Advertisement

காலையில் கண் விழித்த ஸனா, தன் போனை எடுத்து நேரத்தை பார்த்தாள்.

அது ஆறு மணி என காட்டியது, எழுந்தமர்ந்தாள்.

தலைமுடியை தூக்கி கிளச்சரை மாட்டியவள், எழுவதற்காக திரும்ப கீழ் படுத்திருந்த அதியன் அங்கில்லை.

தோள்களை குலுக்கியவள் பாத்ரூமிற்குள் புகுந்தாள்.

அதியன் ஐந்து மணியளவில் எழுந்து கிளம்பி விட்டான்.

ஒரு ஆடிட்டிங் ரிப்போர்ட் தயார் செய்ய, சில வேலைகள் இருக்க விடியற்காலையில் சென்றிருந்தான் பத்து மணிக்கு எல்லாம் ரிப்போர்ட் சமர்பிக்க வேண்டும் என.

ஆனால் அதியன் பரணியை அழைத்து ஸனாவின் கால்ஷீட்டை திரும்ப கொடுக்க போன் பண்ண சொல்லி நினைவுப்படுத்தினான் போகிற வழியில்.

பரணிக்குமே அது நினைவு இருந்தாலும், அதியன் சொன்னதும் அவனின் அன்பை உணர தான் செய்தார்..

அவருக்கும் புரிந்தது தாத்தாக்காக அவனோட ஆசையை மறைக்கிறான் என்று.

பரணி, நவநீதத்திடம் மீண்டும் ஒரு தடவை பர்மிசன் வாங்கி அவர் முன்னே புரொடியூசருக்கு பேசி ஸனா நடிப்பதில் பிரச்சனை இல்லை என்று தெளிவுப் படுத்தினார்.

****

காலை உணவை அளந்தவாறே அச்சு போனில் கதை அடித்துக் கொண்டிருந்தான்.

அஜி கவனித்தப்படி சாப்பிட்டு முடித்து, கிளம்பிக் கொண்டிருந்தாள்.

அச்சு போனை வைக்க.. “யாரது…?” என்றாள் அஜி.

“அதியன் தான் அஜிமா..”

“இன்னுமா அவன் உன் கிட்ட பேசுறான்..” என்றாள் கடுப்பாக.

“ம்ம்ம்! உன் தில்லாங்கடி வேலை எல்லாம் எங்க கிட்ட பலிக்காது அஜிமா, நவநீதத்தையே தண்ணி காட்டிட்டு பேசிட்டு இருக்கோம்..” என்று சிரித்து வாயில் சாப்பாட்டை அமுக்கினான்.

“ஆமா! ஆமா! பிராடு வேலை எல்லாம் சர்வ சாதரணம் தானே”

“ஹேய்! டார்லிங், நீ அதியன் மேல கோபமாக இருக்க.. தெரியுது. பட் அவன் நல்லவன்டி….”

“ஆனா அவரோட தாத்தா ஸனாக்கு எப்படி எல்லாம் பிரச்சனை தரார் தெரியுமா…?”

“என்ன அந்த சான்ஸ் கேன்சல் பண்ணது தானே.. அது எல்லாம் சரி ஆகிட்டு, இன்னும் கொஞ்ச  நேரத்தில் டைரக்டர் கூப்புடுவார் பாரு..”

“என்ன சொல்றீங்க அச்சு…?”

“ஆமா! இப்ப தான் அதியன்  சொன்னான் அத பத்தி.. உன் கிட்ட சொல்லி  உன் ஃப்ரண்டை கவலைப் பட வேண்டாமுனு சொன்னான்..”

“நிஜமாவ. எப்படி  நடந்தது…?”

அச்சு நேற்று இரவு வீட்டில் நடந்ததை கூறினான்.

“அதானே பார்த்தேன் ஸனா சரியா தான் பேசி இருக்கா இல்லைனா அந்த பெரிய மனுசனுக்கு எல்லாம் புரியாது…”

“அதியன் பேசியதால் தான் நடந்தது அஜி.. புரிஞ்சுக்கோ..”

“என்னத்த பேசினார். சரியான தாத்தா பைத்தியம்.. கடுப்பாக்காத ப்ரண்டுக்கு சப்போர்ட் செய்றேனு…” என்று திட்டினாள்.

“சரி விடு ஒத்துக்க மாட்ட. ஏன் அஜி, அதியனுக்கும் ஸனா மேல லவ் இருக்கு, ஸனாக்கும் சம்திங் இருக்க மாதிரி தான் தோணுது.. ஏன் அவங்களை இப்படியே வாழ நம்ம ஹெல்ப் பண்ண கூடாது..?” என்று முடிக்கவில்லை.

அஜி அருகில் கிடந்த ரிமோட்டை எடுத்து அடித்தாள்.

“ஏய்! இருடி.. நான் இப்ப என்ன கேட்டேன்…?” என்று விலகினான்.

“என்ன கேட்டீயா…? ஸனா பாட்டுக்கும் இருந்தா உன் ப்ரண்டு தான் காதல், கத்திரிக்காய், முட்டைக்கோஸுனு அவளை சீண்டிவிட்டு இப்ப எங்கயோ போய் நிக்குது. சரி இந்தளவு செஞ்சவன் தாத்தா தான் முக்கியமுனு முறுக்குறான்.

அவங்களை சேர்த்து வைக்கனுமா..? ஸனாக்கு எந்த சம்திங்கும் இல்லை நீ தேவை இல்லாம கற்பனை செய்யாத…” என்று எழுந்தாள் ஹேண்ட்பேக்கை எடுத்துட்டு.

“ம்ம்ம்! உன்னை மாறி ஒருத்தியும் அவன் தாத்தா மாறி ஒருத்தரும் இருக்க வரை அவங்க சேர முடியாது..” என்று முனகினான்.

“என்ன..?”

“ஒன்னுமில்லை தாயே நீ கிளம்பு.. நான் ஈவ்னிங் வர லேட் ஆகும்.. பை” என்று அவனும் வெளியே வந்தான்.

***

ஷூட்டிங் ஸ்பாட்..

ஸனா அந்த சீன் முடிந்து பிரேக்குகாக அமர்ந்தாள்.

அவளின் போன் அடித்தது.. எடுத்துப் பார்த்தவளுக்கு ஆச்சரியம் அந்த டைரக்டர் தான்.

“ஹலோ சார்! சொல்லுங்க…” என்றாள் ஆர்வமாக.

“முதலில் சாரி ஸனா. நேற்று நான் அஜி கிட்ட தான் சொன்னேன் உனக்கு பதில் வேற ஒரு ஹீரோயின் போடப் போறேனு. ஏனா உன் கிட்ட நேரில் சொல்ல முடியல.”

“பரவாயில்லை சார் இது உங்களை தாண்டி எடுக்குற முடிவு தானே.. நோ ப்ராப்ளம். வேற சான்ஸ் வரப்போ பாத்துக்கலாம்..” என்றாள் சாதரணமாக.

“வேற சான்ஸா.. அதே ரோலில் நீ தான் நடிக்கப் போற. புரோடியூசர் மறுபடியும் உன்னையே சொன்னதும் நான் ஹேப்பி ஆகிட்டேன் பட் கண்டிசன் போட்டுட்டேன் இனி உன்னைய மாற்ற முடியாதுனு..”

“நிஜமாவ சார். எப்படி.?”

“அது எல்லாம் எதுக்கு. நவநீதம் சார் தான் முதலில் மறுத்ததா சொன்னாங்க இப்ப ஓகே சொல்லிட்டாராம். என்ன இருந்தாலும் நீ அவங்க வீட்டு மருமக. உங்களுக்குள்ள பெர்சனல் இஷ்யூ இருக்குனு தெரியும் பட் எனக்கு என்னோட படம் தான் முக்கியம். நீ தான் அந்த ரோல்.. நைட் எல்லாம் ஒரே யோசனை எப்படி புதுசா செலக்ட் செய்வதுனு தேங்க் காட் உன்னையே ஓகே பண்ணிட்டாங்க. நீ ரெடியாகு இன்னும் ஒரு வாரத்தில் ஸ்டார்ட் பண்ணிடலாம்..”

“ம்ம்ம்! தேங்க்ஸ் சார். கண்டிப்பா..”

“அப்புறம் ஸனா ஒரு முக்கியமான விஷயம்.. வாட் எவர் உன்னோட பெர்சனலுனு நான் ஒதுங்கினாலும் இப்ப நீ மேரிட் பொண்ணு. சோ எனக்கு சில அக்ரீமென்ட் நீ செய்யனும்.”

“புரியலை சார்..”

“நார்மல் அன்ட் அஸ்யூஸ்வெல் நீ மேரிட் ஆகிட்ட சில சிட்டிவேசனால் அது உன் பிரச்சனை. பட் நீ இந்த டு இயர்ஸ்க்கு குழந்தை பெத்துக்க கூடாது. புரியுமுனு நினைக்குறேன்.”

“புரியுது சார்”

“உன்னைய பத்தின ரூமர்ஸ் இருக்கு இப்ப நீ கன்சீவ்வா இருக்கனு. அது உண்மை இல்லைல. ஏனா நான் க்ளியரா ப்ராஜெட் ஸ்டார்ட் பண்ணனும்..”

“நோ ப்ராப்ளம் சார். உங்க ப்ராஜெட்டை நான் க்ளியரா முடிச்சு தரேன்…”

“தேங்க்ஸ்.. சோ மச்..” என்று போனை வைத்தார்.

ஸனா போனை வைத்துவிட்டு மனதில் சிரித்தாள். தன் கல்யாண வாழ்க்கையே ஒரு கேம் ஷோ மாதிரி போகுது இதில் குழந்தையா…? என்று நினைத்து.

ஸனா முகம் மகிழ்ச்சில் இருக்கவும் அஜி விசாரித்தாள்.

ஸனா டைரக்டர் கால் செய்ததை கூறினாள்.

“ஓ! இந்த அச்சு சொன்னது உண்மை தானா…” என்றாள் தானாக.

“என்ன சொன்னார்…?”

“ம்ம்ம்! அவன் ப்ரண்ட் அதான் அதியன் பேசி இருக்கனாம், உனக்கு சான்ஸ் கிடைச்சிடுமுனு.. “

“ஓ! நைட் பேசினதை சொல்லி இருப்பான்..”

“அதான், நீயும் சரியா தான் பதிலடி கொடுத்து இருக்க அந்த கிழவருக்கு ஸனா.. இது என்ன குறுக்குப் புத்தி..” என்று திட்டினாள் அஜி.

“விடு அஜி, அவரை பத்தி தெரிந்தது தானே. இப்ப நான் ஹேப்பி நானா அந்த சான்ஸை கேக்க கூடாதுனு நினைச்சேன் அதே மாதிரி தானா வந்துவிட்டது..” என்று அஜியை கட்டி அணைத்தாள்.

“உன் மனசு அப்படி ஸனா, நல்லதே தான் நடக்கும்..” என்றாள் அஜி.

***

இரவு ஷுட்டிங் முடிந்து வீடு திரும்பினாள் ஸனா.

வெளியில் சாப்பிட்டு வந்ததால் நேராக தங்கள் அறைக்கு சென்று விட்டாள்.

அதியன் ஹாலில் தான் அமர்ந்திருந்தான். ஸனா நேற்று மாதிரி இல்லாமல் இன்று நார்மலான காஸ்டியுமில் போனாள் மாடிக்கு.

அதை கண்டவனுக்கு மனம் நிம்மதியானது.

ஸனா ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு கட்டிலில் அமர, அவளின் அம்மா போன் செய்தார்.

“சொல்லுங்கம்மா நல்லா இருக்கிங்களா…?”

“நல்லா இருக்கேன் ஸமா நீ எப்படி இருக்க…?” என்று பொதுவா விசாரித்தார்.

“ம்ம்ம்! நல்லா இருக்கேன்..”

“ஸமா! இன்னைக்கு நான் வாக்கிங் போகலாமுனு போனேனா, ஆனா வழி மாறிப் போயிட்டேன். நல்ல வேளை அந்த நேரம் நம்ம மாப்பிள்ளை தம்பி அந்த வழியில் வந்ததால் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். போனையும் வச்சுட்டுப் போயிட்டேன்..” என்றார் கோர்வையாக.

“என்னம்மா சொல்றீங்க..? எதுக்கு தனியா போனீங்க. ட்ரைவர் அங்கிள் கூட போக வேண்டியது தானே..”

“சும்மா வாக்கிங் தானே அதான் நான் மட்டும் போனேன். மாப்பிள்ளை உன் கிட்ட சொல்லலையா. அவரு தான் வீட்டிற்கு வந்து விட்டுட்டு போனார்..”

“நான் இப்ப தான் வந்தேன். அதான் இன்னும் சொல்லலை சரி இனிமே நீங்க தனியா போகாதீங்க அப்படி வாக்கிங் போகனுமுனா பார்க்கு காரில் போய் அங்க வாக் பண்ணுங்க. போனை கையில் வச்சுக்கோங்க…” என்றாள்.

“சரி! சரி! சாப்பிட்டியா…?”

“ம்ம்ம்! நீங்க.?”

“அது எல்லாம் முடிஞ்சுட்டு.. நீ போய் தூங்கு நானும் தூங்குறேன்..” என்று போனை வைத்தார்.

***

இரவு..

அதியன் படுப்பதற்காக அறைக்குள் வந்தான்.

ஸனா முழித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

அடுத்த நாள் டயலாக்ஸ் மெம்மரி பண்ணியவாறு.

அதியன் பெட்டை விரித்து அதில் தலையணையை போட்டு ஷோபாவோடு சாய்ந்து அமர்ந்து டிவியைப் போட்டான்.

ஸனா”ஹலோ! நான் டயலாக் பிரிப்பேர் செய்றேன். டிவி ஆப் பண்ணுங்க…” என்றாள்.

அதியன் அவளை பார்த்து உதட்டை சுளித்து விட்டு, ஆப் செய்தான். பிறகு போனை எடுத்து ஆராய்ந்தான்.

அதில் ஸனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ப்ரோமோஷனில் வந்தது யூ டியூப்பில்.

அதையே பார்த்தவன் நிமிர்ந்து அவளை பார்க்க, எக்ஸாமுக்கு படிப்பது போல் படித்தாள்.

மனதில் சிரித்தவாறு…

போனில் அவளை ரசித்தான். நேரில் இருப்பவளை ஃபோனில் ஏன்டா ரசிக்குற…? என்று மனம் கேட்டது.

“தேங்க்ஸ்..” என்ற குரல் வர, அதியன் புரியாமல் திரும்பி பார்த்தான்.

“அம்மா சொன்னாங்க. வீட்டில் கொண்ட விட்டீங்கனு…”

“ஓ! ஆமா, வழி மறந்துட்டேனு சொன்னாங்க. அவங்க சென்னைக்கு புதுசா..?”

“இல்ல வந்து இருக்காங்க. ஆனா தனியா போனதில்லை, என் கூட இல்லை அஜி கூடப் போவாங்க..”

“ம்ம்ம்! கேர்புல்லா இருக்க சொல்லு. தனியா போனா போன் எடுத்துட்டுப் போக சொல்லு” என்று போனை ஆராயத் தொடங்கினான்.

ஸனாவிற்கு அவனின் அக்கறை ஆச்சரியமாகவும், அபூர்வமாகவும் இருந்தது.

அடிப்படையில் இவன் நல்லவன் தான் ஆனால் பாசத்திற்கு அடிப்பணிபவன் என்பது இங்கு வந்த நாளில் இருந்து புரிய தான் செய்தது.

மறுபடியும்”தேங்க்ஸ் ஒன்ஸ் அகெயின்…” என்ற குரல் வந்தது.

அதியன் நிமிர்ந்து”இது எதுக்கு..?” என்று கேட்டான்.

“எனக்கு அந்த சான்ஸ் மறுபடியும் கிடைத்துவிட்டது. அதுக்கு நீங்க தான்  காரணமுனு தெரியும்… அதுக்கு தான்..”

“ஓ! நேத்து யாரோ என்னைய திட்டின மாதிரி இருந்தது அதுவும் சிங்குளரில் என் தாத்தாவிடம்..”

“ஆமா! அது மாறாதது தானே. இருந்தாலும் எனக்காக உங்க தாத்தா கிட்ட நேரடியா இல்லைனாலும் பேசினீங்கள, அதுக்கு தான் இந்த தேங்க்ஸ்.. ஏனா நான் ரொம்ப லைக் பண்ணி நடிக்க ஒத்துக்கிட்ட ரோல் இது…”

“ஓ! அப்படி என்ன ரோல் அது…?”

“ஒரு நாட்டின் அரச குடும்பத்தின் இளவரசர் அதே நாட்டில் வாழும் விறலியர் பிரிவின் ஆடிப் பாடும் பெண்ணான விறலியை காதலிப்பது.. அது நிறைவேறாத காதல் என அறிந்தும் காதலிப்பார்கள் ஆனால் விறலியின் காதல் காவியமாக வளரும், கடைசியில் இளவரசர், விறலி சேர்வார்களா…? இல்லை காலம் மாற்றி அமைக்குமா..? என்பது தான் கதை.. முழுக்க விறலியின் வாழ்க்கை பல சூழ்நிலைகளை கொண்டதாக அமையும். அந்த கேரக்டர் தான்…” என்றாள் அந்த கதைக்குள் சென்று.

“இன்ட்ரெஸ்டிங்.. வெயிட்டிங் மீ ஆல்சோ ஃபார் யுவர் ரோல் அஸ் விறலி…”

“ம்ம்ம்!” என்ற ஸனா மனதில் டைரக்டர் சொல்லியது நினைவு வர சிரித்தாள்.

அதியன் புருவத்தை உயர்த்தி, “எதுக்கு சிரிக்குற…?” என்றான்.

“இல்ல! டைரக்டர் என் கிட்ட ஒரு விஷயத்திற்கு அக்ரீமென்ட் கேட்டார் அதை நினைச்சு தான்…”

“எதுக்கு…?”

“ம்ம்ம்! இந்த ப்ராஜெட் முடிய டு இயர்ஸ் ஆகும்.. அதுவரை நான் குழந்தைப் பெத்துக்க கூடாதுனு.. பாவம் அவருக்கு என்ன தெரியும் என் வாழ்க்கைக் கதைப் பற்றி…” என்று சிரித்தவள், படுப்பதற்கு ஆயுத்தமானாள்.

அதியன் அவளின் பேச்சில் தன்னை இழந்து அவளையே பார்த்தான்.

ஸனா கண்களை மூடிவிட்டாள்.

ஆனால் அதியன் அவளை ஒரு வித ஆச்சரியத்தோடுப் பார்த்தான்.

ஒரு நடிகையாக இவள் எப்படியோ வாழலாம் ஆனா இவள் மாறுப்பட்டு தெரிந்தால் அவனிற்கு.

அவள் கிட்ட எந்த திமிரோ, ஆடம்பரமோ, கர்வமோ இல்லை. சாதரணமான பெண்ணாக மட்டுமே தெரிகிறாள்.

அதியன் அவளை ஏமாற்றியதால் வந்த கோபம் தான் நவநீதத்திடம் அவள் நடந்துக் கொள்வது என்பது அவன் நன்கு அறிவான்.

அதியனிற்கு ஸனா மேல் அன்பு அதீதமாக பெருகியது.

ஸனா ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றிருந்தாள்.

அதியன் எழுந்து அவள் அருகில் சென்றான்.

மனதில்’உன் மூலமாக குழந்தை கிடைக்க எனக்கு மட்டும் ஆசை இல்லாமயா இருக்கும் மஸ்து, ஆனா…? புரியலை. நம்ம உறவு எந்த மாதிரி போகுதுனு.. நீ சந்தோஷமாக இருக்கனும்..” என்று அவளின் நெற்றியில் அழுந்த இதழ் பதித்தான்.

ஸனா நல்ல உறக்கத்தில் இருந்தாலும் அவளின் நெற்றி சுருங்கி விரிந்தது.

கன்னத்தில் அடுத்த முத்தத்தை வைத்தான், அவளின் செவ்விதழ் விழிகளில் பட, அதற்கு மேல் நிற்காமல் தன் இடத்திற்கு வந்து படுத்துக் கொண்டான்.

மூச்சு வாங்கியது அதியறிற்கு, மனம் கேட்டது’அவளை வேணாமுனு சொல்லிட்டு ஏன்டா நெருங்கிப் போற…?’

பதில் சொல்ல முடியவில்லை, விழிகள் மூடாமல் படுத்தான். அவன் முன் ஸனா மஸ்தூரா மட்டுமே தெரிந்தாள்.

அவனால் காதலி, மனைவி என்று அவள் அருகில் செல்ல முடியவில்லை, அதே நேரம் விலகவும் முடியவில்லை.

உரிமையான ஒருத்தியை உரிமையற்று தொட முடியாமல் தவித்தான்.

இது எந்த மாதிரியான உணர்வென்று தெரியவில்லை, தாத்தா மனம் அறிந்தவனால் தன்னை மீற முடியவில்லை.

ஸனா எதையும் உணராமல் தூங்கினாள்.. அவளின் மனம் இந்த மாதிரி தவித்து ஏமாந்தது தானே..

அதியனவள் அடுத்து…

Advertisement