Vili orathil imai saayudhe

1271

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்- கதித்தோங்கும்

நிஷ்டையுங்
கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.
அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

சஷ்டியை நோக்க சரவணா பவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி ஆட
மையல் நடஞ்செய்யும்
மயிவாகனனார்……….

கையில் வேலால் எனைக்
காக்கவென்று வந்து
வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திர முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக……

வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக………

என கோவில் பாட்டு பாடி கொண்டு இருக்க.,, ஐயர்கள் அனைவரும் சாமிக்கு கால பூஜைகளை செய்வதற்கான வேலையை கவனித்துக் கொண்டு இருந்தனர்.

எல்லாம் வேலையையும் முடித்த ஐயர் பகவானிற்கு பூஜை செய்வதற்காக காத்திருக்க அங்கே இருந்த ஒருவர் ” சாமி நல்ல நேரம் ஆரம்பிச்சுடுச்சி ஏன் இன்னும் நீங்க பூஜைய ஆரம்பிக்கல ” என்று கேட்டு அவரை பார்க்க

” இன்னைக்கு முருகனுக்கு சிறப்பு பூஜை ஏற்பாடு பண்ண சொல்லியிருக்காங்க மா. அவுங்களுக்காக தான் காத்திண்டு இருக்கோம். இப்போ வந்தறேன்னு சொல்லியிருக்காங்க ” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் கையில் தாம்புல தட்டுடன் வந்தார் அந்த வீட்டின் மகாலட்சுமியாக வலம் வரும் சகுந்தலா தேவி. அவர் பின்னே அவரது குடும்பத்தினர் அனைவரும் வருகை தந்திருந்தனர்.

” வாங்கோ மா..!! வாங்கோ ஐயா..!!” என்று பவ்வியமாக அவர்களை ஐயர் வரவேற்க்க தரிசனத்துக்காக காத்திருந்த அனைவரின் பார்வையும் அவர்களின் மீது திரும்பியது..

சகுந்தலா தேவியின் மொத்த குடும்பமும் வருகை தந்தது . அவர்களின் நடுவே பட்டு வேஷ்டி அணிந்து மாப்பிளீளைக்கே உரித்தான கம்பீர தோற்றத்துடன் ஆறடிக்கே வளர்ந்து உடன்கட்டை கொண்டு மற்றவர்களின் மனதை ஈர்க்கும் விதமாக தோற்றம் அளித்தான் கதையின் நாயகன் இளஞ்சேரல் அவனுடன் அவன் தந்தை கந்தர்வேல் தங்கை மிளனி அவனது நன்பர்கள் வைபவ் மென்னிலா என அவனை சுற்றி வந்திருந்தனர்.

” வாங்க மா வாங்க ஐயா எல்லாரும் நல்லா இருக்கீங்களா ” என்று பனிவுடன் கேட்க

” நாங்க நல்லா இருக்கோம் சாமி. அப்புறம் பூஜைக்கு எல்லா ஏற்பாடும் முடிஞ்சிதா சாமி ” என்று சகுந்தலா கேட்க

” முடிஞ்சுது மா உங்களுக்காக தான் இவ்வளவு நேரம் காத்திட்டு இருந்தோம் இதோ இப்போ பூஜைய ஆரம்பிச்சிடுறேன் மா ” என்று தன்மையாக கூற

” இல்ல சாமி இன்னும் என்னோட வருங்கால மருக வரல அவுங்க வந்துட்டு இருக்கா வந்ததும் பூஜைய ஆரம்பிச்சிடலாம் சாமி ” என்று சகுந்தலா கூற அவரும் சரி என்று விட்டு மௌனம் காக்க தொடங்கி விட்டார்.

” டேய் என்னடா இன்னும்மா உன் ஆளு இங்க வரல நீ போற இடத்துக்கு எல்லாம் முன்னாடியே வந்துருவாலே டா ” என்று நிலா இளாவின் காதில் ஓத

” வாய மூடிக்கிட்டு இரு டி ” என்று கூறி முடிப்பதற்குள் ” இதோ நான் வந்துட்டேன் ” என்ற அழகான குரலுடன் அவர்களின் அருகில் வந்தாள் யாழ்விழி.

அவளை கண்ட இளாவின் மனது வேகமாக துடிக்கத் தொடங்கியது. ஏனோ இது பெரியவர்கள் முன்னின்று திருமணம் ஆயினும் அவள் பக்கத்தில் இருக்கும் போது அவனுள் ஏததோ மாற்றங்கள் ஏற்படுகிறது. அது ஏன் என்று இவனுக்கு இது நாள் வரை புலப்பட வில்லை. அதை அறியவும் முற்பட வில்லை.

” வா மா மருமகளே ” என்று யாழ்விழியை அவரின் பக்கத்தில் நிறுத்திக் கொண்டார் சகுந்தலா.

யாழ்விழி பெயருக்கு ஏற்றாற் போல் அழிகிய விழியினை உடையவள் . அவளின் விழி பார்வைக்கு பலரின் மனம் ஏங்கி தவிக்கின்றது. ஆனால் அவளின் விழி என்னவோ இளஞ்சேரல் மீதே நிலைத்திருந்தது. அவளின் விழியில் அவனுக்கான காதல் வழிந்தாலும் அவளின் விழியை ஒருபோதும் பார்த்ததில்லை அவன்.

ஐயர் பூஜையை ஆரம்பிக்க அனைவரும் கண்களை மூடி பிரார்த்தனை செய்தனர்.

” சாமி எனக்கு என்னோட இளாவ கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி ” என்று யாழ் வேண்ட

” எனக்கு என்னென்னு சரியா சொல்ல தெரியில சாமி எனக்கு தெரிஞ்ச வரைக்கும் என் மனசு என்னோட இணையினிக்காக மட்டும் தான் துடிச்சது. ஆனா இப்போ எனக்கு பக்கத்துல நிக்கிற விழிக்காக துடிக்கிது . இதுக்கான அறிகுறி என்ன ” என்று அவன் கேள்வியால் சாமியை திணறடிக்க

இருவரையும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டே சிலையாய் நின்றிருந்தார் முருகன்.

பூஜைகள் முடிந்து ஐயர் பிராசதம் வழங்க அதை பெற்றுக்கொண்டு நிச்சயம் வைத்திருக்கும் இடத்திற்கு சென்றனர்.

இளஞ்சேரல் பணக்காரனாக இருந்தாலும் அவனுக்கு எளிமையாக வாழ்வது தான் பிடித்தமான ஒன்று. இந்த குணம் அவன் அன்னையிடம் இருந்து வந்தது.

யாழ்விழிக்கு சொந்தம் என்று கூறிக் கொள்ளும் அளவிற்கு யாரும் இல்லை அவளது தாத்தாவை தவிர . அவள் பிறந்த சில காலத்திலேயே அவளது தாயும் தந்தையும் இறந்துவிட அவளது தாத்தா தான் அவளை வளர்த்து வந்தார்.

இந்த கோவிலில் தான் நிச்சயதார்த்தம் நடத்த வேண்டும் என்பது யாழின் அன்பு கட்டளையாகும் அதனாலே காலை வேலையில் கோவிலில் நிச்சயம் வைத்து மாலையில் ரிசப்ஷன் அடுத்தநாள் திருமணம் என்று முடிவு செய்யப்பட்டது.

சொந்த பந்தங்கள் அனைவரும் கோவிலுக்கு வருகை தந்தனர். நல்ல நேரம் வரவும் இரு சொந்தகளும் அமர்ந்தனர்.

இளஞ்சேரல் பட்டு வேஷ்டியில் அமர்ந்திருக்க அவன் பக்கத்தில் மிளனி ஒருபுறமும் மறுப்புறத்தில் மென்னிலாவும் அமர்ந்திருந்தார்கள்.

எதிர் புறத்தில் யாழ்விழி தாத்தாவுடன் சில சொந்தத்துடன் அமர்ந்திருக்க அவள் பக்கத்தில் வைபவ் வந்து அமர

” டேய் மச்சி நீ இந்த பக்கம் வந்து அமரணும் டா அந்த பக்கத்துல இல்ல ” என்று நிலா கூற

” இங்க பாரு நிலா நான் சரியா தான் உக்காந்துருக்கேன் ” என்று கூற சிறியவர்கள் அனைவரும் அவனை பார்க்க

” நான் வந்தது வேண்ணா என் நண்பணுக்காக இருக்கலாம் ஆனா இப்போ என் தங்கச்சிக்காக இங்க தான் உட்காருவேன் ” என்று சொல்ல யாழ்விழி கண் கழங்க அவனை பார்த்தாள்.

” அச்சோ என் தங்கச்சி இப்படி அழுகலாமா சொல்லு ” என்று அவளின் கண்ணை துடைத்து விட்டான் வைபவ்.

” சோ க்யூட் டப்பா நீ ” என்று மிளனி கூற அவளை பார்த்து முறைத்து வைத்தான்.

” ப்பா முடியல டா புல்லரிக்கிது டா ” என்று நிலா கூறி அதேபோல் செய்கையில் செய்து சிரிக்கவும் செய்தாள்.

பெரியவர்கள் அனைவரும் இவர்களின் கல்லாட்டாவை கண்டு சிரிக்க சகுந்தலா தேவியோ ” போதும் உங்க விளையாட்டு இப்போ நிச்சயதார்த்த ஆரம்பிக்கலாம் ” என்றார்.

கந்தர்வேலோ ” சாமி நீங்க வேண்டியத ஆரம்பிங்க ” என்றார்.‌அவரும் ” சரிங்க ஐயா ” என்றுவிட்டு நிச்சய பத்திரிகையை வாசிக்க ஆரம்பித்தார்.

ஐயர் நிச்சிய பத்திரிகையை வாசித்து முடித்தவுடன் ” இரு பிள்ளாய்க்கும் இந்த கல்யாணத்துல சம்மதம் தானோ ” என்று கேட்டு பார்க்க

” ஆமா இத எப்போ வந்து கேக்குறாரு பாரு ” என்று மனதில் கருதினான்.

அவனது மூலையோ ” பிடிக்கலன்னு சொல்லிரு இளா . இது தான் சரியான நேரம் ” என்க ” அப்படியா சொல்ற ” என்றவனின் பேச்சை இடைமறித்தது தாயின் அழைப்பு.

” தம்பி சொல்லுப்பா ” என்க

” எனக்கு இதுல முழு சம்மதம்” என்றான் புன்னகையுடன் அவள் கண்ணை பார்த்துக் கொண்டே

அவளின் இதழில் புன்னகை தழுவியது. அவள் விழியும் சேர்ந்து புன்னகைத்தது. அந்த விழியை கண்டவனின் மனது பிடிக்கவில்லை என்று சொல்ல முடியவில்லை. அவள் கண்ணில் தெரிந்த அந்த ஏக்கம் அவனால் அதை சொல்ல முடியாமல் செய்தது.

அதன்பின் அவளும் தன் சம்மத்தை‌ வார்த்தையால் கூறினாள். பின் இரு குடும்பமும் நிச்சய தட்டை மாற்றிக் கொண்டனர்.

நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிவு பெற இப்போது ஜோடியாக சாமியை தரிசனம் செய்தனர்.

பின் அனைவரும் கிளம்பி மண்டபத்திற்கு சென்றனர்.

மாலை நேரம் ஆகவும் மண்டபமே கலைக்கட்டியது. பெரியவர்கள் எல்லாம் அமைதியாக அமர்ந்திருக்க சிறியவர்கள் இங்கும் அங்கும் நடந்தபடி இருந்தனர்.

இளஞ்சேரல் கோட் ஷூட்டு அணிந்து மிடர்காக வந்து மேடையில் நின்றான்.

யாழ்விழி அவளுக்கு உரிய வெக்கத்துடன் அழகிய வண்ணத்தில் லெஹேங்கா அணிந்திருந்தாள். அவளின் அழகை அந்த உடை மேலும் அழகாய் காட்டியது. அளவான ஒப்பனை அவளை தேவதை போல் காட்ட மெதுவாக மேடை மேல் ஏறி அவனின் பக்கத்தில் நின்றுக்கொண்டாள்.

அனைவரும் அவர்களுக்கு கிஃப்ட் தந்துவிட்டும் ஃபோட்டோ எடுத்துக் கொண்டும் சென்றனர். இரவு எட்டு மணி போல் அனைத்தும் முடிவுபெற இரவு உணவை முடித்தனர்.

இரவு ஒன்பது மணிப் போல் நலங்கு வைப்பதற்காக இளஞ்சேரலை அழைக்க மணமகன் அறைக்கு வந்த சகுந்தலா கண்டதோ வெறும் அறையை தான்.

அறை முழுக்க தேடியவர் கீழே சென்று எல்லா இடத்துலையும் தேட ,எங்கேயும் இல்லாமல் போகவே சகுந்தலாவிற்கு பயம் தொற்றிக் கொள்ள அந்த வழியாக சென்ற வைபவை அழைத்து ” எங்கடா உன்னோட ஃப்ரண்டு ” என்று கேட்க

” ஆண்டி அவன் ரூம்ல தான் இருந்தான் ” என்று கூற

” அவன் ரூம்ல இல்ல தம்பி . நான் எல்லா இடத்திலயும் நான் தேடி பாத்துட்டேன் அவன காணோம் ” என்று பதற்றத்துடன் சொல்ல

” இங்க எங்கேயாவது தான் பொய்ருப்பான் நான் போய் பாத்துட்டு வரேன் ஆண்டி நீங்க கவல படாதீங்க” என்று விட்டு வெளியே சென்று வண்டியை ஸ்டார்ட் செய்து சென்றான்.

இதையெல்லாம் அந்த வழியாக எதையோ எடுக்கத் சென்ற யாழ்விழி கேட்க அவளும் யாரும் அறியாமல் அவன் இருக்கும் இடம் அறிந்து அவனை காணச் சென்றாள்.

பயத்துடனே சகுந்தலா தேவி தன் புதல்வனின் வருகைக்காக காத்திருக்க தொடங்கினார்.

வைபவ் ஒரு இடம் விடாமல் அனைத்து இடத்திலயும் தேடிச் சென்றான். ஆனால் யாழோ அவன் எங்கிருப்பான் அவன் மன நிலை என அறிந்து அவன் உயிரே வைத்திருக்கும் அந்த இடத்திற்கு சென்றாள்.

அவள் நினைத்தது போல் இளா அங்கே தான் நின்றிருந்தான் வெறித்த பார்வையோடு..

அவன் பக்கத்தில் சென்றவள் ” சேரா ” என்று மென்மையாக அளிக்க அந்த அழகிய அழைப்பு காதில் கேட்டவுடன் அவன் திரும்பி அவளை இறுக்க அணைத்துக் கொண்டு தேம்ப ஆரம்பித்தான்.

அவனின் அழுகை அவளை கொள்ளாமல் கொன்றது. தனது ஆசைக்காக அவனை பழிக் கொடுக்கிறோமோ என்று.அவள் அமைதியாக நின்றாள் அவனை திரும்ப அணைத்துக் கொள்ள வில்லை.‌ சிறிது நேரம் விட்டவள் ” சேரல் ” என்று அழைக்க அவன் ” சாரி ஐம் சோ சாரி ” என்றவாறு அவனை விட்டு விலகி நின்றுக்கொண்டான்.

” எதுக்கு இந்த சாரிலாம் அதெல்லாம் தேவையில்லை. நமக்கு பிடிச்சவுங்க சாரி சொன்னா அது நல்லா இருக்காது ஏனோ அது நம்மல அவுங்க கிட்ட இருந்து விலக்கி வைக்கிற மாதிரி இருக்கு ” என்றாள் உச்சகட்ட விளிம்பில் .

அவன் எதுவும் பேசவில்லை ஆனால் அதை உள்வாங்கிக் கொண்டான். இருவரும் மௌனம் காத்த படி நிற்க அந்த அமைதியை போக்கியது யாழின் குரல்.

” இங்க தான் நீங்க உங்க காதலிய சந்திச்ச இடமா ” என்று எதார்த்தமாக எதிரே இருந்த மாடியை பார்த்த படி கூற இளஞ்சேரலுக்கு அவளின் கேள்வி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

” சொல்லுங்க சேரல் இது தான் அந்த இடமா ” என்று மீண்டும் கேட்க ஆனால் இந்த முறை அவனை பார்த்து கேட்டாள்.

ஆமாம் என்பது தலை ஆட்டியவன் ” உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் ” என்றான்.

” அத அப்புறமா சொல்றேன். உங்களோட மன பாரத்த கொஞ்சம் என்கிட்ட ஃசேர் பண்ணிங்கோ இளா . எவ்வளோ வருஷமா தான் உங்க காதலோட வலிய எல்லாருக்கிட்ட இருந்தும் மறைப்பீங்க சொல்லுங்க . அட்லீஸ்ட் என்ன ஒரு ப்ரேண்டா நினைச்சி சொல்லுங்க ” என்று அவள் அவனின் கை பிடித்து சொல்ல

ஏனோ அந்த தொடுகை அவனுக்கு பலத்தை ஏற்படுத்தியது. அவனும் ” சொல்றேன் ஆனா ஃப்ரேன்டா இல்ல என்னோட வருங்கால பொண்டாட்டியா ” என்றான் . அவளின் முகத்தில் புன்னகை பூத்தது.

பண்ரெண்டு வருடங்களுக்கு முன்பு..,,

” டேய் சீக்கிரமா வாடா ட்யூஷனுக்கு போகனும் இல்லன்னா அந்த மாஸ்டர் நம்மள க்ளாஸ் குள்ளேயே விட்ட மாட்டாரு ” என்றவாறு வேக நடையுடன் வைபவ் கூற

” போடா யாரு ட்யூஷன் போய் உக்காருறது எனக்கு அதெல்லாம் செட் ஆகாது டா . உனக்கு வேணும்னா போய் படி” என்றான் இளஞ்சேரல் ஹாயாக

” உனக்காக தான டா நானும் நிலாவும் இங்க ட்யூஷன் வந்தோம். ஆனா நீ என்ன டா இப்படி சொல்லுற அறிவில்லாதவனே ” என்று அவனை திட்ட

” என்ன என்ன பண்ண சொல்லுற எங்க அப்பா தான் படிப்பில ஸ்ருட்ன்னு உனக்கு தெரியும்ல . அவருக்கு எனக்கு படிவரலன்னு தெரிஞ்சதும் என்ன கொண்டு வந்து இங்க சேத்து விட்டுட்டுடாரு .அதுக்கு நான் என்ன பண்ண முடியும். என்ன பிரிஞ்சி நீங்க ரெண்டு பேரும் இருக்க மாட்டிங்க அதுனால தான் உங்களையும் சேர சொன்னேன் ” என்றான் அவன்.

வேகமாக நடந்துக் கொண்டிருந்த வைபவ் அப்படியே நின்று அவனை முறைத்து பார்த்தான்.

” இப்போ உனக்கு க்ளாஸ்க்கு டைம் ஆகலையா ” என்று கேட்டு புருவம் உயர்த்திட

” ஹரே பகவான் இவன் கிட்ட இருந்து என்ன காப்பாத்து ” என்று வானத்தை பார்த்து கூறிவிட்டு நடக்கத் தொடங்கினான்.

இருவரும் ட்யூஷனை அடைந்தனர் கால் மணிநேரம் தாமதமாக . உள்ளே மென்னிலா நின்றுக் கொண்டிருந்தாள்.

” எதுக்கு டா அவ நிக்கிறா ” என்று வைபவ் கேட்க

” ஏதாவது கேள்வி கேட்டுருப்பாறு மேடம்க்கு பதில் தெரிஞ்சுருக்காது அதான் நிக்கிறாங்க போல ” என்று சொல்லி நகைத்தவன் சார் முறைத்து பார்க்கவும் அமைதியானான்.

” ஏன்‌ ரெண்டு பேரும் இன்னைக்கு லேட் ” என்று கோபமாக கேட்க

” அது வந்து சார் “என்று வைபவ் இழுக்க

” சார் வர வழில இவனுக்கு பசிக்கிதுன்னு சொல்லி என்ன பேக்கரி ஹாப்க்கு கூட்டிட்டு பொய்ட்டான் . நான் கூட சொன்னேன் வேணாம் டா படிப்பு தான் முக்கியம்னு ஆனா இவன் கேக்கவே இல்ல சார் ” என்று அப்பட்டமாக பொய்யுரைத்தான் .

இதை கேட்டவர் இளஞ்சேரல் உள்ள போ வைபவ் நீ பத்து நிமிஷம் வெளியவே முடிக்கால் போடு ‌.அப்புறமா க்ளாஸ்க்குள்ள வா ” என்றுவிட்டு உள்ளே சென்று வகுப்பு எடுக்க ஆரம்பித்தார்.

வைபவ் முறைக்க அவன் பழிப்பு காட்டிவிட்டு உள்ளே சென்று அமர்ந்துக் கொண்டான்.

அந்த நேரத்தில் ” எக்ஸ் க்யூஸ் மீ சார் ” என்று அழகிய குரல் அவனின் செவிகளில் கேட்க அவன் கண்களோ அன்னிசையாக குரல் வந்த திசை நோக்கி சென்றது.

அங்கே அழகிய தேவதையாய் இரட்டை ஜடையில் வெண்மதியை போன்று பொழிவாய் அமைதியின் கவசமாய் அவளின் தந்தையின் பின்பு நின்றிருந்தாள்.

அவளை பார்த்தவனின் கண்களுக்கு வேறெதுவும் புலப்பட வில்லை.

ஆசிரியருடன் உள்ளே வந்தவள் அமைதியாக உட்கார இடம் இருப்பதாக பார்த்து நிற்க ” அங்க போய் உட்காரு மா ” என்று ஆசிரியர் கையை காட்ட

அவர் காட்டிய இடத்தை நோக்கியவன் வாயெல்லாம் புன்னகை பூத்தது ஏனென்றால் அது அவனுக்கு பக்கத்தில் இருக்கும் இடமே.

அவள் வந்து அமரவும் அவனின் இதயம் பலவாறாக துடித்தது. ஏனோ அவனால் அந்த இடத்தில் அமர முடியவில்லை. இது நாள் வரை உணராத ஓர் உணர்வு. அவனுள் பல பட்டாம்பூச்சிகள் பறப்பது போல் தோன்ற இளா அந்த உலகிற்குள் செல்ல முற்பட ” ஹாய்” என்ற அவனின் தேவதை குரலில் உலகத்திலேயே நின்று விட்டான்.

” ஹலோ ” என்றான் ஹஸ்க்கி வாய்சில்.

” உங்க பேர் என்ன ” என்று அவள் கேட்க

” இளஞ்சேரல் உங்க பேர் என்ன ” என்று அவனும் கேட்க

” என்னோட நேம் இணையினி .உங்க நேம் அழகா வித்யாசமா இருக்கு ” என்றவள் பாடத்தை கவனிக்க தொடங்கினாள். அவனும் பாடத்தை கவனிக்க தொடங்கினான்.

வைபவ் இவனை முறைத்து விட்டு நிலா பக்கத்தில் அமர்ந்துக் கொண்டான்.

அதன்பின் வந்த நாட்களில் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆயினர்.

” ஹே நாளைக்கு டெஸ்ட் இருக்குன்னு சார் சொல்லிட்டாரே ” என்று வருத்தத்துடன் இணையினி இளாவிடம் சொல்ல

” ஏன் அதுக்கு என்ன படிக்க வேண்டியது தான ” என்று கேட்க

” இன்னைக்கு சனிக்கிழமை எட்டு மணிக்கு பார்பி ஷ்ஷோ போடுவாங்க அத பாக்கனும் ” என்று பாவமாக முகத்தை வைத்து சொல்ல

” ஏன் இணை நீ பத்தாவது படிக்கிற இன்னுமா இதெல்லாம் பாத்துட்டு இருக்க ” என்று நக்கலடிக்கும் தோரணையில் கேட்க

” இத இந்த வயசு வரைக்கும் தான் பாக்கனும்னு எதாவது இருக்கா ” என்று மூக்கு புடைக்க அவள் கேட்க

” ஹே கூல் இணை மா . நான் சும்மா விளையாட்டுக்கு தான் கேட்டேன் . நீ கவல படாத நாளைக்கு எக்ஸாம் மாஸ்ஸா எழுதலாம் ” என்றான்..

” நைட்டு பாரு ” என்று விட்டு சென்று விட்டான்.

இவளும் எட்டு மணிக்கு பார்பி ஷோ பார்க்க அவளுக்கு மெசேஜ் வந்திருந்தது.‌ அனுப்பியது வேறு யாரும் இல்லை சாட்ஷாத் நம் இளாவே தான்.

அவள் என்னவென்று பார்க்க டாக்கிங் டாம் வீடியோ அனுப்பி இருந்தான். அவள் அதை ஓப்பன் செய்து பார்க்க இன்று மாலை எக்ஸாம்க்கு கொடுக்கப்பட்ட பதில்கள் டாக்கிங் டாம் பேசுவது போல் இருந்தது.

ஹெட் செட் போட்டவள் அதை நன்கு கவனித்து கேட்க அவளுக்கு அது புரிந்து விட்டது. நிம்மதியாக உறங்கினால்.

அடுத்தநாள் தேர்வு நல்ல படியாக முடிந்தது. அதில் படிப்பே வராது என்ற இளா முதலிலும் வைபவ் மற்றும் இணையினி இரண்டாவதுமாக வந்திருந்தனர். மென்னிலா கஷ்ட பட்டு பாசாகினாள்.

இவனுக்குள் இருந்த காதல் வளர்த்துக் கொண்டே சென்றது.

பத்தாவது தேர்வும் வர நால்வரும் நல்ல படியாக தேர்வு எழுதினர்.

விடுமுறையாக இருக்க ட்யூஷன் ஆசிரியர் இவர்களை இத்தனை நாட்கள் கொடுமை படுத்தியதற்காக அவர்களை பக்கத்தில் இருக்கும் இடத்திற்கு டூர் அழைத்துச் சென்றார்.

இளஞ்சேரல் வைபவ் மென்னிலா வர சம்மதிக்க இணையினியின் தந்தை அவளை அனுப்ப சம்மதிக்க வில்லை.

மூவரும் அவளுடன் வீட்டிற்கு சென்று அவரை சம்மதிக்க வைத்தனர் .

” அவள கவனமா பாத்துக்கோங்க பா அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல ” என்றுவிட்டு அவளை அவர்களுடன் விட்டு விட்டு சென்றார்.

இந்த டூரில் அவளிடம் தன் காதலை சொல்ல வேண்டும் என்று எண்ணி இருந்தான்.

அதேபோல் அவளிடம் தன் காதலை கூறவும் அவள் அதற்கு சம்மதித்து விட்டாள். அவனுக்குள் அவ்வளவு சந்தோஷம் . ஏனோ அந்த நிலாவையே அவளுக்கு பரிசாக தரணும் என்று தோன்றியது அவனுக்கு.

அந்த டூரில் இருவரும் காதல் ஜோடிகளாக பறந்து வந்தனர்.

அன்று முழுவதும் வெயிலிலேயே சுற்றினார்கள்.

வெயிலிலே சுற்றி வந்த காரணத்தால் அவளுக்கு தலை சுற்ற அந்த நேரத்தில் அவள் சாலையை கடக்க முயல வேகமாக வந்த கார் அவளை இடிக்காமல் இருக்க வண்டியை திருப்ப நினைத்து பக்கத்தில் இருந்த கம்பத்தில் வேகமாக மோதியது. இதெல்லாம் நொடி பொழுதில் நடந்தது. வண்டி அவளை நோக்கி வருவதை கண்ட இளா வேகமாக அவளை அந்த சைட் தள்ளி விட்டவன் அவனும் அவளுக்கு எதிர் புறத்தில் கீழே விழுந்தான்.

வேகமாக எழுந்த அவளை நோக்கி வந்து இணையை எழுப்ப முயற்சி செய்ய அவள் எழுப்பாமல் போகவே அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அந்த காரில் அடிப்பட்டவர்களையும் சேர்த்தே…

இணையை மருத்துவமனையில் சேர்த்து விட்டு அவளது குடும்பத்தினருக்கு அழைப்பு விடுத்து கூறினர்.

அவளது தாய் தந்தை கதறி போய் மருத்துவமனைக்கு ஓடி வந்தனர்.

அவள் ஐசியூவில் இருக்க அவளை பார்த்த படியே வெளியே நின்றிருந்தான் இளஞ்சேரல்.

அவளது தந்தை உடனே மருத்துவரை சந்திக்க சென்றார் ” சார் என் பொண்ணுக்கு இப்ப ஒரு பிரச்சனையும் இல்லையே ” என்று பயத்தில் கேட்க

” சார் ஆல்ரெடி உங்க பொண்ணுக்கு ப்ரெயின் ட்யூமர் இருப்பது தெரியுமா தெரியாதா ” என்று கோபம் கலந்த அமைதியில் அவர் கேட்க

” தெரியும் டாக்டர் அவளுக்கு இப்போ ட்ரீட்மெண்ட் பொயிட்டு இருக்கு ” என்றார்.

” இப்போ உங்க பொண்ணு ரொம்பவே டேஞ்சிரஸ் கண்டின்ல இருக்காங்க அவுங்கள காப்பாத்துறது ரொம்ப கஷ்டம் சார் .ஏன்னா அவுங்க எனக்கு தெரிஞ்சு எந்த ஒரு மாத்திரையும் எடுத்துக் கொள்ளவே இல்லை ” என்றார்.

இதனை கேட்ட அவளின் தந்தை சுக்கு நூறாக உடைந்த போனார். தன் பொண்ணின் வாழ்வை எண்ணி…

அவர் அமைதியாக வெளியே வந்தார்.

இணையை காப்பாற்ற எவ்வளவு முயன்றும் அவளின் உயிரை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

இணையினி மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்றாள். இதனை அறிந்த இளாவுக்கு அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பக்கத்தில் இருந்த கத்தியை கொண்டு கையினை அறுத்துக் கொண்டான்.

அங்கிருந்த அவனது நண்பர்கள் பயந்து அவனையும் அதே மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவனை காப்பாற்றி அவனை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முற்பட அவனோ முரண்டு பிடித்து இணையினியின் வீட்டிற்கு சென்றான்.

அங்கே அவளை குளிர் பெட்டியில் வைத்திருந்தனர். அவளை அப்படி கண்டவுடன் அவனுக்கு இதயமே நொறுங்கி விட்டது. அவள் உயிரை எடுத்த எமன் அவனது உயிரையும் சேர்த்தே எடுத்துக் கொண்டு சென்றான் உடலை மட்டும் தனியே விட்டுவிட்டு…

அதன்பின் அவன் அனைவரிடமிருந்தும் தனித்து இருக்க தொடங்கினான். அவனிடமிருந்த விளையாட்டு தனம் எல்லாம் மறைந்து ஒரு இறுக்கம் குடிக் கொண்டது.

வைபவ் நிலாவின் வற்புறுத்தலின் படி பனிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரியிலும் சேர்ந்தான். அங்கேயும் அவனின் இறுக்கம் குறையவில்லை. தினமும் மாலை நேரம் ஆனதும் அவளின் நினைவுகள் நிறைந்த அந்த இடத்திற்கு சென்று வருவான். ஏனோ அவனுக்கு இன்னும் அவள் அங்கே வாழ்ந்து கொண்டிருப்பதாகவே தோன்றும். அவனுடன் அவள் இருப்பதாக உணருவான்.

இப்படியே நாட்கள் வருடங்கள் என சென்றது. அவனின் மனதில் இருந்த காதல் குறையாமல் . அவளுக்காகவே வாழத் தொடங்கி இருந்தான்.

” அப்படி இருக்கும் போது தான் நீ என்னோட வாழ்க்கையில வந்த . அம்மா என்கிட்ட முதல் விஷயம் உன்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி தான் . ஆனா என்னால அது முடியாதுன்னு தோனுச்சி. காலையில உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமான்னு கேட்டாங்க உன்னோட கண்ண பாத்த என்னால சம்மதம் இல்லன்னு சொல்ல முடியாம போச்சி ” என்றான் அனைத்தையும் ..

அதையெல்லாம் கேட்ட அவள் அவனை இறுக்கி அனைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள். அவள் ஏன் அழுகிறாள் என்று தெரியவில்லை ஆனால் அவளது அழுகை அவனுக்குள் ஒரு வலியை ஏற்படுத்த அவளை தன்னுடன் இறுக்கி அணைத்து கொண்டான்.

வைபவ் தேடி எல்லாமும் தேடியவன் இறுதியாக அவர்கள் ட்யூஷனுக்கு சென்று பார்த்தான்.

அங்கே இவர்கள் இருவரும் கட்டி பிடித்து கொண்டு நிற்பதை கண்டு வெட்கம் கொண்டவன் ” அட பாவீங்களா உங்கள காணோம்னு நான் ஊரு முழுக்க தேடிட்டு வரேன் .ஆனா நீங்க ரெண்டு பேரும் இங்க ரொமேன்ஸ் பண்ணிட்டு கிடக்குறீங்க கிளம்புங்க டா அங்க அம்மா ஒரே டென்ஷன்ல இருக்காங்க ” என்றே கத்த

இருவரும் குரல் கேட்டு விலகினர். பின்பு முவருமாக சேர்ந்து மண்டபத்திற்கு சென்று கந்தரவேலிடம் சில பல அர்ச்சனைகளை பெற்றுக் கொண்டு நலங்கு வைத்துக் கொண்டனர்.

அடுத்த நாள் காலை அதன் விடியலை தர‌ குடும்பமே பரபரப்பாக வேலை செய்தது. அனைத்து சொந்த பந்தங்களும் சூழ ஐயர் மந்திரங்கள் ஓதிய படி இருந்தார்.

மாப்பிள்ளையை அழைத்து வர சொல்ல வைபவ் அவனை அழைத்து வந்தான். இளாவும் புன்னகையுடன் மேடைக்கு வந்து அமர்ந்தான். சிறிது நாளி கழித்து பெண்ணை அழைத்து வர சொல்ல நண்பர்களின் நடுவில் கூற புடவையில் தேவையாக நாணத்தின் பிடியில் சிக்கிக் கொண்டு கீழே பார்த்த படி நடந்து வந்தாள் யாழ்விழி.

மும்மூர்த்திகளின் ஆசிர்வாதத்தில் தேவர்களின் முன்னிலையில் அனைவரது ஆசிர்வாதத்தோடு இளஞ்சேரல் யாழ்விழியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன்னுள் சரிபாதியாக ஏற்றுக்கொண்டான்.

அடுத்த வந்த சடங்குகள் அனைத்தும் இருவரும் சேர்ந்து செய்தனர். பின்னர் மணமக்களை வீட்டிற்கு சென்று அனைத்து சடங்குகளும் முடிவு பெற மாலை ஆனது.

இரவு நேரம் வரவும் யாழ்விழியின் கையில் பால் க்ளாஸை கொடுத்து இளாவின் அறைக்கு அனுப்பி விட்டார்கள்.

அவளும் நாணத்துடனும் தயக்கத்துடனும் அவனது அறைக்குள் நுழைந்தாள். அங்கே அவள் கண்டது அவளை ஆச்சிரியத்தின் விளிம்பிற்கு அவளை கொண்டு சென்றது.

ஏனெனில் அங்கே அவளது குடும்பத்தாரின் புகைப்படம் மாற்றி இருந்தது. அதன் பக்கத்தில் அவனது குடும்பத்தின் புகைப்படம் இருந்தது.

இதை கண்டவளில் கண்கள் நீரை கோர்க்க அவன் அவளின் முன்பு வந்து அவளின் கண்ணீரை துடைத்து விட்டான்.

” எனக்கு தெரியும் நீ எவ்ளோ உங்க அம்மா அப்பாவா மிஸ் பண்ணுவன்னு அதுனால இங்க நம்ம ரெண்டு பேரோட குடும்பத்து ஃபோட்டோவ மாட்டினேன் ” என்றான்.

” நான் உங்கள எதுக்கு கல்யாணம் பண்ணணும்னு நினச்சேன்னு தெரியுமா ” என்று அவள் கேள்வியாய் நோக்க

” ஏன் தெரியாது ” என்றே அவளின் விழியை நோக்கினான்.

எப்படி என்பது போல் அவனை பார்க்க அவளை தன் மடியில் அமர வைத்த இளா ” இணையாள தான நீ உன் குடும்பத்த இழந்த அந்த ஆக்சிடன்ட் உங்க குடும்பத்துக்கு தான நடந்துச்சி ” என்று கேட்க

இளா ஆச்சரியத்தோடு அவனை பார்த்து ” அது எப்படி உங்களுக்கு தெரியும் ” என்று கேட்க

” அன்னைக்கு நடந்த ஆக்சிடன்ட்ல உங்கள ஹாஸ்பிடல் சேத்தது நான் தான். அப்போ இந்த கையில இருந்த டாட்டூவ பாத்தேன் . அதே டாட்டூவ நேத்து காலையில உன்னோட கையில பாத்தேன் எனக்கு அத பாத்ததும் ஒரே ஷாக் அதுக்கப்புறம் உன்ன பத்தி வைபவ் கிட்ட விசாரிக்க சொன்னேன் அப்போ தான் தெரிஞ்சது . நடந்த ஆக்சிடன்ட்ல நீ உன்னோட குடும்பத்தையும் உன்னோட கண் பார்வையையும் இளந்துட்டேன்னு. உனக்கு ஐ டொனேட் பண்ணது கூட இணையினி தானு தெரிஞ்சிக்கிட்டேன் ” என்றான் .

யாழ் அவனையே மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

” ஆனா இந்த கண்ணுக்காக உன்னைய நான் இன்னைக்கு கல்யாணம் பண்ணல . ஏனோ என் மனசு சொல்லுச்சி நீ எனக்கானவன்னு நீ என் பக்கத்துல வரும்போதெல்லாம் என் இதயம் அவ்வளவு வேகமாக துடிக்கும் அத நார்மல் ஆக்குறதுக்குள்ள ஒரு வழி ஆயிடுவேன் ” என்று சொல்லி அவளின் நெற்றியில் இதழ் பதித்தான்.

அவளும் அதை அவளுள் வாங்கிக் கொண்டாள்.

” லவ் யூ சோ மச் விழி ” என்றான் காதல் பொங்க

” லவ் யூ டூ சேரல் ” என்று அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

பின்னர் அவனின் வலிக்கு மருந்தாக அவள் இருக்க எண்ணி அவனுக்கு அவளையே மருந்தாக தந்திருந்தாள்..

நான் உன்னை
உனக்கே தெரியாமல்
கொஞ்சம் கொஞ்சமாக
படித்தேனே
பூமியில் உள்ள
காதலை எல்லாம்
முன்னாள் வாழ்ந்தாய்
இரசித்தேனே..

இவரும் அவர்களது வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அவர்களின் வாழ்வில் இணைக்கும் ஒரு இடம் கொடுத்திருந்தனர். விழி இணையினியின் இடத்தை பிடிக்காமல் அவளுக்காக ஒரு இடத்தை அவனின் இதயத்தினுள் பெற்றுக் கொண்டு மகிழ்வாக அவனுடன் வாழ்ந்து வந்தாள்.

?முற்றும்?