Advertisement

      ஓம் நமசிவாயா
 விஷ்வ துளசி 1
 
      “ஓம் நமசிவாய  ஓம் 
நமசிவாய
              ஹரஹர சிவன்னே 
ஹரஹரசிவன்னே
          அண்ணாமலையே 
போற்றி…”
என,  எஸ்.பி.பி  குரலுடன்  “கந்தா” என்ற 
குரலும் வர..
“அம்மா தண்ணி கேனை
முன்னாடி வைக்கவா..??”என்றபடி வந்த கந்தனை
பார்த்தவர் 
“சின்னதை முன்னாடி வை..?
சாப்பாடு எங்க..?”
“பின்னாடி வச்சுட்டேன்மா..”என்றவனை
பார்த்தவர்  மங்கை…,
மங்கை விஸ்வநாதன் பூபதி பார்வதியின்
மூத்த மருமகள்  ராஜேந்திரனின் மனைவி…
இரண்டாவது மகன் வாசன் மனைவி குழலி…
மூன்றவது மகள் கோதை மருமகன் 
சிவராமன் நான்காவது மகன் ரத்தினம்
மருமகள் மீனாள்,
தென் புதூர் கிராமத்தின் பெரிய குடும்பம்
இப்போது தயார் ஆவது குலசாமி கோவில
திருவிழவிற்கு
காரின் முன் புறம் ராஜேந்திரன் அமர பின்
புறம் மங்கை பார்வதி அமர,
“ கந்தா நைட்டுக்கு மணிய கூப்டுக்கோ.. ?
காலைல வெள்ளனா ரெண்டு பேரும் வந்துடுங்க…?”
என்ற படி ஐநுறு ரூபாய்
நோட்டை அவனின் கையில் வைத்து
டிரைவரை பார்த்து சைகை செய்ய கார் அந்த
வீட்டை  விட்டு வெளியேறியது..
காரில் அப்படி  ஒரு “அமைதி 
யார் முகத்தை யார் பார்ப்பது?
யாரிடம் என்ன கேட்பது? என்று தாய் மகனிடம்
மட்டுமே அந்த தயக்கம்? மங்கையின்..
முகமோ எந்த உணர்வையும் காட்டாது
வெளியே வேடிக்கை பார்க்க!! “காதுகள் மட்டும் 
அவர்களின் பேச்சில் கவனம் கொண்டது”
ராஜேந்திரா.. இந்த தடவையாவது நா.. இல்ல.. இல்ல..
நாம நினைச்சது நடக்கும்மாப்பா..?
என்றவரின் பேச்சு மகனிடம் என்றலும் கேள்விக்கான
பதிலை தேடியது மங்கையிடத்தில்..,
நா.. என்னம்மா சொல்றது நேரகாலம்
கூடி வந்தா தானா நடக்கும்.. என்றவர்
கைபேசி சத்தமிட அப்பா.. தப்பிச்சாச்சா..!! 
என்ற “மனதின் குரலுக்குஅப்புறம்… 
மாட்டிகிட்டது நாதான.. நீயா??
என்று மனதிடம் சண்டையிட…, 
ரவி.. “முன்னாடி நிழல இருக்குற இடமா
பாத்து நிறுத்து சாப்புட்டலாம்” என்றார் மங்கை…
 
அத்த “மாத்திரை என்று மங்கை கையை நீட்ட
பார்வதி அதை கையில் வாங்கியவர் பெருமூச்சை
விட்டவர் எதும் சொல்லாமல் அதை
சாப்பிட.. இருவரும் அறியாமல் கண்ணீரை 
துடைத்து கெண்டார்” மங்கை
அவருக்கு மட்டும் அவரின் கேள்விக்கு
பதில் தெரிந்தால்..? தன்னை மகளாய் 
பார்க்கும் மாமியரின் இத்தனை வருட
ஏக்கத்தை ஒரு நொடியில் தீர்த்திடுவாரே..
பார்வதி… “உறங்குவதை பார்த்தவள் ஏதோ சொல்ல வர  மங்கை விடு கோயில் விஷேசம் முடியட்டும் யோசிக்கலாம்” என்று கண்களை மூடிக்கெண்டார் ராஜேந்திரன்
மங்கையின்.. மனதில் ஏதேதோ நினைவுகள்
“சுகமா துக்கமா”.. என்று பிரித்தறிய முடியாதபடி
அவரின் மனதை அழுத்த..,
மழை தூர ஆரம்பித்தால் வெப்பம் குறைந்து லேசான
காற்று வீச  மன அழுத்தத்தை மீறி கண்கள் உறக்கத்தை தழுவியது..
கயல் “ஸ்ரீ  அந்த ஹோட்டல் கிட்ட வண்டி
நிறுத்து சாப்புட்டு கிளம்பலாம்”..,  
ஜெயந்த்  கயல் முகம் பார்க்க?
அக்கா… இங்க வேணாம்  “ஆனந்த பவன்ல
நிறுத்துறேன்” என ஸ்ரீ கூறினான்
ஐயே “நீங்க ரெண்டு பேரும் அங்க சாப்புடுங்க??
எனக்கு “இங்கசாப்ட்டாதான்  வயிறு நிறையும் 
திருப்தியா  இருக்கும்..” என ஜெயந்த் கூறினான்
 
டேய் “சாப்பாட்டு ராமா இங்க  சுத்தமா  இருக்காதுடா?? என்று கயல் வழக்காட”…. 
நீயும்.. அவனும்… வேணும்னா போயி “கிண்ணத்துல
சாம்பாரும் சட்டினியும்..,  ஸ்புனும்..,”
குடுக்குற கடையில சாப்புடுங்க..,
எனக்கு  இந்த கடையே போதும் என்றிட..,
“கயல்க்கா” ரோட்டு கடைலதான்.., பெரிய
ஹோட்டஸ்ச விட  டேஸ்ட் நல்லா 
இருக்கும் என..,
“ராதாவும் சுபாவும் ..,ஜெய்ந்துக்கு…, ஆதரவாக 
பேச ஸ்ரீ காரை  ஹைவேசில் இருந்த ஒரு
கடையின் முன் நிறுத்தினான்…
அது “” ஹைவேஸ்சில் உள்ள ஹோட்டல்., 
எதிர் புறம்.., ஒரு பாலிடெக்னிக்..,  மற்றும்  
பஸ் ஸ்டாப்.., இருக்க கல்லுரிக்கு காலையில் 
வேகமாக  வரும் நபர்கள்.., சாப்பிடவும் 
மாணவர்கள்…, தங்கள் வாகனத்தை நிறுத்தவும்…,  
வெளியூர் செல்பவர்கள்  பஸ்க்காக அங்கு நிற்க..,
என அந்த இடம் சற்று மக்கள் அதிகம் இருக்க
ஸ்ரீராம்  அங்கு  சென்று வண்டியை நிறுத்தினான்….
அனைவரும் தங்களை சுத்த படுத்தி கொண்டு 
சேரில் அமர..,
 வந்த “சர்வரிடம் ஜெயந்த்….
அண்ணா மெனு சொல்லுங்க”.., என சர்வரை கவனிக்காத
“ஸ்ரீ  இட்லி  பூரி  காப்பி “என்றிட.., 
“ராதா ஸ்ரீண்ணா நீங்க எப்ப சர்வர்” …..,ஆனீங்க
என்று “கிண்டலாக” கேட்க
அவளை பார்த்த ஸ்ரீயை சுபா ..,
“கையை ஆட்டி அக்கட சூடு அண்ணையா….”  என்றிட
அவள் கை நீட்டிய திசை  நோக்க ..,அங்கு
“ஜெயந்த் சர்வரிடம் வார்த்தைக்கு ஒரு
அண்ணா  சொல்லி மெனு சொல்ல “..,ஸ்ரீயின்
கண் தோசை கல்லை விட அனல் ஆகியது.
டேய்!!!! “”அவன எத்தன அண்ணா சொல்ற?? என்ன
“என்னிக்காவது அண்ணா சொல்லிருக்கியாடா??
.நீயும்.,  “அந்த அண்ணா மாதிரி  பாசமா சாப்பாடு
குடுத்தா நா உன்ன அண்ணா??! கூப்புடுறேன் 
என்று வந்த தோசையை முழுங்க,
சாப்பாடா !!!…டேய்…, நீ…, “சப்புடுறத்துக்கு நா.. 
தான் பில் கெடுக்கனும் 
அது என்ன உன் பணமா?? தாத்தா,
அப்பா, சம்பாதிச்சது நீ வெறும் டிஸ்டிபியூட்டர்!!
மட்டும் தான் கேசியர் இல்ல ..,”
“வேணான்டா!! நா தான் டிரைவ் பண்ணனும்
ஓவரா பேசுன கார்ல இருந்து ஸ்டெப்னிய
துக்கி போடுற மாதிரி  உன்னையும் 
தூக்கி போட்டுவேன்  என பேச “…..
கயல்…. டேய் நிறுத்துங்கடா….. 
“லேட்டாச்சுனா அதுக்கு வேற திட்டு
வாங்கணும் சப்பிட்டு கிளம்புங்க
வண்டியில மிச்சத்த பாத்துகலாம்”..
என அத்துடன்  சாப்பிடும் வேலை கையும்..,
வாயும்.., தொடர கண்கள் மட்டும்
சண்டையை தொடர்ந்தது…..
வண்டியை நகர்த்த கியரில் கை 
வைக்க …டேய்!!.., ஸ்ரீ வண்டியமூவ் பண்ணாத 
என்றவாறே ஜெயந்த் கீழிறங்கி ஒட
என்ன ஆச்சி !!
 என்று அனைவரும் அவன் பின் ஓட 
அவன் நின்ற இடத்தை பார்க்க ஸ்ரீ யின்
கோபம் உச்சத்தை தொட்டது……
“ஸ்ரீ அவன் முதுகில் நான்கு அடியை வைத்தவன்”….
“எருமை…மாடு.., எத்தன தடவ சொல்றது சின்ன 
பையனா நீ.., கொடுக்காபுளிய பாத்தது இல்லையாடா??
என திட்ட”..,
பாவமாக ஸ்ரீயை பார்த்தவனை..,  சரி.., வாங்கிட்டு வா என ராதா.. கொடுத்த தண்ணீரை குடித்தபடி
திரும்ப….,கயல் யாருடனோ சிரித்தபடி பேசுவது 
தெரிந்தது…,
“ஸ்ரீ  கார் பக்கம் வர அவனை பார்த்தவள்
இது ஸ்ரீராம், இது சுபா என் சித்தப்பா 
பையன் பொண்ணு..  இது ராதா, இது ஜெயந்த்
எங்க சின்ன சித்தப்பா பசங்க”..,
என அறிமுகம் படுத்தியவள் 
அவர்களிடம் திரும்பியவள் இது திவ்யா…, 
நம்ம கோயிலுக்கு தான் போறாங்க…, ரெம்ப 
நோரமா பஸ் வரல   நாம அழைச்சுகிட்டு
போகலாமா??  என்று பார்க்க 
“வட்டமுகம் சிறிய நெற்றி, அதில் வில்லை ஒட்ட வைத்த புருவம் சற்றே அடர்த்தியாக இருக்க, கோலிகுண்டு கண்கள் இங்கும் அங்கும் அலைய.. சிறிய கூர் மூக்கின் நுனியில் என்னை ஒரு முறை தொட்டுப்பார் என அழைக்கும் சிறிய மச்சம், மேலிது சிறியதும் கீழே பெரியதும்மான உதடுகள் அதே அவளுக்கு தனி அழகினை கொடுக்க, புளூ ஜீன்ஸ் பிஸ்தா கிரீன் லாங் குர்தாவில்
பிங்க் நிறத்தில் மெழுகு பொம்மையாய் நின்றிருந்த
திவ்யாவை..,  ஸ்ரீ சந்தேகத்துடன்  பார்த்தான்
“திவ்யா சிரித்தபடியே சாரி காலைலயே
வந்துட்டேன்”…., “பஸ் டைமிங்குலதான் வரும்னு 
சொல்றாங்க??
அதான்.., நீங்க.., அந்த பக்கம் போனா டிராப்
பண்ண முடியும்மானு?? கேட்டேன்”..,
என்றிட ஸ்ரீ சிறிய தலை அசைவுடன்
வண்டியில் அமர சிறு மழை தூர  தன் 
இடம் நோக்கி பயணப்பட்டது அந்த
மெர்சிடிஸ்…,
             
தாத்தா என்ற அனைவரும் கீழிறங்க புதிதான 
திவ்யாவை அனைவருமே  பார்க்க??..
இவங்க திவ்யா.. கோவிலுக்கு  தான்  வர வழி 
தெரியாம நின்னுட்டு  இருந்தாங்க…  
அது… தான் கூப்பிட்டு வந்தோம்…. என்று அவளை
அறிமுகம்  செய்தபடி அனைவரும் உள்ளே செல்ல….
,திவ்யா தயங்கிய படி அங்கேயே நின்றாள்.
தாத்தா.., ஏம்மா நின்னுட்ட உள்ள வா ,  இல்ல
தாத்தா பிரண்டு வந்துடுவா நா… போறோன்??
என்று கிளம்ப
தாத்தாவோ அடடா… என்னமா நீ….
“அவங்க வர நேரம் ஆனலும்  ஆகலாம் 
அவங்க வர்றவரைக்கும் நீ இங்க இரு”… 
குழலி பசங்களுக்கு குடிக்க சூட குடு… என்று 
விட்டு ஆண்களுடன் கோவிலுக்கு 
சென்றுவிட்டார்.
திவ்யா சென்று குளித்து  உடைமாற்றி வர
அவளை கண்டு அனைவரும் சிரிக்க  
திவ்யா புரியாமல் அவர்களை பார்த்தாள்..
திவ்யா போட்டிருந்தது “பிளாசோ என்னும் தெல தெலா பேண்டும் அற்கான சட்டையும் போடும் இடதிற்கு  நேரத்திற்கு ஏற்ப  அந்த உடையின் தோற்றம் மாறும்”…
என்னம உடுப்பு இது என்று மீனா கேட்க …, 
இதா ஆண்டி “பிளாசோ   என்று அவர்
கொடுத்த டீயை  வாங்கிய படி  பதில் கூற”…
அவள்  வாங்கிய கப்பை வாங்கிய விதத்தை  
யோசித்தபடியே??.. நின்றவரை  வெளியே 
கேட்ட சத்தம் களைத்தது..
“என்ன சத்தம்?”… என எல்லாரும் வெளியே 
வர  கூட்டமாக இருந்ததால் யாருக்கும் எதுவும் புரியவில்லை??
ஏன்டா,… குடிச்சுட்டு கோயிலுக்குள்ள வரகூடதுன்னு 
தெரியாதா?? எவன்டா, அது… 
என்ற குரல்  சத்தமாக.., மைக்செட் பாட்டு 
சத்தத்தையும் மீறி வர அந்த சத்தம் கேட்ட
நிமிடம் சுற்றி இருந்த  கூட்டம்
காலியாகி இருந்தது!….
“யார்டா அவனுங்க??”…. நம்ம, பரமு வீட்டுக்கு வந்த பசங்கண்ணா…. 
தெரியாம என்று வேலு இழுக்க…. 
             
“அறைஞ்சேனா பாரு இதெல்லாம் பாக்க தான
நீங்க எல்லாம் இருக்கீங்க  
என சத்தமிட”…..  
“ஐயா ராஜா”….  என்ற பாட்டியின்  குரலில் திரும்பினான்
ராஜா என்கிற “விஷ்வ ராஜேந்திர பூபதி” 
“ஆறடி உயரம் அதற்கு தகுந்த ஜிம் பாடி, நீள் வட்ட முகம், அகலமான நெற்றி அது தனக்கு மட்டும் என செந்தம் கொண்டாடும் அடக்கினாலும் அடங்காத அலை அலையான கேசம்,  தப்போ சரியோ எதுவும் என்னிடம் தப்பாது எண்ணும் கூர்மையான கண்கள்,,  கூர் நாசி, கட்டை மீசை அதில் அடங்கும் சிவந்த உதடுகள் கொண்ட வாய், கோதுமை நிறம், எவன் வந்தாலும் அடிச்சுட்டுத்தான் பேசுவேன், என்னும் உடல் மொழியில்”  வெள்ளை வேட்டியை தூக்கி கட்டி மஞ்சள் துண்டினை மேலே போர்த்தி நின்றவன் கண்ணில் பட்டது….,
                                                          
மிட்டாய் கடையை “வெறிக்க வெறிக்க பார்க்கும் சிறுமியை போல தன்னையே பார்த்து கொண்டிருக்கும் திவ்யாவை தான்”…
அவளை மேலிருந்து கீழாக ஆராய்ச்சி பார்வை பார்த்தவன்…  இன்னும் திறந்தவாய் மூடமல் பார்த்து தன்னையே நின்றவளை!! பார்த்து அறிமுக சிரிப்பு சிரிக்க திவ்யா கண்களை இன்னும் விரித்து  பாரத்தாள்!!….
 
“என்னம்மா அப்படி பாக்குற??”…. என பாட்டி கேட்க…,
 அது “எப்படி பாட்டி…, தாத்தா…,  “இப்படி 
போயிட்டு வர்றதுகுள்ள  இவ்வளவு யங்கா!!??” 
ஆகிட்டாரு”… என கேட்க இப்போது விழி விரித்து அவளை பார்த்தது விஷ்வா…. 
ஆம்.., “விஸ்வநாதன் அப்படியே விஷ்வாவை போன்றே இருப்பார்..  விஷ்வாவின்
ஜாடையும் பேரும் விஸ்வநாதனை கொண்டு அமைய பெரியவர்களின் பெயர் கூடாது என்று விஷ்வாவை ராஜாவென்றே அனைவரும் அழைப்பது”..
“நொடியில் சுதாரித்த விஷ்வா”…, அவளை 
பார்த்த படியே யார் பாட்டி இந்த 
சோளகொல்லை பொம்மை??  என  புருவம் உயர்த்தி கிண்டலாக கேட்க..,
யாரு…? யாரு…? “சோளக்கொல்லை பொம்மை”… 
என்று கண்ணை உருட்டியபடி…. திவ்யா கேட்க
 அவளின்  பாவனை இன்னும் சிரிப்பினை  
கூட்ட …, 
சிரித்தபடி உள்ளே சென்றவன்… பின்னே… 
“நீங்க நீங்க” என்ற படி.., அவன், பின்னோடு இவள் 
செல்ல ஆமா “நாங்க நாங்கதான்”…, என்ற 
படி அமர்ந்தவனை பார்த்தவள்…,
“‘ என்ன பதில் சொல்ல என்று விழித்தபடி நின்றால்!….
பதில் இல்லாமல் இல்லை…, ஆனால்,,, 
“புது இடம், புதிய மனிதர்கள், தான் ஏதாவது 
துடுக்காக பேசி யாராவது தவறாக நினைத்தால் “
‘என்ற எண்ணம் எழ…, 
அமைதியாக ‘விஷ்வாவின்’ முகம் 
பார்த்தால்…,
“”முகம் பார்க்கும் கண்ணாடியை…, “”திவ்யா 
முன்…, கயல் காட்ட…, “திவ்யாவின் அந்த லூசான  பிங்க் வித் கிரீன் பிளாசோவில்… பேண்ட் முக்கால் காலுக்கும் சற்று கீழ் இருக்க, முழுகை சட்டையை முட்டிகை வரை மடக்கி விட்டிருக்க, முடியை தூக்கி கொண்டை போட்டதால், பேண்டில் இருந்து விடுபட்ட முடிகள் நெற்றியில் புரள” அவள்நின்றிருந்த  கோலத்தில் அவளுக்கு மனதில் ஓடியது இதுதான்…,  “என்ன 
விட சோளக்கொல்லை பொம்மை நல்லா இருக்கும்!!!” என்று அசடு வழிய நின்றாள்
கயல்.. மாமா  மதுரைக்கு வந்துட்டாறாம்.., என போனுடன் ஜெயந்த் ஓடி வர 
டேய் மெதுவா வா கீழ விழுந்தா என்னாகுறது
“அவனுக்கு ஒன்னும் ஆகாது  நமக்குதான் கைகால் முறியும்”, என்ற படி உள்ளே வந்ததது 
கயல்விழியின்.., “கணவன் அரவிந்தன்” தான் 
அவனை பார்த்த அதிர்ச்சியில் அனைவரும்
நிற்க ரத்தினம் அவன் பின் வந்தவர் 
அவனை வரவேற்றார்..  
வேகமாக அவனிடம்  வந்தால் கயல்..,
  
வந்தவளை., அவளை விட வேகமாக தடுத்து நிறுத்தினான்.., விஷ்வா 
அவர்களை விட வேகமாக வந்து கட்டிக்கொண்டான் அரவிந்தனை ஜெயந்த்!!..
அனைத்தவனை தூக்கி சுற்றி!!.. கீழேவிட 
சிரித்தபடி டீயை அரவிந்தனிடம்..,  தந்தார்  
குழலி.
ஜெயந்த்.., ஏ!! மாமா?? நீங்க இப்ப தான் 
மதுரைல இருக்கேன்னு பொய் சென்னீங்க..,
 
சர்பிரைசா!!.. இருக்கட்டும்னு சொன்னேன்டா 
ஏ… சின்னமச்சான்..,
 
நீ..இப்படி வந்து “கட்டிப்புடிப்பைனு தெரிஞ்சிரிந்தா!! 
கண்டிப்பா சொல்லிட்டு லைப்காட்?? போட்டுட்டு வந்துருப்பேன் என்று சிரிக்க..,
மாமா.. என்று மீண்டும் அவன் கட்டிபிடிக்க மீண்டும் சிரிப்பலை அங்கே
சம்பிரதாய பேச்சுக்கள் முடிய “மணி 
நீ.. மாமா கிட்ட தம்பி வந்தத சொல்லிட்டு வா”..
நீங்க.. எல்லாம் கிளம்புங்க என்றுவிட்டு 
உள்ளே சென்றுவிட…,
ஏன்டா!!.. டேய்.. “பொண்டாடிய பார்த்து ஒரு
மாசம் ஆச்சு!!  வந்து பாத்தா நீ.. உதங்கச்சிய 
புடிக்குற உதம்பி என்ன கட்டி பிடிக்குறான்”
“ஆனா நா மட்டும்??” என்டா பண்ணேன்.., உனக்கு 
என சீற..,
அது வேண்டுதல்டா…, மச்சான் என்று விஷ்வா கள்ள சிரிப்பு சிரிக்க..,
அரவிந்தன் விஷ்வாவை பார்த்து முறைக்க..,
“கயல் தம்பிய குளிக்க சொல்லிட்டு.., வேகமா 
ரெடியாக சொல்லு.., கோயிலுக்கு போகனும்.. 
தம்பி வந்ததும்.., அழைச்சிகிட்டுவா 
என்றுவிட்டு..,
குழலி முன் செல்ல “விஸ்வா, திவ்யா, 
கயல், அரவிந்தன் மட்டும் இங்கிருக்க 
மற்றவர்கள் அவருடன் சென்றனர்..
அரவிந்த் திவ்யாவை.., யார் என்று பார்க்க விஷ்வா அவளைபற்றி கூறினான்
“நீ போகலையா” என்று விஷ்வா .., திவ்யாவை பார்க்க 
“நா எப்படி?? அங்க எனக்கு யாரையும் தெரியது..,
என்னோட ஃபிரண்டும் இல்ல என்று தயங்க
“ஏ??.., எங்கள உனக்கு தெரியாதா??.., போ..,
போயி சீக்கிரம் ரெடியாகிட்டு வா..,” என்று 
ஏவினான்.., 
அவனை சங்கடத்துடன் பார்த்தபடியே இடம் 
விட்டுச்சென்றாள் திவ்யா..
“விஷ்வாவை ஆராய்ச்சி பார்வை பார்த்த
அரவிந்தனை  புருவம் தூக்கி என்ன??.., 
என்றவனை..,
 
பொண்ணுங்க.., கூட பேசுவ ஆனா யாருன்னு 
தெரியாத பொண்ணுகூட 
இவ்வளவு பேசுவியா நீ??.., என்றிட
“என் தங்கச்சி உள்ள போயி பத்துநிமிசம் ஆகிருக்குமா?? என பேச்சை மாற்ற
 
அடுத்த நொடி நீ பேசுன்னா என்ன? பேசாட்டி என்ன?
என்றபடி மனைவியிடம் சென்றிருந்தான் அரவிந்த்..,
“விஷ்வா”.., என்ற குரலில் திரும்பியவன்.,
தலை கிறுகிறுத்துதான் நின்றது..
அவள் போட்டிருந்த அதே “பிளாசோதான் இடுப்பில் சிறிய கயிற்றை கொண்டு முடிச்சிட்டு.., கையை
முட்டிவரை மடக்கி.., கழுத்து காலரை வி 
வடிவில் மடக்கி பின்னால் ஏற்றிவிட்டிருக்க., 
அது முன்னிறங்கவா., வோண்டாமா என்று  
யோசித்து பின் அதற்கு உரிய இடத்தில் சரியாக நின்றது..
சாதரண உடைதான் அது..,அது அவளுக்கு அவ்வளவு அழகாக இருந்தது ஆனால் இந்த இடத்திற்கு அது பொருத்தமாக இல்லை..  வந்திருந்த பெண்கள் எல்லாம் சுடிதார் சேலை தாவணியில் இருக்க இவள் அணிந்திருந்தது அவளை தனித்து காட்டியது..,  
காதில் நீளமான ஸ்டராப் வகை தோடு கையில் 
தங்க கடிகாரம் நெற்றியில் சிறு பொட்டு..,முடியை 
ஃபிரஞ்ச்நாட் இட்டு முன்னால் போட்டிருக்க.,
காலில் பென்சில் பாயிண்ட்டடு ஹீல்ஸ்
என்று ஸ்டைலாக நின்றவளை பார்த்தவன்
மறந்தது அவனை மட்டும் அல்ல 
அவள் அழைத்த பெயரையும்தான்”..,
                        விஷ்வ துளசி தொடர்வாள்……………………       
           

Advertisement