Advertisement

வில் – 15

மனிதத்தை மிதித்து 

மதத்தை வளர்த்தென்ன பயன்..?

இன்னும் ஐந்து பத்து நிமிடங்களில், பயணம் முடிந்துவிடும் எனும் நிலையில், வள்ளி அதுவரை வியாபித்திருந்த மௌனத்தை உடைத்தெறிந்தாள். 

“உங்கள ஒன்னு கேக்கலாமா..?’’ வள்ளி அப்படிக் கேட்டதும், அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்த வில்லன், அவள் கண்களை ஆழ்ந்துப் பார்த்துவிட்டு, 

“என்னோட பொண்டாட்டி வள்ளியா கேள்வி கேக்கப் போறியா..? இல்ல கனல் ரிப்போட்டர் விக்யாவா கேள்வி கேக்கப் போறியா..?’’ 

வில்லன் அப்படிக் கேட்டதும், வள்ளியின் முகத்தில் குறுஞ் சிரிப்பு ஒன்று வந்து ஒட்டிக் கொண்டது. அவனுக்கு தான் சளைத்தவள் இல்லை என்பதைப் போல, 

“உங்களுக்கு யார் கேள்வி கேட்டா பிடிக்கும்..?’’ என வள்ளி அவன் கேள்வியை அவனுக்கே திருப்பிப் போட்டாள். 

வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு, அவளை ஆழ்ந்துப் பார்த்த வில்லன், “உண்மையை சொல்லட்டுமா..? இல்ல பொய் சொல்லட்டுமா..?’’ எனக் கேட்க, வள்ளிக்கு சூழலின் வெப்பம் தாறு மாறாய் ஏறுவதைப் போல தோன்றியது. 

“உண்மை..!’’ அவள் ஒரே வார்த்தையில் விடையளிக்க, அவளை நெருங்கி அமர்ந்தவன், அவள் கைகளை தன் கைகளுக்குள் எடுத்துக் கொண்டு, 

“எனக்கு இப்ப என் பொண்டாட்டி தான் வந்து என்னை கேள்வி கேக்கணும். விக்யா நான் ரொம்ப மதிக்கிற பர்சன். அவங்க கூட பேசுற அளவுக்கு என் மூளை இப்ப வேலை செய்யலை. அதோட காலைல இருந்து விக்யாகுள்ள இருக்குற என்னோட பொண்டாட்டிய திருட்டுத் தனமா சைட் அடிச்சிட்டு இருக்கேன். சோ எனக்கு என் பொண்டாட்டி வந்து கேள்வி கேட்டா ஐ பீல் பெட்டர்..’’ 

வில்லன் அப்படி சொன்னதும், சற்று நேரம் அவன் பதிலில் தாக்குண்டவள் போல அமைதியாய் இருந்தவள், பிறகு, “உங்களுக்கு எப்படி இப்படி ஒரு தாட் வந்துச்சி….? இப்படி ஒரு அமைப்பை ஆரம்பிச்சி… ஒரு கிராமத்தையே மாத்திக் காட்ற எண்ணம் எப்படி வந்துச்சி…?’’ 

அவள் அப்படிக் கேட்டதும் அவள் வசம் இருந்த கரங்களை வேகமாய் பிரித்துக் கொண்டவன், தன்னுடைய ஓட்டுனர் இருக்கையை நோக்கி நகர்ந்து அமர்ந்தான். முகம் நொடியில் இறுகிப் போய்விட்டது. 

“சாரி வள்ளி இந்தக் கேள்விக்கு என்னால இப்ப பதில் சொல்ல முடியாது. பட் கண்டிப்பா ஒரு நாள் சொல்றேன். இது மட்டும் தான் உன் கேள்வினா நாம கிளம்பலாம்.’’ சொல்லியவன், வண்டியை இயக்க முற்பட வள்ளி அவன் கரம் பற்றி அவன் செய்கையை தடுத்தாள். 

“இன்னும் ஒரு கேள்வி இருக்கு. நீங்க என்ன லவ் பண்றீங்களா..? பண்றீங்கன்னா… ஏன் பண்றீங்க..? உங்க அம்மா அப்பா பாத்து வச்ச பொண்ணுங்கிற ஒரே காரணத்துக்காக வா..?’’ 

அவள் அப்படிக் கேட்டதும், அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தவன், “எஸ் ஐயம் இன் லவ் வித் யூ. தெரியல. எப்ப இருந்து உன்ன லவ் பண்றேன் எனக்கே தெரியல. ஆனா எனக்கு அந்த குட்டிப் பொண்ணை… கண்ல பயத்தோட என்ன பஸ்ட் டைம் நிமிந்து பாத்த பொண்ணை ரொம்ப பிடிச்சது. 

உள் மனசுல ஒரு குரல். அடே மடையா, அவ குழந்தைடா…! இனி நீ தான் அவளை பாத்துக்கணும் அப்படின்னு. அந்தக் குரலை எனக்கு பிடிச்சது. ஆனா ஒரே நாள்ல எல்லாம் மாறிடுச்சி. 

நான் யாரை குட்டிப் பொண்ணுன்னு நினச்சிட்டு இருந்தேனோ… அவ பெரிய சமூக போராளியா மாறிட்டா. அவ பத்திரமா இருக்காளான்னு தெரிஞ்சிக்க அப்பவும் ஒரு வருஷம் நான் அவ பின்னாடி அவளுக்கே தெரியாம சுத்தினேன். 

அப்பவும் அவளை லவ் பண்ணேனா தெரியலை. ஆனா ஒரு வருஷம் கழிச்சி எங்க வீட்ல வேற கல்யாணத்துக்கு பேசினப்ப… இனி அவளை அவ பாத்துப்பா நம்ம வாழ்கையை நாம பாத்துப்போம் அப்படின்னு வேற கல்யாணத்துக்கும் ஓகே சொல்லிட்டேன். 

நானும் சாதாரண மனுஷன் தானே. ஆனா நானே எதிர் பார்க்காத ரெண்டாவது அடி என் மேல ரொம்ப… ரொம்ப பலமா, அழுத்தமா விழுந்தது. 

உண்மையா சொல்லப் போனா எனக்குள்ள சமுதாய மாற்றம் வேணும் அப்படிங்கிற விதை விழுந்ததே அப்போ தான். அதுக்கு அப்புறம் நான் முழுசா வேற ஒரு ஆளா மாறிட்டேன். 

ஒரு ரெண்டு வருசத்துக்கு முந்தி மறுபடி அதே சின்னப் பொண்ணு என் கண்ணுல விழுந்தா பத்திரிக்கை மூலமா. என்னவோ அவளைப் பாக்கும் போது மட்டும் தான்…. மனசுக்குள்ள ஒரு ரயில் விடாம ஓடுது. காதலும் வாழ்கையில வேணும்னு தோணிகிட்டே இருக்கு. 

ஆனா எப்போ எப்படி காதலிச்சேன். எனக்கு தெரியல. நீ என்னை முழுசா ஒதுக்கிட்டு போயிட்டா என் வாழ்கையில இன்னொரு பொண்ணு வரவே மாட்டான்னு எல்லாம் சொல்ல மாட்டேன். ஆனா ஏதோ ஒரு வெற்றிடம் இருக்கும். அது காதல்னா… கண்டிப்பா நான் உன்னை காதலிக்கிறேன் வள்ளி..’’ 

வில்லன் பேசி முடித்ததும் வள்ளி சற்று நேரம் எதுவுமே பேசவில்லை. அவன் கைகளை மட்டும் இறுக்கிப் பிடித்தபடி அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

வில்லன் ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு, “போலாமா..?’’ என மீண்டும் வாகனத்தை கிளப்ப முயல, எதிர்பார்ப்புடன் அவன் முகத்தைப் பார்த்தவள், 

“இன்னும் கொஞ்ச நேரம் எங்கையாவது டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு போலாமா..? எனக்கு என்னவோ இன்னைக்கு சீக்கிரம் தூக்கம் வரும்னு தோணலை. ஐயம் சோ மச் எச்சைடட்….!’’ 

வள்ளி அப்படி சொன்னதும், பெரிதாய் புன்னகைத்தவன், தன் கைக் கடிகாரத்தை நோக்கி விட்டு, “இந்த ஊர்ல இருந்து ஒரு இருபது கிலோ மீட்டர் தள்ளி எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் ஒன்னு இருக்கு. எப்படியும் நாம வீட்டுக்கு போக மிட் நைட் ஆயிடும். உனக்கு ஓகேன்னா போலாம்.’’   

வில்லனுக்கு பதிலாய் வள்ளி முகம் முழுக்க புன்னகையோடு கட்டை விரலை உயர்த்திக் காண்பிக்க, வில்லன் ஸ்கார்பியோவை மணிக்கு 120 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பறக்கவிட்டான். 

சரியாய் பதினெட்டே நிமிடங்களில் வில்லன், பெரிய இரும்புக் கதவுகளின் முன் வாகனத்தை நிறுத்த, செயற்கை விளக்குகளின் ஒளியில் வள்ளி தாங்கள் வந்திருக்கும் இடத்தை ஆராய முயன்றாள். 

இருப்புக் கதவின் மேல், ‘ஜுகுனு மீன் பண்ணை’ என்று பெரிதாய் தமிழில் எழுதப்பட்ட பதாகை ஒன்று கம்பீரமாய் வீற்றிருந்தது. 

வில்லன் இரு முறை வண்டியின் ஹாரனை அலற விட, தலை நரைத்த முதியவர் ஒருவர், கையில் தடியுடன், அந்த இரும்புக் கதவுகளை திறந்துக் கொண்டு வெளியே வந்தார். 

வந்தவர் வில்லனைக் கண்டதும், “தம்பி…. என்னய்யா இந்த நேரத்துல..?’’ என கேட்டுக் கொண்டே, கதவுகளை விரியத் திறக்க, அவர்கள் வாகனம் உள்ளே நுழைந்தது. 

வெளியே இருந்து பார்ப்பதற்கு, சற்றே சாதராணம் போல தோன்றினாலும், உள்ளே பரந்து விரிந்த பரப்பில், பண்ணை மிகப் பெரியதென்று வள்ளி கண்டுக் கொண்டாள். 

வாகனத்தை ஒரு ஓரத்தில் நிறுத்திய வில்லன், தான் இறங்க, வள்ளியும் தன் பக்கக் கதவுகளை திறந்துக் கொண்டு இறங்கினாள். 

இரும்புக் கதவுகளை பூட்டிவிட்டு அந்த முதியவர் உள்ளே வர, “தூக்கத்தை கெடுத்துப்புட்டேனோ..?’’ என வில்லன் அக்கறையாய் வினவினான். 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல தம்பி. ஆயி யாரு..?’’ என மறுபக்கத்தில் நின்றுக் கொண்டிருந்த வள்ளியை காட்டி வினவும், 

“நீ தான் சொல்லிகிட்டே இருப்பியே வரதா. சீக்கிரம் உன் பொஞ்சாதியை கண்ல காட்டு… கண்ல காட்டுன்னு…. ஆயி தான் என் பொண்டாட்டி…. பேரு வள்ளி…!’’  வில்லன் பேசிக் கொண்டே, வள்ளியின் தோளில் கைபோட்டு அறிமுகப்படுத்த, வரதனின் முகம் மகிழ்ச்சியில் விரிந்தது. 

“அப்படியா தம்பி ரொம்ப சந்தோசம். ஆயி அம்மன் கோவில் செப்பு சிலை கணக்கா தங்கமா இருக்காக. அப்படியே சரோசா தேவியை நேர்ல பாக்குற மாதிரி இருக்கு.  தம்பி உன்ன ஏதாச்சும் நொரநாட்டியம் பேசினா எங்கிட்ட சொல்லு…தாயி… தொளிய உரிச்சிபுடுதேன்…’’ என நரைத்த மீசையை நீவ, வள்ளி பெரிதாய் சிரித்தாள். 

“யோவ் கிழவா… மீசை நரைச்சாலும் உனக்கு ஆசை நரைக்க மாட்டுதுயா…இன்னும் சரோஜா தேவி நினைப்புலையே தான் இருக்க போல.. யாரைப் பாத்தாலும் சரோஜாதேவி கண்ணு முன்னாடி வந்து நிக்குறாங்க போல. இரு இரு கிழவிகிட்ட வத்தி வைக்குறேன்…. அப்ப தான் உப்பு இல்லமா கஞ்சி கொடுத்துவிடும்..’’ என வில்லனும் தன் பங்குக்கு மிரட்டினான். 

அதையெல்லாம் கண்டுக் கொள்ளும் நிலையில் அவர் இல்லை. மேல் துண்டில் முடிந்து வைத்திருந்த, கசங்கிப் போன, பத்து ரூபாய் தாளை, துண்டைப் பிரித்து, கையில் எடுத்தவர், வள்ளியை நெருங்கி அதை அவள் கைகளில் கொடுத்துவிட்டு, அவள் தலைகளில் தன் கரம் பதித்து ஆசிர்வதித்தார். 

“மடி நிரஞ்ச பிள்ளைக் கொண்டு, மனசு நிறைவா வாழுவத்தா..!’’ அவர் அப்படி  ஆசிர்வதிக்க, வள்ளிக்குள் எதுவோ இடம்மாறி அவள் அகம் நிறைத்தது. 

அவள் முகத்தில் வெளிப்பட்ட பாவங்களை வில்லன் ஒரு புன்னகையோடு ரசித்துக் கொண்டிருந்தான். 

வில்லனை நோக்கி திரும்பிய வரதன், “சரி தம்பி நான் காவல் குடில்ல கிடக்கேன். எதுனா வேனுமின்னாவ்று சத்தம் கொடுங்க. இன்னைக்கு ராப் பொழுது இங்கன தங்கப் போறீகளா..? இல்ல வெளி புறப்படா..?’’ 

வரதனின் கேள்விக்கு வில்லன், “இல்ல வரதா வெளிப் புறப்பாடு தான். நீ போய் படுத்துக்க. நாங்க கிளம்ப எப்படியும் இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்.’’ என்று சொல்ல, 

“சரிதேன்..’’ என்று பதிலுரைத்த வரதன், தன் இருப்பிடம் நோக்கி நடந்துவிட, வில்லன் வள்ளியை அழைத்துக் கொண்டு, மீன் பண்ணைக்குள் நடந்தான். 

தோள் உரசும் நெருக்கத்தில் இருவரும் நடத்துக் கொண்டிருக்க, வில்லன் அவர்கள் மீன் பண்ணையில் வளர்க்கப்படும் மீன்களைப் பற்றியெல்லாம் அவளிடம் விளக்கியபடி வந்துக் கொண்டிருந்தான். 

வள்ளி அதையெல்லாம் காதில் வாங்கும் மனநிலையில் இல்லை. ஏதோ ஒரு வித மோன நிலையில் இருந்தாள். 

திடுமென நினைவு வந்தவளாக, “ஆமாம் நீங்க என்ன அந்த தாத்தாகிட்ட அப்படி பேசுறீங்க..?’’ என முகத்தை சுருக்கி வினவ, சற்றே  வெடித்து சிரித்த வில்லன், 

“ஹேய்… நான் சும்மா… அந்த மனுசனை கிண்டல் பண்ண அப்படி சொன்னேன்..?’’ என சொல்ல, உதட்டை சுளித்து அவனுக்கு எதிர்ப்பு தெரிவித்தாள். 

வில்லன் சற்று நேரம் சுளித்த அவள் உதடுகளையே ரசித்துப் பார்த்தவன், “இப்படியெல்லாம் உதட்டை சுளிக்காத வள்ளி ப்ளீஸ்..’’ என அவனுக்கே கேட்காத இறங்கிய குரலில் சொல்லிவிட்டு, மேலும் உள்ளே நடக்க வள்ளி அவனைத் தொடர்ந்தாள். 

அடுத்து வில்லன் வள்ளியை அவர்கள் வண்ண வளர்ப்பு மீன் பிரிவிற்கு அழைத்து செல்ல, பெரிய பெரிய கண்ணாடி தொட்டிகளில் வித விதமாய் நீந்திய வண்ண மீன்களை வள்ளி ஆசை தீர ரசித்தாள்.

தொட்டிகளில் முகம் பதித்து, மீன்களின் ஒவ்வொரு அசைவையும் ஊன்றிக் கவனித்தாள். 

வில்லன் அவள் கரம் பற்றி, தொட்டியில் மேலும் கீழும் அசைக்க, அவள் கை அசையும் திசையில் மீன்கள் நீந்த வள்ளிக்கு ஒரே உற்சாகம். 

பெரிய புன்னகையோடு அவன் புறம் திரும்பியவள், “ஏன் எல்லாம் என் கையை பாத்து நீந்துது..?’’ எனக் கேட்க, 

வில்லன், “நாங்க டெய்லி தீனி போடுற பழக்கம். அதனால கையைப் பாத்ததும் தீனி கிடைக்கும்னு அந்தப் பக்கமே நீந்துது..’’ என வில்லன் சொல்ல, 

வள்ளி, முகத்தை சுருக்கி, “அச்சோ பாவம் இல்ல… எல்லாம் ஏமாந்து போய் இருக்கும்… கொஞ்சம் தீனி தான் போட்டுவிடுங்களேன்…!’’ என அவனிடம் கெஞ்ச துவங்கினாள். 

“அதெல்லாம் கண்ட நேரத்துல தீனி போடக் கூடாது வள்ளி. தண்ணி சீக்கிரம் அழுக்கேறிப் போயிடும். அப்புறம் மீனுக்கும் வியாதி வரும்..’’ என்று எச்சரித்தான். 

மீண்டும் ஒரு முறை உதட்டை சுளித்தவள், அவனைப் பார்த்து முறைத்துவிட்டு, ‘நீ என்ன சொல்வது….? நான் என்ன கேட்டபது…?’ என்ற பாவனையில், தொட்டியின் ஓரத்தில் இருந்த மீன் உணவினை எடுத்து கொஞ்சமாய் தூவிவிட்டு, மீன்கள் கூட்டமாய் இரையெடுக்கும் அழகை மீண்டும், ரசிக்க துவங்கினாள். 

மீன்களில் பார்வையை பதித்திருந்தவள், ரசனை மிகுந்த குரலில், “ரொம்ப அழகா இருக்கு இல்ல..?’’ என வினவ, வில்லனிடம் பதில் இல்லாது போக வள்ளி அவனை நிமிர்ந்து பார்த்தாள். 

அவன் பார்வை மீன்களில் இல்லை. மாறாக அவள் விழிகளில் இருந்தது. அவள் தன் புறம் திரும்பியதை கண்டதும், அவளை நெருங்கியவன், அவளைப் பின்னிருந்து மென்மையாய் அணைத்து, அவள் வலது புஜத்தில் தன் தாடையை பதித்துக் கொண்டான். 

“உன் கண்ணுக்குள்ள நீந்துற மீனுங்க ரொம்ப அழகா இருக்கு வள்ளி…!’’ அவன் கிசு கிசுப்பான குரலோ, அல்லது, தோள்களில் படிந்த அவன் வெம்மையின் மூச்சுக் காற்றோ, அல்லது யாருமற்ற ஏகாந்த சூழலோ, அல்லது இளமையின் தீக்கு நெய் வார்த்த இயக்கு நீரோ (ஹார்மோன்கள்) எது அவளை அவ்வாறு தூண்டியது என வள்ளியே அறியாள். 

தன் கைகளை பின்புறமாய் வளைத்து, அவன் கழுத்தில் மாலையாய் கோர்த்தவள், சற்றே எம்பி அவன் இதழ்களில் மென்மையாய் தன் இதழ் பதித்தாள். 

தொடங்கி வைத்தவள் என்னவோ அவள் தான்…. ஆனால், அந்த செயலை முற்றிலும் தன் வசமாக்கிக் கொண்டான் வில்லன். 

அந்த முத்தம் அவனை பித்தனாக்க, வள்ளியுடன் முழுதாய் சங்கமிக்கத் துடிக்கும் வேட்கை நொடிக்கு நொடி அவன் உதிரத்தில் காட்டுத் தீயென பற்றி எரிந்தது. 

வள்ளியின் இணகலும், அவன் இச்சைக்கு உரமிட, 

ஆசைக்கு உயிர் கொடுத்து..

ஆடைக்கு விடை கொடுத்து…

அச்சத்தை புறம் தள்ளி…

மோகத்தை அகம் அள்ளி…

மச்சம் கூட சிவந்து போகும் 

உச்சம் வந்து உலுக்கிப் போக..

மிச்சம் மீதி தீர்ந்து போக…

இச்சை மட்டும் தீர்வதில்லை…

ஒரு மணி நேரம் கடந்த நிலையில், வள்ளியின் கூந்தல் மட்டுமே இருவருக்கும் ஆடையாய் மாறியிருக்க, இருவரின் உடலும் ஒட்டு மொத்தமாய் வியர்வையில் குளித்திருந்தது.

மௌனம். அந்த ஏகாந்த சூழலை இருவருமே கலைக்க விரும்பவில்லை. வில்லனின் கரங்கள் மட்டும் வள்ளியின் கூந்தலில் நுழைந்து அவள் தலையை வருடியபடியிருந்தது. 

ஒரு பெருமூச்சை வெளியிட்டு தன்னை நிலைபடுத்திக் கொண்டவன், “கிளம்பலாம் வள்ளி… நேரமாச்சு..’’ என மென்மையாய் அறிவிக்க, 

“நான் எங்கயும் வரல….’’ என்றவள் அவன் தோள்களில் தலை வைத்து வசதியாய் படுத்துக்கொள்ள, அவளைத் தன்னோடு பிணைத்துக் கொண்டவன், “நீ இங்கயே இருந்தா…. நான் சும்மா இருக்க மாட்டேன் வள்ளி..’’ முதுகில் கோலம் வரைய,

கூச்சத்தால் அவன் கைகளைத் தடுத்தவள், அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து, “உங்களை யாரு சும்மா இருக்க சொன்னா..?’’ எனக் குறும்பாய் வினவ, அவள் மூக்கோடு மூக்கை வைத்து கொஞ்சியவன், “உன்ன…!’’ என்று மீண்டும் அவளில் தொலைய தொடங்கினான். 

பாவம் வில்லன் அப்போது அறியவில்லை… இந்த ஒரு நாள் இரவே அவனை முழுக்க முழுக்க மீண்டும் அவனிடமிருந்து பிரித்து வைக்கப் போகிறதென்று. 

இரவின் இருள் போக்க 

நிலா தேடி சென்றேன் நான்…!

நான் நிலவோடு வந்த நேரம்,

என் வானமே தொலைந்திடுமோ..?

வில் நாண் ஏறும். 

Advertisement