Advertisement

நவநீதம் வீடு பிரமாண்டமாக இருப்பதில் ஆச்சிரியப் படுவதற்கு ஒன்றுமில்லை..

ஸனா இதுவரை நடித்தது என்னவோ உண்மை தான், ஆனால் இப்பொழுது ஏனோ மனம் நெருடியது அவள் இதுவரை செய்ததை எண்ணி.

அந்த நொடியே அஜியின் கையைப் பிடிக்க, அஜி அவளின் கையை அழுத்தி ஆறுதல் செய்தாள்.

“பாரி! உங்க வீட்டில் உள்ளவர்கள் பற்றி எனக்கு தெரியாது ஆனா ஸனாவுக்கு உங்களால் முடிஞ்ச உதவியை செய்யுங்க” என்றாள் அஜி.

“அஜி அண்ணி! நான் என்னால முடிஞ்ச ஹெல்ப் செய்றேன் ஆனா தாத்தா மீறி எதுவும் செய்ய முடியாது..”

“ம்ம்ம்!” என்றாள் அஜி.

“ஏன் உங்க தாத்தா கிட்ட கேட்டு தான் அவசரத்துக்கு கூட பாத் ரூம் போவிங்களா….? எப்படி பேசுறார் அவர். ஹப்பாபா அவ்வளவும் பணக்காரத் தனம்..” என்றாள் கோபமாக ராணி.

“என்ன செய்ய நாங்க அந்த வீட்டில் பொறந்துட்டோம் உங்களை மாறி சுதந்திரமா பிறந்திருந்தா அவசரத்துக்கு கூட அனுமதி வாங்க தேவையில்லை..” என்று சிரித்தான் அவன்.

வீடு வந்தும் பேசிட்டு இருந்தமையால், அவர்களை இறங்க சொன்னான் பாரி.

அனைவரும் இறங்கினர்.

ஸனா”தேங்க்ஸ்டி ரெண்டுப் பேருக்கும், நீங்க கிளம்புங்க நான் போறேன் உள்ளார, பாரி இருக்கார் மேனெஜ் பண்ணிக்குறேன். நான் போன் செய்றேன்..” என்றாள்.

ட்ரைவர் அங்கிளிடம் சொல்ல, அவரும் தலை ஆட்டினார்.

“ஸனா! அம்மா வராங்க மும்பையில் இருந்து, நானும் அங்கிளும் நாளைக்கு அழைச்சுட்டு வரோம். என்ன உன் அண்ணனை தான் சமாளிக்கனும். வருமானம் போகுதே.. அந்த கவலை தான் அவருக்கு…” என்றாள் அஜி.

“சரி! நான் பேசிக்குறேன் நீங்க கிளம்புங்க… இப்ப உங்களை உள்ள கூப்பிட முடியாது கோச்சுகாதீங்க…” என்றாள் வருத்தமாக.

“எல்லாம் புரியுது நீ போ, நாங்க கிளம்புறோம்” என்று காரில் இருந்த அவளின் பேக்கை எடுத்துக் கொடுத்தாள் அஜி.

ஸனா அதை வாங்கி கொள்ளவும் அவர்கள் கிளம்பினர்..

இருவரும் வீட்டிற்குள் நுழையப் போக.. பாரி”அண்ணி! ரைட் லெக்” என்றான் மெதுவாக.

ஸனாவும் சிரித்தப்படி வலது காலைத் தூக்கி வைத்தாள்.

உள்ளே செல்ல ஹாலில் அனைவரும் நின்றனர்.

எல்லாரையும் திரும்பிப் பார்த்தாள்.

“இந்த வீட்டில் உள்ள எல்லாருக்கும் சொல்லிக்குறேன். யாரும் புதுசா வந்த அழையா விருந்தாளிக் கூட எந்தப் பேச்சும் வச்சுக்க கூடாது. சாப்பாடு, மத்த எந்த தொடர்பும் இருக்க கூடாது. தேவைனா சாப்பிட்டுகட்டும் அடுப்படிப்போய் சமைச்சு. அப்புறம் தூங்குவது அதியன் அறையில் இல்லை வேணுனா ஹாலில், அடுப்படியில் படுத்துக் கொள்ளட்டும்.. இது எல்லாம் தான் இங்கு கிடைக்கும். ஆறு மாதத்திற்கு தாக்குப்பிடிக்கனும் இல்லனா நாளைக்கே வீட்டை விட்டு வெளியில் போயிடலாம்..” என்றார் நவநீதம்.

ஸனா அமைதியாக நின்றாள்.

நவநீதம் பேசிவிட்டு நகர போக.. “ஒரு நிமிஷம், நான் அதியனோட மனைவியா வந்திருக்கேன், அவர் கூட தங்க கூடாதுனு சொல்ல நீங்க யாரு…? இந்த வீட்டில் உள்ளவர்களை பேசக் கூடாதுனு சொல்லுங்க, மற்றது எல்லாம் ஐ அசெப்டெடு ஆனா அதியன் அறையில் தங்க கூடாதுனு சொல்ல யாருக்கும் ரைஸ் இல்லை, ஏன் அதியனும் சொல்ல முடியாது, நான் அவரு பொண்டாட்டி, என்ன அதியன் அப்படி தானே…?” என்றாள் நக்கலாக.

அனைவரும் ஸனாவையே பார்த்தனர்  நவநீதத்தை எதிர்த்துப் பேசியதால்.

“இங்க பாரு அவரு என்னோட தாத்தா, அவரு சொல்றதை தான் இந்த வீட்டில் கேக்கனும். அது யாரா இருந்தா என்ன…?” என்றான் அதியன் கோபமாக.

“அவரு உங்களுக்கு வேணா டானோ தாத்தாவோ. பட் என்னைய பொறுத்த வரை உங்க அப்பாக்கு அப்பா தட்ஸ் ஆல்.  யாரா இருந்தா என்ன…? என்னோட பிரைவேசியில் தலையிடக் கூடாது.. நான், என் புருசன்.. இட்ஸ் ஓகே உங்க தாத்தா சொன்ன மாதிரி ஹாலில், கிச்சனில் தூங்க நான் ரெடி, நீங்களும் என் கூட தூங்க ரெடியா…?” என்றாள் ஸனா அதிகாரமாக.

எல்லாரும் ஃபிரீஸ் ஆகி முகம் சுளித்தார்கள்.

சுற்றிப் பார்த்த ஸனா”அட என்ன எல்லாரும் இப்படி ரியாக்சன் கொடுக்குறீங்க..? புதுசா கல்யாணம் ஆன என்னை போய் ஹாலில் படு, கிச்சனில் படுனா அப்ப என் புருசன் என்ன கார் பார்க்கிங்கிலா படுப்பார். இதை சொல்ற அந்த பெரிய மனுசன் யோசிச்சு இருக்கனும்…”

பாட்டி ஸனாவை பார்த்து பார்வையால் அளந்தார் அவளை.

“இப்படி பேசினா குடும்பத்தில் வாழ முடியாது, இது ஒன்னும் நடிப்புக் கூடம் இல்லை வசனமா பேசுவதற்கு.. நான் சொல்றதை தான் கேக்கனும். அதியன் சொல்லி வை நீ.. ஆறு மாசம் இருக்க இடம் தெரியக் கூடாது உனக்கு மனைவியா நடிக்க வந்தவளுக்கு…” என்றார் நவநீதம்.

“அதே தான் நான் சொல்றேன். நீங்க யாரு ஆறு மாசம் டைம் கொடுக்க. நான் கையெழுத்துப் போடனும் போட்டா தான் அந்த ஆறாவது மாதமும் நீங்க நினைக்குறது நடக்கும். ஓகே! ஆல்ரைட் அதியன் நீங்க என் கிட்ட எப்படி நடந்துகிறீங்களோ அதை பொறுத்து தான் இருக்கு அந்த விவாகரத்து விஷயம்.. சரியா….? பாத்து தாத்தாக்கு மண்டையை ஆட்டுங்க” என்றாள் வேகமாக.

அதியன் ஸ்டன் ஆகி நின்றான் இருவரின் பேச்சிலும்.

“நடுவில் மாட்டுனான் பாரு அதியன் அண்ணா…” என்றான் பாரி ரஞ்சித்திடம்.

“ஆமான்டா! இது என்ன அத்தானுக்கு வந்த சோதனை…?”

“போடு! செமயா பேசுறாங்க ஸனா அண்ணி” என்றாள் சங்கவி தங்கைகளிடம்.

தேவி”என்ன போடு போடுறா பாரு, மல்லிகாக்கு ஏத்தவ தான்..” என்றார்.

“அக்கா! இந்த வீட்டுக்கு மூத்த மருமகள் அவ நம்ம நிலையயை சேர்த்து நினைங்க.” என்றாள் மாலினி.

“ஆமா! நானும் தான் மூத்த மருமகள் என்னத்த கண்டேன்…”

“ம்ம்ம்! நீங்க என்னைக்காவது இப்படி பேசி இருக்கீங்களா..?”

“இல்ல, ஒத்துக்குறேன். அதுக்காக இவ இப்படி பேசிட்டு எத்தனை நாளைக்கு இருக்க முடியும்..?”

“பாப்போமே..”

***

“இங்க என்ன பட்டிமன்றமா நடக்குது.. எல்லாம் அவங்க அவங்க வேலையைப் போய் பாருங்க.. யாருக்காகவும் இந்த வீட்டு விதிமுறை மாறாது. அதியன் எல்லாரு முன்னாடியும் சொல்றேன். ஆறு மாத முடிவில் நீ அதியன் மட்டும் தான் மனசில் தெளிவா இரு, ஆமா தானே..?”

“நீங்க சொல்றதை கேக்குறேன் தாத்தா, நான் இப்பவும் சொல்றேன் நான் தாலிக் கட்டலை..” என்றான் அதியன்.

“நீங்க கட்டலனா அவ எப்படி வீடு வரை வருவா…?” என்றுக் கேட்டுக் கொண்டே மஞ்சரி அம்மா வந்தார். அவள் அப்பா, அவளும் கூடவே.

“வாங்க!” என்று அழைத்தார் நவநீதம்.

“ஐயா! உங்களை நம்பி தானே நான் பொண்ணை கொடுக்க ஒத்துக்கிட்டேன். நாளைக்கு நிச்சயத்தை வச்சுட்டு இப்படி பண்ணா எப்படி….? என் சொந்தம் பந்தம் எல்லாருக்கும் சொல்லிட்டேன். என் பொண்ணுக்கு என்ன பதில்…?” என்றார் மஞ்சரி அப்பா.

“இங்க பாருங்க, அதியன் தாலிக் கட்டலை ஆனா அந்த பொண்ணு ஏதோ நாடகம் போடுது. உங்க பொண்ணு தான் இந்த வீட்டு மருமகள். ஆறு மாசம் வெயிட் பண்ணுங்க. மஞ்சரிக்கும், அதியனுக்கும் நேரா கல்யாணத்தை வச்சுடலாம்” என்றார் நவநீதம்.

ஸனா”பாரி! எனக்கு ரொம்ப தலைவலிக்குது இவங்க பேசும் போது நான் ஏன் அன்வான்டடா இருக்கனும். உங்க அண்ணன் ரூம் எங்க இருக்கு…?” என்று கேட்டாள்.

“மேல போனீங்கனா, லெப்ட் சைடு அண்ணி…”

“அப்ப நான் யாரு பாரி….?” என்றாள் மஞ்சரி.

“நீங்க இன்னும் தாலிக்கட்டலையே அவங்க  தானே தாலியோடு வந்திருக்காங்க. வேணுனா ஆறு மாசம் முடிஞ்சு அண்ணினு கூப்புடுறேன் மஞ்சரி” என்றான் பாரி.

மஞ்சரி முறைக்க, ஸனா நக்கலாக சிரித்தாள்.

“பாரி!” என்றார் நவநீதம்.

“தாத்தா”

“நான் சொன்னது நினைவில்லையா.. பேச்சு வார்த்தை இருக்க கூடாது சொல்லிட்டேன்..”

“சாரி தாத்தா” என்று அமைதியானான்.

ஸனா வேகமாக நடந்தாள் அதியன் அறைக்கு..

மஞ்சரி குடும்பத்தை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர் அதியன் அப்பா, பெரியப்பா, சித்தப்பா..

மஞ்சரி அடிப்பட்ட பாம்பாக வெளியேறினாள்.

அவரவர் நகர்ந்தனர்.

****

ஸனா அதியன் அறைக்குள் சென்றாள்..

அறை அழகாக விசாலமாக இருந்தது, பால்கனியோடு.

தன் லக்கேஜை வைத்தவள், அமைதியாக சென்று அமர்ந்தாள் கட்டிலில்.

தான் எந்தளவு மாறி நிஜ வாழ்க்கையில் நடிக்க வேண்டியாதிவிட்டது.

ஏததோ எண்ணத்தில் அமர்ந்திருக்க, அதியன் நுழைந்தான் உள்ளே..

அறையின் கதவை சாத்தியவன் ஸனா அருகில் வந்தான்.

எழுந்து நின்றாள் அவன் முன்.

கண்களில் கோபம் பொங்கிட ஓங்கி அறைந்தான் அவள் கன்னத்தில்.

“இது என்ன விளையாட்டு, தாலி நான் கட்டினேனா..? எதுக்கு இப்படி நாடகம் ஆடிட்டு இருக்க ஸனா…?” என்றான் கோபமாக.

கன்னத்தில் கைவைத்த ஸனா.

அதே வேகத்தில் அதியன் கன்னத்தில் ஓர் அறையினை கொடுத்தாள்.

“இதை  அன்னைக்கே கொடுத்திருக்கனும் உனக்கு. நீ ஏன் என் கூட விளையாடின.. நீ எனக்கே தெரியாம விளையாடின, நான் உனக்கு தெரிஞ்சு விளையாடுறேன்.. தட்ஸ் ஆல்.. நடிகைனா எது வேணா செஞ்சுட்டு போகலாம் கண்டுக்க மாட்டாங்கனு எண்ணமா..? உனக்கு மட்டும் தான் குடும்பம் இருக்கா, எனக்கும் இருக்கு..” என்றாள் கண்கள் சிவக்க.

அதியன் சிலையாக நின்றான்.. பின் சுயநினைவு வர,

“நீ இப்படி எத்தனை நாளைக்கு வாழப் போற. போலியா..?  தாலிக் கட்டாமல்…?”

“ஏன் சாகுற வரைக் கூட வாழ முடியும்..”

“என்னோட அன்பு உனக்கு கிடைக்காது ஸனா…”

“எனக்கு தேவையில்லை, என் மனசை காயப்படுத்தின உங்க வாழ்க்கை என்னோட சேர்ந்து இப்படியே போகட்டும். வெளியில் தான் புருசன் பொண்டாட்டி, ஆனா நான் ஸனா மட்டுமே நீங்க அதியன் நவநீத ராகவன் உங்க தாத்தாக்குப் பேரன்….”

“இதுல உனக்கு என்ன கிடைக்கப் போது…?”

“ஏன் என்னைய ஏமாத்த நினைச்ச உங்களுக்கு என்ன கிடைத்தது..?”

“நான் உன்னை காதலித்தேன் ஸனா ஆனா நீ அப்படியில்லை. நான் தான் இதில் மனசளவில் பாதிப்பானது. அப்ப நீ என்னைய பழி வாங்கனும் அதுக்கு தானே வந்திருக்க…?”

“ஆமா!”

“சரி! ஒத்துக்குறேன். நான் தான் தப்பு செஞ்சேன் நீ என்னைய எது வேணா பண்ணு, தண்டனைக் கொடு, பழி வாங்கு ஆனா என் குடும்பம், தாத்தா இவங்க கிட்ட தயவு செஞ்சு அமைதியா போ, ஏனா தப்பு பண்ணினது நான்..”

“அப்படி எல்லாம் விட முடியாது, நீங்க செஞ்சதுக்கு உங்க குடும்பத்திற்கும் பங்கு இருக்கு. அந்த தாத்தாவை வச்சு நான் டீஸ் பண்ணினது தானே உங்க முதல் கோபம். உங்க தாத்தா போலிஸ் ஸ்டேசனில் எப்படி பேசினார், அவ்வளவும் பணக்காரத்திமிர். என் பேரன் குழந்தை வளருதானு அசால்டா கேக்குறாரு. அப்படி நடந்திருந்தா என்ன செய்வீங்க, களைச்சி இருப்பீங்களா…?”

“ஸனா! அவருக்கு நான் இப்படி பண்ணியதில் அதிர்ச்சி, எனக்காக பேசுறேனு அப்படி பேசிட்டார்.”

“அவரு உங்களை கண்டிச்சு இருக்கனும் அதியன், ஏன் தேவையில்லாத வேலைப் பார்த்தனு அத விட்டுட்டு என் கிட்ட மோதிப் பாக்குறாரு.”

“ஓகே! இப்ப நடக்குற எல்லாத்துக்கும் நான் தான், நான் மட்டும் தான் காரணம். என்னோட அந்த ஹேப்பிட் தான் காரணம். என்னைய நீ பழிவாங்கிக்கோ. என் குடும்பத்தோட அமைதி, விதிமுறையை மாத்திடாத..”

“சரி! எத்தனை நாளைக்கு நான் பழிவாங்கட்டும்…”

“உனக்கு முடியுற வரை…”

“எதுக்கு…?”

“ஏனா! இப்ப கூட உன்னைய எனக்கு வெறுக்கத் தோணல அதே நேரம் ஏத்துக்க முடியல. நீ இந்தளவு மாறி இருக்கவும் நான் தான் காரணம். அதான் ஆறு மாசம் இருக்கே அதுவரைக்கும் உன்னால எவ்வளோ முடியுதோ பழி வாங்கிக்க… ஆறு மாசம் முடிஞ்சு தாத்தா சொல்றதை தான் கேட்பேன்..” என்று பாத் ரூமுக்குள் புகுந்தான்.

ஸனா அப்பிடியே  நின்றாள்.

‘பழி தானே! வாங்குறேன் அதியன்.. மொத்த குடும்பத்தையும்…’ என்றாள் மனதில்..

அதியனவள் அடுத்து…

Advertisement