Advertisement

சிறிதும் யோசிக்காமல் அவளின் நெற்றியில் அழுத்தமாய் பூசியவன் அவளின் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து அழுத்தமான முத்தமொன்றை கொடுத்தான்.
“சீக்கிரம் முழிச்சுக்கோ நிதி. நீ கண்ணு முழிச்சு எனக்கு உயிர் கொடுத்திரு…” என்று அவளின் காதருகே சத்தமாய் சொல்ல அவளின் விழிப்பில் தன் உயிர்ப்பை தேடி அவளின் முகத்தில் தன் விழிகளை பதித்து பார்த்தபடி இருந்தான்.
நேரம் சென்றதே தவிர சந்நிதியிடம் ஒரு அசைவும் இல்லை. அவனும் இடத்தை விட்டு அசையவில்லை. 
“ஸார்…” என்ற சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவன் அங்கே நின்ற நர்ஸை பார்த்துவிட்டு,
“இவங்க எப்போ கண் திறப்பாங்க?…” என்றான்.
“இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகலாம். வலி அதிகம் இருக்கும் இல்லையா? அதுக்கும் இன்ஜெக்ஷன் போட்டிருக்கு…” என்றவர்,
“இவங்களோட அம்மாவுக்கு ஆப்பரேஷன் முடிஞ்சிருச்சு. இதுக்கு பக்கத்து ரூம்க்கு ஷிப்ட் பண்ணியாச்சு ஸார். அதை சொல்லத்தான் வந்தேன்…”
“ஓஹ் தேங்க்ஸ். நான் பார்த்துக்கறேன்…” என்று அவன் சொல்லும் பொழுதே,
“அம்மாவுக்கு என்னாச்சு?…” என கேட்டபடி எழ பார்த்தாள் சந்தியா. 
திடீரென அவளின் சத்தத்தில் திகைத்துபோனவன் தனது கைக்குள் சந்நிதியின் கை இருப்பதை மறந்து,
“சந்தியா ஆர் யோ ஆல்ரைட்?…” என கேட்க,
“அம்மாவுக்கு என்னாச்சு? எனக்கு சொல்லுங்க. அம்மாவை பார்க்கனும்…” என்று திணற,
“ஏம்மா, பாடுங்கம்மா நீங்க. செலைன் ஏறிட்டு இருக்குல. படுங்க. உங்கம்மாவுக்கு ஒன்னும் இல்லை. பக்கத்து ரூம்ல தான் ரெஸ்ட் எடுத்திட்டு இருக்காங்க…”
“பொய் சொல்றீங்க. ஆப்பரேஷன்னு…” கண்ணீருடன் நர்ஸையும் வசீகரனையும் பார்க்க,
“கார் கண்ணாடி குத்திருக்கு. அதை வெளில எடுத்துட்டு ஸ்டிச்சஸ் போட்டிருக்கோம். அதை தான் அப்படி சொன்னேன். வேற எதுவும் இல்லை…”
“அப்பா அப்பாவுக்கு…” 
“அவருக்கும் எதுவும் இல்லை. உன்னை மாதிரி தான் தலையில அடி. அவரும் ரெஸ்ட் எடுக்கறார்…” என்ற அப்பெண் சந்தியாவை ஏகமாய் சமாளித்து மீண்டும் படுக்க வைக்க வசீகரன் பார்த்தபடி நின்றான்.
நர்ஸ் அங்கிருந்து கிளம்பியதும் சந்நிதியின் பக்கம் திரும்பியவள் தங்கையின் நிலையை பார்த்து கண்ணீரை பொழிந்தபடி இருந்தாள்.
“எப்ப கான்ஷியஸ் திரும்பிச்சு? எப்போ கண்ணு முழிச்ச சந்தியா?…” வசீகரன் கேட்கவும் அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“நீங்க உள்ள வரும் முன்னாடியே வேற செலைன் மாத்த நர்ஸ் வந்தாங்க. அப்பவே முழிச்சுட்டேன். ஆனாலும் என்னால எழுந்துக்க முடியலை. கண்ணையும் திறக்க முடியலை…”
அவன் வந்ததிலிருந்து அனைத்தையும் கவனித்திருக்கிறாள் என்கிற உண்மை புலப்பட பதட்டமின்றி சந்நிதியின் கையை மெதுவாய் கீழே வைத்துவிட்டு சந்தியாவின் அருகே வந்தான்.
“இப்போ பரவாயில்லையா? தெளிவா இருக்கியா?…” என கேட்க எச்சிலை கூட்டி விழுங்கியவள்,
“அப்பாவுக்கு தெரியும் முன்னாடியே நீங்க கிளம்பிடுங்க. இது அப்பாவுக்கு தெரிஞ்சா நிதிக்கு தான் கஷ்டம். நன் யாருக்கிட்டயும் சொல்லமாட்டேன். ப்ராமிஸ்…” என்ற அப்பெண்ணை பார்த்தவன் வருத்தமாய் புன்னகைத்து,
“உங்கப்பாவுக்கு இப்போதைக்கு தெரியாது. தெரியவிடமாட்டேன்…”
“இது நடக்காது. நீங்க விலகிடுங்க. நிதி பாவம். என்னை மாதிரி இல்லை அவ. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க…”
“ஏன் நடக்காது? நடக்கும். கண்டிப்பா…” என வீம்பாய் உறுதியுடன் சொன்ன அவனை வேகமாய் நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில் கெஞ்சல் மறைந்து கோபம் வியாப்பிக்க,
“இந்த ஆக்ஸிடென்ட் ஏன் ஆச்சுன்னு தெரியுமா உங்களுக்கு? உங்களால தான் உங்களால மட்டும் தான். உங்களை கோவில்ல வச்சு அப்பா பார்த்துட்டாரு…” என்றவள் முனீஸ்வரன் நடந்துகொண்ட விதத்தையும் தாங்கள் அவசரமாக கிளம்பிய தருணத்தையும் சொல்லியவள்,
“பேசிட்டு இருக்கும் போதே அவர் எங்க காருக்கு பின்னால வர வண்டியை பார்த்துட்டு தான் வேகமா காரை ஓட்ட சொன்னார். அது ஒருவேளை உங்களோடதுன்னு கூட நினைச்சிருக்கலாம். இப்ப சொல்லுங்க, எப்படி நடக்கும்னு எதிர்பார்க்கறீங்க?…” என கேட்டவள்,
“நீங்க எங்களை பார்த்தப்பவும் கோபப்பட்டா சரி. ஆனா நீங்க எங்களை பார்க்காதப்போ கூட எங்க பார்த்திருவீங்களோன்னு பயந்து கிளம்பறார். உங்கமேல அத்தனை கோபமும் வெறுப்பும் வச்சிருக்கார். இதை தாண்டி நீங்க என்னை தான் பேச வந்ததா நினைச்சிட்டு இத்தனை கஷ்டப்படுத்தறார். இதுவே நிதியை தான் கேட்க வந்தீங்கன்னு தெரிஞ்சா அவளை வார்த்தையாலையே சாகடிச்சிடுவார்…” 
“சந்தியா குடும்பத்தோட எல்லாத்துக்கும் பயந்துட்டே இருப்பீங்களா?…”
“இதை நீங்க பயம்னு சொல்லுங்க, கோழைத்தனம்னு சொல்லுங்க. இதுக்கு பேர் குடும்ப மரியாதைக்கான போராட்டம்னு நாங்க சொல்லுவோம். எங்கப்பா எங்களை கட்டிப்போட்டு வளர்த்தாலும் எந்த குறையும் இல்லாம வளர்த்திருக்கார்…”
“இதுக்கு பேர் அடிமைத்தனம்…”
“நிதி சொன்னா இன்னைக்கு உங்ககிட்ட பேசினதா. நீங்களும் சொன்னீங்களாமே இனிமே பின்னால வரமாட்டேன்னு. எங்களுக்கு நல்லது செய்யனும்னு நினைச்சா அந்த வாக்கை காப்பாத்துங்க. அது போதும். இப்போ நீங்க கிளம்புங்க…” என்று அவள் கையெடுத்து கும்பிட அவளின் கையை பிடித்தவன்,
“தப்பா நினைக்காத சந்தியா. ஒரு ப்ரெண்டா நினைச்சுக்கோ. நான் பேசறதுக்கும் இடம் கொடு. எனக்கு சந்நிதியை பிடிச்சிருக்கு. நான் அவளை தான் கேட்டு என் பேரண்ட்ஸ அனுப்பினேன். அவங்களுக்கும் யார் பெரிய பொண்ணுன்னுன்னு தெரியாது. உங்க வீட்ல நீன்னு நினைச்சுட்டாங்க…”
“இப்ப எதுக்கு இது திரும்ப?…” அசூயையாய் முகம் திருப்ப,
“எனக்கு சொல்லனும்னு இருக்கு. சந்நிதி இன்னைக்கு பேசறப்போ நான் சொன்னது கூட இப்போதைக்கு அவளுக்கு எந்த டிஸ்டர்பன்ஸ் குடுக்க வேண்டாம்னு தான். உன்னோட வெடிங் நல்லபடியா முடியட்டும். அதுக்கு பின்னால பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்…”
“இதை விட நீ தெரிஞ்சுக்க வேண்டியது எங்க கல்யாணம் நிச்சயம் உங்கப்பா சம்மதத்தோட தான் நடக்கும். அவரே வந்து பொண்ணை குடுக்கறேன்னு வந்து கேட்பார். இதுல எந்தவித பிரச்சனையும் வராது. நான் வாக்கு குடுக்கறேன் இதுக்கு…” என்றவனை நம்பாத பார்வை பார்க்க,
“உன் தங்கச்சிக்கு நான் மேட்ச் இல்லைன்னு நினைக்கிறியா?…” என அப்பாவியாய் கேட்க சந்தியாவின் முகத்தில் புன்னகை கீற்று.
“ஹப்பா சிரிச்சுட்ட. ப்ரெண்ட்ஸ்…” என்று கையை நீட்ட யோசனையுடன் தயக்கமாய் அவனை பார்த்தாள்.
“எனக்கு ப்ரெண்ட்ஸ் யாருமே இல்லை. ப்ரெண்ட், சிஸ்டர், வெல்விஷர், டேக்கர் எல்லாமே என் நிதி தான்…” என சொல்லியவளின் மேல் வாஞ்சை பிறக்க,
“சீக்ரெட் ப்ரெண்ட்ஸ். இப்ப ஓகே?…” என மீண்டும் கையை நீட்ட மெதுவாய் அவனின் கை பற்ற நினைத்து கையை தூக்கியவள் அப்படியே அந்தரத்தில் கையை நிறுத்த அதை பற்றி குலுக்கியவன்,
“எனக்கு நீ பண்ண போற ஒரே ஹெல்ப், இப்போதைக்கு அவளுக்கு எதுவும் தெரியவேண்டாம்…”
“பின்ன எப்போ தெரியனும்?…”
“அதை எப்போ தெரியப்படுத்தனுமோ அப்போ தெரியப்படுத்துவேன்…” என்றவன்,
“ஆனாலும் உன்னை விட உன் தங்கச்சி கொஞ்சம் துணிச்சல்காரி தான்…” 
“அவ துணிச்சல் எல்லாம் என் விஷயத்துல என்கிட்டே அம்மாக்கிட்ட மட்டும் தான்…” என சோபையாய் புன்னகைத்து,
“நீங்க கிளம்புங்க அப்பா வந்தார்ன்னா…” என சொல்லும் பொழுதே வசீகரனின் முகம் மாறிவிட,
“நானும் கொஞ்சம் தைரியமான பொண்ணு தான். இப்போ ப்ரெண்ட் நீங்க இருக்கீங்கள்ள. என்னாச்சு? அப்பா ஏன் இன்னும் பார்க்க வரலை?…” என கெஞ்சலாய் கேட்கவும் இனி மறைக்க எதுவும் இல்லை என நினைத்தவன் விஷயத்தை சொல்ல நின்ற அழுகை கேவலாக வெடித்தது.
“நான் இப்பவே அப்பாவையும், அம்மாவையும் பார்க்கனும். என்னால தான் எனக்கு பரிகாரம்னு வந்துட்டு இப்படி. என்னால தான்…” என ஒரு கையை கொண்டு தலையில் அடித்துக்கொள்ள,
“ப்ச், சந்தியா. அழுது, அழுது உன்னையும் கெடுத்துக்காத. இப்ப உங்க குடும்பத்துல நீ மட்டும் தான் கொஞ்சம் நல்லா இருக்க. நீயே அழுது சோர்ந்துட்டா மத்தவங்களை யார் பார்ப்பா? நீதான் திடமா இருக்கனும்…” என அவளை தேற்றியவன்,
“நீங்க கிளம்பறீங்களா?…” என நடுங்கும் கைகளுடன் அவள் அழுகைக்கிடையில் கேட்க அனாதரவான நிலையில் பசியில் வாட்டும் குழந்தையை ஒத்திருந்தது அவளின் நிலை.
“இல்லைடா. நான் போகலை. கண்டிப்பா போகலை. உன்னை என் நிதியை இப்படியே விட்டு நான் போகலை…” என அவளின் கையை பிடித்து ஆறுதலாய் சொல்ல,
“எனக்கொரு ஹெல்ப்…” விசும்பலுடன் சொல்ல,
“ஹ்ம்ம் சொல்லு…”
“எங்க ராதா சித்திக்கு போன் பன்றீங்களா? ப்ளீஸ். எங்களுக்கு வேற யாரும் வரமாட்டாங்க…” தங்களின் மேலே உள்ள கழிவிரக்கத்துடன் அவள் சொல்ல,
“அவங்களுக்கு சொல்லிட்டேன். கிளம்பிட்டாங்க…” என்றதும் நன்றியுடன் சந்தியா பார்க்க,
“ஏன் வரமாட்டாங்க? உன் பெரியப்பா, பெரியம்மா, உன் அண்ணன் புகழ் எல்லாருமே வந்துக்கிட்டு இருக்காங்க…” என கூடுதல் தகவலாய் இதையும் சொல்ல சந்தியாவிற்கு திக்கென்று இருந்தது.
“ஐயோ அப்பா பார்த்தா டென்ஷன் ஆகிடுவாங்க. ராதா சித்தின்னா சமாளிச்சிடுவாங்க. ஆனா பெரியப்பா பேமிலி வந்தா அவ்வளோ தான்…” என பதற,
“எதையுமே பேஸ் பண்ண பழகு சந்தியா. இப்படி நடக்குமோ அப்படி நடக்குமோன்னு பயந்துட்டே எதையும் முயற்சி செய்யாம இருக்க கூடாது. ஒரு வேளை இந்த விசிட் உங்க ரெண்டு பேமிலியையும் ஒண்ணாக்கலாம் தானே?…” என கேட்க பதில் இன்றி அவனின் முகத்தை பார்க்க,
“நான் போய் உன் அம்மாவை, அப்பாவை பார்த்திட்டு வரேன். நீ நிதியை பார்த்துக்க. இன்னைக்கு மட்டும் என்னால இருக்க முடியும்…” 
“நானும் அம்மாவை பார்க்கனும்…”
“ஆசைப்பட்டா மட்டும் போதாது, அதுக்கேத்தது போல உன்னோட உடலையும் மனதையும் பலப்படுத்திட்டு தயாரா இரு. டாக்டரே பார்க்க அலோ பண்ணுவாங்க. இப்ப உனக்கும் ரெஸ்ட் தேவை. நான் போய்ட்டு வரேன். வந்து உனக்கு சொல்றேன்…” என்றவன் அறையை விட்டு வெளியேற சந்தியா சந்நிதியை திரும்பி பார்த்தாள்.
தன் தங்கையின் எதிர்காலம் பற்றி இனி எந்த கவலையும் இல்லை. என்கிற நிம்மதி அவளின் முகத்தை நிறைத்திருந்தது. 
அதையும் தாண்டி நாளை வருபவர்களின் வருகை தன் குடும்பத்திற்கு சாதகமா? பாதகமா? என்கிற பயம் வேறு அவளை உலுக்கியது.
சாதாரண மனிதன் என்றால் இது நிச்சயம் வசீகரன் சொல்லியதை போல குடும்பங்கள் இணையும் தருணமாக இருக்கும். 
ஆனால் முனீஸ்வரன் போன்ற குணாதிசயம் கொண்ட ஒருவரை வைத்துக்கொண்டு நன்மையா? தீமையா? என ஆராய்வதே முட்டாள் தனம் என அவளின் அடிமனம் எடுத்துரைத்தது.

Advertisement