Advertisement

விறலி 17

அதியன் தான் அந்த ANR என்று அறிந்த ஸனா அதிர்ச்சியில் தான் இருந்தாள்.

‘அவனா…? இப்படி மெசேஜ் பண்ணி லவ் பண்றேனு சொன்னது, நம்ப முடியவில்லை அதே நேரம் அவனே சொல்லிட்டானே நான் தான் ANR னு..’

‘டிரைவர் அங்கிள் சொன்னதை வச்சு பாத்தா அவங்க வீட்டில் காதலுக்கு அகெயின்ஸ்ட் தான், இவனுக்கு எப்படி தைரியம் வந்தது..’

‘தாலி, புடவை இது எல்லாம் சாதரண விஷயமா…?’

தாலியை எடுத்துப் பார்த்தாள், ‘இல்ல இது சரி வராது அவனே லவ்னு சொன்னாலும் எனக்கு அறிவு வேணும் நடக்காத ஒன்றில் ஆசை வைப்பது தப்புனு அவனுக்கு சொல்லனும்.’

‘நான் ஒரு நடிகை, என்னைய மாதிரி ஒரு பெண்ணை கண்டிப்பா அவங்க வீட்டில் ஏத்துக்க மாட்டாங்க..’

‘எல்லாத்துக்கும் மேல அவனுக்காக மஞ்சரியை பொண்ணுப் பார்த்து நிச்சயத் தேதியே குறிச்சாச்சு… இது என்ன நிலை..’

இப்படி பலவாறு ஸனா மாறி மாறி தனக்குள்ளே வாதிட்டாள்.

அவளின் மனமோ’அவன் காதல், அவன் வீட்டில் உள்ளவர்கள் அது எல்லாம் இருக்கட்டும், நீ என்ன முடிவு எடுத்திருக்க, அவன் தாலி, புடவை வாங்கிக் கொடுத்து லவ்வை சொல்லிட்டான், உன்னைய டிசைடு பண்ண சொல்லி இருக்கான். என்ன செய்ய போற..?’ என்றது.

‘கண்டதும் காதல், கண்களால் காதல் செய்வது, காணாமலே காதல் செய்வது இதை எல்லாம் படத்திலே நடிச்சுட்டேன்.

கற்பனைக்கு கூட அது பொருந்தாது. அதிலும் இரு மாதமாக ஃபோனிலே மெசேஜ் செய்து இப்ப பத்து நாட்களாக தினமும் பேசி, இன்னைக்கு யாருனு சொன்னவனிடம் எப்படி காதல் வரும். ஒரு வேளை எனக்குமே புடிச்சு இருந்தாலும் அது உண்மையான காதலா…?’ எனக் கேட்டாள் மனமிடம்.

‘இந்த நிமிடம் உன் மனதில் என்ன இருக்கு அத பத்தி மட்டும் யோசி…’

ஸனா கண் மூடி ஆழ்ந்து யோசித்தாள்.

அன்று அதியன் வந்து கண்களை கட்டி

அவளிற்கு முத்தம் கொடுத்ததை இப்போது உணர்ந்தாள்..

அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் உணர்வாக காதில் ஒலித்தது..

அவன் கொடுத்தப் பரிசாக தாலியைப் பார்த்தப் போது அவள் உணர்ந்த உணர்வு நிலை அவளிற்கே கண்களில் நீர் வழிந்தது..

‘இந்த காதல் எனக்கானதா இருக்க கூடாத..?’ என்ற எண்ணம் அவளை அறியாமல் தலைத் தூக்கியது.

கண்களைத் திறந்தாள் அவசரமாக…

‘இல்லை! இல்லை! இப்ப மனசை இழந்தால் அப்புறம் வாழ்க்கையும் போயிடும்.. ஏற்கனவே பட்டது எல்லாம் போதும்.. எனக்குள்ள அதியன் மேல காதல் இருந்தாலும் அது அப்பிடியே இருக்கட்டும்..’

‘தாலி, புடவை எல்லாம் அவன் கொடுத்தப் பரிசாகவே என்னோடு வாழட்டும். நாளைக்கு நேரில் பார்க்கும் போது, என் மனசில் எந்த எண்ணமும் இல்லை, நான் ஸனா மஸ்தூரா மட்டும் தான் என்று முகத்திற்கு நேரா சொல்லிட வேண்டியது தான்’என்று முடிவு எடுத்தாள்.

அதே முடிவுடன் படுக்கைக்கும் சென்றாள்.

அதியன் கண் முன்னே வந்தான் ‘இது என்னடா உணர்வு..?’என்று மனம் நொந்தாள் பேதையவள்.

‘ஸனா! ஆசைப்படாத, அதியன் இருக்குமிடம் வேறு.. நீ என்ன தான் கோடி கோடியா சம்பாரிச்சாலும் நீ வேறு.. தெரிஞ்சே நிம்மதி இல்லா வாழ்க்கையில் போய் விழ யோசிக்காத, ஏற்கனவே எத்தனை துன்பம் உனக்கு தவறான வாழ்க்கையால் இப்போது அதியனுக்கு நல்ல வாழ்க்கை, அவனோட குடும்பத்துக்கு ஏத்த பெண் வரட்டும்’ என்று தன்னை தானே தேற்றி ஒரு சரியான முடிவிற்கு வந்தாள்.

****

ஸனாவிற்கு மெசேஜ் அனுப்பிவிட்டு நிமிர்ந்த அதியனிற்கு அந்த நிமிடம் மஸ்து மட்டுமே கண் முன்னே தெரிந்தாள்.

‘ஐ லவ் யு மஸ்து..’என்றான் தன் மனதிடம்.

மனமோ’டேய்! நீ என்ன நினைச்சு அவ கிட்ட பேசின ஆனா இப்ப என்ன பண்ணிட்டு இருக்க…?’ என்றது.

‘நான் நினைச்சது ஒன்னு தான்.. ஆனா அவளோட குணம், பேச்சுத்தன்மை  என்னைய மாத்தி யோசிக்க வச்சுட்டு.. எஸ் ஐ ஆம் பியூர்லி லவ் வித் மஸ்து..’ என்று சிரித்தான் தலையை அசைத்தவாறு.

கனவுலகில் இருப்பவனை நினைவுலகிற்கு கொண்டு வந்தது பாரியின் அழைப்பு.

“அண்ணா! முழிச்சுட்டே  கனவில் இருக்காத.. அது நடக்காது இப்ப நீ இருப்பது நவநீதம் ராகவன் வீடு..” என்று அழைத்தான்.

அவனை முறைத்த அதியன் “என்னடா…?” என்றான் கடுப்பாக.

“ம்ம்ம்! தாத்தா கூப்புடுறார்.. பயங்கர கோபத்தில் இருக்கார் வா…” என்று வெளியில் சென்றான்.

அதியன் புரியாமல்,  நடந்தான் ஹாலிற்கு.

****

காலையில் இருந்து ஸனாவிற்கு அதியன் எப்ப, எங்க மீட் பண்ணப் போகிறான் என ஓடியது.

ஷூட்டிங்கில் கூட அதே நினைவோடு தான் இருந்தாள்.

அவளின் நினைவை பொய்யாக்காமல் அதியன் மெசேஜ் வந்தது.

“வில் மீட் நியர் பை டெக்ஸஸ் லேக் சைடு வியூ… அங்க க்ரவுடு இருக்காது..” என்றிருந்தது.

ஸனாவிற்கும் ஓகே என தோன்ற, ஓகே என்று டைமிங் கேட்டாள்.

மாலை நான்கு மணி என்று அனுப்பினான்.

ஸனாவும் ஷூட் டைமிங்கை அட்ஜெஸ்ட் செய்தாள், ஆனால் ஒரு ப்ராப்ளம் அஜி கூடவே இருந்தாள்.

அவளிடம்”அஜி! நான்கு மணிக்கு எனக்கொரு மீட்டிங் இருக்கு, போயிட்டு வந்து சொல்றேன். நான் டிரைவர் அங்கிள் கூட போயிக்குறேன் நீ வீட்டுக்குப் போய் வெயிட் பண்ணு வந்து யாரு என்னனு சொல்றேன்” என்றாள்.

அஜியும் பதில் கேட்காமல் ஓகே என்றாள், ஆனால்”எங்க போனாலும் கவனம் ஸனா” என்றாள்.

அதியன் சொன்ன இடத்திற்கு நான்கு மணிக்கு சரியாக வந்தான்.

ஸனாவும் டிரைவரோடு வந்தாள், பர்தா போட்டப்படி வந்தவள், அந்த இடத்தில் ஆள் நடமாட்டம் இல்லாததால் கழட்டி வைத்துவிட்டு அதியனுக்கு கால் பண்ணி எங்கு இருக்கான் என கேட்டாள்.

அதியன் வழி சொல்லவும் அதை டிரைவரிடம் கூறினாள், அது சிறிது மரங்கள் அடர்த்தியாக இருந்த இடம்.

“ஸனாம்மா! இங்க யாரை பாக்க வரீங்க.. இடமே ரொம்ப அமைதியா இருக்கு. ஆள் நடமாட்டம் இல்லையே..”

“அங்கிள்! தெரிந்தவர் தான் பயமில்லை. நீங்க இங்கயே வெயிட் பண்ணுங்க, நான் வரும் வரை” என்று இறங்கி நடந்தாள், பர்தா இல்லாமல் இப்படி பொது வெளியில் நடப்பது இதமாக அழகாக இருந்தது.

நடந்தவள் கண்ணில் அந்த வளைவில் அதியன் தெரிய, அவனை நோக்கி சென்றாள்.

இருவரும் நேருக்கு நேர்.

“ஹாய்!”

“ஹாய்!” என்றாள் ஸனா.

“இந்த இடம் பிரச்சனையில்லை. நீ வருவதற்கு அதான் இதை செலக்ட் பண்ணினேன்..”

“ம்ம்ம்! நோ ப்ராப்ளம்..”

“யாரு கூட வந்த..?”

“டிரைவர் அங்கிள் மட்டும் தான்..”

“டிரைவர் அங்கிளா.. உன் ரிலேட்டிவ்வா..”

“பரணி அங்கிள் உங்க ரிலேட்டிவா…? அந்த மாதிரி தான்..”

அதியன் சிரித்தான். அதை பார்த்தவள் மனம் ரசித்தது.

அதை அடக்கினாள் ‘உஷ் எதுக்கு வந்திருக்கோம்..’ என்று.

“உன் கிட்ட இன்னைக்கு நான் எல்லாத்தையும் சொல்லிடுறேன்..” என்று ஆரம்பித்தான்.

“ஒன் மினிட் எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம்.. நான் உங்களை…” என்று அவள் முடிக்கும் முன்பே.

அதியன் ஆரம்பித்தான்”நீ என்னை விரும்பல. நான் உன் மனசில் இல்லை அதானே” என்றான்.

ஸனா அமைதியாக..

“அதுவும் நல்லதுக்கு தான். நீ என்னைய விரும்பாம இருப்பதும்..” என்றவனை கண்கள் சுருக்கிப் பார்த்தாள் ஸனா.

“உன் கூட சேருவது கஷ்டம் தான். அது புரிஞ்சுட்டு எனக்கு இப்ப. ஆனா ஒரு உண்மையை சொல்றேன்…” என்றான்.

***

நேற்று இரவு..

அதியன் நவநீதம் முன் நின்றான்.

வீட்டில் உள்ள அனைவரும் வந்தனர்

பரணி முதற்கொண்டு.

அன்னம் பாட்டி எதுவும் தெரியாதது போல் அமர்ந்திருந்தார்.

அதியனுக்கு புரியவில்லை.

“சொல்லுங்க தாத்தா” என்றான்.

“அதியா! ஒரே டிசைனில் இருந்த புடவையை எதுக்கு பரிசா கொடுத்த…”

“இல்ல தாத்தா! அது பப்ளிசிட்டிக்காக தான்..”

“சரி! ஏன் அந்த நடிகைக்கு சம்பளம் கொடுக்கவில்லை…”

“அதுக்கு பதிலா தான் அவங்க புடவை வாங்கிட்டாங்க..”

“புடவை இனமா தானே கொடுத்த. அப்ப நடிப்புக்கு காசுக் கொடுக்கனுமுல..”

அதியன் அமைதியா நின்றான்.

பரணி ஏதோ சொல்ல வர,

கை அமர்த்திய நவநீதம்”சரி! நாளைக்கே அந்த நடிகைக்கு காசை அனுப்பி விடு..” என்றார்.

“ம்ம்ம்! சரி தாத்தா..”

“அதியா! பிஸ்னஸ் டீல் பிஸ்னஸோடு இருக்கனும். தடுமாறக் கூடாது, அவங்க நடிகை அவ்ளோ தான். நீ பரிசாக கொடுத்தது பிஸ்னஸ் பொருட்டுனா நான் ஏத்துக்குறேன். இல்ல அப்பிடினா..?” என்று அவன் முகத்தைப் பார்த்தார்.

அதியன் அவரை நேருக்கு நேர் பார்க்க பயந்தான்.

“நாளைக்கே பேமென்ட் அனுப்பிடுறேன் தாத்தா..”

அந்த நேரம் சேரர் போன் அடிக்க, அது மஞ்சரி அப்பா தான்.

மஞ்சரி ஆசைப்பட்ட நிச்சயப் புடவைப் பற்றி சொன்னார்.

சேரர் அப்பாவிடம் சொல்வதாக சொல்லி வைத்தார்.

நவநீயிடம் சொல்ல, பரணியை பார்த்தார்.

“ஆமாய்யா, மஞ்சரி மேடம் அதே மாதிரி ஆனா வேன புது புடவை கேட்டாங்க…”

“எதுக்கு புது புடவை..?”

“ஸனாம்மா கட்டியதால் அது வேண்டாம் ஆனால் அந்த டிசைன் வேறு கலர் கேட்டாங்க..”

“பரணி! என் வீட்டு மருமகச் சொன்னது சரி தான். ஆனா அந்த புடவை டிசைனே வேண்டாம். புது டிசைன் ஆர்டர் பண்ணு.. நடிகை கட்டிய புடவை மாதிரி வேண்டாம் அதியன் நிச்சயப்புடவை புது மாடலாக யாரும் கட்டாத டிசைனா இருக்கனும்..” என்றார் நவநீ.

பரணி தலையை ஆட்டினார்.

சங்கவி”பரணி அங்கிள்! நீங்க ஏன் அண்ணியை மேடமுனு சொல்றீங்க…?” என்றாள்.

“ம்ம்ம்! அது அண்ணி ஆர்டர்” என்றான் பாரி.

“ஓ!” என்றனர் பெண்கள் அனைவரும்.

தேவியோ மாலினியிடம்”இப்பவே முதலாளி அம்மா ஆர்டர் போடுறாங்க பாரு” என்றார்.

மல்லிகாவிற்கு பெருமையாக இருந்தது.

நவநீ, அதியனிற்கு பார்த்தப் பெண் இந்த வீட்டு தகுதி அறிந்தவள் தான் என்று பெருமைப் பட்டார்.

ஆனால் பாட்டி முகம் கோணிக் கொண்டார், இது சரியில்லையே என்று.

அதியன் தான் அசந்து நின்றான். இதுவரை மஸ்து மட்டுமே இருந்த மனசில் மொத்த குடும்பமும் ஆக்கிரமித்தது.

அதியன் தன் அறையை நோக்கி செல்ல, பாட்டி பின்னே வந்தார்.

“அதியா…?”

“சொல்லுங்க பாட்டி..”

அவனை தனிமைக்கு அழைத்துச் சென்றார்.

“நீ ஏன் ஒரு மாதிரியாக இருக்க…?”

“ஒன்னுமில்லை பாட்டி..”

“உன் கிட்ட ஒரு விஷயம் சொல்றேன். இந்த வீட்டில் காதலுக்கு இடமில்லை, அப்படி காதல் பண்ணினா என் மூத்தப் பொண்ணு மாதிரி போட்டோவில் தான் தொங்கனும்..” என்றார்.

அதியன் அதிர்ச்சியாய் கேட்க.

“ஆமா! அந்த கதை இப்ப உனக்கு வேண்டாம். நீ விரும்புகிற பெண்ணை இங்க கொண்டு வந்து கஷ்டப்படுத்தி போட்டோவில் மாட்டிவிடாத. ஏனா..? ஆண் வர்க்கம் பொம்பளையை தான் முதலில் பலியிடும்” என்று நகர்ந்தார்.

“பாட்டி! நீங்க சொல்றது புரியல.. அத்தை சாவுக்கு யார் காரணம்..? நான் யாரையும்…” என்று அதியன் ஆரம்பிக்க.

“அதியா! உனக்கு நேரம் வரும் போது எல்லாம் தெரியும். இப்ப நீ யாரையும் பலியாக்கமா பொறுப்பா இரு. உனக்கு கூடிய சீக்கிரம் நிச்சயதார்த்தம்..” என்று நடந்தார்.

அதியனிற்கு ஒன்றும் விளங்கவில்லை.

ஆனால் பாட்டி, தாத்தா பேசாமல் இருக்க இதில் ஏதோ காரணம் இருக்கு என்று உணர்ந்தான்..

தன் அறைக்குள் வந்தவனுக்கு மூளையே குழம்பியது.

‘நம்ம வீட்டில் என்ன நடந்தது, ஸனா விஷயத்தில் தாத்தா பயங்கர ஸ்ரிட்டாக இருக்காரு.. நான் ஸனாவை காதலிப்பது தெரிந்தால் என்ன ஆகும்..’

‘ஸனா இவங்க கிட்ட வந்தா அவளோட மதிப்பு என்ன ஆகும்..’

‘நல்ல வேளை ஸனா என்னைய விரும்பல. இல்லைனா அவ மனசை மாத்த முடியாது. பாட்டி சொல்ற மாதிரி ஸனாக்கு என் கூட வாழ்க்கை வேணாம். அவ ஹேப்பியா இருக்கட்டும்..’

‘நாளைக்கு மீட் பண்ணி பேசிடலாம்..’

ஆனா நான்…? என் காதல்…? என்று யோசித்துக் கொண்டே தூங்கினான்..

****

இன்று…

‘ஸனா உன் கிட்ட ஒரு உண்மையை சொல்றேன்’என்றவனை, ‘என்ன..?’ என்பது போல் பார்த்தாள் ஸனா..

அதியனவள் அடுத்து.

Advertisement