி கிடைக்காது தம்பி” என்றவர் அழ ஆரம்பித்தார்.
“இவங்க செல்லுற மாதிரி நா.. வந்துட்ட ஆச்சு இல்லான..?? என நிறுத்தியவர். நீங்க.. எல்லாம் என்ன சொன்னாலும் சரி, ராஜா கல்யாணம் முடியாம  நா இதுக்கு சம்மதிக்க மாட்டேன்” என்றவருக்கு மூச்சு வாங்க மீண்டும் ஐசியூ வில் வைக்கப்பட்டார் பார்வதி.     
“டாக்டர் வந்தவர் என்ன ஆச்சு?? நல்லாதான இருந்தாங்க, இப்ப எதுக்கு ட்ரீட்மென்டுக்கு ஒத்துக்காம அடம் பண்றாங்க?? என கேட்டவர், எதா இருந்தாலும்.. இப்ப அவங்களுக்கு வேண்டியது ஒரு அமைதியான நிலைமை, அதனால அவங்க எது சொன்னாலும் அத செய்துடுங்க என்றவர் சென்றுவிட்டார்.”
“டாக்டர் சென்றுவிட்டார், இவர்கள் என்ன செய்ய என தெரியாமல் நின்றுவிட்டார்கள்.” 
“விஷ்வநாதன் யேசித்து சில நிமிடங்கள் மட்டுமே. அமர்ந்து இருந்தவர் எழுந்து சென்றது சிவராமன் கோதையிடம்.  இருவர் முன் நின்றவர் அனைவரையும் திரும்பி ஒரு முறை பார்த்தவர் பார்வையை விஷ்வாவிடம் நிறுத்தி மீண்டும் சிவராமனை பார்த்தார்.”
“சிவராமனும், விஷ்வநாதனையே புரியாமல் பார்க்க.. எனக்கு  பார்வதி நல்லபடியா திரும்பி வரணும்., அதுக்கு உன் பொண்ணு எங்க வீட்டு மருமகளா வரணும்.,  என் பேரன் விஷ்வாவுக்கு உன்னோட பொண்ண  கட்டி வைக்க சம்பந்தம் பேச வந்து இருக்குறேன்” என நிறுத்தினார்.
“விஷ்வாவிற்கு, விஸ்வநாதன் கூறியதில் இதயம் நின்று துடித்தது என்றால் அரவிந்தனுக்கோ இதயமே வெளியில் வந்து விட்டது.”
“ராஜேந்திரன், வாசன், ரத்தினம் மூன்று பேரும் விஸ்வநாதன் பின்னால் வந்து நின்று அப்பாவின் பேச்சை தட்டாத பிள்ளைகள் என செயலில் காட்ட, மங்கையோ அவர்களுக்கு முன் சென்று விஸ்வநாதன் பக்கத்தில் நின்று கொண்டார் தன் மாமனார் முடிவிற்கு சம்மதமாக.
“சிவராமன்.. கோதை முகத்தை பார்க்க கோதையோ போனை எடுத்தவர் அழைத்தார் குழலிக்கு.” 
“குழலி  பிள்ளைகளை உறங்க சொல்லி ஹாலிற்கு வர, அங்கு மீனாள் பார்வதியின் படத்தையே பார்த்தபடி அமர்ந்து இருந்தார்.  என்ன மீனா தூங்கலையா?? என கேட்டவர் கையில் இருந்த போன் அலரவும் முகம் வெளுக்க அதையே பார்த்து இருந்தார் குழலி.”  
“என்னக்கா  யாரு??” என மீனா கேட்க போனை காட்டியவர், அதை ஆன் செய்து காதில் வைப்பதற்குள் அத்தனை தெய்வத்தையும் வேண்டி இருந்தார்.
   
“அந்த பக்கம் கோதை சொன்னதை கேட்டவர் அசையாமல் நிற்க.. அண்ணி.. அண்ணி என்ற கோதையின் சத்ததில் சொல்லுங்க அண்ணி, என்றவர் அவர் சொன்னதை செய்யவதாக கூறி போனை வைத்தார். குழலியை பார்த்து நின்ற மீனாவும் அந்த இரவின் அமைதியில் கோதை சொன்னது காதில் விழ என்னக்கா.. இது இப்ப எப்படிக்கா??” என குழலியை கேட்டார்.
“குழலி பெருமூச்சினை விட்டவர், எதுனாலும் இப்ப கோதை அண்ணி முடிவுதான் நமக்கு முக்கியம், என்றவர் அவர் கூறியதை செய்து இருந்தார்.” 
“அடுத்த ஒரு மணி நேரத்தில்  பட்டு வேட்டி. பட்டு சட்டையில் விஷ்வாவும் அரக்கு சிவப்பில், பச்சை கரை வைத்த பட்டு சேலையில் துளசியும் இருக்க.. மஞ்சள் துண்டை மஞ்சள் சரடில் சேர்த்து மாங்கல்யம் செய்து இருக்க.. மனதில் கடல் அளவு சந்தோசம் இருந்தாலும் அதை முகத்தில் காட்டாமல் விஷ்வா நின்றிருக்க, அதிர்ச்சியின் உச்சதில் இருந்தாலும்  சூழ்நிலை கைதியாக துளசி அவன் எதிரில் தலை குனிந்து நிற்க, முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆசிர்வதிக்க, இருள் பிரியாத அந்த பிரம்ம முகூர்த்தில் விஸ்வநாதன் பார்வதி தம்பதி சகிதம் உறவுகள் சூழ துளசியின் கழுத்தில் மங்கல்யத்தை கட்டினான் விஷ்வ ராஜேந்திர பூபதி.” 
“அண்ணனுக்காக உறவுகளை தேடி வந்தவள் தனக்கு சொந்தமான இந்த உறவினை ஏற்பாளா….??”
                                   விஷ்வ துளசி தொடர்வாள்…………..  
 
                              

Advertisement