Advertisement

ஸனா ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று அன்றைய சீன்ஸ் நடிக்க தயாராகினாள்.

அஜிக்கு ஒரு போன் வந்தது, அதில் இருந்து அஜி கோபமாக இருந்தாள்.

ஸனா ஷூட் முடித்து கேரவனிற்கு திரும்பியதும், முதலில் அஜியை கவனிக்காத ஸனா தன் மேக் அப்பை களைத்தவாறு கேட்டாள்”என்ன அஜி சைலன்டா இருக்க…?” என்று.

“ஸனா! அதியனின் தாத்தா உன்னை வேற வழியில் பழி வாங்குகிறார்…”

ஸனா புரியாமல்”என்ன சொல்ற…?” என்று கேட்டாள்.

“நீ கமிட் ஆகி இருக்க பெரிய பட்ஜெட், டு இயர்ஸ் ப்ராஜெட்டில்  இருந்து உன்னைய விலக சொல்றாங்க, ஏனா உனக்கு மேரெஜ் ஆகிட்டாம் நீ இடையில் நின்னா அவங்களுக்கு லாஸ் ஆகிடுமாம், அதோடு நீ கன்சீவ்வா இருக்கனு ரூமர்ஸ் போய் இருக்கு, அதனால் வேற ஹீரோயின்ஸ் புக் பண்ணிட்டாங்க”

“இதுல எங்க வந்தாரு அதியன் தாத்தா…?”

“ம்ம்ம்! அவருக்கு நீ அந்த வீட்டில் இருந்து  நடிப்பது பிடிக்கவில்லை, நேரா ப்ரொடியூசருக்கு கால் பண்ணி நீக்க சொல்லிட்டார், அதுக்கு அவங்க சொல்ற எக்ஸ்ட்ரா பிட் தான் இது. டைரக்டருக்கு உன்னைய மாத்த விருப்பமில்லை ஆனா ஹை லெவெல் பட்ஜெட் அவரும் என்ன செய்வார், என் கிட்ட உண்மையை சொல்லி உன் கிட்ட சொல்ல சொன்னார். இதில் அதியன் தாத்தா தான் காரணம் நான் இல்லைனு உன்னை புரிஞ்சுங்க சொன்னார்.”

“ஓ!”

“என்னடி ஓ..? எவ்ளோ பெரிய ப்ராஜெட் தெரியுமா..? ஹிஸ்டாரிக்கல் மூவி அதுல நீ நடிச்சா எவ்வளவு பெரிய புரோமோசன், ஏன் அவார்ட்டுக்கே சான்ஸ் இருக்கு நீ சொந்தக் குரலில்  டப்பிங் பேசுறவ..” என்று ஆதங்கப் பட்டாள் அஜி.

“ஓகே அஜி வாட் கேன் ஐ டு..? என்னைய நீக்கிட்டு வேற ஒரு நடிகையை தேடுறாங்கனா, என்னோட நடிப்பை விட  அதியன் தாத்தா சொன்னதில் தாக்கம் வந்திருக்கு, அதுக்காக நான் போய் சான்ஸ் தாங்கனு கெஞ்ச முடியாது, இதுவே அவங்க என்னைய தேடி வந்து தந்தது.. வேணாமுனா போறாங்க. நானா விலகலை…” என்றாள் அழுத்தமாக.

“புரியுது ஸனா, ஆனா..?” என்று இழுத்தாள் அஜி.

“டேக் இட் ஈஸி” என்ற ஸனா அடுத்த ஷாட்டிற்கு ரெடியாகினாள்.

***

இரவு எட்டு மணி இருக்கும்.

ஸனா அஜியை இறக்கிவிட்டு, அதியன் வீட்டை நோக்கி வந்துக் கொண்டிருந்தாள் ட்ரைவரோடு.

“அங்கிள்! நீங்க நாளைக்கு ஒன்பது மணிக்கு வந்தா போதும், அம்மாக்கு தேவையான திங்ஸ் வாங்கி கொடுத்துடுங்க” என்றாள் ட்ரைவரிடம்.

“சரிம்மா! நான் பாத்துக்குறேன்.” என்று அவர் அவளை இறக்கி விட்டு சென்றார்.

ஸனா, அதியன் வீட்டு வாசலில் நின்றாள்.

அஜியிடம் தைரியமாக பேசினாலும் ஸனாவால் அந்த படம் கைவிட்டுப் போனதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, கிடைக்க முடியாத ரோல், டைரக்டர் இவளுக்காக ஒதுக்கிய ரோல் அதை மாற்றி இருக்கிறார்கள் என்றால் அது சாதரண விஷயமில்லை.

ஸனா அதியனின் விளையாட்டு செயலால் தான் இந்த வீட்டிற்கு வந்தாள், அவன் தவறே செய்யாத மாதிரி நவநீதம் ஸனா தொழிலில் நுழைந்து அவளின் வாய்ப்பை கெடுப்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அதியன் சொன்னான் என மற்றவர்களிடம் பொறுமையாக நடந்துக் கொள்ள நினைத்திருந்தாள்  ஸனா, அவள் மனதிலும் அதியன் தன்னிடம் காதல் விளையாட்டு விளையாடியது இந்த வீட்டில் யாருக்கும் தெரியாது என்று இங்கு வந்து அறிந்ததால்.

ஆனால் நவநீதம் தன் பேரன் செய்தது தவறு என தெரிந்தும், நான் ஒரு நடிகை என்பது பிடிக்காமல் பழிவாங்க நினைக்கிறார் என்ற உணர்வு வர கோபம் தான் மிஞ்சியது அனைவர் மீதும்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து திரும்பியவள், ஸ்லீவ்லெஸ் டாப் ஹிப் தெரிய, த்ரீ பை ஃபோர் பேண்ட் முட்டிக்கு கீழ் சிறிது இறங்கி இருக்க அதே கெட் அப்பில் தான் வந்தாள் இன்று.

தலை முடியை தூக்கி போணிடியல் போட்டிருந்தாள்.

மனதில் கோபம் இருக்க, அப்படியே உள்ளே நுழைந்தாள்.

அது எட்டு மணி என்பதால் அனைவருமே வீட்டில் இருந்தனர்.

அதியன்  ஹாலில் அமர்ந்திருந்தான், தங்கைகளோடு.

பாரி அப்போது தான் தன் அறையில் இருந்து வெளியில் வந்த கொண்டிருந்தான்.

நவநீதம் வழக்கம் போல் பரணியோடு கணக்கில் அமர்ந்திருந்தார்.

அதியனின் அப்பா, பெரியப்பா, சித்தப்பா மூவரும் டிவியில் ஆழ்ந்திருந்தனர்.

பெண்களோ அடுப்படியில் நின்றனர்.

பாட்டி வழக்கம் போல் கையில் இருந்த புத்தகத்தை வாசிப்பில் இருந்தார்.

உள்ளே நுழைந்த ஸனா அனைவரையும் சுற்றிப் பார்த்தாள்.

அவளை யாரும் கவனிக்கவில்லை.

முதலில் கவனித்தது பரணி தான், அவரோ மனதில்’அய்யோ ஸனா ஏன் இப்படி வந்து நிக்குது, ஐயா என்ன சொல்ல போறரோ…?’ என்று யோசித்து மெய் மறந்தார்.

பரணியின் கவனம் இல்லாததால் நவநீ நிமிர்ந்து அவரின் பார்வை திசையை பார்க்க,

ஸனா நின்ற தோற்றம் அவரை கண் முழிகளை பிதுக்கியது.

“அதியா!” என்று சத்தமாக அழைத்தார்.

அதியன் அதுவரை சங்கவி, சைந்தவி, சாரு என அமரந்திருக்க, தாத்தாவின் குரலில் திரும்பினான்.

அனைவருமே வாசலைப் பார்க்காமல் நவநீதத்தை பார்க்க, பெண்களும் ஓடி வந்தார்கள்.

“என்ன தாத்தா…?” என்று எழுந்து ஓடி வந்தான் அதியன்.

“இது என்ன கூத்தாடுற குடும்பமுனு நினைப்பா…? இது எல்லாம் இந்த வீட்டில் முடியாது மரியாதையான உடை அணியனும்” என்றார் வாசலைப் பார்த்து நவநீ.

அப்போது தான் அனைவருமே வாசலை கவனித்தனர்.

அதியன் அசையாமல் நிற்கும் ஸனாவைப் பார்க்க, மனதில்’இவளுக்கு சொன்னா புரிய மாட்டேனுங்குது’ என்று கோபமானான்.

ஸனா யாரையும் கண்டுக்கொள்ளாமல், நேராக கிச்சனுக்குள் சென்றாள்.

அங்கு இருந்த உணவை எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொண்டு டைனிங் டேபிளில் வைத்துச் சாப்பிட ஆரம்பித்தாள்.

மல்லிகா கோபம் ஆகி”இங்க பாரு உனக்கு யாரும் இங்க சமைச்சு வைக்கலை, நீ பாட்டுக்கும் எடுத்து வச்சு சாப்பிடுற…?” என்றார் கடுப்பாக.

ஸனா பதில் பேசாமல் சாப்பிட்டாள்.

தேவி”ம்ம்ம்! என்னமோ போ ஆட்டக்காரிக்கு காலில் சலங்கை இல்லைனாலும் சலங்கை சத்தம் கேட்டுட்டே இருக்குமாம்.. அந்த மாதிரி உன் மருமகளுக்கு படத்தில் நடிப்பது பத்தாததுனு வீட்டிலும்  நடிச்சுட்டு திரியுறா மல்லி” என்றார் நக்கலாக.

“தேவி!” என்று  அதட்டினார் சேரர்.

“ஏன் மாமா அக்காவை அதட்டுறீங்க, இவ அப்படி தானே நடந்துட்டு இருக்கா…?” என்று பாய்ந்தார் மல்லி.

ஸனா சாப்பாட்டை பார்த்தவாறே அமைதியாக சாப்பிட்டாள்.

அதியனுக்கோ அவள் சாப்பிடுவதை தடுக்க எல்லாம் தோன்றவில்லை, அவளின் ட்ரஸிங் அனைவர் மத்தியிலும் வித்தியாசமாக தெரிந்ததால், அவளின் அருகில் சென்றவன் மெதுவாக”ஸனா! என்ன இது, நான் தான் உன் கிட்ட சொல்லி இருந்தேன்ல, இப்படி இங்க வராதனு” என்று முறைத்தான்.

“அங்க என்னடா குசு குசுனு பேசுற…? அவ என்ன பெரிய மகாராணியா…?” என்றார் மல்லி.

நவநீதம்”என்ன அளவு மீறிப் போகுற மாதிரி தெரியுது அதியா, இந்த வீட்டிற்குனு ஒரு கட்டுப்பாடு இருக்கு அதை ஒரு போதும் நான்  மாற்ற மாட்டேன். சொல்லி வை” என்றார் கோபமாக.

ஸனா பதிலே பேசாமல் திருப்தியாக சாப்பிட்டு விட்டு, கிச்சனுக்குள் சென்று பிளேட்டை கழுவி வைத்தாள்.

திரும்பியவள்”ஹாய் த்ரீ லேடிஸ் நீங்க யாரு சமைச்சு இருந்தாலும், வெரி நைஸ் டின்னர்.. தேங்க்ஸ் ஃபார் தட். அப்புறம் நான் இனி இங்க சமைச்சு வைப்பதை தான் சாப்பிடுவேன். ஓகே!” என்றவள் ஹாயாக ஹாலிற்கு நடந்தாள்.

நவநீதத்தை கிராஸ் செய்தவள், ஒரு நிமிடம் நின்று”ஆ! மிஸ்டர் நவநீதம் நீங்க சொன்னது காதில் விழுந்தது, இந்த வீட்டுக்குனு ஒரு கட்டுப்பாடு இருக்குல. அது எனக்கு தேவையில்லை புரிஞ்சுதா.” என்றாள் நக்கலாக.

அதியன்”ஸனா! மரியாதை இல்லாம பேசாத, நீ சாப்பாடு  வேணா சாப்பிடு ஆனா தாத்தா கிட்ட மரியாதையா நடந்துக்கோ, திஸ் இஸ்  லிமிட்” என்றான் கோபமாக.

“வாட்! என்ன அதியா அதிகாரமா…? அதுவும் என் கிட்ட. இட்ஸ்  ஓகே நான் ஏதோ போனா போகுதுனு மரியாதையா ஒதுங்கி தானே இருந்தேன், என்னோட அளவை உங்க பார்டரிலே நிறுத்திக் கொண்டு. ஆனா உங்க தாத்தா இதோ இந்த நவநீதம் செஞ்சது மட்டும் மரியாதையான காரியமா…?” என்றாள் வேகமாக.

“என்ன செஞ்சார்..?  அவர் என்ன செஞ்சாலும் வயசுக்கு மரியாதைக் கொடு”

“ஹலோ! உங்க பேரனுக்கு நீங்க செஞ்ச நல்ல காரியம் தெரியாத…? ஆல்ரைட்..” என்றவள்.

“மிஸ்டர் அதியன் நவநீத ராகவன், உங்க தாத்தா என்னோட தொழிலில் நுழைந்து என் அடுத்த பெரிய ப்ராஜெட்டை கேன்சல் பண்ணிட்டார்.. தெரியுமா…?”

அதியன்”தாத்தா அப்படி எல்லாம் செய்ய மாட்டார். நீ உளராத” என்றான்.

“உளருறனா.. எங்க அவரை சொல்ல சொல்லுங்க இல்லைனு. அதுவும் உங்க மேல உண்மையா…?”

“தாத்தா!” என்றழைத்தான்.

“ஆமா! நான் தான் சொன்னேன் இந்த வீட்டில் இருந்துகிட்டு, நடிப்பு இதோ இந்த மாதிரி உடை எல்லாம் அனுமதி இல்லை அப்படி அந்த பட வாய்ப்பு தான் உனக்கு வேணுனா இந்த வீட்டை விட்டுப் போ” என்றார் நவநீதம்.

“ஹஹஹ! ஹலோ என்னைய என்ன நினைச்சீங்க, பட வாய்ப்பு…? அது என்னைய தேடி வந்தது நான் போகலை அதை தேடி.. என்ன பிளாக் மெயிலா..? நோ வே..” என்ற ஸனா, “அதியன் இப்ப புரியுதா உங்க தாத்தா புத்தி.. இது தான்” என்றாள் நக்கலாக.

“என்ன தாத்தா இது எல்லாம், இது நீங்க செய்ற வேலை இல்லை, அவ ஆறு மாசம் டைம் தான் இங்க, அப்புறம் போயிடப் போறா. அவ வேலையில் நம்ம ஏன் நுழையனும்.” என்றான் தாத்தாவிடம்.

“அதியா! இப்ப இருக்க இடம் இந்த நவநீதம் வீடு, இங்கிருந்து நடிப்பு கூடவே கூடாது, அந்த சான்ஸ் இல்லை நாளைக்கே எல்லா சான்ஸையும் கேன்சல் செய்வேன்…” என்றார் அவர் கண்களை பெரிதாக்கி.

“அதை பத்தி எல்லாம் நான் கவலைப் பட மாட்டேன் மிஸ்டர் நவநீதம். ஆனால் உங்க எண்ணம் இந்தளவு கேவலமாக இருக்குமுனா உங்க பேரனும் இப்படி தானே யோசிப்பான்.. பின்ன எப்படி யோசிப்பான்…? நான் ஒரு நடிகைனு தெரிஞ்சு தானே என் கூட யாருனே சொல்லாம பழகி காதல், கத்திரிக்காய், புண்ணாக்குனு பேசி வழிஞ்சான். அப்புறம் ஞானோதயம் வந்து உண்மையை சொன்னான் அதுவும் தாத்தாக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆகிடுமுனு, பொண்ணு ஒருத்தியை பாத்து நிச்சயம் பண்ண ரெடியாகிட்டு  என் கூட காதல் ராகம் வாசித்தான். இந்த பொழப்புக்கு என் நடிப்புத் தொழில் புனிதமானது தான்..” என்றாள் வேகமாக.

அவளது வார்த்தைகளில் நன்கு தெரிந்தது, நடிப்பு அவளுக்கு எந்தளவு உணர்வாக இருக்கிறது என்று.

“என்னோட தொழில் நடிப்பு அதில் எனக்கு பெருமை தான். உங்களுக்காக எல்லாம் நான் மாற முடியாது. நான் படத்தில் தான் நடிக்குறேன். நீங்க எல்லாம் நிஜ வாழ்க்கை நடிகர்கள்…” என்றாள் கோபமாக அதியனை பார்த்து.

அதியனுக்கு மனம் கேட்கவில்லை.

“தாத்தா! ஸனா தொழிலில் நீங்க தலையிடாதீங்க, அவ ஆறு மாசம் தான் இங்க இருப்பா, அதுக்கு மேல நான் டைவர்ஸ் வாங்கி அனுப்பிடுவேன் அது என் பொறுப்பு. இதுக்கு மேல நீங்க அவ விஷயத்தில் நுழைஞ்சா ஆறு மாசத்திற்கு மேல் அவ போறது என் கையில் இல்லை, மஞ்சரி இந்த வீட்டீற்கு வரது கனவா போயிடும்” என்றான் அழுத்தமாக.

நவநீதம் ஒரு நொடி தன் பேரன் அதியன் தானா! என்று அதிர்ந்தார்.

பாரி ஆச்சிரியமாக பார்த்தான்.

மற்றவர்களும் அதே மாதிரி பார்க்க, பாட்டி மட்டும் நகைத்தார் மனதில்.

“அதியா! என்னடா பேசுற….? தாத்தாவையே எதிர்த்துப் பேசுறீயா..?” என்றார் சோழா.

“அப்பா! நான் தாத்தாவை எதிர்த்துப் பேசலை. அவருக்காக தான் பேசுறேன். ஸனா விஷயத்தில் தாத்தா நுழைய வேண்டாம் அது அவருக்குமே மரியாதைப் போற விஷயம். இப்ப ஸனா கேட்டது எனக்கு அசிங்கமா இருக்கு. தாத்தா போய் ஏதோ சீப்பான பெர்சன் மாதிரி அவ சான்ஸை கெடுத்து விடுறது அவரு பேருக்கு நல்லதில்லை. அவருக்குனு ஒரு மரியாதை இருக்கு” என்றான்.

நவநீதம் மனசு அமைதியானது.

“பரணி! போன் பண்ணி அந்த புரோடியூசரிடம் பேசிடு நாளைக்கு. என் பேரன் சொன்னா எனக்கு மறுப்பேச்சே இல்லை. யாரு எப்படி போனா என்ன..? ஆனா இந்த வீட்டில் கூடாது இந்த மாதிரி உடை எல்லாம் ஒழுக்கம் ரொம்ப முக்கியம்..” என்று கூறி இடத்தை விட்டு நகர்ந்தார்.

***

இரவு…

அதியன் கீழே படுக்க தயாரானான்.

ஸனா அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

போனில் மெசேஜ் வர,  அதியன் அதையே பார்த்தவாறு எதிர் ஷோபாவில் அமர்ந்தான் அறைக்குள்.

“உங்க தாத்தா செஞ்சது சரியா….? தவறா…?”

அதியன் நிமிர்ந்துப் பார்த்தான்..

ஸனா அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“தப்பு தான்..”

“அப்ப அது தப்புனு நேரா சொல்லாம எதுக்கு அவருக்கு சப்போர்ட் பண்ணி என்னைய மட்ட தட்டுனீங்க அதியன்…”

“என் தாத்தா அவர், தப்பே செஞ்சாலும் அப்படி எல்லாம் தூக்கிப் போட முடியாது முகத்திற்கு நேரா நீங்க தப்பு செய்றீங்கனு..”

“அப்ப நான் யாரோ ஒருத்தி, அதானே ஈஸியா போச்சு உங்களுக்கு அலட்சியம் செய்ய…?” என்றாள் ஒரு மாதிரி இறுகிய குரலில்.

அதியன் அவளையே பார்த்தான்.

“எனிவே உங்க தாத்தா கெடுத்த வாய்ப்பு பெரிய சான்ஸ் அது நான் ரசித்து செய்ய போற ரோல். அது போச்சுனு ஃபீல் பண்ணினேன் தான் ஆனா அதுக்காக உங்க தாத்தா கிட்டயோ, உங்க கிட்டயோ நான் கெஞ்சி நிக்க மாட்டேன். சான்ஸ் வந்தா நடிப்பேன் இல்லையா டோன்ட் கேர்…” என்றாள் முகத்தை சுளித்தவாறு.

“அந்த சான்ஸ் உனக்கு தான் நீ ஃபீல் பண்ணாத மஸ்து” என்றான் அதியன் ஆழமான குரலில்.

ஸனா அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

அதியனும் அவளின் விழிகளையே நோக்கினான்.

ஸனாவிற்கு ஏதோ வசியம் செய்தது போல் அப்படியே அசையாமல் இருந்தாள்.

மூளை உணர்த்த.. மீண்டவள்”அதியன்! நான் ஸனா. அதை உங்க மண்டையில் ஏத்தி வைங்க.. இல்லனா உங்க தாத்தா கனவு பாழாகிடும்” என்று போர்வையை இழுத்துப் போர்த்திப் படுத்துக் கொண்டாள்.

அதியனிற்கு அவளின் வார்த்தையின் அர்த்தம் புரிய, மனம் ஏனோ ஏங்கியது.

ஸனா…? மஸ்து…? என அவன் மனம் மாறி மாறி அடிக்க.. மஸ்து ஆழமாக நுழைந்தாள்.. அவனை மீறி மனதில்….

அதியனவள் அடுத்து…

Advertisement