Advertisement

                        ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 10
“துளசி கத்தியதில்” என்னமோ? என்று பார்தவன்.. அவள் அங்கு இருந்த பிளேயரில்  அவன் வைத்து இருந்த பாடல் தெகுப்பினை பார்த்து தான் கத்தி இருந்தது தெரிந்தது. 
“அத்தான் இவ்வளவு கலெக்சன்சா!!” நா இதை எல்லாம் தேடி பாத்து பாதி கூட கிடைக்கல.. நெட்டுலையும் ரிபிட்டடாவே வருது, பீளீஸ் இதை கொஞ்சம் தாங்க நா காப்பி பண்ணிட்டு கொடுத்துடுறேன் என்றவள் அதில் சிலதை கைகளில் எடுத்து கொண்டாள்.
“ஒரு கையில் டீ கப், மற்றொரு கையில் சீடி என இருந்தவள் நெற்றி  முடி முன்னாள் விழ அதை வாயால் பூ.. பூ.. என ஊத அது இங்கும் அங்கும் அசைந்து பார்வையை மறைத்தது.”
 
“வாயால் காற்றை ஊதும் போதே துளசியின் அருகினில்  விஷ்வா வந்தவன்,  முடியை அவளின் காதின் பின் சொருக, சரியாக அவளும் வாயால் காற்றை ஊத.. இப்போது காற்று அவனின் முகத்தில் பட்டு நேராக மூச்சு குழாயை அடைந்தது”.
“தேங்ஸ் அத்தான்” என்றவள் அவனின் அறையில் இருந்து வெளியே போக, “அவளின்  உள் இருந்து வந்த காற்று இவனின் உயிரில் சென்று சேர்ந்தது.”
“துளசி சென்றதும் சில நிமிடங்கள் அவளின் நினைவில் இருந்தவன் முடிவு செய்தான் நாளை காலையே தாத்தாவிடம்  தன் துளசியை பற்றி பேச வேண்டும் என்று.”
“டார்க் புளூ  பேண்ட், வெள்ளை டீசர்ட், தூக்கி வாரிய முடி நிற்காமல் சண்டிதனம் செய்ய அதை ஜெல் கொண்டு அடக்கியவன்.. கழுத்தை ஒட்டிய செயின், வலது கையில் பிரேஸ்லெட்” என கீழே வந்தவன் நேராக விஸ்வநாதன் அருகினில் அமர்ந்தான்.” 
வந்தவர்களிடம்.. விஷ்வா நலம் விசாரித்து பேச, அனைவரும் அவனிடம் கேட்டது “ராஜா.. எப்ப உன்னோட கல்யாணசாப்பாடு போடப்போற??” என்பதே. “ஐயோ..”  ஏன் இவர்களிடம் பேசவந்தோம், இது எப்போது முடியும்??” என விஷ்வா நினைத்தாலும், அவர்கள் ஒவ்வெருவரும் கேட்கும் போதும் அவனின் பார்வை துளசியை தொட்டு தொட்டு சென்றது.
 
“ஒரு மணி நேரம் ஆகியும் அறிமுக படலம் முடியவில்லை. ஒரு வழியாக அறிமுக படலம் முடிய.. அம்மாடி இவ்வளவு சொந்தமா!! என வியந்து பார்த்தான் வினய். என்ன வினய் அப்படி பாக்குற??” என வாசன் கேட்டார்.
“இவ்வளவு பேரு நமக்கு செந்தமா மாமா??” இவங்க உறவுமுறையை எல்லாம் நா நியாபகம் வைக்கவே பல நாள் ஆகும் போலவே!! என்று பார்க்க, அவனை பார்த்து சிரித்தவர், இது பாதி தான்.. இன்னும் பாதி பேர் வெளியூர்ல இருக்காங்க என சொல்ல, வினய் அவர்களை எல்லாம் ஒருமுறை மீண்டும் பார்த்தவன் மானசீகமாக தலையில் கை வைத்தான் ‘வான்டடா வந்து மாட்டிகிறதே நமக்கு வேலையா போச்சு என்று’.
வந்த விருந்தினர்கள் அனைவரும் சென்றுவிட.. “வினயும் கிளம்பினான் ஊருக்கு.” வினய்.. காரினில் ஏற என்னவென்றே தெரியத  பயம்!! உள்ளுக்குள் உருள கண்ணில் இருந்து நீர் வர “அண்ணா நீ கண்டிப்பா போகனுமா??” என கேட்டால் துளசி. 
 
“ஊருக்கு போகும் போது எல்லாம் எதையாவது வாங்கி வா.. என அடம் பிடிக்கும் துளசி,” இன்று இப்படி கேட்பது அவனை ஏதோ செய்ய
காரில் இருந்து இரங்க முயன்றவனை, “ஊருக்குபோகும் போது இது என்ன சின்ன பொண்ணு மாதிரி அழுகுறது துளசி??” நீ.. கிளம்பு வினய் என கோதை சொல்ல, தங்கையை விட்டு போக மனதே இல்லாமல் சென்றான் வினய்.
வினய்.. சென்றதை பார்த்த படி இருந்தவளை உள்ளே கூப்பிட, நீங்க போங்கமா, நா வர்றேன் என்றவள் திண்ணையில் அப்படியே அமர்ந்துவிட்டாள்.
“ஏதோ பயம் மனதை பிசைய, வினய் போன பாதையை பார்த்தபடியே இருந்தாள் துளசி”.
சிறிது நேரத்தில், கையில் எதுவே ஊறுவதை போல இருக்க தட்டிவிட்டாள். மீண்டும் ஊர வேகமாக தட்டியவள்.. திரும்பி பார்க்க அரவிந்தன் தான் அவளின் கைகளை சுரண்டியது.
“என்ன??” என்பதாக அவனை  ஒரு பார்வை பார்க்க, “ரெம்ப நேரமா கேக் வெயிட்டிங்” என அரவிந்தன் கூற, அவள் புரியாமல் திரும்ப என்ன?? என கேட்க அவளுக்கு காதில் விழவில்லை என்ன நினைத்தவன், “ரெம்ப நேரமா கேக் வெயிட்டிங் என அவளின் காதினில் கத்தி சொல்ல, அவன் சொன்ன வேகத்தில் அவனை பட்டென தள்ளிவிட்டாள் துளசி.  திண்ணையின் முனையில் இருந்ததால் பேலன்ஸ் தவறி கீழே விழப்போனான் அரவிந்த்.”
 
“துளசி சட்டென சுதாரித்தவள், அரவிந்தை பிடிக்க.. “அம்மாடி ஒத்த கேக்குக்கு என ரத்தம் சிந்த வச்சிருப்ப போலயே” என்றவன், அவளின் கைகளை பிடித்து உள்ளே அழைத்து சென்றவன் பின்னால் இதற்கு காரணமான விஷ்வாவை கொலை வெறி பார்வை பார்க்கவும் தவறவில்லை.” 
விஷ்வா தான் துளசி அமைதியாக இருந்ததை பார்க்க பொருக்காமல் அரவிந்தை அனுப்பி சமாதானம் செய்ய வைத்தான். 
“ஹாலில் இருந்த பார்வதி சுற்றி பார்க்க, யார தேடுறீங்கம்மா?? என வந்தார் கோதை. பசங்கள தான் கோதை, எல்லாம் எங்க?? அதுகுள்ள சாப்புட்டு தூங்கிட்டாங்களா என்ன??” என கேட்க, இல்லம்மா எல்லாரும் மாடியிலதான் இருக்காங்க.
 
“அங்கையா என்ன பண்றாங்க??” என பார்வதி கேட்க
“தெரியலம்மா!!” கூப்பிடவா??”
 
“வேண்டாம்மா விடு.. எல்லாரும் பேசிட்டு இருப்பாங்க”.  என நிமிர்ந்து பார்க்க அங்கே பெரிய தட்டினை ஏந்திய படி துளசி, சுபா, ராதா முன்னால் வர அவர்களின் பின்னால் கயல், அரவிந்த், ஸ்ரீ, ஜெயந்த் வர அவர்களின் பின்னால் கடைசியாக வந்தான் விஷ்வா.”
வந்தவர்கள் “விஸ்வநாதன், பார்வதி முன்னால் தட்டினை வைத்து இருவரின் கைகளை பிடித்து திருமண நாள் வாழ்த்து சொல்ல” என்னங்கடா இது!? என பார்வதி கேட்க, துணிய எடுத்து பாருங்க பாட்டி என துளசி கூறினாள்.”
 
“துணியை பார்வதி  எடுக்க.. உள்ளே இருந்தது அழகான ரெட் வெல்வெட் வெட்டிங் கேக் அதன் மீது பாரு விச்சு என எழுதி இருந்தது. வீட்டிற்கு அனைவரையும் அழைத்திலேயே சற்று கடுப்பாக இருந்தவர்., 
“என்னங்கடா இது?? காலம் போன கடைசியில கூட்டத்த கூட்டி ஆர்பாட்டம் பண்ணுனது பத்தாதுன்னு இப்ப இது வேறயா!? என உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் வெளியே  சலிப்பது போல பேசினார் பார்வதி.”
“வாங்க பாட்டி” உங்களுக்கு சங்கடம் வேண்டாம்னு தான்.. எல்லாரும் போனதுக்கு அப்பறமா கேக் கட் பண்ண ரெடி பண்ணோம். பாட்டி பிளீஸ் வாங்க!! என அனைவரும் அழைத்தனர்.
“விஸ்வநாதன்.. பார்வதி பசங்க விருப்ப படுறாங்க செய்யட்டும்”, என கூறியவர் எழுந்து இவர்களின் அருகினில் வந்து நின்றார். 
“அரவிந்தும், ஸ்ரீயும் ஆட்டோமேடிக் கேமிராவை செட் செய்ய, விஷ்வா அனைவரையும் ஜோடியாக நிற்க வைத்தவன், துளசியின் பக்கத்தில் அவன் நிற்பதை போல் இடம் செய்தவனை, அரவிந்த்.. ‘இவனோட போதைக்கு இத்தனை பேர் ஊறுகாயா நிக்கவைக்குறான்,  அது எதுவும் தெரியாம மொத்த குடும்பமும் ஈ…ஈ…ன்னு இளிக்குதுங்க, என்றவன் மனசாட்சி அந்த இளிச்சவாய் குடும்பத்துல இப்ப நீயும் இருக்கற தம்பி’ என உண்ணமையை கூற விஷ்வாவை பார்த்தான். அரவிந்தன் பார்வையில் தெரிந்த கிண்டலில் கயல் இங்க வா என அழைத்தான் விஷ்வா”.
“அரவிந்தன் வேகமாக வந்தவன் கயலின் கையை பிடித்து நிறுத்தினான்.  இந்த இடத்தில நாங்க நின்னாதான் வியூ கரெக்டா இருக்கும். நீ.. போயி அங்க நில்லு.  துளசியின் பக்கம் கண் காட்டியவன், கயலை விட்டு விஷ்வாவின் கையை பிடித்து இழுத்து சென்றான்.”
அவர்களை விட்டு சற்று தூரம் தள்ளி சென்றவனை, டேய் கயல விட்டு என்ன ஏன்டா தள்ளிக்கிட்டு?? வர்ற விஸ்வா கேட்க,  
“அரவிந்தன்.. வாய திறந்தா கொன்னுடுவேன். என்னடா நடக்குது இங்க?? நீ 
துளசிய பாக்குற பார்வையே சரியில்லையே!! நானும் அப்போ இருந்து பாக்குறேன், துளசிய பாத்துகிட்டே இருக்குற, இப்ப என்னனா  பக்கத்துல நிக்க ரெடி பண்ற நீ?!”
விஷ்வா அமைதியாக இருக்க.
“என்னடா பதில் சொல்லு??” என அரவிந்த் கேட்க., 
“நீ தான் பேசுனா கொன்னுடுவேன்னு சொன்னியே!”
“ஆமா.. அப்பிடியே நா சொல்லறத  கேட்டுட்டு தான் மறுவேலை.வெறுப்பேத்தாம சொல்லுடா??  நீ.. துளசி கிட்ட சொல்லிட்டயா,  இல்லையே!! சொல்லி இருந்த இந்த நேரம் ஒரு புயலே வந்திருக்குமே?? என்று கேள்வியும் நானே பதிலும் நானே என பேசிய படி இருந்தான். 
“அவனை பார்த்து விஷ்வா சிரிக்க” 
அரவிந்த் “என்னடா??”  
“நா… அவகிட்ட என்னோட விருப்பத்த சொன்னா புயல் வருமா என்ன?? அவ  என்னோட துளசிடா!!  இத்தன நாள் துளசிய பத்தி எப்படி சொல்லுறது, சொன்னா என்ன பிரச்சனை வரும்?? வந்த யார எப்பிடி சமாளிக்குறதுன்னு, யேசிச்சுகிட்டு இருந்தேன். பாட்டி என்னோட கல்யாண பேச்ச எடுக்கும் போதெல்லாம், என்ன சொல்லி நிறுத்தாலாம்னு யோசிப்பேன்!!  இப்ப அந்த வேலையே எனக்கு இல்லாம பண்ணிட்டா துளசி.” 
“அதுவும் இல்லாமா  நீயும்.. அடிக்கு ரொம்ப பயந்தியா, அதுதான் உன் உடம்ப எதுக்கு வீனா வீங்க வைக்கனும், அப்பறம் என் தங்கச்சி கஷ்டபடனும். அதுதான், இப்ப நா அவள கட்டிக்க ஆசைபடுறதை சொன்ன போதும், மத்ததை பாட்டியே பாத்துபாங்க. அதனால நாளைக்கே தாத்தா பாட்டிக்கிட்ட மேட்டர ஓப்பன் பண்ண போறேன்” என அரவிந்தன் முகம் பார்த்தான் விஷ்வா
“வாயை பிளந்த படி அவனையே பார்த்த நின்றிருந்தான் அரவிந்த்”. முதல்ல காதலிக்கறேன்னு சொன்ன, இப்ப கல்யாணம் பண்ண போறேன்னு சொல்லுற. உன்ன பத்தி யோசிச்சே பெருசா இருந்த மூளை இப்ப சிறு மூளை ஆகிடுச்சு. நீ.. தாலி கட்டுறதுகுள்ள கரைஞ்சே போயிடும்டா, நானும் உங்கூட தான இருந்தேன். எப்படா இத எல்லாம் யோசிச்ச??” என்றவனின் குரலே அழுவதை போல் இருக்க விஷ்வா பதில் சொல்லலும் முன்.,   
 
“அண்ணா.. அத்தான் என்ற குரல் துளசியிடம் இருந்து வந்தது. வாங்க ரெண்டு பேரும் டைம் ஆச்சு என்றவளின் காதில் ராதா.. அத்தான் கயல கட்டிக்கிட்டாறா இல்ல எங்க அண்ணன கட்டிக்கிட்டாரான்னு எனக்கு டவுட்டு அண்ணி?”  
“எதுக்கு ராதா அப்பிடி?” என துளசி கேட்க, எப்ப பாரு ரெண்டு பேரும் லவ்வர்ஸ் மாதிரி குசுகுசுன்னு பேசிக்குறாங்க அப்பிடி என்னத்தான் பேசு வாங்களோ என சிரிக்க துளசியும் சிரித்தால்.”
“விஸ்வநாதன்.. பார்வதியின் கைகளை பிடித்து கேக்கினை கட் செய்ய  ராஜேந்திரன் மங்கை, வாசன் குழலி, கோதை சிவராமன், மீனாள் ரத்தினம் சுற்றி நின்று வாழ்த்துகள் கூற அந்த அழகான நிமிடங்களை கேமிரா தன்னுள் சேமித்து கொண்டது.”
“பார்வதி முற்றத்தில் பாயை விரிக்க.. குழலி என்னத்தை இங்க படுக்குறீங்க?”
உள்ள வெக்கையா இருக்குமா, அதுதான் இப்டி காத்தாட படுக்குறேன் என்றவர் கொஞ்சம்  சுடு தண்ணி வச்சுடும்மா, என்னமோ சாப்புட்டது செரிக்கல போல என்றவர் தலையணையில் தலை வைத்து தூங்க ஆரம்பித்தார்.”

Advertisement