Advertisement

அதியன்”உன்னிடம் ஒரு உண்மை சொல்லனும்” என்றதும், ஸனா அவனையே பார்த்தாள்.

‘என்ன உண்மை சொல்ல போறான். அதான் நான் விரும்பாம இருப்பதும் ரொம்ப சரினு சொல்லிட்டானே…’ என மனதில் நினைத்தாலும் பார்வை அவனையே சுற்றியது.

“ஸனா! எனக்கு சின்ன வயசில் இருந்து ஒரு பழக்கம் இருக்கு, அது உன் விசயம் முன்னாடி வரை தப்பா தெரியல ஆனா இப்ப ரொம்ப தப்பான குணமுனு புரிஞ்சுட்டு…”

“புரியல அதியன்…?” என்றாள் கேள்வியாக.

“என் கிட்ட யாராவது உன்னால இது முடியாதுனு பெட் கட்டினாலோ, மட்டம் தட்டினாலோ அதை செஞ்சே ஆகனும் என்ற வெறி இருக்கும்.. அது தான் உன் விசயத்தில் நடந்தது…”

“அதியன் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க, எனக்கு ஒன்னும் புரியல…”

“ஸனா!”

அவனின் மஸ்து என்ற அழைப்பு ஸனா என்று மாறியதில் அவளிற்கு ஏனோ மனம் வலித்தது.

“உன் பிஏ அஜி ஹஸ்பேண்ட் அச்சு என் ப்ரண்ட். உனக்கு தெரியுமானு தெரியல.

தீரன், அச்சு, மாதவன் நான் எல்லாம் கிளாஸ்மெட்ஸ். அச்சு அஜியை லவ் பண்ணி கல்யாணம் செய்ததால் தாத்தா அவன் கூட பேச அனுமதிக்கல ஆனா நான் மறைமுகமாக பேசிட்டு தான் இருக்கேன்..”

இது தெரிந்தக் கதை தானே என்பது போல் பார்த்தாள்.

“உனக்கு அவார்ட் கொடுத்தப்போ, நீ என்னைய தாத்தாக்கு பயப்புடாதீங்கனு டீஸ் பண்ணின நினைவு இருக்கா…?”

ஸனா யோசித்து”ஆமா! ஆனா அது தப்புனு உணர்ந்து அப்பவே சாரி கேட்டனே. பட் நீங்க வேற மாதிரி சொல்லிட்டுப் போனீங்க. எனக்கு நடிப்பு வருவதில் ஆச்சிரியமில்லைனு..”

“ம்ம்ம்! அதுவே எனக்கு இன்சல்டா இருந்தது. அடுத்த நாள் அவார்ட் ஃபங்சன் போட்டோ பேப்பரில் வந்ததை பார்த்து தாத்தா என்னைய திட்டினார்  நான் உனக்கு அவார்ட் கொடுத்ததால். அந்த கோபத்தில் ப்ரண்ட்ஸோடு புலம்பிட்டு இருந்தேன்..”

ஸனா எதுவும் சொல்லாமல் அவனையே கவனித்தாள்.

“தாத்தா திட்டிட்டாருனு சொன்னதும் ப்ரண்ட்ஸ் கிண்டல் செஞ்சாங்க, தாத்தா நீ ஸனா கிட்ட மயங்கிடுவேனு பயப்படுறார் போலனு, அதுக்கு அச்சு நீயே போய் காதல் சொன்னாலும் ஸனா ஒத்துக்க மாட்டாங்கனு சொன்னான்.. அப்ப மத்த ப்ரண்ட்ஸ் அதியனால் முடியாததானு கேட்டனர். அச்சு ஸனாக்கு இரண்டு அனுபவத்தில் தோல்வி ஆனதால் ஸ்டாங்கா ஆகிட்டாங்க உன்னால முடியாதுனு சொன்னது எனக்கு ஏன் முடியாதுனு நினைக்க வைத்தது. அச்சு போனில் இருந்து உன் நம்பரை தெரியாமல் எடுத்தேன். முடியாதுனு சொன்ன ப்ரண்ட்ஸ் முன்னாடி நீ என்னைய லவ் பண்றேனு சொல்ல தான் உனக்கு மெசேஜ் செய்ய ஆரம்பித்தேன்..”

ஸனா அதிர்ச்சியாக.. “அப்படினா இது ஜஸ்ட் ஃபார் பெட் லவ் ஆ…?” என்றாள் கோபமாக.

“அப்படினு சொல்ல மாட்டேன் மஸ்து” என்றான் அவனையும் மீறி,

“சாரி ஸனா! உன்னைய என் காதலில் விழ வைக்க தான் நான் நினைத்தது. ஆனா நடந்தது  வேறு.. நீ லவ் சொல்லும் போது என் ப்ரண்ட்ஸ் கிட்ட ஸனா லவ் மீ னு சொல்ல நினைச்சேன். ஆனா…?”

“ஆனா..? அது நடக்கலை தானே..” என்று விரக்தியா சிரித்தாள்.

“முதல் இரு மாதம் உன்னைய அட்ராக்ட் பண்ண தான் மெசேஜ் செய்தேன். அடுத்து படிப்படியா தொடர, கிப்ட் கொடுக்க யோசித்தப் போது ஏதாவது வித்தியாசமா கொடுத்து உன்னைய மெய்மறக்க செய்ய தான் தாலி வாங்கி வீட்டிற்கே வந்துக் கொடுத்தேன்..”

“தாலி வித்தியாசமான கிப்ட் தான் அதியன்…”

“சாரி ஸனா! அன்னைக்கு வரை உன்னைய நான் என் வலையில் விழ வைக்க தான் நினைச்சேன். ஆனா அன்னைக்கு நீ சொன்ன என் ஃபீலிங்கஸோடு விளையாடாதீங்கனு சொன்னது ஏதோ வலித்தது.. முதன் முறை உன்னை என் மனதார பார்த்து வருந்தினேன். பொறுமையா யோசிக்க மஞ்சரியை நான் பொண்ணு பார்க்கப் போனப் போதுக் கூட அவளுக்கு பதிலா நீ தான் எனக்கு தெரிஞ்ச. அவளை உன்னோடு கம்பேர் செய்தேன். உன் கிட்ட கண்ணை கட்டி நேரில் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மனதார பேசி இருக்கேன் என்று உணர்ந்தேன்..”

ஸனா ஒரே பார்வையோடு நின்றாள்.

“அப்புறம் உன்னை முதல் ஷூட்டிங்கில் அலங்காரத்தில் பார்த்தப்போ நடிகையா தெரிஞ்ச, ஆனா நீ ஸனா மஸ்தூரானு இயற்கையா தெரிய தான் இரண்டாவது ஷூட்டிங் வைத்தேன். அன்றும் நீ என் மனசில் இன்னும் ஆழமா நுழைஞ்ச மஸ்து. உன்னோட நடிகை என்ற பட்டம் தாண்டி உன் குணம், பேச்சு, பழக்கவழக்கம் எல்லாமே இயல்பா இயற்கையா இருந்தது. தன்மையா இருந்த, உண்மையை சொல்றேன் மஸ்து உன்னைய என் காதலில் விழ வைக்க முயற்சி செய்த நான்.. கடைசியில் உன்னோடு காதலில் விழுந்து விட்டேன் என்பது தான் நிஜம். அதனால் தான் அந்த கல்யாணப் பட்டுப் புடவை கொடுத்தேன்..”

ஸனா கண்களில் நீர் வழிந்தது…

அதை மறைத்து”சரி! அடுத்து என்ன நடந்தது, கடைசி முடிவு….?” என்றாள்.

“இல்ல! என் குடும்பத்தில் உன்னைய காதலிக்குறேனு சொல்ற தைரியம் இல்லை என்பதை விட, உனக்கு ஏத்த குடும்பம் அதில்லைனு தோணுது. நல்ல வேளை நீ காதலிக்கல அதுக்கு முன்னாடி என் கேம் முடிவுக்கு வந்துட்டு நான் தோத்துட்டேன் ஒத்துக்குறேன். ஆனா நீ நல்லவ.. ஹேப்பியா இரு மஸ்து..” என்றான் லேசாக சிரித்தவாறு.

“இதில் என் தப்பு எதுவும் இருக்கா அதியன்…?”

“கண்டிப்பா இல்லை ஸனா”

“அப்ப ஏற்கனவே யூஸ் அன்ட் த்ரோ ஆனவ அதும் நடிகை தானே என்ற இளக்காரமா மிஸ்டர் அதியன்…”

“அப்படியில்லை மஸ்து…” என்று தடுமாறினான்.

“கால் மி ஸனா. டோன்ட் கால் மஸ்து.. அந்த ஸ்டேஜில் கிண்டல் செய்தது தப்பு தான். ஆனா அதுக்காக அப்பவே ஸாரி கேட்டேன். அப்பவே நமக்கு எதுவும் கான்டெக்ட் இல்ல அதியன் நான் மறந்துட்டேன். ஆனா நீங்க அதை மனசில் ஏத்தி ஏததோ பண்ணி…”

“ஸனா! தப்பு தான், ஐ ஆம் சாரி…”

“எது அதியன்.. தாலி, புடவை எல்லாம் கிப்டா கொடுப்பது தான் உங்க கேம்மா.. ஒத்துக்குறேன் படத்தில் தாலிப் போட்டு நடித்திருக்கேன். ஆனா நிஜ வாழ்க்கையில் நான் நடிப்பதில்லை அதியன். கேமரா முன் மட்டும் தான் நடிப்பேன். நீங்க கொடுத்த தாலி, புடவையைத் தூக்கிப் போடவா.. ஓகே ஆல்ரைட், ஆனா அதுக்கு என்ன அர்த்தம்…? இப்பவும் கேக்குறேன் ஏன் என் ஃபீலிங்ஸோடு விளையாடினீங்க…?”

“ஸனா! நான் தானே ஃபீலிங்கிஸில் விழுந்தது நீ இப்ப வரை ஸ்டாங்கா தானே இருக்க. வலி எனக்கு தான். தப்பு நான் தான் செஞ்சேன் அதனால் அந்த வலியும் எனக்கு தான். நான் தாலி கிப்டா கொடுத்தது வேணா அதிகமான காயம் தான் ஆனா என் குடும்பம், தாத்தா இவங்க மத்தியில் என்னோட காதல் மலராது மொட்டாகவே போயிட்டுனு உணர்ந்துட்டேன். சாரி ஸனா இனி நான் உன்னைய டிஸ்டர்ப் செய்ய மாட்டேன்..”

“இதுவரைக்கும் செஞ்சதுக்கு உங்களுக்கு தண்டனை வேண்டாம..?”

அதியன் ஸனா முன் நெருங்கி நின்று, அவள் கையை எடுத்து தன் கன்னத்தில் அடித்தான்..

“கண்டிப்பா தண்டனை நீ தான் கொடுக்கனும். உன் கிட்ட  உண்மையை சொல்லாம போக எனக்கு மனசில்லை ஏனா நீ கடைசிவரைக்கும் உன்னோட இடத்தில் சரியா நின்னுட்ட.. என்னைய எவ்வளோ வேணா அடி, வாங்கிக்குறேன். இதுக்கு அப்புறம் அதியன் யாரோ. ஐ ஆம் நாட் டிஸ்டர்ப் யு..”என்றான்.

அவன் கைகளில் இருந்து கைகளை உருவியவள். “ச்சே! லீவ் மை ஹேன்ட் மிஸ்டர் ANR இந்த பேரு இருக்க திமிரு தானே எதையும் செய்ய சொல்லியது. உங்க குடும்ப சூழலுக்கு நான் ஏத்தவ இல்லனு உங்க தாத்தா சொல்லி தான் தெரியுமா.. ஏன் உங்களுக்கே தெரியாத….?”

“தாத்தா! அவரை ஏன் இழுக்குற…?”

“அவருக்கு பயந்துட்டு தானே நீங்க இப்ப இங்க நிக்குறீங்க, என் கிட்ட மன்னிப்பு கேட்டு…?”

“ஆமா! அதுல எந்த வெட்கமும் இல்லை. உன்னைய நான் மனசில் நினைச்சது சத்தியம் ஆனா தாத்தா ஏத்துக்க மாட்டார் என்பதும் தெரியும், அவருக்கு பயம் தான் ஸனா.. அதுல தப்பில்லையே…”

“அப்படிப்பட்ட குடும்பம், தாத்தா கூட்டில் இருக்கும் நீங்க, என்னைய ஏன் டிஸ்டர்ப் செஞ்சீங்க…?”

அதியனிற்கு ஏனோ கோபம் வந்தது இப்போது.

“ஸனா! தப்பு தான், ரொம்ப தப்பு தான் நான் செஞ்சது. சும்மா இருந்த உன்னை டிஸ்டர்ப் செய்தது.. ஆனா தாத்தா,  என் குடும்பம் தான் எனக்கு முக்கியம் என்பது உணர்ந்து இப்ப விலகுறேன். உன் கிட்ட உண்மையை சொல்லிட்டு போக தான் வந்தேன். இனி என் டிஸ்டர்ப்ன்ஸ் இருக்காது. அந்த தாலி, புடவையை தூக்கிப் போட்டு விடு. சில சமயம் நம்ம விதிப்படி தான் வாழனும் என்பது புரியுது.. நான் கிளம்புறேன்.. ஹேப்பியான லைஃப் உனக்கு கிடைக்கும்..” என்று கூறிவிட்டு திரும்பி நடந்தான்.

“ஒரு நிமிஷம்…”

“என்ன…?” என்பது போல் திரும்பினான்.

“நீங்க என்னைய உண்மையா  காதலிச்சீங்களா….?”

“ஆமா! ஆனா இந்த நிமிடம் குடும்பம் , தாத்தா மட்டும் தான் மனசில் இருக்காங்க…”

“மிஸ்டர் அதியன் என்னைய பத்தோட ஒருத்தியா, யூஸ் அன்ட் த்ரோ பேப்பரா, ஜஸ்ட் ஃபார்னு பெட் கட்டுற பொருளா நினைச்சுட்டீங்கள போங்க…” என்றாள் ஒரு மாதிரி குரலில்.

அதியனிற்கு அவளோட வலி புரிந்தாலும் நடந்து வேகமாக போனான்.

காரை எடுத்துட்டு கிளம்ப, ஸனா டிரைவர் அங்கிள் பார்த்தார் அதியனை.

‘இவரை தான் ஸனா பாக்கப் போனதா..?’என்று யோசித்தார்.

ஸனா மெதுவாக நடந்து வந்தாள்.

“என்னம்மா ஆச்சு…..? ஏன் வருத்தமா இருக்க.. அது அதியன் சார் தானே…?” என்று கேட்டார்.

“அங்கிள் வீட்டுக்குப் போகலாம்” என்றாள்.

அவரும் மறுவார்த்தைப் பேசாமல் காரை எடுத்தார்..

***

வீட்டிற்குப் போனது முதல் ஸனா எதுவும் பேசவில்லை.

அஜி, ஸனா வந்ததும் எவ்வளோ கேட்டும் பதில் பேசவில்லை.

அஜி ட்ரைவரிடம் விசாரிக்க.. அவர் அதியன் அங்கு வந்து இருந்ததை சொன்னார்.

“ஓகே! அங்கிள் நீங்க போங்க நான் பேசிக்குறேன்” என்று அவரை  அனுப்பினாள்.

“ஏய் என்ன  ஆச்சு…? எதுக்கு அதியனை பாக்கப் போன…?” என்று கேட்டாள்.

ஸனா அமைதியா இருந்தாள்.. தான் ஏன் இப்படி எல்லாம் ஏமாற்றப்படுகிறோம் என்று தன் விதியை நினைத்து கண்ணீர் வடித்தாள்.

அவளின் கண்களில் கண்ணீர் வடிந்ததை பார்த்த அஜி அவள் அறைக்குள் அழைத்துச் சென்றாள்..

“என்ன ஸனா ஏதாச்சு சொன்னா தானே புரியும்.. எனக்கு ஒன்னும் புரியல…?”

“நான் அவ்ளோ மோசமான பொண்ணா அஜி….?”

“ஏய் ஏன்டி அப்படி கேக்குற..?”

“எனக்கும் மனசு இருக்குமுல…?”

“இங்க பாரு என்னனு சொல்லிட்டு பேசு…” என்று கடுப்பானாள் அஜி.

ஸனா அஜியின் மடியில் படுத்து  கண்ணீர் வற்ற அழுதாள்.

அஜி பொறுமையாக காத்திருந்தாள்.

ராணி ஒரு வேலையாக வர, ஸனா அழும் குரல் கேட்டு ஓடி வந்தாள் அறைக்குள்.

“அக்கா! என்ன ஆச்சு…?”

“ராணி! கதவை சாத்து.. என்னனு தெரியல, அழுதுட்டே இருக்கா சொல்ல மாட்டுறா..” என்றாள் அஜி.

“அக்கா! இங்க பாருங்க..” என்று ராணியும் சமாதானம் செய்ய,

“அதியனை எதுக்குப் பாக்கப் போன…? இப்ப நீ சொல்றீயா இல்ல நான் கேக்கவா..?”

“யாரு நவநீ சில்க்ஸ் பேரனா…?” என்று கேட்டாள் ராணி.

“ம்ம்ம்!” என்றாள் அஜி.

“நீ யாரு கிட்டையும் கேக்க வேண்டாம்.” என்ற ஸனா எழுந்து சென்று தாலி மற்றும் புடவையை தூக்கிப் போட்டாள் கட்டிலில்.

“இது ஆட் ஷூட்டில் கொடுத்தது தானே..” எனக் கேட்டள் ராணி புடவையை பார்த்து..

ஸனா அனைத்தையும் ஒப்பித்து முடித்தாள்.

“வாட்! அதியனா இது..? நம்பவே முடியலடி..”

“அக்கா! என்ன சொல்றீங்க.. அந்த சார.?” என்றாள் ராணி..

“ஆமா!”

“விடுடி, அவனே வந்தான் அவனே போயிட்டான். இதை எல்லாம் தூக்கிப் போடுடி. நல்ல வேளை உன் மனசு மாறலைல…”

ஸனா அமைதியா இருக்க,

“என்ன அஜி அக்கா பேசுறீங்க…? இவங்க கிட்ட விளையாடிட்டு இப்ப ஏததோ கதை சொல்லிட்டு போறார். தாலி எல்லாம் சாதரண விஷயமா..?”

“ராணி! எனக்கு புரியது. இப்ப நம்ம போய் சண்டையா போட முடியும். நல்ல வேளை ஸனா மனசில் எதுவும் இல்லை. பணக்காரத் திமிர் அவனுக்கு..”

“அது எப்படி அக்கா மனசில் எதுவும் இருக்காதுனு சொல்றீங்க. இல்லைனா ஏன் இப்பிடி அழுவுறாங்க…?”

அஜி அதிர்ச்சியாக”ஸனா!” என்றாள்.

“அஜி! நானும் சாதரணப் பொண்ணு தானேடி, ஏதோ ஒரு சஞ்சலம் வந்தது உண்மை தான். அதையும் மீறி நான் எனக்கு சரிவராதுனு அவன் கிட்ட எதுவும் சொல்லலை, ஆனா அவன் என்னைய ஏமாத்த தான் ஆரம்பிச்சானு தெரிந்ததும் என்னால அதை ஏத்துக்க முடியல.. ஏன்டி எனக்கு மட்டும் இப்பிடி..” என்று அழுதாள்.

“ஹேய்! அந்த குடும்பம் எல்லாம் உனக்கு செட் ஆகாதுடி, அவனே வந்து சொல்லிட்டு விலகினது நல்லது தான்.. இந்தா இந்த தாலி, புடவையை தூக்கிப் போடு” என்று மூலையில் இருந்த குப்பைத் தொட்டியில் போடப் போனாள் அஜி.

“அய்யோ அக்கா! இது தாலி அப்படி எல்லாம் செய்யாதீங்க. நம்ம சமூகத்தில் இதுக்குனு மதிப்பு இருக்கு, அங்கீகாரம் இருக்கு. ஒருவரை சமுதாயத்தில் தலை நிமர்ந்து நிக்க வைப்பதும் தாலி தான், குனிய வைப்பதும் தாலி தான். என்ன இருந்தாலும் சாமிக்கு சமம்..” என்றாள் ராணி.

ஸனா அதை கேட்டு கொண்டு தான் இருந்தாள்.

“அதுக்காக இத வச்சுப் பூஜை பண்ண சொல்றீயா ராணி.. அவனுக்கு குடும்பம் தான் பெரிதா தெரியுது. இவளை ஏன் தொந்தரவு செய்தான். யாராச்சும் தாலியை கிப்ட் பண்ணுவாங்களா. புடவையை கூட விடு.. இவ கிட்ட கொடுத்தவன் அதை கட்டிவிட்டதுக்கு சமம் தான்” என்றாள் அஜி.

ஸனாக்கு மண்டையில் ஏதோ  உணர்த்தியது..

‘ஆமா தானே! எனக்கு தாலி, புடவை கொடுத்திருக்கான் அப்ப அவன் தானே என் புருசன்’ என்ற எண்ணம் தான் அது.

எழுந்து சென்று அஜியிடம் இருந்து தாலி, புடவையை வாங்கினாள்..

****

ஒரு வாரம் ஆனது…

அதியன் மற்றும் மஞ்சரி நிச்சயதார்த்தம் அடுத்த நாள்..

“சார்! போலிஸ் ஸ்டேசனில் இருந்து பேசுறேன். உங்க பேரன் அதியன் நவநீ ராகவன் மீது ஒரு கேஸ் வந்திருக்கு..” என்றார் எஸ் ஐ.

நவநீ”கேஸா….? யார் கொடுத்தது…?” என்றார்.

“மிஸஸ் ஸனா மஸ்தூரா அதியன் நவநீத ராகவன்”

“வாட்!” என்று எழுந்தார்.

“நியூஸ் பாருங்க சார், உடனே அதியன் சாரை வரச் சொல்லுங்க. இல்ல கேஸ் சென்சடேசன் ஆகிடும்..” என்று போனை வைத்தார்.

“அதியா!” என்று கத்த, குடும்பமே நின்றது அங்கு, அதியனும் தான்.

“டிவி போடுங்க” என்றார்.

நியூஸ் சேனல்கள் மைக்களை வரிசையாக அடுக்கிருக்க,

ஸனா மஸ்தூரா பேட்டிக் கொடுத்தாள்..

கழுத்தில் மஞ்சள் தாலி, புது கல்யாணப் புடவை என ஜொலித்தாள்..

“வணக்கம்!  நான் யாருனு உங்களுக்கே தெரியும். ஆனா இப்ப நான் மிஸஸ் ஸனா மஸ்தூரா அதியன் நவநீத ராகவன். எனக்கும் அவருக்கும் கல்யாணம் ஆகிட்டு, இதோ எவிடென்ஸ் ரெஜிஸ்டர் மேரெஜ்.. இது தாலி..” என்று காட்டினாள்.

அதியனுமே அதிர்ச்சியாய் பார்த்தான் அவளை.

அதியனவள் அடுத்து..

Advertisement